Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பலம் 14

அதிரைநிருபர் | March 22, 2011 | ,

முகத்தை நோக்கி
வரும்
தூய தென்றல்
நம்
முகத்தை வருடும் முன்பே
வருடினால் நிகழும் மாற்றத்தை
உணர்வது...
ஆன்ம பலம்!

தோட்டத்தில்
அழகியப் பூக்கள்
மாலை நேரத்தில்
அதைப்
பறித்து நுகரும் முன்பே
நுகர்தலில் சுவாசங்கள் படும்
சுகமறிதல்...
அழகியலின் பலம்!


கடலை நோக்கி
மழை பெய்கிறது
எல்லாத் துளிகளும்
உப்பு நீரில்
சங்கமித்து விட்டன
ஒரு துளியை தவிர
தன்னுடைய
தன்மையை இழக்காமல்
கடல் நீரில் சங்கமிக்காமல்
ஆழம் நோக்கி பயணித்து
சிப்பியைக் கண்டு
உட்புகுந்து முத்தாகுதல்...
தன்னம்பிக்கையின் பலம்!

 
மொட்டுகள்
மலராகும் முன்
சிறிய
இலைகளால் மூடப்பட்டிருக்கும்
இலைகள் மூடிஇருக்கிறதே
மலர்ந்தால்
எப்படி உலகத்தை பார்க்கும்
என கருதாமல்
மலர்ந்தால்
இதழ்கள் இலைகளை
விலக்கி
வானமே எல்லை
எனக்கொள்வது...
லட்சியத்தின் பலம்!
 

-- அப்துல் ரஹ்மான்
-- harmys

14 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பலமும் பலவீனமும் கண்டு கொண்டிருக்கும்போது, வருடும் பலம் அருமையான பலமான கவிதை !

ஆண்மை
அழகு
தன்னம்பிக்கை
லட்சியம்

கலக்கல் தம்பி (AR)Harmys!

crown said...

முகத்தை நோக்கி

வரும்
தூய தென்றல்
நம்
முகத்தை வருடும் முன்பே
வருடினால் நிகழும் மாற்றத்தை
உணர்வது...
ஆன்ம பலம்!
----------
அஸ்ஸலாமு அலைக்கும். இது நுன்னறிவு எனவும் கொள்க! சமயோகிதம்,முன்னெச்சரிகை சகிதம்.இப்படி பல,பல உணர்வை அடக்கிய மன பலம்.இதுதான் ஆன்ம பலம்(Mind reading). செய்க திருந்த செய்க!முடிவெடுக்கும் திறன் வாய்ந்த செயல்(Managing power).இப்படி பலா பலன் கொன்ட பலம்.
--------------------------------------------------------

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

பலத்திற்கு
பலமான பாலம் அமைத்த கவிதை

உண்மையில் கலக்கல்தான் போங்க

crown said...

தோட்டத்தில்
அழகியப் பூக்கள்
மாலை நேரத்தில்
அதைப்
பறித்து நுகரும் முன்பே
நுகர்தலில் சுவாசங்கள் படும்
சுகமறிதல்...
அழகியலின் பலம்!
--------------------------------------------------------------------
இதுவும் தீர்க்கமான பலம்.ரசிக்கும் தன்மை உள்ளவனுக்கு மட்டுமே புலப்படும். கல்லை கண்டால் நாயை கான்பதும், நாயைக்கண்டால் கல்லை கானதிருப்பதும்(கல்லை கண்டால் நாயை கானோம், நாயை கண்டால் கல்லை கானோம் என்ற தவறாக புரிந்த பதம்)புரிந்து உள்ளவர்களால் மட்டுமே அறியக்கூடிய பலம். இதுதான் இன்னாருக்கு இன்னது தேவை என அறியும் அன்பு கூர்ந்த ஆழ்ந்த பார்வை பலம்,எல்லா புலனும் என்றும் தாயர் நிலையில் இருக்கும் பலம்.
-----------------------------------------------------------------

crown said...

கடலை நோக்கி
மழை பெய்கிறது
எல்லாத் துளிகளும்
உப்பு நீரில்
சங்கமித்து விட்டன
ஒரு துளியை தவிர
தன்னுடைய
தன்மையை இழக்காமல்
கடல் நீரில் சங்கமிக்காமல்
ஆழம் நோக்கி பயணித்து
சிப்பியைக் கண்டு
உட்புகுந்து முத்தாகுதல்...
தன்னம்பிக்கையின் பலம்!
---------------------------------------------------------------------
நாம் உ(க)ருவாக இருந்த பலமே இதுதான்.கால ஓட்டத்தில் எதிலும் கலந்து கானாபோகாமல் தனித்திருப்பது.கனி இருக்க அவசரத்தில் காய் கவராதிருப்பது. ஒவ்வொரு வெற்றிக்கும் நுழைவாயிலாய் இருப்பது.இப்படி பட்ட பலம். அத்தியாவாசியமான பலம்.

crown said...

மொட்டுகள்
மலராகும் முன்
சிறிய
இலைகளால் மூடப்பட்டிருக்கும்
இலைகள் மூடிஇருக்கிறதே
மலர்ந்தால்
எப்படி உலகத்தை பார்க்கும்
என கருதாமல்
மலர்ந்தால்
இதழ்கள் இலைகளை
விலக்கி
வானமே எல்லை
எனக்கொள்வது...
லட்சியத்தின் பலம்!
---------------------------------------------------------------------
இழந்தாலும் துவளாமல் தொடரும் முயற்சி,விழுந்தாலு எழும் பயிற்சி.கல்லடியும்,சொல்லடியும் கடக்கும் முதிர்சி இவையாவுமே லட்சியம் என்கிற பலத்தின் அடிப்படை.இப்படி பல பலம் உள்ளதை விளக்கி பலாபலன் நாம் கான எழுதிய அப்துற்றஹ்மான் இப்பொழுது ஒரு விசயம் அம்பலம் ஆகிவிட்டது அடுத்த அதிரையின் கவி என்பதை நாம் எல்லாம் நம்பலாம் என்பதே அது.( இந்த கவிதை வரும் முன்னே - சகோ.சபிர் காக்கா எழுதிய இவர்களும் அதிரை நிருபர்களேக்கு நான் எழுதிய "இவர்களில் "இவரை பற்றி முன்பே சொல்லிவிட்டேன்.வெகு விரைவில் "இவர்கள்" வரும் என்று எதிர் பார்க்கிறேன்.அதிரை நிருபர்களின்டம் அது சென்றுவிட்டது)

ZAKIR HUSSAIN said...

to Bro;-- Abdul Rahman

சிப்பிக்குள் முத்தாகும் தன்னம்பிக்கை பலம்....எல்லோரும் உணர உணர்த்தும் வரிகள்...

sabeer.abushahruk said...

இயற்கையான நிகழ்வுகளை தான் சொல்லவந்தவையோடு ஒப்பிட்டு அருமையாக புனையப்பட்டிருக்கிறது இந்த கவிதை!

ஜாகிர் சொல்வதுபோல தன்னம்பிக்கைக்கான புனைவு கவிஞரின் பலம்!

அப்துர்ரஹ்மானின் பக்கத்தில் இருக்கும் நண்பர் யாராவது அவர் முதுகில் தட்டலாம், ஐ மீன், தட்டிக்கொடுக்கலாம்!

Yasir said...

காலையில் இப்படிபட்ட ரம்மியமான வரிகள் கோர்த்த தன்னம்பிக்கை கூட்டக்கூடிய கவிதைகளை படிப்பது...மனதிற்க்கு பலம்தான்...வாழ்த்துக்கள் கவிஞரே

அப்துல்மாலிக் said...

தன்னம்பிக்கை பலத்துக்கு அழகு சேர்க்குது வரிக்ளும் உதாரணமும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர் அப்துல் ரஹ்மான்,

தம்பியின் ஸ்டைலும், அண்ணனின் ஸ்டைலும் தனிதான் என்றாலும். எழுத்துக்களின் தன்னம்மிக்கை மிளிர்கிறது இருவரிடம்.

தன்னமிக்கைதான் ஒவ்வொருத்தரின் முதல் பலம் என்பதை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்..

அலாவுதீன்.S. said...

சகோ. அப்துல் ரஹ்மான் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தங்கள் பலத்திற்கு வாழ்த்துக்கள். முத்து உருவாவது பற்றிய ஒரு சிறு விளக்கம்:

/// கடல் நீரில் சங்கமிக்காமல்
ஆழம் நோக்கி பயணித்து
சிப்பியைக் கண்டு
உட்புகுந்து முத்தாகுதல்... ///

மழைத்துளி கடலில்
ஆழம் நோக்கி செல்லாது
சிப்பித்தான் ஆழத்திலிருந்து
கடல் மேற்பரப்பில் வந்து
மழைத்துளியை
வாய்திறந்த பெற்றுக்கொண்டு
பின் கடல் ஆழத்திற்கு சென்று
அந்த மழைத்துளியை
தன் உள்ளே வைத்து
பாதுகாத்து பின்
முத்தாக நமக்கு தருகிறது!

Unknown said...

நன்றி ! கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி !
அலாவுதீன் காக்கா விளக்கத்திற்கும் நன்றி

ZAKIR HUSSAIN said...

To Bro Alaudeen,

சிப்பித்தான் ஆழத்திலிருந்து
கடல் மேற்பரப்பில் வந்து
மழைத்துளியை
வாய்திறந்த பெற்றுக்கொண்டு
பின் கடல் ஆழத்திற்கு சென்று
அந்த மழைத்துளியை
தன் உள்ளே வைத்து
பாதுகாத்து பின்
முத்தாக நமக்கு தருகிறது!



எனக்கு தெரிந்து மல்லகஸ் அனாட்டமியில் உள்ள மேன்டில் எனும் பகுதியானது [கிரிஸ்டலின் ...பெரும்பாலும் கால்சியம் கார்பணேட்...ஒவ்வொரு லேயராக பதியும் பரிணாம வளர்ச்சிமாதிரி] உருமாருவதுதான் 'முத்து' [ ரஜினி படம் அல்ல]

//பின் கடல் ஆழத்திற்கு சென்று
அந்த மழைத்துளியை
தன் உள்ளே வைத்து//

சாத்தியம் இருப்பதாக மெரைன் பயாலஜி சொன்னமதிரி தெரியவில்லை...கவிஞர்களின் சொந்த கிராபிக்ஸ்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு