சிறுவனாய் இருக்கும் சமயம்
எம்மை செம்மை படுத்துவீர்!
வயதிற்கு வந்ததும் எமக்கு
வாழ்க்கைப்பாடம் நடத்துவீர்!
அன்பான வார்த்தைகளால்
எம்மேல் ஆட்சி செய்வீர்!
பண்பான பழக்க வழக்கத்தால்
பல்கலைக்கழகமாய் காட்சிதருவீர்!
எம்மை செம்மை படுத்துவீர்!
வயதிற்கு வந்ததும் எமக்கு
வாழ்க்கைப்பாடம் நடத்துவீர்!
அன்பான வார்த்தைகளால்
எம்மேல் ஆட்சி செய்வீர்!
பண்பான பழக்க வழக்கத்தால்
பல்கலைக்கழகமாய் காட்சிதருவீர்!
ஆசையாய் வேண்டியதை வாங்கிதருவீர்!
தீயவை செய்யாமல் தடுத்து நிறுத்துவீர்!
நல்லதை நிறப்பமாய் சொல்லித்தருவீர்!
அமைதியான வாழ்விற்கு அறிவுரை தருவீர்!
பள்ளிக்கு பாசமாய் அழைத்துச்செல்வீர்!
பாங்குடன் நல்லவை பல கற்றுத்தருவீர்!
அனுபவத்தில் ஆயிரம் அர்த்தம் சொல்வீர்!
கண்ணியம் பல நடத்தையில் செய்வீர்!
ஒழுக்கத்தை ஒழுங்காக எடுத்துரைப்பீர்!
வீண்விரயங்களை வெறுத்து ஒதுக்குவீர்!
அநாச்சாரங்களுக்கு என்றும் எதிரியாவீர்!
அல்லாஹ்வை அணுதினமும் நினைவில் கொள்வீர்!
குடும்பம் செழிக்க மார்க்கம் பேணுவீர்!
சண்டைசச்சரவுகளை திறம்பட கையாளுவீர்!
வருங்கால சந்ததிகளுக்காக நல்லதை நாடுவீர்!
தராசின் முள் போல் என்றும் நடுநிலை காப்பீர்!
குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு காண
காவல் துறை செல்லத்தேவையில்லை
நீதி மன்றமும் போக வேண்டியதில்லை
உங்களின் தீர்ப்பே இனிய/இறுதி தீர்ப்பாகும்
நீதி மன்றமும் போக வேண்டியதில்லை
உங்களின் தீர்ப்பே இனிய/இறுதி தீர்ப்பாகும்
சிறியவர் வாழ்வில் உயர பறக்க உங்கள்
சீரிய உபதேசம் செம்மைபடுத்தும்
ஆயிரம் காலத்து பயிராய் அது என்றும்
பல்லாண்டு நினைவில் நிலைத்து நிற்கும்
சீரிய உபதேசம் செம்மைபடுத்தும்
ஆயிரம் காலத்து பயிராய் அது என்றும்
பல்லாண்டு நினைவில் நிலைத்து நிற்கும்
உங்கள் காலம் குடும்பத்தின் பொற்காலம்
ஆயிரம் அரசுகள் நாட்டில் வந்துபோனாலும்
உங்களின் ஆட்சியை எவரால் தந்திடமுடியும்?
உங்களுடன் குடும்ப நிம்மதியும் கூடவே சென்று விட்டனவோ?
வீட்டின் ஆண்களையும், பெண்களையும்
அன்பால் அடக்கி ஆண்டீர்! ஆனால்
இன்று அவர்களை ஆழ நீங்கள் இல்லாமல்
தேவையற்ற பிரச்சினைகளே ஆண்டுவரும்
என்னதான் ஆயிரம்பேர் அழகாய் மார்க்கம் புகட்டினாலும்
தனியே தவறாக நடக்க முயல்பவனை கண்டு
"அடிசெருப்பாலெ" "வெளக்கமரு பிஞ்சிடும்" என்று வெகுண்டெழும் பெண் இருந்தால் தவறுகளும் மிஞ்சிடுமோ? தலைதெரித்து ஓடிடுமே! கண்ணியம் தலைத்திடுமே!
நம்பித்தான் கடல்கடந்து வந்தோம்
இப்படி நம்பிக்கை துரோகம் செய்வதேனோ?
எம் அரை வயிறும் குறை தூக்கமும்
அந்த அல்லாஹ்வே நன்கறிவான்
பொறுப்பற்று நடக்கலாமோ? இப்படி எம்மை உயிருடன் புதைக்கலாமோ?
இன்று பல குடும்பங்கள் குடும்பப்பெரியவர்களான அப்பா, பெரியம்மா போன்றவர்கள் இல்லாமல் அவர்களின் அன்றாட கண்காணிப்பும், உபதேசமும், கட்டுப்பாடும், மார்க்க/ஒழுக்க போதனைகளும் இல்லாமல் இன்று வேதனையில் செய்வதறியாது விழித்துக்கொண்டிருக்கின்றன.
உலகில் தவறுகள் செய்ய ஆயிரமாயிரம் வாய்ப்புகள் நல்கியும் தண்டிக்கும் இறைவனுக்கு அஞ்சி அவற்றை எல்லாம் தவிர்த்திடும் ஆண், பெண்ணுக்கு ஈருலகிலும் வேண்டி விரும்பியதை வழங்க வல்ல இறைவனே போதுமானவன்.....
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
27 Responses So Far:
அதிரைவாசிகள் அல்லாதவர்கள் இந்த பதிவை படிக்க வாய்ப்பிருந்தால், இதோ கீழ் உள்ள தகவல் உங்களுக்காக.
அப்பா என்றால் தாத்தா, பெரியம்மா என்றால் பாட்டி.
நன்றி.
"அன்பான வார்த்தைகளால்
எம்மேல் ஆட்சி செய்வீர்!
பண்பான பழக்க வழக்கத்தால்
பல்கலைக்கழகமாய் காட்சிதருவீர்!"
பேரனுக்காக சில அப்பாமார்கள் தான் தவறு செய்வதைவிட்டும் விலகி இருப்பார்கள்..பேரனுக்கு பல்கலைக்கழகமாய் காட்சியளிக்க..
அப்பாக்களை பற்றி அடிபொலி கவிதை.
நெய்னா!அருமை.
அப்பா நமக்கு மட்டுமல்ல நம்மைச்சார்ந்த நம் நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் நல்லுபதேசம் செய்வார்கள்.அதன் மூலமாவது பேரர்கள் நல்வழிப்படவேண்டுமென்பதெற்காக!இது அறிந்தவர்களுக்கு நல்லா தெரியும்.அந்த மாமனிதரின் கபுரை நாயன் பிரகாசமாக்கி வைப்பானாக ஆமீன்.
1997ல் நான் சவுதிக்கு முதன்முறையாக புறப்பட்ட சமயம் வயோதிகத்தால் எழுந்து நடக்க இயலாமல் படுக்கையில் இருந்த என் அப்பா (உம்மாவின் வாப்பா) "தம்பீ! நீ நல்ல படியா போயிட்டு நல்லபடி யா திரும்பி வரனும்" என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள். காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் மற்றும் குடும்பத்தின் அந்நேர சூழ்நிலையால் நானும் அப்படியே ஊரை மறந்து சுமார் 45 மாதங்கள் அப்படியே சவுதியில் தங்கி விட்டேன்.
45 மாதங்கள் சவுதியில் கடந்த பின் ஊர் திரும்பினேன். என் அருமை அப்பாவையும் பார்க்க முடியவில்லை. அவர்களின் அன்புத்துணைவியார் என் ஆசை பெரியம்மாவையும் பார்க்க இயலவில்லை. வாழ்த்தி என்னை வரவேற்க அந்த வயதான பெரியவர்களும் இல்லை அவர்களின் பாச வார்த்தைகளும் இல்லை. அதற்கு பதிலாக புதிய வரவுகளாக என் தங்கை குழந்தைகளை காணக்கண்டேன்.
இன்று இருக்கும் இளசுகளெல்லாம் பெரியவர்களை மதிக்காது அவர்களை துச்சமென நினைத்து அவர்கள் ஏதோ வேற்றுகிரகத்திலிருந்து வந்தவர்கள் போல் ஆணவத்தில் (இளமைத்திமிரில்) வாழ்ந்து வருகிறார்கள் நாமும் ஒரு நாள் அந்த முதியவர்களின் நிலையை அடைவோம் இல்லை அதற்கு முன்பே இவ்வுலகை விட்டு மறைவோம் என்ற உண்மையை மறந்தவர்களாக.
யா!அல்லாஹ் வயதான பெரியவர்கள் மற்றும் இவ்வுலகை விட்டு முன்பே சென்றவர்கள் யாவரின் எல்லா பாவங்களையும் மன்னித்து அவர்களின் கப்ருக்களை சொர்க்கத்தின் பூஞ்சோலையாக்கி வைப்பாயாக....ஆமீன்...
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
அப்பா ஓர் விளக்கம்.
இங்கு சிலருக்கு தன் தாயை ஈன்றெடுத்த தகப்பனாக இருக்கலாம்.
சிலருக்கு தன் தந்தையை ஈன்றெடுத்த தகப்பனாக இருக்கலாம்.
சிலருக்கு தன்னையே ஈன்றெடுத்த தகப்பனாக இருக்கலாம். சிலருக்கு சொந்த,பந்தங்களின் குடும்பப்பெரியவர்களாக இருக்கலாம். சிலருக்கு தெருவில் நேசிக்கப்படும் பெரியவராக இருக்கலாம். என்னதான் இருந்தாலும் இன்று காசுபணங்கள் கணக்கின்றி வந்து சேர்ந்தாலும் வீட்டுப்பெரியவர்களாக வாழ்ந்து மறைந்த அப்பா, பெரியம்மாக்கள் வாழும் காலங்களில் வீடுகளில் இருந்த கண்ணியமும், கம்பீரமும், கட்டுப்பாடும், அமைதியும் இன்று அவர்கள் இல்லாத வீடுகளின் காண இயலவில்லை.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
அப்பா(க்கள்) இருவரும் அதாவது வாப்பிச்சாவீட்டு அப்பா / உம்மாவீட்டு அப்பா :
எப்படி தட்டிலிருக்கும் சோற்றை கையில் எடுத்து விரல் மடக்கி சாப்பிடுவது என்று சொல்லித் தந்ததாகட்டும்...
எங்கு எப்படி நடந்து கொள்வது என்ற வழமையாகாட்டும் !, சிறு வயதில் காலில் செருப்பை எப்படி அணிய வேண்டும் அதனை எங்கு கழட்டி வைக்க வேண்டும் !
கைபிடித்து ஜாவியாவிற்கு அழைத்துச் செல்லும் வழிகநெடுகிலும் திருக்குர் ஆனில் கடைசி சூராக்களை மனனம் செய்ய வைப்பதிலாகட்டும் !
தொழுகையில் அப்பாவின் பக்கம் வழிய சாய்ந்து இருக்கையில் ஒட்டியிருப்பதில் இருக்கும் சுகமாகட்டும் !
இன்னுமிருக்கு சொல்லிக் கொண்டே செல்ல...
இருப்பினும் இவைகளையெல்லாம் விட, ஆச்சர்யப்பட வைக்கும் ஆளுமையும் அதன் தனித் தன்மையும், எச்சூழலையும் தனதாக்கும் திறன்களும் கொண்டிருந்தவர்களை பசுமரத்தில் பதிந்த நினைலைகள் என்றுமே பசுமைதான் !
நான் மிக அதிகமாக நேசிக்கும் என்னுடைய அப்பா இபுறாஹிம் மரைக்கா ! நிழலுருவம் நிஜத்தில் வந்த பிரம்மை ஏற்படுத்தியது உமது நினைவூட்டும் அனைத்து வரிகளும் !
சிறு வயது வசிப்பிட சூழல் நினைவுகளில் இருக்கும் மற்ற அப்பாக்களில்...
அப்துல் வஹாப் மரைக்கா அப்பா : வீட்டிலோ அல்லது / வீதியோரம் மென்மையாக அவர்கள் நடக்கையில் அவர்களின் மெல்லிய புன்னகையும் என் தலையில் தடவிக் கொடுக்கும் வாஞ்சையும் !
லெப்பைத் தம்பி மரைக்கா அப்பா : நாள் ஒன்றுக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று தடவை சந்திக்க நேரும் பெரிய அப்பா ! அவர்கள் கைகளில் இருக்கும் ஏதாவது தீன்பண்டங்களில் சில எனது கைக்கு மாறும் அவ்வப்போது !
மு.செ.மு.அபுல் ஹசன் அப்பா : உரிமையுடன் முறை சொல்லி அழைக்கும் அழகே தனி பள்ளிவாயிலுக்குச் சென்றால் என்றுமே முன்னிரிமை கிடைக்கும் இவர்கள் இருந்தால்.
அஜ்வாத் அப்பா : குடும்ப வழிமுறைகளையும், நேசங்களையும் அரவனைக்கும் அழகு சிறார்களை அழைக்கும் முறையே அற்புதம் !
ஹம்ஜா அப்பா : அழகிய அதட்டல், அருமையான குரல் அடிக்கடி சந்திக்கும் அப்பா அன்றைய சிறுவயது காலத்தில்...
எஸ்.கே.அப்பா (அப்துல் காதர்): நடப்பது நடை பயில்வது போல் இருக்கும் அவர்கள் நடந்து செல்வது அப்படியே !
மீ.கார அப்பா : தக்வா பள்ளி பின்புறம் வீடு அவர்களையும் அன்றாடம் இவர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமிருக்கும் ஒவ்வொரு முறையும் அவர்கள் அமர்ந்திருக்கும் தின்னையைத் கடந்தால் கம்பீரமான குரல் வரும் "மரைக்கா" கேட்டதும் அவர்கள் அருகில் சென்று புன்னகைத்து விட்டாவது செல்லத்தூண்டும் அவர்களின் அரவனைப்பு !
அவ்குர்ஷா அப்பா : பாசம் பறைசாற்றும் பம்பரமாய் சுழன்று வருவர்கள் !
இவைகள் கொஞமேனும் நினைவிலிருந்தவைகள் இன்னும் இருப்பின் வருகிறேன் மீண்டும்!
அது சரி, எனது உறவுகள் அடிக்கடி புலகாங்கிதம் அடையும் "மோய்னப்பா" பற்றி சொல்லுங்களேன்... நிச்சயம் அவர்களின் பிச்சலங்கள் இதனை வாசிக்கும் வாய்ப்புகள் அதிகமே ! :)
மோய்னப்பா அவர்கள் பற்றி நெய்னாவும், இளைய இணைய வரவின் புயல் மீராசாவும் தான் விளக்க வேண்டும்.
நகைச்சுவைக்கு ஒரு அப்பா என்றால் அது மோய்னப்பாதான்
அப்பாக்களை நினைவூட்டிய நெய்னாவுக்கு நன்றி!
அபுஇபுறாஹீம் சொன்ன அப்பாக்கள் அத்தனை பேரும் எனக்கும் அப்பாக்கள்தான். கூடவே அபூபக்கர் ஆலிம் என்றொரு அப்பா... என் வயதொத்த என் குடும்பத்தினருக்குக் கிடைக்காத நெருக்கம் எனக்கும் அவர்களுக்கும். அல்லாஹ் அவர்களின் கப்றுகளை சுவனப் பூஞ்சோலையாக்குவானாக. சுவனத்தில் அப்பாக்களோடு மகிழ்ச்சியுடன் உலா வரும் வாய்ப்பையும் ஏற்படுத்துவானாக!
மின்னஞ்சல் வழி கருத்து
--------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்,
அடேங்கப்ப ப்பா ப்பா ப்பா ப்பா ப்பா....,
மொய்னப்பாவின் கட்டுரையை படித்துவிட்டு. அப்பாக்களை வரிசைப்படுத்திச் சொன்ன என் மச்சான், அபுஇபுறாஹிம்க்கு என்ன சொல்வதப்பா.... !
முஹமது அபூபக்கர்
மொய்னப்பா:எல்லோராலும் அன்பாக அழைக்கப் பட்டாலும் அவர்களை அப்பாவாக்கியது யானே!அதாவது அவர்களின் மூத்த மகனின் மூத்த மகன்.முதல் பேரன்!
வாவன்னா சா(ச்சா)ர் வூட்டு முடுக்கு உள்ளே போகாமே எல்லா தாயபுள்ளே வூட்டு க்கும் விஜயம்செய்து சாச்சி -ராத்தம்மா-மாமி என்று தினசரி குசலம் விசாரிக் காமல் வருவதில்லையாம்.மழை பைத்துக்கு பிரசித்தியாம்.மைக் அற்ற காலத்தில் கூட செக்கடியிளிருந்து கடைத்தே ருக்கு விளங்குமாம்.இவர்கள் ஓதி மழை வராதிருந்த வரலாறு இல்லையென்பது வியப்பு!இவர்களின் நகைச்சுவை உணர்வை எடுத்துச்சொல்ல ஒரு அரை நாள் லீவு எடுக்கணும்
//இவர்களின் நகைச்சுவை உணர்வை எடுத்துச்சொல்ல ஒரு அரை நாள் லீவு எடுக்கணும்//
எடுத்துதான் ஆகனும் ரஃபியா காக்கா !
மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------------
மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…
'மோய்னப்பா' என்றழைக்கப்பட என் தந்தையின் தகப்பனார்(வாப்புச்சா ஊட்டு அப்பா) நான் கண்டதில்லை. அவர்கள் என்னை காணும் முன்னே இறைவனடி சேர்ந்து விட்டார்கள். எனவே அவர்கள் பற்றி தகவல்களை நேரிலே கண்ட பரிச்சயம் எனக்கில்லை என்ற பொழுதிலும் பலர் சொல்லக்கேட்ட அனுபவம் உண்டு.
அதில் ஒன்றை என் தாயார் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஒரு காலத்தில் நமது நடுத்தெருவின் வழியே சென்று கொண்டிருந்த மணல் லாரி ஒன்றில் ரோட்டில் மேய்ந்து கொண்டிருந்த நம் தெரு வீட்டினர் ஒருவரின் (யாரு ஊடுண்டு தெரியலெ) கோழி அடிபட்டு இறந்துவிட்டது.
உடனே அங்கிருந்தவர்கள் அந்த லாரி ஓட்டுனரை கீழே இறக்கி வாய்ச்சண்டை வளர்த்துக்கொண்டிருந்த சமயம் எதார்த்தமாக அங்கு வந்த 'மோய்னப்பா' அவர்கள் அங்கு நடந்து கொண்டிருந்த வாய்ச்சண்டையில் குறுக்கிட்டு அது அடிதடி வரை செல்லாமல் தடுத்து நிறுத்தி இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அவரவர் திரும்பி செல்ல வைத்து விட்டு அந்த லாரி ஓட்டுனரிடம் அவர்கள் செல்ல வேண்டி இருந்த சேர்மன் வாடியில் இறக்கி விடும்படி (குறைந்த பட்ச தண்டணையாக இருக்குமோ...வெறென்ன இதுக்கெல்லாமா திஹார் சிறையிலா அடைப்பார்கள்?) கேட்டுக்கொண்டார்களாம்.
அவனும் பயந்தோ அல்லது மரியாதை நிமித்தமாகவோ தெரியவில்லை. அவர்களை தன் லாரியில் அமர வைத்து அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கி விட்டு சென்றானாம். (அந்த நேரத்துலெ நல்ல வெடக்கோழி ஜோடி அஞ்சோ அல்லது பத்து ரூபாக்கி தான் விற்றிருக்கும் என்று நினைக்கிறேன்)
என்னா வில்லத்தனம்? என்று யாரும் கேட்கக்கூடாது (என்னா சாதுரியம்? என்று கேட்டால் ஓ.கே.) ஆமாம்....
இதுபோல் அவரவர் வீட்டின் கண்மணியான பெரியவர்கள் அவர்கள் வாழ்நாளில் செய்த மறக்க இயலாத நல்ல பல விசயங்களை உங்களுக்கே உரிய சேட்டையுடன் இங்கு ஞாபகப்படுத்த வேண்டியது தானே?
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
//M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…
மோய்னப்பா அவர்கள் பற்றி நெய்னாவும், இளைய இணைய வரவின் புயல் மீராசாவும் தான் விளக்க வேண்டும்.//
அவர்கள் இருந்த காலத்தில் நான் பிறந்திடவே இல்லையப்பா..
ஆனால் அவர்களது இரண்டு செண்டிமீட்டார் சொத்திற்கு நான்தான் சொந்தக்காரன்..
அதுவந்து.. அதுவந்து...
சொத்தையில்லா நீண்ட இரு பல்லிற்கு நான்தான் சொந்தக்காரன்.இன்று வரை சில பெருசுகள் என்னைக்கண்டதும் 'நீ மோய்னப்பா பேரனான்னு' கேட்பதுண்டு..
நமக்கு பெரியம்மாதான் என்றும்..
சாயந்தாரம் தேதண்ணிய கையில் ஏந்திக்கொண்டுலிருந்து ஷிபா ஹாஸ்பிடல் திடல் வரைக்கும் கொண்டு வந்து குடுத்துட்டு போவார்கள்..அந்த 70-80 வயதிலும். யார் வீட்டிலாவது நான் தொலைகாட்சி பார்த்துக்கொண்டோ விளையாடிக்கொண்டோ இருப்பேன்,எனது நண்பர்கள் ஒவ்வொரு வீட்டையும் சாயந்தாரம் நாலு மணிக்கு கதவ தட்டி என் பேரன் உங்க வீட்லையா.... இருக்கான்.. னு கேட்டு தேத்தண்ணி கொடுவிட்டு செல்வது உண்டு.. (அதுக்குள்ளே தேத்தண்ணி தண்ணி மாதிரி ஆகிடும் அது வேற செய்தி)..
நான் ஊரை விட்டு வெளிவூருக்கு படிக்க சென்றேன்..அப்போது அவர்கள் இவ்வுலகை விட்டு சென்றார்கள்..
msm(mr)
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் நெய்னா முகம்மது,
//உங்கள் காலம் குடும்பத்தின் பொற்காலம்
ஆயிரம் அரசுகள் நாட்டில் வந்துபோனாலும்
உங்களின் ஆட்சியை எவரால் தந்திடமுடியும்?
உங்களுடன் குடும்ப நிம்மதியும் கூடவே சென்று விட்டனவோ? //
உண்மை.
தெருக்களில் ஒரு சில வீடுகள், கடைகள் பக்கம் சென்றால் அவ்விடங்களில் வாழ்ந்த பெரியவர்கள் குறிப்பாக அப்பாக்களின் நினைவுகளே வரும்.
இன்றைய அப்பாக்களின் பாச ஆதிக்கம் நிறைய வீடுகளில் குறைந்துள்ளது என்னவோ வருந்ததக்க செய்தி.
மின்னஞ்சல் வழி கருத்து
---------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்,
///உங்கள் காலம் குடும்பத்தின் பொற்காலம்
ஆயிரம் அரசுகள் நாட்டில் வந்துபோனாலும்
உங்களின் ஆட்சியை எவரால் தந்திடமுடியும்?
உங்களுடன் குடும்ப நிம்மதியும் கூடவே சென்று விட்டனவோ? ///
இப்பவுள்ள அப்பாக்கள் சிலபேர் . கண்டும் காணாமல் இருந்திடவே!
குடும்பத்தை ஆட்சி செய்வது பெண்கள்தானே! அதனால் வந்தது பெரும் சோதனைகள்.
குடும்ப நிம்மதிகள் யாவும் குழிக்குள் புதைந்தனவே! நாம் மண்ணறைக்கு போனால்தான் நிம்மதிகள் கிடைத்திடுமோ.
நம்மை படைத்த அல்லாஹ்வே!
யாவற்றையும் அறிந்திடுவானே .
Mohamed Abubucker
மோய்னப்பா ஒருமுறை ஹாஜாமி சா (ர்)ச்சா வூட்டு சந்திலிருந்து வந்து கொண்டிருக்கும் பொது யாரோ ,'என்னப்பா எங்கப் போயிட்டு ; என வினவ ஒரு இளம் தம்பதி பெண்ணும் ஒரு வயது நிறைந்த தாயும் குழந்தை
பெற்றி ருந்ததை "ஒரு பசுவும் ஒரு கிழட்டு மாடும் கண்டு போட்டிருக்கிறது .பார்த்து விட்டு வருகிறேன்."என்றார்களாம்.
சேனா.சீனா.இப்ராஹிமாக்கா,
கோல்டன் ரோஸ் மஹ்மூது சாச்சா(தாஜ்தீன் வாப்பா),நிஹாத் அராப் ஹாஜாக்க போன்றோர் எம்மை "மொய்னப்பா"என
அன்புடன் அழைத்து மகிழ்வர்.அப்பாவின் மச்சிகள் பெரும்பாலும் பெரிசு. ஆதலால் அவர்களின் பிள்ளைகளை அப்பா அழைப்பது 'கெளவி மக்களா' என்று!
ஒரு சந்தர்பத்தில் தலையில் குடத்துடன் மோர் காரக்கிழவி "மோர் ..மோரூ...என கூறிக்கொண்டு போக ,அதற்க்கு
மோய்னப்பா ,"இப்பவல்லாம் முடியாது புள்ளே வாய் வேக்காலமா இருக்கிது" என்றார்களாம்.அந்த spontaneous விகடத்தனம் யாரையும் விசனப்பட வைககவில்லை என்பதே சிறப்பு! இன்னும் சேகரித்து சிரிப்போம்!
அஸ்ஸலாமு அலைக்கும். அப்பப்பா இத்தனை பாக்கள் அப்பாவின் மேல் ஈக்களாய் மொய்திருக்க. நல்ல வென்பா இயற்றினார் நண்பர் நைனா! ஒவ்வொரு வரிப்பாக்களும் பூக்களாகி நம்மை பறித்தது. அப்பாக்கள் எல்லாம் ஒப்பனை செய்யாத கதானாயகர்கள் அவர்கள் நம் ஒப்பனை( வாப்பாவை) நமக்கு தந்த கொடைவள்ளல்கள்.அவர்கள் நமக்காக ,வாழ்கையை படம் பிடித்த இயக்குனர்கள். நம் முதல் காதானாயானான நம் வாப்பாவின் கதனாயகர்கள். நமக்காக சந்தோசத்தை வழங்கிவிட்டு அசவுகரியங்களை சந்தித்தவர்கள்.
ஒவ்வொரு ரசிகனான பேரனையும் முன்னிலைப்படுத்தும் அதிசய கதானாயகர்கள்.உம்மாவுக்கு தந்தையானாலும் நம் உம்மாவுக்கு கொடுத்த உம்மாவைவிட சும்மா,சும்மா 'உம்மா'(முத்தம்) வின் மூலம் பாச மழைபொழிந்து இதயத்தையும், கண்ணத்தையும் நனைய வைக்கும் சிரபூஞ்சி சிடுமூஞ்சியையும் சிலிர்கவைக்கும் அன்பு.தன் ஒத்த வயதுடையோரிடம் சபைக்கு பேரனை முந்த வைப்பதில் செல்ல சண்டை போடும் சேவல். நமக்கு பக்கத்தில் வரும் மெய்காவல். படிக்க ,படிக்க சுவை குறையாத நாவல் புத்தகம் ஆவலை தூண்டும் அதிசயமே அப்பா!!!!!!!!!!!!!!!!!!! உரக்க கத்திச் சொன்னாலும் எங்களை விட்டு சென்றுவிட்ட தூய ஆன்மா!!
அபு இப்ராஹீமின் வேண்டுகோளுக்கிணங்க... .....
மொய்னப்பா அவர்கள் காக்காவீட்டருகே மெயனாக் காரப்பா விடத்தில் வந்து சேருகையில் இல்க்ஹீஹ் என வாணி (ஜொள்ளு) உறிஞ்ச என்னடா(ரயில்)இஞ்சின் வந்து நிண்ட மாதிரி,,? என்று வினவ ஆமாமா... ...அதிராம் பட்டினம் சந்திப்பு நிலையம்..?!என்று காக்கா தம்பி பாராமல் நகைச்சுவை மிகுந்தே இருந்திருக்கின்றனர் .தகுந்த நேரத்தில் "நகைச்சுவை என்றால் மொய்னப்பா தான்"என புகழாரம் சூட்டிய வாவன்னா சா(ச்சா)ர்க்கு நன்றி! இவர்களின் விகடத்தனம் சிலரே அறிவர்!
இவர்களும் இவர்கள் தம்பி மர்ஹூம் உமர்தம்பி சாச்சா அவர்களுடன் துபையில் சில மாதம் ரூம் மேட்டாக இருந்த பாக்கியம் எனக்குண்டு.குளிர்காலத்தில் அவசரமாக பச்சைத்தன்னியில் குளிச்சுட்டு பல்லில் டைப் படித்துக்கொண்டுநடுங்கி வந்த என்னை
"ஏம்ப்பா! ஹீட்டர் போட்டுக்க வேண்டியது தானே...?இல்லையென்றால் வெயில் ஏறி வந்த பொறவு குளிச்சிருக்கலாமே..."என்று கேக்க, நீங்க தானே சார் படிக்கும் போது "கூலானாலும் குளித்துக் குடின்னு சொன்னியோ"என்றேன்.அட மடையா!அது இங்க்லீஷ் கூழ் - நான் சொன்னது தமிழ் கூழ்/ என்றார்கள் கூல்லாக! அதே மாதிரி ஹஜாமி சார் பேட்டி வந்த பொது நான் வெளியூர் பயணத்தில் இருந்ததால் ஒன்றும் எழுத முடியாமற்போய் விட்டது.அதிரையின் பாலச்சந்தர் என்று தலைமை நீதிபதி யால் பாராட்டப்பட்ட
வர்கள் என்னை முதல் மேடை ஏற ச்செய்து,'ஐயோ பாவம் வாய்பேசாத ஊமை' என அறிமுகம் செய்தார்கள்.(என்னை வெளியில் அதி.பிரசங்கி என்கின்றனர்).முதல் பரிசு வாங்கினேன்.மு.வ.மற்றும் நெ.து.சுந்தரவடிவேல் போன்றோர் கையால் பரிசும் பாராட்டும் பெற திறமையை ஊட்டி ஆசி வழங்கிய ஹாஜாமிசா(ச்சா)ர் க்கு நன்றி கூற இத்தருணத்தைப்பயன்படுத்திக்கொள்கிறேன். அல்ஹம்து ளில்லாஹ்! சார்.....அன்று முதல்..முதல் பரிசே வாங்கிக் கொண்டு இருக்கிறேன்.அனைவரும் அனுமதித்தால்
இன்னும் பகிர்வோம்.
_வாழ்க வளமுடன்.
ராஃபியா .
//அனைவரும் அனுமதித்தால் இன்னும் பகிர்வோம். //
MSM(r) காக்கா : இத இதத்தானே எதிர்பார்க்கிறோம்... ஒரு பதிவாக உங்களுக்கே உரிய நகைசுவையாக தொடருங்கள் "மாடார்ன் மோய்னப்பா" அவர்களே !
//அனைவரும் அனுமதித்தால் இன்னும் பகிர்வோம். //
//மோய்னப்பா அவர்கள் பற்றி நெய்னாவும், இளைய இணைய வரவின் புயல் மீராசாவின் தகப்பனாரும் தான் விளக்க வேண்டும்.//
MSM(r) மச்சான் : இத இதத்தானே எதிர்பார்க்கிறோம்... ஒரு பதிவாக உங்களுக்கே உரிய நகைச்சுவையாக தொடருங்கள் "மாடர்ன் மோய்னப்பா" அவர்களே !
சகோ. ரஃபியாவிற்கு,
"இப்படி வண்டி நிறைய பழைய நினைவுகளை வைத்துக்கொண்டு கடலைக்கு ஏங்க வைப்பது நியாயமா? உங்கள் உள்ளக்கிடங்கில் புதைந்திருக்கும் பொக்கிஷங்களை வெளிக்கொண்டு வர (கேரளாவில் தற்சமயம் நடந்து வருவது போல்)ஒரு தனிக்குழுவையே அதிரை நிருபர் குழு நியமித்து அனுப்பும் போல் தெரிகிறதே மார்டர் மொய்னப்பா அவர்களே"
பின்னூட்டமாக இடுவதை விட தனிக்கட்டுரையாக வெளியிட முயற்சி செய்யுங்களேன்.
ஆஹட்டும்...ஆஹட்டும்....
இப்படிக்கு
மு.செ.மு. நெய்னா முஹம்மது (ஜூனியர் மொய்னப்பா)
அப்பப்பா!அப்பாக்கள் கால பசுமை நினைவுகளை தட்டிவிட்ட சகோதரருக்கு நன்றி.அறிவுப்புரட்சி வளர்ந்த இக்காலத்தில் கிடைக்காத பண்பாடுமிக்க ஆரம்ப கல்வியும் தனிமனித ஒழுக்கமும் அப்பாக்களிடமிருந்து பெற்றோம்.சொந்த அப்பா அல்லாமல் தெருவில் இருந்த எல்லா அப்பாக்களும் உரிமையுடன் புத்திமதிகளும் பழங்கால கொழும்பு மற்றும் உலக சம்பவங்களை சொல்லியது இன்றும் பயனாக இருக்கிறது. இன்று சங்கம் நீதிமன்றங் களில் தீர்க்கமுடியாத பிரச்சினைகளை மரைக்கா பள்ளியில் 5 அப்பாக்கள் சபை தீர்த்து வைத்தது ஆச்சரியத்துடன் நினைவுகூரத் தக்கது.எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த அப்பாக்களுக்கு மறுமையில் சுவர்க்கத்தை வழங்க துஆ செய்வோம்.
அன்புடன்
முகி அபுபக்கர்
வாருங்கள் மு.கி(அ): முதல் கருத்தை அழகு பதிந்திருக்கிறீர்கள் அதுமட்டுமல்ல நல்ல நினைவுகளும் சேர்த்தே...
ஒரே ஒரு சந்தேகம், இதனை எழுதியவர் அப்பாவகும் வரை காத்திருந்து விட்டு கருத்திட்டீர்களோ !? :)
தொடர்ந்து வாசிக்கிறீர்கள் என்றும் தெரியும் இனிமேல் உங்களின் விமர்சனங்களையும் தொடர்ந்து எதிர்பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்....
தம்பியின் வரவேற்பிற்கு நன்றி.இன்ஷாஅல்லாஹ் நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.
முகி
Post a Comment