Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கல்வியும் கற்போர் கடமையும் ! - குறுந்தொடர் - 2 6

அதிரைநிருபர் பதிப்பகம் | July 23, 2011 | ,

பாடப் பிரிவைத் தேர்வு செய்தல்:

10ஆம் வகுப்பு வரை பொதுப் பாடத்திட்டமே இருப்பதால் அதுவரை மாணவர்களுக்கு எவ்வித குழப்பமும் இருப்பதில்லை. 10ஆம் வகுப்பு (S.S.L.C. Metric., O.S.L.C.,) தேர்ச்சி பெற்ற பின்னர் மேல்நிலை வகுப்பில் சேரும் போதோ அல்லது மேல்நிலைத் தேர்வு (+2) தேர்ச்சி பெற்ற பின்னர் கல்லூரியில் சேரும் போதோ எந்தப் பாடப்பிரிவை (Group) தேர்ந்தெடுத்து படிப்பது என்பதில் பலருக்கு குழப்பம் ஏற்படுகிறது. குரூப்பை தேர்ந்தெடுப்பதில் பலருக்கு தெளிவான இலக்கு ஏதும் இருப்பதில்லை. இந்த விஷயத்தில் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளைக் குழைப்பி விடுகிறார்கள். கணிதப் பாடத்தில் ஈடுபாடு இல்லாத ஒரு மாணவனை இன்ஜினீயராக்கும் ஆசையில் அவனுடைய பெற்றோர்கள் கணிதப் பாடத்தை எடுத்துப் படிக்க வலியுறுத்துவார்கள். பெற்றோரின் வலியுறுத்தலினால் அப்பாடத்தைத் தேர்ந்தெடுத்துப் படித்து அதற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகி பாதியிலே படிப்பைக் கைவிட்ட மாணவர் பலவரை நான் பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொருவருக்கும் எதிர்கால இலட்சியம் என்ற ஒன்று நிச்சயமாக இருக்கும். I.A.S.அதிகாரி, I.P.S.அதிகாரி, இன்ஜினீயர், டாக்டர், வங்கி அதிகாரி, ஆசிரியர், வழக்கரிஞர், விஞ்ஞானி, தொழிலதிபர் இவற்றி எது தனது இலட்சியம் என்பதை 9ஆம் மற்றும் 10ஆம் வகுப்பு படிக்கும்போதே தீர்மானித்துக் கொள்வது நல்லது. அறிவியல் பாடப்பகுதி முக்கியமா ? கலைப் பாடப்பகுதி முக்கியமா? இப்படப் பகுதி கடினமாக இருக்குமா ? எளிதாக இருக்குமா ? வேலை வாய்ப்புக்கு இது உதவுமா? உதவாதா ? போன்ற கேள்விக் கணைகளில் சிக்கி மாணவர்கள் தங்களைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. தாங்கள் முன்னரே முடிவு செய்து வைத்துள்ள இலக்கை அடைய எந்தப் பாடப் பகுதி தேவை என்பதை நல்ல கல்வியாளர் ஒருவரிடம் கலந்தோசித்து அந்தப் பாடப்பகுதியைத் தேர்வு செய்வதே நல்ல அணுகுமுறையாகும்.

தற்கால உயர் கல்வித் திட்டத்தில் வேலை வாய்ப்புக்குப் பெருதும் உதவக் கூடிய எத்தனையோ புதிய பாடப் பிரிவுகளெல்லாம் அறிமுககப்படுத்தப்பட்டுள்ளன Computer Science, Computer Applications, Information Technology, Bio-Technology, Micro Biology, Visual Comunications, Catering Technology இதுபோல் எத்தனையோ உள்ளன. மாணவர்கள் தங்கள் விருப்பம், தகுதி, குடும்பச் சூழ்நிலை இவற்றைக் கருத்தில் கொண்டு இவற்றில் ஒன்றைக் கூடத் தேர்வு செய்து கொள்ளலாம்.

நூலகப் பயண்பாடு:

'யாசித்தாவது வாசித்துப் பழகு' என்பது ஓர் அறிஞனின் கூற்று. ஆர்வத்தோடும், ஆசையோடும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் மாண்வர்களிடம் வர வேண்டும். பாடப் புத்தங்களை மட்டும் படித்தால் போதும் என பல மாண்வர்கள் நினைக்கிறார்கள். அந்நினைப்பு சரியானதன்று, குறிப்பிட்ட கால வரம்பிற்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற திட்டத் தோடு எழுதப்பட்டவைதான் பாடப் புத்தகங்கள். அவை தேர்வுக்கு ஓர் அளவு உதவலாம். அறிவை ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதற்கு அவை மட்டும் போதாது. பாடத் தோடு தொடர்புடைய வேறு ப நூல்களையும், பாத்துக்கு அப்பாற்பட்ட சில நல்ல நூல்களையும் படிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்குப் பெரிதும் பயண்படுவது நூலகங்கள்தாம். எனவே மாணவர்கள் தங்கள் கல்விக் கூடங்களில் உள்ள நூலகங்களையும், மற்ற பொது நூலகங்களையும் அதிகம் பயன்படுத்திக் கொள்வது மிக அவசியம்.

தேர்வுகள்:


அரசுப் பாடத்திட்டத் தேர்வுகளில் தோற்றுப் போகிறவர்களெல்லாம் வாழ்கையில் தோற்றுப் போகிறவர்கள் அல்லர் என்பது பொது விதியாக இருப்பினும் இன்றையக் காலகட்டத்தில் தேர்வில் ஜெயிப்பவரே வாழ்க்கையில்ல் ஜெயிப்பவராக இருக்க முடிகிறது. எனவே கல்வி கற்கும் மாண்வர்கள் தேர்வுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியமாகிறது. அவர்கள் தேர்வை துணிவோடு எதி கொள்ள முன்வர வேண்டும்.

வேண்டாமே தாழ்வு மனப்பான்மை:

தேர்வு வெற்றிக்கு முதல் எதிரியே தாழ்வு மனம்ப்பான்மை தான். அதை முதலில் அகற்ற வேண்டும். நம் நாட்டின் குடியரசித் தாலைவராக இருந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் அனுசகிதி விஞ்ஞானியாக விளங்கிய போதும் குடியரசுத் தலைவராக பதவியேற போதும். அதன் பின் பல விழாக்களில் பங்கேற்ற போதும் ஒரு குறட்பாவை அடிக்கடி சொல்லிக் காட்டியதோடு 1330 திருக்குறட்பாக்களிலும் தனக்கு மிகவும் ப்டித்த ஒன்றாக அதனைக் குறிப்பிடிகிறார். அந்த குறட்பா என்ன தெரியுமா ?

"வெள்ளத் தனையது மலர்நீட்டம் மாந்தர்க்கு
உள்ளத் தனையது உயர்வு"

தடாகத்திலுள்ள பூவின் தண்டானது தடாகத்தில் நீர் மட்டத்திற்கேற்ப உயர்ந்து நிற்பது போல மனிதர்களின் முன்னேற்றம் அவர்களின் மனத் திடத்தைப் பொறுத்தே அமையும் என்பதே இக்குறட்பாவின் கருத்தாகும். "எண்ணம் போல் வாழ்வு" என்ற சொற்றொடரும் இக்கருத்தைதானெ உணர்த்துகிறது.

வேண்டு உயர் நோக்கம்:

பொதுவாக வாழ்வில் உயர விரும்பும் மனிதர்களுக்கு மேற்கண்ட குறள் வழிகாட்ட வல்லது எனினும், சிறப்பாக, கல்வி பயில்கிற மாணவச் சமுதாயத்துக்குப் பெரிதும் நம்பிக்கை ஊட்டக் கூடியது. உயர்கல்வி பெற்று உன்னத நிலையடைய விரும்பும் மாணவர்கள் தங்களிடமுள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி, 'என்னால் முடியும்' என்ற நம்பிக்கையை உள்ளத்தில் உறுதியாகக் கொள்ள வேண்டும். எப்படியும் 35% மதிப்பெண்கள் பெற்றுத் தேர்வில் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்றுவிடுவேன் என்ற தாழ்வு மனப்பான்மை வேண்டவே வேண்டாம். இத்தகைய தாழ்வு மனப்பான்மை தேர்ச்சிக்கு பதிலாக தோல்வியைத் தந்து விடலாம். 100% மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவேன் என்ற உறுதியோடு அதற்கேற்ப தங்களின் செயல்பாட்டை அமைத்துக் கொண்டால் 80% - 90% அளவிலாவது வெற்றி அமையும்.

தொடரும்...
- SKM ஹாஜா முகைதீன் M.A. Bsc., BT.
 (முன்னால் தலைமையாசிரியர். கா.மு. மேல்நிலை பள்ளி, அதிரை)

6 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//'யாசித்தாவது வாசித்துப் பழகு' என்பது ஓர் அறிஞனின் கூற்று. ஆர்வத்தோடும், ஆசையோடும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் மாணவர்களிடம் வர வேண்டும். //

நினைவலைகள் நிழலாடுகிறது...

அன்றைய எனது மாணவப் பருவத்தில் அடிக்கடி மாமா அவர்களால் வலியுறுத்தியது அதிகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே...

அந்நேரத்தில் நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அச்சூழலில் வெளிவந்து கொண்டிருந்த பொழுதுபோக்கு வாரப் பத்திரிக்கைகள் மற்றும் சினிமாப் பத்திரிக்கைகளும் வாங்கி வாசித்த என்னை அவதானித்த மாமா அவர்கள் முதன் முறையாக என் கண்ணத்தில் விட்டார்கள் "ஒரு அரை" அந்த அதிர்வு அரை அடங்க நீண்ட நாட்களானது அந்த வினாடி ஏற்பட்ட மாற்றம் என் வழ்நாளில் மறக்க முடியாதது மட்டுமல்ல இனிவரும் எங்கள் சந்ததிகளுக்கும் பாடமே !

எதை எப்போது வாசிக்க வேண்டும், அதன் பலன் எவ்வாறு என்று உணரவைத்தது !

இதனை மீள்பதிப்பாக கையடக்க புத்தகமாக வெளியிட முயற்சிப்போம் அதனை மாணவ மணிகளுக்கும் வினியோகிப்போம் இன்ஷா அல்லாஹ்....

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
------------------------------------------------

ghoti

English spelling

Students of English are often confounded by its spelling. The word above was developed as an example of how hard English can be to read.

Here’s how to say it:

The ‘gh’ is pronounced ‘f’ as in rough.

The ‘o’ is pronounced ‘i’ as in women.

The ’ti’ is pronounced ‘sh’ as in station.

The word ghoti is actually pronounced “fish”.

International Language Institute, Canada, www.ili.ca விலிருந்து வெளிவரும் ஒரு புத்தகத்தின் மையப் பக்கத்தில் மேற்கூறப்பட்ட விளக்கத்தை படித்து ஆச்சரியம் அடைந்தேன்.

நான் படிக்கும் போது 1972 ல் மேற்கூறப்பட்ட இதே விளக்கத்தை என் ஆசான் ஹாஜி SKM ஹாஜா முகைதீன் M.A., B.Sc., B.T அவர்கள் வகுப்பறையில் விளக்கி பசுமரத்தாணிபோல் மனதில் பதிய வைத்தார்கள். அதை விளையாட்டாக நெஞ்சில் நிறுத்தினேன். ஆனால் இப்போது 39 ஆண்டுகள் கழித்து 2011 ல் www.ili.ca விலிருந்து வெளிவரும் புத்தகத்தில் படித்தபோது பரவசமடைந்தேன்.

இன்னும் உள.

நூர் முஹம்மது / கதீப் - தமாம் / சவூதி அரேபியா.

அப்துல்மாலிக் said...

//100% மதிப்பெண்க்லள் பெற்று வெற்றி பெறுவேன் என்ற உறுதியோடு அதற்கேற்ப தங்களின் செயல்பாட்டை அமைத்துக் கொண்டால் 80% - 90% அளவிலாவது வெற்றி அமையும்.//

நிச்சயம் பின்பற்றப்படவேண்டிய விடயம்...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

// 100% மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவேன் என்ற உறுதியோடு அதற்கேற்ப தங்களின் செயல்பாட்டை அமைத்துக் கொண்டால் 80% - 90% அளவிலாவது வெற்றி அமையும்//

மிகமிகச் சரியான விளக்க அறிவுரை

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
------------------------------------------------

வெற்றி பெற்றவர்களால்தான் வெற்றியின் ரகசியம் சொல்ல முடியும், எங்களின் மரியாதைக்குரிய சார் அவர்களின் இந்த கட்டுரை அனைத்து ஸ்டூடன்ஸ்க்கும் நிச்சயம் பயனளிக்கும்.

சார் உங்களின் ஆரோக்கியதிற்காகவும் நீண்ட ஆயுளுடன் இருந்திட அந்தக் கடவுளை பிரார்த்திக்கிறேன்.

முன்னாள் மாணவி

sabeer.abushahruk said...

விரல்பிடித்து நடைபழக்கித்தரும் தாயின் பண்பை எங்கள் ஹாஜாமி சாரின் வழிகாட்டுதல்களில் காண்கிறேன்.

சகோ. நூர் முகம்மது சொல்வதுபோல் சுலபமாக நினைவில் நிறுத்த என் இயற்பியல் ஆசான் லியாக்கத் அலி சார் அவர்கள் ஒரு யுக்தி சொல்லித் தந்தார்கள்.

லென்ஸுகள் பற்றிய வகுப்பில் கிட்ட/ தூரப்பார்வை குறைபாடுகளுக்கு குழி/குவி லென்ஸ் குழப்பம் தீர, " கிட்டப்பா குழியில் விழுந்தான்" என்று ஞாபகம் வைத்தால் போதும். கிட்டப்பார்வைக்கு குழி லென்ஸ் / தூரப்பார்வைக்கு குவி லென்ஸ் என்று மதிப்பெண்ணை அள்ளலாம்.

வாழ்க என் ஆசான்கள்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு