Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒரு இலட்சம் பக்கங்களை புரட்டிய ! - 1,00,000 36

அதிரைநிருபர் பதிப்பகம் | January 04, 2011 | , , ,


அல்லாஹ்வின் திருப்பெயரால்....

ஒரு இலட்சம் அடி கொடுத்து பக்கங்களை புரட்டிப் பார்த்த
அதிரைநிருபர்.blogspot.com வாசக நேசங்களே !

அன்று கேட்கப்பட்டது !
என்ன சாதிக்கப் போகிறாய்?

அன்றே சொன்னது !
அமைதியாக ஆளுமை செய்யப் போகிறோம் !

அன்று கேட்கப்பட்டது !
இலக்கு ஏதுமுண்டா?

அன்றே சொன்னது !
உண்டு இறைவன் நாடியதும் நடந்திடும் !

அன்று கேட்கப்பட்டது !
லட்சியம்தான் என்ன?

அன்றே சொன்னது !

அன்று கேட்கப்பட்டது !
அதிரையில் சாத்தியமாகுமா?

இன்று சொல்வது !
அதிரைப்பட்டினத்தில் நிச்சயம் சாத்தியமே !

இனி மேலும் சொல்வது !
அதிரைப்பட்டினத்து மாணவச் செல்வங்களை ஒன்று திரட்டிடுவோம்.. வழித்தடம் அமைப்போம்.. கல்வியால் வெற்றிகளை தேடியே !

அல்லாஹ்வின் பேருதவியைக் கொண்டு - இன்ஷா அல்லாஹ்...!

- அபுஇபுறாஹிம்


36 Responses So Far:

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர்களே,

கடந்த ஜூன் 22, 2010 முதல் தொடர்ந்து தங்களின் மேலான அன்பையும், பாசத்தையும், நேசத்தையும், ஆதரவையும் தந்து நம் அதிரைநிருபருக்கு 1,00,000 செல்ல அடிகள் கொடுத்து ஊக்குவித்துவரும் அதிரைநிருபர் குழு ஆலோசகர்களுக்கும், பங்களிப்பாளர்களுக்கும், வாசகர்களுக்கும் மற்றும் அதிரைபட்டினத்தார் அனைவருக்கும் மிக்க நன்றி.

தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்...

தொடர்ந்து இணைந்திருங்கள்...

sabeer.abushahruk said...

நீ...
அதிரை
வலைப்பூ உலகில்...
தலைப்புச் செய்தி
அதனால்தான் -
அடிக்கடி வாசிக்கப் படுகிறாய்!

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
ஒரு இலட்சம் அடியா ! மாஸா அல்லாஹ்

நேத்துதான் தான் நினைத்தேன் எப்போது அடிக்கணக்கு போடுவார்கள் என்று
இன்று வந்து விட்டது '

Yasir said...

ஒரு லட்சம் அடி வாங்கியதை விட சந்தோசம்...எத்தனையோ நல்ல,முற்போக்கு.சமுதாய,மார்க்க சிந்தனையுள்ள பிரிந்து கிடந்த இதயங்களை அ.நி ஒன்று இணைத்து சாதனை புரிந்து இருக்கிறது.. ...கவிக்காக்கா,அலாவுதீன் காக்கா, சகோ.தஸ்தகீர்,தாஜீதின்,அபு இபுராஹிம் காக்கா,சாகுல் காக்கா அப்துல் ரஹ்மான்,சகோ.MSM நெய்னா இன்னும் பெயர்விட்டு போன ரத்தினங்களை ஒன்று கூட்டி மெருகு ஏற்றி கொண்டு இருக்கிறது...அ.நி மேன்மேலும் வளர்ந்து,உயர வல்லவனிடம் துவா செய்தவானக

அதிரை முஜீப் said...

அதிரை நிருபர் வாங்கியது இலட்சம் அடியல்ல!
அது அத்துனையும் இலட்சிய அடி!!

இலட்சியத்தை அடைய நீ இலட்சம் அடியல்ல!
இலட்சோப இலட்சம் அடிவாங்க அதிரை நிருபருக்கு அல்ப் மாப்ரூக்.....

அதிரை முஜிப்.காம் வாழ்த்துகின்றது அகமகிழ.

நீ் கோடி அடி வாங்கினால் கூட, எனக்கு அத்தனை சந்தோசம்!
கல்விக்கு ஓரு அடி! கவிக்கு மறு அடி!!.
நட்புக்கு ஓரு அடி! பிரிந்த நட்பையும் சேர்த்தற்கு மறு அடி!!

கூடிவாழ செய்தி தந்தாய் அதற்கு ஓரு அடி!
கேலி செய்தோருக்கும் ஒருபடி மேலே போய்
செய்தி தந்தாய் அதுவும் அதிரடி..

அடி அடி இனி நீ தொடர்ந்து அடி...
அதிரை அதரட்டும்! அரபுநாடுகளும் அதிரட்டும்!!

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
ஒருபக்கம் கவுண்ட் டவுன்
இன்னேறு பக்கம் கவுண்ட் அப்
மொத்தத்தில் அதிரை நிருபர்
உலகையோ ஒரு ரௌண்ட் அப்
கீப் இட் அப்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரை முஜீப் உங்கள் எண்ணங்களின் வீரியம்தான் பலமே அதுதான் உங்களின் வரிகளில் தெரிகிறது !

வழக்கமான என் மனம் வென்ற மக்களே (காக்கா's & தம்பி's)... வழக்கமா அதிரைநிருபரைத்தான் வாழ்த்துறீங்க... ஒவ்வொரு எழுத்தா வேர்க்க விறுவிறுக்க ரொம்பவே கஷ்டப்பட்டு பூக்களை கோர்ப்பதுபோல் கோர்த்து கொஞ்சமா இருந்த மூளைய கசக்கி சீக்கிரமே தூங்கி சீகிரமே எழுந்து எதுவுமே செய்யாம ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிற என்னையவா உங்களுக்குத் தெரியப் போவுது !?

இலட்சினை பற்றி யாராவது சொல்லுவீங்க, எங்கள் சிருசு கண்டிப்பாக இலக்கணம் எடுத்து வருவார் ! இருக்கட்டும் மக்களே.. நீங்கள் சொல்லுங்க பார்ப்போம் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒரு பெருமை !
எங்களுக்கு ஓர் விகட கவி(காக்கா) கிடைத்தது !

அவர்களின் பெயர்... S.ஹமீத்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த சந்தோசமான நேரத்தில நானும் தனிப்பட்ட முறையில ஏதாச்சும் சொல்லாம் என்று ஆசை....

ஒரு லட்சம் அடிகளும் லட்சிய அடிகளே. நிறைய விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி பல லட்சம், பல கோடி அடிகள் வாங்கி பல நல்ல லட்சியங்களை சாதிக்க வேண்டும் அதிரைநிருபர் என்பது என் விருப்பம்.

அன்றும் இன்றும் என்றும் வழக்கம்போல் கவிகாக்கவின் கவிதை எப்போதுமே ஊக்கம் தரும்.

எப்போதுமே ஹமீது காக்கா இரண்டு வரியில் செய்தி சொன்னாலும், அதில் நகைச்சுவையே அதிகம். ரசிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது தங்களின் ஒவ்வொரு பின்னூட்டமும்.

அன்றும் இன்றும் என்றும் நண்பர் யாசிர் அவர்கள் ஊக்கமும் உற்சாகமும் தன் ஒவ்வொரு பின்னூட்டத்திலும்.

முஜீப் காக்காவின் கவிதை உள்ளத்தை அதிர வைத்தாலும், அதிரைநிருபர் குழுவுக்கு அதிக உற்சாகமூட்டுகிறது என்பது மட்டும் உண்மை.

//உண்மையை உரக்கச்சொன்னால் நிரப்பமாய் அடிவாங்குவாய் நீ!! // என்று சகோதரர் ஹாலித்(உன்னைப்போல் ஒருவன்) அதிரைநிருபர் 10,000 அடிவாங்கிய போது பதிந்த பின்னூட்டம் இன்னும் ஞாபகத்தில் உள்ளது. இன்று போல் என்றும் உண்மையை உரக்கச்சொல்லி நிரப்பமாய் அதிரைநிருபர் அடி வாங்கும்.

இன்ஷா அல்லாஹ்...

crown said...
This comment has been removed by the author.
crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். முதலில் வாழ்துக்கள். பெரும் தலைகள் எழுதியப்பின்,சிறுவயது பெருந்தலைகள் எல்லாம் எழுதிவிட்டபின் நான் எழுத இயலுமா? எடுபடுமா?வார்தை தான் தோன்றுமா? என்ன எழுத?எப்படி எழுத?முயற்சிக்கிறேன் முடியாவிட்டால் கேளி செய்ய வேண்டாம்.(இங்கே தட்டிகொடுப்பவர்கள் தான் உள்ளனர் கேளி செய்பவர் கண்டிலேன்....)
அதிரை நிருபர் சினத்தில் எழுந்த அமைதி!
வேற்றுமையில் எழுந்த ஒற்றுமை!
தனித்து எழுந்த செடி இன்று காடு!
அதிகார ஆளுமை அற்ற அன்பின் ஆளுமை!
வெயிலுக்கு ஏற்ற தரு!(மரம்).
ஆக்கத்திற்கு ஊட்டம் தரும் உரம்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ.முஜீப் என்னைத்தெரிகிறதா? பார்த்து நாள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள் ஆச்சு. பாரதிதாசனின் தாக்கம் தம்முடைய கவிதையில் காண்கிறேன். நானும் அந்த ஆளுட கவிதைதான் முன்பு அதிகம் படிப்பேன்.
--------------------------------------------------------------------
sabeer சொன்னது…

நீ...
அதிரை
வலைப்பூ உலகில்...
தலைப்புச் செய்தி
அதனால்தான் -
அடிக்கடி வாசிக்கப் படுகிறாய்!
-------------------------------------------------------------
தலையே தலைப்பு செய்தி வாசித்தது ஒன்றும் வியப்பல்ல!வழக்கம் போல் நச் வரிகள்,குளு,குளு வென சொல்லியுள்ளார்கள்(ஹைக்கூ அருமை காக்கா)
கிரவுன் சொல்வது,
அதிரை நிருபரே நீயே நம் ஊர் வலைபூவின் கடைக்குட்டி(வெல்லக்கட்டி)
அதானால் அதிகம் சீராட்டப்படுகிறாய்.
--------------------------------------------------------------------
Shameed சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்
ஒருபக்கம் கவுண்ட் டவுன்
இன்னேறு பக்கம் கவுண்ட் அப்
மொத்தத்தில் அதிரை நிருபர்
உலகையோ ஒரு ரௌண்ட் அப்
கீப் இட் அப்.
----------------------------------------------------------------
'அப்'பப்ப, வந்து இப்படி,வார்தையில் பில்டப்,கொடுக்க,லேப் டாப் கையிலேயே தூக்கிகிட்டு,அதிரை நிருபரை செக்கப் செய்ய எப்படித்தான் உங்களால் மட்டும் முடிகிறது. அப்பாடா, இப்படி சொல்வதற்குள் பெரும்பாடா போச்சு.

crown said...

அபுஇபுறாஹிம் சொன்னது…

ஒரு பெருமை !
எங்களுக்கு ஓர் விகட கவி(காக்கா) கிடைத்தது !

அவர்களின் பெயர்... S.ஹமீத்
----------------------------------------------------------------------
ஹா,ஹா,ஹா, இப்படி சொன்னவரே பெரிய விகடகவி/

crown said...
This comment has been removed by the author.
crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ.யாசர் நல்ல வாசகர், விமர்சகர்,விசிறி.....படித்த பண்பாளர்.விசயம் பல தெரிந்த சாது. நான் என்ன எழுதினாலும் இவர் என்ன சொல்லபோகிறார் என்று என்னுள் கேட்டுக்கொள்வேன். பிறர் எழுதில் குறை கண்டுபிடிக்காத, குசும்பு எழுத்துக்குச்சொந்தகாரர். இவர் அதிரை நிருபரின் குஷ்வந்த் சிங்... மொத்ததில் கிங்....
சகோ.ஜாஹிர் திறைமையை பாரட்டுபவர்,ஈகோ இல்லாதவர்,இவர் ஒரு ஊசி பட்டாசு, லேசா கொழுத்திப்போடுவார், காரணமின்றி மூக்கை நுழைக்காதவர். இவர் கருத்து சொல்லேன்னா அந்த ஆக்கம் சரியில்லைன்னு அர்த்தம் அப்படித்தான் என் பல ஆக்கத்திற்கு இவர் கருத்து சொன்னதில்லை அதை வைத்தே தெரிந்து கொண்டேன் என் பல ஆக்கம் விசயம் இல்லாததை...விடுபட்டவர்கள் அன்பில் இருக்கிறார்கள்....

Unknown said...

"முதுமை என்பது, ஒரு குழந்தைப் பருவம்!" இதுதான் அதிரைநிருபரின் முதல் பதிவு. அதிரை அஹ்மது சாச்சா அவர்கள் எழுதிய கட்டுரை!

இன்று 265 பதிவுகள் 3636 பின்னூட்டங்கள்! சராசரியாக ஒவ்வொரு பதிவும் 377 முறை வாசிக்கப்பட்டுள்ளது.அதுபோல், ஒவ்வொரு பதிவிற்கும் சராசரியாக 14 பின்னூட்டங்கள் இட்டுள்ளார்கள்.

"'தேடிச் சோறு நிதந் தின்று - பல
சின்னஞ்சிறு சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் ப்ருவமெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?'" என்ற பாரதியின் பாடல் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.

இடுக்கையிட்டு பின்னூட்டமிட்டு காலம் கழிப்போம் என்று நினைத்திரோ? என்று அதிரைநிருபரும் அதன் உறவுகளும் கம்பீரமாக நின்று கேள்வி எழுப்பலாம்!

அதிரைநிருபர் 7 மாத குழந்தையே ஆனாலும் முதிர்ச்சி அடைந்தவர்களின் கூடாரமாக திகழ்கிறது. அதனால்தான் 'கல்வி விழிப்புணர்வு மாநாடு' நடத்தப்படவுள்ளது.

அது தனது இலக்கை நோக்கிய பயணத்தில் வெற்றியடைந்துவிட்டது அல்ஹம்துலில்லாஹ்!

"அதிரைப்பட்டினத்து மாணவச் செல்வங்களை ஒன்று திரட்டிடுவோம்.. வழித்தடம் அமைப்போம்..." இன்ஷாஅல்லாஹ்!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒரே வரிதான், தம்பி(கள்)யுடையான் படைக்கு அஞ்சான்.. (என் நட்பின் இரு உடன்பிறப்புகள் என்றுமே என்னை உலர்த்தி எடுப்பவர்கள் உவகையுடன் எல்லா வகையிலும்).

அரசவைக் கவி அதிரைக் கவி இதெல்லாம் உறவுகள் அழைப்பது ஆனால் நான் என்றுமே அழைப்பது "கவிக் காக்கா".

யாசிரே ! அழைக்க அருமையாக இருக்கிறது !

ஒன்னுமே புரியலைதானே ? அதாங்க என்னா சொல்றதுன்னு புரியலை எனக்கும் :)

ஒரே வார்த்தைதான் "அல்ஹம்துலில்லாஹ் !"

crown said...

அபுஇபுறாஹிம் சொன்னது…

ஒரே வரிதான், தம்பி(கள்)யுடையான் படைக்கு அஞ்சான்.. (என் நட்பின் இரு உடன்பிறப்புகள் என்றுமே என்னை உலர்த்தி எடுப்பவர்கள் உவகையுடன் எல்லா வகையிலும்).
----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நன்றி காக்கா(சொல்லக்கூடாதுதான் இருந்தாலும் நன்றி)

sabeer.abushahruk said...

//அதிரைநிருபரைத்தான் வாழ்த்துறீங்க... ஒவ்வொரு எழுத்தா வேர்க்க விறுவிறுக்க ரொம்பவே கஷ்டப்பட்டு பூக்களை கோர்ப்பதுபோல் கோர்த்து கொஞ்சமா இருந்த மூளைய கசக்கி சீக்கிரமே தூங்கி சீகிரமே எழுந்து எதுவுமே செய்யாம ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிற என்னையவா உங்களுக்குத் தெரியப் போவுது !?//


அதே ஒரே வரிதான்: அண்ணனுடையான் எண்ணம் முடங்கான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா: இதுவேதான் உங்களுக்கும் வைக்கிறேன் ! அண்ணன் எவ்வழி அவ்வழியே தம்பியிடையான் ! :))

அதே ஒரே வரிதான்: அண்ணனுடையான் எண்ணம் முடங்கான்.

அதிரை முஜீப் said...

அபுஇபுறாஹிம் சொன்னது…
***வழக்கமா அதிரைநிருபரைத்தான் வாழ்த்துறீங்க... ஒவ்வொரு எழுத்தா வேர்க்க விறுவிறுக்க ரொம்பவே கஷ்டப்பட்டு பூக்களை கோர்ப்பதுபோல் கோர்த்து கொஞ்சமா இருந்த மூளைய கசக்கி ""சீக்கிரமே தூங்கி"" சீகிரமே எழுந்து எதுவுமே செய்யாம ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிற என்னையவா உங்களுக்குத் தெரியப் போவுது !?****

- ஊர் தூங்கிற்று என்றால் ஊரில் உள்ள மக்கள் தூங்கிற்று என்றாகும்!. அதிரை நிருபரை வாழ்த்தினால் அது அபுஇபுராஹிமை வாழ்த்தியதுதான்.!!

-சீக்கிரமே தூங்கியதற்க்கே இத்துணை அடி என்றால் லேட்டா தூங்கினால் என்னும் எத்துனை அடியோ! அம்மாடியோ!!...

- நீங்கள் கோர்க்கும் பூக்கள் வாடாமல்தான், கருத்தென்னும் உற்சாக நீர் ஊற்றி, வாடும் மல்லியைக்கூட வாடாமல்லியாக்கும் எண்ணற்ற வாசகர்களை கொண்டீர்களே!.

crown சொன்னது…
//அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ.முஜீப் என்னைத்தெரிகிறதா? பார்த்து நாள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள் ஆச்சு. பாரதிதாசனின் தாக்கம் தம்முடைய கவிதையில் காண்கிறேன். நானும் அந்த ஆளுட கவிதைதான் முன்பு அதிகம் படிப்பேன்.//

அலைக்கும் வஸ்ஸலாம். என்ன சகோதரரே!. உங்கள் கம்பீர போட்டோவையும் போட்டுவிட்டு இப்படி ஒரு கேள்வியை கேட்டுவிடீர்களே!.
ஆமாம், அது என்ன கையில் 2G ஸ்பெக்ட்ரம் போனா?. கொஞ்சம் தந்தால் ராஜாவுக்கு ஒரு போனை போட்டு விசாரிக்கலாம்.

அப்பறம் பாரதிதாசன் கவிதைக்கும் நமக்கும் ரொம்ப தூரம். பள்ளி கல்லூரி காலங்களில் தமிழில் அதிகமார்க் எடுக்காமல் போனதற்கு காரணமே, அந்த ஆளுடைய கவிதைதான்.

தாஜுதீன் சொன்னது…
//முஜீப் காக்காவின் கவிதை உள்ளத்தை அதிர வைத்தாலும், அதிரைநிருபர் குழுவுக்கு அதிக உற்சாகமூட்டுகிறது என்பது மட்டும் உண்மை.//

எங்கே நாம அதிரவைகின்றது?. நீங்கள் தான் ஏற்கனவே அதிரைநிருபரு
கென்று ஒரு இனையக்கவி ஷபீர் காக்காவை அக்ரீமெண்டு போட்டு அசரவைத்து விட்டீர்களே!. அவர்களின் "ரேடியேட்டார் நீர்குடித்தும்" என்ற வரியிலே இன்னும் நான் விக்கித்து நிற்கின்றேன்.

Meerashah Rafia said...

6 மாத காலத்தில் 1 லட்சம் அடிகள் என்பது பெரிய்ய நிறுவனங்கள் கூட தொட்டிராத சாதனை.. நான்(கள்) எங்கள் கிளைன்ட்களுக்கு மிக மிக அதிகபட்சமாக 6 மாதத்தில் 3000 அடிகள்தான் வலைத்தளத்திற்கு வாங்கிக்கொடுக்க முடியும் என்பதுபோல் கூறுவோம்.. அதுவும் பல ஆயிரம் ரூபாய் வாங்கிவிட்டு இப்படி கூறுவதுண்டு. ஆனால் பாசத்தையும், பதிவுகளையும் மட்டுமே வாங்கிக்கொண்டு இத்தனை அடிகளா?ஆச்சர்யம். என் கணிப்புபடி இதுகூட குறைவுதான்..மேலும் பலர் வந்து செம்ம அடி அடிச்சிட்டு "எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான், இவன்(அ.நி) ரொம்ப நல்லவண்டான்னு"சொல்லணும். (நான் இன்னும் பிற காம்படிசன் தளங்களின் முழு டேடாகளையும் பார்கிறேன், இன்னும் நாம் பல கடக்க வேண்டும்..இன்ஷா அல்லாஹ் கடப்போம்..கடந்தபில் அந்த டேடாக்கலை பகிர்கிறேன்.

MSM(MR)

Shameed said...

அபுஇபுறாஹிம் சொன்னது…
//ஒரு பெருமை !
எங்களுக்கு ஓர் விகட கவி(காக்கா) கிடைத்தது !

அவர்களின் பெயர்... S.ஹமீத்//

அஸ்ஸலாமு அழைக்கும்
இப்படி சொல்லி சொல்லியோ என்னை உசுப் பேத்தி உசுப் பேத்தி இங்கு கீ போர்ட் தேய்ந்து போய் விட்டது.

இதில் கூட்டணி வேறு க்ரௌன் தலைமையில்

ZAKIR HUSSAIN said...

//சகோ.ஜாஹிர் திறைமையை பாரட்டுபவர்,ஈகோ இல்லாதவர்,இவர் ஒரு ஊசி பட்டாசு, லேசா கொழுத்திப்போடுவார், காரணமின்றி மூக்கை நுழைக்காதவர். இவர் கருத்து சொல்லேன்னா அந்த ஆக்கம் சரியில்லைன்னு அர்த்தம் அப்படித்தான் என் பல ஆக்கத்திற்கு இவர் கருத்து சொன்னதில்லை அதை வைத்தே தெரிந்து கொண்டேன் என் பல ஆக்கம் விசயம் இல்லாததை...//[from Bro CROWN]

To Bro Crown


சமயங்களில் எழுத முடியாத வேலைகள்..மற்றபடி நான் கருத்து சொல்லவில்லை என்பதற்காக அது நல்ல எழுத்தில்லை என்று சொல்லக்கூடாது.உங்கள் தமிழின் விசாலம் கண்டு வியந்திருக்கிறேன். சமயங்களில் நம்மால் இப்படி கவிதையாக கொட்ட முடியவில்லையே என்று அசந்து போயிருக்கிறேன்,
\

சமயங்களில் 'புண்ணியமில்லை" என்று தெரிந்த விவாதங்களில் நான் கருத்து எழுதுவதில்லை. ஏனெனில் இதுபோன்ற விவாதங்களுக்கு எக்ஸ்பயரி டேட் பக்கத்திலேயே இருக்கும். [ உதாரணம்; பெண்களுக்கு செல்போன் தரக்கூடாது என்ற விஞ்ஞானத்தின் மீதான மல்லுக்கட்டுகள்]

பெரும்பாலான இதுபோன்ற விவாதங்களுக்கு மெளனமே சிறந்தமருந்து.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அசத்தல் காக்கா (ZAKIR HUSSAIN சொன்னது…)

/// இதுபோன்ற விவாதங்களுக்கு எக்ஸ்பயரி டேட் பக்கத்திலேயே இருக்கும்.//

இத இதத்தான் உங்களிடம் பிடித்த மில்லியன்களில் ஒரு துளி !

அப்பாட ! நாம விதி விளக்காயிட்டோம் ! :)

Meerashah Rafia said...

@ஜாகிர் ஹுசைன் :

"ஏனெனில் இதுபோன்ற விவாதங்களுக்கு எக்ஸ்பயரி டேட் பக்கத்திலேயே இருக்கும். [ உதாரணம்; பெண்களுக்கு செல்போன் தரக்கூடாது என்ற விஞ்ஞானத்தின் மீதான மல்லுக்கட்டுகள்]

பெரும்பாலான இதுபோன்ற விவாதங்களுக்கு மெளனமே சிறந்தமருந்து."

____________________________________________________________________

என் எண்ணம் உங்கள் எழுத்தில்..நன்றி..

Yasir said...

சகோ.கிரவுன் என்னவென்று சொல்வது, எப்படி உங்களை பற்றிய என் உணர்வவை வெளிப்படுத்துவது,எதற்க்கும் அஞ்சாமல் உண்மை உரக்க அல்லாஹ்வுக்கு மட்டும் பயந்து கூறும் உங்கள ராஜாத்தன்மையை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை..எல்லாவித திறமைகளையும் அல்லாஹ் உங்களுக்கு வாரி வழங்கி இருக்கிறான்...உங்களை பற்றி சொல்வதென்றால் தனி ஆக்கம் தான் போடவேண்டும் ...உங்கள் நட்பு கிடைத்தது...என் வாழ்வின் மறக்க முடியாத சம்பவம்...கூடிய விரைவில் “மைக்” குடன் வந்து உங்களிடம் பேசுகிறேன்

ஜாகிர் ஹீசைன் said...

நல்லவர்களிடமிருந்து அதிகமான தர்ம அடிகள் வாங்கியதற்கு என் வாழ்த்துக்கள்.
இந்த கல்வி வழிப்புணர்வு மாநாட்டில் மேற்படிப்பை மட்டும் சொல்லாமல் மேற்படிப்பு படிக்க வசதியில்லாத ஏழை மாணவர்களுக்கு எந்த அமைப்புகள் உதவிசெய்கிறது என்பதையும் சொன்னால் நன்றாக இருக்கும்

Yasir said...

அபு இபுராஹிம் காக்கா....இப்பேர்பட்ட நல்லுலங்களை ஒருங்கிணைத்த உங்களுக்கும் சகோ.தாஜிதீனுக்கும் எப்பொழுதும் எங்கள் துவாவிலும்,இதயத்திலும் இடமுண்டு

Yasir said...

இந்த நேரத்தில் கவிக்காக்கவின் பொன் வரிகளை நினைத்து பார்க்க தோன்றுகிறது

உன்னைச் சுற்றி யொரு
உணர் வலை மிதக்கவிடு
உண்ணத எண்ணங்களா லதை
உத்தம மாக்கி விடு!

இது 1000000% உண்மை....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//விரைவில் “மைக்”குடன் வந்து உங்களிடம் பேசுகிறேன் //

உங்களுக்காக ஒரு சோடா வாங்கி வைப்பேன் ! - நல்லா பேச்சுங்கோ................

Yasir said...

////ஒருபக்கம் கவுண்ட் டவுன்
இன்னேறு பக்கம் கவுண்ட் அப்
மொத்தத்தில் அதிரை நிருபர்
உலகையோ ஒரு ரௌண்ட் அப்
கீப் இட் அப்/// என்ன காக்கா....ஹஜ்ஜில் இருக்கும் போது கவிதிறமையும் தா அல்லாஹ் என்று துவா செய்திர்களோ...கொட்டுது குற்றால அருவி போன்று

அலாவுதீன்.S. said...

மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!
ஒரு இலட்சம் அடியை லட்சியத்துடன்
வாங்கிய அதிரை நிருபருக்கு வாழ்த்துக்கள்!

லட்சியத்துடன் ஆக்கங்கள்,
கவிதைகள் வரைந்த
பங்களிப்பார்கள் அனைவருக்கும்
வாழ்த்துக்கள்!

அதிரைநிருபரை புரட்டிப்பார்த்த
வாசக நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள்!

அழகிய பின்னூட்டங்களை
பதிவு செய்த வாசக நெஞ்சங்களுக்கும்
வாழத்துக்கள்!

கத்தியின்றி ரத்தமின்றி உலகவரலாற்றில்
கிடைத்த ஒரே வெற்றி நமது தலைவர்
கண்மனி நபி(ஸல்) அவர்களுக்கு கிடைத்த
மக்கா வெற்றி - இந்த நேரத்தில்
வல்ல அல்லாஹ் இறக்கி வைத்த வசனத்தை
நம் வாழ்வில் வெற்றி கிடைக்கும்பொழுது
மனதில் வைத்தால் நன்மையளிக்கும்!

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,
(முஹம்மதே) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் : 110:1,2,3)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அன்பிற்கினிய நேசங்களே... இன்றைய தினம் 03-பிப்ரவரி-2011 காலை 10:00வரை அலெக்சிய என்ற தரவரிசை படுத்தி வெளியும் வலைத்தளம் அதிரைநிருபரை 296,925 என்ற வரிசைப் படுத்தியிருக்கிறது தெரித்து கொள்வதில் வாசிப்பதில் ஒருவனாக இருந்து பகிர்ந்து கொள்கிறேன் உங்களோடும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு