Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வீணடிக்கப்படும் பொருளாதாரம் 9

அதிரைநிருபர் பதிப்பகம் | July 04, 2011 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பிற்குரிய சகோதரர்களே!

நாம் கடல் கடந்து, தாய், தந்தை, மனைவி, மக்கள் சொந்த பந்தங்கள் யாவரையும் விட்டுப்பிரிந்து சம்பாதிக்க அயல்நாடுகளுக்குச் சென்று சம்பாதித்து பணம் அனுப்புகிறோம். அந்தப் பணத்தை நம் பெண்கள் என்ன செய்கிறார்கள்? தேவையான அளவுக்குபோக மீதி பணத்தைச்சேமித்து வைக்கிறார்களா? அல்லது பிறர் நம்மைப் பாராட்ட வேண்டும் என்று சின்ன விஷயங்களுக் கெல்லாம் விருந்து கொடுக்கிறார்களா? பணத்தை மட்டுமல்ல நாம் ஆசையோடு வாங்கிக்கொடுக்ககூடிய ஒவ்வொரு பொருளையும் எப்படி பாதுகாக்கிறார்கள்?
பொருளினால் விரயமாகும் பணம்
ஆம். அதிரைப் பட்டினத்தில் எங்கு சென்றாலும் காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரையிலும் ஈயம், பித்தளைக்கு நடகடலப் பருப்புஎன்ற அறைகூவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களின் சப்தம் கேட்டவுடன் நம் பெண்கள் வீட்டு உள்ளே இருந்து இந்தாங்க, கல்லகாரவரே!என்ற கூப்பாட்டோடு வெளியே வருகிறார்கள். எதற்கு? துருப்பிடித்த இரும்பை அல்லது உடைந்த பிளாஸ்டிக்கை அள்ளிப்போட்டு கடலை வாங்கவா? இல்லையே!

பல ரூபாய் மதிப்புள்ள பிரிட்ஜ், வாஷிங் மிஷின், பீரோ, மற்றும் எலக்ட்ரானிக் பொருள்கள் சிறிய ரிப்பேராகத்தான் இருக்கும். பழுது பார்த்துவிட்டு பல வருடங்கள் உபயோகிக்கக் கூடிய அப்பொருள்களை மனசாட்சி இல்லாமல் அற்ப கொஞ்ச காசுகளுக்கு அள்ளி கொடுத்துவிட்டு புதுசாக வாங்கித்தாருங்கள் என்று கணவனையோ, தகப்பனையோ, சகோதர்னையோ, பிச்சு எடுக்கக்கூடிய அவல நிலை நம் ஊரில் அதிகமாகக்காணப்படுகின்றது. நம்மைப்போன்றும் நமக்கு மேலதிகமாக சம்பாதிக்கக்கூடிய மாற்று மதத்தவரும் செலவு செய்கிறார்கள்; நம்மைப்போன்றா? இல்லை. அவர்கள் பட்ஜெட் போட்டு ஒவ்வொரு மாதமும் செலவு செய்கிறார்கள். நாம் மனைவி மக்களின் பாசங்கள் மேலோங்க அவர்கள் கேட்கக் கூடியவைகளை எல்லாம் வாங்கிக் கொடுத்து பொருளாதாரத்தை வீண் விரயம் செய்து பெருமகிழ்ச்சி அடைகிறோம்
நான் நேரில் பார்த்த ஒரு சம்பவத்தைச் சுட்டிக் காட்டுகிறேன்: 3,500/= ரூபாய் மதிப்புள்ள போர் செட் பைப்பை, எந்தவிதமான டேமேஜ் இல்லாததை, எடை போடுகிறார்கள். நான் அந்த சைக்கிள்காரரிடம் கேட்டேன்: எவ்வளவுக்கு எடுத்தாய்என்று. அவர் சொன்னார், “கிலோ 4 ரூபாய்க்கு எடுத்தேன்”. அந்தப் பைப்புக்கு காசைக் கொடுத்துவிட்டு அவசர அவசரமாக சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தள்ள முடியாமல் தள்ளிக் கொண்டு ஓடுகிறார்.
அன்பிற்குரிய சகோதரர்களே சிந்தியுங்கள். நீங்கள் வாங்கிக் கொடுக்கக்கூடிய ஒவ்வொரு பொருளையும் கவனியுங்கள்; விசாரியுங்கள். தெரியாதது போலஇருந்து விடாதீர்கள். ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: நாளை மறுமைநாளில் அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் கேள்வி கணக்குகள் கேட்கப்படும். அவற்றில் ஒன்றுதான் நீ எந்த வழியில் சம்பாதித்தாய்? எந்த வழியில் சம்பாதித்த பொருளைச் செலவு செய்தாய்? சொல். ஒவ்வொரு பைசாவுக்கும் அல்லாஹ் கேள்வி கேட்பானே அப்படிப்பட்ட நாளை பயந்து செலவு செய்யுங்கள். சகோதரர்களே அறியாமல் செய்த பாவத்தை அல்லாஹ் மன்னிப்பதோடு, இனி எஞ்சி இருக்கக்கூடிய காலங்களில் அல்லாஹ் பொருந்திக் கொள்ளக்கூடிய வகையில் பொருள் ஈட்டி செலவு செய்யக் கூடியவர்களாக நம்மை ஆக்குவானாக ஆமீன்!
லெ.மு.செ. முகம்மது அபுபக்கர்

9 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அன்றாட நமதூர் வீதிதோரும் நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றினை கூர்ந்து அவதானித்து விழிப்புணர்வூட்டியிருக்கும் நல்ல ஆக்கம் !

வெல்டன் லெ.மு.செ(பக்கர்)... !

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-----------------------------------------
அங்கே கணவன் கடலைத் தாண்டி இரும்பாய் உழைக்கிறான்;
இங்கே கணைவி கடலை வாங்க இரும்பை விற்கிறாள்.

-வாவன்னா

அப்துல்மாலிக் said...

என்கூட படித்த மாற்று மத நண்பர் சொன்னது, 45 லட்சம் கையிலே இருந்தால் தனக்குனு சிறிய வீடு 12-15 லட்சத்துலே கட்டிக்கிட்டு மீதியை வியாபாரத்துலே இன்வெஸ்ட் செய்து எப்பவும் முதலாளியா வாழ்வாங்க, அதே பணம் நம்மாளுங்க கிட்டே இருந்தா கூட 5 லட்சம் போட்டு சொகுசா (பங்களா) வீட்ட கட்டிவிட்டு வெளிநாட்டுலே சின்ன அறையிலே 2*6 அடி கட்டிலேயும் மூட்டப்பூச்சி கடியிலேயும் காலத்தை கடத்துறாங்க...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பான அபுபக்கர்,

சாதாரணமாக நடைப்பெறும் அன்றாட நிகழ்வுகள் இது போல் கவனித்தால் நிறைய பணம் வீண்விரையாமாகிறது என்பது உண்மை.

வீட்டில் உள்ளவர்களுக்கு அதிக விலை கொடுத்து மொபைல் போன்கள் வாங்கி கொடுப்பதை தவிர்பது நல்லது. அவ்வகையான போன்களில் உள்ள வசதியை பற்றி அறியாமலே நம்மில் பலர் பயன்படுத்திவருகிறோம்.

அதிரையிலும் pktயிலும் போன் ரிப்பேர் செய்யும் கடைகளில் விலை உயர்ந்த மொபைல் போன்களே அதிகம் இருப்பதை காணமுடிந்தது. இதில் அதிரைவாசிகளின் மொபைல் போன்கள் எண்ணிக்கை தெரியவில்லை.

Yasir said...

சகோ.(அபு)பக்கரின் பக்காவான ஆக்கம்...பொருளாதரம் அநாவசியமாக வீணடிக்கபடுகிறதுதான்....கண்கூடாக காண்கின்றோம்...இன்னும் கொஞ்சம் நீட்டி எழுதி இருக்கலாம்...எடுத்த தலைப்பு அருமை..இதன் 2 அத்தியாத்தை விரைவில் எழுதுங்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எங்கே(டா)ப்பா யாசிரைக் காணோமே ஊருக்கு எங்கேயும் கிளம்பியாச்சான்னு இப்போதான் நெனச்சுகிட்டு இருந்தேன்... அட ! பிரஸண்ட்!

Yasir said...

நீங்க நினைச்சா வரும்வோம்ல!!!காக்கா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நீங்க நினைச்சா வரும்வோம்ல!!!காக்கா//

அழைக்கும் குரலுக்கும்
ஆர்ப்பரிக்கும் ஆனந்தமாய்
இனிமையாவர்கள் இருந்திடவே
ஈரானுக்கு சென்றாலும்
உறவுகள் உலாவிடும்
ஊடகம் தேடித்தான்
எங்கிருந்தாலும் வந்திடுவீரே !
ஏழு நாட்களும் வாசித்தாலும்
ஐந்து நாட்கள்தான் வேலையென்று
ஒன்றோடு இருந்திடாமல்
ஓய்வின்றி வந்திடுவீரே !
ஒள !!!
ஃ ஆதலால் ! தேடத்தான் செய்தேன் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

எம்மவர்களிடம் இப்படி காசை 'கடலை'யாக்கும் அனாச்சாரங்கள் இல்லை.அல்ஹம்துலில்லாஹ்.ஆனால் நம்மவர்களில் பலர் இப்படித்தான் இருக்கார்கள் என்று சகோதரர் அபூபக்கர் சொல்வதுபோல் எம்மவர்களும் சொல்லத்தெரிந்தது.வெல்டன் லெ.மு.செ(பக்கர்)... !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு