வீட்டுக்கொரு மரம் வளர்த்தால்
நாட்டுக்கே மழை கிடைக்கும்
வீதிக்கென் றொரு நலச்சங்கம்
சமூகத்தையே மேம்படுத்தும்
ஒரே கூட்டுக்குள் குருவிகள் வாழும்
நல்ல படிப்பினையை பார்த்த பின்னும்...
நாட்டுக்குள் பல கட்சிகள்
ஓட்டுக்குக் கூட்டுச் சேரும் -பின்
மக்களுக்கே வேட்டு வைக்கும்.
நமக்குள்ளே நாலாயிரம் இயக்கங்கள்
அதில் பத்துபேருக்கு ஒரு தலைவன்
நமக்குள் கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை தேடிவரும்
நான் மட்டும் பெயர் வாங்கனும்
என நினைத்தால் தீமைகளும் தேடிவரும்.
அது போலவே
சமூகத்துக்கு என்று
ஒரு வலைத்தளம்!
ஆதலால் சகலத்துக்கும்
ஒரே வலைத்தளம் !
ஊர் ஒற்றுமைக்கு என்றே
ஓர் வலைத்தளம் இருந்திடனும்.
தன் திறனைக் காட்டிட
தனி வலைத்தளம் வேண்டும்
என்பர் தனிப்பெயரிலே இயங்கட்டுமே !
வலைக்குள் இத்தனைபேர்
கால்களை விட்டு விட்டு
சமூகத்திற்குள் சிக்கலைச் சேர்ப்பதேன்
வலைத் தளங்களிடையே
தள்ளாட்ட தம்பட்டம்
ஊர்ச்செய்தி சொல்வதற்கு
ஏனிந்த போராட்டம் !?
- CROWN
15 Responses So Far:
கிரவ்ன்(னு): அதிரைமனம் என்றொரு திரட்டி அன்றிலிருந்து இன்று வரை ஏராளமான மனங்களை திரட்டி ஒன்றினைத்துதான் வருகிறது ! ஆனால் அதிலென்னவோ அதனன அன்றும் / இன்றும் சரி சில மனங்களின் ஒவ்வாமை அதிரைமனமாக இருந்திட முடியவில்லை !
கவிதை வரிகளின் கரு என்னவோ ஆதங்கமான ஏக்கம் ! ஆனால் அன்று(ம்) இதே தாக்கம் ஏனில்லாமல் போனது என்பதே என்னுள் எழுகின்ற கேள்விகள் இன்று !
எவ்வகையான துவக்கமென்று இருப்பின் முடிவு / நிறைவு என்று இருக்கத்தான் செய்யும் அதில் மாற்றமில்லை...
யார் முன்னிலை என்று சொல்வதை விடுத்து முன்னிருந்த நிலைகள் எப்படி? ஏன் இப்போது ஒரே (மன)நிலை வேண்டும் என்றும் முன்னிலையும் தன்னிலையும் எடுத்து வைக்கிறோம் !
கால நிலை பருவங்கள் மாறி மாறி வந்திடும்போது !
மழை நிற்காமல் தொடர்ந்தால்
வெயில் வந்திடாதா என்றும்..
வெயிலின் அனல் தொடர்ந்தால்...
மழை சொட்டு முட்டாதா தரையை என்றும் !
மழை மாறி வெயில் மாறி தொடர்ந்திருந்தால்
அட ! இரண்டுமே குறையாதா என்றும் !
ஏங்கும் மனம் தான் தனிமனித விருப்பம் !
அது சரி, இன்று ஏதோ இறுதிப் பயனமாமே அட்லாண்டிஸ் வின்வெளி ஓடத்திற்கு ?
மின்னஞ்சல் வழி கருத்து
---------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு நண்பன் கிரவ்னே,
உமக்குள்ள ஏக்கம்.எம்மவர்க்கும் இருந்தால்.தன் திறமையை காட்டிடும்.இத் தனி வலயத்திற்கு வந்திடாது நெருக்கம்.இதனால் காக்கப்படும் மனித ஒழுக்கம்.
லெ.மு.செ.அபுபக்கர்
//நமக்குள் கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை தேடிவரும்
நான் மட்டும் பெயர் வாங்கனும்
என நினைத்தால்//
என நினைப்பு தான்
அதிரை இறைஇல்லம் எழும்ப முட்டுக்கட்டை,
அதிரை இணையங்கள் இணையவும் முட்டுக்கட்டை,
ஆக சுருக்கமாக எல்லாருக்கும் க்ரவ்னுக்கு ஆசை,
ஆகையால் அத்தனையிலும் அடிமட்டம்.
வேறுமையில் ஒற்றுமை வேண்டுவதே சரி. இதை மிக அழகாக்ச் சொல்லியிருக்கிறீர்கள்.
சொல்லிக் கொண்டே இருப்போம் தெளியும் வரை...
சமகால நிகழ்வுகளில் பங்கெடுத்தல் நலம் என்ற பேச்சுமுண்டு!
அட போங்கப்பா..ஏட்டில் எல்லாம் நல்லாத்தான் இருக்கு..
ஆள விடுங்க..
//meerasah சொன்னது…
அட போங்கப்பா..ஏட்டில் எல்லாம் நல்லாத்தான் இருக்கு..
ஆள விடுங்க..//
சளைக்க வேண்டாம் சவால்கள் நிறைந்த இவ்வுலகில், சருக்கியும் சாதிக்க வேண்டியதும், சந்திக்க வேண்டியதும் நிறைய இருக்கு மீராசா!
நம்ம தஸ்தகீரு எதெ எழுதுனாலும் பாதம்கீரு குடிச்சமாதிரி தெம்பா ஈக்கிம். தமிழ் வார்த்தைகள் அவருடன் கோகோ விளையாடுகிறதோ இல்லை கபடி விளையாடுகிறதோ தெரியவில்லை. ஆனால் கடைசியில் கட்டுப்பட்டு வரிசையில் வந்து நின்றுவிடுவது என்னவோ நெசம்.
தஸ்தகீர் தொடரட்டும் உம் தமிழ்த்தொண்டு....
என்றும் உம் எழுத்தின் ரசிகன்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
//சமூகத்துக்கு என்று
ஒரு வலைத்தளம்!
ஆதலால் சகலத்துக்கும்
ஒரே வலைத்தளம் !//
இதை நிர்வகிப்பவர் யாரென்று போட்டிவரும், அப்படியே வந்தாலும் அவர் எல்லோருக்கு புடிக்கனும்,நல்லவரா இருக்கனும், இது சாத்தியமில்லை, இதன் காரணமாகத்தான் பிரிவு வருகிறது நம்பிடையே. ஒருத்தனாவது எதிர்ப்பு தெரிவித்து தனி வலைத்தளம் ஆரம்பிப்பான்..... இது முடிவேயில்லை க்ரவுன்...
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் கிரவுன்,
தங்களின் ஆதங்கம் சரியே. வாசகர்கள் எண்ணமும் இதுவே.
அனைத்து வலை சிக்கல்களுக்கும் தீர்வு உண்டு, சம்பந்தபட்டவர்கள் மனம் வைத்தால்.
நிர்வகிக்கும் நபர்கள், நேரம், செய்தி, பின்னூட்டங்கள், பதிவாளர்கள் மேலும் சில விடையங்களால் நிர்வாக சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகளே அதிகம்.
அயல் நாடுகளில் வசிக்கும் அநேக சகோதரர்களே முன்னனி வலைப்பூக்கள் நிர்வகிப்பரவர்காளாக உள்ளார்கள் என்பது அனைவரும் அறிந்ததே, ஒரே வலைத்தளம் என்று வரும் போது நிர்வகிப்பதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் எழும் என்பது கடந்த ஒராண்டாக உணர்ந்த அனுபவம்.
(குறிப்பாக ஊரில் உள்ள நபர்களை வைத்து) TRANPARENCY AND ACCOUNTABILITYயை முன்னிருத்தி முழு நேரமாக (24x7) ஒரு நிர்வாக குழுவை உருவாக்கி, வியாபாரமாகவோ அல்லது சேவையாகவோ செய்தால் ஒரே தளம் சாத்தியம்.
தற்போதைய சூழலில் இதுவும் சாத்தியமா என்பதும் கேள்வி குறியே.
வேறு வழிதான் என்ன? இன்ஷா அல்லாஹ் விரைவில்..
இது தொடர்பாக நிறைய எழுதிக்கொண்டே போகலாம்.
//M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…
சளைக்க வேண்டாம் சவால்கள் நிறைந்த இவ்வுலகில், சருக்கியும் சாதிக்க வேண்டியதும், சந்திக்க வேண்டியதும் நிறைய இருக்கு மீராசா! //
இவ்விசயத்தில் சாதிக்க நான் இன்னும் என் தனி வழியில் சரிவர முற்படவே இல்லை என்றுதான் நான் சொல்லவேண்டும் சாச்சா.
நிறைய எழுதினேன்..பிறகு அழித்து விட்டேன்.
காலம் பதில் அளிக்கும்.அன்று உங்களுக்கு பதில் கிடைக்கும் என்பதால்..
சகோ.கிரவுனின் ஆதங்கம் ஆலோசிக்கபட வேண்டியதுதான். ஆனால் இது தருணம் இல்லை...அதே சமயம் ஒரு மலையில் தோன்றும் ஆறு பல கிளைகளாக பிரிந்து பலபகுதிகளை செழிப்பாக்கி,வளப்படுத்தி கடலில் கலப்பதுபோல்..ஒரே ஊரில் பிறந்த நாம் ஒவ்வொருவிதமான பகுதிகளில் கவனத்தை செலுத்தி எடுத்துக்காட்டாக அ.நி.செய்யும் கல்விவிழிப்புணர்வு போன்று மற்றவர்களும் ஏதாவது ஒரு சமுக நலப்பணிகளில் அக்கரை எடுத்து அதனை முன்னேற்ற பாடுபட வேண்டும்...நாம் அனைவரும் ஒன்றுதான்...கடைசியில் கலக்கபோவது அதிரையின் முன்னேற்றம் என்ற கடலில்தான்...யார் சொன்னது நாம் ஒற்றுமையாக இல்லையென்று...சண்டை போட்டு போட்டுக்கொண்டால்தானே ஒற்றுமையாக வேண்டும் ஆனால் இங்கே யாரும் சண்டைபோட்டு கொண்டதாக தெரியவில்லையே...அவரவர் வலைப்பூக்களை அவரவர்களே வைத்துக்கொள்ளட்டும்....எதாவது ஒரு வகையில் அது அதிரை முன்னேற்றதிற்க்கு பாடுபட்டாலே அது பாரட்ட தகுந்த ஒன்றுதான்...காலங்கள் கனியட்டும்...தியாகப்மனப்பான்மையுடன் வலைபூவை முழுநேரமாக நடத்தும் நடத்துனர்கள் உருவாகட்டும் (இப்ப எல்லாம் பணிப்பிணைகளுக்கிடையேதான் நடத்து கொண்டு இருக்கிறார்கள் ) அப்பொழுது கலந்தாலோசிக்கலாம்..இது என் தனிப்பட்ட கருத்து...
//அட போங்கப்பா..ஏட்டில் எல்லாம் நல்லாத்தான் இருக்கு..
ஆள விடுங்க..//
MSM(mr) : எங்கே(டா)ப்பா போறே !? எங்கே விடுறது ! அதான் கற்றதின் கைவந்த கலை கட்டுகிறதே ! திறமைக்கு என்று தளம் வைத்திருக்கும் உமக்கு இப்படித் தோனலாமா ! சிறுசு (மருமகனே என்று நானும் ஒரு முறையை போட்டு வைச்சுகிறேன் எதுக்கும்)
it is nothing wrong having blogs, but the purpose & goal must be good. But very very important is they must update atleast 2 to 3 times in a week. other wise it is not worth starting it.
//அபுஇபுறாஹீம் மாம்'ஸ் சொன்னது…
அதான் கற்றதின் கைவந்த கலை கட்டுகிறதே ! திறமைக்கு என்று தளம் வைத்திருக்கும் உமக்கு இப்படித் தோனலாமா ! //
ஹும்ம்..என் கவலையே நான் கற்ற கலைதான்.. உங்களைமாதிரி கவி பாடுகிற, கட்டுரை எழுதிகிற கலை இருந்திருந்தால் நாங்கள் 40 தளங்கள் என்ன! 100 தளங்களுக்கு BCC போட்டு மின்னஞ்சல் அனுப்புவோம்..
எங்கள் கலை அப்புடியள்ளவே! அதான் கவலை..
நமக்கும் இரட்டைகும் என்னை அறியா நிறைய தொடர்பு..
இரட்டை (ட்வின்ஸ்) மச்சான்-ஹசன்,ஹுசைன்
இரட்டை (ட்வின்ஸ்) மச்சி - முகர்ரமா,முபஷ்ஷிரா
இரட்டை (ட்வின்ஸ்)தங்கச்சி - முபாரக்கா, முனவ்வரா
ஒரே கட்டத்தில் இரண்டு வேலை வாய்ப்பு/விசா வாய்ப்பு - CTS / KSA
ஜித்தாவில் எதிரும் புதிருமான இரண்டு அமைப்புக்கு(அனைவரும் எமக்கு தெரிந்தவர்கள் - ரொம்ப கஷ்டம்.) நான் செய்த வலைத்தளம் - சங்கம் / மன்றம்...
எமக்கு பிடித்த எமதூர் இரண்டு வலைத்தளம்..
ஒரு பொறுப்புக்கு என்று நம்மை தேர்ந்து எடுத்துவிட்டு இரண்டு வகையான வேலை வாங்குறது..(வலைகுட கம்பெனிகளுக்கு இது வாடிக்கயாபோச்சு)
கால் கட்டுக்குக்கூட இரண்டு வீட்டுல கயிற கொண்டு வந்தாங்க..நா இன்னாங்க செய்றது?! ஒரு கயிறு போதும்னு ஒத்த கால்ல நின்னுட்டேன்..(ரெண்டு கட்டு வேற போடணும்னு உங்களுக்கு ஆசையோஅனு கேட்டு புடாதிகே..அவுக காதுக்கு விழுந்திட போகுது.. அப்புறம் கட்டு cut ஆகிடபோகுது..)
இப்படி ரெண்டுக்கெட்டானாவே நம்ம வாழ்க ஓடுதுங்க மாம்'ஸ்..என்னத்த சொல்றது.. வாழ்க்கைல எத்தன தடவ இங்கி பிங்கி பாங்கி போடறது...!!?!
இப்போ சொல்லுங்க எண் க(வ)லை நான் சொல்லும் விதத்தில் நியாயம்தானே?
நல்ல கருத்தை சொல்லியிருகிரார் கிரவுன் !
Post a Comment