அஸ்ஸலாமு அலைக்கும்.
"சோறு கண்ட இடமே சொர்க்கம்" என்பது போல் சிலருடைய வாழ்க்கை கழிந்துக் கொண்டிருக்கின்றன. இவர்களின் செயல்களை உரையாடல் முறையில் சிறிய ஆக்கத்தினை பதிவு செய்ய விரும்பியவனாக.
"சோறு கண்ட இடமே சொர்க்கம்" என்பது போல் சிலருடைய வாழ்க்கை கழிந்துக் கொண்டிருக்கின்றன. இவர்களின் செயல்களை உரையாடல் முறையில் சிறிய ஆக்கத்தினை பதிவு செய்ய விரும்பியவனாக.
முதல் நபர்: டே மாப்புளே! இன்னைக்கி ரெண்டுஎடத்துல நடுத்தெருவுலையும்,சி.எம்.பி லைன்லயும் கல்யாணம் இருக்குதுடா வெல்லர்மே வந்துரா கல்யாணத்துக்கு போவலாம்.
இரண்டாம் நபர்: நா வரலடா மாப்புளே எனக்கு அழைப்பு இல்லடா.
முதல் நபர்: டே ரெண்டு கல்யாணக்கார மாப்புளயும் நம்ம எல்லோரையும் கூப்புட்டுட்டு போனான்கடா.
இரண்டாம் நபர்: அப்புடியா சரி நா வர்ரேன் என்னைக்குடா வலிமா ?
முதல் நபர்: ஆமாடா இன்னைக்கு வலிமாவுக்கும்,காலை சாப்பாட்டுக்கும் கூப்புட்டாங்கட.
இரண்டாம் நபர்: காலை சாப்பாட்டுக்கு எங்கடா போவலாம்?
முதல் நபர்: எங்க போனாலும் ஒரே சாப்பாடுதாண்டா வலிமாவுக்குதான் அஞ்சிகறி சோத்துக்கு போவனும்டா.
இரண்டாம் நபர்: எந்த தெருவுலடா அஞ்சிகறி சோறு?
முதல் நபர்: சி.எம்.பி லைன்ல பிரியாணியும், நடுத்தெருவுல அஞ்சிகறி சோறுண்டு நினைக்கிறேண்டா. நம்மோ நடுத்தெருவுக்கே போயிடலாம்.
இரண்டாம் நபர்: டே இவனே 12 அரை மணி ஆச்சுடா.தொழுகைக்கு தக்வா பள்ளிக்கு போய்டலாமா?
முதல் நபர்: வனாண்டா மாப்புளே அங்கே கூட்டம் அதிகமா இருக்கும்டா நம்ம முஹல்லாவிலே தொழுதுட்டு பசங்களா வருவாங்க சேர்ந்து பைக்கிலே போய்லாண்டா.
இரண்டாம் நபர்: சரி வா இகாமத்து சொல்லப்போறாங்க தொழுவ போவலாம்.
முதல் நபர்: உவ்வளவு நேரமாச்சுடா தொழுவ முடிய நம்ம பசங்களையும் காணமடா சரி பரவா இல்லை வா வேகமாக நடக்கலாம்.
விருந்து நடக்கும் வீடு நெருங்கியதும்
இரண்டாம் நபர்: அந்தோல ரெண்டுவேறு வராங்க வா ஒரு சஹனுக்கு உட்காந்திடலாம்.
முதல் நபர்: டே சும்மாயிரா கெளடு கெட்டதுலாம் வானாண்டா.நம்ம பசங்க வராங்களாண்டு பார்ரா? 'அ அந்தோ வர்ராங்கடா'.
இரண்டாம் நபர்: டே மச்சா எல்லோரும் எங்கடா போனிய? உங்களையலாம் அங்கே எதிர்பாத்துக்கிட்டு இருந்தோம்டா.
நண்பர்கள்: ஆமாடா மாப்புளே நாங்க எல்லோரும் மெய்ன்ட் ரோட்லே போய் சர்பத்து குடிச்சிட்டு அப்புடியே தக்வா பள்ளியிலே தொழுதுட்டு வர்றோம்.
முதல் நபர்: சரி வாங்கடா உள்ளே போய் காத்தாடிலே உக்காரலாம்.
சஹன் சோறு பரிமாற்றம் நடைபெறும்போது
முதல் நபர்: காக்கா இங்கே தாங்க என்று அவசரமாய்..சோத்தை சாப்பிட்டு முடித்ததும்
இரண்டாம் நபர்: டே மாப்புளே இன்னொரு சஹன் வாங்கலாமா?
நண்பர்கள்: ஆமாடா அந்தோல போற பையன்கிட்ட கேளுடா.
முதல் நபர்: தம்பி தம்பி இன்னொரு சஹன் சாப்பாடு கொண்டுவாமா.
தம்பி: மறு சோரா காக்கா?
முதல் நபர்: இல்லம்மா மறு சஹமா தம்பி.
தம்பி: சாரி காக்கா கூட்டம் நெறையா இருக்குரதுநாளே சாப்பாடு பத்தல
.
நண்பர்கள்: டே மச்சா இவன்கிட்ட கேக்காதே அந்தோ வர்ரா பாரு நம்ம ஆளு அவகிட்ட கேப்போம்டா.அஸ்ஸலாமு அலைக்கும் என்ன தலைவரே கவனிப்பே இல்லை?
தலைவர்: என்ன வேணும் சொல்லுங்க தலைவரே ?
நண்பர்கள்: நல்ல கறியா பார்த்து ஒரு சஹன் கொண்டு வாங்க தலைவரே!
தலைவர்: இந்தாங்க தலைவரே நல்ல சாப்புடுங்க வேற எதுவும் வேலுமா தலைவரே?
நண்பர்கள்: மொதல்ல இத சாபுட்டுகிறோம் தலைவரே.
முதல் நபர்: டே மச்சா சோத்துக்கு கொஞ்சம் உப்பும் கறியும் கொஞ்சம் வேவலடா யாருடா சமைச்சது?
இரண்டாம் நபர்: கண்டிப்பா நெய்னவா இருக்காதுடா.
முதல் நபர்: சரி அதவுடு ராவைக்கி அந்த கல்யாணக்கார மாப்புள சாப்புட கூப்புட்டான்.போவலாம் மறந்துடாம வந்துரு.
ஊரில் கலரி சாப்பாடு அல்லது கல்யாண அலம்பல் என்று வந்துவிட்டால் இளைய பட்டாளத்தின் செயல்கள் அச்சூழலில் அவர்களுக்கும் நண்பர்களுக்கும் ரசிக்கும்படி என்றிருந்தாலும் மற்றவர்களின் பார்வையில் அங்கே முகம் சுளிக்கவைக்கும் என்பதை மறந்து விடுகின்றனர்..
- லெ.மு.செ.அபுபக்கர்
13 Responses So Far:
வாவ்வ்வ்வ் ! லெ.மு.செ.(a) ! கலக்கலுடன் ஆரம்பம் முதல் ஆக்கம் ! வாழ்த்துக்கள் !
என்ன MSM(n) ஒரு சஹனுக்கு ஆள் சேர்ந்திடுச்சு ! சீக்கிரம் வாங்க சஹனை எடுத்துகிட்டு உட்கார்ந்திடலாம் !
அருமையான உரையாடல் நடை. அந்த வயசுக்கு அப்படிப்பட்ட உரையாடல் ஓக்கேதான்னு நினைக்கிறேன்.
புத்திமதி நல்லாருக்கு. ஆனா கொஞ்சம் வயசானமாதிரி...:-) :))
//கொஞ்சம் வயசானமாதிரி...:-) :)) //
உரயாடலே பஞ்சா(னதே) !!
ஆஹா சூப்பர் பக்கரே!
அதிரைத்தமிழின் அகராதி நெய்னாவின் வித்து இங்கிட்டும் வேலை செய்யுதா.செய்யட்டும் செய்யட்டும் வாழ்த்துக்கள்.மேலும் வளர்க்க!,தொடர!.
அதுசரி ஆளோடெ உருவத்தெ பாத்தால் ரெண்டு சகன் உண்ட ஆளாத்தெரியலெயே!மொதோ சகனையே தவிர்ப்பதாக கேள்விப்பட்டேனே!எப்படியோ ஆடம்பரத்தை அதிரையில் புகுத்தினால் சரிதான்.
"இப்புடி கண்ணாமுண்ணாண்டு திங்கிறதுனாலெ தான் நம்ம புள்ளையெலுவோ (நம்ம ஊர் இளைஞர்கள்) ஊதிப்போயி தலவாணிக்கி ஒரெ போட்ட மாதிரி ரோட்லெ உருண்டு, உருண்டு வருதுவோ. ஒரு ச்சேர்லெ கூட ஈசியா உக்கார முடியுதா செம்மிப்போயி தான் உக்கார முடியுது ஒடல் ஒழைப்பும் இல்லை, ஓடியாடி விளையாடுர வெளையாட்டும் இல்லெ என்னத்தெ சொல்றது"
இப்பொ நல்லா வெளுத்துக்கட்டிபுட்டு பின்னாடி வேதனெப்படாமெ ஈந்தா சரி"
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
வா மாப்பிள்ளையிடம் கேட்போம் உன் கல்யாண சாப்பாடு ஒழுங்காக சாப்பிடவில்லை. ஆதலால் மந்தி போடு அல்லது கப்சா சாப்பாடு போடு என்று நண்பர்கள் கேட்பார்கள். அதற்கு மாப்பிள்ளை சொல்வார் நான் இப்பொழுதுதான் கல்யாணத்திற்கு இவ்வளவு செலவுகள் செய்தியிருக்கிரேன் ஆதலால் எனக்கு இப்போ முடியாது மச்சான் என்று இருந்தாலும் அவனே விட்டபாடு இல்லை நண்பர்கள்.எப்படியாவது மந்தி,கப்சா சாப்பிடனும் அதுவும் இல்லையா மீன் சாப்பாடு போடு.கட்டுமாவாடியில் எனக்கு தெரிந்த ஆல் இருக்கிறார் வா மச்சான் போய் நல்ல கொடுவா மீனும்,இராலும் வாங்கலாம்.
மு.செ.மு.அபூபக்கர்
எவளவு கரிதான் தின்பான்ங்கடா போடா கல்ச்சலவோயிருவா போதும்ட கரி எடுத்தது இங்கு எல்லோருக்கும் வேனும்முடா. நீ சஹன் பரத்த வேண்டாம்டா நீ உள்ளை போனால்தானே கேட்பார்கள் ஆதலால் சட்டிக்கிட்டை
நில் யாரும் போன் பன்னுனால் இல்லை என்று சொல்லிவிடு. கரி பத்தலமாப்பிள்ளை மந்தி அல்லது கப்சா சாப்பாட்டில் பார்த்துக்கொள்ளலாம்.
அதிரைன்னா சாப்பாடுதானே... :))) ஆமா அந்த படம் நம்மூர்லே எடுத்ததுஇல்லியோ வித்தியாசமா டவுசரு போட்டு வுக்காந்து கும்முராங்களே, வெள்ள வேட்டிய கானோமே அதான் கேட்டேன்..
நல்லாத்தான் இருக்கு அபூ பக்கரின் ஆக்(கம்) கி வைத்த சகன் சோறு
சகன் மாத்துற கூட்டம் சமத்தான கூட்டம்தான்
மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்,
// அதிரைத்தமிழின் அகராதி நெய்னாவின் வித்து இங்கிட்டும் வேலை செய்யுதா //
பின்னே! ஒரே மரத்தின் கிளைகள்தானே! மு.செ.மு.வும் , லெ.மு.செ.வும். சகோ ஜஹபர் சாதிக்கே !
// நல்லாத்தான் இருக்கு அபூ பக்கரின் ஆக்(கம்) கி வைத்த சகன் சோறு // சகோ யாசிர் சொல்வது போல்.
நம்ம மு.செ.மு. அபூபக்கர் இரண்டு தடவை வந்திருப்பதை பார்த்தால்.உண்மையில் நல்லாத்தான் இருக்கும் போலிருக்கு.
- லெ.மு.செ.அபுபக்கர்
அஸ்ஸலாமு அலைக்கும்
LMS பாக்கர்... உரையாடல் மிக அருமை. முதல் ஆக்கமே அசத்தல்.
ஊரில் விருந்து சாப்பாடு எதற்காக கொடுக்கிறார்கள் என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.
எவ்வளவு நாட்களுக்கு இப்படி ஆடம்பரமாக செலவழித்து "உணவருந்த தகுதி உள்ளவர்களுக்கே" மீண்டும் மீண்டும் கொடுக்கப்போகிறோமே தெரியவில்லை.
ஆப்பிரிக்கா கண்டத்தில் கடந்த பல வருடங்களில் இல்லாத வரட்சி, கடந்த ஆறு மாதமாக பெரும்பாலன பகுதிகளில் உண்ண உணவின்றி இன்னும் மக்கள் அவதியுறுகிறார்கள்.
இன்னும் அதிரையில் எத்தனையோ குடும்பங்கள் அன்றாடம் சரியான உணவே இல்லாமல் இருக்கிறார்கள். கேவை சிறைவாசிகளின் குடும்பம் தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய திண்டாடிவருகிறார்கள் என்ற செய்தியை படிக்கும் போது கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியவில்லை.
மேலே சொல்லப்பட்ட விசயங்கள் எதற்கு என்றால், நம்மூரில் கல்யாண விருந்து, விடு குடிப்போனதுக்கு விருந்து என்று விருந்துக்களின் எண்ணிக்கைக்கு குறைவே இல்லை ஆனால் அதிரையில் ஒரு ஃபேசன் பல வருடங்களாக, வெளிநாட்டிலிருந்து யாரும் வந்தால் அவரிடம் கரக்கவேண்டியதை கரந்து, காரணம் ஏதுமின்றி பார்ட்டி என்ற பெயரில் ஒரு பகல் விருந்தோ அல்லது இரவு விருந்தோ சமைத்து சாப்பிடுகிறார்கள். இது அனாவிசிய செயல், வீண்விரையம் என்பதை யாரும் இது போன்று செய்பவர்களுக்கு எடுத்துச்சொல்லுவதில்லை. வெளிநாட்டிலிருந்து ஊர் செல்லுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதிரையில் உள்ள எவ்வளவோ பள்ளிவாசல்கள் பெரிய வருமானமில்லாமல் உள்ளது, இவைகளுக்கு தங்களின் உதவிகளை செய்து நன்மையாவது சேகரிக்கலாம். எத்தனை பேர் தங்களின் முகல்லாவில் உள்ள பள்ளிகளின் செலவுகளில் பங்கெடுத்துள்ளோம்? சிந்திக்கலாமே !
விருந்து என்ற பெயரில் புதிதுபுதிதாக உருவெடுக்கும் அனாச்சாரங்களிலிருந்து ஒதுங்கிக்கொள்வது இவ்வுலக வாழ்க்கைக்கும் மறுவுலக வாழ்வுக்கும் நல்லது.
அல்லாஹ் போதுமானவன்.
sdnsfasf
யா..ம்மா...பக்கரு இவ்ளோ நாளா உங்க எழுத்து திறமையை எங்கெ ஒளிச்சி வச்சீந்தியெ? சோத்துலெ மறச்சி வச்ச ஈரல் மாதிரி இப்பொ கொஞ்சம், கொஞ்சமா வெளியெ வருது.....உருளக்கிழங்கு சிட்டியிலெ பரத்தும்பொழுதே ஈரல்,கிட்னியெ எல்லாம் ஸ்வாஹாப்பண்ணாம இருந்தால் சரி.....
பக்கரு அடுத்த களரிக்கு ரெடியாயிட வேண்டியது தானே....அருமை...அதான் அடுத்த கட்டுரைக்கு ரெடியாயிட வேண்டியது தானேண்டு சொல்ல வந்தேன்....
லெ.மு.செ. அபுபக்கருக்கு மு.செ.மு. நெய்னா முஹம்மதுவின் சலாமும், து'ஆவும்...
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
Post a Comment