Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இந்தா உளே...!!! (இங்கே பார் பெண்ணே!) 19

அதிரைநிருபர் | July 07, 2011 |

நம்மூர் பெண்கள் ஒருவருக்கொருவர் அன்றாட ஊர், நாட்டு நடப்புகளுக்கு நம்மூர் வட்டார சொல் வழக்கில் உரையாடிக்கொண்ட உரையாடலை இங்கு உங்களின் பார்வைக்காகவழங்கப்படுகிறது. இதில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் ஒரு கற்பனைப்பாத்திரத்திற்காகமட்டுமே இது யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல.

மொம்மாத்மா : அஸ்ஸலாமு அலைக்கும் என்னாவுளே ஒரு வாரமா ஆளேயே கண்மாசியாக்காணோமே எங்கவுளே போயிருந்தா?

ஆமாத்மா : ஒரு வாரத்துக்கு முன்னாடி களரிகாரவூட்டுக்கு சாப்பாட்டுக்கு போயிட்டு வந்ததுலேர்ந்து ஒடம்பு ரியில்லெ கை,கால் டுப்பு, கொடப்பெறட்டு ஓங்காரமா ஈந்திச்சி.

மொம்மாத்மா : அப்புறம் என்னா செஞ்சா? செந்தூரம் வாங்கி தேன்லெ கொழச்சி சாப்புடவேண்டியது தானே?

ஆமாத்மா : இல்லெ உளே அதெல்லாம் இப்பொ எங்கே கேக்குது? ஆட்டோ புடிச்சி ஆஸ்பத்திரி போய் ஒரு ஊசியெ போட்டுட்டு ந்தா தான் ரியாவுது. இப்பொதான் அல்ஹம்துலில்லாஹ் உடம்பு கொஞ்சம் தேவலெ.

மொம்மாத்மா : உங்கூட்டு காரவொ எப்பொ ர்ராஹ்ஹ‌?

ஆமாத்மா : அவ்வொ இப்பொ ர்ரத்துக்கு கூடஆசையாத்தான் ஈக்கிறாஹ‌. ஆனால் அவ்வொ அக்கச்சியா மாருவொளுக்கு ஊடு ட்டிக்கிட்டு ஈக்கிறதுனாலெ ங்காசு தேவையும் லைக்கு மேலெ ஈக்கிது அவ்வொளுக்கு. அதனால் இந்தவர்ரேன், அந்தவர்ரேன்டு சொனக்கிகிட்டு ஈக்கிறாஹ‌. அல்லாஹ் தான் அவ்வொ ஷ்டத்தெ நீக்கனும்.

மொம்மாத்மா : பாவம் அவ்வொ என்னாதான் செய்வாஹ‌? ஒத்தந்தனியன். ரெண்டு மூனு அக்கச்சியாமாருவொளோடபொறந்துட்டு அக்கச்சியா மாப்ளெயெளுவொ எல்லாம் ல்லா ம்பாதிச்சிக்கிட்டு தியா ஈந்தாலும் இவ்வொ தான் ஊடு ட்டி னும்டு எதிர்பார்த்துக்கிட்டு உக்காந்துகிட்டு ஈக்கிதுவோ என்னத்தெ சொல்றது?

ஆமாத்மா : இப்படி ம்மூர்லெ பொம்புளெ புள்ளையளுவொலுக்கு ஊடு ட்டி கொடுக்கிறக்கம் ஈக்கிறதுனாலெ அவ்வொளுவொ மாதிரி ஆளுவொளுக்கு இப்படியே காலம் வெளிநாட்டுலேயே ழிஞ்சிரும் போலெ ஈக்கிது. யார்ட்டெ சொல்லி அழுவுறது சொல்லு? அல்லாஹ் தான் ம்மளுக்கு திவாய்ப்பெ னும்.

மொம்மாத்மா : அது ரி. ம்மூர்லெ அடிக்கடி ஆக்ஸிடெண்டு க்குறதுனாலெ மொவனுக்கு இப்பொவெல்லாம் மோட்டார் சைக்கிளு வாங்கி கொடுத்துடாதெ. பயலுவொ ண்ணுமூக்கு தெரியாமரோட்லெ கண்ணாபிண்ணான்டு ண்டி ஓட்ரானுவொ...

ஆமாத்மா : எம்புள்ளெ அப்படியெல்லாம் வாங்கி கேட்டு பாடுபடுத்தமாட்டான். அவனுக்கு ம்மூட்டு நெலெமெ நல்லாத்தெரியும்ளே.

மொம்மாத்மா : இன்னொ ஒன்னும் சொல்றேன் கேட்டுக்கடீ. மொவன் ல்லா படிக்கிறபுள்ளையா ஈக்கிறான். அதுக்குள்ளெ அவ்வோ கேக்குறாஹ இவ்வோ கேக்குறாஹண்டு யாரு ஊட்டுக்கும் இப்பொ முடிவு கொடுத்துடாதே. அவன் நல்லா மேல்படிப்பு டிச்சி உள்ளூர்லேயே உத்யோகம் இல்லாட்டி வியாபாரம் செய்யனும். அவன் வாப்பா மாதிரி வெளிநாட்லெ போயி வருசகணக்கிலெ கடந்துக்கிட்டு ஷ்டப்பக்கூடாது பாத்தியா?

ஆமாத்மா : ஆமாவுளே நீ சொல்றது நெசம் தான். சின்னபுள்ளையிலேயே பொண்ணு பேசி ச்சி சீரு,சீராட்டுண்டு கொடுத்து அதுவொ எதிர்காலத்தை சீரழிச்சிர்ராங்கெ நம்மூர்லெ. எம்மனும் அதுக்கெல்லாம் இப்பொ ஒருகாலமும் சம்மதிக்கமாட்டான். அவன் ஆசைப்படி ல்லா டிக்கட்டும்வுளே. அவ்வொ வாப்பாவுக்கும் அதுதான் ஆசை.

மொம்மாத்மா : செத்தநேரம் இரிவுளே ழெ ர்ரமாதிரி ப்பும் ந்தமுமா ஈக்கிது. மெத்தையிலெ முறுக்கு காயப்போட்டிக்கிறேன், துணிமணி வேறெ காயுது. அதை எடுத்து வச்சிட்டு ந்துர்ரேன்.

ஆமாத்மா : ஈக்கிறேன் போயிட்டு வாங்கெ. (வந்ததும்) சரி நோம்பு வருதெ மாவு இடிச்சாச்சா உங்கூட்லெ?

மொம்மாத்மா : மாவு இடிக்கிறதுக்கு முன்னமாதிரி ஆளு எங்கவுளே கெடெக்கிது? காசு,ம் பொழக்கம் எல்லார்ட்டையும் ந்திரிச்சி. அதுனாலெ அவங்கள்ளெ நெரையா பேர் மாவு இடிக்கிற அப்புறம் ஊட்டு வேலெ செய்யிறதொழிலையெ உட்டுட்டாளுவொ தெரியுமா? காலம் மாறிப்போச்சுவுளே...

ஆமாத்மா : ஆமாவுளே நீ சொல்றது நெசம் தான். இப்பொ எல்லாத்துக்கும் ஆளு பத்தாக்கொறையா ஈக்கிறதுனாலெ எல்லா வேலையெலுவொலையும் நாமதான் செய்யனுமா ஈக்கிது என்னா செய்யச்சொல்றா?

மொம்மாத்மா : முன்னாடியெல்லாம் யாரு ஊட்லெ அரிசி வெலெக்கி வாங்குனோம்? நம்மதோப்புதொறவுலேர்ந்து ர்ரநெல்லை த்தாயத்துலெ போட்டு கொஞ்சம்,கொஞ்சமா எடுத்து குத்தி அரிசியாக்கி சாப்புட்டுக்கிட்டு ஈந்தோம். இப்பொ எதர்கெடுத்தாலும் டைத்தெருலெ போயி நிக்கனுமாயீக்கிது.

ஆமாத்மா : ரிவுளே இன்னெக்கி சாங்காலம் அஸர் தொழுதுட்டு நாமெ ஹதீதுகார  ஊட்டுக்கு போவலாமா? ர்ரியா?

மொம்மாத்மா : நானும் போகனும்டு நெனெச்சிக்கிட்டு ஈந்தேன் நீனும் ரெக்டா கூட்புட்டுட்டா....

ஆமாத்மா : நோம்பு ர்ரதுனாலெ அது ர்ரதுக்கு முன்னாடியே நமக்கும், புள்ளையெலுவொலுக்கும் துணிமணி எடுத்து ச்சிட்டா பெரியவேலெ முடிஞ்சமாதிரி. நோம்பு நேரத்துலெ குர்'ஆன் ஓதுரது த்தெ அமல்களை செய்யலாம் இல்லையா?

மொம்மாத்மா : ஆமாவுளே நானும் அதைத்தான் நெனெச்சிக்கிட்டு ஈந்தேன். அதுனாலெ துணி,ணியலுவொலே இப்பொவே க்ககொடுத்துடவேண்டியது தான். ல்லவேளைக்கி நீ ஞாபம் காட்டுனா அதெ..

ஆமாத்மா : போனநோம்புலெ ம்மதெருவுலெ ஈந்தஎவ்ளோ பெரியமனுசவோ மவுத்தா போயிட்டாங்கபாத்தியா? அல்லாஹ் தான் ம்மளுக்கு அடுத்தநோம்பும் கெடெக்கிறதுக்கு உதவி செய்யனும்.

மொம்மாத்மா : நோம்பு நேரத்துலே நெறையா ஏழெ பாலையங்கள் உதவி கேட்டு ரும். அதுக்கு இப்பொவே காசு, ம் மாத்தி ச்சிக்கிட்டரொம்பவுரியாமா ஈக்கிம். அப்பொ சில்லரை இல்லாமஷ்டப்பக்கூடாது பாரு? அதுனாலெ தான் சொல்றேன்.

ஆமாத்மா : ல்லவேளெக்கி இப்பொவே ஞாபம் காட்டுனா நீ...கையிலெ வச்சிக்கிற பணத்தை எடுத்திக்கிட்டு போயி இப்பவே மாத்தி சில்லரைகாசெ வச்சிக்கிட வேண்டியது தான். ரிவுளே! புள்ளையளுவோ ஸ்கூல் உட்டு வந்துரும்கள். நான் இப்பொ கெழம்புறேன். இன்ஷா அல்லாஹ் அஸரு தொழுவிட்டு ரெடியா இரி. நாமெ தீது காரஊட்டுக்கு ஒன்னா போவலாம். சரியா..ட்டா....

மொம்மாத்மா : எங்கூட்லெ மொளவு ண்ணி சாப்பாடு தான். இன்னெக்கி. சாப்புட்டுட்டு கொஞ்சம் சாஞ்சி எழும்புறேன். அஸர் தொழுவிட்டி வெள்ளனமே வந்துரு. ம்மூட்லெ தேத்தணி குடிச்சிட்டு கெளம்பலாம் ரியா? போயிட்டா வாவுளே.....

மேற்கண்டஉரையாடலில் ஏதேனும் குறைகள், றுகள் இருப்பின் பின்னூட்டம் மூலம் அறியத்தாருங்கள். திருத்திக்கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது.



19 Responses So Far:

Yasir said...

குறையொன்றும் இல்லை...ஆமாத்மாவும் மொம்மாத்மாவும் நம்மள போட்டு மாத்து மாத்துண்டு உள்ளூர் தமிழிலே மாய்ச்சிட்டாங்க...அதிரை தமிழ் டிக்‌ஷனிரி ஒன்னும் வாங்கி வைத்திருக்கனும் போல

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//குறையொன்றும் இல்லை...ஆமாத்மாவும் மொம்மாத்மாவும் நம்மள போட்டு மாத்து மாத்துண்டு உள்ளூர் தமிழிலே மாய்ச்சிட்டாங்க...அதிரை தமிழ் டிக்‌ஷனிரி ஒன்னும் வாங்கி வைத்திருக்கனும் போல//

அதான் ஹமீது காக்கா போட்ட பதிவு இருக்குல, அதிரை டிக்ஸ்னரி (அதிரை மொழி - தமிழ் மொழி) http://adirainirubar.blogspot.com/2010/09/blog-post_28.html இதுல போய் தமிழாக்கம் செய்துக்குங்க யாசிரே...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் நெய்னா..

எனக்கு தெரிந்து இது போன்ற உரையாடல்கள் மொழிகள் இன்றைய இளம் தலைமுறையினரிடம் இல்லை.

இருந்தாலும் அதிரை பேச்சு வழக்கு மொழிகள் என்றும் ரசிக்கக்கூடியதே..

இதை டைப் செய்றதுக்கு ரொம்ப சிரமம் பட்டிருப்பிய போல தெரியுது...

sabeer.abushahruk said...

ஏ க்ளாஸ் எம் எஸ் எம்.
அதிரையின் தி ஜானகிராமனே, அமர்களமா இருக்கு. இந்த இருவரையும் வைத்து ஊரின் அன்றாட நடப்புகளை அடிக்கடிச் சொல்ல வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சூப்பர்.

Meerashah Rafia said...

என்னத்த சொல்றது!! புதுமனைத்தேருவுல எங்க பக்கத்து ஊட்டு பேச்சு சவூதில இருக்க என் காதுக்கு வந்து உழுந்தமாதிரி இருக்கு...மயக்கம் இன்னும் தெளியல..

ZAKIR HUSSAIN said...

படிக்கும்போது எளிதாக இருந்தாலும் டைப் செய்யும்போது கொஞ்சம் மொழி வசப்படாமல் போக வாய்ப்பு இருக்கிறது.

தி ஜானகிராமனை விட கி.ராஜநாராயணனே வட்டாரத்தமிழை அச்சில் கொண்டுவர காரணமாக இருந்தவர்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.இப்படி எழுதிக்கொண்டே போனாலும் கால ஓட்டத்தில் ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவுக்கு அதிராம்பட்டினத்து தமிழை இணையத்தில் கொண்டுவர காரணமானவராக பேசப்படுவார்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

யாருவுல அது ஜானகிராமன் ??

அத ஏவுவ கேட்கிறே ஏதோ கொளந்த டாக்டராம்ல அதான் வெளிநாட்டுல ஈக்கிற இந்த புள்ளைவோ சொல்லிகிட்டு இருக்காங்கமா !

அட சும்மாயிரும்மா... அது அந்தக்கால எலுத்தாரும்மா...

என்னமோ நாம இங்க பொலம்புறத இந்த புள்ளைவொலுக்கு எப்படிவுல வெலங்குது !!??

MSM(n): மண்வாசனையும் மயக்கும் மொழிநடையும் அழகு !

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
----------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்.

மொம்மாத்மா, ஆமாத்மாகிட்டேருந்து m.s.m.க்கு s.m.s வரப்போகுது
"அட ஒரு கச்சலவோவா" என்று எதுக்கும் சுவிட்ச்சை ஆஃப் செய்து வச்சிக்கோ.

லெ.மு.செ.அபூபக்கர்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

லெமுசெ அபூபக்கர் சொன்னதில்.
// m.s.m.க்கு s.m.s வரப்போகுது
"அட ஒரு கச்சலவோவா" என்று எதுக்கும் சுவிட்ச்சை ஆஃப் செய்து வச்சிக்கோ.//

நெய்னா! அப்படி ஒரு மெரட்டல்ன்டு ஒன்னு வந்தா யாரா இருக்கும் புரிஞ்சுக்கோ.(அப்பன் குதுருக்குள் இல்லை)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இவ்ளோவு நெரப்பமா எழுவிப்புட்டு கொரெ எல்லாம் எப்புடி ஈக்கிம்.மாசா அல்லாஹ் ஸுFப்.
எனெக்கெல்லாம் எங்கெவ்லே ஒன்னும் நெனவுலெ ஈந்து தொலய மாட்டென்குதுவுலெ, நெனெவெ திண்டவலா ஈக்கிறேன்.
சரி அது ஈக்கட்டும் கொடப்பெரட்டு,ஓங்காரெமெல்லாம் ....மாத்மாகெல்லாம் வருமா?அவன் வாப்பா வெளிநாட்டிலேங்குறா போயி எவ்ளோவு நாளாச்சு, பக்குவமா ஈந்துக்கோ.சாப்பாட்டுலெ ஜூடு,குளிர்ச்சி இதெல்லாம் பாத்து ரெஸ்டா இரிமா.வர்ரேன்.அல்லாங்காவொ.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
தமிழுக்கு அமுதென்று பெயர். நம் அதிரை தமிழுக்கு அழகென்று பெயர்.அதிரை மொழியின் அரசன் இந்த நைனா! மண்ணின் மைந்தன். பம்மாத்து பண்ணி ஏமாத்தாமல், மொம்மாத்து, ஆமாத்து உரையாடலை தொகுத்தவிதம் நல்லா ஈக்குது.தொடரட்டும் இந்த இரு கேரக்டரிலும் ஊரின் நடப்புகள்.சபிர் காக்கா சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-----------------------------------------

ஆமாத்மா, மொம்மாத்மா முன்னாலே மகாத்மா, பரமாத்மா எம்மாத்திரம்?

-வாவன்னா

Yasir said...

UAE - விசிட் விசாவில் வருபவர்களுக்கு இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடு
இந்தியாவிலிருந்து UAE நாட்டிற்கு பார்வையாளர் (VISITOR) விசாவில் வருபவர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விசா அனுப்பும் நபர் துபாயிலுள்ள இந்திய தூதரகத்தில் படிவம் SD-V(5) - SPONSOR'S DECLARATION FORM ஐ பூர்த்தி செய்து, விசா ஏற்பாடு செய்தவருடைய (Sponsor) கடவுச்சீட்டு (PASSPORT) மற்றும் சம்பள விபரம் (PAY SLIP) நகலையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.
பூர்த்திசெய்த படிவத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு இணையம் மூலம் பயணியின் விமான நிலையத்திற்கு தகவல் அனுப்பப்படும். இந்தியாவில் குடியேற்ற சோதனையின்போது இந்த விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே,மேற்கொண்டு பயணம் செய்ய முடியும். இந்தப் படிவம் சமர்பிக்கப்படாத பயணிகள், விமான நிலையத்திலேயே திருப்பிவிடப் படுவதாக துபாயிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசிட்டிங் விசாவில் வேலை தேடுபவர்கள் முறையான ஏற்பாடுகள் இல்லாமல் சிரமப்பட்டு இந்திய தூதரகத்தை அணுகுகின்றனர். மேலும் சிலரோ வழிகாட்டல் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பிட்ட விசா காலத்திற்கும் அதிகமாக தங்கியவர்கள் (OVERSTAY / கல்லிவல்லி) துபாய் காவல்துறையினரிடம் பிடிபட்டால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதால், விசிடிங் விசாவில் வருபர்கள் தகுந்த ஏற்பாடுகளுடன் வருவது அவசியம்.
மேலதிக விபரங்களுக்கு துபாயிலுள்ள இந்திய தூதரக தொடர்பு எண்கள் 04-3971222 மற்றும் 050-7347676 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி : inneram

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

கருத்துப்ப‌ரிமாற்றத்திற்கு அதிரை நிருபரின் வாசகர் வட்டம் ஒரு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துகிறது. செக்கடிமோட்ல நின்ற எம்மை எல்லாம் எழுத்தில் லேனா தமிழ்வாணன் ரேஞ்சிக்கு கொண்டு செல்ல அ.நி. எடுக்கும் முயற்சியும், அக்கறையும், உற்சாகமும் அலாதியானது. "ந‌ம்ம‌ மேலெ ரொம்ப‌ ஒஹ‌ப்பு"ண்டு நெனெக்கிறேன்.

நம்மூர் பாஷையிலெ உரையாடல் எழுதுவதாக இருந்தால் வண்டி நெறைய எழுதலாம். தொடர்ந்து இதுபோல் எழுத ஆரம்பித்தால் படிப்பவர்கள் உற்சாகம் குறைந்து தளர்ந்து விடாமல் இருந்தால் சரி.

"என்னா சித்துமத்தா எழுதுறாஹ நம்மூர் ஆம்புளையளுவோ....
என்று யாரும் கேட்கமாட்டியளெ?"

இங்கு க‌ருத்திட்ட‌ எல்லா ஆம்புளெயெளுவொளுக்கும் ரொம்ப‌ தேங்க்ஸ்.

இன்ஷா அல்லாஹ் எடெக்கெட‌ இதுமாதிரி எழுதுவோம்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

மர்மயோகி said...

இதே பதிவு adiraixpress.blogspot.com வலைத்தளத்திலும் வெளியாகி உள்ளது..
அவரகளது வலைத்தளத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் என்றும், இந்த வலைத்தளத்தில் அதிரை நிருபர் குழு என்றும் உள்ளது..ஒரே குழப்பமாக உள்ளது..ஒரு பதிவை ஒரே வலைத்தளத்தில் வெளியிட்டால் குழப்பத்தை தவிர்க்கலாம் அல்லது எந்த வலைத்தளம் அதை முதலில் வெளியிட்டதோ அவர்களின் அனுமதியுடன் அவர்கள் பெயரிலேயே வெளியிடலாம்..இது போன்ற காப்பியடிக்கும் போக்கு குழப்பத்தை மட்டுமல்ல நம்பகத்தன்மையைம் உருவாக்கும்..

அப்துல்மாலிக் said...

நெய்னா எப்பவும்போல கலக்கல்... அதிரை வட்டார மொழியினூடே விழிப்புணர்வையும் கொடுத்தவிதம் அருமை (சினிமா பாட்டிலே புத்திசொன்னால் எளிதில் போய் சேரும்)

அதிரைநிருபர் பதிப்பகம் said...

//இதே பதிவு adiraixpress.blogspot.com வலைத்தளத்திலும் வெளியாகி உள்ளது.. அவரகளது வலைத்தளத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் என்றும், இந்த வலைத்தளத்தில் அதிரை நிருபர் குழு என்றும் உள்ளது.. ஒரே குழப்பமாக உள்ளது.. ஒரு பதிவை ஒரே வலைத்தளத்தில் வெளியிட்டால் குழப்பத்தை தவிர்க்கலாம் அல்லது எந்த வலைத்தளம் அதை முதலில் வெளியிட்டதோ அவர்களின் அனுமதியுடன் அவர்கள் பெயரிலேயே வெளியிடலாம்.. இது போன்ற காப்பியடிக்கும் போக்கு குழப்பத்தை மட்டுமல்ல நம்பகத்தன்மையைம் உருவாக்கும்..//

சகோதரர் ஆரோக்கியமான கருத்தை எடுத்து வைத்திருப்பதால் அவருக்கு பதில் தருவது கடமையாகிறது...

கட்டுரையாளர் இதனை அதிரைநிருபர் நெறியாளர் மின்னஞ்சலுக்கு அனுப்பியதில் அதனூடே சகோதர வலைத்தளத்திற்கு நகல் இட்டிருந்தார் அவர்களும் கட்டுரையாளரை நன்கு அறிந்தவர்களே ஆதலால அவர்களின் பதிவு முதலில் வெளியானது அதன் பின்னர் அதிரைநிருபரில் வெளியானது.

இதில் குழப்பத்திற்கு வழியில்லை... அதிரைநிருபர் வேறு தளங்களின் பதிவை வெளியிடும்போது நன்றியுடன் அவர்களின் பெயரை வெளியிடத் தவறியதில்லை.

சகோ. மர்மயோகி.. (தங்களை அடையாளப் படுத்தியிருந்தால் இன்னும் வலு சேர்த்திருக்கும் தங்களின் கருத்திற்கு..)

கவனிக்க : சுய அறிமுகமில்லாதவர்களின் கருத்திற்கு பதில் தருவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம். மேலும் இங்கு குழப்பங்கள் ஏற்படாமிலிருக்கவே பதிலுரை இட்டிருக்கிறோம்.

திப்புசுல்தான் said...

ரொம்ப டாப்பு . படிக்கும் போதே வாய மூட முடியல . அவ்ளோ சிரிப்பு.

Yasir said...

//கவனிக்க : சுய அறிமுகமில்லாதவர்களின் கருத்திற்கு பதில் தருவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம். மேலும் இங்கு குழப்பங்கள் ஏற்படாமிலிருக்கவே பதிலுரை இட்டிருக்கிறோம்../// i like it..fantastic A.N

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு