Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எது கவிதை…? 48

அதிரைநிருபர் பதிப்பகம் | July 28, 2011 | ,


மெல்ல விடிவதை
நல்ல மொழிதனில்
செல்ல வரிகளால்
சொல்ல முடிவதே…கவிதை!

உனக்குள் உருவாகும்
உள்ளத்து உணர்வுகளை
உள்ளது உள்ளபடி
உளராமல் உரைத்தால்…கவிதை!

பாலையில் யாவர்க்கும்
காலையும் மாலையும்
பாலை வார்க்கும்
வேலை பார்க்கும்…கவிதை!

சூரிய கிரணங்கள்
மேவிய தருணங்கள்
கூரிய வார்த்தைகளால்
கூறிய வருணனை…. கவிதை!

நுனுக்க உணர்வுகளையும்
மினுக்கக் கனவுகளையும்
துனுக்குத் தோரணங்களையும்
திணித்துவைத்த அனு...கவிதை!

கலைத்துப் போட்ட
பொம்மைகள்
குப்பை யென்றால்
அடுக்கி வைத்த கண்காட்சி...கவிதை!

உதறிய பூக்களும்
சிதறிய இதழ்களும்
கூலமென்றால்
கோர்த்தெடுத்த மாலையே…கவிதை!

அத்தனை பிள்ளைகளின்மேல்
அன்பிருந்தாலும்
செல்லப் பிள்ளையே….கவிதை!

கவிதை…
எழுதியவர் பிரசவித்தபின்
வாசிப்பவர் கருவுறும் விந்தை.

கவிதை…
காட்டாறு எனினும்
வரம்புகளுக்குள் ஓடுமொரு முரண்பாடு.

கவிதை…
கதையோ கட்டுரையோவல்ல
வரி வரியாய் வாசிக்க,
வரிகளுக்கிடையே வாசிக்கப்படும் வசியம்.

கவிதையில் மட்டுமே…
வார்த்தைகளுக்கு வாய் முளைக்கும்
வாசிப்பவருக்கு வாய் பிளக்கும்

கவிதையில் மட்டுமே
காகிதங்கள் கருவுறும்
காரியங்கள் உருப்பெறும்

வானவில்லை மொழி பெயர்த்தால் கவிதை!
வாசமுல்லை வழி வாய்த்தால் கவிதை!
கானகத்துக் குயில் பாட்டும்
காமமற்ற காதலும்தான் கவிதை!

தேசிய கீதமும் கவிதை
நேசிக்கும் பாஷையும் கவிதை
சாரள வெளிச்சமும் கவிதை
சூரியப் பிரவாகமும் கவிதை

மின்மினி வெளிச்சமும் கவிதை
மின்னாத இருளும் கவிதை
சொல்லிய வார்த்தைகளும் கவிதை
சொல்லாத வெற்றிடமும் கவிதை

வட்டத்துக்குள் அடங்க
ஆரமல்ல கவிதை
மாதத்துக்குள் முடிய
வாரமல்ல கவிதை

வாசிக்கத் திணற
கவிதை பாரமுமில்லை
வார்த்தைகளுக்குள் அடங்க
கவிதைக்கு நேரமுமில்லை.

எது கவிதை?
கரம் கொண்டு விதைத்தால்
மரம்
கருவிதை விதைத்தால்
கவிதை!!!

- சபீர்
Sabeer abuShahruk,

48 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கவிதை…
காட்டாறு எனினும்
வரம்புகளுக்குள் ஓடுமொரு முரண்பாடு.//

இதுதான் இடம் பொருள் ஏவல் என்பதோ !?

மீதியை பிரித்தாய வருவார் பின்னாலே கிரவுனார் !

Abu Easa said...

மாஷா அல்லாஹ்! சிறப்பானா வரிகள்!

காக்கா எங்கனால சின்ன கோடுதான் போட முடியுது, நீங்கெ என்னான்டா காஷ்மீர் டு கன்னியாகுமரிக்கு ஹை வேயில போடுரிய!

பின்னிப் பெடலெடுத்துட்டிய காக்கா!

ஆமா... பின்னிப் பெடலெடுத்துட்டியன்டா என்னா...?

அப்துல்மாலிக் said...

கவிதையென்றால்
என்னவென்று
கவிதை வரிகளிலே
(முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்)
சொன்னது அருமை

Yasir said...

வாரே வா....கவிதை என்றால் என்னவென்று ஒரு பாடமே எடுத்து விளக்கி இருக்கிறீர்கள்....வழக்கம்போலவே மின்னும் வார்த்தைகள்,வரிகள்.. வாழ்த்துக்கள் கவிக்காக்கா

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.அழுகையை அழுது காட்டிடலாம். சிரிப்பை சிரித்து காட்டிடலாம்.இனிமையை , கசப்பை, வலியை, இன்பத்தை வார்தையில் காட்டிடவே முடியும். ஆனால் இங்கே கவிதையை கவிதையால் காட்டியது. வைரத்தை வைரத்தால் அறுப்பது போலவும்,வெண்ணையை வெண்ணையால் எடுப்பது போலவும்.வாழைப்பழத்தில் ஊசி தினிப்பது போலவும், மிக நெளினமாக ,லாவகமா தன் கவி ராஜ்ஜியத்தில் அந்த சின்மாசனத்தில் கால் மேல் கால் போட்ட படி ,எழுத உங்களுக்கு கை வந்த கலையாய் போனது நினைத்து , நினைத்து ஆனந்தத்தில் கூத்தாடும் உங்கள் வாசகன் என் சிறு வாக்கு மூலம் ,கவிதைக்கு விளக்கம் சொல்லலாம், ஆனால் விளக்கத்திற்கு எப்படி விளக்கம் சொல்ல முடியும்?

crown said...

மெல்ல விடிவதை
நல்ல மொழிதனில்
செல்ல வரிகளால்
சொல்ல முடிவதே…கவிதை!
-----------------------------
ஐயா! கவிஞரே உங்களுக்கு முடியும். எங்களுக்கு?அனாலும் இப்படி எளியதாக வார்தையை வசப்படுத்தி எம்மை பரவசப்படுத்த உம்மை போல(உரிமையில் வந்த ஒருமை) நல் கவிகளால் மட்டுமே முடியும். பிரபலம்(அது ஒரு பலம்)ஆகாததால்(அதிரை வட்டம் மற்றும் சில நீள்வட்டம்-திண்னை)இதற்குள் சுருக்கி கொண்ட உம்மைபோல கவிஞர்கள் கவி சக்கரவர்த்தி என ஆள்வைத்து அழைக்க வைக்கும் இங்கால விளம்பர கவிஞர்களை விட மேலானவர்களே!
------------------------------------------------------------

உனக்குள் உருவாகும்
உள்ளத்து உணர்வுகளை
உள்ளது உள்ளபடி
உளராமல் உரைத்தால்…கவிதை!
-------------------------------------------
வயிற்றில் சிசு உதைத்தால் பிரசவிக்க போகும் அந்த தாயிக்கு உதைக்கிறது என்று சொல்லத்தான் முடியும் அதை மற்றவர்களுக்கு உணர்த முடியாது. ஆனால் உள்ளத்தில் கரு கொண்ட கவி சிசுவின்
செயல் தன்னை உங்களாலேயே உலகிற்கு உணர்த்த முடிந்த வரம் பெற்ற நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.(எல்லை தாண்டா வருனனை,சிர்க்கில் சிக்கா கற்பனை)

crown said...

பாலையில் யாவர்க்கும்
காலையும் மாலையும்
பாலை வார்க்கும்
வேலை பார்க்கும்…கவிதை!
---------------------------------------------
வார்தைகள் எங்களின் காலை வாரும்.
ஆனால் உங்கள் கையால் மாலையாகி
உமக்கே மாலைசூடும் வினோதம்,அற்புதம்.
அல்ஹம்துலிலாஹ்.

crown said...

சூரிய கிரணங்கள்
மேவிய தருணங்கள்
கூரிய வார்த்தைகளால்
கூறிய வருணனை…. கவிதை!
-------------------------------------
கூரிய வார்தைகள் எம்மேல் மேவியே போனாலும், கவியே எமை தாவி அணைத்து செல்லும் படி அமைத்த கவிதை வரி! கூரிய வார்தை எம்மை கீறிக்கிழிக்காமல் இன்பம் தனை அள்ளித்தந்து செல்லும் கவிதை நடை அழகே! அழகு!.

crown said...

நுனுக்க உணர்வுகளையும்
மினுக்கக் கனவுகளையும்
துனுக்குத் தோரணங்களையும்
திணித்துவைத்த அனு...கவிதை!
------------------------------
கவிகருவின் அனுவை பிளந்து , நுன்னறிவுடனே சொல்ல வந்த கவிஉலகின் விஞ்ஞானியாய் எங்களுக்கு நீங்கள். வாழ்வின் உணர்வுகள,எண்ணங்களை ,பின்னும் கணவுகளை,பின்னி எழுத்தில் எழுதி எம்மை ஆட்கொள்ளும் வித்தை கற்றதெப்படி?

crown said...

கலைத்துப் போட்ட
பொம்மைகள்
குப்பை யென்றால்
அடுக்கி வைத்த கண்காட்சி...கவிதை!
------------------------------------------
இங்கே கொலுவீற்றிருக்கு உங்களின் சொல்(கவி)ஆட்சி!
அவையாவும் அருமையான கண்காட்சி! மனசாட்சியைத்தொட்டு சொல்கிறேன், என்னையும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாய் ஆட்டி வைத்த உண்மை தான் உங்கள் கவிதை.(இந்து மத சகோதர,சகோதரிகள் பொம்மையெல்லாம் வைத்து கொலுவைப்பார்கள்)இங்கே கவிதை நல்ல கொழுத்து(சுண்டல் நிறைய திண்ணு இருக்கலாம்) செழித்து இருக்கு கொழு,கொழுவென!

crown said...

உதறிய பூக்களும்
சிதறிய இதழ்களும்
கூலமென்றால்
கோர்த்தெடுத்த மாலையே…கவிதை
------------------------------------------
சிலர் ஜால்ராக்க்ளை வைத்து கவிஞரென குப்பை கொட்டிகொண்டிருக்கும் போதில். குப்பையையும் கவியாக்கம் செய்யும் வித்தை முன் நான் எல்லாம் எப்படி குப்பை கொட்ட முடியும்?உங்களின் வார்தை பூக்களின் கவிதை மாலை வாசம் வீசுது அதிரை நிருபரிலும் வாசகர் மனதினிலும். அருமை.சில உதிரி பூக்களை கொண்டுதான் நாங்கள் பாக்கள் செய்ய முயல்கிறோம். தோட்டதையே மாலையாக்கும் உஙகள் திறமை எமக்கும் வாய்குமா? அல்லாஹுக்கே எல்லாப்புகழும்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பிற்குரி சபீர் காக்கா;

மேகத்தைப் பார்த்ததும் வலுவான மழை கொட்டும் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் உங்கள் கருப்பனை என்னும் மேகத்தால்.
கவிதை என்னும் மழைத்துளிகளை கண்டு வியந்து
போனேன். அவற்றில் சிந்தாமல் பிடித்த துளிகள்.

//உனக்குள் உருவாகும்
உள்ளத்து உணர்வுகளை
உள்ளது உள்ளபடி
உளராமல் உரைத்தால்…கவிதை! //


// வாசிக்கத் திணற
கவிதை பாரமுமில்லை
வார்த்தைகளுக்குள் அடங்க
கவிதைக்கு நேரமுமில்லை.//

ஜஜாக்கல்லாஹ் கைர்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//கவிதையில் மட்டுமே…
வார்த்தைகளுக்கு வாய் முளைக்கும்
வாசிப்பவருக்கு வாய் பிளக்கும்//

ஆமாம் காக்கா, அதான் நான் மாட்டிக் கொண்டேனோ!

Yasir said...

கிரவுன் என்ற மழையின் இன்ப சாரலில் நனைந்து கொண்டு இருக்கின்றோம்....படிக்க ப்டிக்க சுகம்...மாஷா அல்லாஹ் எப்படி இப்படியெல்லாம்....

crown said...

அத்தனை பிள்ளைகளின்மேல்
அன்பிருந்தாலும்
செல்லப் பிள்ளையே….கவிதை!
--------------------------------------
இது உண்மையான ஒரவஞ்சனை! இதில் எல்லா தாய்களும் கவிதையை நன்றாக ரசித்தாய் அள்ளவா ஒரு ரசிகையாக! உண்மையை சொன்னால் ஏன் வேர்கிறது விசிறிகளுக்கு?

crown said...

கவிதை…
எழுதியவர் பிரசவித்தபின்
வாசிப்பவர் கருவுறும் விந்தை.
----------------------------------------
ஐயா! கருவமுறுகிறோம் உமைபார்த்து! கருவுரும் சூலாகும் சூழ்னிலை எல்லா பருவ நிலையிலும்.

Yasir said...

இடைவிடாமால் பேயும் இன்ப மழை கிரவுன்.....அடைமழையாக இருந்தாலும் உள்ளத்தை துள்ள வைக்கும் மழை கிரவுன்.....திறமைவாய்ந்த கிரவுனே.....மொழி உனக்காக வளைகிறாதா...அல்லது நீ வளைத்து வளைத்து எழுதுகிறாயா...மொழியை இப்படி பணியவைத்து எழுதுகிறாயே ...அது என்ன உன் காதலியா அல்லது அடிமையா

crown said...

கவிதை…
காட்டாறு எனினும்
வரம்புகளுக்குள் ஓடுமொரு முரண்பாடு.
----------------------------------------
வரப்புக்குள் ஓடும் நீராகவும் கவிதை இருக்கிறது. நீர் உயர வரப்புயரும் வரப்புயர , சொல்( நெல்) மணியாய் கவிதை மணி வளரும்
பின் நெல்மணி வளர்ந்து வயிற்றுக்கு ஈயப்படுவதுபோல் ,கவிதை மணி சொல்லாக செவிக்கும், கண்களுக்கும் விருந்தாகவும் ஈயப்படும்.கவிதை அதனால் தான் என்றும் பசுமையாய் இருக்கிறது, உணவாய் ருசிக்கிறது.வரப்புக்குள்வளரும் நெல் மணி போல் ஒரு வித வரைமுறைக்குள் வளரும் கவிமணிதான் அது(சிர்க் இல்லாத கவிதை)

crown said...

கவிதை…
கதையோ கட்டுரையோவல்ல
வரி வரியாய் வாசிக்க,
வரிகளுக்கிடையே வாசிக்கப்படும் வசியம்.
--------------------------------------------
ஆமாம் வரிகள்களுக்குள் (எ) நமை இழுக்கும் வசீகரம்.அவசியம் வாசித்து விட்டுதான் மருவேளை என எமை வசியபடுத்தும்,மசிபோட்டதுபோல ஒரு மயக்கம்.(மசி- மைபோடுதல்)

crown said...

கவிதையில் மட்டுமே…
வார்த்தைகளுக்கு வாய் முளைக்கும்
வாசிப்பவருக்கு வாய் பிளக்கும்.
---------------------------------------------------
கண், காதும் முளைக்கும் ஒரு போதும் இதயம் பறிக்காமல் செல்லாது நல் கவிதை.மெய்யாகவே மெய் மறக்க செய்யும் நல் கவிதை.பொய் அழகாய் சொன்னாலும் பொய் பொய் தான் . நான் கேட்க நினைபதெல்லாம் மெய் சொல்லும் மெய் கவிதை. காரணம் வாய்மையே வெற்றி பெரும். மெய் சொல்லும் கவிதை வாய்கா(து?)தா என ஏங்கும் எம்மை போன்றோருக்கு உங்கள் கவிதை உணர்வுகளின் வடிகாள்(ல்), வார்தை ஓடும் கால்வாய். நம்பிக்கை தரும் கவிதை.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
--------------------------------------------

//கவிதையை கவிதையால் காட்டியது.
வைரத்தை வைரத்தால் அறுப்பது//

கிரவுன்,
உங்கள் கவிதைக்குப் பின்னூட்டமாகத்தான் “கலைத்துப் போட்ட பொம்மைகள் குப்பை எனில், அடுக்கி வைத்த கொலுவே கவிதை” என்று துவங்கி (கொலுவை மாற்றச்சொல்லி அ.நி. கட்டாயப்படுத்தி ‘கண்காட்சி’ யானது) கொஞ்சம் வளர்ந்துவிடவே... தனிப் பதிவாக்கியாயிற்று.


//வார்தையை வசப்படுத்தி
எம்மை பரவசப்படுத்த//

உம்மைப் போன்ற மொழி வசப்படுத்தும் சிலர் வசப்படுவதே எமக்குப் பரவசம்.

//எல்லை தாண்டா வருனனை
சிர்க்கில் சிக்கா கற்பனை/

இந்த இரண்டும் இருந்தால் போதும். பின்னிக்கொடுத்தால், ரிப்பன் கட்டி ரெட்டை ஜடை மடித்து அழகு பார்த்துவிடும் இந்த அதிரை நிருபர்.

//வந்த கவி உலகின் விஞ்ஞானியாய்//

...கவனம், காதர் கைகளில் சாட்டை !


//கவிதை நல்ல கொழுத்து
செழித்து இருக்கு கொழு,கொழுவென! //

கிரவுனுரையும் அதற்கு சளைத்ததல்லவென்று நிரூபித்துக்கொண்டிருக்கு…

- சபீர்

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

/// உனக்குள் உருவாகும்
உள்ளத்து உணர்வுகளை
உள்ளது உள்ளபடி
உளராமல் உரைத்தால்...கவிதை!///
*******************************************************************

உள்ளது உள்ளபடி
எந்தப்பொய்யும் கலக்காமல்
உரைத்தால் கவிதை! கவிதை

//// கவிதை...
காட்டாறு எனினும்
வரம்புகளுக்குள் ஓடுமொரு முரண்பாடு. ////
*******************************************************************

கவிதை
காட்டாறுதான்!
ஒரு வரம்புகளுக்குள்
ஓடுவது மூமின்களுக்கே
உரிய பாதுகாப்பு!

கவிதைக்கு விளக்கம் தந்த அதிரை கவி சபீருக்கு வாழ்த்துக்கள்!

crown said...

கவிதையில் மட்டுமே
காகிதங்கள் கருவுறும்
காரியங்கள் உருப்பெறும்
-------------------------------
ஆக சில புஷ்டி லேகியம் எனும் தாதும் கருவுருதலில்
காரியம் ஆற்றுவதுபோல் மையும் காகிதத்தில் கருவாய் காரியம் ஆற்றும்.

crown said...

வானவில்லை மொழி பெயர்த்தால் கவிதை!
வாசமுல்லை வழி வாய்த்தால் கவிதை!
கானகத்துக் குயில் பாட்டும்
காமமற்ற காதலும்தான் கவிதை!

தேசிய கீதமும் கவிதை
நேசிக்கும் பாஷையும் கவிதை
சாரள வெளிச்சமும் கவிதை
சூரியப் பிரவாகமும் கவிதை.
--------------------------------------

கானும் பொருள் யாவும் கவிதையாகி போனதனால், நீர் கானும் நானும் கவிதையா? விளக்குவீரோ?கவிதையாய் இருப்பது சுகமென்றால் கவிஞாய் இருப்பது இன்ப அவஸ்தையா? கரு கொண்ட கருத்தை பிரசவிக்கும் முன்னும் பிரசவித்த பின்னும்???(இங்கே பிரசவித்த பின் கத்திரி போடும் அபுஇபுறாகிம் காக்கா போன்ற கண்கானிப்பாளர்கள்)

crown said...

மின்மினி வெளிச்சமும் கவிதை
மின்னாத இருளும் கவிதை
சொல்லிய வார்த்தைகளும் கவிதை
சொல்லாத வெற்றிடமும் கவிதை
----------------------------------------
மின்மினி வெளிச்சம் கவிதைதான் ! மின்னாத வெளிச்சதில்தான் நம் குழந்தை கவிதையும் பிறக்கும் மூலம். மழலையும், மங்கையும் சொல்லிய, சொல்லும் வார்த்தையும் கவிதைதான்.சொல்லாத வெற்றிடம் மொளன கவிதையா? நல்ல தொரு கற்பனை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…
//கவிதையில் மட்டுமே…
வார்த்தைகளுக்கு வாய் முளைக்கும்
வாசிப்பவருக்கு வாய் பிளக்கும்//

ஆமாம் காக்கா, அதான் நான் மாட்டிக் கொண்டேனோ!///

தம்பி MHJ: இல்லை இல்லவேயில்லை....

நான் ஏற்கனவே கருத்திட்டதையே இங்கேயும் பதிகிறேன் "அவரவார் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மட்டும் நன்கறிவான்ன்"

அல்லாஹ் எண்ணங்களைத்தான் பார்க்கிறான், ஆதால் தாம் எழுதியது அந்நோக்கில் இல்லை என்பது தின்னம் இது எல்லோருக்குமே தெரியும் !

அதுவல்ல அங்கே கிளப்பியது இதனைத் தொடுத்து வேறுயாரும் பிழைகண்டேன் என்று பிடிவாதமெடுக்க வாய்ப்பிருந்ததால் தமது கருத்தை கண்டதும் கைபட்டது அங்கே.

எல்லாம் நன்மையை நாடியே ! கவிதைக்கு தடம் போட்டிருக்கும் இந்தக் கவிதை யாவரையும் எழுத வைக்கும் நோக்கு உள்ளிருப்பதால் உமது கவி(யும்) தடவிட வரட்டுமே எங்கே ? எங்கே ? எங்கே ?

sabeer.abushahruk said...

//என்னையும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாய்//
ஆமாம், தஞ்சாவூருக்கு அடையாளம் தலையாட்டி பொம்மைதான். எங்கள் எழுத்துக்கான அங்கீகார அடையாளம் உங்கள் தலையாட்டல்கள்தான்.
 
//நான் எல்லாம் எப்படி குப்பை கொட்ட முடியும்//
..குப்பையாகவே நினைத்தாலும் கொட்டுவதை நிறுத்த வேண்டாம் சகோதரா. அவை குப்பையா அல்லது எண்ணங்களின் கருப்பையா என பொருக்கும் நாங்கள் முடிவு செய்துகொள்கிறோம்.
 
//எல்லா தாய்களும் கவிதையை
நன்றாக ரசித்தாய்//
ம்ம்ம் வாழ்கிறதையா தமிழ் உம்மோடு, ஒரு வசீகரத் துணையாக.
 
//உண்மையை சொன்னால் ஏன் வேர்கிறது விசிறிகளுக்கு?//
..அதானே. காற்று திசை மறுகிறாதா?
 
//கருவமுறுகிறோம் உமைபார்த்து//
கைகோர்த்துக்கொண்டபின் தனியாய் நிறுத்தி கர்வமுறுதல் தகுமோ?

crown said...

வட்டத்துக்குள் அடங்க
ஆரமல்ல கவிதை
மாதத்துக்குள் முடிய
வாரமல்ல கவிதை
----------------------------------------------
வாசகர் வட்டத்துக்குள் அடங்கும் கவிதை!மாதத்தில் முடியும் வாரமல்ல அது கற்பனை உரம் போட்டு வளரும் மரம்.அது கவிதைக்கு கிடைத்த வரம். அதனால்தான் ஆரமில்லாமல், வாரமுமில்லாமல் ஆராவாரமாய் ஆக்கிறமிக்கிறது எம்மை.

sabeer.abushahruk said...

//இடைவிடாமால் பேயும் இன்ப மழை கிரவுன்.....அடைமழையாக இருந்தாலும் உள்ளத்தை துள்ள வைக்கும் மழை கிரவுன்.....திறமைவாய்ந்த கிரவுனே.....மொழி உனக்காக வளைகிறாதா...அல்லது நீ வளைத்து வளைத்து எழுதுகிறாயா...மொழியை இப்படி பணியவைத்து எழுதுகிறாயே ...அது என்ன உன் காதலியா அல்லது அடிமையா//
 
...இப்படிக்கு சபீர்.
(நன்றி:யாசிர்)

crown said...

வாசிக்கத் திணற
கவிதை பாரமுமில்லை
வார்த்தைகளுக்குள் அடங்க
கவிதைக்கு நேரமுமில்லை.
-------------------------------------
எம்மை போன்றோர்கள் உங்கள் கவிதையின் பாரத்தை எழுதில் தாங்க முடியாது அவ்வளவு புஷ்டியாக இருக்கு, நிறைய தழிழ் எனும் விட்ட மீன் விடாமல் சாப்பிடனும்.ஆமாம் எப்படி எழுதினாலும் வசப்பட மருக்கிறது நாழிகைதான் கடக்கிறது நால் கால் பாய்ச்சலா? ? அல்லது நாளு கை பாய்ச்சலா?

crown said...

எது கவிதை?
கரம் கொண்டு விதைத்தால்
மரம்
கருவிதை விதைத்தால்
கவிதை!!!
---------------------
அதான் நன்கு செழித்து வளர்ந்து இன்ப நிழல் தருகிறதே! நீங்கள் நடும் ஓவ்வொரு கவிதை செடியும் பெரிய மரமாக! வாழ்துக்கள்.

sabeer.abushahruk said...

MHJ:
இறைவன் எழுத்தையல்ல எண்ணங்களைப் பார்க்கிறான். இணைவைக்கும் எண்ணம் உமது நிழலுக்குக்கூட கிடையாது என்பதை 
அறிந்துதான் நான் கண்டுகொள்ளவில்லை.

கிரவுன்கூட தர்க்கத்திற்கு வழிவகுக்க வேண்டாம் என்றே நீக்கச்சொன்னார். அபு ஈசாவும் ஒரு அறிவிப்புத்தான் செய்தார். எல்லாம் நண்மைக்கே. நெருடல் வேண்டாமெயென்றுதான் அ.நியும் ஆக்க்ஷன் எடுத்தது.

நீங்களும் கண்டு கொள்ளாதீர்கள். as simple as that?

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சபீர் காக்காவின் சடைக்காத கவிதைகளும்.
நண்பன் தஸ்தகிரின்.தரமான கருத்துக்களும்
என் மனங்களை மலர்ச் செய்கின்றன.

இருவருக்கும் வாழ்த்துக்கள்!

அபு ஆதில் said...

கவிதை…
எழுதியவர் பிரசவித்தபின்
வாசிப்பவர் கருவுறும் விந்தை.
--------------

வானவில்லை மொழி பெயர்த்தால் கவிதை!
வாசமுல்லை வழி வாய்த்தால் கவிதை!
கானகத்துக் குயில் பாட்டும்
காமமற்ற காதலும்தான் கவிதை!
----------
வாழ்த்துக்கள் சகோதரர்களே(உங்கள் கவிதையோடு சகோ,கிரவுனையும் பிரித்து பார்க்க முடியவில்லை.)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அன்பு நெ.த&சபீர் காக்கா:சலாம்,மேலான கருத்துகளுக்கு நன்றி.மேலும் நான் பொதுவில் பதிலளித்து மேலும் சர்ச்சை என்ற பேச்சே வரக்கூடாது என்பதற்காகத்தான் தனி மின்னஞ்சலில் அனுப்பினேன்.அதற்கும் உடனடி பதிலுக்கும் மிக்க நன்றி.

கவிதைக்கே கவிதை எழுதி கலக்கு கலக்கி விட்டீர்கள்.மிக அருமை காக்கா.

மேலும் சாமத்தில் வரும் க்ரவ்ன் உங்க கவிதைக்கு வெளிச்சத்திலேயே வந்து விளக்க மழை பொழிந்தது கூடுதல் கொண்டாட்டமாகி விட்டது!

sabeer.abushahruk said...

இன்னும், வாசித்துக் கருத்திட்ட எம் ஹெச் ஜே, அப்துல் மாலிக், யாசிர், லெ மு செ, அபு இபுறாஹீம், அபு ஆதில், அபு ஈசா, அலாவுதீன் ஆகியோருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

கவிக்காக்காவின் கவிதையில்
காந்தமின்றி கவரப்பட்டோம்
வார்த்தைகளின்றி வியந்துபோனோம்
சொல்லின்றி சந்தோசமடைந்தோம்

தொடரட்டும் உங்களின் கவி சாம்ராஜ்ஜியம்.

ஒட்டு மொத்த கருத்திடும் இடத்தை ஆளுங்கட்சியாய் இருந்து ஆக்கிரமித்துள்ள சகோ. கிரவுனுக்கு அடுத்த‌ ஆட்சி வரும் வரை ஆனந்தம் தான். பிறகு கருத்திடும் இடம் அபகரிப்பு என்று பல புகார்கள் உங்கள் மீது வந்துவிடப்போகிறது? பார்த்துக்கொள்ளுங்கள் ஆமாம்.....

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இனிக்கிறது இஸ்லாம் என்று மட்டும் அறிவித்துவிட்டு 'எது கவிதை' என்ற என்றதையும் போனஸாக வானில் ஒலித்திவிட்டார்கள்.இரு கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.உங்க கவி ராஜ்யம் வானிலும்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி MJH : ஆம்... இன்ப அதிர்வுகள் "எது கவிதை"யும் வாசித்து அசத்தி விட்டார்கள் !

கவிக் காக்கா மற்றும் தம்பி கிரவ்னுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் !!

Unknown said...

"உள்ளத் துள்ளது கவிதை - இன்ப
உருவெ டுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெளிந்து ரைப்பது கவிதை."
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

sabeer.abushahruk said...

கவிமணி கருதிய தென்றாலும் - காக்கா
கருத்தென இட்டது கவிதை!
அகமது ஆசான் வாசித்ததால் - என்
அகமது மகிழ்வதும் கவிதை!

sabeer.abushahruk said...

நகமது விழுந்தால் பிடி தளரும்
அகமது எழுந்தால் மொழி தளைக்கும்
முகமது காக்காவின் இளவலது
முகமது நிலைக்கும் ஆடி எம்மனது!

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

சகோதரர் கவி சபீர் அவர்களுக்கு,

மாஷா அல்லாஹ் !

மழலைக்கும் கவிதை எழுத காடித்தந்த கவி நீங்கள், மகளிரும் இனி எழுதலாம் இனிய இஸ்லாம்ம் கவிதை போல் என் மார்க்கம் சொல்லும் நல் வழிதனை.

கோடு போட்டுத் தந்திருக்கிறீர்கள், இனிமே நாங்கள் அதன் மேல் வரிகளை அடுக்கி கவிதை என்று உங்கள் முன்னாள் நிற்கலாம்.

மிகவும் அருமை சகோதரரே!

வாழ்த்துக்கள்

crown said...

sabeer.abushahruk சொன்னது…

நகமது விழுந்தால் பிடி தளரும்
அகமது எழுந்தால் மொழி தளைக்கும்
முகமது காக்காவின் இளவலது
முகமது நிலைக்கும் ஆடி எம்மனது.
------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சபீர் காக்கா நலம்மறிய ஆவல்.சாச்சா அஹமது முகமது நிலைக்கும் ஆடி என் மனதும் கூட. நம் எண்ணங்களை பிரதி பலிக்கும் கண்ணாடி இதயத்தில் வீற்றிருக்கும் அரசரல்லவா அவர்.அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளையும் , சகல உடல் ஆரோக்கியத்தையும் தந்தருள்வானாக. ஆமீன்.

Anonymous said...

எது கவிதை ?
நல்ல
இது கவிதை !

நானும் எழுதிட்டேனா ?

கவிதை எழுதியவர் கவிஞராக இருக்க முடியாது, கவிஞர்களை உருவாக்கும் கலை வல்லுனராக இருக்க வேண்டும்.

ஆச்சர்யம், அசைவற்றிருக்கும் மரத்தை கூட சலசல வைக்கிறது உங்களின் வரிகள், நிலைகொண்டிருக்கும் கல்கூட சித்திரமாக தெரிகிறது அங்கே உங்கள் வரிகளை எழுதிப் பார்க்கும்போது.

EXCELLENT அதிரைக் கவி, அதிரரநிருபர் ஆஸ்தான கவி, as usual my friend calling you கவிக் காக்கா இன்னும் நிறைய பெயர்கள் தேடிவரும் கடவுளின் ஆசீர்வாதம் தொடரும்.

வாழ்த்துக்கள்.

ஆஷா

sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

'எது கவிதை' என்கிற தேடலில் என்னுடன் இணைந்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

பின்னூட்டங்களில் ஒரு விஷயத்தை நான் கவனித்தேன். அஃதாவது, மற்ற பதிவுகளுக்குப் பின்னூட்டம் எழுதும்போது தட்டையாக எழுதும் அன்பர்கள்கூட கவிதைக்குப் பின்னூட்டமிடுகையில் அழகாகவும் சுவையாகவும் நேர்த்தியாகவும் எழுதுகின்றனர்.

(உ.: நிலைகொண்டிருக்கும் கல்கூட சித்திரமாக தெரிகிறது அங்கே உங்கள் வரிகளை எழுதிப் பார்க்கும்போது.)

இன்னும் கொஞ்ச்ச்சம் முயன்றால் கவிதை கைவசம். 

அடுத்த சந்திப்பு வரை...

"புள்ளி வைத்தால்கூட அதனுள்
ஒல்லியாகவாவதொரு செய்தி
சொல்லி வைப்பதே...கவிதை!
wassalaam!!!

Unknown said...

கலைத்துப் போட்ட
பொம்மைகள்
குப்பை யென்றால்
அடுக்கி வைத்த கண்காட்சி...கவிதை!

உதறிய பூக்களும்
சிதறிய இதழ்களும்
கூலமென்றால்
கோர்த்தெடுத்த மாலையே…கவிதை!

-----------------------------------------------------------------------------------
இதுதான் இதேதான் என் பார்வையில் கவிதை என்பது.
சிதரிகிடப்பதை சிங்காரிபதே கவிதையாகும் என் பார்வையில் .
கவிதைக்கு கவி எழுதிய சபீர் காக்கவிற்கு வாழ்த்துக்கள் ....

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு