இன்று அதிகாலை அதிரையிலிருந்து மஹேந்திரா வாகனத்தில் நான்கு அதிரை இளைஞர்கள் இராமநாதபுரம் சென்றிருக்கிறார்கள். ECR சாலை வழியாக சென்ற இவ்வாகனம் எதிர்பாராத விதமாக இராமநாதபுரம் அருகில் விபத்துக்குள்ளானது. பயனம் செய்தவர்கள் அனைவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர். உள்காயமடைந்த அதிரை மேலத்தெருவுக்கு அருகில் வசிக்கும் சகோதரர் ஜியாவுல் ஹக் அந்த விபத்தில் மருத்துவமணையில் மரணமடைந்திருக்கிறார். இச்செய்தி அதிரை மக்களை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மருத்துவரின் கவன குறைவு ?
விபத்து பற்றி அறிந்த அப்பகுதி பொது மக்கள் காயமடைந்தவர்களை அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர், அரசு மருத்துவர் உடனே முதலுதவி சிகிச்சை கூட அளிக்க மறுத்துள்ளார். விபத்து என்பதால் போலீஸ் கேஸ் பதிவு செய்த பிறகே சிகிச்சை அளிப்பதாக சொல்லி மறுத்துள்ளார். விஷயம் கேள்விபட்ட இராமநாதபுரம் தமுமுக சகோதரர்கள், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களை தொடர்பு கொண்டு விபரத்தை கூறியுள்ளனர். பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மாவட்ட மருத்துவமனையை தொடர்பு கொண்டு விபத்தில் கயமடைந்தவர்களுக்கு உடணடியாக சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தார்.
காயமடைந்தவர்களில் 3 பேருக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர், வெளிப்புற காயம் இல்லாமல் உள்காயத்துடன் தலையில் அடிப்பட்டு அவதியுற்ற சகோதரர் ஜியாவுல் ஹக் அவர்களை சிகிச்சை அளிக்காமல் வீட்டிற்கு செல்லும்படி மருத்துவர் கூறியுள்ளார். மருத்துவமனையை விட்டு வெளியில் வந்த சகோதரர் விபத்து பற்றி அங்குள்ள தமுமுக சகோதரர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே மயக்கமடைந்து கீழே சரிந்துள்ளார், மீண்டும் அவரை மருத்துவமனைக்கு உள்ளே தூக்கிச் செல்லும்போதே இவ்வுலகைவிட்டு அவரது உயிர் பிரிந்த்து. மரணம் இறைவனின் நாட்டமே என்றாலும் சிகிச்சை அளித்த மருத்துவரின் பொடுபோக்கான செயலும் அஜாக்கிரதையும் வருந்தத்தக்கது. இச்சகோதரரை இழந்து வாடும் குடும்பத்திற்கு அல்லாஹ் பொருமையை கொடுப்பானாக.
தமுமுக தலைவர் பேராசியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலையிட்டு இறந்த சகோதரரின் ஜனாஸவை உடனடியாக அதிரைக்கு கொண்டுவரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தேவிபட்டினம் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் சகோதரர் ஜியாவுல் ஹக் அவர்களின் ஜனாஸா எடுத்துவரப்பட்டு அதிரையில் இன்று (17-ஜூலை-2011) இரவு 10 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க உரிய ஆயத்தங்களை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களை கேட்டுக் கொள்கிறோம்.
ECR சாலையில் மட்டுமல்ல சாலை வழி வாகனப் பயணம் செய்யும் அனைவரும் மிக கவனத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும்.
வேகம் விவேகமில்லை...
தகவல் : அதிரை அப்துல் ஹாதி
16 Responses So Far:
இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்,
இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
மனிதமே இல்லாத மருத்துவர், சம்பந்தப்பட்டவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
"இன்னா லில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்"
மருத்துவரின் செயல் வன்மையாக கண்டிகத்தக்கது, ஏறெடுத்து கூட பார்க்காமல் அலட்சியப் படுத்திய அந்த பொடுபோக்கு மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் இதற்கு மனித்நேய மக்கள் கட்சி மற்றும் த.மு.மு.க.விரைந்து செயல்பட வேண்டும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்,
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.....
நாட்டில் இப்பொழுது மருத்துவம் படிக்கும் ஒவ்வொரு மருத்துவ மாணவர்களுக்கும் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்புடன் கட்டாயம் மனிதநேயம் (Humanity) சம்மந்தமாக ஒரு கோர்ஸ் படித்துக்கொடுக்கப்பட வேண்டும். அது படிக்கவில்லை எனில் படித்த மருத்துவப்படிப்பு செல்லாது என சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். விபத்தில் அடிபட்டவர்களுக்கு அருகில் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் ஜாதி, மத, இன வேறுபாடின்றி ஓடோடிச்சென்று அவர்களுக்கு எளிதில் முதலுதவியாய் உதவிடும் வண்ணம் நாட்டின் சட்டம் கட்டாயம் திருத்தப்பட வேண்டும். லோக்பால் சட்டம் போல் இதுவும் இன்றியமையாத ஒரு சட்டமாக்கப்பட வேண்டும்.
ஐரோப்பிய நாடுகளில் ரோட்டில் ஒரு பூனை குறுக்கே சென்று வாகனத்தில் அடிபட்டாலும் அதை சுற்றி (பேரிகேட்) தடுப்பு ஏற்படுத்தி வருவோர், போவோரெல்லாம் அழுது விட்டு செல்லும் நிலை அங்கே. மனிதன் விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தாலும் அவனுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தால் கூட அது போலீஸ் கேஸாகி விடுமோ என்ற அவல நிலை இங்கே.
போலீஸ் வரும் வரை நாம் காத்திருக்கலாம். ஆனால் விபத்தில் அடிபட்டவரின் உயிர் காத்திருக்குமா?
யோசிக்க மாட்டோமா?
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்,
இறந்த சகோதரரின் மறுமை வாழ்வுக்காக் இறைஞ்சுவோமாக இன்ஷா அல்லாஹ்...
இன்னா லில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்"
மரணம் அடைந்த சகோதரரின் மறுமை வாழ்வுக்கும் குடும்பத்தாரின் மன அமைதிக்கும் எல்லாம் வல்ல இறைவன் பிராத்திப்போம்.
உச்ச நீதி மன்ற தீர்பின் படி, விபத்துக்குள்ளானவர்களுக்கு உடனடி வைத்தியம் மருத்துவர் பார்க்கவேண்டும், பின்பு காவல்துறையின் கவணத்திற்கு கொண்டு செல்லுவது அந்த மருத்துவமனையின் பொறுப்பு
ஐந்து ஆறு வருடத்திற்கு முன்பே உச்ச நீதி மன்றாம் இது குறித்து வழிகாட்டல் தீர்ப்பு கொடுத்திருந்தாலும் , ஏனோ நம் மருத்துவர்களுக்கும் தெரிவதில்லை, அரசு இந்த உச்சமன்ற தீர்ப்பு குறித்த பல மருத்துவமணைக்கு தெரிவிக்கவும் இல்லை, இது போன்ற மருத்துவ உதவி கிடைப்பதில் உள்ள தாமதத்தால் பல உயிர் இழப்புகள் தொடர்ந்து கொண்டுள்ளது. அரசு விழித்துக்கொள்ளவேண்டும். பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சட்டமன்றத்தில் இது குறித்து பேச வேண்டும்
மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்னா லில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.
நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் மீண்டும் அவனிடமே செல்லக் கூடியவர்களாக இருக்கின்றோம்.
அந்த சகோதரர்க்கு சிகிச்சை செய்யாத மருத்துவரின் பொடுபோக்கா? அல்லது வேறு காரணங்களா ? மற்ற மூவருக்கும் சிகிச்சை அளித்து விட்டு ஒருவருக்கு மட்டும் ஏன் சிகிச்சை அளிக்க வில்லை ? இதனை வன்மையாக கண்டிக்கிறோம் இப்படிப்பட்ட மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் இதற்கு மனித்நேய மக்கள் கட்சி மற்றும் த.மு.மு.க. விரைந்து செயல்பட வேண்டும்.
லெ.மு.செ.அபுபக்கர்
இன்னா லில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.
நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் மீண்டும் அவனிடமே செல்லக் கூடியவர்களாக இருக்கின்றோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
எந்த ஜியாவுல் ஹக்? நியுஸை படித்தவுடன் சற்று பதற்றமாகி விட்டேன், ஏனெனில் என்னுடைய தம்பி பெயரும் அதுவே, செய்தியை போடும் போது எந்த குடும்பம் அல்லது தெருவை குறிப்பிட மறக்காதிர்கள்.
You can report this matter to Tamilnadu Medical Council and to the Ministry of Health. Atleast they will sent a memo on this with the the reference of Court order issued earlier on emergency treatments.
இன்னா லில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.
நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் மீண்டும் அவனிடமே செல்லக் கூடியவர்களாக இருக்கின்றோம்.
இன்னா லில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.
நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் மீண்டும் அவனிடமே செல்லக் கூடியவர்களாக இருக்கின்றோம்.
இறப்பு அல்லாஹ்வின் கையில் இருப்பினும் டாக்டரின் அலட்சியபோக்கை கண்டித்து சட்டப்படி நடவ்டிக்கை எடுக்கவேண்டும் இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.
Post a Comment