Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எங்கே செல்லும் இந்த பாதை - பகுதி 5 21

தாஜுதீன் (THAJUDEEN ) | January 03, 2011 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அஸ்ஸலாமு அலைக்கும்,

வருகிற ஜனவரி 14, 15 தேதிகளில் நம்மூரில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது, அதற்கான வேலைகளை அதிரைநிருபர் குழு, அதிரை இஸ்லாமிக் மிஷன் மற்றும் அதிரை இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்து வருகிறோம். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

கல்வி விழிப்புணர்வு மாநாடு ஏன்?

கல்வி விழிப்புணர்வு மாநாடு நடந்த வேண்டும் என்று 4 மாதங்களுக்கு முன்பே அன்பு சகோதரர்களிடமிருந்து பல கருத்துக்கள் கேட்டறியப்பட்டது, முஸ்லீம்கள் எல்லாவையிலும் பின்னதங்கியுள்ள நிலை தமிழக அளவில் மட்டுமல்ல இந்திய அளவிலும் இது இருந்து வருகிறது இதில் அதிரைப்பட்டினம் மட்டும் விதிவிலக்கா என்னா? கல்வி, அரசுவேலை, இந்தியாவில் வேலை போன்றவற்றில் தகுந்த வழிகாட்டல்கள் இல்லாத காரணத்தால் பின்னடைவில் இருக்கும் நம் சமுதாயத்தை தட்டி எழுப்ப கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவசியம் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு, அதிரையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தப்பட உள்ளது.  இன்ஷா அல்லாஹ்.

கல்வி விழிப்புணர்வு மாநாடு ஏன்? இதை நடத்துவதால் என்ன பயன்? மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் ஏன் கலந்துக்கொள்ள வேண்டும்? என்று பலர் மனதில் தோன்றலாம், அவற்றிற்கான விளக்கத்தினை அனைவருக்கும் விளங்கும்படி எடுச்சொல்வது எமது கடமை.

தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் நம்மூர் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் பள்ளிகள் மிக பழைமையானவை. இதில் படித்து பயனடைந்தவர்கள் பலர் என்பது உண்மை. தமிழகத்தில் நீண்ட காலமாக இஸ்லாமியர்கள் நடத்தும் ஆங்கில வழி பள்ளிகூடங்களில் இமாம் ஷாஃபி பள்ளியும் ஒன்று. இதில் பயனடைந்தவர்கள் பலர் இன்று நல்ல நிலையில் உள்ளார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ஆனால் கடந்த 20 வருடங்களில் நம்மூர் கல்வி நிறுவனங்களின் கல்விதரத்தின் அடிப்படையில் நாம் கொஞ்சம் அலசிப்பார்த்தால், நமக்கு கிடைப்பது கீழே குறிப்பிட்டுள்ள சில கேள்விகள் மட்டுமே.

எத்தனை முஸ்லீம் மருத்துவர்கள் உருவாகினார்கள்? எத்தனை பேர் அதிரையில் உள்ள மருத்துவமனைகளில் வேலை செய்கிறார்கள்?

எத்தனை பெண் முஸ்லீம் மருத்துவர்கள் உருவாகினார்கள்?

எத்தனை பெண் ஆசிரியர்கள் உருவாகினார்கள்?

எத்தனை கல்லூரி ஆசிரியர்கள் உருவாகினார்கள்?

எத்தனை பேர் அரசு வேலைகளுக்கு சென்றார்கள்?

எத்தனை பேர் IAS IPS IFS ஆக உருவானார்கள்? எத்தனைபேர் இது தொடர்பான தேர்வுகளைப் பற்றியாவது அறிந்துள்ளார்கள்?

எத்தனை வக்கீல்கள் உருவாகினார்கள்? இதில் எத்தனைப் பேர் நம் சமுதாயத்துக்காக நீதிமன்றங்களில் வாதாடுகிறார்கள்?

எத்தனை பேர் இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கு படிக்க சென்றார்கள்?

இன்னும் நிறைய கேள்விகள் நீண்டுக்கொண்டே போகும்.

மேல் சொல்லப்பட்டவைகள் அதிரைவாசிகள் மற்றும் முஸ்லீம்களிடம் நம்மால் கேட்கப்படும்  கேள்விகளே. பதில் இருக்குமா என்றால், அது குறைவே... எந்த குறிக்கோள்களும் இல்லாமல் செல்லும் நம் சமுதாய மக்களின் பாதை (எதிர்காலம்) எங்கே செல்கிறது? என்றாவது சீரியசாக சிந்தித்திருக்கிறோமா?

சரி நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், இனியாவது கொஞ்சம் சுதாரிக்க வேண்டாமா? சுதாரித்தே ஆகவேண்டும், இல்லையென்றால் காலம் போரப்போக்கில் வருங்கால சமுதாயத்தின் நிலை இஸ்லாமிய நிலையிலிருந்து தடுமாறி, ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிக்கும் அடக்குமுறைக்கு அடிபணிந்துக்கொண்டிருக்க போவது தொடரத்தான் போகிறது. அல்லாஹ் காப்பாத்துவானாக.

அதிரையில் நடக்கவிருக்கும் கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் சிறந்த கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டல் நிகழ்ச்சிகள் நடைப்பெற உள்ளது, தமிழகத்தின் தலைச்சிறந்த மார்க்க பற்றுள்ள கல்வியாளர்கள் வருகைத்தர உள்ளார்கள் இவர்களின் அனுபவங்கள் ஆலோசனைகள் நிச்சயம் மிகப் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் ஹுசைன் கல்லூரி பேராசிரியர். டாக்டர். ஆபிதீன் அவர்களும், தமிழகத்தில் கல்வி விழிப்புணர்வுக்கு புகழ் பெற்ற CMN சலீம் அவர்களும் கலந்துக்கொள்கிறார்கள். இம்மாநாட்டில் சொல்லப்படும் கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டல்கள் நிச்சயம் நல்ல பயனுல்லதாக இருக்கப்போகிறது. இன்ஷா அல்லாஹ் நிச்சயம் இருக்கும்.

இனி, நம் சமுதாயத்தில் குறிப்பாக அதிரை போன்ற முஸ்லீம் ஊர்களில் நிறைய மருத்துவர்கள், IAS ஆபீசர்கள், IPS ஆபீசர்கள், IFS ஆபீசர்கள், வழக்கறிஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், உயர் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என்று மிகப் பெரிய பட்டாலத்தை உருவாக்க வேண்டும். இதற்கான சந்தர்பத்தை அதிரையில் நடைப்பெற உள்ள கல்வி விழிப்புணர்வு மாநாடு உருவாக்கப்போகிறது.  அன்பான மாணவ, மாணவிகளே, பெற்றோர்களே இந்த அறிய சந்தர்பத்தை பயன்படுத்தி கல்வியில் ஆர்வமுள்ள அனைவரும் வந்து கலந்துக்கொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

-- தாஜுதீன்

21 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இப்படியான ஆக்கம் உருவெடுத்திட காரண காரியங்களாக இருந்திடும் எங்கள் நட்புகளுடன் அலைபேசியிலும் தொலைபேசியிலும் வாயாடியிலும் கல்வி விழிப்புணர்வு மாநாட்டு தகவல்களை சொல்லி வரும்போது அதில் ஒரு சிலர் "என்னத்த சாதிக்க போகிறீர்கள்?" இப்படியும், "ஏனிந்த பொழப்பு" இப்படியும் கேளிகள் உதிரத்தான் செய்கிறது... பாவம் இப்படி அப்பாவிகளாக இருக்கிறார்களே... இவர்கள் ! எங்களின் உதிரத்தோடு ஊன்றிவிட்ட இந்தக் கல்வித் தாகம் இன்றோ நாளையோ தீரப்போவதில்லை எமது சமுதாயம் விழித்தெழுந்து நிமிர்ந்து நிற்கும்போது உள்ளம் குளிரத்தான் போகிறது இன்ஷா அல்லாஹ்...

Unknown said...

அதில் ஒரு சிலர் "என்னத்த சாதிக்க போகிறீர்கள்?" இப்படியும், "ஏனிந்த பொழப்பு" இப்படியும் கேளிகள் உதிரத்தான் செய்கிறது... பாவம் இப்படி அப்பாவிகளாக இருக்கிறார்களே... இவர்கள் !
---------------------------------
simply just ignore them.........

Unknown said...

அதில் ஒரு சிலர் "என்னத்த சாதிக்க போகிறீர்கள்?" இப்படியும், "ஏனிந்த பொழப்பு" இப்படியும் கேளிகள் உதிரத்தான் செய்கிறது... பாவம் இப்படி அப்பாவிகளாக இருக்கிறார்களே... இவர்கள் !
---------------------------------
simply just ignore them.........

இந்த கல்வி மாநாட்டில் உதிரப்போகும்
நன்மையான விதைகள் ...நாளை ஆலமரமாகும் ....
உதிரப்போகும் ஆயிரம் நன்மையான வார்த்தைகளில்
ஏதாவது ஒரு வார்த்தை இதில் கலந்து கொள்ளும் சிறார்களின்
மனதில் ஆழ ப் பதிந்தால் அது மிகப்பெரிய நன்மையை
அறுவடை செய்யும் என நான் உறுதியாக நம்புகிறேன் ...

அ.நி . வாசகர்களாகிய ,பங்களிபாளாராகிய நம்முடைய கடமை யாதெனில்
நம் வீட்டு சிறார்களை அவசியமாக கலந்துகொள்ள செய்யவேண்டும் (நான் சொல்லிவிட்டேன் )

Unknown said...

போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் என்பதற்கிணங்க-எத்தனை கேளிகள்,கிண்டல்கள்,கண்டனங்கள் செய்த போதும், நாம் நமது வழியில் தொடர்ந்து சொல்வோம்.பாராட்டுகளைவிடவும் இந்த தூற்றல்கள்தான் மேலும் ஊக்கம் பெற்று பணியாற்ற உதவிடும் என்பதை அவர்கள் உணரவேண்டும். வேண்டாத விமர்சனங்களை மறப்போம்- மன்னிப்போம்.

குற்றங்களையும் குறைகளையும் சொல்லிக் கொண்டிருப்பதைவிடவும் அதற்கான தீர்வு என்னவென்பதை ஆலோசிக்க வேண்டும்;அதன் வழி திட்டங்கள் தீட்டவேண்டும்.

இடஒதுக்கீடு வேண்டுமென்று ஓங்கிக் குரல் எழுப்பி வரும் சமுதாயம் நாம். அதன் பயனாக இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக குறைந்த‌ அளவை;நமது விகிதாசாரத்திற்கு ஏற்றவகையில் தரவில்லை என்பது ஒருபுறமிருக்க அந்த குறைந்த அளவை பெற முகங்கொடுக்க நாம் தயாராக இல்லை என்பதுதான் நிதர்சனம்.

அரசு வேலைக்கு அவர்கள் எதிர்பார்க்கும் கல்வித் தகுதியை நாம் இன்னும் முழுமையாக பெறவில்லை.இப்படியொரு தாழ்ந்த நிலை நீடித்தால் இதையே காரன‌ங்காட்டி இருக்கும், கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டை தடுக்க ஒரு பெருங்கூட்டமே சதியாலோசனை நடத்திவருகிறது என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும்.

நாடு முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட வக்ப் சொத்துக்கள் 4,00,000 ஏக்கருக்கும் மேற்ப்பட்ட சொதுக்களாம்.. அவுட் லுக் ஆங்கில ஏடு(செப் 21/2009) சொல்லி இருக்கிறது.(இதன் மதிப்பு பல லட்சம் கோடி ரூபாய்கள்) ஸ்பெக்ட்ரமை விடவும் கூடுதல்!இந்திய முஸ்லிம்கள்தான் உலக அளவில் முஸ்லிம் மக்கள் தொகையில் இராண்டாம் இடம்.அப்படியிருந்தும் அல்லாஹ்வின் சொத்தை மீட்டெடுக்கும் நாதி நம்மிடமில்லை.

பொதுநல வழக்கை தாக்கல் செய்யவோ,அல்லது மீட்டெடுக்கும் அதிகாரமுள்ள இடத்தில் ஒருவரும் இல்லை.இன்னும் எத்துனை காலங்களுக்கு இந்த இழி நிலை? கல்வி கற்று அதிகாரத்தில் அமரபோதும் அதிகாரத்தை கேள்வி கேட்டும் அதிகாரம் கிடைக்கும் போதும் அந்த அதிகார மையம் செயலிழக்கும் போது அதனை தட்டிக்கேட்கும் ஊடம் நம் கரத்தில் இருக்கும் போதுதான் 250ஆண்டு காலமாய் நம்மை பிடித்துள்ள இழிவு,இழவு எல்லாம் நீங்கும் சகோதர்களே!

இன்று முஸ்லிம்களின் முதல் முதன்மையான ஆயுதம் கல்வி.இரண்டாம் மூன்றாம் அயுதமும் கல்விதான்.

"என்னத்த சாதிக்க போகிறீர்கள்?" இப்படியும், "ஏனிந்த பொழப்பு" என்று சொன்னவர்களுக்கு மட்டுமல்ல நம்ம எல்லொருக்கும் சேர்த்துதான்....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சபாஷ் தம்பி ஹிதாயத்துல்லாஹ் ! உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்...அல்லாஹ் நன்கறிவான் !

online ulagam said...

கல்வி விழிப்புணர்வு மாநாடு வெற்றி பெற அதிரை தினசரி செய்திகள் சார்பாக வாழ்த்துக்கள் கலை தெரிவித்து கொள்கிறோம் .................

Unknown said...

"சபாஷ் தம்பி ஹிதாயத்துல்லாஹ் !
உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்...அல்லாஹ் நன்கறிவான் !"

காக்கா உங்கள் அன்பையும் பாசத்தையும் பார்த்து பெருமைப்படுகிறேன்.அல்ஹம்துலில்லாஹ்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி அப்துர்ரஹ்மான், இவர்கள் வேறு யாருமல்ல... பால்ய வயது முதல் இந்நிமிடம் வரை இன்ஷா அல்லாஹ் இனியும் நேசிப்பவர்களே :)

ஜாஹிர் காக்கா சொன்ன மாதிரி ட்ரீட்மெண்ட்தான் கொடுக்கனும், கொடுத்திடுவோமே :))

online ulagam said...

இது போல் பல விழிப்புணர்வு மாநாட்டை நமது ஊருக்காக நடத்த வேண்டும்...........அதிரை கல்வி விழிப்புணர்வுக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் அதிரை நிருபருக்கு என்களது அதிரை தினசரி செய்திகள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் ..........இதற்காக என்களது ஒத்துழைப்பையும் ஆதரவையும் தருகிறோம்

sabeer.abushahruk said...

தற்போதைய சூழலில் நம் சமூகத்திற்கு போதிக்கத் தகுந்தவர்கள் மட்டுமே சாதிக்கப் பிறந்தவர்கள். தொடர் போதனைகள் மட்டுமே சமூகத்தை இடர் வேதனைகளிலிருந்து காக்கும்.

நமது இந்த நோக்கம் நிறைவேற அல்லாஹ் உதவியால் "கவ்ன்ட் டவுன்" துவங்கிவிட்ட நிலையில் கருத்து சொல்லும் சகோதரர்களின் மனநிலை சற்று கவனிக்கப் படவேண்டியதுதான். இப்பேட்பட்டவர்களுக்கு தம்பி ஹிதாயத்துல்லாஹ் ஒரு பாடம் எடுக்கலாம்.

தம்பி தாஜுதீனின் விளக்கம் தெளிவானது.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
எதையோ வைகோலுக்கு பாது காப்புக்கு போட்டால் தானும் தின்காதாம் மாட்டையும் திங்க விடாதம்
அது போல் தானும் செய்வதில்லை செய்பவனையும் சீண்டுவது புத்திசாலி தனம் இல்லை.

crown said...

அபுஇபுறாஹிம் சொன்னது…
சபாஷ் தம்பி ஹிதாயத்துல்லாஹ் ! உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்...அல்லாஹ் நன்கறிவான் !
-----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். காக்கா அப்ப என்ன பத்தி சொன்னது சும்மாவா?(சும்மா
ஒரு ஜாலிக்கு கேட்டேன்). நான் சொல்லவந்ததை சொல்ல விரும்புவதை,
எனக்காக சொல்லியுள்ளீர்கள்.அவன் என் தம்பி என்பது எனக்கு பெருமை, நான் அவன்
அண்ணன் என்பதை விட.

Meerashah Rafia said...

சத்தியமிட்டு நெஞ்சுயர்த்தி சொல்கிறேன், இம்மாநாட்டில் களத்தில் இரங்கி தொண்டனாய் தொண்டு செய்ய ஆசை என் தசைகளை முறுக்குகிறது. ஆசை இருக்கு விசா இல்லை. இன்ஷா அல்லாஹ் புனித பூமியில் இருந்தவாரே கணினியைகொண்டு பணியை நிறைவேற்ற முயற்சித்து வருகிறேன்..

இங்குள்ள அ.நிரூப சொந்தங்களும் மின்னஞ்சலில் மின்னலாய் இதை பரப்புங்கள்.. இடி முழக்கம் நம் கல்வி கதவை திறக்க கூட்டம் கூட்டமாய் ஒரு காட்டு காட்டட்டும்..

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இங்கு கருத்து சொன்னவரிகளைவிட என்னால் சிறப்பாக்
கருத்து சொல்லிருக்க முடியாது.குறிப்பாக ஹிதாயத்துடையது(என் தம்பி என்பதற்காக
நான் பாராட்டாமல் விடமுடியாது)என் கருத்தை எல்லாம் வெல்லும் வீரியவிதையை
தூவி சென்றுள்ளான். அதே வேளை சகோதரர் தாஜுதீனின் சமூக அக்கறையும்,
அதன் வழி சொல்லிய செய்தியும் என்னை கவர்ந்தது. வாழ்துக்கள்......

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அந்தச் சிலரின் உதட்டில் புகை(யூட்டி) இருக்கிறது !
நம் உதட்டில் புன்னகை பூத்திருக்கிறது !

உறவுகளின் ஊக்கம் உள்ளம் உவகை கொண்டு சிலிர்த்தெழ வைத்திருக்கிறது !

எங்கள் வயதோடு ஒப்பிடும்போது சிருசும் சரி பெருசும் சரி மனங்களால் பெருசு தான் இங்கே கருத்திட்ட யாவரும் !

கவிக் காக்கா சொல்வதுபோல் கல்வி மாநாடு நம் கனவு மாநாடு யாவரின் உள்ளம் கவரும் வெற்றி மாநாடாகும் இன்ஷா அல்லாஹ் !

Yasir said...

சகோ.தாஜிதீன் தனது ஆக்கத்தில்...நாம் அனைவரின் எண்ணங்களையும்,விருப்பங்களையும் பதிந்துள்ளார்....சமுதாயத்தின் மீதான அவரின் அக்கறை இது காட்டுகிறது....இன்ஷா அல்லாஹ் இம்மாநாடு மாபெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தும்

Unknown said...

உங்கள் நம்பிக்கைக்கும் ஆதரவிற்கும் நன்றி ஷபீர் காக்கா

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கருத்திட்ட அனைத்து அன்பு சகோதரர்களுக்கும் மிக்க நன்றி. அனைவரின் கருத்துக்களும் நல்ல நம்பிக்கையூட்டுகிறது. நிறைய நம் சமுதாயத்துக்காக நல்ல பல சேவைகள் கல்வியின் மூலம் செய்யவேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது என்பதை உறுதியா சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

அல்லாஹ் போதுமானவன்....

RAFIA said...

கல்வி விழிப்புணர்வு மாநாட்டு வெற்றியின் 'தாக்கம்' தெரிகிறது.தூர
இருக்கும் எங்களுக்கு 'தாகம்' அதிகரிக்கிறது.
திடுதிப்பென்று ஒரு டீமை கூட்டிக்கிட்டு ஊர் வந்து இறங்கிராலாமா என மனம் அங்கலாய்கிறது.
வெகுவாக பப்ளிசிட்டி செய்யுங்கள்.விடுப்பு முடிந்து வெளிநாடு செல்பவர்களை மாநாடு முடிந்து புறப்பட கோருங்கள்.அக்கம்பக்கத்து ஊர் நண்பர்களுக்கு அழைப்புக் கொடுக்கசொல்லுங்கள்.எந்த அகீதாக் கொள்கையும் குரூ க்கிடாமலும் எந்த அமைப்பையும் பகிஷ்கரிக்காமல் ஒன்று பட்டு வென்று காட்டுவோம்.நற்சிந்தனை நற்கல்வி தந்து
நல்லவர்களையும் வல்லவர்களையும்
உருவாக்கி பாரதத் தேசம் முழுவதும் அலுவர்களாக அதிகாரிகளாக பரப்பி அகிலமெங்கும் அதிரைப் புகழ் மனக்கசெய்யுங்கள் என உங்களனைவரையும் கெஞ்சியவனாய்....
இறைவனை இறைஞ்சியவனாய்....

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு ராஃபியா காக்கா, கல்வி விழிப்புணர்வு பற்றி தங்கள் மனதில் உள்ள எண்ணத்தை எங்களிடம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

நம் எல்லோரும் ஆர்வம் அதிகரித்துள்ளது, எதிர்ப்பார்ப்புகளும் மிக அதிகரித்துள்ளது.

//எந்த அகீதாக் கொள்கையும் குரூ க்கிடாமலும் எந்த அமைப்பையும் பகிஷ்கரிக்காமல் ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்.//

இந்த விசயத்தில் மாநாட்டு குழு உறுதியாக உள்ளது என்பது நம் அனைவரின் நம்பிக்கை. இன்ஷா அல்லாஹ் ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்.

வெளிநாட்டு வாழ் சகோதரர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு போன் செய்து வீட்டில் உள்ள பிள்ளைகள், தாய்மார்கள் மற்றும் பெரியோர்களை இந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் கலந்துக்கொள்ள வேண்டுகோள் விடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

அலாவுதீன்.S. said...

அதிரை நிருபர் குழுவுக்கு :அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) கல்விபணிக்காக கல்வி மாநாடு நடத்த இருக்கும் உங்களின் பணி சிறக்க உங்களுக்கு வல்ல அல்லாஹ் அனைத்து காரியங்களிலும் உதவி செய்து இம்மாநாடு சிறப்பாக நடைபெற நல்லருள் புரியட்டும். இனிதே நடைபெற துஆச் செய்கிறேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு