அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால், அதிரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்வி விழிப்புணர்வு மாநாடு இன்று வெள்ளிக்கிழமை இந்திய நேரம் காலை ஒன்பது மணிளவில் தொடங்கியது.
** நிகழ்ச்சியின் தொடக்கமாக பேராசிரியர் ஆபிதீன் அவர்கள், “உனக்குள் உன்னைத்தேடு” என்ற தலைப்பில் கல்வி குறித்த செயல் விளக்கத்தினை படசெய்தி மூலம் அழகுற விளக்கி கூறினார். மேடையில் மட்டும் நின்று பேசிவிட்டு செல்லாமல், மாணவர்கள் மத்தியிலே நின்று வகுப்பறையில் பாடம் எடுப்பது போன்று தன் உரையை அவர் நிகழ்த்தியது சற்று வித்தியாசமாகத்தான் இருந்தது.
** தவளை,பறவை, போன்றவைகள் எப்படி முயற்சிசெய்து அவை தங்கள் வாழ்வை அமைக்கின்றது என்றும், மாணவர்களான நாமும் அதுபோல் முயற்சியை அமைக்க வேண்டும் என்றும் கூறி மாணவர்களுக்கு ஊக்கதினை அளித்தார்.
** இந்த நிகழச்சிக்கு சுமார் 300 மாணவிகளும், சுமார் நூறு மாணவர்களும் கலந்து கொண்டனர். ஆண்களெல்லாம் அயல்நாடு சென்று விட்டதால், இனி இவர்களை நம்பி பயன் இல்லை என்று வீறுகொண்டு எழுந்த என் சகோதரிகளின் எண்ணிக்கையை கண்டு நான் வியக்கின்றேன்.
** மாநாட்டில் கலந்த கொண்ட மாணவ மாணவியர்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டது.
இனி மாலை நான்கு மணிக்கு இரண்டாம் அமர்வு.
ஆனந்த குமார் என்ற மாணவன் பிறவியிலேயே பார்வை அற்றவர். ஆனால் அவர் பெற்ற மதிபென்னோ 1125 / 1200 ஆகும். இவரால் சாதிக்க முடிந்ததை உங்களால் ஏன் முடியாது என்று மில்லியன் டாலர் கேள்வியை முன் வைத்து தனது மாலை நேர அமர்வை பேராசிரியர் ஆபிதீன் "அரியவகை படிப்புக்களை" தொடங்கிவைத்தார்.
தற்போதுள்ள படிப்புகளை நாம் ஐந்துவகையாக பிரிக்கலாம் என்றும் அவைகள்:
- சாகச படிப்புகள்.
- எதிர்காலமுள்ள படிப்புகள்.
- சுயதொழில் படிப்புகள்.
- சேவைப்படிப்புகள்.
- குறைந்தகால சான்றிதழ் படிப்புகள்
மேலும் அறியவகை படிப்புகளாக இவர் பரிந்துரைத்த படிப்புகள்:
- பாதுகாப்பு துறை டிபன்ஸ் சர்வீஸ் (இந்திய அரசாங்கம் அதிகம் செலவழிக்கும் துறை.)
- இணைய காவலர்கள்.
- பாரன்சிக் சயின்ஸ்.
- கிரிமினாலாஜி.
- பைலட்.
- ஏரோநாட்டிக்ஸ் எஞ்சினியரிங்.
- டிடெக்டிவ் ஏஜென்ட்.
- மீன்பிடி கப்பல் பயிற்சி.
- இன்டகிரேட் சயின்ஸ்.
- உயர்தொழில்நுட்பம்.
- பயோ டெக்னாலாஜி.
- நானோ டெக்னாலாஜி.
- மெடிக்கல் பயோ இன்ஜினியரிங் டெக்னாலாஜி.
- கணக்கியல்.
- பயோ இன்பெர்மேட்டிவ் டெக்னாலாஜி.
- இன்பர்மேசன் டேச்னாலாஜி.
- அஸ்ட்ரானாலஜி.
- பேஷன் டெக்னாலஜி.
- போரன்சிக் அக்கவுண்டிங்.
- டிசைனிங்.
- ஸ்டேட்டிஸ்டிக்.
- கம்பெனி செக்ரடரீஸ்.
- தீயணைப்பு துறை.
- ஆப்தோமேட்ரி.
- ஜோர்ணலிசம்.
மேற்கண்ட படிப்புகள் எல்லாம் நம் சமுதாயத்திற்கு தெரிந்திருக்க வாய்பேயில்லை!. மேலும் இந்த வார்த்தைகள் எல்லாம் இவர்களில் வாயினில் உச்சரிக்க வருமா? என்பதே ஓரு கேள்விக் குறிதான். ஏனெனில் எனக்கே இந்த வார்த்தைகளை டைப்படிக்கவே நமக்கு சற்று கடினமாகவே இருந்தது. நமக்கு தெரிந்த பட்டமெல்லாம்:
MBA துபாய், Bsc சவூதி, BBA அமெரிக்கா, BA ஆஸ்திரேலியா.
டிஸ்டன்ஸ் எஜூகேசன் என்றால் தொலைதூர சம்பாதிப்பு தான்.
பின் மானவர்களின் படிப்பு சார்ந்த கேள்விகளுக்கு பதிலும் அளித்தார். சிங்கப்பூரில் இருந்தும் செல் போன் சிணுங்கி கேள்வியை கேட்டேடுத்தது.
இதனை தொடர்ந்து UNITED MEDIA செய்தி நிறுவனர் சகோதரர் தவுவ்லத்கான் அவர்கள் சென்னையிலிருந்து VIDEO CONFERENCING மூலம் இதழியல் (JOURNALISM) தொடர்பான விளக்கமும், நம் சமுதாயத்தின் பங்கின் அவசியத்தை வழியுறுத்திய செற்பொழிவும் முதல் நாள் மாநாட்டை மேலும் சிறப்பாக்கியது என்றால் மிகையில்லை. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களுக்கு VIDEO CONFERENCING ஒரு புது அனுபமாக இருந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தார்கள். இத்துடன் இன்றைய நிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறின.
மற்ற நிகழ்ச்சிகள் நாளை மாலை நான்குமனிக்கு இனிதே தொடங்கும். இன்ஷாஅல்லாஹ்.
முதல் நாள் நிகழ்ச்சி எப்படி இருந்தது, உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.
-- அதிரை முஜீப்
-- அதிரைநிருபர் குழு
14 Responses So Far:
அஸ்ஸலாமு அழைக்கும்
நிகழ்சிகள் யாவும் அற்ப்புதம் ,வேலை காரணமாக காலை நிகழ்ச்சியை காண முடியவில்லை,
மாலை நிகழ்ச்சி நமக்கு பிடித்தமான துறைகளைப்பற்றி இருந்தது
நான் படிக்கும் காலத்தில் இதுபோல் ஒரு மாநாடு நடந்து இருந்தால் நான் இன்றைய மாநாட்டில் ஒரு •ஏரோநாட்டிக்ஸ் எஞ்சினிராக அமர்ந்து நானும் மாணவர்களுக்கு பாடம் நடத்தி இருப்பேன்
நமக்குத்தான் இதுபோன்ற வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை
நம் சந்ததிகளுக்காவது கிடைக்கட்டும்
Shameed சொன்னது…அஸ்ஸலாமு அழைக்கும்
நிகழ்சிகள் யாவும் அற்ப்புதம் ,வேலை காரணமாக காலை நிகழ்ச்சியை காண முடியவில்லை,
மாலை நிகழ்ச்சி நமக்கு பிடித்தமான துறைகளைப்பற்றி இருந்தத
நான் படிக்கும் காலத்தில் இதுபோல் ஒரு மாநாடு நடந்து இருந்தால் நான் இன்றைய மாநாட்டில் ஒரு •ஏரோநாட்டிக்ஸ் எஞ்சினிராக அமர்ந்து நானும் மாணவர்களுக்கு பாடம் நடத்தி இருப்பேன்
நமக்குத்தான் இதுபோன்ற வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை
நம் சந்ததிகளுக்காவது கிடைக்கட்டும்.
------------------------------------------------------------------
ஸ்ஸலாமு அலைக்கும் .உங்கள் ஆதாங்கம் ஆகாயம் .அதனால் தான் தான் கிடைக்கப்பெறாதது,இளைய தலைமுறை பெறட்டும் என்ற மனப்பான்மை சிறந்தது.அட்லீஸ் ஏர் கார்கோ வாவது இப்ப பன்ன முடியுதுன்னா ..அந்த லைனில் நீங்கள் கொண்டிருக்கும் ஆர்வத்தை காட்டுகிறது. எனக்கும் உங்கள் ஆசை தான் வான் வணிகத்துறையில் பெரிய ஆளாய் வருவது. எல்லாம் காலம் அது பதில் சொல்லும்.
இன்றைய மாலை நேர நிகழ்ச்சியை பார்த்ததும் எனக்கும் ஆசையாகத்தான் இருந்தது, என் தொழில்துறை (visual communication, web designer) பற்றி நம் மானவர்களுக்க ஒரு பாடம் நடத்தி இருக்கலாமே என்று..
என்றும் ஆசையோடு இன்று சவூதி அரேபியாவில்...
MSM(MR)
Meerashah Rafia
அல்ஹம்துலில்லாஹ்...சிறிது தடங்கல்களினால் நிகழ்ச்சியை முழுமையாக காண முடியாவிட்டாலும்...பார்த்தவரை திருப்தியாக இருந்தது...பேராசிரியர் ஆபிதீன் அவர்களின் அரியவகை படிப்புகள் மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருந்து இருக்கும் என்று நம்புகிறேன்...மாணவிகளின் ஆர்வம் ..ஒரு எதிர்கால தலைமுறை மாற்றத்திற்க்கு முதல்படி எனலாம்..அவர்களிடம்தான் முதல் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.. சமுதாயத்தை மாற்றி அமைக்கும் சக்தி அவர்களிடம்தான் இருக்கிறது...இன்ஷா அல்லாஹ் நாளைய அமர்வு நல்லவிதமாக அமைய இறைவனிடன் துவா செய்தவானக
இந்த மாநாட்டின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் சில நிகழ்ச்சிகள் அமைந்து விட்டன..அடுத்த தடவை இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்வோம்....
அந்த நிகழ்ச்சிகள்
1.பொங்கல்காரணமாக சென்னையில் இருந்து வர வேண்டிய என்னுடைய சில நண்பர்கள் போக்குவரத்து பிசியினால் வர முடியவில்லை
2.கடற்க்கரை தெருவில் சைத்தானின் திருவிழா நடப்பதால் ..சிலரின் கவனம் அதில் சென்று விட்டதாக கேள்விபட்டேன்
Coming together is a beginning,
Staying together is progress,
and working together is success
i can see now the good spirit among our adiraites...we will carry this SPIRIT till we achieve our coal.
அல்ஹம்துலில்லாஹ்.நேரலையில் பார்த்ததில் எந்த குறையுமில்ல. மாநாட்டு பங்களிப்பாளர்களுடன் ஒருங்கிணைந்து பங்களிக்க முடியவில்லையே என்ற குறையைத் தவிர.
அஸ்ஸலாமு அழைக்கும் மாஷா அல்லாஹ் நிகழ்சிகள் யாவும் அற்ப்புதம் இன் நிகழ்ச்சியை பள்ளிகூட வளாகத்தில் வைத்து நடத்தி 10 முதல் 12 வகுப்பு மாணவர்களை கண்டிப்பாக அமர செய்து இன்னும் அதிகம் மாணவர்கள் கலந்து இருப்பார்கள், விடுமுறை நாட்கள் ஆனதால் அதிகமானவர்களை ரோட்டில் காண முடித்தது என்னால் முடித்த மட்டும் 5 , 10 பேர்களை அனுப்பிவைத்தேன்.
வந்துக் குவிந்த வினாக்கள்தான் முதல் நாள் மாநாட்டின் வெற்றியை பறைசாட்டியது, அல்ஹம்துலில்லாஹ் !
@அபு இஸ்மாயில் :
"நிகழ்ச்சியை பள்ளிகூட வளாகத்தில் வைத்து நடத்தி 10 முதல் 12 வகுப்பு மாணவர்களை கண்டிப்பாக அமர செய்து இன்னும் அதிகம் மாணவர்கள் கலந்து இருப்பார்கள்"
சபாஷ்!!
"ரோட்டில் காண முடிந்தது என்னால் முடிந்த மட்டும் 5 , 10 பேர்களை அனுப்பிவைத்தேன்"
சரியான செயல்...
MSM(MR)
MEERASHAH RAFIA
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரகள் அபு இஸ்மாயில், மீராசா.
தங்கள் இருவரின் கருத்துக்கு மிக்க நன்றி. முதலில் பொதுவாக நடத்தியதற்கு காரணம் வசதி வாய்ப்புகள் மற்றும் எல்லா பள்ளி மாணவர்களும் கலந்துக்கொள்ள வேண்டும், நம் மக்களின் ஆர்வத்தை அறிந்துக்கொள்ள வேண்டும், மாணவ மாணவிகள் தங்களின் பெற்றோர்களுடன் கலந்துக்கொள்ள வேண்டும், இந்நிகழ்ச்சி உலகமெங்குமுள்ள நம் அதிரை சகோதரர்களுக்கு நேரலை செய்ய வேண்டும், ஒரே நேரத்தில் அனைத்து மக்களுக்கும் இக்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி எட்ட வேண்டும் என்பதே நோக்கம். மற்றும் நீங்கள் சொல்லும் அருமையான யோசனைகள் வரும் நாட்களில் தொடர்ந்து கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும். இன்ஷா அல்லாஹ்.
தங்களின் மேலான ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி...
//"ரோட்டில் காண முடிந்தது என்னால் முடிந்த மட்டும் 5 , 10 பேர்களை அனுப்பிவைத்தேன்"//
சகோதரர் அபு இஸ்மாயில் தங்களின் இச்செயல் உண்மையில் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அல்லாஹ் போதுமானவன்
அஸ்ஸலாமு அலைக்கும், அல்லாஹுதஆலா இந்த மாநாட்டை எற்றுக்கொள்வானாக ஆமீன். உலகிலே மிக உன்னதமான மார்க்கம் இஸ்லாம் என்றும், ஆனால் மோசமான சமூகம் முஸ்லிம் என்ற கருத்தினையும் ஆழமாக பதிவுசெய்தார்.இந்த கருத்தை நாம் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள் இயலாது
தவ்ஹீதுக்கு முன்னால் குஃபர் ஒன்றுமில்லை என்பதை இந்த கருத்தை எழுதிய சகோதரர் மிக தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் செய்த சாதனைகள் எத்தனை நிரம்பிக்கிடக்கின்றன்.1.வட்டியில் கடனை உருவாக்கியது (Islamic Banking system) 2. ஆபாச கலாச்சாரத்தை இல்லாமல் ஆக்கியது இன்னும் எத்தனை சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாவற்றிருக்கும் மேலாக முஸ்லீம்களுக்கு ஈமான் என்னும் செல்வத்தை அல்லாஹுதஆலா தந்திருக்கின்றான். இந்த செல்வத்தை விட உலகத்தில் வேறு எந்த் செல்வமும் பெரியதல்ல என்பதை மிக தெளிவாக உணர வேண்டும்.சகோதரர் இப்படி எழுதி இருக்கலாம் முஸ்லிம்கள் சிலர் கல்வி பின்தங்கி இருக்கின்றார்கள் என்று கூறி இருக்கலாம். ஒரு காபிரை உதாரணம் காட்டி ஒட்டு மொத்த முஸ்லிம்களை குறை கூறுவது மிகப் பெரிய தவறு என்ப்தை புரிந்துக் கொள்ள வேண்டும். இது போன்ற கருத்துகளை இனைதளத்தில் எழுதுவதை தவிர்த்துக்கொள்ளவும். Hamdoon
வ அலைக்குமுஸ்ஸலாம்,
அன்பு சகோதரர் ஹம்தூன், தங்களின் துஆவுக்கும் முதலில் நன்றி.
உதாரணத்துக்காக சொல்லப்பட்ட கருத்தாக இருந்ததால் அது நம் கட்டுரையில் பதிந்தோம்.கண்ணியம் நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்தை நீக்கிவிட்டோம். தங்களுக்கு மிக்க நன்றி.
மாற்று மதத்தவரை உதாரணம் காட்டி சொல்லப்பட்டதை ஒட்டுமொத்த முஸ்லீம்களை குறைசொல்வதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
பொதுவில் விவாதம் வேண்டாம். எங்களுக்கு மடல் இடுங்கள் adirainirubar@gmail.com
அல்லாஹ் போதுமானவன்...
தொடர்ந்து இணைதிருங்கள்...
Computer சொன்னது…
//உலகிலே மிக உன்னதமான மார்க்கம் இஸ்லாம் என்றும், ஆனால் மோசமான சமூகம் முஸ்லிம் என்ற கருத்தினையும் ஆழமாக பதிவுசெய்தார்.இந்த கருத்தை நாம் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள் இயலாது
தவ்ஹீதுக்கு முன்னால் குஃபர் ஒன்றுமில்லை என்பதை இந்த கருத்தை எழுதிய சகோதரர் மிக தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.//
அதிரைநிருபர் குழு சொன்னது…
// உதாரணத்துக்காக சொல்லப்பட்ட கருத்தாக இருந்ததால் அது நம் கட்டுரையில் பதிந்தோம்.கண்ணியம் நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்தை நீக்கிவிட்டோம். தங்களுக்கு மிக்க நன்றி//.
இந்த கருத்தின் பொருளானது, உலகத்திலேயே மிக உன்னதமான மார்க்கம் இஸ்லாம். அது பல வாழ்க்கை நெறிமுறைகளை, வட்டிமுதல் வாழ்க்கை வரை. கல்வி முதல் ஜக்காத்வரை, என பலவற்றை வகுத்து வழங்கியுள்ளது. அந்த வாழ்க்கை நெறிமுறைகளை பேனுபவர்களை, முஸ்லிம் என்று அழைக்கின்றோம். ஆனால் பெயரளவில் மட்டும் முஸ்லிம்களாக இருந்துவிட்டு இறைகட்டளைகளை எப்படி பெரும்பாலான முஸ்லிம்கள் கடைபிடிப்பதில்லையோ, அதுபோல அவர்கள் சார்ந்த சமூக கடமைகளையும் நிராகரிப்பதில், இவர்கள் மோசமானவர்களாக இருக்கின்றார்கள் என்ற பொருளில் கூறியது. கிறிஸ்தவ சமுதாயம் கல்வியில் அப்படி இல்லை!. ஒரு காபிர் கூறிவிட்டதினால் அதை ஏற்க மறுப்பது அறியாமையின் வெளிபாடு. எப்படி கற்பழிப்புக்கு இஸ்லாமிய (மரண) தண்டனை வேண்டும் என்ற அத்வானி கூறியதை ஏற்றுகொண்டோமா, அதுபோல் தான் இது!. எனவே இதை விவாதபொருளாக்கி, சமூக கடமையை தட்டிக்களிக்காமல், கடமை செய்வோம்.
கட்டுரையில் வேண்டுமென்றால் வலைப்பூ நிர்வாகி நீக்கியிருக்கலாம்!. அது அவர்களின் தனி உரிமை!. ஆனால் மாநாட்டில் சகோதரர் ஆபிதீன் பேசியது இன்னும் அப்படியே உள்ளது......
Post a Comment