Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கல்வி விழிப்புணர்வு மாநாடு இனிதே நிறைவுற்றது - நன்றி அறிவிப்பு. 32

அதிரைநிருபர் | January 16, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பான சகோதர சகோதரிகளே, எல்லாம் அல்லாஹ்வின்  பேருதவியால் அதிரையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு கடந்த இரண்டு தினங்களாக (14.01.2011 ,15.01.2011) இனிதே நடைந்தேறியது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
இந்த கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைப்பெறுவதற்காக நம் அதிரைநிருபர் குழுவுடன் கடந்த சில மாதங்களாக பல முயற்சிகள் எடுத்து இதற்கு முழு உறுதுனையாக இருந்து, ஆலோசனைகள் வழங்கி இம்மாநாடு மிகச்சிறப்பாக நடைப்பெற எல்லா வகையிலும் பல உதவிகள் செய்த அதிரைநிருபர் வலைப்பூ வாசகர்கள், அதிரை இஸ்லாமிக் மிஷன், அதிரை இஸ்லாமிய கல்வி அரக்கட்டளை மற்றும் அனைத்து சகோதரர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
சிறப்பு பேச்சாளர்களின் உரைகள் அரங்கத்தில் உள்ளவர்களை மட்டுமல்ல உலகில் அனைத்து பகுதிகளிலிருந்து நேரலையை கண்ட அனைவரையும் நேகிழ வைத்தது.
முதல் நாள் நிகழ்ச்சியில் பேராசிரியர் டாக்டர் ஆபிதீன் அவர்களின் மாணவர்களுக்கான ஊக்கம் தரும் உரை மற்றும் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய படிப்புகள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்களுக்கும், கலந்துக்கொள்ளாத மாணவ மாணவிகளுக்கும் நிச்சயம் பயனுல்லதாக இருக்கும். அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் புலவர் பஷீர் ஹாஜியார் அவர்களின் சொற்பொழிவு மிக முக்கியமானது என்றால் மிகையில்லை. குறிப்பாக முதன் முதலில் 1956 முதல் கல்வி விழிப்புணர்வு மாநாடு பெண்களாலே நடத்தப்பட்டது என்று சொல்லப்பட்ட செய்தி உண்மையில் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதனால் தான் என்னவோ கல்வி விழிப்புணர்வு மாநாட்டுக்கு ஆண்களைவிட பெண்களே வந்திருந்திருக்கிறார்கள் போலும். படித்த எல்லோரும் சமுதாயத்தை சார்ந்தே வாழவேண்டும் என்ற கருத்து அழுத்தமாக மாநாட்டில் சொல்லியது படித்த அனைவருக்கும் மனதில் படியும்படியாக இருந்தது. எதிர்கால சந்ததியினரைப் பற்றிய கவலையுடன் பல சிரமங்களுக்கு மத்தியில் தாய் மண்ணில் நடக்கும் கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் கலந்துக்கொண்ட புலவர் பஷீர் ஹாஜியார் அவர்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

இக்கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் சகோதரி உமர்கனி அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தியது நம் எல்லோருக்கும் உற்சாகமூட்டியது. தனக்கு உடல் குறை இருந்தாலும் உள்ளத்திலும், அறிவிலும் தனக்கு எந்த குறையுமில்லை என்பதை தான் கடந்து வந்த கல்வி பாதையால் நிரூபித்துள்ளார் சகோதரி. வீட்டில் கல்வி கற்கும் பிள்ளைகளை பெற்றோர்களும், சகோதர் சகோதரிகளும் ஊக்கப்படுத்துங்கள் என்று தன்மையுடன் வேண்டுகொள்விடுத்தது உண்மையில் மெய்சிலிர்க்க வைத்தது. நம் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இச்சகோதரி இருந்துவருகிறார்கள். இச்சகோதரிக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
கல்வித்துரையில் பல பயிற்சிகள் கொடுத்து இளம் மாணவர்களை ஊக்கப்படுத்திவரும் பேராசிரியர் அன்வர் நாகர்கோவிலிருந்து கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் கலந்துக் கொண்டு மிக அருமையான விளக்கமான கல்வி விழிப்புணர்வு கருத்துரை வழங்கியது மாணவர்களுக்கு மிகப் பயனுல்லதாக இருந்துள்ளது என்றால் மிகையில்லை. அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
பேராசிரியர் பரகத் அவர்களின் எழுச்சி பேருரை நம் எல்லோரின் மனதை கலங்க செய்தது என்றால் மிகையில்லை. 34 வருடங்கலாக அதிரையில் கல்வி சேவையாற்றிவரும் பேராசிரியரின் ஆதங்கம் நம்மையும் வேதனையில் ஆழ்த்தியது. இறை உணர்வின் அடிப்படையில் இக்கல்வி சேவையாற்றி வருகிறேன், உத்யோகத்திற்காக அதிரைக்கு வந்து கல்வி சேவையுடன் பொதுசேவையும் செய்துவரும் தாம் இவ்வூரிலேயே தொடர்ந்து செய்து இவ்வூரிலேயே  மரணிக்க வேண்டும் என்று உணர்ச்சிபூர்வமாக சொன்னவுடன் அநேகரின் மனது கலங்கிவிட்டது. பேராசிரியர் பரகத் அவர்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
தமிழகத்தில் கல்வி விழிப்புணர்ச்சிக்கு புகழ்பெற்ற சகோதரர் CMN சலீம் அவர்களின் எழுச்சிப்பேருரை எல்லோரையும் ஒரு வினாடி கூட அரங்கத்தைவிட்டு அசையவிடவில்லை. அவ்வளவு அற்புதமான சொற்பொழிவு. மாணவ மாணவிகளுக்கு அடிப்படையிலிருந்து மார்க்கக் கல்வியின் அவசியத்தை அழுத்தமாக எடுத்துச்சொல்லப்பட்டது. உடல் ஆரோக்கியம், கல்வி, அதிகாரம், சுய தொழில் ஆகியவைகளின் அவசியம் பற்றி பேசியதோடு அல்லாமல் கேரளாவில் உள்ள முஸ்லீம்களின் கல்வி பற்றி இங்கு உதாரணம் காட்டி பேசியது குறிப்பிட்டு சொல்லப்படவேண்டும். வானவியல், சட்டம் போன்றவைகளில் தேர்ச்சிப்பெற்றவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பே அதிரையில் இருந்துள்ளார்கள் என்று புலவர் பஷிர் ஹாஜியார் அவர்கள் சொன்ன செய்தியை தானும் அதிரைவாசிகள் அனைவரின் மனதில் பதியும்படி நம் அதிரை அறிஞர்களை ஞாப்படுத்தியது மிக அதிகம் குறிப்பிட்டு சொல்லப்படவேண்டியவைகள். 
கல்வி தொடர்பான கேள்விகளுக்கு  சகோதரர் சலீம் அவர்களின் சமூக அக்கறையுடன் கூடிய பதில்கள் இங்கு நாம் பாராட்டியே ஆகவேண்டும். அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
இந்த இரண்டு நாட்கள் நடைப்பெற்ற இந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்டி மிக ஆர்வமுடன் கலந்த்துக்கொண்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. எல்லோருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

தாயகத்தில் இல்லாவிட்டாலும் இணையத்தில் நேரலையில் மிக ஆர்வத்துடன் மாநாட்டு நிகழ்ச்சிகளை கண்டு பயனடைந்த வெளிநாட்டு வாழ் சகோதரர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

கல்வி மாநாடு மிகச்சிறப்பாக நேரலை செய்வதற்கு மிக உதவியாக இருந்த சகோதர்கள் நிஜாம், மொய்னுதீன், முகம்மது மற்றும் இதற்கு அனைத்து உதவிகள் செய்த அனைத்து சகோதரர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

கல்வி மாநாடு மிகச்சிறப்பாக நடைப்பெற கடந்த சில நாட்களாக களப்பணியாற்றி வந்த மாநாட்டு குழு சகோதரர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
அதிரையில் நடைப்பெற்ற கல்வி விழிப்புணர்வு மாநாட்டு நிகழ்ச்சியை நேரலை செய்த அன்பான அதிரை சகோதர வலைப்பூக்கள், வெளியூர் சகோதர வலைப்பூக்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் அதிரைபோஸ்ட் சகோதரர் ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் ஆர்வம் நம்மை உற்சாகமூட்டியது என்றால் மிகையில்லை, உடனுக்குடன் தகவல்களை நம்மிடம் பகிர்ந்து மாநாட்டு குழுவுக்கும் ஆலோசனைகள் தொடர்ந்து தந்து வந்ததும் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியது. எல்லோருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைப்பெறுவதற்கு முதல் தூண்டுதலாக இருந்து தொடர்ந்து ஊக்கமும், உற்சாகமும் தந்த எங்கள் அருமை சகோதரர் ஷர்புதீன் அவர்களுக்கு மிக்க நன்றி அல்லாஹ் நல்லருள் புரிவானாக
இக்கல்வி மாநாட்டை முன்னின்று மிகச்சிறப்பாக வழிநடத்திய எங்கள் அன்பு பாசம் நேசம் நிறைந்த சகோதரர் அதிரை அஹ்மது அவர்களுக்கு மிக்க நன்றி. அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
இன்ஷா அல்லாஹ் வரும் நாட்களில் மாநாடு தொடர்பான செய்திகள், புகைப்படங்கள், கானொளிகள் என்று தொடர்ந்து வெளிவரும்.
கல்வி விழிப்புணர்வு மாநாட்டோடு நம் பணி முடிந்துவிடவில்லை, இனி தான் நம் முக்கிய பணி ஆரம்பம். இன்ஷா அதிரையில் கல்வி விழிப்புணர்வு சேவையில் நம் அதிரைநிருபர் தொடர்ந்து ஈடுபடும். இது தொடர்பான செய்திகள் இன்ஷா அல்லாஹ்  விரையில்  வெளிவரும்.
இணையத்தால் பல நல்ல காரியங்கள் செய்யமுடியும் என்பதற்கு இக்கல்வி விழிப்புணர்வு மாநாடு ஒரு எடுத்துக்காட்டு அதற்கு சாட்சி நம் அதிரைநிருபர்.
மீண்டும் தொடரும் கல்வி விழிப்புணர்வு. இன்ஷா அல்லாஹ்.
உங்கள் அன்புடன்
-- அதிரைநிருபர் குழு.

32 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இணையத்தால் பல நல்ல காரியங்கள் செய்யமுடியும் என்ற முதற்பெருமை அதிரை நிருபரையே சாரும்.உங்களின் இணையப் பணிக்கு இணையில்லா வாழ்த்துக்கள்.

Yasir said...

“எல்லாப் புகழும் இறைவனுக்கே,அல்ஹம்து லில்லாஹ்!”...அயராது உழைத்து எங்களுக்கு ஒவ்வொரு நொடியும் நிலமைகளை அறிய தந்த அதிரை நிருபருக்கும்...இம்மாநாடு வெற்றிக்காக கண்ணிமை முடாமல் களப்பணி ஆற்றிய சகோதரர்களுக்கும் அல்லாஹ் தன் நற்க்கிருபையை அருள்வானக

Yasir said...

//கல்வி விழிப்புணர்வு மாநாட்டோடு நம் பணி முடிந்துவிடவில்லை, இனி தான் நம் முக்கிய பணி ஆரம்பம். இன்ஷா அதிரையில் கல்வி விழிப்புணர்வு சேவையில் நம் அதிரைநிருபர் தொடர்ந்து ஈடுபடும்.//

உறுதி ஏற்க்கிறோம்..செயல்படுத்திகாட்டுவோம்...இன்ஷா அல்லாஹ்

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

உறுதி ஏற்ப்போம்
உறுதியுடன் செயல்
படுவோம்

Yasir said...

wow.... what a fast update on conference related news and articles!!!.....adirainirubar you are rocking

Yasir said...

i personally thanking Mr.tajudeen-Dubai for his commendable 24/7 not stop service ,whenever i called he answered and gave update on the live telecast and other issues....Allah bless you with good health,wealth and strong eman

emhibrahim said...

அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ் இந்த மானாடு வெற்றி அடைய பாடுபட்ட அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தன் நற்க்கிருபையை அருள்வானக…”ஆமீன்”

Rashid said...

Assalamu Alaiku,

Our Brother Mr.Salim speech was one of the best speech, which may boost many family and their children to become a good leader and ruler of our country,
To get more knowledge and for the people awareness these kind of program should be functioned once in every month.... on the whole it was useful to everyone.
I went on last day and I felt that I missed the previous day.. It was awesome speech... Maasha Allah.......

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இதை படிக்கவும்.குறிப்பாக ஆளுர் நவாஸின் கட்டுரை அவசியம் படித்து பார்க்க
""மீடியா உலகில் முஸ்லிம்கள் - தொடர் 1.
www.adiraipost.blogspot.com

ZAKIR HUSSAIN said...

இணையம் வழி இணையில்லா பணி செய்த அதிரைநிருபருக்கு வாழ்துக்கள். அபுஇப்ராஹிம் & தாஜூதீன் என்ற இரண்டு சகோதரர்களும் அன்பைதேர்ந்தெடுத்ததால் இந்த பணி மற்ற சகோதரர்களும் இந்த மாநாட்டை சிறப்பாக எடுத்து நடத்த வழிகாட்டியது. இதில் ஒரு சின்ன அளவு ஈகோ நுழைந்தாலும் அத்தனை விசயமும் வீணாகி இருக்கும்.


சரி இனிவரும் காலங்களில் கல்வி முன்னேற்றத்துக்கான சில விசயங்களை எழுதுகிறேன். [என்னால் முடிந்த அளவு]

அபு இஸ்மாயில் said...

அஸ்ஸலாமு அழைக்கும் நல்லது செய்ய நல்ல உள்ளதோடு ஒற்றுமையோடு ஈடுபட்டால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இந்த கல்வி விழிப்புணர்வு மாநாடு ஒரு உதாரணம் “எல்லாப் புகழும் இறைவனுக்கே,அல்ஹம்து லில்லாஹ்!”... ஊருக்கும் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் நல்ல காரியங்கள் மட்டுமே செய்வோம் என்று களம் இறங்கி இருக்கும் அதிரை நிருபர் வலைப்பூ தளத்தோடு (நானும்)
நாமும் கை கோர்கிறேன்(போம்) என்ன இன்னும் தாமதம் வாருங்கள் நமது ஊரை 100% கல்வி அறிவு பெற்ற ஊராக மாற்ற!!!??? உண்டதும் உறங்கியதும் போதும் விழித்தெழு அதிரை இளைய சமுதாயமே புதிய இலக்கை நோக்கி அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எங்கள் அன்பின் (ஜாகிர்)காக்கா: உங்களின் வாழ்த்தும் உங்கள் ஊக்கமும் என்றும் எங்கள் மனதில் பசுமை மரத்து ஆணிபோல் என்றும் நிலைத்திருக்கும் நன்றியுடன்.

இங்கு கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் மனமார அள்ளித்தரும் அருமை நேசங்களே உங்கள் யாவருக்கும் எங்கள் நன்றிகள் என்றும் நிலைத்திருக்கும்.

இங்கே மிகச் சுருக்கமாக சொல்லியா ஆகவேண்டும் சிலரைப் பற்றி..

மாநாட்டுக் களப்பணி கண்ட அற்பனிப்பு எண்ணத்துடன் நல்லுள்ளம் கொண்ட மாநாட்டுக்கு குழு சகோதரர்கள் அதிரை அஹ்மது (மாமா), அப்துல் ரஜாக் காக்கா, (நண்பர்)மீரா (AIM), சகோதரர்கள் அத்துல் காதிர்(AIM), அப்துல் ரஹ்மான், நிஜாம் (மீடியா மேஜிக்) மற்றும் அவரது உறவுகள், அவர்களுடைய அலுவலக சகாக்களும், சாப்பாட்டு பொறுப்பை ஏற்று சிறப்புடன் செய்த சகோதரர் சாவன்னா (என்கின்ற சாஹுல்) இத்துடன் நேரடியாக பெயர்கள் குறிப்பிட (நான்)தவறிய மற்ற சகோதரர்கள் யாவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் என்றென்றும் இவைகள் எங்களோடு நிலைத்திருக்கும் நினைவு கூறுவதற்கென்றே...

எங்களை நேரிலும், அலைபேசியிலும் தொடர்பு கொண்டு கருத்துக்களையும், அவ்வப்போது அவசியமான தகவல்கள் தந்த நண்பர்கள், உறவினர்கள், மற்றும் அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கும் என்றும் எங்களின் நன்றிகள் நிலைத்திருக்கும்...

நேரலை... இன்றைய காலகட்டதில் எல்லா வகையிலும் சாத்தியமே இருப்பினும் இதனை அதிரைப்பட்டினத்து மின்சாரத் தடங்களுக்கிடையே... இங்கிருக்கும் இணையத் தொடர்பின் அதிகபட்ச அகன்ற அலைவரிசை கொண்ட ஒன்றுக்கு மூன்று இணைப்புகள் ஏற்படுத்தி அதற்காக பாடுபட்ட மொய்னுதீன், நிஜாம் (media magic), முஹம்மத் (SIS) இவர்களின் அசத்தல் திறமையையும் உடனுக்குடன் வரும் இணையமும் மின்சாரமும் கொடுத்த தொல்லைகளைக் கலைந்து வற்றாத நதியாக நேரலையை ஓட விட்டு அதனை மிகத் தெளிவாகவும் அதிமிக தொழில் நுட்பத்தைப் பயண்படுத்தி வெளிநாட்டில் வாழும் நம் சகோதரக்ளை மனம் நெகிழ வைத்த்தற்கு நன்றிகள் என்றும் எங்களுடன் நிலைத்திருக்கும் இன்ஷா அல்லாஹ்...

இன்னும் விடுபட்டவர்களை நினைவில் கொண்டு மீண்டும் வருகிறேன் இன்ஷா அல்லாஹ்..

sabeer.abushahruk said...

அல்ஹம்துலில்லஹ்

HIRASHARFUDEEN said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
டாக்டர்.பேராசிரியர்.ஆபிதீன்அவர்களின் "உன்னகுள் உன்னை தேடு"எனது தன்னம்பிக்கை மேலும் அதிக்கரித்திருகிறது.இது போன்ற பயிற்சிகளை மாநாட்டு ஏற்பாட்டளர்கள் தொடர்ந்து நமதூரில் நடத்திட வேண்டும்...

ZAKIR HUSSAIN said...

சகோதரர் அஹமது அவர்களின் அயராத உழைப்பு நிச்சயம் பாராட்டுக்குறியது.உங்களை இந்த நேரடி ஒளிபரப்பில் பார்த்ததில் சொல்கிறேன்..உங்களுக்கு சரியான தூக்கம் தேவை. கைத்தொலைபேசி அலராத அந்த அமைதி தேவை. நீங்கள் கவனம் செலுத்தும் எந்த சத்தமும் இல்லாத ஒரு "கடற்கரை தூக்கம் " அல்லது " தென்னந்தோப்பு தூக்கம்' தேவை.....உடல் போதும் விழித்துக்கொள் என்று சொல்லும் அளவுக்கு அடுத்த அப்பாயின்ட்மென்ட் இல்லாத தூக்கம் தேவை.

இன்னும் நிறம்ப உழைக்க வேண்டியிருப்பதால் இது ஒரு சர்விஸுக்கு போட்டு எடுப்பது மாதிரிதான்.

Give a good break to your body & mind

Mohamed Rafeeq said...

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! (எல்லா புகழும் இறைவனுக்கே )

இப்படி ஒரு அருமையான நிகழ்ச்சி இதுவரை நான் அதிரையில் கண்டதில்லை, மாநாட்டை நடத்தியவர்களுக்கு எனது இதயம் கலந்த நன்றிகளும் பாராட்டுகளும் (உண்மைய்லேயே எப்படி சொல்லுறதுன்னு தெரியலையா )

நான் பிறந்ததுல இருந்து பல மாநாட்டை அதிரையில பாத்து இருக்கேன் ஒன்னு அரசியலுக்காக நடக்கும் அல்லது இயகத்தினர்களுகாக நடக்கும் ஆனா இன்னைக்கு முழுக்க முழுக்க அதிரை மக்களுகாக நடந்தது இந்த கல்வி விழிப்புணர்வு மாநாடுதான்!

எத்தனையோ போராட்டம் அதை தா? இதை தா? அவனுக்கு ஒட்டு போடு , இவனுக்கு ஓட்டு போடுன்னு சொன்னாக கிடைச்சுச்ச நிம்மதி? அடைஞ்சோம இலக்கை ? உருபட்டுச்ச நம்ம சமுதாயம் ? இல்லை இல்லவே இல்லை ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ?மில்லியன் டாலர் கேள்வி

அதுக்கு பதில் சொல்லத்தான் இந்த விழிப்புணர்வு மாநாடு,

அரசியல் என்கிற மாயையாலும் , இயக்கம் என்கிற போதையாலும் இருட்டில் கிடைக்கிற நம்ம சமுதாயத்துக்கு கல்வி என்கிற ஒழி அதுவும் மார்க்கம் மற்றும் உலக கல்வியால்தான் பிறக்கும் விடியல் என்பதை அழகாக சொன்னார் அன்புச் சகோதரர் சலீம் ( இறைவன் அவர்களுக்கு மேலும் மேலும் ஞானத்தையும் , உடல் சுகத்தையும் தருவானாக )

விட்டுல இருக்குற பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று சொன்னவர்களுக்கு ( எனக்கும்தான் ) சாட்டையடி சகோதரி J.உமர் கனி அவர்களுடைய பேச்சு


திரை கடல் ஓடி திரவியம் தேடி குடும்பத்தை காப்பாற்றுவது மட்டும் நமது கடமை என்று நினைத்து கொண்டு இருக்கும் நமக்கு ...
நமது சங்கதினர்களுக்கு , நமது ஊருக்கு , நமது சமுதாயத்துக்கு செய வேண்டிய கடமையை சொல்லி தந்தது இந்த விழிப்புணர்வு மாநாடு

வரவேற்பிலும் , உபசரிப்பிலும் நாங்கள் எவர்களுக்கும் சலைத்தவர் இல்லை என்று நிருபித்தார்கள் மாநாட்டை ஏற்பாடு செய்த தொண்டர்கள் அவர்களுக்கும் எனது பாராட்டுகள்

ஒரே ஒரு குறை கூட்டம் எதிர் பார்த்த அளவுக்கு இல்லை , விளம்பர படுத்தியதில் எதாவது தவறு இருக்கலாம் !

ஒவ்வொரு பள்ளியிலும் இமாம்கள் முலம் அழைப்பு விடுத்திருந்தால் அனைவருக்கும் தகவல் சென்று இருக்கும் என்பது எனது எண்ணம்

நன்றி

அஸ்ஸலாமு அழைக்கும்

என்றும் அன்புடன்

முகமது ரபிக்

Mohamed Rafeeq said...

வரவேற்பிலும் , உபசரிப்பிலும் நாங்கள் எவர்களுக்கும் சலைத்தவர் இல்லை என்று நிருபித்தார்கள் மாநாட்டை ஏற்பாடு செய்த தொண்டர்கள் அவர்களுக்கும் எனது பாராட்டுகள்

ஒரே ஒரு குறை கூட்டம் எதிர் பார்த்த அளவுக்கு இல்லை , விளம்பர படுத்தியதில் எதாவது தவறு இருக்கலாம் !

ஒவ்வொரு பள்ளியிலும் இமாம்கள் முலம் அழைப்பு விடுத்திருந்தால் அனைவருக்கும் தகவல் சென்று இருக்கும் என்பது எனது எண்ணம்

நன்றி

அஸ்ஸலாமு அழைக்கும்

என்றும் அன்புடன்

முகமது ரபிக்

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மாஷாஅல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! மாநாடு சிறப்பாக நடக்க அனைத்து வகையிலும் அருள் புரிந்த வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மாநாட்டை இணையத்தில் ஒலிபரப்பி அனைவரும் காணச் செய்த அதிரை நிருபர் குழுவுக்கு வாழ்த்துக்கள்.

மாநாட்டில் பேசிய பேச்சாளர்கள், மாநாடு சிறப்பாக நடக்க ஒத்துழைத்தவர்கள், ஏற்பாடு செய்தவர்கள், ஒலிபரப்ப உதவியவர்கள், கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், அனைவருக்கும் வல்ல அல்லாஹ் நல்லருளை பரிபூரணமாக தரட்டும்.

இந்த கல்வி மாநாட்டின் முதல் முயற்சி அனைவருக்கும் வெற்றிக்கு முதல் படியாக இருக்கட்டும். வெற்றிப்படியில் ஏறிச் சென்று வானம் தூரமில்லை என்று மார்க்க கல்வியிலும், உலக கல்வியிலும் அனைவரும் சாதித்து காட்டி இம்மையிலும், மறுமையிலும் வெற்றியடைய நாம் அனைவரும் பங்களிப்பு செய்வதோடு, துஆவும் செய்வோம். இன்ஷாஅல்லாஹ்.

Meerashah Rafia said...

ஆமீன்..ஆமீன்..ஆமீன்..

"இணையத்தால் பல நல்ல காரியங்கள் செய்யமுடியும்"..

நிரூபிக்கப்பட்ட உண்மை.

"மின்சாரத் தடங்களுக்கிடையே... இங்கிருக்கும் இணையத் தொடர்பின் அதிகபட்ச அகன்ற அலைவரிசை கொண்ட ஒன்றுக்கு மூன்று இணைப்புகள் ஏற்படுத்தி அதற்காக பாடுபட்ட மொய்னுதீன், நிஜாம் (media magic), முஹம்மத் (SIS) "

சோதனையிலும் சாதனை

" மாநாட்டு நிகழ்ச்சியை நேரலை செய்த அன்பான அதிரை சகோதர வலைப்பூக்கள்"

மறுமைக்கான நன்மைகளில் MLM (MULTI LEVEL MARKETING/NETWORK) பணிபுரிந்து, பிறரை பயனடைய செய்து நன்மையை சம்பாதித்தவர்கள்.."

MSM(MR)

அதிரை தாருத் தவ்ஹீத் said...

தொழுகை/உணவு போன்ற தவிர்க்கவியலாதவற்றுக்காகக் கணியைவிட்டு இடையிடையே வெளியில் சென்றதில் விட்டுப் போனவற்றைப் பார்க்க/கேட்க வாய்ப்பளித்த அ.நி. குழுவினருக்கு மிக்க நன்றி!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சகோதரர் முஹம்மது ரபிக் அவர்களுக்கு:

தங்களுடைய வாழ்த்துக்கும் துஆவுக்கும் நன்றிகள் பல..

செய்யப்பட்ட விளம்பரங்களும், தொடர் முயற்சிகளும் அதோடு பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக சென்று எடுத்தமுயற்சிகளுக்கு யாவரும் (மாணவர்கள்) விழி திறந்து செவிசாய்திருந்தால் நிச்சயம் இன்னும் நூறு சாரா மண்டபம் நிறைந்திருக்கும். எடுத்திருந்த முயற்சிகளும், விளம்பரங்களும் நிறைய அதில் எவ்வித குறையும் இல்லை... அல்லாஹ் அறிவான் !

நிற்க ! தாங்கள் சொல்லியிருந்த அதிதீவிர இயக்க மாயை ஒரு முக்கிய காரணம், விடுமுறை தொலைக்காட்சிகளின் நிக்ழச்சிகள், இன்னும் பெற்றோர்கள் தங்களு ஆண் மக்களை கண்கானித்து அவர்களை இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முயற்சித்திருக்கலாம், இருப்பினும் இதன் தாக்கம் அடுத்த சில மணிநேரங்களிலேயே எங்களால் உணரப்பட்டது நிச்சயம் இனிமேல் (ஆண்)மாணவர்களைப் பெற்றெடுத்த பெற்றோர் திரளுவார்கள் கைகோர்ப்பார்கள் இன்ஷா அல்லாஹ் !

சகோதரர் சி.என்.எம் சலீம் அவர்களின் எழுச்சிமிக்க உசுப்பல் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்களையும் யோசிக்க வைத்திருக்கிறது - அல்லாஹ் அக்பர் !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹுக்கே எல்லாப்புகழும். உடல் சுகவீனத்தினால் சில விசயங்கள் பார்க்க
விடுபட்டது.ஆனாலும் பார்தவரை நிம்மதி.இன்சா அல்லாஹ் வரும் இளய சமுதாயம்
பிழைத்துக்கொள்ளும். முழு டவுன் லோடு தொடுப்பு கொடுத்தபின் விடுபட்டவைகளை
பார்க்க ஆவலாய் உள்ளேன்.இப்பத்தான் மனதுக்கு கொஞ்சம் தெம்பு
வந்திருக்கு.

அப்துல்மாலிக் said...

மிக்க சந்தோஷம், எல்லா புகழும் இறைவனுக்கே

இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் இதை விட மிக சிறப்பாக திறந்தவெளி மைதானத்தில் பிரமாண்டமாக நடத்திட இறைவன் துணை செய்வானாகவும்

இதற்காக உழைத்த அனைவருக்கு நன்றி சொல்ல தேவையில்லை, நம் சமுதாய நலனுக்கு நம் வீட்டைப்போல் அனைவரும் உழைத்தார்கள். அனைவருக்கு இறைவனின் அருள் கிடைக்கட்டும்

Mohamed Rafeeq said...

தானி ஓட்டுனர்கள் ஒலிபெருக்கி முலம் தொடர்ந்து முன்று நாட்கள் ஊரின் சந்து பொந்து எல்லாம் இம் மாநாட்டை பற்றி விளம்பரம் செய்ததை நான் அறிவேன் அப்படி இருந்தும் அதிகமான மக்கள் கலந்து கொள்ளாதது வேதனை அழிகிறது குறிப்பாக மாணவர்களின் அலட்சிய போக்கு மிகுந்த கவலையை அழிகிறது . இதை பற்றி இம்மாநாட்டு குழுவினர்கள் ஆராய வேண்டும்

ஒற்றுமை என்னும் கயற்றை பிடிகதவரையில் நம் இலக்குகளை நம்மால் அடைய முடியாது. ஆகவே அனைவரையும் உள்ளடக்கிய ஒரு குழுவை உருவாக்க வேண்டும், நமது சமுதயதுக்காக , நம் பிள்ளைகளுக்காக அவர்களின் கல்விக்காக நாம் அனைவரும் ஒரு குடையின் கிழ ஒன்று கூட வேண்டும் . ஒற்றை கருத்துடன் கல்வியாளர்களும் , உலமாக்களும் , செல்வந்தர்களும் ஒன்று கூடினால் இயக்கங்கள் மிது உள்ள மயக்கம் தெளியும் , கலாச்சார சிர்கேடல் சிக்கி தவிக்கும் நம் மக்களை வெற்றியின் பாதையில் அழைத்து செல்ல முடியும் ( இன்ஷா அல்லாஹ் )

ஒற்றுமைக்காகவும் , நம் மக்களின் கல்விக்காகவும் இந்த குழுவினர்களால் எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சிகளிலும் பங்கு பெற விருப்பம் தெரிவித்து கொள்ளுகிறேன்

என்றும் அன்புடன்
முகமது ரபிக்

Unknown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
அல்ஹம்துலில்லாஹ்.

அறியாமை இருளகற்றி அறிவொளி ஏற்றிவைத்த மாநாட்டின் வெற்றி பற்றி எனது மகிழ்சியை கருத்திட முயன்று பலமுறை தோற்றுப்போனேன். எங்கிருந்துதான் ஆனாந்த கண்ணீர் வந்ததோ தெரியவில்லை.கண்கள் குளமாகி திரையிட்டுக்கொண்டது.இனம் புரியாத மகிழ்சி.

இது போன்ற ஒரு மாநாடு 15 வருடங்களுக்கு முன் நடந்திருந்தால்...எங்கள் தலைமுறையும் அதற்கு முன் நடந்திருந்தால் எங்களுக்கு முந்தைய தலைமுறையும் நல்ல நிலையில் இருந்திருக்கும். எவ்வளவோ அதிகாரமிக்க பொருப்புகளில், அதிகாரத்தை நிர்வாகம் செய்யும் பதவிகளில் அரசியல்,அறிவியல்,நிதி,சமுகம்,ஊடகம் என எல்லாதுறைகளிலும் நல்ல நிலையில் இருந்திருப்போம். சமுதாயத்தில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்.

"அடிமை ஒருவன் தூங்குகிறான்;அவனை அப்படியே தூங்கவிடுங்கள்;அவன் தூக்கத்திலாவது விடுதலையை கனவு காணட்டும் என்கிறீர்கள்! இல்லை!அவனை தட்டி எழுப்புங்கள் அவன் எப்படி விடுதலை பெருவது என்பதை சொல்லித்தாருங்கள்" என்ற அடிப்படையில், இம்மாநாட்டை அதிரைநிருபர் வலைப்பூ, அதிரை இஸ்லாமிக் மிஷன், அதிரை இஸ்லாமிய கல்வி அரக்கட்டளை இணைந்து நடத்தியது.

கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தவேண்டும் என்று முடிவுசெய்த நொடியிலிருந்து,மாநாடு முடியும் வரை தங்களின் முழு ஆற்றல்களையும் அவர்கள் முழுமையாக அர்பணம் செய்தார்கள் என்றால் அது மிகையல்ல.

இதோ நாங்களும் இருக்கிறோமென்று அதிரைநிருபர் வாசகர்களும் உற்சாகமூட்டினார்கள்.களத்திலும் புலத்திலும் மாநாட்டின் வெற்றிக்கு உழைத்தார்கள்.துஆ செய்தார்கள்.நேரலை செய்த சகோதர்களின் உழைப்பால் புலம் பெயர்ந்தும் புலத்தில் நின்றோம்.
(இந்த உழைப்பில் அதிரைபோஸ்டின் உழைப்பு கடுகளவுதான்;ஆனாலும் நன்றியில் சேர்த்துக்கொண்டார்கள்.அவர்களுக்கும் நமது நன்றிகள்)

அல்ஹம்துலில்லாஹ்....மாநாடு வெற்றியடைந்தது. இந்த மாநாட்டின் வெற்றிக்கு மூன்று முக்கிய காரணங்கள்:

1)இறை சிந்தனையுடன் முழு ஆற்றல்களையும் செலவிட்டது.
2)ஒற்றுமை.
3)ஆலோசனையின் அடிப்படையில் திட்டமிட்டு செயல்பட்டது.(இன்ஷாஅல்லாஹ் இனிவரும் காலங்களிலும் இதனை இனிதே தொடர்வோம்)

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இங்கு கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் மிக்க நன்றி.

நாங்கள் செய்தது ஒரு சிறிய பணியே. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இதை மிகச் சிறப்பானதாக உருவாக்கித்தந்தன். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும், எல்லா நன்றிகளும். அவனின் துனையில்லை என்றால் இந்த கல்வி விழிப்புணர்வு மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைப்பெற்றுக்காது. அல்ஹம்துல்லில்லாஹ்

நம் சமூகத்தின் நன்மையை கருதி அதிரைநிருபர் கல்வி பணியில் தன்னுடைய அடுத்த கட்ட வேலைகளில் முனைப்புடன் அனைத்து சகோதரர்களுடன் இணைந்து செயலாற்ற தயாராக உள்ளது, அதிரைவாசிகள் அனைவரின் ஒத்துழைப்பு மென்மேலும் பெருகவேண்டும். ஊக்கங்களும் அடிக்கடி ஊட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம்.

தொடர்ந்து இணைந்திருங்கள் அன்பானவர்களே...

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் முகம்மது ரபீக், தங்களின் துஆ மற்றும் உற்சாகமூட்டும் வாழ்த்துதல் அதிரைவாசிகள் எல்லோரையும் நெகிழ வைத்துள்ளது என்றால் மிகையில்லை.

கல்வி பணியில் எல்லோரும் ஒன்றினைய வேண்டும், ஆர்வத்துடன் தாயாராக உள்ள தங்களைப்போன்றவர்கள் தங்களை பற்றிய விபரங்களை எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு adirainirubar@gmail.com அனுப்பிவையுங்கள். உள்ளூர் சகோதரர்கள் தொடர்புகொள்வார்கள். இன்ஷா அல்லாஹ்.

Unknown said...

அதிரைநிருபர் குழு சொன்னது… "நம் சமூகத்தின் நன்மையை கருதி அதிரைநிருபர் கல்வி பணியில் தன்னுடைய அடுத்த கட்ட வேலைகளில் முனைப்புடன் அனைத்து சகோதரர்களுடன் இணைந்து செயலாற்ற தயாராக உள்ளது"
இன்ஷாஅல்லாஹ் அதிரைநிருபருடன் என்றும் இணைந்திருப்போம்.

அதிரைநிருபர் said...

//அறியாமை இருளகற்றி அறிவொளி ஏற்றிவைத்த மாநாட்டின் வெற்றி பற்றி எனது மகிழ்சியை கருத்திட முயன்று பலமுறை தோற்றுப்போனேன். எங்கிருந்துதான் ஆனாந்த கண்ணீர் வந்ததோ தெரியவில்லை.கண்கள் குளமாகி திரையிட்டுக்கொண்டது.இனம் புரியாத மகிழ்சி.//

அஸ்ஸலாமு அலைக்கும்,

எங்கள் பாசமிகு சகோதரர் ஹிதாயத்துல்லாஹ், தங்களின் கருத்தில் உள்ளவைகள் தான் இந்நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும், ஒரு வகையில் ஆனந்தத்தில் கண்ணீர், ஒரு வகையில் வேதனையில் கண்ணீர், ஒரு வகையில் ஆதங்கத்தில் கண்ணீர், இந்த மாநாடு இன்று முடிந்துவிட்டதே என்ற ஏக்கமும்.

சமூக அக்கறையுள்ள அனைவருக்கும் உள்ள உணர்ச்சிகள் தங்களின் பின்னூட்டத்தில் உள்ளது. அல்லாஹ் போதுமானவன்.

எந்த விமர்சனங்கள், எவ்வளவு எதிர்ப்புகள், எவ்வளவு இழப்புகள் வந்தாலும் நம் சமுதாயத்தை கல்வியால் தலைநிமிர செய்ய இன்று போல் என்றும் நம் எல்லோரும் ஒற்றுமையாக செயலற்ற உறுதி எடுப்போம். இன்ஷா அல்லாஹ்.

இதற்காக படைத்தவனிடம் து ஆ செய்வோம்.

யா அல்லாஹ் இந்த சமுதாயத்தை மார்க்க பற்றுள்ள கல்வி ஞானம் படைத்த சமுதாயமாக உருவாக உன் நல்லருளை புரிவாயாக.

பிரிந்து கிடக்கும் இந்த சமுதாயத்தை கல்வி ஒளியால் ஒற்றுமைபடுத்துவாயாக.

யா அல்லாஹ் இந்த சமுதாயத்தை ஒற்றுமையுடன் மீண்டும் ஆளுமை மிக்க சமுதாயமாக உருவாக்கி சத்தியத்தை நிலைநாட்ட நல்லருள் புரிவாயாக. ஆமீன்..

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சுய அறிமுகமில்லாமல் பதியப்படும் எந்த பின்னூட்டத்திற்கு அதிரைநிருபர் முக்கியத்துவம் தராது.இரவு நேரத்தில் பதியப்பட்ட போலி பின்னூட்டத்தை உடனே நீக்க முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

சையித் என்ற போலிப் பெயரில் பதியப்பட்ட பின்னூட்டம் கண்ணியம், நாகரீகம் கருதி நீக்கப்படுகிறது. இது போன்ற தனிமனித தாக்குதல்களுடைய எந்த பின்னூத்தையும் நம் அதிரைநிருபர் ஊக்கப்படுதாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

வேறு வலைத்தளத்தை பற்றியும், அதன் நிர்வாகிகளைப் பற்றியும் புகார் எழுதி வெளியிட அதிரைநிருபர் ஒன்றும் புகார் பெட்டியல்ல என்பதை மட்டும் ஆனாமத்தாக எழுதும் அன்பு சகோதரர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

அல்லாஹ் போதுமானவன்...

crown said...

வேறு வலைத்தளத்தை பற்றியும், அதன் நிர்வாகிகளைப் பற்றியும் புகார் எழுதி வெளியிட அதிரைநிருபர் ஒன்றும் புகார் பெட்டியல்ல என்பதை மட்டும் ஆனாமத்தாக எழுதும் அன்பு சகோதரர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

அல்லாஹ் போதுமானவன்...
-----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இங்கு கள்ளஓட்டு போட முடியாதுன்னு ' நச்'னு சொன்னது பாரட்டபடவேண்டியது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு