Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் தமிழ்மாமணி பஷீர் ஹாஜியார் அவர்களின் உரை.. 12

அதிரைநிருபர் | February 05, 2011 | ,

அன்பின் நேசங்களுக்கு,

நமதூரில் வெற்றிகரமாக நடந்தேறிய கல்வி விழிப்புணர்வு மாநாட்டின் நிகழ்வுகளால் எடுத்திருக்கும் காரியத்தின் முதல்படியை ஸ்திரப்படுத்தியிருக்கிறது அதே சிந்தனையிலிருக்கும் நமக்கு அன்றைய தினங்களில் நடந்தேறிய நிகழ்வுகளை அசைபோடுவதிலும் நினைவுக்குள் நிலை நிறுத்துவதிலும் சந்தோஷமே அவ்வகையில் தமிழ்மாமணி அதிரை அறிஞர் புலவர் பஷீர் ஹாஜியார் அவர்களின் உணர்ச்சி மிக்க நினைவலைகளை அன்று அவர்களது உரையில் எடுத்து வைத்தார்கள் அதோடு ஆயிமாயிரம் கேள்விகளும் கேட்டும் வைத்தார்கள் இதோ எங்கள் மனம் வென்ற அவர்களின் ஆற்புதமான உரையை எழுத்தில்.

-அதிரைநிருபர் குழு



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரகாத்துஹு, வஃபிரத்ஹூ ஆகிரத்ஹூ..

இந்த நாளினுடைய இரண்டாவது நிகழ்ச்சியாகிய இந்த வேலையில் வரக்கூடிய அனைவரையும் நாங்கள் வருக வருக என்று இந்த அவையினரின் சார்பாக வரவேற்கிறோம்.

ஆசிரியர்கள் நான்கு வகைப் படுவார்கள், முதலாவது வகை பாடத்தை படிக்கிறவன் நீயும் படின்னு மாணவர்களைப் பார்த்து சொல்றவன், இரண்டாவது வகை அந்தப் பாடத்தை சற்று விளக்குவான் அவ்வளவுதான் அவனுக்குத் தெரியும், மூன்றாவது வகை அந்தப் பாடத்தை செய்து காண்பிப்பான் அதன் மூலமாக மாணாவர்களையும் செய்யச் சொல்வான், நான்காவது வகை வாழ்க்கைக்கு வழிகாட்டுவான் இந்த நான்கு வகையான ஆசிரியர்களில் a poor teacher tells அவ்வளவுதான் ஒரு சாதாரன ஆசிரியர் சொல்லுவான் மாணர்வகளுக்கு பாடத்தை, an average teacher explain கொஞ்சம் விளக்குவான், a good teacher demonstrate அவன் செய்து காண்பிப்பான், a great teacher inspires மிகப் பெரிய ஆசிரியர் இருக்கிறானே அவன் தன்னுடைய உள்ளத்திலே எழுகின்ற உணர்வுகளை மாணவர்களுக்கு ஊட்டி உணர்வெழச் செய்வான் இதுதான் ஆசிரியர் பணியில் நான் கண்ட வழிமுறைகள்.

பாடத்தை நடத்துபவர்கள் எல்லோரும் ஆசிரியராக மாட்டார்கள், பேராசிரியர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள் அவர் பெயர் ஆசிரியர் அவ்வளவுதான் பேராசிரியர் என்பது வேறு பாடத்தை விளக்கி செய்து காட்டி வாழ்கையை இவ்வாறுதான் வாழ வேண்டுமென்று வழிகாட்டுகிறானே அவன் தான் மிகப் பெரிய பேராசிரியன் இதைத்தான் இன்றைய மஃரிபுக்கு முன்னால் பார்த்தோம். பேராசிரியர் பரக்கத் சார் அவர்கள் இது சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடிய நல்ல வேலையைச் செய்து கொண்டிருக்கிற காரணத்தினால் அவர்கள் மாணவர்களுக்கு உள்ளுணர்வை ஊட்டி சிறந்த சமுதயமாக வாழ வைக்க வேண்டும் முயன்று நடந்து கொண்டிருக்கிறார்கள்.

அதிராம்பட்டினம் பல கல்வியாளர்களைக் கொண்டது கல்வி மாண்டவர் கயன்று பயின்றிட பல செல்வி மாண்டர் என்று புகழ்ந்து பாடப்பட்டது. நெருக்கமாக அறிவாளிகள் இருப்பார்களாம் அதிராம்பட்டினத்தில் இதைத்தான் கடந்த காலத்திலே நாம் பார்த்தோம் மக்தூம் சின்ன நெய்னா லெப்பை ஆலீம் என்று ஒருவர் இருந்தார் வானயியலில் கெட்டிக்காரர் கஃபாவைப் பார்த்து அந்த கட்டிடத்தைப் பார்த்து குத்பா பள்ளியை கட்டினார்கள் என்று சொல்வார்கள்.

அதைவிட மிகச் சிறிய ஒரு கருத்து மக்கள் மனதிலே பரவாமல் இருக்கிறது அதுதான் வானயியலிலே வல்லவர்களாக அவர்களது குடும்பத்தினர் விளங்கினார்கள் கோல்களுடைய நிலமையை அறிந்து தெரிந்து எந்த திசையில் எந்த இடம் இருக்கும் என்பதை ஆய்ந்து உணர்ந்து வல்லவர்களாகிய அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைதான் மக்தூம் சின்ன நெய்னா லெப்பை ஆலிம் என்று சொல்லக்கூடியவர்கள் இன்றும் இந்த ஊரிலே அந்தப் பெயரைத் தாங்கியவர்கள் இருக்கிறார்கள் மக்தூம் மக்தூம் என்று சொல்லக்கூடிய பெயர் இருக்கிறது அந்த மக்தூம் சின்ன நெய்னா லெப்படி ஆலிம் கட்டிய கட்டிடம் மிக வருத்தத்திற்குரிய இடம் இன்று கான்கிரீட் கட்டிடமாக இருக்கிறது.

நீங்கள் கீழக் கரையிலே பாருங்கள் அவர்கள் கட்டிய பள்ளி இருக்கிறது கடற்கரையிலே தெற்கு மேற்காக இருக்கக் கூடிய தென் வடக்காக இருக்கக் கூடிய பழைய பள்ளி ஒன்று உண்டு ஆனால் மக்தூம் சின்ன நெய்னா லெப்பை ஆலிம் அவர்கள் இங்கேயிருந்து போய் அங்கே கட்டிய குத்பா பள்ளி சரியான முறையிலே நம்முடைய ஊரினுடைய அமைப்பிலே எப்படி இருந்ததோ அதே போல அந்த கிப்லாவனது வகுக்கப் பட்டிருக்கிறது அதேப் பள்ளியினை வேதாளம் என்ற ஊரிலும் பார்க்கலாம். இப்படிப்பட்ட வின்வெளி ஆராய்ச்சியளர்களாக இருந்தவர்கள் அவர்கள், அவர்கள் வழியிலே வந்தவர்கள் நாம் என்று மார்தட்டிக் கொள்கிறோம் மக்தூம் மக்தூம் என்று இன்னும் இருக்கிறது புதுமனைத் தெருவிலே.

சோழர்களுடைய ஆட்சிக் காலத்திலே நாணயங்களுக்கு வடிவமைத்துக் கொடுத்து அந்த நாணயங்களை வெளியிட்டு செலாவனிக்கு கொண்டுவந்தவர் உதுமான் மரைக்காயர். நாணயக்காரர் என்ற பெயரைப் பெற்றவர் அவர்கள் வழியிலே வந்தவர்கள் நாங்கள் என்று சொல்லிக் கொள்ளலாம் அந்தப் பழைய நாணயங்களுக்கு வடிவமைத்து கொடுத்த அந்த உதுமான் மரைக்காயருடைய புகழைப் பெற்றவர்கள் யார் என்று கேள்வி எழுகிறது.

என்னுடைய பாட்டனார் பள்ளியிலே மதரஸாவில் பாடம் படித்துக் கொடுக்கும்போது நான் ஒரு தொடையிலும் என்னுடைய தமக்கையார் மற்றொரு தொடையிலுமாக என்னுடைய பாட்டனாரின் உடம்பிலே படுத்திருந்தவர்கள் நாங்கள். பூலோக உருண்டையை சுழற்றி சுழற்றி அவர்கள் ஒவ்வொரு நாட்டையும் காட்டி காட்டி பாடம் நடத்துவார்கள் அந்த மொய்மீம் ஆலிம்சா என்று சொல்லக்கூடியவர்கள் முஹம்மது மொய்தீன் ஆலிம்சா என்ற பெயரைத் தாங்கியவர்கள் பலபேர் இருக்கிறோம் ஆனால் இன்றைய ஆலீம்கள் அப்படி பூலோக உருண்டையை உருட்டி உருட்டி அந்த நாடுகள் எங்கே இருக்கிறது என்று காட்டி காட்டி பாடம் நடத்தக் கூடியவர்கள் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை geography என்று சொல்லக்கூடிய அதனை ஜொகராஃபி என்று சொல்வார்கள் அது நடத்தக்கூடிய ஆசிரியர்கள் இன்று இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

முத்துப்பேட்டை வீதியிலே வந்து கொண்டிருக்கும்போது ஒருவர் முன் பகலுக்கு நடுவாக வானத்தை அன்னாந்து பார்த்து இது நேரம் எது என்று கணித்து தன்னுடைய கைக் கடிகாரத்தின் மணியை சரிபார்த்துக் கொண்டிருக்கிறார், அவரைப் பார்த்து பின்னால் வரக் கூடியவர் கேட்கின்றார் நட்சத்திரத்தை பார்த்து நேரம் குறிப்பதைப் பார்த்திருக்கின்றேன் இதென்ன சூரியனைப் பார்த்து நேரம் கணிக்கிறீர்கள் ? அப்போது ஷேகுனா லெப்பை என்று சொல்லக் கூடிய அவர்கள் சொல்கிறார்கள் இதைப் பற்றிய கல்வி அறிவு ஒன்று இருக்கிறது இதனைப் படிக்க வேண்டுமென்று சொன்னால் நீ அதிராம்பட்டினம் வா அங்கே நான் கற்றுத் தருகிறேன் என்று சொல்லி இந்த நாடு முழுவதும் அந்தக் கலையை பரப்பினார்கள்.

அஃப்லாக் அஃப்லாக் என்று சொல்லக் கூடிய அந்தக் கல்வியை அதை ஷேகுனா அவர்கள் துல்லியமாக நேரம் கணித்து மக்களுக்கு பாடம் நடத்தினார்களே அப்படி பாடம் நடத்தியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற கேள்வி என்னிடம் எழத்தான் செய்கிறது.



இந்த அதிராம்பட்டினத்தின் வரலாறு ஆங்கிலேயர்கள் காலத்தில் நான் உங்களைப் பார்த்து கேட்கின்றேன் “சாம்சன்” என்று சொல்லி ஒரு பட்டம் வாங்கிய பெருமகனார் இருந்தார் யர் அவர் ? சாம்சன் என்ற ஒரு பெயரை ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்டு இருந்த ஒரு பெருமகனார் அந்தப் பெருமகனாரின் பேரப் பிள்ளைகள் இதோ என் எதிரே இருக்கிறார்கள், பெண்களிலே பேத்திமார்கள் அங்கே இருக்கிறார்கள். அந்த சாம்சன் என்று சொல்லக் கூடியவர் யார் ? என்ற கேள்வியை எழுப்புகிறேன் ! விடை தெரிந்தால் சொல்லுங்கள, தெரியவில்லை ! சாம்சன் என்று சொல்லக் கூடிய அந்த பெருமகனார் பெரிய் ஆலிம்சா என்று போற்றக் கூடிய முஹம்மத் அப்துல் காதர் அலிம்சா அவர்கள்.

அவர்கள் சட்டக் கலையிலே வல்லவர்களாக இருந்தார்கள் இஸ்லாத்தைப் பற்றியிருந்தாலும் சரிதான் மனிதயியலைப் பற்றியிருந்தாலும் சரிதான் இந்த உலகத்தில் பின்பற்றக் கூடியவைகளை ஆய்ந்து தெரியக்கூடியவர்களாக இருந்தார்கள் எனவே அவர்களைப் பார்த்து ஆங்கிலேயன் சொன்னான் extraordinary man of the knowledge என்று சொல்லி strength என்று சொல்லி அவருக்கு சாம்சன் என்ற அந்தப் பட்டத்தை வழங்கினான்.

சான்சம் என்பது ஹிப்ரு மொழிச் சொல் மிகப்பெரிய வல்லுநர்களுக்கு வழங்கப்படக்கூடிய ஒரு சொல், அந்தச் சொல்லை யாருக்கு வழங்கினான் சாட்டங்களை கறைத்துக் குடித்து மக்களை தெளிவான வழியில் நடத்திச் சென்ற முஹம்மது அப்துல் காதர் ஆலிம்சாஹிப் என்று சொல்லக் கூடிய அந்தப் பெருமகனாருக்கு அளித்தான் சாம்சன் என்ற பட்டத்தை அந்த அப்துல் காதர் ஆலிம்சாஹிம் அவர்களுடைய பேரப் பிள்ளைகள் இங்கே என்னுடைய எதிரிலே இருக்கிறார்கள் பேத்திமார்கள் அங்கே இருக்கிறார்கள் உடல் பலம் வாய்ந்தவர்களுக்கு சாம்சன் என்று ஹிப்ரு மொழியிலே கொடுத்தான், ஆனால் அறிவாற்றலிலே வல்லவர்களாகிய அப்துல் காதர் ஆலிம்சா, பெரிய ஆலிம்சா வீடு இங்கேதான் வாய்க்கால் தெருவிலே இருக்கிறது அவர்களுக்கு சாம்சன் என்ற பெயரை அழைத்தான் யாருக்கும் தெரியுமா ?

அதேபோல இலக்கிய உலகிலே குழந்தை இலக்கியம் குழந்தை இலக்கியம் என்று சொல்லப் படுவதுண்டு நான் அதிலே ஆராய்ச்சி பன்னியவன் தமிழகத்திலே குழந்தை இலக்கியம் பற்றி முதன் முதலிலே ஆராய்ந்தவன், ஆனால் என்னுடைய பாட்டனார்களில் ஒருவர் முஹம்மது உவைஸ் நெய்னா பிள்ளை ஆலிம் என்பார், உவைச் நெய்னா பிள்ளை என்ற பெயர் நிறைய பேருக்கு இருக்கிறது ஆனால் !

பாலகரே பாலகரே !
பலன்தரும் வேலையிலே !
கால நேரத் தோடே
கற்றுக் கொள்வீர் முக்கியமாய் !
புத்திரியே புத்திரியே - என்
பொருத்தமுள்ள புத்திரியே !
புத்தியுடன் என் சொல்லை
பொருந்திக் கொள்வாய் புத்திரியே !

என்று சொல்லி குழந்தை இலக்கியத்தை வடித்துக் கொடுத்த முதன் முதலாக குழந்தை இலக்கியத்தை தமிழகத்திலே எழுதியனுப்பிய இந்த உவைஸ் சின்ன நெய்னா பிள்ளை ஹாஜியார் என்ற அந்த பெருமகனைப் போல இன்று யார் இருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

அதிரைக்கும் யெனுக்கும் (Yemen) இடையே கடலை குறுக்காக கடந்து வழி அமைத்து வாழ்க்கை நடத்திய நஹுதா மரைக்காயர்கள் வாழ்ந்த இடம் இந்த கடற்கரைத் தெருவிலே இருக்கக் கூடிய வத்தக் காரத் தெரு, எத்தனை நஹுதா மரைக்காயர்கள் இன்று தோன்றியிருக்கிரார்கள் ? யெமனுக்கும் அதிரைக்கும் இடையே கடல் கடந்து செல்லக் கூடிய கப்பல் வாணிகம் செய்யக் கூடியவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

புரான உலகத்திலே புரண்டு எழுந்த அண்ணாவியர்கள் எத்தனையோ இதிகாசங்களைப் பாடியவர்கள் தேவையிருக்கிறதோ இல்லையோ பாடியவர்கள் அவர்களை இஸ்லாத்தின் பக்கத்திலே வரவழைத்து பாட வேண்டும் என்ற நெறிமுறையை அப்துல் காதர் ஆலிம்சா அவர்கள் அவர்களுடைய முன்னோர்கள் கோஸ் நெய்னா பிள்ளை ஆலிம் அவர்கள்.

மரைக்காப் பள்ளியிலே சென்றால் இடப்பக்கமாக இருக்கக்கூடிய ஒரு கப்ரு இருக்கும் அதிலே கருங்கல் மிஷான் பலகை ஒன்று இருக்கும் அந்த கோஸ் முஹம்மது ஆலிம்சாஹிப் அவர்கள் கடற்கரைப் பள்ளியை நிர்மானித்தவர்கள் அவர்களுடைய மனமாற்றத்தின் காரணமாக அந்த அண்ணாவியர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் சட்ட மேதைகளாக தெளிந்து ஃபிக்ஹு மாலை என்று சொல்லக் கூடிய சட்டங்கள கொஞ்சம் கூட வேற்றுக் கருத்துக்கள் கலவாத படி கற்பனைகள் கலவாதபடி அந்த ஃபிக்ஹு மாலையை பாடி அளித்த காதர் முகைதீன் அண்ணாவியர் வாழ்ந்தது இந்த அதிராம்பட்டினம். ஆக! கல்வி மேதைகள் சிறந்து விளங்கிய இந்த அதிராம்பட்டினத்தில் எத்தனை கல்வி மேதைகள் இன்று இருக்கிறார்கள்.

அஃப்லாக் என்று சொல்லக் கூடிய அந்த வானயியலை பரப்பக் கூடியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் பூமி உருண்டையை சுழற்றி சுழற்றி பாடம் நடத்தக் கூடிய ஆலிம்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் ? அதே மாதிரி ஃபிக்ஹுகளில் நாங்கள்தான் வல்லவர்கள் என்று மார்தட்டக் கூடியவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் ? ஆக! இவ்வளவும் நம் கண் முன்னால் ஏற்படக் கூடிய கேள்விகளாக இருக்கின்றன.

விழிப்புணர்வு விழிப்புணர்வு என்று சொன்னால் எல்லாத் துறைகளில் மாஸ்டர் பீஸ் master piece என்று சொல்லக் கூடிய ஒவ்வொரு துறையிலும் வல்லவர்களாக இருந்தார்கள் எந்தத் துறையிலும் இளைத்தவர்களாக அவர்கள் இல்லை. அந்த ஒவ்வொரு துறையிலும் வல்லவர்களாக இந்த அதிரையின் குடிமக்கள் விளங்க வேண்டும் மாணவர்கள் வரவேண்டும் என்று சொன்னால் இந்த விழிப்புணர்வு கூட்டங்கள் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் வந்து கொண்டேயிருக்க வேண்டும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்துகின்றோம்.

ஆக ! இந்த உலகத்தில் பெண்கள் சொல்லலாம் எங்களுக்கு என்ன தொழில் இருக்கிறது !? எந்தப் பெண்ணும் இந்த அதிராம்பட்டினத்தில் நான் அறிய சிறு பிள்ளையாக இருக்கும்போது சும்மா இருந்திடவில்லை ஏதேனு தொழில் செய்து கொண்டிருப்பார்கள். ஒரு பெண் தூணிலே சந்து கொண்டு கிதாபுகளை படித்து படித்து மார்க்கச் சட்டங்களை விளக்கிக் கொண்டிருப்பார் அருகிலே இருக்கக் கூடிய பெண்கள் குட்டான் மொடைவார்கள், பொட்டி மொடைவார்கள், தொப்பி பின்னுவார்கள், மால் முடி என்று சொல்லக் கூடிய சிறிய சிறிய வலைகள் பின்னுவார்கள் நான் கண்ணாற பார்த்திருக்கிறேன், எத்தனை பேர் அப்படிப் பட்ட தொழிகளை செய்திருக்கிறார்கள் தெரியவில்லை.

இரண்டரை வயது பிள்ளையை பள்ளிக் கூடத்திலே கொண்டுபோய் விட்டு விடுகின்றோம் கேட்டால் சொல்வார்கள் எங்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது "கெட்டுப் போவான்” (தொலைக்காட்சிகள்) எத்தனையோ சீரியல்களை போட்டுக் கொண்டே இருக்கான் எதையும் பார்க்கிறதுக்கு எங்களுக்கு நேரம் இருக்க மாட்டேங்கிறது, இந்தப் பிள்ளையை எப்படி நாங்க வளர்ப்போம் என்று இந்தா ஒப்படை என்று சொல்லி மழலையர் பள்ளியில் கொண்டு போய் விடுகிறார்கள். நேரமானால் டியூசனுக்கு தனிப்படிப்பிலே கொண்டுபோய் விடுவார்கள் இவங்களுக்கு வேலையிருக்கும்போது தனிப் படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியருக்கு வேலையில்லையா ? அவர்களும் அப்படித்தான் படி படி என்று சொல்லி படிக்க விட்டுவிடுவார்கள் ஆக அவர்கள் கூட இவர்களுக்கு வேலையிருப்பதுபோல அவர்களுக்கும் வேலையிருக்கும் எத்தனை சீரியல்கள் வருகின்றது அதனைப் பார்த்துக் கொண்டு கடைசியில் விரட்டி விடுவார்கள் இதுதான் நடக்கிறது.

ஆக ! விழிப்புணர்ச்சி விழிப்புணர்ச்சி என்று சொல்லும்போது நாம் நம்முடைய குழந்தைகளுக்கு ஆசிரியர்களாக மாற வேண்டும், நம்முடைய குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும் எனக்குத் தெரியாது என்று சொல்ல வேண்டியதில்லை ஏனென்று சொன்னால் உங்களுக்குத் தெரியாது என்ற விஷயம் அந்தக் குழந்தைக்குத் தெரியாது. எடுங்கள் புத்தகத்தை எடு என்ன எழுதினாய் படி என்று வேலை வாங்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும் இப்படித்தான் நம்முடைய குழந்தைகளை மடைமாற்றம் செய்து வளர்க்க வேண்டியவர்களாக பொறுப்பிலே இருக்கின்றோம். ஆகவே இந்தக் கருத்துக்களை உங்கள் முன்னால் நான் வைப்பதனுடைய காரணம் விழிப்புணர்ச்சி உள்ளாவர்களாக நாம் மாறி விட வேண்டும் ஏமாற்றம் உள்ளவர்களாக ஆகிவிடக் கூடாது இந்த சமுதாயம் ஏலத்தால் மலிந்திருக்கக் கூடிய சமுதாயம் காலத்தால் நிறைந்திருக்கக் கூடிய சமுதாயம் ஏமாந்த சமுதாயமாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான் நாம் இத்தனை பேர்களை எடுத்துக் காட்டுகின்றேன். எத்தனை ஆலிம்களை சொல்லியிருக்கிறேன் அத்தனை ஆலிம்களும் தனித் திறமை பெற்றவர்களாக திகழ்ந்தார்கள்.

இப்படியாக இரண்டாவது அமர்வில் அவர்களின் எழுச்சியுரை சென்று கொண்டிருக்கும்போது தவிர்க்க முடியாத நிர்பந்தத்தினால் சகோதரி உமர் கனி அவர்களை பேச அழைத்ததால் அப்படியே பாதியிலே நிறைவு செய்து கொண்டார்கள் நமது கவிமாமணி புலவர் பஷீர் அஹ்மத் ஹாஜியார் அவர்கள்.

எங்களின் ஏக்கம் இன்னும் உங்களது உரையை தொடர்ந்து கேட்க வேண்டும் மேலும் அறிவுரைகள உங்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

நீங்கள் இனிமேல் நாங்கள் நடத்தும் இல்லை இல்லை நீங்களே முன்னின்று நடத்தும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை மேல்கல்வி விழிப்புணர்ச்சி நிகழ்ச்சியாக அந்த மேடைகளிலும், களங்களிலும், பேச்சாலும் எழுத்தாலும் தாங்கள் ஆளுமை செய்ய வேண்டும் அதற்கு நாங்கள் என்றும் உறுதுணையாக இருந்திடுவோம் இன்ஷா அல்லாஹ்…


அபுஇப்ராஹீம்

12 Responses So Far:

Meerashah Rafia said...

இந்த ஆக்கத்தோடு அவர்களின் காணொளியை கட்டுரையின் இறுதியிலோ முதலிலோ பதியப்பட்டால் வேலை பளுவில் இருப்பவர்கள், படிக்க கஷ்டபடுபவர்கள்,குடும்பத்தோடு பார்த்து பயனடையகூடியவர்கள்கூட பார்த்தோ/கேட்டோ தெரிந்துகொள்ள மிக வசதியாக இருக்கும் என நம்புகிறேன்.

மு.செ.மு .மீரஷாஹ் ரஃபியா

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பானவர்களே,

இந்த முயற்சி முதன் முதலில் எடுக்கப்பட்டது. பேசிய உரையை எழுத்துவடிவில் கொண்டுவந்துள்ளோம், ஏதாவது பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் சரி செய்துவிடுகிறோம்.

//இந்த ஆக்கத்தோடு அவர்களின் காணொளியை கட்டுரையின் இறுதியிலோ முதலிலோ பதியப்பட்டால் வேலை பளுவில் இருப்பவர்கள், படிக்க கஷ்டபடுபவர்கள்,குடும்பத்தோடு பார்த்து பயனடையகூடியவர்கள்கூட பார்த்தோ/கேட்டோ தெரிந்துகொள்ள மிக வசதியாக இருக்கும் என நம்புகிறேன். //

சகோதரர் மீராசா,

தற்போது தான் வீடியோ குருந்தகடு நம்மிடம் வந்துள்ளது, வேலை பளு காரணமாக பதிவேற்றம் செய்ய நேரம் அதிகம் கிடைப்பதில்லை. விரைவில் பதிவேற்றம் செய்துவிடுகிறோம்.

சவுதிக்கு விரைவில் குருந்தகடு அனுப்பிவைக்கப்படும். கிடைக்குமிடம் பற்றி விரைவில் தகவல் தருகிறோம்.

தொடர்ந்து இணைந்திருங்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இது போன்ற ஒரு உரையை என் வாழ் நாளில் இதுவரை கேட்டது இல்லை, எழுத்துவடிவில் வந்தது நிச்சயம் பாதுகக்கப்பட வேண்டியவையே.

இந்த அற்புதமான தகவல் களஞ்சியத்தை எல்லோரும் தெரிந்தவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் பகிர்ந்துக்கொள்ளுங்கள். நம் வரலாற்றை அறிந்து வைத்திருப்பது மிக மிக முக்கியம் என்பதில் யாருக்கும் மற்றுக்கருத்து இருக்காது.

எழுத்துவடிவில் எல்லோருக்கும் பயனைடையும்படி செய்த என் சகோதரருக்கு (அபுஇபுறாஹிம்) மிக்க நன்றி.

Meerashah Rafia said...

எழுதியதை படிப்பதேற்கே நேரமில்லா இக்காலத்தில், ஒளி,ஒலியை உளியில் செதுக்கியதுபோல் எழுத்து வடியில் வருடி எங்கள் மனதில் பதிய பதிந்தமைக்கு மிக்க நன்றி. இன்ஷா அல்லாஹ் சவூதியில் குறுந்தகடு கிடைத்தால் அதை பார்த்து பயணிப்போம். பயணம் முடியவில்லை.. இனிதான் இனிதான ஆரம்பம்.

MSM(MR)
MEERASHAH RAFIA

sabeer.abushahruk said...

அபு இபுறாஹீம், கலக்கிவிட்டீர்கள். ஒரு சிறப்பான சொற்பொழிவை எழுத்தில் வடிப்பது, அதுவும் அதன் வேகம் குறையாமல் பதிவது என்பது கடினமே.

ஆனால் நீங்கள் இந்த வேலையை மிகத் திறம்பட செய்திருக்கிறீர்கள். வாழ்க உங்கள் தொண்டு.

தலைவரின் உரையை நேரில் கண்டு கேட்டவர்களில் நானும் ஒருவன். அவர்களுக்கும் அவர்களைக் கண்டெடுத்து நமக்குத் தந்த அஹ்மது காக்கா அவர்களுக்கும் அல்லாஹ் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தந்தருள்வானாக,ஆமீன்.

(please mark punctuations to ease the reading)

அதிரைநிலா said...

அபு இபுராஹிம் காகா அவர்களின் எழூத்து பணி மென்மேலும் தொடர எங்கள் வாழ்த்துக்கள்

Unknown said...

அல்ஹம்துலில்லாஹ். தமிழ்மாமணி அதிரை அறிஞர் புலவர் பஷீர் ஹாஜியார் அவர்களின் அற்புதமான உரை வீச்சை கேட்டு அதையெ நாம் படிக்கும் போது மனதில் ஆழப்பதிகிறது. அபுஇபுறாஹீம் காக்கா அவர்களுக்கு நன்றி.

Riyaz Ahamed said...

சலாம்
ஒரு சில இடுகைகள் அகற்ற படுகின்றன . என்னென்ன காரணங்களுக்காக அகற்ற படுகின்றன என்பதை வலை பதிவு நிர்வாகிகள் அறிய தருவீர்களா? அகற்றியது அகற்றினீர்கள் அதை பற்றி இடுகையில் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன? தெரிவிக்காமல் இருந்திருந்தால் இது பற்றி நான் இடுகை எழுத தேவையே இல்லை

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சகோதரர் ரியாஸ் அஹ்மத் அவர்களின் கேள்விக்கு : தாங்கள் சொல்வதுபோல் வலைப்பதிவு நிர்வாகி நீக்கியிருந்தால் அதற்கு உடனே அதிரைநிருபர் குழு கண்டிப்பாக பதில் கருத்தை அதே பக்கத்தில் தந்திருக்கும் இதில் எவ்வித மாற்றுக் கருத்து இல்லை...

நிற்க ! கருத்தை பதிந்த வாசகர்களே நீக்கியிருந்தால் அதற்கு வலைப்பதிவு நிரிவாகம் பொறுப்பாகாது.

ஒருவேளை இதனை //sabeer.abushahruk சொன்னது…
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.
// குறிப்பிட்டு சொல்லியிருந்தீர்களேயானால் இது வலைப்பதி நிர்வாகி செய்திடவில்லை !

Solution : இது வலைப் பதிவில் இருக்கும் சில சிக்கல், இதனையும் களைந்திட முயற்சிக்கிறோமே இன்ஷா அல்லாஹ்..

நன்றி : இப்போது தங்களு தெளிவு கிடைத்திருக்கலாம் என் நம்புகிறேன்.

இவண் : இந்த வலைப்பூ தளத்தை நிரிவகிப்பவர்கள் நானும் ஓர் உறுப்பினர்.

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் ரியாஸ் அவர்களுக்கு,

சகோதரர் அபுஇபுறாஹிம் அவர்களின் கருத்துக்களுடன் சேர்த்து தெளிவுபடுத்துவதற்காக இங்கு சிறிய விளக்கம்.

சில கருத்துக்கள் பின்னூட்டமிடுபவர்கள் அகற்றினால் "இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்" என்று வரும். இங்கு அதிரைநிருபர் அனேக பகுதிகள் தமிழில் உள்ளது. Googleன் Blogger நிர்வாகத்துக்கு தமிழ் டியூசன் எடுக்கனும்.

தங்களின் சந்தேகம் நியாயமானதே, இந்த வாசகத்துக்கு பதிலாக வேறு வாசகம் இருப்பதற்கு முயற்சி செய்கிறோம்.

எந்த கருத்தையும் அதிரைநிருபர் நீக்கினால் அதற்கு தேவைப்படும் பட்சத்தில் தகுந்த காரணமும் கொடுக்கப்படும், அதிரைநிருபர் இந்த கருத்தையும் நீக்கினாலும் "இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்" வாசகம் உங்கள் பார்வைக்கு வராது என்பதையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நல்ல கேள்வி கேட்ட சகோதரர் ரியாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி.

தொடர்ந்து இணைந்திருங்கள்.

Riyaz Ahamed said...

சலாம்
சந்தேகங்களுக்கு விளக்கம் தந்ததற்கு நன்றி.இதற்கு முன் அதிரை போஸ்ட் வித்தியாசமாக இடுகை எழுதி இருந்தது நான் படித்தேன் பிறகு நீக்கப்பட்டது.சபீர் அப்படி எழுதி இருக்க முடியாதே என்பதற்காக தான் கேட்டேன்-- நன்றி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதென்ன பின்னூட்டம் (இட்டவங்களுக்கே வெளிச்சம் !)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு