Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உறங்கியது போதுமினி!‏ 6

அதிரைநிருபர் | January 19, 2011 | ,

ஆராரோ ஆரீராரோ, தூங்காதே என் மகனே!.

தூங்கியதோ போதுமினி, கண்விழிப்பாய் என் மகனே!.
குழந்தையாய் நீ இருக்கும் போது, பாடிய என் தாலாட்டுதனில்,
இன்னுமா நீ தூங்குகின்றாய், கன் விழிப்பாய் கண்மணியே!.
கல்லாத காரணத்தால், கடல்கடந்தும் நம்மக்கள், பல்தியாவில்படும்பாட்டை!

என்னவென்று நான்சொல்வேன்!. கற்றிருந்தால் சுற்றத்தோடு,
மற்றவர்போல் சென்றிருப்பான், செல்வத்தையும் கண்டிருப்பான்!.
கல்வியை நீ கற்றிடனும், எல்லாத்தையும் வென்றிடனும்!.
தூங்காதே என்னுயிரே! தூங்கியதோ போதுமினி.....

பீடி சுற்றும் தொழில்செய்து, நாடி தளர்ந்த நம் சமூகம்,
ஓடியோடி உழைத்திட்டும், காசுபணம் கையிலில்லே!.
கோடி பணம் காணனுமே, காணும் அந்த நாளுமெப்போ?.
ஏழைக்கும் நாம் கொடுத்திடனும், நீ சீதக்காதி ஆவதெப்போ!.

ஆராரோ ஆரீராரோ, தூங்காதே என் மகனே.....

இளைஞன் நீ தூங்கி விட்டால், சமுதாயம் சேர்ந்துறங்கும்,
உன் இருவிழிகள் உறங்கிருந்தால், உதைத்தே நான் எழுப்பிடுவேன்!.
உறங்கியதோ உன் உள்ளம், உன்னை எப்படி நான் எழுப்பிடுவேன்?.
தூங்காதே என் மகனே தூங்கியதோ போதுமினி!.

கேடிப்பயல் மோடிக்கூட்டம், கருவருக்குது கண்மணியை,
ஓடிப்போய் நீ தடுத்தால், கோடிப் புன்னிய முனக்குண்டு!.
உறங்கிநீயும் தான்கழித்தால், பாதுகாப்பு தானுமேது?.
காவல் காக்கும் நாளுமெப்போ!. நீ கண்முழித்தால் தானுமப்போ!.

அகக்கண் விழிப்பாய் கண்மணியே, ஆராரோ ஆரிராரோ.......

அரசியலில் நீ இல்லாததை, அமைச்சராகி நீ வெல்லாததை,
சச்சாரும் தானுரைத்தார், சமுதாயம் படும்பாட்டை!.
சூழ்ச்சிசெய்யும் அதிகாரப்பயலுமவன், சண்டாளப் பாவியவன்,
சளைக்காமல் தர மறுக்கின்றான், உன்னுரிமை தானுமதை!.

ஆராரோ ஆரீராரோ, தூங்காதே என் மகனே!.

அல்லாஹ்வின் பள்ளியினை, இல்லாத பொய்யைச்சொல்லி,
அநியாயமாய் தானிடித்தான்!. அல்லாஹு அக்பரெனும், அழகான பாங்கோசை, அநியாயமாய்தான் அங்கு நின்றதே!.
அதையறிந்த பின்னுமாய் நீ, அறிவிழந்து உறங்குகின்றாய்!.

நீதிமன்ற தீர்ப்புதனை இன்னுமா நீ நம்புகின்றாய்?..
விழிக்காமல் நீயுறங்கி, வீணாய்தான் போனாய் என்றால்,
உரங்காமல், நான் கொடுத்த தாய்பாலதனை,
வீனாய்தான் போனதென்று, வீறுகொண்டு நானெழுவேன்!

இனி வீரப் பால் தானூட்ட, வீரத்தாயவள் இல்லையென்றும்,
தாலாட்டு பாடிடவே, தாயவள் இல்லையென்றும்,
வீரத்தாலாட்டுப் பாடிடவே, உன்னைப்போல் வீரத்தாயில்லை என்றும்,
வீனாய்தான் நீ பேசி, பின் வீதிக்கு வந்தென்னபயன்!.
உறங்கியது போதுமினி!‏ அகக்கண் விழிப்பாய் கண்மணியே,

-- அதிரைமுஜீப்

Thanks: http://adiraimujeeb.blogspot.com/2011/01/blog-post_18.html

6 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உறங்கியது போதுமினி உஷாராவோம் ரெயில் வரும்வரை
உஷார்படுத்திக் கொண்டிருப்போம் அரசு சார்ந்தவர்களை!

Mohamed Rafeeq said...

//உன் இருவிழிகள் உறங்கிருந்தால், உதைத்தே நான் எழுப்பிடுவேன்!.
உறங்கியதோ உன் உள்ளம், உன்னை எப்படி நான் எழுப்பிடுவேன்?.//

விழிப்புணர்வு இளைங்கர்களுக்கு மட்டும் அல்ல அவர்களை பெற்ற எங்களுக்கும் தேவை என்பதை அழகாக சொல்லியுள்ளார் கவிஞர் .. மற்ற அத்தனை வரிகளும் முத்துக்கள்.. அதிரை நிருபர் பங்களிப்பாளர்கள் இக்கவிதையை இந்த மாத சிறந்த கவிதையாக தேர்வு செய்யலாம் என்று (அதிரை நிருபர் ) வாசகன் என்ற முறையில் பரிந்துரை செய்கிறேன்

Yasir said...

எழுச்சி கவிஞரே...உங்களுடைய எழுச்சி கவிதைகளை படிக்கும்போது...உடம்பெல்லாம் முறுக்கேறுகிறது...இதைப்போல் ஒரு விழிப்புணர்வு நான் படிக்கும் காலத்தில் இருந்திருந்தால்...நான் ஒரு அதிகாரமிக்க அரசுப்பணியில் இருந்திருப்பேன்...உங்கள் கவிதைகளை..நமதூர் பள்ளிகளில் நடக்கும் முஸ்லிம் மாணவர்கள் மட்டும் ஒன்று கூடும் “தீனியாத்” வகுப்பில் பாடுவதற்க்கு முயற்ச்சி எடுக்க வேண்டும்..அப்பொழுது உங்கள் ஏக்கம் ஒரு ஆக்கம் பெறும்....உண்மையான பலன் கிட்டும்

sabeer.abushahruk said...

இந்த வீர முழக்கமும்
தரும் தீர விளக்கமும்
கோஷமெனக்கொண்டு
கல்விக்கென்றொரு இயக்கம் கண்டு
கல்வியாளர்களை இணைத்துக் கொண்டு
முன்னே செல்லுங்கள் முஜீப் -உம்
பின்னே வருவோம் யாமும்!

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

சகோ: முஜீப்பின் ஆக்கம் எப்போதுமே நமகெல்லாம் ஒரு முருக்கேற்றலக இருக்கும் அது போல் இதுவும் ஒருவகை முருக்கேற்றல்.

நாம் அதிகமாகவே தூங்கி விட்டோம்
விழித்தால் மட்டும் போதாது விளித்து கொஞ்சம் வேகமாக ஓடவும் வேண்டும் அப்போதுதான் நாம் விட்டதை பிடிக்க முடியும்.

அப்துல்மாலிக் said...

இனிமேல் ஆராரோ ஆரிரரோ கண்ணே நீயுரங்கு என்ற தாலாட்டை மறந்துவிட்டு தாய்மார்கள் இந்த வரிகளை பாடினால் பின் வரும் சந்ததியினராவது சுதாரித்துக்கொள்ள வழிவகுக்கும், அருமை முஜீப்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு