வரக்கூடிய புனித ரமளான் மாதத்தை வரவேற்கும் வகையிலும் அதன் ஒரு மாத தேவைகளை அது வரும் முன்னரே செய்து முடித்து தயாராக இருக்க வேண்டியும், அரசிடமிருந்து நமக்கு தற்சமயம் என்ன வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இரு நபர்கள் நம்ம ஊர் பாசையில் (அதுவும் தமிழ் தான்) பேசிக்கொண்ட உரையாடலை இங்கு அனைவரின் பார்வைக்காக வழங்கப்படுகிறது.
வாலிபர் : அஸ்ஸலாமு அலைக்கும் வாங்க ஹாக்கா.... என்னா நோம்புக்கு இப்பவே ரெடியான மாதிரி தெரியுது?
காக்கா : ஆமாடாத்தம்பி நோன்பு வந்துருச்சிண்டா வேலெவெட்டி பாக்குறது, அங்கெ இங்கெ அலையிறது செரமமா ஈக்கிமில்லை? அதுனாலெ தான் அது வர்ரதுக்கு முன்னாடி சில்லரை வேலைகளை செஞ்சி முடிச்சிடனும்.
வாலிபர் : சரியாச்சொன்னிய ஹாக்கா...
காக்கா : மளிகைச்சாமான்கள் வாங்கி இப்பவே ஊட்லெ கொடுத்து அதை நல்லா சுத்தம் செய்து அறச்சி வக்க சொல்லிப்புட்டேன் பொம்புளையல்வொட்ட. அப்புறம் அவ்வொளுக்கு வேண்டிய துணிமணியும் எடுத்துக்கொடுத்து இப்பவே தக்கவும் கொடுத்துட வேண்டியது தான். நோம்பு நேரத்துலெ பட்டுக்கோட்டைக்கும், தஞ்சாவுருக்கும் இதுக்காக அலைய முடியாது பாத்தியா?
வாலிபர் : காக்கா எல்லாத்துலையும் உஷார் தான் நீங்க. நோன்பு தொறக்குறது ஊட்லயா? பள்ளியாசல்லையா?
காக்கா: பள்ளியாசல்லையும், ஊட்லையும் மாறி மாறி தொறக்க வேண்டியது தான். ஊட்லெ தொறந்தா திங்க சாமானுவோ நெறையா கெடெக்கும் நல்லா திண்டுட்டு சட்டுண்டு பள்ளியாசலுக்கு வர முடியுறது இல்லை. அதனாலெ மஹ்ரிப் தொழுவையும் மிஸ்ஸாயிடும் இல்லாட்டி வக்த் முழுசா கெடெக்கிறது இல்லை. அதுனாலெ பள்ளியாசல்லெ தொறந்துட்டு மஹ்ரிப் தொழுகைக்கப்புறம் ஊட்லெ போயி நல்லா வெட்ட வேண்டியது தானே? எல்லாத்தையும் ஒரே நேரத்துல வேட்டு வக்கனும்டு நெனெச்சா எப்புடி?
வாலிபர் : காக்கா எதெ சொன்னாலும் கரக்ட்டா தான் ஈக்கிம். காக்கா உங்கள் பழைய நோன்பு கால நெனெப்புவொலெ கொஞ்சம் இங்கெ சொல்லுங்களேன்.
காக்கா : அதெ யான்டா தம்பி இப்பொ கேக்குறா? அதெல்லாம் ஒரு பெரும் கதைடா..சொல்லிக்கிட்டே ஈக்கலாம். சஹர் நேரத்துலெ அரிக்களாம்பு தூக்கி கிட்டு வர்ர சவுரு பக்கிர்சாவுலெர்ந்து அடுத்த நாள் சவுரு வரைக்கும் நெரையா சொல்லிக்கிட்டே போவலாம். அதுக்கு இப்பொ நேரம் ஈக்காது..
வாலிபர் : சரி ஹாக்கா நேரம் கெடெக்கும் போது கொஞ்சம், கொஞ்சமா சொல்லுங்க..
காக்கா : ஒரு ஹாலத்துலெ காசு பணமெல்லாம் எங்கே ஈந்திச்சி எல்லார்ட்டையும்? மானம், மரியாதை, ஒழுக்கம், நல்ல பண்புகள்ண்டு எல்லார்ட்டையும் நெறெஞ்சி இருந்திச்சி. அதுனால பெரிய,பெரிய பிரச்சினைகளும் சண்டை சச்சரவுகளும், குடும்ப பிரச்சினைகளும் இல்லாமெ சுமூகமாத்தான் போய்க்கிட்டு இருந்திச்சி. வயசான பெரியவங்க எல்லாம் எல்லாத்தெருவுலெயும், வீட்லெயும் ஈந்தாங்க. அவங்க கட்டுப்பாட்லெ எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்திச்சி. இப்பொ எங்கடாத்தம்பி பெரியவங்களெ பாக்க முடியுது? எல்லார்மே சீக்கனம் போயி சேந்துட்டங்களே??
வாலிபர் : அப்புடியா ஹாக்கா? அப்பொ இப்பொ உள்ள காலம் உங்களுக்கெல்லாம் மன நிறைவைத்தரலையா? புடிக்கலையா?
காக்கா : அந்த காலத்தோட இந்த காலத்தெ ஒப்பிட்டா நெறைய சொளகரியங்களெ விட அசொளகரியங்கள் தான் ஜாஸ்த்தி இந்த காலத்துலெ. போவப்போவ உனக்கும் தெரியும்டா தம்பி இந்த காலத்துலெ நீ என்னஎன்னத்தெ அனுபவிக்கிறியோ அதை வரும் காலத்துலெ நீ ஒப்பிட்டு பாக்கும் பொழுது.
வாலிபர் : என்னன்னமோ சொல்லி யாங்கங்க இப்புடி பயம் காட்றியெ..
காக்கா: இல்லடா தம்பி நடப்பத்தானே சொன்னேன். நீ சின்னப்புள்ளெயா ஈக்கிறதுனாலெ உனக்கு ஒன்னும் புரியாது இப்போ.
வாலிபர் : சரி ஹாக்கா வர்ர நோம்புக்காக இப்பொ என்னா சொல்ல வர்ரியெ? சொல்லுங்க...
காக்கா : இல்லடாத்தம்பி நீ கேக்குறதுனாலெ சொல்றேன் நாம நம்ம தொகுதி எம்.எல்.ஏ.ட்டையும் இந்த புது அரசாங்கத்துட்டையும் பெரிசா ஒன்னும் கேக்கலெ,எதிர்பாக்கலெ. அந்த சலுகையெ குடு, இந்த வசதியெ செஞ்சித்தாண்டு கொடி புடிக்கலெ. நோம்பு நேரத்துலெ அடிக்கடி கரண்ட் போவாமெ அவங்க பாத்துக்கிட்டாலே அது நம்ம சமுதாயத்துக்கும், ஊருக்கும் செஞ்ச பெரிய ஒதவியா ஈக்கிம். ராத்திரி நேரத்துலெயும், சஹர் நேரத்துலேயும் நம்மூட்டு பொம்புளையெலுவோ முழிச்சிக்கிட்டு இருந்து சமைக்கும் போது இப்புடி அடிக்கடி கெரண்டு போனா அவங்களுக்கு செரமம் இல்லையா? பாவம் தானே? எல்லார் ஊட்லெயுமா ஜெனரேட்டரும், இன்வன்ட்டரும் ஈக்கிது? செல பேரு நம்ம சமுதாயத்துக்கு எதாவது ஒரு வழியிலெ தேவையில்லாம தொந்தரவும், தொல்லையும் கொடுக்கனும்டு நெனெச்சிக்கிடு ஈக்கிறவங்களுக்கு அல்லாஹ் தான் நல்ல புத்தியெ கொடுத்து திருத்தனும்.
வாலிபர் : உங்கள்ட்ட பேசினா எதாவது நல்ல விசயம் தான் பேசுவிய. அல்லாஹ் தான் வரக்கூடிய நோம்பை நமக்கெல்லாம் சிறப்பாக்கி, சலாமத்தாக்கி வக்கனும்.
காக்கா : எல்லாத்துக்கும் துவாச்செய்டா தம்பி இந்த காக்காவையும் சேத்துக்கோடா. நான் மேலே சொன்ன மாதிரி நோம்புக்கு இன்னும் ரெண்டு வாரம் தான் ஈக்கிது. நீயும் அதுக்குள்ள எல்லாத்தயாரிப்பையும் இப்பவே செஞ்சிக்க. அதுக்கப்புறம் ஒனக்கு செரமம் ஈக்காது எதுலெயும். பள்ளியாசல்லெயும், ஊட்லெயும் குர்வான் ஓதுறத்துக்கும், மத்த அமல்கள் செய்யிறத்துக்கும் நேரம் நல்லா கெடெக்கும்...அதுனாலெ சொல்றேன் சரியா?
வரட்டா.. பாப்போம்டா தம்பி இஷாவுக்கு பாங்கு சொல்லப்போறாஹெ....
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
8 Responses So Far:
யாங்க ஹாக்கா கேக்குறீயோ இன்னைக்கு பூரா நாளும் காலையிலேருந்து பாலாப் போன மின்சாரம் இல்லை ஹாக்கா ஊருல...
ஹில்லாரி மேடமெல்லாம் வந்துட்டு போனாங்களாம் அவொட்ட மின்சாரத்துல டாலரைப் போட்டுட்டு போஹ சொன்னாஹலாம்ல நம்ம முதலமைச்சரம்மா !!??????
நல்லாத்தானே ஈக்கிது கேட்க, அந்த டாலரெல்லாம் வந்திச்சுன்னா கழுத்துலயில போட்டுக்குவாஹ இந்த அம்மா !!
அறுமையான உரையாடல் நடை. தெருவுக்குப்போய் வந்தமாதிரி இருந்தது.
தொடரட்டும் எம் எஸ் எம்மின் மேஜிக்!
யாங்க ஹாக்கா ! ஒரே ஒரு இல்லெயில்லே இரண்டு கொஸ்டீன் ஹாக்கா..
வெண்ணை எந்த மாட்டின் (பசு / எருமை) பாலில் இருந்து எடுக்கிறாங்க !?
அப்படின்னா ஏன் அதனை கடைந்தெரித்த வெண்ணெய்ன்னு சொல்றாங்க ஹாக்கா ?
யாங்கன்கா மச்சான் உங்க பேச்சு வார்த்தை நல்லாத்தான் ஈக்கிது.
யாங்க மின்சார வாரிய அண்ணே!எங்கள் நெய்னாவின் கோரிக்கையெ ஏத்துக்குட்டு கெரெண்டு கட்டாகாமே பாத்துக்குங்கண்ணே.நெய்னா ஹாக்கா சொர்ராகனா சதியா தான் சொல்லுவாகள்.அந்த காக்காவெ பகெச்சுகிடதியோணே!
இந்த களிச்சலா போய்டுவானுவோ நோம்பு கீம்புனு பாக்காம இங்கிட்டு கரண்ட புடிங்கிடுறானுவோலே, சஹருக்கு வெள்ளாங்காட்டி எந்திரிச்சி ஆனங்காச்சலாம்னா இருடுலே ஒன்னுமே தெரியலியே..
இப்படிக்கு
அதிரை பெண்கள்...
இது அவங்க கவலை...@@@#@
M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…
யாங்கன்கா மச்சான் உங்க பேச்சு வார்த்தை நல்லாத்தான் ஈக்கிது.
யாங்க மின்சார வாரிய அண்ணே!எங்கள் நெய்னாவின் கோரிக்கையெ ஏத்துக்குட்டு கெரெண்டு கட்டாகாமே பாத்துக்குங்கண்ணே.நெய்னா ஹாக்கா சொர்ராகனா சதியா தான் சொல்லுவாகள்.அந்த காக்காவெ பகெச்சுகிடதியோணே!
--------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஏன் கேக்குரியோ?(அப்ப கேக்கவேண்டாமா?)இந்த கவர்மன்ட் பயலுவோ காரியம் ஆகனும்னா காலபுடிபானுவோ! காரிய ஆச்சு அவ்லோதான் ....காலவாரிடுவானுவோ. கரடி ராஜேந்தர் இஸ்டைல சொல்ல போனாக்கா. இந்த அரசு பவருக்கு வரும் வரை அந்த அந்த இலாக்கானு சொல்லக்கூடிய வாரியங்கள் காரியங்கள் வேண்டி நம கால்ல விழுவாங்க ,பின்னாடி பவருக்கு வந்த பின்னாடி நம்மள மின்சார வாரியம் , காரியம் முடிந்த பின் காலை வாரும். அததான் நான் அப்பவே சொன்னேன். பவருக்கு வரவங்க பீஸை புடுங்கனும் அதுக்கு இருக்கு நம்ம கைல வாக்கு சீட்டு ! ஏன் இந்த கலவாளி பயலுக்கு போடுற ஓட்டு! இத நான் கேட்டு!வச்சேன் பாரு கூட்டு, அதான் அவங்க தலைல விழுந்திச்சு குட்டு. வரட்டா டன்டனக்க,டனக்கு டக்கா.
மின்னஞ்சல் வழி கருத்து
-----------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
//சரி ஹாக்கா வர்ர நோம்புக்காக இப்பொ என்னா சொல்ல வர்ரியெ? சொல்லுங்க...//
நா என்ன சொல்ல வரண்டா இந்த நோன்புலே கண்டது கடியது படிக்காமே, வீண் அரட்டை அடிக்காமே, தொழுதுட்டு குர்ஆன் ஓதிட்டு
திக்ர் செஞ்சிட்டு, புறம் பேசாமே, கோல்மூட்டாமல், ஒரு நோன்பையும் விடாமே புடிச்சிகிட்டு, அல்லாஹ்கிட்ட பாவமன்னிப்பு பெற்று எல்லாரும் சொர்க்கத்துக்கு போவலாம்டு சொல்ரே.
லெ.மு.செ.அபுபக்கர்
//நா என்ன சொல்ல வரண்டா இந்த நோன்புலே கண்டது கடியது படிக்காமே, வீண் அரட்டை அடிக்காமே, தொழுதுட்டு குர்ஆன் ஓதிட்டு
திக்ர் செஞ்சிட்டு, புறம் பேசாமே, கோல்மூட்டாமல், ஒரு நோன்பையும் விடாமே புடிச்சிகிட்டு, அல்லாஹ்கிட்ட பாவமன்னிப்பு பெற்று எல்லாரும் சொர்க்கத்துக்கு போவலாம்டு சொல்ரே.//
அது...!
Post a Comment