அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அன்புமிக்க சொந்தங்களே நமது அதிரைப்பட்டினத்தில் இம்மாதம் 14, 15 தேதிகளில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது, அதற்கான வேலைகளை அதிரைநிருபர் குழு, அதிரை இஸ்லாமிக் மிஷன் மற்றும் அதிரை இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்!
இந்த நல்ல நேரத்தில், அதிரைப்பட்டினத்து பிள்ளைகளாகிய நமக்கும் கல்விக்குமுள்ள பாசத்தையும் நேசத்தை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.
அதிரைப்பட்டினத்து முதல் கல்வி நிலையம் தஹ்லா மரைக்காயர் அவர்களின் மகன் அப்துல் ரஹ்மான் அவர்களால் கி.பி. 1120 ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு, தொடர்ந்து அப்துல் ரஹ்மான் அவர்களின் மறைவுக்கு பின்னும் கூட பல காலம் செயலாற்றி பல கல்வி மேதைகளையும் பார்போற்றும் பேரரிஞர்களையும் உருவாக்கி சமுதாயத்திற்கும் உலகிற்கும் அளித்தது. (அப்துர் ரஹ்மான் அவர்கள் தொடர்பான பல வரலாற்று குறிப்புகளுடன் அதிரை வரலாறு வலைப்பூவில் விரைவில் கட்டுரை இடம் பெரும்).
அடுத்து, குத்பா பள்ளி என்ற ஜும்ஆ பள்ளியை கட்டிய மகதூம் சின்னினா லெப்பை ஆலிம் என்று மக்களால் அறியப்படும் செய்யது அப்துல் காதர் (ரஹ்) அவர்கள் தாம் கட்டிய பள்ளி வளாகத்தில் இஸ்லாமிய கல்வி நிலையத்தை ஸ்தாபித்து (கி.பி.1638) நடாத்தினார்கள். இதிலும் பெரும் பெரும் அறிஞர்கள் உருவானார்கள். அந்த அறிஞர்களில் ஒருவர்தாம் செய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா(வரஹ்)அவர்கள். இக்கல்வி பாசறையும் பல ஆண்டு காலம் அழியாத கலங்கரை விளக்காக செயல் புரிந்தது.
மேலும்,1900 ஆம் ஆண்டும் அதன் பிறகு ஸலாஹியா மதரஸாவையும் அல் மதரஸத்துல் ரஹ்மானியாவையும் சிறந்த மார்க்க பணியாற்றி வருவதை குறிப்பிடலாம்.அவை இன்றும் மார்க்க மேதைகளை உருவாக்கி வருகிறது.
பெண்களுக்கென்று 1972ல் நிறுவப்பட்ட உஸ்வத்தூர் ரசூல் நிஸ்வான் மற்றும் 1973ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட நூர் ஹிப்லு மதரஸாவும் நல்ல முறையில் தனது பங்கை அளித்துவருகிறது. இன்னும் அனாதை இல்லம் ஒன்றும் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.
இவை அனைத்தும்,
"வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்-இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்
பயிற்று பல கல்வி தந்து இந்தப்
பாரை உயர்த்திடல் வேண்டும்."
என்பதற்கேற்ப மார்க்க கல்வியோடு உணவும் உறைவிடமும் அளிக்கப்படுகிறது.
காதர் முகைதீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றும் காதர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் காதர் முகைதீன் மகளீர் மேல்நிலைப் பள்ளியும் எம்.கே.என் மதரஸா டிரஸ்ட்டால் நடத்தப்பட்டு வருகின்றது.இந்த டிரஸ்ட் நிர்வாகத்தின் கீழ்தான் ஸலாஹியா மதரஸாவும் உள்ளது. இதில் காதர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியும் காதர் முகைதீன் கல்லூரியும் காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயீல் (ரஹ்) அவர்களின் கரங்களால் துவக்கப்பட்டது.
இந்த எம்.கே.என் டிரஸ்ட் ஹாஜி எம்.கே.என். காதர் முகைதீன் அவர்களாலும் அவர்களின் சகோதர்களாலும் கி.பி 1900 ல் ஸ்தாபிக்கப்பட்டு, கி.பி. 1901 ல் 85ஆயிரம் மதிப்புள்ள நன்செய், புன்செய் நிலங்களை டிரஸ்டிற்கு வாரி வழங்கினார்கள் (அல்லாஹ்வின் அருள் அவர்கள் மீது உண்டாகட்டுமாக!).
1973ஆண்டு முதல் இமாம் ஷாஃபி (ரஹ்) மேல்நிலைப்பள்ளி உலக கல்வியோடு மார்க்க கல்வியை நவீன சாதங்களுடன் வழங்கி வருகிறது. அதிரைப்பட்டினத்து இந்த தலைமுறையை ஒழுக்கமுள்ள, நாகரிகமிக்கதாக உருவாக்கிய பெருமை இந்த இமாம் ஷாஃபியை சாரும். இந்த நேரத்தில் இமாம் ஷாஃபியின் வளர்ச்சிக்கு நொடிப்பொழுதும் உழைத்துவரும் எம்.எஸ்.டி தாஜுதீன் காக்காவிற்கு நமது நன்றியை சொல்கிறோம்.
இதுப்போக அரசால் பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஒன்றும் 1982 ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது.
ஷாதுலியா தொழில் பயிற்சி நிலையம் ஒன்று செயல்படுகிறது. அதிரைப்பட்டினத்தில் இயங்கும் தொழில் பயிற்சி நிறுவனம் இது ஒன்றே!
இவைப்போக பதினைந்து தொடக்க மற்றும் நர்ஸரிப் பள்ளிகளும் உண்டு. இதில் ஏழு தொடக்கப் பள்ளிகள் அரசால் நடத்தப்படுபவை.
அதிரைப்பட்டினத்தில் உள்ள அனைத்து பள்ளிவாயில்களிலும் காலையிலும் மாலையிலும் குர்ஆன் மக்தப் வகுப்புகள் நடக்கின்றன. இன்னும் மதரஸாவில் ஓதிவரும் மாணவர்களும் பட்டம் பெற்ற அலிம்களும் வீடுகளுக்குச் சென்று மக்தப் பாடம் எடுக்கின்றனர். பெண்கள் மதரஸாவில் அலிமா பட்டம் பெற்ற மக்தப் பாடம் சொல்லி தருகின்றனர்.
எம்.எஸ்.டி தாஜுதீன் காக்கா அவர்கள் அடிக்கடி கூறுவது போல் "நூறு சதவிகித ஒழுக்கமுள்ள கல்வி;இதுதான் நமது இலக்கு!" அந்த இலக்கை அடைய அனைவரும் உழைப்போம். அந்த இலக்கு தொடங்கும் நாள் ஜனவரி 14,15 என்று சொல்லவும் வேண்டுமா என்ன?
குறிப்பு: விடுபட்ட கல்வி நிலையங்களை பின்னூட்டத்தில் சேருங்கள். அவற்றையும் சேர்த்து கட்டுரை முழுமைப் படுத்தலாம்.
இன்ஷாஅல்லாஹ் மீண்டும் பின்னூட்டத்தில் சந்திப்போம்.
அன்புடன்,
-- ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ்.
27 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்,
அதிரையில் நடைப்பெற உள்ள கல்வி விழிப்புணர்வு மாநாட்டை முன்னிட்டு நம் அதிரைநிருபருக்காக தன் முதல் பதிவை எழுதியனுப்பிய எங்கள் அன்பு பாசமிகு சகோதரர் ஹிதாயத்துல்லாஹ் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.
சமூக அக்கறையுள்ள நீங்கள் மேன்மேலும் தங்களின் சமூக சேவையை ஊடகத்தின் மூலம் தொடர்ந்து செய்ய வாழ்த்துகிறோம். ஆவலுடன் நிறைய எதிர்ப்பார்க்கிறோம். இன்ஷா அல்லாஹ்.
அதிரைநிருபருக்காக ஆக்கம் தந்ததுக்கு மிக்க நன்றி சகோதரரே.
அஸ்ஸலாமு அலைக்கும். நல்ல தொரு நினைவூட்டல்.கல்விக்காக உழைத்தவர்களை நாம் என்றும் மறக்கவியலாது.
அத்தனை குறிப்புகளையும் ரத்திணச் சுருக்கமாக இத்தனை விளக்கமாக சொல்வது கடினம்.
மிகச் சிக்கலான சிரமமான செய்திகளையும் இலகுவாகவும் இயல்பாகவும் சொல்வதைப் பார்த்தால் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்போலிருக்கிறதே!!!
//இன்ஷாஅல்லாஹ் மீண்டும் பின்னூட்டத்தில் சந்திப்போம்.//
இன்னபிற வலைப்பூ தளங்களில் பின்னூட்டங்கள் வெறும் கைதட்டல்களாகவோ, வாழ்த்துக்களாகவோ மட்டும் இருக்க, அ.நி.யில் மட்டும் பின்னூட்டங்கள் மின்னூட்டங்களென எனர்ஜிடிக்காக இருப்பது ஆரோக்கியமான ஒரு வாசக வட்டத்தின் அடையாலமே.
இந்த வட்டதிற்குள் வந்து நீங்கள் அடிக்கடி ஆக்கங்களைப் பதிந்தால் சிறப்பாக இருக்கும்.
சொல்ல வந்ததை தெள்ளத்தெளிவாகவும்,நாங்கள் அறிந்திராத நமதூர் கல்வி பிண்ணனியை பற்றியும் அதற்க்காக அரும்பாடுபட்ட பெருமைமிகு பெரியவர்களைப்பற்றியும் விளக்கமாக தக்க தருணத்தில் கூறி இருக்கீறிர்கள்..தொடர்ந்து எழுதுங்கள் சகோ.ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ்
அஸ்ஸலாமு அழைக்கும்
ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் ஆக்கம் அறியாத பல செய்திகளை அறியத்தந்தது ,
மேலும் அவர் சூசகமாக சொன்ன செய்தியும் புரிகின்றது
என்னவென்றால் கி.பி. 1120 கல்விக்கூடம் தொடங்கப்பபட்டும் நாம் இன்னும் கல்வியில் பின்தங்கி உள்ளோமே என்பதுதான்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பு சகோதரர் ஹிதாயத்துல்லாஹ், அறியாத தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..
கவி காக்கா சொன்னது போல், மிகச் சிக்கலான சிரமமான செய்திகளையும் இலகுவாகவும் இயல்பாகவும் சொல்லியிருக்கிறீர்கள். நிறைய எதிர்ப்பார்க்கிறோம்.
வாழ்த்துக்கள்....
தம்பி ஹிதாயத்துல்லாஹ் ! உனது ஆக்கம் இங்கே சூழல் அறிந்து வெளியானதும் நமது அதிரைப்பட்டினத்து மக்களும் அவர்களின் கல்விச் சேவையும் நினைவூட்டியது ! தொடர்ந்திடு உன் ஆராய்ச்சியுடன் எழுத்துச் சேவையை..
மற்றுமொரு எ.எல் மெட்ரிகுலேஷன் பள்ளி பற்றிய தகவல்கள் சேகரித்து அதனையும் இணைப்பாக பதியலாமே !
அதிரையில் நடக்க இருக்கும் முதல் கல்வி மாநாட்டில் கலந்துக்கொள்ள எவ்வளவு முயற்சித்தும் வேலை நிமித்தம் முடியாமல் போனது வருத்தம் தான், இருந்தாலும் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்,
வாருங்கள் அன்பு சகோதரர் மாலிக், மாநாட்டில் கலந்துக்கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கம் நம்மைப்போன்ற அனைத்து வெளிநாட்டு வாழ் சகோதரர்களிடம் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.
வீட்டில் உள்ள உறவுகளிடம் சொல்லி இம்மாநாட்டில் கலந்துக்கொள்ள நாம் அனைவரும் ஆர்வமூட்டி ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்
//ஷாதுலியா தொழில் பயிற்சி நிலையம்//
இப்பொழுது இது இயங்குவது இல்லை என கேள்விப்படுகிறேன்.
இந்த கல்வி மாநாட்டில் ஒவ்வொரு பள்ளிகளிலும் நம் மாணவ,மாணவிகளுக்கு தஜ்வீதுடன் ஹிஃப்ளு பாடம் நடத்த எடுத்துரைக்கவும். நமதூரில் பள்ளிக்கூடங்களில் போதிய மார்க்க கல்வி இல்லாததால் நமதூர் மக்கள் வெளி ஊரில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கின்றனர். சீனா சென்றேனும் சீர் கல்வி தேடு என்பது நபி மொழி.நமதூர் மக்களுக்கு நல்ல தரமான கல்வியை அளித்திட வேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
//இம்மாதம் 14, 15 தேதிகளில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது,//--மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
இன்ஷாஅல்லாஹ்... மாநாடு வெற்றிகரமாகவும் பயனுள்ளதாகவும் நடந்தேரிட எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன்.
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) கருத்துகள் சொல்லி ஊக்கம் தந்த கிரவுன்,ஷபீர்,யாசிர்,ஷாஹுல் ஹமீது,தாஜுதீன்,அபு இபுறாஹிம் உள்ளிட அத்தனை காக்காமார்களுக்கும் தம்பி அதிரை புதியவன்(நீ மூத்தவனா இருந்தா காக்கான்டு எடுத்துக்க மச்சான்!!!) மற்றும் எமது ஆக்கத்தை வெளியிட்டு வரவேற்ற அதிரைநிருபர் குழுவிற்கும் என்றும் எமது மாறாத நன்றிகள்!
ஷபீர் காக்கா சொன்னது போல் "அ.நி.யில் மட்டும் பின்னூட்டங்கள் மின்னூட்டங்களென எனர்ஜிடிக்காக இருப்பது ஆரோக்கியமான ஒரு வாசக வட்டத்தின் அடையாலமே." இதனை அதிரை போஸ்டையும் உள்ளடக்கி ஏற்றுக்கொள்கிறேன்.
அபு இபுராஹிம் காக்கா அவர்கள் சுட்டிக் காட்டியதுபோல் 'எ.எல் மெட்ரிகுலேஷன் பள்ளி'யும் இன்னும் அதிரைப்பட்டினத்தில் இயங்கிவரும் எல்லா கலாசாலைகளையும் சேர்த்து இரண்டாவது பகுதி எழுதுவோம்.
"சூசகமாக சொன்ன செய்தியும் புரிகின்றது என்னவென்றால் கி.பி. 1120 கல்விக்கூடம் தொடங்கப்பபட்டும் நாம் இன்னும் கல்வியில் பின்தங்கி உள்ளோமே என்பதுதான்." ஷாஹுல் ஹமீது காக்கா கூறியது போல அதில் ஒரு பேருண்மை உள்ளது. ஆம்! நம்மிடம் 'கல்வி இயக்கம்' இல்லை.
அந்த குறை இம்மாநாட்டுடன் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்.
_______________________________________________________________
மாநாட்டில் கலந்துக்கொள் முடியவில்லை என்ற வருத்தம் நெஞ்சை வாட்டுகிறது.
இருந்த போதும் மாநாட்டை 'நேரலை'யில் பார்க்க வேலைக்கு லீவு போட்டாச்சு!
எங்கள் இனம் தலைநிமிர நடக்கும் கல்வி விழிப்புணர்வு மாநாடு வெற்றிபெற வேண்டும்.
எங்கள் இறைவனே! உன்னை ஏற்றுக்கொண்ட எங்களை எந்த வகையிலும் இழிவுப்படுத்திவிடாதே!
ARH
வாழ்த்துக்கள்.
நான் இக்குழுமத்திற்கு புது வரவு தான் என்றாலும் கருத்து கழந்துரையாடளில் கலங்கரை விளக்கத்தை காண்கிறேன் . ஆனால் கரையேறுபவர்கள் எத்தனை பேர் ?. பட்டியல் போடுவோம் கல்வி மாநாடு நிறைவிற்கு பிறகு.
உங்கள் ஊரில் படித்த மாணவர்கள் செய்திறனில் சிறந்து விலங்கினாலும் அதை விளக்கிச்சொல்லி நல்ல வேலைவாய்ப்பு என்னும் வேட்டையில் வேட்டையாட உதவும் மொழிதிறனில் பிற்படுத்தப்பட்டோர் தான் என்பதை மறுக்க முடியாது. இத்தனை கல்வி நிலையம் என்று பட்டியல் போடும் உங்கள் ஊரில் எத்தனை கல்வி நிலையத்தில் இந்தியையும், அரபியையும், ஆங்கிலத்தையும் கற்றுக் கொடுக்கிறார்கள். இது பற்றி அலசப்படுமா கல்வி மாநாட்டில்.......
நல்ல ஆக்கம்
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹ் தான் நாடியோருக்கு கல்வி ஞானத்தை வழங்குகின்றான். ஞானம் வழங்கப்பட்டோர் ஏராளமான நன்மைகளை வழங்கப்பட்டுவிட்டனர். அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் சிந்திப்பதில்லை. (அல்குர்ஆன் 2:269).
எமது சமூகம் முனேற்றம் அடைவதுக்கு மிகப் பெரும் வரப்பிரச்சதமாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட இஸ்லாமிய தனித்துவத்தை அடையாளப் படுத்த வழிகோலக் கூடிய எமது முஸ்லிம்களின் கல்வி நிலைமையைக் கவனத்திக் கொண்டு காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயக் கடமையாகும். நம் சமுதாயம் கல்வியில் ஆர்வம் காட்டுவதோடு வரும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
உங்கள் சேவை மேலும் தொடர எனது வாழ்த்துகள் . .இறைவன் துணை செய்வானாக!
fathimah
sri lanka
அஸ்ஸலாமு அழைக்கும்
சகோ. ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் இட்ட முதல் ஆக்கமே முத்தான ஆக்கமாக அமைந்தது வாழ்த்துக்கள் உங்களின் பதிவு தொடரட்டும் அல்லாஹ்வின் துணையுடன் இன்ஷா அல்லாஹ்.
இதுபோல் நல்ல பதிவாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் நேரம் கிடைக்காத காரணத்தால் ஆக்கம் பதிய முன் வருவதில்லை அவர்களுக்கு கிடைத்த சில நிமிடம் பின்னுட்டம் இடுவதற்கே சரியாக உள்ளது
சகோதரர்கள் கிரவுன்,ஷபீர்,யாசிர்,ஷாஹுல் ஹமீது,தாஜுதீன்,அபு இபுறாஹிம் பின்னுட்ட மன்னர்கள் இவர்களும் ஆக்கத்தை பதியலாமே?
அதிரையில் இத்தனை கல்வி தலங்கள் மற்றும் மதரசாக்களால் நிரம்பிய நம் ஊரு பெற்றோர்கள் தங்கள் வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு தஞ்சம் புகுந்து நல்ல கல்வியை தேடி செல்கிறார்கள் (அனால் சில மாணவர்கள் பல அனாச்சாரங்களையும் கற்கின்றனர்), காரணம் நம்மூரில் அக்கல்வி கிடைப்பதில்லை என்பதால், நம்மூரில் கல்வி தலங்களில் மார்க்க கல்விக்கு முக்கியத்துவமும் மற்றும் பிற மொழிகள் கற்க வேண்டும்.
இன்ஷா அல்லாஹ்... மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்
இர்fபான்
//சகோதரர்கள் கிரவுன்,ஷபீர்,யாசிர்,ஷாஹுல் ஹமீது,தாஜுதீன்,அபு இபுறாஹிம் பின்னுட்ட மன்னர்கள் இவர்களும் ஆக்கத்தை பதியலாமே? //
அஸ்ஸலாமு அலைக்கும்,
தம்பி இர்fபான்,நீங்கள் மேல் குறிப்பிட்டுள்ள அனைவரும் முழுக்க முழுக்க தங்களின் சொந்த ஆக்கங்களை அதிரைநிருபரில் பதிந்து வருகிறார்கள் copy & paste செய்து பதிவது இல்லையே. ஏன் தொடர்ந்து அதிரைநிருபர் படிப்பது இல்லையா? இவர்களை போல் நீங்களும் சொந்தமாக ஆக்கங்கள் அதிரைநிருபருக்காக எழுதித்தரலாமே.... எழுதித்தாருங்களேன் உங்கள் சொந்த ஆக்கங்களை, நிச்சயம் பதிந்துவிடுகிறோம்.
நீங்கள் குறிப்பிட்டுள்ளவர்கள் பின்னூட்ட மன்னர்கள் இல்லை, உங்களைப் போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் தருபவர்கள் என்பதையும் தங்களுக்கு ஞாபகப்படுத்துகிறோம். மேலும் அதிரைநிருபரில் பங்களிப்பாளர்கள் menuவிற்கு சென்று பாருங்கள் மேற்குறிப்பிட்ட அனைவரின் சொந்த ஆக்கங்களை படிக்கலாம், ரசிக்கலாம், சிந்திக்கலாம்..
சகோதரர் AR ஹிதாயத்துல்லாஹ்வுக்கு எழுத்துலகிலும், பதிவுலகிலும் இது முதல் ஆக்கமில்லை, ARH ன் நிறைய பதிவுகள் இணையத்தில் கொட்டிக்கிடக்குது தேடிப்பருங்கள். இது சகோதரருக்கு அதிரைநிருபரில் முதல் ஆக்கம்.
தொடர்ந்து இணைந்திருங்கள்....
அன்பு சகோதரி ஃபாத்திமா அவர்களுக்கு,
இலங்கை குருநாகலிருந்து உங்களின் வாழ்த்து கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி.
கல்வி மாநாட்டை வாழ்த்த உங்களுக்கு தகுதி உண்டு!
உங்கள் குடும்ப அங்கத்தவர்கள் கல்வி பெற்றவர்கள். நீங்களும் ஆசிரியர் பயற்சி முடித்து, முஸ்லிம்களின் கல்வி குறித்து கவலை படக்கூடியவர். முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்கு முயற்சி எடுத்துவரும் உங்களுக்கும் எங்களின் வாழ்த்துக்கள்.
ARH
அஸ்ஸலாமு அலைக்கும். ஆங்காங்கே அதிகம் லங்கா பாஷை(வாடை) அடிகுதே என்ன காரணம் தம்பி? இந்த நானாவுக்கு பதில் சொல்ல முடியுமா?
சகோதர் இர்fபான் உங்களின் கருத்துக்கு நன்றி!
உங்களின் கருத்துக்கு,அதிரைநிருபர் குழுவின் விளக்கம் சரியானதே!
//சகோதரர்கள் கிரவுன்,ஷபீர்,யாசிர்,ஷாஹுல் ஹமீது,தாஜுதீன்,அபு இபுறாஹிம் இன்னும் பலர் பின்னுட்ட மன்னர்கள்// என்ற உங்களின் மேம்போக்கான கருத்தில் எனக்கும் உடன்பாடில்லை.
//அதிரையில் இத்தனை கல்வி தலங்கள் மற்றும் மதரசாக்களால் நிரம்பிய நம் ஊரு பெற்றோர்கள் தங்கள் வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு தஞ்சம் புகுந்து நல்ல கல்வியை தேடி செல்கிறார்கள் (அனால் சில மாணவர்கள் பல அனாச்சாரங்களையும் கற்கின்றனர்), காரணம் நம்மூரில் அக்கல்வி கிடைப்பதில்லை என்பதால், நம்மூரில் கல்வி தலங்களில் மார்க்க கல்விக்கு முக்கியத்துவமும் மற்றும் பிற மொழிகள் கற்க வேண்டும்.//
என்ற உங்கள் கருத்து சரியே. எங்களூரில் கல்வி தலங்கள் அதிகம் மட்டுமல்ல தரமானவை என்பதையும் நாம் நிரூபனம் செய்யவேண்டும். அப்போதுதான் சென்றவர்கள் திரும்பி வருவார்கள்.
நமது இமாம் ஷாபி (ரஹ்) பள்ளியில் இந்தாண்டிலிருந்து ஹிந்தி கற்று கொடுக்கிறார்கள்.
பார்க்க: Adirai Imam Shafi School hindi Rhymes http://www.youtube.com/watch?v=m0cJrR_JrvQ
அதிரைநிருபருக்கு
இந்த சகோதரர்கள் அனைவரும் நல்லதொரு ஆக்கங்களை அள்ளித்தருவார்கள் என்பது நான் அறிந்ததே, இவர்கள் பின்னுட்டங்களில் தினமும் காணப்படுவதால் நான் அப்படி சொன்னேன் அதற்க்கு இவர்களுக்கும் ஆக்கங்களுக்கும் சம்மந்தமே இல்லை என்று நான் கூறவில்லை தவறுதலாக புரிந்துள்ளீர்கள்
நானும் தினமும் நிருபர் பக்கம் வருபவன் இந்த சகோதரர்கள் அனைவரின் ஆக்கங்களையும் ஆவலாக படித்ததில் தான் நான் நகையாக பின்னுட்ட மன்னகள் என்று சொன்னேன்
\\சகோதரர் AR ஹிதாயத்துல்லாஹ்வுக்கு எழுத்துலகிலும், பதிவுலகிலும் இது முதல் ஆக்கமில்லை, ARH ன் நிறைய பதிவுகள் இணையத்தில் கொட்டிக்கிடக்குது தேடிப்பருங்கள். இது சகோதரருக்கு அதிரைநிருபரில் முதல் ஆக்கம்.//
இங்கேயும் தவறுதாலாக புரிந்துள்ளீர் நிருபர் பக்கம் வருவது போலவே அதிரை போஸ்ட் பக்கமும் செல்வதுண்டு, நான் சொல்ல வந்தது நிருபர் இணையத்தில் இட்ட "முதல் ஆக்கமே முத்தான அக்கமென்று" தான்
தவறேது இருப்பின் திருத்தி கொள்கிறேன்
\\நமது இமாம் ஷாபி (ரஹ்) பள்ளியில் இந்தாண்டிலிருந்து ஹிந்தி கற்று கொடுக்கிறார்கள்.// - மகிழ்ச்சியான செய்தி/வரவேற்க்கத்தது
இர்ஃபான்
அஸ்ஸலாமு அலைக்கும்,
தம்பி இர்ஃபான், தங்களின் விளக்கத்துக்கு மிக்க நன்றி.
தங்களை நாங்கள் தவறாக புரிந்துக்கொள்ளவில்லை, மற்றபடி எல்லா நல்ல எழுத்தாளர்களை ஊக்கப்படுத்திவதில் அதிரைநிருபர் முன்னிற்கும் என்பதை தெளிவுபடுத்துவதற்காகவே இந்த விளக்கம், மற்றபடி வேறொன்றுமில்லை.
தொடர்ந்து இணைந்திருங்கள் தம்பி இர்ஃபான்...
தொட்டால் சுடும் என்று சொல்லிக் கொடுத்த பெரியவர்கள், அனைக்காமலே அனைப்பது எப்படியென்ற பக்குவமும் கற்றுதான் தந்திருக்கிறார்கள் !
ஆக ! எதுகையானாலும், மோனையானாலும் எவ்வகையிலும் லாவகமே எமக்கு இவையாவும் சொல்லித் தெரிவதில்லையே நேசங்களே...
நேசிக்க பிறந்தவர்கள், அதனை சுவாசிக்க மறப்பதில்லை !
Post a Comment