Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தமிழ் இணைய அறிஞர் உமர்தம்பி ! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | July 11, 2011 | , , , ,

தமிழ் இணைய அறிஞர் உமர்தம்பி
||| 15-06-1953 - 12-07-2006 |||


தென்றலில் மிதந்து வந்த தேனீ !


ஓரிரண்டு வயதில் அம்மாவை இழுத்து வந்து,
அமர வைத்துப் பால் உண்டாய்!

ஈறைந்து வயதில் அண்ணனைக் கூட்டி வந்து
உன் உணர்வுக்குத் தீனி போட்டாய்!

ஆறைந்து வயதுக்குப் பின், அறிவின்
ஊற்றாய்த் திகழ்ந் திருந்தாய்!

குரல் வெளி வரும்போதே உன்னிடமிருந்து
குறளும் சேர்ந்தே வந்தது!

ஆறாவதில் அமர்ந்து கொண்டு, ஏழாவதின்
அறிவியல் பாடம் கற்றாய்!

படிப்பில் மார்க் கோணிய பின்னரும்
மார்க்கோனியை முந்த முயன்றாய்!

உயிரியலைக் கற்று உணர்வுக்குப்
புத்துயிர் அளித்து நின்றாய்!

சர்க்கரையாகப் பிறருடன் பேசிய நீ,
சர்க்கரையால் கரைந்து போனாய்!

தென்றலாய்த் தவழ்ந்து வந்த நீ,
இனிப்புப் புயலால் அலைக்கழிந்தாய்!

தெரிந்திருந்தும் தேனீயை நீ
ஏனப்பா தேர்ந் தெடுத்தாய்?

தகாதோரை தேனீயாய்க் கொட்டினாய்!
தமிழ்மீது ஏன் தேனைக் கொட்டினாய்?

தொட்டிலி லிருந்து நெட்டு வரை
என்னுடன் வாழ்ந் திருந்தாய்!

என்னைத் தனி மரமாய் விட்டுவிட்டு
ஏன் தம்பி நீ மட்டும் மறைந்து போனாய்?

- உமர்தம்பி அண்ணன் (வாவன்னா)

உமர்தம்பி அவர்கள் பற்றிய செய்தி வாசிக்க இந்த சுட்டிக்கு செல்லவும் உமர்தம்பி

12 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அன்னாரின் இணையில்லா இணையத்தமிழை அப்பப்ப
அறிவிக்கத்தான் ஆண்டவன் உங்களை விட்டு வைத்தான்.

தமிழில் அன்னார், கொட்டிச் சென்ற தேன்
தமையனவர்களும் அப்பப்ப சுவைக்கத்தான்
தரணியெங்கும் உள்ள அனைவருக்குந்தான்
தன்னலமில்லா அன்னவர்களை இறைவன்
தன் பக்கம் சேர்த்தருள் புரிவானாக! ஆமீன்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------------


அஸ்ஸலாமு அலைக்கும்,

//தகாதோரை தேனீயாய்க் கொட்டினாய்!
தமிழ்மீது ஏன் தேனைக் கொட்டினாய்? //

அந்நிய மொழிக்கு நிகராக தன் தாய்மொழிக்கு புகழை சேர்த்திட இணையத்திற்கு தேனை வார்த்து நம்மை ஈக்களாய் மொய்ப்பதர்க்குதானே!

லெ.மு.செ.அபுபக்கர்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தட்டித் தட்டித் தமிழ் வளர்ந்திட "ஒருங்குறி" எழுத்துரு பிறந்தது !

இன்று யார் வேண்டுமானாலும் கணினியில் தமிழ் எழுத்துக்களை தட்டிப் பார்த்து பரவசமடையலாம், இருந்தது அன்று எழுத்துருக்கள் குலத்திற்கு என்றும் கோத்திரத்திற்கும் என்றும் குழுமங்களுக்கு என்றும் தனித் தனியே !

தேனீ கொட்டியது தேனை !
இணையத்தில் இனித்தது தமிழ் !

ஒருங்குறியின் நோக்கமோ ! ஆங்காங்கே தனித் தனித்தனி பெயர்களில் இருந்த எழுத்துருக்களால் எழுதப்பட்டவைகளை அதனைக் கொண்டே வாசிக்கும் நிலையிருந்ததை மாற்றி எங்கு எழுதிய்னாலும் எதில் எழுதினாலும் வாசிக்க தடையில்லை என்று எழுத்துருக்களின் ஒற்றுமை பறைசாற்றியதே !

ஆதாலால் ! எங்கு எழுதினாலும், எதில் எழுதினாலும் நம்மிடையே ஒருங்கிணைப்பும் தேவைதானே ! :)

அதிரைநிருபர் பதிப்பகம் said...

//தெரிந்திருந்தும் தேனீயை நீ
ஏனப்பா தேர்ந் தெடுத்தாய்?//

தேனீ..
தனக்கென
தனித்
தேன்கூடு வைக்குமென்ற
தெளிவில்தான்
தேர்ந்தெடுத்தேன்
தெரியாமல் போனதண்ண – அவை என்
தேகத்தில் சேர்க்குமந்த
தீதான சர்க்கரையை என்று!

வாவன்ன சாரின் வேதனையில் எமக்கும் பங்குண்டு!

- Sabeer Abu Sharhuk

அப்துல்மாலிக் said...

பாமரனுக்கும்
பாய்மரப்படகாய் திகழ்ந்து
இணையத்தின் பயன்பாட்டை
யாவரும் பயமின்றி
பயன்படுத்த
உறுதுணையாய் இருந்த
உங்கள் தொண்டு என்றென்றும்
நிலைத்து நிற்கும்

தாங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனிடம்
இரு கையேந்தி
வேண்டுகிறேன்....

தாஜுதீன் (THAJUDEEN ) said...

தமிழ் என்றால் தூர நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னைப் போன்றவர்களை தேனீ கொட்டி இணையத்தின் மூலம் தமிழ் மீது ஒரு இணைப்பை ஏற்படுத்தியது.

தமிழ் இணைய அறிஞர் உமர்தம்பி அவர்கள் இன்று இவ்வுலகில் இல்லை என்றாலும், என்றும் இவர்கள் தமிழுக்காக இணையத்தில் செய்த அரும்பணி தமிழ் மொழி அழிவை சந்திக்கும் நிலை நேரிட்டாலும் இணையத் தமிழ் வளர்ச்சி வரலாற்றி இவர்களுக்கு ஒரு இடம் இருந்துக்கொண்டே இருக்கும்.

இவர்களின் ஆஹிரத்து நல் வாழ்வுக்காக என்றேன்றும் எங்களுடைய துஆ இருந்துக்கொண்டே இருக்கும்...

Meerashah Rafia said...

தொழில்நுட்ப மயமான இந்த காலத்தில் நான் அடிக்கடி சில விசயங்களை நினைப்பதுண்டு,

"இது அழிந்து விட்டது, அது காலம் கடந்துவிட்டது, இவை திரும்ப மனதில் இடம் பிடிக்காத, அது இனி வர சாத்திய மில்லை'என்று..
அப்படி நான் நினைத்த ஒன்றுதான் இந்த தமிழும்..

ஆனால் நடுக்கடலில் வீசப்பட்ட நிலையில் இருந்த தமிழை/தமிழ் எழுத்து ஆர்வத்தை சூறாவளியாய் கரை சேர்த்து, இனைய்யக்கடலுக்கு இழுத்து வந்ததை ஒரு அதிசயமாகத்தான் இன்னும் பார்கின்றேன்..


பள்ளிக்காலம் தொட்டு கணினியையே என் முதல் மனைவியாய் தினம் பார்த்து பழகிக்கொண்டிருக்கும் எமக்கு, இன்னும் உங்கள் தொழில்நுட்ப ரகசித்தை அறிந்துகொள்ள முடியாமல் ஆராந்துக்கொண்டே இருக்கின்றேன்..

உயிரியல் படித்து கணினி விஞ்ஞானியாய் ஆன உங்களை நினைத்து கணினி படித்த நான் கொஞ்சம் வெட்கப்படுகிறேன்/பொறாமை படுகின்றேன்(கல்வி பொறாமை நல்லதுதானே!) என்று சொல்வதை விட வேறென்ன சொல்ல?!

அப்பா(டா) தமிழை சுனாமி பேரளைகளிளிருந்து மீட்டு ஆறு கோடி மக்கள்/இனி வரும் பல கோடி மக்கள் பெரும் பயன் அனைத்தும் உங்களுக்கு நன்மைய்யின் வடிவில் வந்து சேரட்டும் என்று துஅ செய்தவனாக..


உங்களை பார்த்திராது உங்'கலை' பயன்படுத்தும்,
உங்கள் பேரன்,
மு.செ.மு.மீராஷாஹ் ரஃபியா

Yasir said...

நாங்களெல்லாம் இணைய தமிழில் புகுந்து விளையாடதேனீ போல உழைத்து அந்த தேனீயைபோலவே தன் சேகரித்தை உழைப்பை தமிழ் சமுதாயம் பயன்படுத்த எந்த விதபலனையும் எதிர்பார்க்காமல் விட்டுசென்ற மதிப்புமிகு உமர்தம்பி காக்கா அவர்களுக்கு என்றும் நாங்கள் துவா செய்வோம்

Zakir Hussain said...

நண்பர் உமர் தம்பியிடம் 2,3 தடவை பேசியிருப்பேன். பேசும்போதெல்லாம் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன் அவரின் அறிவின் விசாலம் கண்டு.

வாவண்ணா சாரின் சோகம் எங்களுக்கும் உண்டு.

அபூ சுஹைமா said...

வாவண்ணா சாரைப் பற்றி பள்ளியில் படிக்கும்போது ரெங்கராஜன் வாத்தியார் சொல்லக் கேட்டதுண்டு.

உமர் தம்பி காக்கா சொந்தம்தான் என்றாலும் நேரில் பழகியதில்லை. அநேகமாக ஓரிரு முறைகள் துபையில் சந்தித்திருக்கக் கூடும். அல்லாஹ் அவர்களின் கப்றை விசாலமாக்கி, சுவனத்தில் உயர் பதவியைத் தருவானாக.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். உமர்தம்பி காக்காவின் கண்டுபிடிப்பினால் நாம் பரப்பும் நல்ல விசயத்தின் மூலம் அவர்களின் செயலுக்கு நன்மை கூடிகொண்டே போகும். அன்னாரின் ஆஹிரத்து வாழ்வை அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பானாக.அமீன்.தமிழ் தேர் ஓட பாதை போட்ட மேதை!அதனால் தான் அந்த தேரை எல்லாரும் கயிருபிடித்து இழுக்க முடிகிறது.வாழ்ந்த கொஞ்ச காலத்தில் காலத்தால் எளிதில் அழியாத தேனியை படைத்த ஞானி!

அதிரைக்காரன் said...

மர்ஹூம் உமர்தம்பி காக்கா அவர்களுக்கு நான் இறுதியாக அனுப்பிய கடிதம் ஒன்றை மீள்வாசிப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஜூலை-8,2006 அன்று அனுப்பிய மின்மடலுக்கு நான்குநாள் கழித்து அவர்களின் மரணச் செய்திதான் பதிலாகக் கிடைத்தது.

உத்தமர் உமர்தம்பி காக்காவுடனான ஓர் உரையாடலில் தமிழுக்குச்சேவை செய்த முஸ்லிம்கள் குறித்த ஓர் ஆய்வுக்கட்டுரைக்கு கணினித்துறையில் உமர்தம்பிகாக்கா பெயரையும் ஜமீல்காக்காவின் பெயரையும் முன்மொழிந்து உள்ளதாகச் சொன்னபோது உமர்தம்பி காக்காவின் பதில் அவர்கள்மீதான நல்லெண்ணத்தை மேலும் உயர்த்தியதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். மின்மடல் உரையாடலின் ஒரு பகுதியை அப்படியே இங்கு மீள்பதிகிறேன்:

> I take your suggestion about naming tools.
>
> Br. Jameel is the best person to tell about first
> Tamil font creator.
>
> Wassalam
> -Umar

அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களைப் பொருந்திக் கொள்வானாக! ஆமின்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு