அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). எங்கு பார்த்தாலும் பரபரப்பு எல்லா காரியங்களிலும் அவசரம் அவசரம் அவசரம் என்று மனிதர்கள் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு பறந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த அவசரம் தேவைதானா? நலன் அளிக்குமா? என்பது பற்றி இந்த ஆக்கத்தில் பார்ப்போம்.
மனிதன் நன்மைக்கு பிரார்த்திப்பது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான் (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 17:11)
இந்த நவீன உலகில் எங்கு பார்த்தாலும் அவசரம் எதிலும் அவசரம். பஸ் நிலையம், ரயில் நிலையம், கடைகளில் பொருட்கள் வாங்குவது, ஊருக்கு புறப்படுவது என்று எல்லாவற்றிலும் மனிதர்களோடு சம்பந்தப்பட்ட எந்த காரியமானாலும் அவசரம்தான். கஷ்டப்பட்டு சம்பாரிப்பது எதற்கு வயிற்றுக்குத்தானே அட அந்த வயிற்றுக்கு சாப்பிடுவதிலும் கூட அவசரம் காட்டினால் பின் எதற்கு பணம். சிலபேர் விதி விலக்காக இருக்கலாம். பொறுமை என்றால் என்ன விலை என்று கேட்கும் நிலைக்கு ஆளாகி விட்டார்கள் இன்றைய அவசர உலகத்தின் நவீன மனிதர்கள்.
பொறுமையாளர்கள்:
பொறுமையக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள் எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.(அல்குர்ஆன் : 2:45)
வல்ல அல்லாஹ் கூறுவது போல் நாம் உதவி தேடியிருப்போமா? இப்படி உதவி தேடுவதில்லை நமக்கு நினைத்தது உடனே கிடைக்க வேண்டும். எதிர்பார்ப்பதும் தாமதம் இல்லாமல் நம்மை வந்து சேர வேண்டும். இதுதான் பெரும்பாலோரின் எண்ணமாக உள்ளது. மேலும் பொறுமையோடும், தொழுகையோடும் உதவி தேடுவது இறைவனின் மேல் அச்சம் உள்ளவர்களுக்குத்தான் முடியும் என்று அல்லாஹ் கூறுகிறான். அப்படி என்றால் நம்முடைய உள்ளம் எப்படி உள்ளது என்பதை நாம்தான் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
அல்லாஹ் யாரோடு? இருக்கிறான்:
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடவர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் : 2:153).
என்ன சகோதர, சகோதரிகளே வல்ல அல்லாஹ் கூறுவது புரிகிறதா? நாம் எவ்வாறு இருக்கிறோம். பொறுமையுடன் இருக்கிறோமா? எந்தக்காரியத்தையாவது நன்றாக சிந்தித்து நிதானமாக செயல்படுத்தியிருப்போமா?
பிள்ளைகளிடம், பெற்றோர்களிடம், உடன் பிறந்தவர்களிடம் உறவினர்களிடம், நண்பர்களிடம், வேலையாட்களிடம் இப்படி யாரிடமும் நாம் பொறுமையுடன் நடந்து கொள்வதில்லை. இவர்கள் அனைவரிடமும் நாம் பழகும் விஷயத்திலும் நிதானத்துடன் நடந்து கொள்வதில்லை, நாம் சொல்வதை பிறர் கேட்க வேண்டும், நாம் திட்டினாலும் மற்றவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நாம் மட்டும் யாருடைய ஏச்சுக்களையும், கோபத்தையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பது நம்முடைய கொள்கையாக உள்ளது.
நாம் பொறுமையிழந்து மற்றவர்களை மனிதர்களாகட்டும் பொருள்களாகட்டும் எல்லா காரியங்களிலும் சாபம் இடக் கூடியவர்களாக இருக்கிறோம். இப்படி இருப்பவர்களிடம் பொறுமையாக இருந்து, விட்டுக் கொடுத்து மன்னிக்கும் மனப்பான்மையுடன் இருங்கள் என்று அறிவுரை கூறினால் முயற்சி செய்கிறோம் என்று வாயால் சொல்வதோடு முயற்சி நின்று விடுகிறது.
சில சகோதரிகள் உறவுகளுக்குள் ஏதாவது கருத்து வேறுபாட்டால் சண்டை போடும்பொழுது, மகளாக, தாயாக இருந்தாலும் நிதானம் தவறி வாயில் வந்ததை எல்லாம் திட்டி விட்டு உறவே வேண்டாம் என்று ஒதுங்கி விடுகிறார்கள். அவர்களிடம் கேட்டால் நான் நல்லபடியாகத்தான் நடந்து கொள்கிறேன், மற்றவர்கள்தான் என்னை நோவினை செய்கிறார்கள் என்று கூறுகிறார்கள். தாம் பிறரை நோகடிப்பது தவறு கிடையாது. ஆனால் மற்றவர்கள் பதிலுக்கு தம்மை ஏதும் சொல்லி விட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டார்களாம் என்ன நியாயம் இது? திட்டுவதை எல்லாம் திட்டி விட்டு பிறகு இப்படிப்பட்ட சகோதரிகள் என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்கிறார்கள். மன்னிப்பு கேட்பது மிக சுலபம் தங்களின் கடுஞ்சொற்களால் மற்றவர்கள் அடைந்த மன வேதனையை சரி செய்ய முடியுமா?
நாம் யாரிடம் சண்டை போடுகிறோம் உறவுகளிடம் அல்லவா? நமக்கு உறவுதானே எல்லா காரியங்களுக்கும் உதவியாக இருக்கிறார்கள் என்ற சிந்தனை இல்லாமல் அவசரத்தில் திட்டி விட்டு பிறகு வருத்தப்படுவதால் பயன் இல்லை. அவசரத்தில் உறவுகளோடு சண்டை போடும் சகோதர, சகோதரிகளே நன்றாக நிதானமாக யோசித்து பாருங்கள். வல்ல அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் பொறுத்துக்கொள்வதால் யாருடைய சொத்தும் குறைந்து விடாது. உங்களுக்கு கோபமே வரக்கூடிய காரியத்தை உறவுகளும், வேறு யாரும் செய்து இருந்தாலும் அலட்சியப்படுத்தி மன்னித்து விடுங்கள். நீங்கள் மனிதர்களை மன்னித்தால் வல்ல அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். பொறுமையாளர்களுடன் நான் இருக்கிறேன் என்று வல்ல அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் கூறும் பொறுமையாளாராக உங்களை மாற்றிக்கொள்ள வேண்டாமா?
எதற்கு அவசரப்படக்கூடாது? எதற்கு அவசரப்படலாம்?
மறுமைக்கான செயல்களைத் தவிர மற்ற எல்லா விஷயத்திலும் நிதானத்துடனும் காலம் தாழ்த்தியும் நடந்து கொள்ள வேண்டும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: சஆத் இப்னு வக்காஸ்(ரலி) நூல்: அபூதாவூத்)
இந்த நபிமொழியிலிருந்து என்ன புரிந்து கொள்ள முடிகிறது. உலக காரியங்களில் நமக்கு நன்மை தருமா? தீமை தருமா? என்பது பற்றி எந்த மனிதருக்கும், எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும் தெரியாது. அதனால் உலக காரியங்கள் எதுவாக இருந்தாலும் நிதானமாக பதற்றப்படாமல், அவசரப்படாமல், ஆலேசானைகள் தேவைப்பட்டால், உண்மையான ஆலோசனை தருபவர்களிடம் ஆலோசித்து காரியத்தில் ஈடுபடலாம். மேலும் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாக (அளந்து அளந்து பேசுகிறான் என்று சொல்வார்கள்) மற்றவர்கள் மனம் புண்படாமல் பொறுமையுடன் பேச வேண்டும். (பதறாத காரியம் சிதறாது என்ற பழமொழி கூட உண்டு). நமது காரியங்களில் பொறுமையை கடைபிடித்தால் அல்லாஹ் நாடினால் வெற்றி கிடைக்கும்.
இந்த உலகத்தில் நமக்கு வியாபாரத்தில் நஷ்டமடைந்து விட்டால் வேதனையின் உச்சிக்கு சென்று விடுகிறோம். நம்முடைய மதிப்பு மிக்க பொருள்கள் காணாமல் போய்விட்டால் வேதனையில் அழுகிறோம். இதுவெல்லாம் நிரந்தரமில்லா உலக வாழ்க்கைக்காக, ஆனால் நிரந்தரமான மறுமை வாழ்க்கையில் நஷ்டம் அடைந்து விட்டால் திரும்ப சரி செய்ய முடியுமா? முடியவே. . . . முடியாது. மறுமைக்கான காரியத்தின் விளைவுகள் வல்ல அல்லாஹ்வால் உறுதி செய்யப்பட்டு விட்டது. எந்த காரியங்களை எல்லாம் செய்தால் நமக்கு மறுமையில் நன்மை கிடைக்கும் என்ற பெரிய பட்டியலையே தயார் செய்து வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் நம்முடைய இந்த உலக வாழ்வே பரீட்சை கூடம்தான் தேர்வு எழுதிக்கொண்டு இருக்கிறோம், மறுமையில் இறுதி தீர்ப்பு நாளில்தான் நமக்கு மார்க் கிடைக்கும் அந்த மார்க் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது.
அதனால் எந்தச் செயல்களை செய்தால் மறுமையில் வெற்றி கிடைக்கும், சிறந்த செயல்கள் எது என்பது பற்றி திருக்குர்ஆனிலும், நபிமொழியிலும் அதிகம் அதிகம் காணலாம். நாம் ஆய்வு செய்ய வேண்டும். இதன்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
ஆகவே சகோதர, சகோதரிகளே! பிறரை பற்றி ஆய்வு செய்வதை விட்டு விட்டு மறுமையில் நம்முடைய காரியத்திற்கு நாம் மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும் என்பதை மனதில் வைத்து மறுமையில் வெற்றியடைந்து சொர்க்கம் செல்லக்கூடிய நன்மக்களாக நம்மை மாற்ற முயற்சி செய்வோம் இன்ஷாஅல்லாஹ்.
காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக்கொள்வோரையும் தவிர. (அல்குர்ஆன் : 103:1,2,3)
15 Responses So Far:
அல்ஹம்துலில்லாஹ் !
பொறுமையாக இருந்திட நிறைவான பதிவை வாசித்ததில் திருப்தி !
அவசியம் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் !
இன்ஷா அல்லாஹ் !
அலாவுதீன் காக்கா : உங்களின் மற்றும் நம் எழுத்துப் பணிக்கும் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் ஒவ்வொரு காரியத்திற்கும் அல்லாஹ் மென்மேலும் அருள்புரியட்டும் !
மின்னஞ்சல் வழி கருத்து
----------------------------------------
நல்ல வழிகாட்டுதல்களில் பேர்பெற்ற அலாவுதீனின் மற்றுமொரு சிறப்புமிக்க ஆக்கம். நன்றியும் வாழ்த்துக்களும்.
(அப்படியே இதை அரபியில் மொழிபெயர்த்து என் (எங்களின்?) பாஸுக்கு மெயில் பண்ணினாத் தேவலாம். அவந்தான் (யாராவது பாஸை ‘அவர்’னு சொல்லி இருக்காஙளா?) இன்றுதான் கடைசி என்பதுபோல் 5 நாள் வேலையை 5 மணிக்குள் செய்யச் சொல்கிறான்)
- Sabeer Abu Sharhuk
ஆமாம் (கவிக்)காக்கா ! அவசியம் செய்யனும் அந்த மெயில் நமக்கு வந்ததாக இருக்கனும் (அரபியில்) அவரிடம் அர்த்தம் கேட்கப் போவதுபோல் வாசிக்க வைக்கலாமே நம்ம முன்னாடியே !!!! :)) ரொம்ப நாள் ஆசை !
பட படத்தா(ன்)ர் ! :( துனியா கடைசியில இருக்கிற நெனப்பு வேற... வேலை முடியும் நேரத்தில் ஒன்றை கொடுத்து விட்டு அடுத்த நாள் காலை வேலை துவங்கும் போது என்ன ஆச்சுன்னு கேட்டா !? என்னா பன்றது !
வேடிக்கை என்னன்னா இவ்ளோ நாள் கொட்டியாச்சு ஒலப்பை (அதான் உழைப்பைதான்) இன்னும் ஸ்லோவ்'ன்னு ஒரு ஸ்லோகனை வச்சுகிட்டு படுத்துறாங்களே !!
மாஷா அல்லாஹ்!
தேவையான பதிவு - சகோ.அலாவுதீனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
இன்று நாம் ‘ஸப்ர்’ என்பதற்கு பொறுமை என்று பொருள் கொள்கிறோம்.
’ஸப்ர்’ என்ற அரபிச்சொல்லின் மூலத்தினைப் பார்த்தோமெனில், detain- தவிர்த்திருத்தல் /ஒருசெயலினை விட்டு தவிர்ந்திருத்தல்/விலக்கப்பட்டு இருத்த்ல் எனும் பொருள்பட வருகிறது.
பொறுமை எங்கு தேவைப்படுகிறது என்று சொன்னால், இறைவனும், இறைத்தூதரும், எதையெல்லாம் விட்டுத் தவிர்த்திருக்க வேண்டும் என்று தடுத்திருக்கிறார்களோ அதிலிருந்து நம் மனதினை விலக்கியிருக்கும் நிலைக்கு பொறுமை(ஸப்ர்) என்று பெயர்.
இன்னும் பொறுமையில் 4 வகையான பொறுமைகளுண்டு.
1. தேர்வுசெய்யும் உரிமையுடன் உடல்சார்ந்துது
2. வேறு வழியே இல்லாத நிலை உடல்சார்ந்தது
3. தேர்வு செய்யும் உரிமையுடன் - உளம்சார்ந்தது
4. வேறு வழியே இல்லாத் - உளம்சார்ந்தது -
இவைகளில், வேறு வழியே இல்லாத சூழலில் உடல்சார்ந்தோ/உளம்சார்ந்ததாகவோ பொறுமையாய் இருப்பதைவிட, தேர்வுசெய்யும் உரிமையுடன் உள்ள சூழலில், இறைவனோ அல்லது இறைத்தூதரோ தடுத்திருக்கும் ஒரு செயலில் ஈடுபடாமல் தவிர்ந்திருக்கும் மனநிலை (பொறுமை) உயர்வானதாய் கருதப்படுகிறது.
உதாரணமாய், நபி யூஸுஃப் (அலை) அவர்களை, அவர்களின் தந்தையிடமிருந்து பிரித்து கிணற்றில் தள்ளிவிடும் சூதான திட்டத்தின்போது அவர்கள் பொறுமைகாத்தது தப்பிக்க முடியாத சூழல், வேறு வழியே இல்லாத சூழல் - ஆனால், அஸீஸின் மனைவி அவர்களை தவறான வழியின்பால் அழைக்கும் போது, மறுத்துவிட்டு, அதானால் வீண்பழியேற்று சிறையில் வாடும் சூழல் வரும் என்று அறிந்தும் கூட, தன் இறைவன் தடுத்திருந்த ‘விபச்சாரம்’ பக்கம் நெருங்காமல் தவிர்ந்திருந்த நிலை (’ஸப்ர்’) போற்றுதலுக்குரியது;
ஆக ‘ஸப்ர்’ ஐ உரிய முறையில் புரிந்து செயல்பட் வல்ல இறைவன் வழிகாட்ட வேண்டும்!
இன்ஷா அல்லாஹ் விரிவான ஒரு இடுகைக்கு முயற்சிக்கிறேன்.
// ஆக ‘ஸப்ர்’ ஐ உரிய முறையில் புரிந்து செயல்பட் வல்ல இறைவன் வழிகாட்ட வேண்டும்!
இன்ஷா அல்லாஹ் விரிவான ஒரு இடுகைக்கு முயற்சிக்கிறேன். ///
மாஷா அல்லாஹ் !
சகோ.ரஃபீக் விரைவில் எதிர்பார்க்கிறோம் இன்ஷா அல்லாஹ் !
அவசரம் பற்றிய அலாவுதீன் காக்கா அவர்களின் ஆக்கம் அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய அறிவுரை.ஆத்திரத்திலும் அவசரத்திலும் எடுக்கும் எந்த முடிவும் நன்மையாக அமைவதில்லை.
சBப்ர் என்பதற்கு சகோ ரபீக் அவர்கள் தெளிவாக விளக்கி உள்ளார்கள்.
பாவம் சபீர் காக்கா; 50 நாள் அதிரை-அமீரக பயணத்தை 5 நாளில் விரைந்து விடுவது போல்,வேலையில் 5 நாளை 5மணி நேரமாக்கும் அவசரம் பிடித்த படபடத்த உங்கள் Bபாஸுக்கு பொறுமையை கொடுக்க துஆ செய்யுங்கள்.
மின்னஞ்சல் வழி கருத்து
------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோ.அலாவுதீன் அவர்களின் அவசரம் என்ற பதிவை வேலை & வியாபாரத்தின் காரணமாகவோ அவசர அவசரமாக படிப்பதை விட்டு பொறுமையாக படிப்பதற்கு அல்லாஹ் தௌபீக் செய்வானாக.
ஆனால் மனிதன் தூக்கத்தை விட்டு எழும்புவதில் மட்டும் பொருமையை கடைப்பிடிக்கிறான்.
அலாவுதீன் காக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
லெ.மு.செ.அபுபக்கர்
மின்னஞ்சல் வழி கருத்து
---------------------------------------------
சகோதரர் S.அலாவுதீன் அவர்களுக்கு,
மாஷா அல்லாஹ் ! மிகவும் பயனுள்ள அவசியமான பதிவினை இங்கு பதிந்து எங்களின் உள்ளங்களை கொள்ளையடித்து விட்டீர்கள். நளினத்தை கடைபிடித்து அழகுற எடுத்து வைத்திருக்கிறீர்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களின் செயல்கள் அனைத்தையும் அங்கீகரித்து அருள்புரிவானாக.
சகோதரி
ஆமினா அப்துல்லாஹ்
அலாவுதீன் நிறைய உண்மைகளை கொட்டியிருக்காப்லெ...
அலாவுதீன் நிறைய உண்மைகளை கொட்டியிருக்காப்லெ...
//விட்டுக் கொடுத்து மன்னிக்கும் மனப்பான்மையுடன் இருங்கள் என்று அறிவுரை கூறினால் முயற்சி செய்கிறோம் என்று வாயால் சொல்வதோடு முயற்சி நின்று விடுகிறது.//
//ஒருவருக்கு ஒருவர் பொறுத்துக்கொள்வதால் யாருடைய சொத்தும் குறைந்து விடாது.//
அவசரத்தை பற்றி அவசியமான பதிவு..நம்மாள்க்க தேவையுள்ள விசயங்களுக்கு அவசரம் காட்டமாட்டார்கள்(எ.கா.அடுத்தவர்களுக்கு உதவுவது போன்ற) ...தேவையற்ற விசயங்களில் அவசரம் காட்டி முட்டி கொள்வார்கள் (கார் ஓட்டும்போது போன்ற )....அவசரம் என்றுமே ஆபத்துதான் என்பதை மார்க்க மணத்துடன் தெளிவாக எடுத்துரைத்த காக்கா அவர்களுக்கு துவாக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்,
பாசமிகு அலாவுதீன் காக்கா,
அவசரப்படாமல் படித்துவிட்டு காலம் காத்திருந்து கருத்திடுகிறேன்.
மிக தெளிவான அறிவுரையுடன் கூடிய வழிகாட்டல். நிதாதனம் எல்லா விசயங்களிலும் அவசியம், நிதானமிழந்தால் நிறைய பகைமையே சந்திக்க முடியும் என்பதை உணர்த்தியுள்ளீர்கள்.
மீண்டும் ஒரு அருமையான ஆக்கத்தை தந்த அலாவுதீன் காக்காவுக்கு மிக்க நன்றி. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
சகோதரர் ரபீர் (புதுசுரபி) அவர்களின் விளக்கமும் அருமை.
அல்லாஹ்வும், நபி(ஸல்) அவர்களும் தடுத்த செயல்களிலிருந்து விலகியிருக்கும் மனநிலையே பொறுமை.
ஸப்ர்’யை உரிய முறையில் புரிந்து செயல்பட வல்ல இறைவன் நம் எல்லோருகும் நல்வழிகாட்ட வேண்டும்!
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
சகோதரர்கள்: அபுஇபுறாஹீம் , சபீர், ரஃபீக் ,
M.H. ஜஹபர் சாதிக் , லெ.மு.செ.அபுபக்கர், ஜாகிர், யாசிர், தாஜுதீன்.
சகோதரி: ஆமினா அப்துல்லாஹ்.
தாங்கள் அனைவரின் கருத்திற்கும் நன்றி !
ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோ. அலாவுதீன் அவர்களுக்கு, காலம் தாழ்ந்த என் கருத்துக்கு மன்னிக்கவும். தாங்கள் எதை எழுதினாலும் அதை மார்க்கத்துடன் ஒப்பிட்டு எழுதுவது மிகவும் சந்தோசமாகவும் மனதிற்கு அமைதியையும் தருகிறது. அநாவசிய காரியங்களில் அவசரம் காட்டி, அவசர காரியங்களில் அசட்டையாக இருந்து வரும் மனிதர்களின் இன்றைய பண்பை அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள்.
மெல்ல, மெல்ல ஊட்டப்பட்ட அமுதாய் உங்களின் நல்ல பல கருத்துக்கள் படிக்கும் அனைவருக்கும் மரணத்திற்கு முன் செல்ல வெண்டிய இடம் சென்று ஆக வேண்டிய காரியம் ஆகினால் அல்லாஹ் உங்களுக்கும், எமக்கும் ஈருலக பாக்கியம் பெற ஏதுவாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.
தொடருங்கள் உங்களின் மென்மைப்புரட்சியை உங்கள் ஆக்கங்கள் மூலம்
மு.செ.மு. நெய்னா முஹம்மது
சகோதரர் : மு.செ.மு. நெய்னா முஹம்மதிற்கு வஅலைக்கும் ஸலாம் (வரஹ்)
தங்களின் அழகிய கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
Post a Comment