Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஐரோப்பாவில் ஓர் அன்பு வாப்பா... ! 27

அதிரைநிருபர் பதிப்பகம் | July 20, 2011 | ,

வளைகுடா வாப்பா(வுக்கு) மட்டும் தான் கனவுகளின் கவிதை காட்சியா, ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்திரேலிய கண்டங்களில் இருக்கும் வாப்பா(க்களின்) கனவுகளின் சாட்சியாக நமது சிந்தனை சுரபி M.H.ஜஹபர் சாதிக் எழுதிய போட்டிக் கவிதை !

நிகழ்வதெலாம் என்னெவென்று
நெஞ்சம் ஏங்குகிறது
நல்ல தகவல் கேட்க
நேற்று வந்துபோக வில்லையே!

வளையோசை நினைவெல்லாம்
வளைகுடாவாசிக்கே வாய்க்க
வந்து பல வருசமானதால்
வாய்ப்பு குறைவு அதுபற்றி!

இந்நாட்டு நடைமுறையால்
தங்குமிடமெல்லாம் விசாலமே
அங்குபோல் நெருக்கமெல்லாம்
இங்கெல்லாம் மிகக்குறைவே!

ஆசைக் கனவுகளை
அசைபோட்டுப் பார்க்க
ஆவலிருந்தும் அதுவெல்லாம்
ஆண்டு பல ஆதனினால் குறைவே!

வீடு கட்ட வேண்டுமென்றால்
வீட்டின் புறத்தே அவசியம்
விசாலமாய் பசுமைப்படுத்த
விட்டுத்தான் கட்ட வேண்டும்!

கொஞ்சும் மொழி கேட்க
கொஞ்சமும் வாய்ப்பில்லை
கெஞ்சி வாப்பா வா என
பிஞ்சும் உருகும்!

வாப்பா என்ற உயிர் வார்த்தை
வாய்க்கிறது செவிக்கு மட்டும்
வாஞ்சையோடு வருடிப்பார்க்க
வருசம் பல ஆகிடுதே!

பிறப்பைத் தள்ளிப் போட
சிறப்பான வழியென்பது
அரசின் சதியா இல்லை
அவளின் மதியா!

வாப்பாவாக இருந்தாலும்
வருசம் நாற்பதானாலும்
வந்து படிக்க தடையில்லை
வாய்ப்பதற்கோ ஒன்றுமில்லை

படிக்க வருகிறேன் என்று
பல லட்சம் கொடுத்து
பார்த்தால் பின் தெரியுது
போலி பல்கலைகழகமென்று!

படிப்பதோடு இருந்துவிடாமல்
பணமும் கொஞ்சம் பார்க்கலாமென்று
பம்பரமாய்த் தேடினாலும்
பணி கிடைப்பதும் பெரும்பாடே!

அயல் நாட்டில் படிக்கலாமென்று
ஐந்தாறு லட்சம் கொடுத்து வந்து
அருகில் வந்தால் தெரியுது
அவ்வளவும் இழப்பு தானென்று!

- M.H. ஜஹபர் சாதிக்

27 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி MHJ உருக்கும் வரிகள் உள்ளம் வலிக்கும் அதிர்வுகள் ஒவ்வொரு வார்த்தையிலும்...

Excellent !

Yasir said...

வாழ்த்துக்கள் “ஐ” ரோப்பிய கவியே....

//படிப்பதோடு இருந்துவிடாமல்
பணமும் கொஞ்சம் பார்க்கலாமென்று
பம்பரமாய்த் தேடினாலும்
பணி கிடைப்பதும் பெரும்பாடே!// கண்கூடாக கண்ட உண்மை...

இங்கு அளவிற்க்கு அங்கு நெருக்கம் இல்லாவிட்டாலும்...டீயூபில் லேட் ஈவினிங்-ல் கிங்ஸ்பேரியில் இருந்து விக்டோரியாவரை பயணம் செய்தபோத கருத்தவர்களின் பார்வை சரியில்லாமல் கொஞ்சம் பாதுகாப்பின்மையை உணர்ந்தேன்....

Yasir said...

உண்மை நிலையை அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்

அப்துல்மாலிக் said...

சபாஷ் சரியான போட்டி..!

//அங்குபோல் நெருக்கமெல்லாம்
இங்கெல்லாம் மிகக்குறைவே!//

இதையும் சேர்த்துக்கோங்க

”அங்குபோல் பணமதிப்பும் சம்பளமும்
இங்கெல்லாம் மிக அதிகமே.....”

sabeer.abushahruk said...

//வாப்பா என்ற உயிர் வார்த்தை
வாய்க்கிறது செவிக்கு மட்டும்
வாஞ்சையோடு வருடிப்பார்க்க
வருசம் பல ஆகிடுதே!//

அடிக்கவில்லை, உதையவில்லை யாயினும் வலிக்க வைக்க முடிகிறது உங்களால் வார்த்தைகள் கொண்டு.

இது கவிதையா அல்லது ஒரு கடல்கடந்து பிழைப்பவனின் சரிதையா?

உமது கவிதை சொல்லிக்காட்டவில்லை ஐயா, செய்து காட்டியதுபோலொரு தெளிவு. எனக்குத் தெரிந்து கவிதையென்னும் வடிவத்தால் மட்டுமே ஐந்தாண்டுச் செய்தியையும் ஐம்பது வரிகளில் சொல்ல முடியும்.

அ.நி.: இது போட்டிக்கவிதையல்ல நிழல்கூட துணைக்கில்லாத ஒற்றையான வெற்றிக்கவிதை.

நிறைய எழுதுங்க தம்பி.

ZAKIR HUSSAIN said...

To Bro M H Jahabar Sadik ,

//பிறப்பைத் தள்ளிப் போட
சிறப்பான வழியென்பது
அரசின் சதியா இல்லை
அவளின் மதியா!//

இதிலென்ன சந்தேகம் பல ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தி வெளியான பர்த் கன்ட்ரோல் பில்சும், டிவைசும் தான்.

பர்த் கன்ட்ரோலை சல்லிசாக விற்று , ரெஜுவ்னேசன் மருந்துகளில் பெருவாதி பணம் சம்பாதித்து விடுகிறது இந்த மருந்து கம்பெனிகள். இதில் போதாதென்று மூலிகை , இயற்கை , லாட்ஜ் வைத்தியர் என்று ஒரு பெரிய நெட் வொர்க் இருக்கிறது

ZAKIR HUSSAIN said...

//அயல் நாட்டில் படிக்கலாமென்று
ஐந்தாறு லட்சம் கொடுத்து வந்து
அருகில் வந்தால் தெரியுது
அவ்வளவும் இழப்பு தானென்று!//

இப்போதைய கல்வி கட்டணங்களில் "ஐந்தாறு லட்சம்" கொடுத்து டைப் ரைட்டிங் தவிர பெரிசா ஒன்னும் கத்துக்க முடியாது போல தெரியுதே...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜஹபர் சாதிக் காக்கா,

அனைத்து வரிகளுமே மனதை உருக வைத்துவிட்டது.

//கொஞ்சும் மொழி கேட்க
கொஞ்சமும் வாய்ப்பில்லை
கெஞ்சி வாப்பா வா என
பிஞ்சும் உருகும்!//

இது நிறைய வளைகுடா வாப்பாக்களுக்கும் பொருந்தும்.

வாழ்த்துக்கள்... தொடர்ந்து இது போன்று நிறைய எழுதுங்களேன்.

நீங்கள் ஊரில் இருக்கும் போது செய்தி ஏடுகளுக்கு துணுக்குகள் எழுதுவீர்களோ.. கொஞ்சம் தெரிஞ்சிக்கலாமே என்பதால் கேட்கிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அயல் நாட்டில் படிக்கலாமென்று
ஐந்தாறு லட்சம் கொடுத்து வந்து
அருகில் வந்தால் தெரியுது
அவ்வளவும் இழப்பு தானென்று!//

படிப்பில் இந்தியாவே முன்னனியில் உள்ளது என்பது அறிந்ததே, இன்னும் நிறைய நம்மூர்வாசிகள் அயல்நாட்டில் படிப்பதால் பெரிய நன்மை இல்லை என்று பல அனுபவங்கள் எடுத்துக்காட்டியும், அயல் நாட்டில் படிக்க செல்கிறார்கள். பணம் தான் வேஸ்ட்...

Meerashah Rafia said...

ஆஹா!! வளைகுடா கவியையே கேட்ட என்(ங்கள்) செவிகளுக்கு கொஞ்சம் வளைந்து, யு டர்ன் அடித்து ஐரோப்பாவிற்கு கொண்டு சென்று வென்று விட்டீர்கள் சாச்சா.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

/// கொஞ்சும் மொழி கேட்க
கொஞ்சமும் வாய்ப்பில்லை
கெஞ்சி வாப்பா வா என
பிஞ்சும் உருகும்!

வாப்பா என்ற உயிர் வார்த்தை
வாய்க்கிறது செவிக்கு மட்டும்
வாஞ்சையோடு வருடிப்பார்க்க
வருசம் பல ஆகிடுதே!///
******************************************************************
ஐரோப்பா வாப்பாக்களுக்கும் - - - - - - - - - - - -

வளைகுடா வாப்பாக்களுக்கும் விடியல் எப்பொழுது?

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நான் நீண்டுவிட்ட இடை வெளியை இப்ப இதன் மூலம் குறைக்க முயற்சிக்கிறேன்.
-----------------------------------
நிகழ்வதெலாம் என்னெவென்று
நெஞ்சம் ஏங்குகிறது
நல்ல தகவல் கேட்க
நேற்று வந்துபோக வில்லையே!

வளையோசை நினைவெல்லாம்
வளைகுடாவாசிக்கே வாய்க்க
வந்து பல வருசமானதால்
வாய்ப்பு குறைவு அதுபற்றி!
--------------------------------------------------------------
ஆஹா! அருமை! காலத்தின் சக்கரத்தை பின்னோக்கி சுழற்றி பார்க கணவிலாவது முயற்சித்து அதுவும் முடியாமல் போவதை சொல்லும் இலாவகம் அருமை. இந்த வளையோசை கேட்க முடியாத அவலம் இங்கே அமெரிக்காவிலும் உண்டு என்றாலும் . என்னை போல் சிலருக்கு வாப்பாவின் ,கனைத்த வாரு வீட்டில் நுழையும் பொழுதையும் அந்த காலனியின் சின்ன சத்தத்தையும் கேட்க முடியாமாலும்,உம்மாவின் வந்திட்டியா என வாஞ்சையுடன் கேட்கும் குரலும் இல்லாமல் ஒரு
துக்க நிலை நித்தம் தொண்டையை அடைப்பதும் கொடுமை தானே?

crown said...

இந்நாட்டு நடைமுறையால்
தங்குமிடமெல்லாம் விசாலமே
அங்குபோல் நெருக்கமெல்லாம்
இங்கெல்லாம் மிகக்குறைவே!

ஆசைக் கனவுகளை
அசைபோட்டுப் பார்க்க
ஆவலிருந்தும் அதுவெல்லாம்
ஆண்டு பல ஆதனினால் குறைவே!
----------------------------------------------------
தங்கும் இடமெல்லாம் விசாலம்தான் ஆனால் குறுகி போன இதயம் புளுக்கத்தால் நெளிவதும், அன்பிற்காய் ஏங்கி நெகிழ்வதும் அதிகம். உண்டு உடுத்தி, விழித்து எழுந்து ஓடி களைத்து நிரந்தரமற்ற வேலையை நிரந்திரமாக்க முயற்சித்து ,போராடும் வாழ்வில் ஆசைகளை அசை போட எங்கே நேரம் காலம் . காலம் கடந்ததனால் ஆசையை அசைபோடவே அலுப்பாகிவிட்ட வாழ்கை . நிதர்சனம்!!!!! இப்படித்தான் நம் சனம் வாழ்கை கழிகிறது.

crown said...

கொஞ்சும் மொழி கேட்க
கொஞ்சமும் வாய்ப்பில்லை
கெஞ்சி வாப்பா வா என
பிஞ்சும் உருகும்!

வாப்பா என்ற உயிர் வார்த்தை
வாய்க்கிறது செவிக்கு மட்டும்
வாஞ்சையோடு வருடிப்பார்க்க
வருசம் பல ஆகிடுதே!
-----------------------------------------------------
கெஞ்சி வாப்பா வா என பிஞ்சும் உருகிடும் . பாசம் தராத கெஞ்ச வாப்பாவா இவர் எனும் அந்த அஞ்சு வயது மனதில் பதிந்து விட்டால் பஞ்சு பற்றி எரிவது போல் உறவும் பற்றும் அந்த பந்தம் பின் தீப்பந்தமாய் நமக்கெதிராய் எரியவும் கூடலாம். எல்லாரையும் அல்லாஹ்தான் காப்பாற்றனும்.
செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும். ஆனாலும் செவியில் வந்து அறையும் அந்த செவிலியின் குறலில் உள்ள பிரிவில்,பரிவில் உணவு உட்கொள்ளாததால் குடலும் காயப்படும்.சுடும்.

crown said...

பிறப்பைத் தள்ளிப் போட
சிறப்பான வழியென்பது
அரசின் சதியா இல்லை
அவளின் மதியா!
-----------------------------------------------------------
அவளின் சதியா? விதியா? பரிதவிக்கும் 'பதி'(கணவன்)யின் கேள்வி! "சதி"(மனைவி) செய்திருப்பாளோ சதி. இல்லாவே இல்லை நம் சரி பாதி அல்லவா அவள்!! இது விதி செய்த சதியும், விதி(சட்டம்) விதிக்கும் அரசுவின் சதியும்மே காரணம் .இதில் அவளின் சதி யென ஏன் கூறனும் . எல்லாம் காலத்தின் கோலம் . இது தான் நம் நிலை என்பதை அழகாய் சொல்லியவிதம் ,உண்மையும் சில நேரம் குழம்பிபோகத்தான் செய்யும் . வலிக்கிறது நம் சமூகத்தின் நிலையில்லா நிலை கண்டால்.

crown said...

வாப்பாவாக இருந்தாலும்
வருசம் நாற்பதானாலும்
வந்து படிக்க தடையில்லை
வாய்ப்பதற்கோ ஒன்றுமில்லை

படிக்க வருகிறேன் என்று
பல லட்சம் கொடுத்து
பார்த்தால் பின் தெரியுது
போலி பல்கலைகழகமென்று!

படிப்பதோடு இருந்துவிடாமல்
பணமும் கொஞ்சம் பார்க்கலாமென்று
பம்பரமாய்த் தேடினாலும்
பணி கிடைப்பதும் பெரும்பாடே!
--------------------------------------------------------
மெத்த படிக்க ஆசைதான் ஆனாலும் அரசுவின் மெத்தனத்தால் நம் தனம்(செல்வம்,பணம் ,காசு)எல்லாம் வீனாகி போகும் அளவிற்று போலிகளின் ராஜ்யியம் பலனோ பூஜ்ஜியம். நாணயம் தேடித்தான் போனோம் நாணயத்தையும் , நாணயத்தையும் கானோம். எல்லாம் : நா' நயத்தால் ஏச்சுபிழைக்கும் கல்வித்துறை.சாட்டையை சுழற்றும் காலம் பம்பரமாய் , சுழன்று உழன்றாலும் , விளம்பரம் தேடிக்கொள்ளும் ஏஜென்டுகளின் பிடுங்கல் வேறு! எல்லாம் கடந்து பார்தால் அய்ரோப்பாவானாலும்,அதிராம் பட்ட்டிணம் ஆனாலும் நம் நிலை அதோ பாடுதான்.

crown said...

sabeer.abushahruk சொன்னது…

//வாப்பா என்ற உயிர் வார்த்தை
வாய்க்கிறது செவிக்கு மட்டும்
வாஞ்சையோடு வருடிப்பார்க்க
வருசம் பல ஆகிடுதே!//

அடிக்கவில்லை, உதையவில்லை யாயினும் வலிக்க வைக்க முடிகிறது உங்களால் வார்த்தைகள் கொண்டு.

இது கவிதையா அல்லது ஒரு கடல்கடந்து பிழைப்பவனின் சரிதையா?

உமது கவிதை சொல்லிக்காட்டவில்லை ஐயா, செய்து காட்டியதுபோலொரு தெளிவு. எனக்குத் தெரிந்து கவிதையென்னும் வடிவத்தால் மட்டுமே ஐந்தாண்டுச் செய்தியையும் ஐம்பது வரிகளில் சொல்ல முடியும்.

அ.நி.: இது போட்டிக்கவிதையல்ல நிழல்கூட துணைக்கில்லாத ஒற்றையான வெற்றிக்கவிதை.
------------------------------------------------------------
நானும் வழிமொழிகிறேன். ஆமா எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ? கொஞ்சம் சொல்லித்தான் தாருங்களேன்.

mohamed nizar said...

//படிக்க வருகிறேன் என்று
பல லட்சம் கொடுத்து
பார்த்தால் பின் தெரியுது
போலி பல்கலைகழகமென்று!//

இது 100 சதவீத உண்மை என்று ஆனித்தரமாக் கூறுகிறேன்.என் அனுபவத்தில் கண்ட உண்மை.சகோ ஜஹபர் சரியாக வடித்திருக்கிறார்.
இனி படிக்க வரும் மானவருக்கு இக் கவிதை பாடமாக அமையட்டும்.
முஹம்மது நிஷாருதீன் - சென்னை ஆயிரம் விளக்கு-(camp uk)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மனதிற்கு ஊட்டமளித்த சகோதரர்கள் அத்தனை பேருக்கும் மிக்க நன்றி.புகழனைத்தும் இறைவனுக்கே!

சபீர் காக்கா சொன்னதில்;போட்டிக்கு மல்லுக்கு அழைத்துவிட்டு இது போட்டியல்ல வெற்றி என்கிறீர்கள்.வாழ்க! காக்கா.

தம்பி தாஜுதீன் வினவியதில்; //செய்தி ஏடுகளுக்கு துணுக்குகள் எழுதுவீர்களோ..// அதெல்லாம் அறவே இல்லை.

சகோ. கிரவுன் வருகையில்:சபீர் காக்கா கவி நேரத்தில் ஊடலாய் இருந்துவிட்டு என் கவியை கூடலுடன் ஆக்கிரமித்ததை பெரும்பேறாக கருதுகிறேன்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். காதலுடன் கூடல் ஆனாலும் ஆக்கிரமிப்பு இல்லை ஆராதிக்கிறேன்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
----------------------------------------------

//வாப்பாவாக இருந்தாலும்
வருசம் நாற்பதானாலும்
வந்து படிக்க தடையில்லை
வாய்ப்பதற்கோ ஒன்றுமில்லை//

சரியான வார்த்தை நானும் வந்துவிட்டு யோசிக்கிறேன்.

-ஷேக் தாவூது-புதுப்பேட்டை-UK

sabeer.abushahruk said...

விடாமுயற்சியும் ரம்மியும்!

கலைத்துப் போட்டு
அடுக்கி
பிரித்துப் பின்
கோர்த்துப்போட்டாலும்...
விசிறிக் கலைத்து
என
எல்லா வித்தைகளும் தோற்று
எதிரிக்குத்தான் வாய்க்கிறது
ரம்மியும் ஜோக்கரும்!

பதினாலாவது அட்டையோ
புதிய அமைப்பாய் 
தனித்துத் தொலைக்க
அதுவும் சேர்கிறது
அவனுக்கு!

தோல்வியைத் துரத்தும்
புள்ளிகள் குறைக்க முனைகையிலும்
எடுப்பதெல்லாம் 
படம்பதித்தே வருகிறது!

மேற்கை இறக்குவதெல்லாம்
மூன்றாம் கைக்குத் தேவையாம்
கீழ்க்கையோ நான்
கீழே விட்டதெல்லாம் பொறுக்கி

சட்டென அடிக்க...

முதல் ஆட்டமும்
துரதிருஷ்டமும்
முற்றிலும் மறந்து
மற்றுமொரு நேர்காணலுக்குத்
தயாரானது
வேலையில்லா வாலிபம்

-sabeer
www.puthu.thinnai.com

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

காலதாமதமேயானாலும் கருத்திடவில்லையெனில்
கண்களும் உறங்கிடுமோ? உள்ளமும் அயர்ந்திடுமோ?

ம‌ச்சான், அச‌த்திவிட‌ம‌ட்டுமில்லை நீ எம்மை உள்ள‌த்தில் அச‌ர‌ வைத்து அமைதியாய் ஒரு மூலையில் வார்த்தைக‌ளின்றி க‌ண்ணீர்த்துளியை க‌ண்க‌ளில் அரும்ப‌ச்செய்தாய்.......
இது போன்ற‌ க‌விதைக‌ளை நான் பெரும்பாலும் க‌ண்க‌ளை விட அதிக‌ம் க‌ண்ணீரிலேயே ப‌டித்திருக்கிறேன்.

தொட‌ரட்டும் உன் வ‌ருட‌ல்......

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

Unknown said...

painful lines............but it is real...
Jahabar keep writing

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-----------------------------------------------

ஜஹபர் சாதிக் கவி எழுதி இருப்பது போல UK கல்விநிலவரம் மோசமாகி உள்ளது. இன்று கூட ஒரு கல்வி நிலையம் மூடியதாக கேள்வி. நானும் ஒரு கல்லூரியில் பணியாற்றுகிறேன். வருமுன் யோசியுங்கள்.மாணவர்களே!

இங்ஙனம்,
சம்சுதீன் - லண்டன்

தமீம் said...

நெஞ்சம் நெகிழும் தெளிவான விளக்க கவிதை.அருமை

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
----------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்

என்ன ஜகுபர் சாதிக்கு நெய்னாவை மச்சானை ,மச்சான்(டு) சொல்லி ஐஸ் வச்சி கவிதையை (கடன்) வழங்கி ஈக்கிரமாரி தெரியுது ?

லெ.மு.செ.அபுபக்கர்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு