Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பணி வாழ்வும் பணி ஓய்வும்: ஹனீபா சார் 11

ZAKIR HUSSAIN | July 04, 2011 | , ,

இது மரியாதைக்குறிய ஆசிரியர் [N.M. முகம்மது ஹனீபா] ஹனீபா சார் அவர்களுடைய பேட்டி. இதை வெளியிட உதவிய வாவன்னா சார் அவர்களுக்கு மிக்க நன்றி.[ எல்லா முன்னால் மாணவர்கள் சார்பிலிருந்தும்]

பணி வாழ்வும் பணி ஓய்வும்
என்னுடைய ஆசிரிய அறப்பணியை பற்றிக் கூறும்பொழுது., 1959- ஆம் ஆண்டு S.S.L.C. முடித்திருந்தேன். 1961- வரையிலும் ஒன்றுமறியாது விழித்திருந்தேன். ஒரு நாள் வழக்கம்போல் சேர்மேன் வாடிக்குப்போனேன். மர்ஹூம் தாளாளர் (S.M.S. ஷேக் ஜலாலுதீன் )அவர்களைச் சந்தித்தேன். கல்வித் தந்தை ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் அவர்கள் என்மீது மிகவும் பிரியம் உள்ளவர். என்னை அழைத்துச் சொன்னார்: “D.E.O. சுல்தான் முகைதீன் (கல்வி அதிகாரி) இன்று நம் பள்ளிக்கு வருகிறார், ஆய்வுக்காக. உணவு உன் வீட்டில்தானாமேஎன்றார். ஆமாம். “D.E.O. எனக்கு என் சாச்சா மூலம் பழக்கம்என்றேன்.
அச்சூழலில் D.E.O. சுல்தான் முகைதீன் அவர்கள் ஆசிரியப் பயிற்சிக்கான விண்ணப்பத்தைத் தந்து இதில் கையெழுத்துமிடும்என்றார். இதைக் கவனித்துக் கொண்டிருந்த தாளாளர் அவர்கள், “ஆசிரியர் பயிற்சிக்குப்பின் நம் பள்ளியில் உனக்கு வேலை உண்டுஎன்றார்கள். நான் மகிழ்ந்துபோனேன்.
1961-63-ல் பயிற்சி முடிந்தது. ஹாஜி S.M.S. அவர்கள் தேர்வு முடிவதற்கு முன்னரே பணி ஆணை கொடுத்தார்கள் (அவர்களுக்கு மறு உலக வாழ்க்கையில் இறைவன் வெற்றியைக் கொடுப்பானாக!). பணி செய்தேன் காதிர் முகைதீன் உயர் நிலைப் பள்ளியில், பத்தாண்டுகள். பிறகு MELT என்னும் ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கும் முறையிலும் பயிற்சி பெற்றேன். பள்ளியில் எல்லா பாடங்களையும் நடத்தினேன். கணக்குப் பாடம் நடத்துவதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம்.
பள்ளிக்கூடத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டேன். மாணவர்களை பேச்சுப் போட்டிக்கு ஊக்கப்படுத்தி, தயார் படுத்தினேன். பேச்சாளர்கள் நிறைய உருவானார்கள். பள்ளி விழாக்கள் வெற்றிகரமாக் நடைபெற என் பங்களிப்பை நிறையத் தந்திருக்கிறேன்.
இந்த நிலையில் என் தந்தை அழைத்தார், வாணிபத்தில் உழைக்க! ஐந்தாண்டுகள் வாணிபத்தில் கழித்தேன். நட்டம் வாணிபத்தில் மட்டம் போட வைத்தது. தளர்ந்து போனேன்.
தாளாளர் என் நிலை அறிந்தார்கள். தளராதே! ஹனீபா, பள்ளிக்கு போ! வேலையைப் பாரு, ஆசிரியராய்என்றார்கள். பணியைத் மீண்டும் தொடர்ந்தேன். சிறப்பு நிலை இடை நிலை ஆசிரியர் தகுதி கிடைத்தது. அதன் பின் இடைநிலை உதவித் தலைமை ஆசிரியராகப் பணி உயர்வும் பெற்றேன். 1999-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்று தகுதியான ஓய்வூதியமும் பெற்று நல்லபடியாக வாழ்ந்து வருகிறேன். அல்ஹம்துலில்லாஹ்!
என்னிடம் படித்த மாணவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள். அவர்கள் வெளி நாட்டிலிருந்து வந்தால் என்னைக் கண்டு, ”சார்! நல்லா இருக்கிறீர்களா?” என்பார்கள். அவர்கள் யாரென்றே தெரியாமல் முழிப்பேன். சார் உங்களிடத்தில்தான் படித்தேன்என்று அவர்கள் பெயர்களைச் சொல்வார்கள். புரிந்து கொள்வேன். என்னிடம் படித்தவர்கள் எத்தனையோ பேர் வெளி நாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் ஊரிலிருந்து வந்தால்,”நல்லா இருக்கிறீர்களா?” என்று கேட்பார்கள். என்னிடம் படித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தமிழ் இணைய அறிஞர் உமர் தம்பி, டாக்டர்கள் மீராசாஹிப், அமீன், சலீம், Er.அகமது அலி மற்றும் சிலர்.
படித்த காலத்திலிருந்து இன்று வரை என்னோடு பழகிக்கொண்டிருப்பவர்கள் தஞ்சையின் புகழ் பெற்ற மருத்துவர் Dr.S. வாஞ்சிலிங்கம், M.D.,D.M., S.K.M. ஹாஜா முஹைதீன், வா. அப்துல் காதிர், அலியார் சார் ஆகியோர். டாக்டர் வாஞ்சிலிங்கம் என் குடும்ப நண்பர்; குடும்ப நிகழ்ச்சிகளுக்குப் போக வர இருப்போம். டாக்டர் வாஞ்சிலிங்கத்திடம், அப்பாயின்ட்மென்ட் வாங்குவது மிகவும் கடினம். ஒரு சமூக சேவையாக எண்ணி பலருக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொடுத்து வருகிறேன்.
எனக்கு இரண்டு ஆண் மக்கள், இரண்டு பெண் மக்கள். நால்வரும் மணமானவர்கள். மூத்த மகன் அலி அக்பர், கா.மு. கல்லூரியில் அலுவலகத்தில் பணி யாற்றுகிறார். இளைய மகன் சகாபுதீன், M.Sc. Computer Science படித்திருக்கிறார். கா.மு.ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் தற்காலிகமாக‌ கணினி ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
வீட்டுக்கும் பள்ளிவாசலுக்கும் இடையில் பேரன் பேத்திகளோடு பொழுது திருப்தியோடு போய்க் கொண்டிருக்கிறது. இறைவனுக்கே எல்லாப்புகழும்.
N.M. முகம்மது ஹனீபா

11 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அருமை ஆசான் ஹனிபா சார் அவர்களின் பேட்டி எங்கே என்று காத்துக் கொண்டிருந்த வேலையில் சிரத்தை எடுத்து பேட்டி கண்டு பதிந்த அசத்தல் காக்காவிற்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர் !

//என்னிடம் படித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தமிழ் இணைய அறிஞர் உமர் தம்பி, டாக்டர்கள் மீராசாஹிப், அமீன், சலீம், Er.அகமது அலி மற்றும் சிலர்.//

மேலேச் சொல்லியிருக்கிற சாதனையாளர்களோடு எங்களையும் சேர்த்துகிடுங்க சார் ! என்ன இருந்தாலும் உங்களோடு இருந்த நாட்களை இன்றும் நாங்களும் அசைபோடுகிறோமே !

பள்ளியில் படிக்கும்போது அடிவாங்கியது என்றால் உங்களிடம் மட்டும்தான், உங்களின் நட்புகளின்பால் கொண்ட அன்பால் இருந்திருக்கலாம் !

மறைந்த கல்வித் தந்தை மர்ஹூம் SMS ஷேக் ஜலாலுதீன் அவர்களின் சேவையுடன் கூடிய அரவனைப்பும் ஆளுமையும் எத்தனையோ வெற்றியாளர்களை உலகிற்கு அடையாளம் காட்டியிருக்கிறது...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இனிய நினைவிலிருக்கும் சாரவர்களை மலரச்செய்த அசத்தல் காக்காவுக்கு நன்றி.
சாரவர்களின் ஆரோக்கியமும் சந்தோசமும் என்றும் தொடர துஆக்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மரியாதைகுறிய ஹனீபா சார் அவர்களிடம் பயிலும் வாய்பு கிடைக்காவிட்டாலும், வாத்தியார்களின் குடும்பத்தில் பிறந்த எனக்கு ஹனீபா சார் பழக்கம்.

சென்ற வாரம் ஊரில் இருக்கும் போது சந்தித்து சில வினாடிகள் நலம் விசாரித்தேன்.

ஆசிரியர் பணியில் இருந்தவர்கள் தங்களால் முடிந்த சமூக சேவைகளில் ஈடுபட்டுவருகிறார் என்பதை அன்றாடம் நாம் காணமுடிகிறது.

ஒரு மனிதனுக்கு ஆசிரியர் பணியில் கிடைக்கும் மனதிருப்தி வேறு எந்த வேலைகளிலும் கிடைக்காது என்பதை இது போன்ற பதிவுகள் அதிரை இளையோருக்கு உணர்த்தும் என்று சொன்னால் மிகையில்லை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

தன் சொந்த முயற்சியில் தான் பள்ளியில் பயின்ற ஆசான்கள் ஒவ்வொருவாராக பதிவுகளில் ஞாபகப்படுத்திவரும் அன்பான ஜாஹிர் காக்கா அவர்களுக்கு மிக்க நன்றி.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
------------------------------------------

நன்றி ஜாகீர் ஹுசைன்,

சிறப்பு நிகழ்ச்சிகளின்போது, அதே சிந்தனையில் பக்கத்து வீட்டுக்காரரை கூப்பிட மறந்து விடுவது போல, தினமும் ஜாவியாவிலிருந்து வெளியே வரும்போது என்னோடு ஜாலியாகப் பேசிக்கொண்டு வரும் என் வகுப்புத் தோழர் கவிஞர் தாஹாவை குறிப்பிட மறந்துவிட்டேனே. ஆஹா! எவ்வளவு பெரிய தவறு. அவர் மன்னித்தாலும் என் மனசாட்சி மன்னிக்காது. விடுபட்ட நெருக்கங்களும் என்னை மன்னிப்பார்களாக.

N.M. முகம்மது ஹனீபா

அப்துல்மாலிக் said...

Because...! என்ற வார்த்தை எங்கே எப்படி பயன்படுத்தவேண்டும் என்று கற்றுத்தந்தவர், இன்றும் இந்த வார்த்தையை பயன்படுத்தும்போது இந்த மதிப்பிர்குரிய ஆசானின் முகமும் வந்துபோவதில் ஆச்சரியமில்லைதானே.

ஹனீபா சார் இரு சக்கர வாகனம் வாங்கிய புதிதில் எதிர்திசையில் பஸ் வந்தால் உடனே நிறுத்தி இறங்கி ஓரமாக நின்னு அது சென்றவுடன் மறுபடியும் வாகனம் ஓட்டிசெல்வார்கள் என்ற ஒரு செய்தி உலாவந்தது, இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, இருந்தாலும் அவர்களின் இதுமாதிரி முன் நடவடிக்கை என்னை ஆச்சரியப்பட வைத்தது.. அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளை கொடுப்பானாகவும்...

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இனிய ஹானிபா ஆசனை பற்றி சொல்லவிளையும் போதே ஒருவித மகிழ்வு மனதில் தோன்றுகிறது. என் தந்தையாரின் பள்ளித்தோழர்மட்டுமல்ல இன்றுவரை தோழர் அதனால்தான் எனக்கு கார்டியனாக என் பள்ளி நாட்களில் இருந்தார்கள். அவர்களின் உரிமையான கண்டிப்பும், கரிசனையும் என் வாழ்வில் மறக்கவியலாது பின்னி படர்ந்தவைகள். அல்லாஹ் அவர்களின் வாழ்கையை நல் ஆரோக்கியத்துடன் நீட்டித்து வைப்பானாக ஆமீன்.

Yasir said...

ஹனீபா சாரை பற்றி படிக்கும்போது ஒரு வித மகிழ்ச்சியால் மனம் துள்ளுகிறது...சாரிடம் நீண்ட காலமாக பள்ளியில் படித்த அனுபவம் எனக்கு உண்டு..ரோட்டில் காண நேரிட்டாலும் அன்போடு பேசும் அவர்களின் முகம் மனதில் ஆழமாக பதிந்து கிடக்கிறது..

சார் அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியமான வாழ்வை எப்போதும் தந்தருள்வானக..ஆமின்

ஜாஹிர் காக்கா...இந்த மாதிரி மாமனிதர்களை பேட்டி எடுத்தும் ..எங்களுக்கு படிக்க சுவையாகவும் தரும் உங்களை எங்கள் துவாவில் மறக்கமாட்டோம்

ZAKIR HUSSAIN said...

இந்த பதிவிற்காக எனக்கு சொன்ன நன்றியை அப்படியே வாவன்னா சாருக்கு ரீ-டைரக்ட் செய்கிறேன்.

ஹனீபா சாரிடம் நான் மாணவனாக படிக்கவில்லை. இருப்பினும் நான் ஸ்போர்ட்ஸ் டே அன்றைக்கு போட்டிருந்த சிவப்பு நிற Adidas Sports dress யை பார்த்து அவர் சொன்னது ' பார்த்து ஒடுப்பா...இதப்போட்டுட்டு ரயில்வே ஸ்டேசன் பக்கம் போயிடாதே ரயில் நின்னுடப்போவுது'"

அமைதியான மனிதராக இருந்தாலும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜாஹிர் காக்கா,

தாமதமான என் பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

நம்மூர் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களிடமிருந்து பிரத்யேக பேட்டி எடுத்து எமக்கெல்லாம் வழங்கி வரும் தமக்கும், நம் அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக. ஆமீன்...

கண்கள் குளமாகுதம்மா நம் பழையவர்களின் நினைவுகளை பகிர்கையிலே....

சொல்ல வார்த்தைகளில்லை... நம் முன்னோர்களை தற்கால இளையவர்களுடன் ஒப்பிட்டு பார்க்க முடியவில்லை....

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

Anonymous said...

Thank you ! Mr. Jakir Hussain.

Cool memories !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு