Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இன்று ஒரு தகவல்... ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | July 27, 2011 | , ,


எலக்ரிக் ஈல் - Electric eel (Electrophorus electricus)
தொகுத்து வழங்குபவர் நம்ம "அதிரைப்பட்டினத்தார்"

சும்மா பேர பார்த்ததும் என்ன இது எலெக்ரிக் ஹார்ட்வேர் ஐட்டம் என்று நினைத்து பல்லை ஈண்டு கண்டு பிடித்துவிட்டேன் என்று காட்டுபவர்கள் தலைல ஒரு குட்டு போட்டு கொள்ளலாம். இது என்ன தெரியுமாங்க? நம்ம ஆட்கள் ஆனத்துல புளி ஊத்தி இருந்தாலும் புளியானமும் (புளி உடம்புக்கு நல்லது அல்ல என்பது நம்மூர் ஆட்களுக்கு புளிப்பான விசயம் ) வீட்ல வைக்க சொல்லி இரண்டையும் குழைத்து சாப்பிடும் மீன் (ஆன) வகையில் உள்ள ஒரு வகை மீன்தாங்க. கொஞ்சம் நில்லுங்க!!! ஒமல தூக்கிட்டு எங்கடா கிடைக்கும் என்று கிளம்பிடாதிங்க இது சாப்பிட கூடிய மீன் அல்ல மாறாக ஷாக் கொடுக்க கூடிய மீனுங்கோ.


சிலபேர் நாம எப்படி பால் போட்டாலும் சிக்ஸர் அடிப்பானுங்க…. ஒரு வார்த்தை சொன்ன அதை ரெண்டா பிரிச்சு அதலேருந்து ஒரு கேள்வி கேட்பானுங்க…. அவங்க அறிவாளிகள் அல்ல அறிவு இருப்பது போல் பாம்மாத்து காட்டுறவனுங்க.. சரி வாங்க விசயத்துக்கு வருவோம் அதேபோல இந்த மீனே எங்கே ,எப்படி தொட்டாலும் ஷாக் அடிக்கும்ங்க.

இது அல்லாஹ் அதுக்கு கொடுத்த சுயபாதுகாப்பு அம்சம்ங்க எப்படி நம்மை ஒருவர் பொரடில தட்டின கெட்ட கோபம் வருமோ (கோபமே கெட்டதுதானே) அதப்போல இந்த மீனுக்கும் வந்து ஒரு மின்சாரத்தை தன்னை தாக்கவரும் எதிரிக்கு கொடுக்குமாம்.

இது சுவாசிப்பது கூட நாமெல்லாம் முக்குளி தாரா பிடிக்க மூச்சே தம் கட்டிக்கிட்டு தண்ணிக்குல போய் முக்குளி தாரா பிடிக்கிறேண்டு பலபேர் மூக்கையும் ஒடச்சிருப்போம், ஆனா இந்த மீன் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை தண்ணிக்கு மேல வந்து வெளிக் காற்றை (ஆக்சிஜனை) ஒரு தம் பிடித்துவிட்டு மீண்டும் கடலுக்கடியில் சென்று விடுமாங்க. தண்ணில உள்ள ஆக்சிஜனை மற்ற மீன்களைபோல் இதனால் சுவாசிக்க முடியாதாம் அதனால்தான் இப்படி அல்லாஹ்வின் படைப்பே ஒரு குதரத்துதாங்க.

தாக்க வரும் எதிரியை தாக்கும் தன்மையை பொருத்து இந்த மீன் எலக்ட்ரிக் ஷாக் கொடுக்குமாம். ரொம்ம நல்ல மீனா இருக்கேண்டு நினைக்காதீங்க…இதன் ஷாக் 500 வோல்ட்ஸ்ஸாம் 1 ஆம்பியரும் இருக்குமாங்க. ஒரு வயது வந்த மனிதனுக்கு 0.75 ஆம்பியர் கரெண்ட் கொடுத்தா (கவிக்காக்கா கன்ஃபார்ம் ப்லிஸ்) அம்போண்டு போயிருவான் (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்)…ஆகையால் இந்த மீனின் மீது கை, கால், விரல் வைத்தவர்கள் காலியாவது நிச்சயம்.

முக்கியமான விசயத்த விட்டுட்டோமே யாரவது தமிழ்நாடு அரசியல்வாதிங்க கிட்டே இதைப்பற்றி சொல்லிடாதீங்க…அதுவேர அடுத்த தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு வீடு ஓரு எலெக்ரிக் ஈல் மீன் இலவசமாக தரப்படும் உங்கள் பவர்கட் பிரச்சனை ஒழிக்கப்படும் என்று கிளம்பிடபோறானுங்க.


நன்றி : எனக்கு சிறுது ஓய்வு கொடுத்த வேலைக்கு ; Wikipedia மாமாவுக்கு

- முகமது யாசிர்

22 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோ: யாசிர்
எந்த கடலிலே ஈக்குதுண்டு விக்கிபிடியா மாமாட்டே கேட்டுசொல்லுங்க.அதே புடிச்சிக்கிட்டு நம்மூர் ஈபிக்கு போய் கெரண்டு ஒழுங்கா உடலண்டா பில்லு கட்டமாட்டோம்ண்டு அவங்களுக்கு ஷாக் கொடுக்கலாம்.

தகவல் தந்தமைக்கு சுக்குரன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

லுவா காப்பி குடிக்க சொல்லீட்டு, இதெ சாப்புடாதியோ சாக் அடிக்கும் என்கிறீர்கள்.
புதிரான தகவல்.
வாழ்த்துக்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி யாசிரின் பதிவுகளில் புதுசா ஒரு தகவல் இருக்கும் அதுவும் பத்திரிக்கைகள் வாசித்துக் கொண்டிருக்கும்போது ஏதோ ஒரு பக்கத்தில் கட்டம் போட்டு ஒரு தகவல் இருக்குமே அதேபோல் யாசிர் என்று ஆக்கம் கண்டால் அங்கே புதுத் தகவல் இருக்கும் என்று உருதியாகச் சொல்லலாம்.

அந்த மீனை வைத்து மின்சாரம் கிடைக்கா விட்டாலும் மீன் சாறாவது செய்ய முடிந்தால் விட்டா வைத்திருபபார்கள் மீன் வேட்டைக் காரர்கள் !!

நல்ல பதிவு மட்டுமல்ல, இதேபோல் விக்கி மாமாகிட்டேயிருந்து தேடித்தாருங்கள் எங்கள் நேரம் வேறுபக்கம் கவணத்தில் இருக்கும்போது (ஸ்கூல்ல படிக்குபோது படி படின்னு சொல்லும்போது கடி கடியா தெரிந்தது ஆனா இப்போ அவ்வ்ளோ படிக்கிறோம்லா :))

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

சகோதரர் யாசிர்: இந்த மீனை இறக்குமதி செய்து ஆளுக்கு ஒன்று கொடுக்கலாம். இதை வைத்து நமக்கு தொல்லை தருபவர்களுக்கு ஷாக் கொடுக்கலாம். நன்றாகத்தான் தேடியிருக்கிறீர்கள் எலெக்ரிக் ஈலை - - விக்கிபீடியா மாமாவிடம்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சுவராஸியமே உன் பெயர் என்ன யாசரா? யாசிரின் எழுத்தும் தேடலும் ஒரு தலைசிறந்த படிப்பாளி என்பதை ஒவ்வொரு தடவையும் பறைசாற்றும். மீ(ன்)ண்டும் நல்லதொரு பதிவு.வாழ்துக்கள் சகோதரரே!.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------------

sabeer.abushahruk சொன்னது…

யாசிர்,

ஜாகிரிடம் சமீபத்தில் ட்ரைனிங்க் ஏதும் எடுத்தீங்களா, காமெடி கலக்கலா வருதே எழுத்தில்? மீனைப்பற்றி வெடுக்கே இல்லாமல் சூப்பரா சொல்லியிருக்கிறீர்கள்.

எத்தனை (ஆம்பியர்) கரன்டையும் குறைவான அழுத்தத்தில் (வோல்டேஜில்) கொடுத்தால் ஒன்னும் ஆஹாதுன்னுதான் நினைக்கிறேன். விளக்கமா பிறகு சொல்றேன்.

கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் வேற வேற கரன்ட்டில் ஷாக் அடிச்சதால கீழே உள்ள மாதிரி புழம்பினதுதான் நல்லா நினைவிருக்கு:

அன்பே
நாம்
லவ் சர்க்யூட்டை
சரியாகத்தானே போட்டோம்
பிறகு ஏன்
உன்னைத் தொட்டால்
ஷாக் அடிக்கிறது?

crown said...

அன்பே
நாம்
லவ் சர்க்யூட்டை
சரியாகத்தானே போட்டோம்
பிறகு ஏன்
உன்னைத் தொட்டால்
ஷாக் அடிக்கிறது?
----------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். காதலியாய் இருக்கும் போது ஷாக் அடிப்பார்கள். சம்சாரமாய் போனால் மின்சாரமாய் இருப்பார்கள். மொத்தத்தில் எல்லை தாண்டாமல் இருக்க ஒரு இன்ப ஷாக். இவர்கள் பவராக இருப்பதால் தான் குடும்ப விளக்கு எரிகிறது இல்லை யென்றால் நம் வாழ்வு பியூசாகி நம் வாழ்வில் இருள் சூழும். எனவே அந்த மின்சார அதிர்வு அவசியமே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அடக் கிரவ்ன்(னு): கலக்கல(டா)ப்பா !!

ஷாக் அடித்திருப்பது
மின்சாரமாய் தொடர்வதும்
பவர் கையில் எடுப்பதும்
குடும்ப விளக்கை ஏற்றிட !

ஆஹா இல்லை என்றால் மின் தடை வருமேயானால், இருட்டு... !

சூப்பரப்பூ !!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு நண்பர் யாசிர்,

புகைப்படங்களை கிளிக் செய்ததும் ஏதோ ஷாக் அடித்த பீலிங்ங்...

புதிய தகவல் தந்தமைக்கு மிக்க நன்று

இன்று ஒரு தகவல் என்றும் தருக யாசிரே..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

விக்கிப்பீடியா மாமா என்பதைவிட விக்கிப்பீடியா தாத்தா என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் :)

sabeer.abushahruk said...

//விக்கிப்பீடியா மாமா என்பதைவிட விக்கிப்பீடியா தாத்தா என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் :)//

யாசிர், ஏனாம்? என்னவோ விக்கிபீடியாவுக்கு ஒரு மகள் இருப்பதுபோலவும் அதுக்கு தாஜுதீன் மேல இரு சாஃப்ட் கார்னர் இருப்பதுபோலவும் நாமெல்லாம் மாமானு கூப்பிட்டா எல்லோருக்கும் மச்சியாகிவிடுமேனு பயப்படறமாதிரியுமுல்ல தெரியுது?

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மாஷா அல்லாஹ்! அல்லாஹ்-வின் படைப்புகளில் எராளமான அற்புதங்கள் பொதிந்து கிடக்கின்றது!

சடைக்காத எழுத்து நடை! சகோதரர் யாசிர் தொடர்ந்து எழுத வேண்டும்.

sabeer.abushahruk said...

ஒரு மின் கடத்தியில் ஓடிக்கொண்டிருக்கும் மின்சாரத்தின் அழுத்தத்தை வோல்டேஜ் என்ற குறிய்யீட்டில் அளப்பர். மின்சாரத்தின் அளவை ஆம்ப்பியரில் குறிப்பர்.

ஒரு காதலில் தோற்றவனோ கோழையோ உயிரை மாய்த்துக்கொள்ள விழைந்தால் கரன்ட் ஓடிக்கொண்டிருக்கும் மின் கடத்தியைப் பிடித்தால் அவன் உடம்பில் மின்சாரம் பாயத்துவங்கும். வோல்ட்டேஜின் அளவைக்கொண்டு  குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அவன் உடம்பில் பாயும் மின்சாரத்தின் அளவும் (அம்ப்பியரின் அளவு) கூடும் குறையும்.

110 வோல்ட்ட மின்னழுத்தத்திலிருந்து பாயும் அம்ப்பியரின் அளவைவிட 220 வோல்ட் மின்னழுத்தத்திலிருந்து கூடுதல் ஆம்ப்பியர் பாயும் டைம் ஃபேக்டர் கான்ஸ்டன்ட்டா இருக்கனும் பொருத்திப்பார்க்க.

எனவே, ஒரு குத்துமதிப்புக் கணக்கீட்டில் 0.75 ஆம்ப்பியர் மின்சாரம் 110 வோல்ட்டில் பாய்வதால் ஆளைக்கொல்லாது; தூக்கியெறியும். ஒரு 5 ஆம்ப்பியராவது வேனும் கொல்ல.

220 வோல்ட்ட் என்றால் 3ஆம்ப்பியராவது வேனும்.  380 வோல்ட்னா 1 ஆம்பியராவது தேவைப்படும் என்பது என் கணிப்பு.

சவுதிக்கரன்ட் ஆளைக்கொல்லாமல் ஒரொ fast beat பாட்டுக்கு நடனமாட வைத்துவிட்டு தூக்கிப்போட்டுடும்.(110v)

துபாய் கரன்ட்டு புதுசா கல்யானமான பொன்டாட்டி கையைப்போல கெட்டியாப் பிடிச்சிக்கும்; ஆனா ஆள சாச்சிப்புடும் அப்பு. (220v)

நம்மூர் கரன்ட்டு? எப்ப நம்மூர்ல ஒரு நிலையான வோல்ட் வந்திருக்கு? அதனாலதான் எல்லா மின் உபகரணங்களையும் கபளீகரம் செய்துவிடுகிறது.

 3 ஃபேஸ் கரன்ட் ஆளை எரிச்ச்டுமாக்குm.

உண்மையைச் சொன்னா, கணக்கீடுகள் மறந்துபோச்சு. ஒரு குத்து மதிப்புதான்.

இந்த மாதிரி நேரத்தில கூட வந்து நமக்கு விளக்கம் சொல்லலேன நாம தலைல தூக்கி வச்சிக்கிட்டு கொண்டாடும் என் ஏ எஸ் சார் ஒரு அட்டர் வேஸ்ட். 

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///நம்மூர் கரன்ட்டு? எப்ப நம்மூர்ல ஒரு நிலையான வோல்ட் வந்திருக்கு? அதனாலதான் எல்லா மின் உபகரணங்களையும் கபளீகரம் செய்துவிடுகிறது.///

நம்மூரில் கரண்டு !? = உம்மாவூட்டு கரண்டு , பொண்டாட்டிவூட்டு கரண்ட்ன்னு ஏற்றமிருக்கும்தானே !?

சந்தேகம் : அந்த பேட்டரின்னு ஒன்னு வச்சு ஃபேனை ஓட்டிக்கொண்டும் டியூப் லைட்டும் போட்டுகொண்டும் இருக்கும் கரண்ட்டை தொட்டால் ? என்ன நிகழும் ?

கவிக் காக்கா : KSA மற்றும் UAE மின்சாரம் சரியான சமாச்சாரம் ! ரசித்தேன் !

ஒரே ஒரு கவிதை வேனும், கண்டன்சரும், இன்வெர்டரும், ஜெனெரேட்டரும், பேசிக் கொண்டால் எப்படியிருக்குமென்று ! :)

Yasir said...

கருத்து சொல்லி எனக்கு உற்சாக,உத்வேக “ஷாக்” தரும் சகோதரர்கள் லெ.மு.செ அபுபக்கர்,எம்.எச்.ஜஹபர் சாதிக்,அபு இபுராஹிம் காக்கா,அலாவுதீன் காக்கா,பன்மொழி செல்வர் பாசமிகு கிரவுன்,கவிகாக்கா,அன்பு சகோதரன் தாஜூதீன்,சிந்தனைசெம்மல் அபு ஈஷா மற்றும் படித்து விட்டு ரசித்த/ரசிக்காத நண்பர்களுக்கும் எனது துவாக்கள்....

Yasir said...

பிச்சுகிச்சு படித்த எங்கள் கவிக்காக்காவின் “குத்து மதிப்பை” நான் ஏற்றுக்கொள்கிறேன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இந்த மாதிரி நேரத்தில கூட வந்து நமக்கு விளக்கம் சொல்லலேன நாம தலைல தூக்கி வச்சிக்கிட்டு கொண்டாடும் என் ஏ எஸ் சார் ////

NAS சார் சீக்கிரம் வாங்க இங்கே ஹெவி வோல்டேஜ் மின்சாராம் தாக்கிடும் அபாயம் உள்ளது....

மின்சாரத்தைல் மற்ற சமாச்சாரம் கலக்காம இருக்கனும்னா பிரேக்கர் வேனும்தானே, ஆக நீங்க வந்து பாடம் சொன்னாதான் இங்கே மின்சாரம் சீரா இருக்கும்போல !

அப்துல்மாலிக் said...

தெரிந்துக்கொள்ளவேண்டிய தகவல், நன்றி பகிர்வுக்கு

Meerashah Rafia said...

thanks for your marvelous sweet shock info..expecting these kind of high voltage useful info's..

Yasir said...

Thanks for your valuable comments brother Abdul Malick and Meerashah...

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சகோ. யாசிரின் இன்று ஒரு தகவல் அருமையான (ஷாக்) ஆக்கம். தாமதமான என் பின்னூட்டத்திற்கு கோவிச்சிக்கிடாதியெ..

இந்த மின்சார விலாங்கு மீனுக்கு அல்லாஹ் இயற்கையாக கொடுக்கப்பட்ட தற்காப்புகலையையும், விசித்திரத்தையும் படித்து வியந்து போனேன். சுபஹானல்லாஹ்..

எனவே என்னுடைய யோசனை என்னவெனில் இந்த மின்சார விலாங்கு மீனை கிடைக்குமிடத்திலிருந்து தருவித்து பாதுகாப்பான‌ நீர்த்தொட்டியுடன் நமதூரின் ஒவ்வொரு தெரு சங்கங்களுக்கும் இலவசமாக கொடுத்து (ஆண்/பெண்)யார், யாரெல்லாம் சின்னசின்ன பிரச்சினை மற்றும் தேவையற்ற சமாச்சாரங்களுக்கு டைவர்ஸ் வேண்டும் என்று வந்து நிக்கிறார்களோ அவர்களின் கைகளை இந்த மீன் உள்ள தொட்டியில் விடச்சொல்லி தண்டணை கொடுக்கலாம்.

இல்லை பெண் வீட்டின் சூழ்நிலைய‌றியாது வீடு க‌ட்டி வேண்டும் என்று அட‌ம்பிடிக்கும் மாப்பிள்ளை வீட்டின் சம்மந்தப்பட்டவர்களை நிறைய‌ மீன் உள்ள‌ பெரும் தொட்டியில் ஆளை அப்ப‌டியே இற‌க்கி விட‌ வேண்டிய‌து தான்...

எப்புடி நம்ம யோசனை???

(கொல்ற‌துலேயே குறியா ஈக்கிறான்யா......அப்ப‌டீண்டு யாரும் சொல்லிப்புடாதியெ....)

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n), மீனோடு இருக்கிறாயா இல்லை தீனோடும் வாழ்கிறாயான்னு கேட்கிறது நல்லாத்தானே இருக்கு !!!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு