Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? 16

அதிரைநிருபர் பதிப்பகம் | July 21, 2011 | , ,

அன்பிற்குரிய சகோதர,சகோதரிகளே! என் மனதில் வேதனையாக உதித்தவற்றை தாங்கள் முன் கவலையோடு பகிர்ந்து கொள்வதற்காக சில வரிகள் இங்கே.

1. பெண்களின் அடாவடிகளும் / ஆளுமையும் தலை விரித்தாடும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

2. விளையாடும் பருவத்தில் மாப்பிளை,பெண் பேசும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

3.  மாப்பிள்ளை, பெண் பேசி முடிக்கிறோம் என்ற பெயரில் உறவுகளை உடைத்தெறியும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?   

4.  வரதட்சணையை மாடி வீடுகளாய் கேட்கும் ஊர் -  நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

5. பெண் வீட்டில் பெருமையாக வாங்கி தின்னும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

6. பெண் வீட்டில் வாங்கியதில் குறையிருந்தால் குத்திக்காட்டும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

7. ஓசியில் அலங்கார நகைகளை வாங்கி அலங்கரித்துக்கொண்டு ஓசி சாப்பாட்டுக்கு செல்லும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

8. வாழ்வில் சிரமமெடுத்து சீர் கொடுக்கும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

9. எளிமையிலும் .பணக்காரர்களை போல் ஆடம்பரமாக வாழ நினைக்கும் ஊர்  - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

10. பந்தி என்றால் பகட்டுக்காக கடன் வாங்கி காசை கரியாக்கும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

11. குழந்தை பிறந்தால் அவ்வீட்டை சீனி குடோவ்ன்கலாக்கும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

12. உழைக்காத மாப்பிளைகளும் மைனராக வலம் வரும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

13. அயல் நாடே உனக்கு அடைக்கலம் என்று சொல்லும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

14. புறம் பேசி புகழை  தேட நினைக்கும் ஊர் -  நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

15. பொறாமைனால் பொல்லாங்கு சொல்லும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

16 . ஆபரணத்தை அடகு வைத்து ஆண்களை அயல் நாட்டுக்கு அனுப்பும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

17 . குடும்ப சூழ்நிலையைச் சொல்லி வாலிபத்தை சூறையாடும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

18 . வெட்டிப்பேச்சில் வீரனாய் / வீராங்கனையாய் திகழும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

19 . மனம் குன்றாமல் அடுத்தவரின் குறைகள் தேடிக் கானும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

20. பணமிருந்தால் பல்லை இளிக்கும், அது இல்லையெனில் மூஞ்சை சுளிக்கும் ஊர் -  நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

21 . தெரு வேற்றுமைகளால்ஆழமாக வேருன்றி நிற்கும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

22 . மார்க்க மேதைகள் நிறைந்திருந்தும் மாசுக்களை துடைத்து எறிய முடியா ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ;

"நான் அல்லாஹ்வின் பாலிருந்து நற்குணங்களை முழுமைப் படுத்துவதற்க்காக அனுப்பப்பட்டுள்ளேன்" ஹதிஸின் கருத்து .

நாமும் நற்குணத்தால் நற்பேர் பெற்று இம்மண்ணில் வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக ! ஆமீன்.

லெ.மு.செ.அபுபக்கர்

16 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதானே அ(திரை)ம்மண்ணில் தானே பிறந்தோம் !?

இவ்வளவும் கவலைதரும் கேள்விகளாக தொடுத்திருக்கும் LMS(a) ஆதங்கம் நியாயமானதே !

இருப்பினும்,
இம்மண்ணின் சிறப்புகளும் ஏராளம் இருக்கத்தானே செய்கிறது !

அப்துல்மாலிக் said...

சகோ லெ.மு.செ. அபூபக்கர், நிச்சயம் அனைத்தும் நிதர்சனமான உண்மை, இவ்வளவு இருக்கா என்று அதிர்ச்சியாகவும் இருக்கு. அபுஇப்ராகீம் காக்கா சொல்வது போல் சிறப்புகளும் இருக்கத்தான் செய்யுது. விடைகாண ஒரே வழி தத்தமது குடும்பத்தை சரிசெய்தால் நாம் பிறந்த மண் தானே சரியாகிடும், இன்ஷா அல்லாஹ்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பக்கரே;மண்ணின் குறையை எடுத்துக்காட்டுவதை விட மனிதனின் தவறான போக்கை சுட்டிகாட்டுவதே நல்லது.நாம் இம் மண்ணில் பிறக்கப்போய் இந்த அளவுக்கு ஒன்றி இருக்கிறோம்.மற்ற ஊராக இருந்தால் நம் சகோதரியை வேறு ஊருக்கு கொடுத்துவிட்டு பிறந்த ஊர், புகுந்த ஊர் என்ற பாகுபாடுகள் பரந்து கிடக்குமே!
வேண்டுகோள்.அடுத்து இம் மண்ணில் பிறந்த மகிமையை வரையனும்.(மண் உன் மேல் கோபமாம்.)

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
///நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?///

நாம் இந்த மண்ணில்தான் பிறந்தோம்!
எது நிரந்தரம் என்பதை
சிந்திக்க மட்டும் மறந்து விட்டோம்!

Yasir said...

கல்விதந்தைகளையும்,மார்க்கமேதைகளையும்,உயரிய உமர்தம்பிகாக்காவையும் கவிமன்னர்களையும் தந்த நம் மண் அதன் மீது பிறந்த ஒரு சில ஆண்மையற்ற, கையாளாகாத,நாதரிதனம் நிறைந்த சைத்தான்களால் சிறிது மாசடைந்து இருக்கிறது...தூய்மைப்படுத்த துணிவுள்ள இளைஞர்கள் தேவை ..அந்த கூட்டமும் உருவாகி வருகிறது.......மாற்றம் ஏற்படும்...நம் மண்ணின் மணம் கூடிய விரைவில் கமகமக்க வீசும்.....

sabeer.abushahruk said...

என்ன இப்படிப்போட்டுத் தாக்கிப்புட்டிய? நீங்கள் சொல்லும் அத்தனையும் ஒரு சிறு புரட்சியில் மாறிப்போகும். ஆனால், மாறாதது...

//பாசி வழுக்கும் படித்துறை
பனி படர்ந்த புல்தரை
பாதம் பதிந்த மண்பாதை
பாசம் பொதிந்த தலைமுறை!

அண்ணன் தம்பி வம்சாவழி
மாமன் மச்சான் வகையறா
மரம் செடி மாடு கன்று
பரம்பரையாய் ஒண்ணுக்குளொண்ணு!

நல்லெண்ண அழைப்பு தோறும்
அவ்வண்ணமே கோரும்
சுற்றமும் நட்பு மென
சூழ்ந்த தெங்கள் அதிரை!//

மேற்கொண்டு எம் எஸ் எம் தொடர்ந்தே தீருவார்...ஊராச்சே உடுவாரா...நகருங்கப்பா வழிய வுடுங்க!

Yasir said...

//பாசி வழுக்கும் படித்துறை
பனி படர்ந்த புல்தரை
பாதம் பதிந்த மண்பாதை/// அப்பப்பா...வெட்டிக்குளத்தின் கரையில் கிரிடமாக பனித்துளியை தன் தலையில் சுமந்து நிற்க்கும் ’புல்’வெளிகளில் நடந்த ஒரு உணர்வு....

கவிக்காக்காவே சொல்லிட்டாக....நாங்களும் எம்.எஸ்.எம்-க்கு பச்சைகொடி காட்டி வரவேற்கிறோம்

Meerashah Rafia said...

இரு அடிகளில் பலத்த இடியுடன் கூடிய நிதர்சன மழையை பொழிந்துவிட்டேர்களே!!

(மண் உங்கள் மேல் கோபமாம்.)

இப்போது கொஞ்சம் வெயிலை தேடுது..ஆகையால் msm(n-என்) சாச்சாவை தேடுது..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

எல்லாம் சரிதான்,முறையாக மார்க்கத்தை பேணி நம் வாழ்க்கை நெறிகளை அமைத்தால் இந்த மண்ணில் தான் நாம் பிறந்தோம் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளலாமே.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
---------------------------------------------

நம் ஊரில் பல நல்ல பழக்க,வழக்கங்கள் அன்றிருலிருந்து இன்று வரை இருந்து வந்தாலும், மார்க்க அறிஞர்களும், ஆலிம்களும், அறிவில் சிறந்த பெரியோர்களும் வாழ்ந்து மறைந்து தனிப்பாரம்பரியம் பெற்றிருக்கும் ஊராக இருந்தாலும் வருத்தப்பட்டு வேதனைப்பட வேண்டிய சில சமூகக்கேடுகளும் இல்லாமல் இல்லை நம்மூரில் நண்பன் அபுபக்கர் சொல்வது போல். அவருடைய ஆதங்கத்தில் நானும் பங்குகொள்கிறேன்.நல்ல பல பழைய நினைவுகள் எம்மை சந்தோசப்படுத்தி பரவசப்படுத்தினாலும், நிகழ்கால நிகழ்வுகள் பல வேதனையைத்தான் தருகிறது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது.

பெண் வீட்டாரை பகடைக்காயாக உருட்டி விளையாடும் ஊர்.

பொறாமையில் ஆளை அப்படியே கவிழ்த்து அவர் மேல் சவாரி செய்யும் ஊர்.

மாப்பிள்ளைகளெல்லாம் மண்ணாங்கட்டிகளாக இருந்தாலும் என்றும் பட்டத்து இளவரசர்களாய் வலம் வரும் ஊர்.

குடும்பச்சுமைகளை ஏற்றுமதி செய்து, காசுகளை இறக்குமதி செய்யும் ஊர்.

வாலிபத்தை அயல் தேசத்து மண்ணில் செலவு செய்து நல்ல பகல் கனவுகளை அறுவடை செய்யும் ஊர்.

வாழ்ந்தாலும் பேசும்; தாழ்ந்தாலும் பேசும் வாயில்லா ஜீவன்.

வாழ்வில் சிரமம் எடுக்க சிரமப்படும் ஊர்.

வெட்டிப்பேச்சில் வெற்றிநடை போடும் ஊர்.

கனவுகளில் இவ்வையகத்தை கட்டிப்போட்ட ஊர்.

பிறர் நலனில் பின்தங்கிப்போன ஊர்.

குறைகாண்பதில் விண்னை முட்டும் ஊர்.

நிறை காண்பதில் இடறி விழுந்த ஊர்.

வருவாய் ஈட்டும் துறை ஆண்களிடமும், மொத்த ஆட்சிப்பொறுப்பு பெண்களிடமும் ஒப்படைக்கப்பட்ட ஊர்.

ஒற்றுமைகள் கோடைமழை போல் அவ்வப்பொழுது வந்து செல்லும் ஊர்.

வெறும் பெருமையில் அந்த விண்மீன்களையே நல்ல விலை கொடுத்து வாங்கி வந்து ஆக்கி உண்ணும் ஊர்.

தரிசு மனைகளெல்லாம் விலையேற்றத்தில் மல்லுக்கட்டும் ஊர்.

இலகுவாக இவ்வையகத்தை தன் கக்கத்தில் இடுக்கிக்கொள்ள நினைக்கும் ஊர்.

பணமிருந்தால் பாசம் பொங்கும், இல்லையேல் பார்வை மங்கும்.

மார்க்கச்சொற்பொழிவுகள் அன்றாடம் வழங்கப்பட்டாலும் பெரும்பாலும் மண்ணறையை மறந்து வாழும் ஊர்.

என் மண்ணே, மணியே...உன்னை என்னவென்று வாழ்த்த

எல்லாம் நான் பிறந்த மண்ணின் மகிமை...

ஏதோ மேலே மாற்றான் வீட்டு தோட்டத்து மல்லிகையின் நறுமணத்தைப்பற்றி இங்கு சொல்ல வரவில்லை. என் வீட்டில் வளரும் கள்ளிச்செடியைப்பற்றித்தான் சொன்னேன் (நான் பிறந்த சொந்த மண்ணைப்பற்றி சொல்ல வந்தேன்).

என் கணிப்பில் குறையிருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நிறை இருப்பின் எல்லாப்புகழும் இறைவனுக்கே என கூறி இத்துடன் நிறைவு செய்கின்றேன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

sabeer.abushahruk said...

என்ன எம் எஸ் எம், 
மீராஷா, யாசிர்னு பந்தைப் பாஸ் செய்து உங்களொடம் தந்தால் நீங்கள் சேம்சைட் கோல் போட்றியலா? இனி நாங்களே பார்த்துக்கறோம்:

அன்புக்குப் பெயர்பெற்ற ஊர் 
வம்புக்கு பயப்படும் ஊர்!
பக்கத்து வீட்டாரோடெல்லாம் 
பாசத்தை பகிரும் ஊர்!

எண்ணிலடங்கா பள்ளிகள்கொண்ட ஊர்
எழுத்திலடங்கா பேருகள்பெற்ற ஊர்
தர்ம சிந்தனை கொண்ட ஊர்
கர்ம விணைக்கு அஞ்சும் ஊர்

என் சொந்தபந்தம் நிறைந்த ஊர்
நண்பர்களும் நல்லோரும் நிறைன்ய்ஹ ஊர்!
நான் பாலபாடம் பயின்ற ஊர்
இன்று புறக்கனித்தாலும் பொறுக்கும் ஊர்

அதிரைக்காரர்களுக்கு மனிதம் போதித்த
வேர்களைக்கொண்டது
போதிமரமான எங்கள் ஊர்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதானே !

ஓர் இறைக் கொள்கையை கொண்ட மக்கள் நிறைந்த ஊர் !

கல்யாணப் பத்திரிக்கையில் அடங்களும் என்று போட்டு பெருமை கொள்ளும் ஊர் !

கல்யாண கலாட்டா இருந்தாலும் கலரி என்று வந்திட்டால் எடுங்கப்ப சகனை என்று எந்திருக்கும் ஊர் !

அன்பளிப்புகளை உறவுகளுக்கு வழங்கி நெருக்கம் கூட்டிடும் ஊர் !

மவுத்தென்று வந்திட்டால் மூன்று நாட்களுக்கும் உறுதுணையாக இருந்திடும் ஊர் !

அரசு இயந்திரத்தை அசைக்காத ஊர், அவர்களிடம் கேட்பதை புறம் தள்ளிடும் ஊர் !

நல்ல மருத்துவர்களை பெற்றெடுத்த ஊர் !

கல்விக் கண் திறந்த கல்வித்தந்தை பிறந்த ஊர் !

குற்றம் எங்கிருப்பினும் சொல்லும் தைரியமும் எதிர்த்து நின்ற ஆலீம்கள் பிறந்த ஊர் !

நங்கள் கல்வி கற்றதும் இந்த ஊர் !

நாங்கள் மார்க்கம் பெற்றதும் இந்த ஊர் !

நல்லதையே செய்ய துடிக்கும் இளசுகளை கொண்ட ஊர் !

சதிக்கு சாதிக்கும் வேட்டு வைக்கும் ஊர் !

வேற்றுமையில் ஒற்றுமையை தேடிடும் ஊர் !

நிச்சயம் சாதிக்கத் துடிக்கும் தலைமுறையை பெற்றிருக்கும் ஊர் !

கணினி தமிழ் தொழில் நுட்ப புரட்சிக்கு வித்திட்ட ஊர்

வலைப்பூக்கள் வீசி அதிரைமணங்களை வென்றெடுக்கத் துடிக்கும் ஊர் !

ஆதலால்... இம்மண்ணில்தான் பிறந்தோம்...

குப்பைகள் குறையாத ஊர்(தான்)

சுத்தம் செய்திடத்தான் நாம் இருந்திடுவோமே இதே ஊரில் !

sabeer.abushahruk said...

க்ளாஸ் அபு இபுறாகீம்,
அபு இபுறாஹீம், யாசிர், மீராஷா அப்புறம் நானு.
இன்னும் ஏழு பேர் கிடைத்தால் நெய்னாவை அபுபக்கர் டீமுக்குத் தள்ளிவிட்டுடலாம்

Meerashah Rafia said...

//அபு இபுறாஹீம், யாசிர், மீராஷா அப்புறம் நானு.
இன்னும் ஏழு பேர் கிடைத்தால் நெய்னாவை அபுபக்கர் டீமுக்குத் தள்ளிவிட்டுடலாம்//

நாம தள்ளிவிடுரதுக்கு முன்னாடி அவுகளே தானா போய் உளுந்துபுட்டாக..

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கவிக்காக்கா, அபு இபுறாஹீம் காக்கா, சகோ. யாசிர், மகன் மீராசா இவர்களின் எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாக எழுதியமைக்கு மன்னிக்கவும். (கோவிச்சிக்கிடாதியெ....)

என் வீட்டுத்தோட்டத்தில் மலர்ந்து நறுமணம் வீசும் மல்லிகையை பாட நான் வரவில்லை. அதன் அருகிலேயே வளர்ந்து வரும் கள்ளிச்செடியை கலையவே வந்தேன்.

யார், யாரெல்லாம் பாழாப்போன பழக்கவழக்கங்களை (அதில் நான் கூட இருக்கலாம் யான் அறியேன்) மார்க்கம் தாண்டி இதுநாள் வரை பவ்வியமாக‌ நம்மூரில் பின்பற்றிவருகிறார்களோ அவர்களைத்தான் சாடினேனே தவிர நல்ல குணம் பெற்று நறுமணம் வீசச்செய்பவர்களை நான் ஒரு போதும் ஏச வில்லை.

வாழ்வெனும் ச‌முத்திர‌த்தில் ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி எதிர் நீச்ச‌ல் போட்டு வரும் வ‌ழியில் ப‌ட்ட‌ சில‌ இன்ன‌ல்க‌ளை எழுத்தில் கொண்டு வ‌ந்தேன். த‌வ‌றான‌ சிந்த‌னையுள்ள ஆணவ‌ ம‌னித‌ர்க‌ளைப்ப‌ற்றி எழுதியுள்ளேனே த‌விர‌ அவ‌ர்க‌ளை த‌ன் மேல் தாங்கியுள்ள‌ என் ம‌ண் என்ன‌ செய்யும்?

இன்ஷா அல்லாஹ் ம‌ற்றொரு க‌ட்டுரையில் ந‌ம் ம‌ண்ணின் ம‌கிமைப்ப‌ற்றி ப‌கிர்ந்து கொள்வோம்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞல் வழி கருத்து
----------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பார்ந்த சகோதரர்களே!

நல்ல டீம் போட்டுதான் விளையாடுரிங்க. விளையாடுங்க விளையாடுங்க.

என்னுடைய பொறுப்பு ஆரம்பித்து வைக்கிறதுதான், எப்படியோ சேம் சைட் & எதிர் சைட் கோல் போட்டாலும் சரி ஜெய்ச்சா சரிதான். ஆமாம் நீங்க சொல்ற மண்ணின் சிறப்புகளை, நான் சொல்லியிருக்கிற அநியாயங்கள் ஜெயிச்சிடாம இருந்தால் சரிதான்.

//இரு அடிகளில் பலத்த இடியுடன் கூடிய நிதர்சன மழையை பொழிந்துவிட்டேர்களே!!(மண் உங்கள் மேல் கோபமாம்.) இப்போது கொஞ்சம் வெயிலை தேடுது..ஆகையால் msm(n-என்) சாச்சாவை தேடுது.//

சும்மா சொல்லக்கூடாது எம்.எஸ்.எம் வெயிலு ஒரைச்சாலும் மூளைய உருக்குற வெயிலா தான் ஈக்கிது

லெ.மு.செ.அபுபக்கர்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு