நான் எழுதும் வித்தியாசமானவர்கள் பகுதியை படித்த ஒருவர் ஏன் இப்படி குறை உள்ளவர்கள்தான் உங்கள் கண்ணுக்கு படுகிறார்கள், நல்ல வித்தியாசமான ஆட்கள் உங்கள் கண்ணுக்கு படவில்லையா? என செப்பினார். நான் இவர்களை குறை உள்ளவர்களாக பார்க்கவில்லை. அப்படி நான் பார்க்க ஆரம்பித்தால் அந்த ஆட்கள் கூட நம்மை வித்தியாசமானவர்கள் லிஸ்டில் சேர்க்க கூடும் எனும் அடிப்படை செலபஸ் தெரியாத ஆள் நான் இல்லை. மொத்தத்தில் இவர்களின் காமெடியை நான் ரசிக்கிறேன் அவ்வளவுதான். நல்ல வித்தியாசமானவர்கள் என்றால் எனக்கும் எழுத முடியும், சமீபத்தில் ஒரு பள்ளிவாசல் கட்ட [ மதரசாவுடன்] ஒருவர் தனது வீட்டை அடமானம் வைத்து 2 லட்சம் மலேசிய ரிங்கிட் கொடுத்து உதவினார். இப்படி நிறைய நல்லவர்களையும் சந்தித்து இருக்கிறேன்
இவர்களைப்பற்றி எல்லாம் எழுத ஆசைதான், ஆனாலும் நமது காமெடி பீஸ் களின் லிஸ்ட் இன்னும் அமுத சுரபி மாதிரி வந்து கொண்டிருப்பதுதான் நமக்கு கொஞ்சம் சந்தோசம் [ எழுத மேட்டர் கிடைக்குதுல...மீட்டர் கிடைக்காட்டியும் பரவாயில்லை என எழுதுவோம்...]
கஞ்ச ஆத்மா. இதை இங்குள்ள மார்க்கெட்டில் அதிகம் பார்க்களாம். வயதான சில சீனப்பெண்மனிகள் தன் வீட்டுக்கு மார்க்கெட் சாமான் வாங்க வரும்போது செய்யும் உத்திகள் பல பொருளாதார நிபுணர்களுக்கு வருவதில்லை.
பூண்டு வாங்கும்போது பூண்டை சுற்றியுள்ள தோல்களை கசக்கி கீழே தள்ளிவிட்டு பூண்டை மட்டும் தராசில் போடும் லாவகம் [ தோல் வெயிட்டுக்கெல்லாம் காசு கொடுக்கமுடியாதுல்ல], வெங்காயம் ,கத்தரிக்காய் எடுத்து ஏதொ வெளிக்கிரகத்திலிருந்து வந்த பொருளை பார்ப்பதுபோல் சுற்றி சுற்றி பார்ப்பது [ சத்தியமா சொல்றேன் அப்படியே அந்த கத்தரிக்காயில் பூச்சி இருந்தாலும் இந்த தேவதைகள் கைபட்டு பஸ்பம் ஆகிவிடும்].
வெண்டிக்காயை குறைந்தது ஒரு 30 வருடமாக வாங்குவார்கள் என நினைக்கிரேன், இருப்பினும் பிஞ்சுக்காய் என பார்ப்பதற்கு நுனி உடைப்பதுதான் ஜக்கி ஆகும். கையில் எடுத்து பார்த்தாலே தெரியாதா?. இதுவெல்லாம்தான் காய்கறிக்கடைப்பையன் எப்படி தீவிரவாதியானான் என திரைக்கதை எழுத காரணமாகும் சீன்கள்.
“தங்கச்சிய நாய்கட்சிடுச்சிபா” பார்ட்டி: பழசைதிருப்பி திருப்பி மறு ஒலி/ஓளி பரப்பும் ஆட்கள இது. எனக்கு தெரிந்த ஒருவர் முன்பு ஊரிலிருந்து வந்த லட்டரை இன்னும் பாதுகாத்து வைத்து 'இவன் இப்படியெல்லாம் எழுதுனவன்' என்று தனது உறவினரை எப்போதும் கரிச்சு கொட்டுவார். இதில் கொடுமை என்னவென்றால் அப்போது இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு தபால் எழுத 6 ரூபாய்தான் ஸ்டாம்ப்.[ பகுருதீன் அலி அகமது ஜனாதிபதியாக இருந்த காலம்]. அந்த தபால் எழுதிய உறவினர் இப்போது வளர்ந்து பேரப்பிள்ளை எடுத்திருக்க கூடும். அவர் நிம்மதியாக இருக்க கூடும் [ நான் தான் இந்த பெரியவரிடம் மாட்டிக்கொண்டேன் என நினைக்கிறேன்..கோபமாக தபால் எழுதும் கணவான்களே கொஞ்சம் பார்த்து எழுதுங்கப்பா..]
இங்கிதம் இன்னாசி: இவர்களின் அனிச்சை செயல் மிகவும் வித்யாசமானது. நல்லபடியாக பேசிக்கொண்டிருக்கும்போது திடீர் என கையில் கிடைக்கும் கார் சாவி, ரேனால்ட் பேனா மூடி போன்றவற்றை காதில் விட்டு குடைய ஆரம்பித்துவிடுவார்கள். அதற்க்கு பிறகும் அவர்களிடம் கை குலுக்குபவர்கள் ..'கண்ணிருந்தும்___________________"
நெகட்டிவ் நெல்லீஸ்வர். இவர்கள் எந்த விசயத்தை எடுத்தாளும் ஒரே கெட்ட சகுனமாக பேசுவார்கள். ஒரு தொழில் ஆரம்பிக்கலாம் என ஐடியா கேட்டால் போதும் எஃப் எம் ரேடியொ மாதிரி பேசுவாங்க பேசுவாங்க பேசிக்கிட்டே இருப்பாங்க. ஆனால் ஒரு விசயம் கூட பாசிட்டிவ் ஆக இருக்காது . கண்ணாம்பாள் ரேஞ்சுக்கு சோகத்தை பிழிந்து எடுத்து ஜூஸ் எடுத்து கொடுத்து உங்களை வதைத்து கடைசியில் ஒரு பிட் எடுத்து போடுவாய்ங்க பார்க்கணும். மாப்லே காசை என்கிட்டே கொடு நான் எப்படி டெவலப் பண்ரேன் பாரு......இந்த வசனத்தில் மயங்குபவர்களுக்கு 7 1/2 ஆரம்பித்து விட்டது என துண்டு போட்டு தாண்டலாம்.
"நீதான் உதவனும்"
வெளிநாட்டிலிருந்து வருபவர்களிடம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி பணம் கேட்கும் இவர்கள்தான் இப்போதைக்கு டேஞ்சர் பார்ட்டி. இவர்களிடம் லாஜிக் பேசி தப்பிக்கலாம் என நினைத்தால் நீங்கள் குணசீலத்திலோ, ஏர்வாடி, முத்துப்பேட்டையிலோ லேன்ட் ஆகலாம். [ அந்த அளவுக்கு அவர்கள் குழம்பாமல் உங்களை குழப்பி விடுவார்கள்] இவர்களிடம் 5, 6 சோகக்கதை இருக்கும் ஆளுக்கு தகுந்த மாதிரி ஒலிபரப்பி பல வருடமாக [ சன் டி வி தொடங்குமுன் ] சீரியலை மிஞ்சி அழுது பணம் பார்த்து விட்டார்கள். [ இதில் உண்மையான ஏழைகளும்,அவர்களின் கஸ்டமும் உண்மை] ஆனால் ஒரு 30 - 40 வருடமாக எப்படி வாங்கி சாப்பிட்டே [ உழைக்காமல்] காலம் தள்ள முடிகிறது என்பதை இவர்களிடம் பிஸ்னஸ் மேனேஜ்மன்ட் கற்றுத்தரும் பல்கலைக்கழகங்கள் கற்றுக்கொள்வது நல்லது.
இருந்தாலும் இவர்களுக்கு போதுமான அளவு பண உதவி செய்ய முடிய வில்லையே என ஒருமுறை வருத்தப்பட்டேன், உடனே என் நண்பர் சொன்னது ' அட விட்டுத்தள்ளுங்க... A. T. M மெசின் எப்போதாவது வருத்தப்பட்டிருக்கா?"
அது என்ன A.T. M மெசின்?
ஆமா அவங்களைப்பொருத்தவரை நீங்கள் ஒரு A.T.M மெசின். இந்த ATM மெசினில் பணம் வரவில்லை என்றால் அடுத்த மிசினில் போய் தட்டிப்பார்க்க கிளம்பிடுவாய்ங்கள்ள...இதுக்கெல்லாம் அவர்கள் உங்களை மாதிரி வருத்தப்பட்டா அன்றாட டூட்டி பாதிக்கும்ல.."
- ZAKIR HUSSAIN
9 Responses So Far:
//“தங்கச்சிய நாய்கட்சிடுச்சிபா” பார்ட்டி: பழசைதிருப்பி திருப்பி மறு ஒலி/ஓளி பரப்பும் ஆட்கள இது. எனக்கு தெரிந்த ஒருவர் முன்பு ஊரிலிருந்து வந்த லட்டரை இன்னும் பாதுகாத்து வைத்து 'இவன் இப்படியெல்லாம் எழுதுனவன்' என்று தனது உறவினரை எப்போதும் கரிச்சு கொட்டுவார். //
ஹா ஹ்ஹா !!! அசத்தல் காக்கா : வித்தியாசமானங்க லிஸ்டிலையா இவய்ங்களும்... அட ! அப்படியே பக்கம் பக்கமா எழுதி அதைப் படிப்பவங்களையே படுத்துறவங்ககிட்டே ஏன் இப்படி செய்றீங்கன்னு எடுத்துச் சொன்னாலும் ஏற்க மறுக்கும் அவர்களின் குணம் ஏன்னா அவர்களால் மட்டும்தான் அப்படி எழுத முடியும்னு நெனப்பு வேற... !!
வேலை நாட்காளின் நான் சந்திக்கும் ஒரு வித்தியாசமானவர்: பகல் சாப்பாட்டுகு டைனிங்க் ஹாலுக்கு சென்றால் ஒரே இடத்தில்ததன் உட்காருவார் அந்த இடத்தில் வேறு யாரும் உட்கார்ந்திருந்து வேறு இடம் காலியாக இருந்தாலும் அவர் அங்கு உட்காராமால் அவர் உட்காருமிடம் காலியாகும் வரை காத்திருந்து அப்புறம்தான் அமர்ந்து சாப்பிடுவார், காரணம் அங்கு உட்கார்ந்து சாப்பிட்டால்தான் செரிமானம் சரியா இரூக்குமாம் !!!!!?
வித்தியாசமானவர்களைவிட வித்தியாசமான எழுத்து பாணியே சிரிக்க வைக்கிறது.
கலக்கு வாத்யாரே!
வித்தியாசங்களில் உள்ள
வினோதங்களை
விருந்தாக அள்ளித்தரும்
வித்தகர் என்பது நீங்கள் தான் என்பதில்
வியப்பேதுமில்லை.
கண்டிப்பா அவ்வொ (நம்ம ஜாஹிர் காக்கா தான்) எதெ எழுதுனாலும் வித்தியாசமாகவும், விந்தையாகவும் நம்மூர் சேடையும் கொஞ்சம்,கொஞ்சம் சேர்ந்தே இருக்கும். இன்னும் இக்கட்டுரை முழுசா படிக்கலெ. படிச்சதும் கருத்திடுகிறேன்.
அவ்வொளுக்கு என்னா கொறெச்சி......
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
அருமையான நகைச்சுவை எழுத்துநடை
மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஜாஹிர் காக்கா, சும்மாவா சொன்னாங்க ஆட்டை கழுதையாக்குன ஊருக்கு பொருளாதாரத்தில் கலக்கக் கூடிய சீனர்களை பற்றி ஒரு கலக்கு கலக்கிட்டியலே! 2003ல் குடித்த தேஐஸ் இப்ப குடிப்பதுபோல் இருக்கிறது காக்கா.
லெ.மு.செ.அபுபக்கர்
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஜாஹிர் காக்கா,
ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல சத்தத்துடன் சிரித்துவிட்டேன் இந்த பதிவை படித்துவிட்டு, குறிப்பாக இந்த வரிகளை படித்துவிட்டு
//இவர்களுக்கு போதுமான அளவு பண உதவி செய்ய முடிய வில்லையே என ஒருமுறை வருத்தப்பட்டேன், உடனே என் நண்பர் சொன்னது ' அட விட்டுத்தள்ளுங்க... A. T. M மெசின் எப்போதாவது வருத்தப்பட்டிருக்கா?"
அது என்ன A.T. M மெசின்?
ஆமா அவங்களைப்பொருத்தவரை நீங்கள் ஒரு A.T.M மெசின். இந்த ATM மெசினில் பணம் வரவில்லை என்றால் அடுத்த மிசினில் போய் தட்டிப்பார்க்க கிளம்பிடுவாய்ங்கள்ள...இதுக்கெல்லாம் அவர்கள் உங்களை மாதிரி வருத்தப்பட்டா அன்றாட டூட்டி பாதிக்கும்ல.."//
சிரிக்கவும் ரசிக்கவும் வைத்ததுக்கு மிக்க நன்றி.
ஜாஹிர் காக்காவின் ஆக்கத்தை பணி குறைந்த நேரத்தில்தான் படிக்கவேண்டும் அப்பொழுதுதான் ரசித்து,ருசித்து சிரிக்கமுடியும் என்று ரெண்டுநாள்களாக ஒத்திபோட்டுவிட்டு இன்றுதான் படித்தேன்....நல்ல சிரிப்பு மருந்து சிந்தனைகளுடன்
இங்கு எனக்கு எப்போதும் உற்சாகம் தரும் சகோதரர்களுக்கு [ யாசிர், தாஜுதீன், அபு இப்ராஹிம், அபூபக்கர், நெய்னாமுகம்மது,அப்துல் மாலிக், ஜஹபர் சாதிக்] அனைவருக்கும் நன்றி. அடுத்த ஆர்டிக்கிள்ல் சந்திப்போம்.
Post a Comment