அன்றையக் கதிரவன்
அனலாய்க் கொதித்தது;
அரஃபாத் பெருவெளியில்
அக்கினி உதிர்த்தது!
பதிவுசெய்த ஏற்பாட்டில்
பயணம் வந்தவர்கள்
கூம்பியக் கூரைகொண்ட
கூடாரங்களிலோ
குளிரூட்டப்பட்டக் குடில்களிலோ
குழுமி யிருக்க
நாங்களோ
பாலங்களின் மேலோ
பாலக்கண்ணின் கீழோ
ஈருடையில்
மேலுடை விரித்து,
தாழ்வாரமிட்டு,
சூடான நிழலுக்குள்
சுருண்டிருந்தோம்
செப்பனிடப்படாப் பாதைகள்
செருப்பணிந்தப் பாதங்களை
குதிகாலில் குத்தின
கூழாங்கற்களின் கூர்முனைகள்
போக வர எங்களுக்குப்
போக்கு வரத்து வசதியில்லை
போனால் வருவதற்கு,
போதுமானப் பழக்கமில்லை
எல்லாக் கூடாரங்களிலிருந்தும்
ஏகனை இரைஞ்சும் ஒலி
எல்லா இனத்தவரும் தொழுகையில்;
எல்லா மொழிகளும் அழுகையில்!
உச்சியில் அடித்த வெயில்
உள்ளங்கால்களில் உருகி யோட
வரிசை வரிசையாக
வணங்கி நின்ற பொழுதுகள்
அந்த வயதினில்
அவனிடம் கேட்க
அதிகமாக வொன்றும்
அறிவினில் உதிக்கவில்லை
காசுபணம் கேட்டோம்
கவலையில்லா கணங்கள் கேட்டோம்
கற்பொழுக்கப் பெண்ணுக்கு
கணவனாக அருள் கேட்டோம்
வாப்பா உம்மாவுக்கு
வயிற்றுக்குச் சோறு கேட்டோம்
வாழும் காலமெல்லாம்
வலியில்லா வாழ்க்கைக் கேட்டோம்
சொந்தபந்தம் யாவருக்கும்
சொகுசான வாழ்வு கேட்டோம்
சொற்ப நேரம்கூட
சோகமிலா சீவிதம் கேட்டோம்
பாவங்கள் செய்வதற்கு
படித்தவர்க ளல்லர்யாம்
அறியாது செய்திருப்பின்
அதற்காக மன்னிக்கக் கேட்டோம்
அரஃபாத்தின் அனலில்
காது கன்னம் மூக்கெல்லாம்
கண்ணாடி சுட்டெரித்துக்
கண்டிப்போனத் தழும்பிருக்க,
நெஞ்சில் நிறைந்திருக்கு
நஞ் சகன்றத் தூய்மை
நெற்றியில் இன்னுமிருக்கு
நிலம் சுட்ட அடையாளம்!
- சபீர்
நன்றி : சத்தியமார்க்கம்.com
26 Responses So Far:
சிலிர்க்க வைக்கும் உணர்வுக் கொத்து !
வார்த்தகளைத் தேடுகிறேன் வரிக்கு வரி வர்ணனை செய்ய, அந்த அரஃபா வெளியிலில் மக்களின் உணர்வுகளின் கிடைக்குமா என்று !
//பாவங்கள் செய்வதற்கு
படித்தவர்க ளல்லர்யாம்
அறியாது செய்திருப்பின்
அதற்காக மன்னிக்கக் கேட்டோம்//
அன்றைய அரபா பெருவெளியில் ஏற்பட்ட உணர்வுகளின் ஊற்றை அழகுக்கவிமுறையில் அப்படியே வடித்துவிட்டீர்.அருமை!
உடல் முடிகள் சிலிர்த்து எழுகின்றன
உங்கள் கவிவரிகளை உள்வாங்கியதும்...
எண்ணங்களில் மின்காந்த அலைகள் அடிக்கின்றன
ஒவ்வொரு வார்த்தைகளை படிக்கும்போது
//வரிசை வரிசையாக
வணங்கி நின்ற பொழுதுகள்// யா அல்லாஹ் எங்கள் அனைவருக்கும் இப்பாக்கியத்தை அருள்வாயக !!! ஆமீன்
1987 லில் நடந்ததை அப்படியோ இன்று நடந்ததுபோல் கவியில் சொன்ன விதம் அழகு
அன்றைய அரஃபாத்தில் என்னுடன் இணைந்து ஹஜ் செய்த நண்பர்கள் ரியாஸ் மற்றும் அஸ்லமும் இதை வாசிப்பார்கள் என நம்புகிறேன்.
sabeer.abushahruk சொன்னது…
//அன்றைய அரஃபாத்தில் என்னுடன் இணைந்து ஹஜ் செய்த நண்பர்கள் ரியாஸ் மற்றும் அஸ்லமும் இதை வாசிப்பார்கள் என நம்புகிறேன்//
நம்ம ரியாஸ் காகா அடுத்த ஹஜ்ஜிக்குள் பதில் போட்டுவிடுவார்!
To Sabeer,
ஹஜ் செய்யத்தூண்டும் வரிகள். எப்போது எனக்கும் இந்த வாய்ப்பு என்று தெரியவில்லை....நீ சொன்ன மாதிரி நிய்யத் ஸ்ட்ராங் ஆக இருக்க வேண்டும்.
To Tuan Haji Shahul,
//நம்ம ரியாஸ் காகா அடுத்த ஹஜ்ஜிக்குள் பதில் போட்டுவிடுவார்! //
நானும் ரெக்கமன்ட் செய்ரேன்...நான் சொன்னா கேட்பான்
பாவங்கள் செய்வதற்கு
படித்தவர்க ளல்லர்யாம்
அறியாது செய்திருப்பின்
அதற்காக மன்னிக்கக் கேட்டோம்.
----------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். என்னே நேர்மையான வரிகள் பலர் சொல்ல தலைப்பாடாததை சொல்லும் தைரியம். என்னை அதிகம் கவர்ந்த வரிகள். வழக்கம் போல் வாழ்வில் நடந்ததை நெகிழ்சியுடன் சொல்லும் கவித்திறன்.வாழ்துக்கள் பெருனாள் வாழ்துக்கள்.
அந்த அரஃபாத்தில் என்னால் மறக்க முடியாத நினைவுகள் பல:
-எல்லா இடங்களுக்கும் நடந்தே ஹஜ் செய்தோம்
-கிடைத்த இடத்தில் வாய்த்த உணவையே உண்டோம்
-இயற்கை உபாதைகளுக்கு வரிசையில் நின்றோம்
-எந்த கூடாரத்தில் துஆ செய்தாலும் மொழி தெரியாவிட்டாலும் உள்நுழைந்து ஆமீன் சொன்னோம்
-ஷைத்தானுக்கு பல மாடிகள் இல்லாததால் நெருக்கியடித்தே கல்லெறிந்தோம்
-ஹஜ் முடிந்து எனக்கு மொட்டை போட்டவர் சகோதரர் முகமது அலி அவர்கள், தற்போதைய அல்-நூர் ஹஜ் சர்வீஸின் நிர்வாக இயக்குனர்
-ஹஜ் முடிந்து முருங்கைக்காய் இரால் போட்டு ஆனம் காய்ச்சி சோறு தந்து நாக்குக்கு மீண்டும் உயிர் தந்தவர் சகோதரர் இர்ஃபான் அவர்கள்
அரஃபா நாள் நோன்பு
துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று ஹாஜிகள் அரஃபா பெருவெளியில் தங்குவார்கள். அதனால் அந்த நாளுக்கு அரஃபா நாள் என்று குறிப்பிடுவர்.அரஃபா நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை உள்ளது. ஆனால் ஹாஜிகள் அல்லாதவர்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)நூல்: முஸ்லிம் 1977
அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: இப்னுமாஜா 1722
அரஃபா நாள் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு அதை நடைமுறைப்படுத்தினார்களோ அவ்வாறு தான் நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும்.அரஃபா நாளில் நோன்பு நோற்கச் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு ஆளனுப்பி எந்த நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகிறார்கள் என்பதை விசாரிக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அவர்கள் எப்போது தங்குகிறார்கள் என்பதை அறியாமலேயே மதீனாவில் காணப்பட்ட பிறையின்படி ஒன்பதாம் நாள் நோன்பு நோற்றார்கள். மக்காவில் பிறை காணப்பட்டவுடன் அந்தத் தகவலை ஓரிரு நாட்களில் அறிந்து கொள்ள வசதிகள் இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வசதியைப் பயன்படுத்தவில்லை.எனவே சவூதி அரேபியாவில் அரஃபாவில் தங்கும் நாள், நாம் பிறை பார்த்த கணக்குப் படி எட்டாம் நாளாகவும் இருக்கலாம். அதைப் பின்பற்றத் தேவையில்லை. அதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. நாம் பிறை பார்த்த கணக்குப் படி ஒன்பதாம் நாளில் நோன்பு நோற்க வேண்டும்.
அரபா நோன்பு உண்டா
அரபா நாளை குறித்து அந்த நாளில் ஹஜ் கடமையை நிறைவேற்றாத மற்றவர்கள் நோன்பு வைக்க வேண்டும் என்றுதான் ஹதீஸில் உள்ளது என்று கூறுகிறார்கள் இதற்கு விளக்கமும் அந்த ஹதீஸின் தமிழாக்கமும் வெளியிடவும். இங்கு அந்த நாள் என்பது ஹாஜிகள் அரபா மைதானத்தில் கூடியிருக்கும் அந்த நாளை தான் குறிக்கும் என்று கூறப்படுகிறது ஆனால் நீங்கள், நமக்கு எப்பொழுது பிறை ஒன்பது வருகிறதோ அன்றுதான் அரபாவுடைய நாள் என்று கூறி அன்று நோன்பு வைக்க சொல்கிறீர்கள் .
வஹீதுஸ் ஸமான்
பதில் :
அரஃபாவில் தங்கும் ஹாஜிகள் அரஃபா நாளன்று நோன்பு நோற்பது கூடாது என்பதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
2084 حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَوْشَبُ بْنُ عُقَيْلٍ عَنْ مَهْدِيٍّ الْهَجَرِيِّ حَدَّثَنَا عِكْرِمَةُ قَالَ كُنَّا عِنْدَ أَبِي هُرَيْرَةَ فِي بَيْتِهِ فَحَدَّثَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ بِعَرَفَةَ رواه أبو داود
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அரஃபாவில் உள்ளவர்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை விட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அபூதாவூத் (2084)
இதில் இடம்பெறும் மஹ்தீ பின் ஹரிப் என்ற அறிவிப்பாளரின் நம்பகத் தன்மை உறுதி செய்யப்படவில்லை. எனவே இது பலவீனமான செய்தி.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்த போது அரஃபா நாளில் நோன்பு நோற்கவில்லை. எனவே ஹஜ் செய்பவர்கள் அன்று நோன்பு நோற்பது கூடாது என்று இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து கூறப்படுகின்றது.
1989حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَوْ قُرِئَ عَلَيْهِ قَالَ أَخْبَرَنِي عَمْرٌو عَنْ بُكَيْرٍ عَنْ كُرَيْبٍ عَنْ مَيْمُونَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّاسَ شَكُّوا فِي صِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَرَفَةَ فَأَرْسَلَتْ إِلَيْهِ بِحِلَابٍ وَهُوَ وَاقِفٌ فِي الْمَوْقِفِ فَشَرِبَ مِنْهُ وَالنَّاسُ يَنْظُرُونَ رواه البخاري
மைமூனா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அரஃபா நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்களா என்பதில் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. நான் அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத்தைக் கொடுத்தனுப்பினேன். மக்களெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க அதை நபி (ஸல்) அவர்கள் குடித்தார்கள்.
புகாரி (1989)
அரஃபா நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்பது நபிவழி அல்ல என்பதற்கு மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள்லாம். ஹாஜிகள் அல்லாத மற்றவர்கள் அரபா நாளில் நோன்பு வைப்பதற்கு பின்வரும் செய்தியே ஆதாரப்பூர்வமாக அமைந்துள்ளது.
1976 قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثٌ مِنْ كُلِّ شَهْرٍ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ فَهَذَا صِيَامُ الدَّهْرِ كُلِّهِ صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),
நூல் : முஸ்லிம் 1976
மேற்கண்ட ஹதீஸில் அரஃபா நாளில் நோன்பு வைத்தால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றே கூறப்படுகின்றது.
ஹாஜிகள் என்று மக்காவில் கூடுகின்றார்களோ அதே நாளில் மற்றவர்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று நீங்கள் கூறுவது போல் எந்த ஹதீஸிலும் வாசகம் இடம்பெறவில்லை.
துல் ஹஜ் மாதம் பிறை ஒன்பதாவது நாளே அரஃபாவுடைய நாள். அவரவர் பகுதியில் பிறை பார்க்கப்பட்டு எப்போது துல்ஹஜ் மாதம் பிறை 9 வருகின்றதோ அந்த நாளே அவருக்கு அரஃபாவுடைய நாள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் பதிமூன்று வருட காலங்கள் வாழ்ந்துள்ளார்கள். இக்கால கட்டத்தில் அரஃபாவுடைய நாளை நிச்சயம் அவர்கள் அடைந்திருப்பார்கள்.
மக்காவில் ஹாஜிகள் எப்போது கூடுகிறார்கள் என்று பார்த்து அன்றைய நாளில் தான் மற்ற பகுதியில் உள்ளவர்களும் நோன்பு நோற்க வேண்டும் என்று சட்டம் இருக்குமேயானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து ஒருவரை மக்காவிற்கு அனுப்பி ஹாஜிகள் எப்போது கூடுகிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு வருமாறு கூறியிருப்பார்கள். அவர் வந்த பிறகு அந்த நாளில் நோன்பு நோற்றிருப்பார்கள்.
ஆனால் ஹதீஸ்களில் இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததாக எந்த ஒரு சம்பவமும் இடம்பெறவில்லை. எனவே மதீனாவில் அவர்கள் பிறை பார்த்ததின் அடிப்படையில் அவர்களுக்கு பிறை ஒன்பது எப்போது வந்ததோ அந்த நாளில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரஃபா நாள் நோன்பை நோற்றார்கள் என்பது தெளிவாகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீ மூலம் ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருப்பான் என்று சிலர் கூறுவது ஏற்க முடியாததாகும். அல்லாஹ் வஹீ மூலம் அறிவித்துக் கொடுத்தால் அது பற்றி அல்லாஹ்வின் தூதர் சொல்லி இருப்பார்கள்.
மேலும் மதீனாவில் மட்டும் முஸ்லிம்கள் வாழவில்லை. மதீனாவுக்கு வெளியில் ஏராளமான முஸ்லிம்கள் வாழ்ந்தனர். அவர்களுக்கு ஹாஜிகள் அரபாவில் கூடும் தினம் தெரிய வழி இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்து மக்கள் தங்கள் பகுதியில் பிறை பார்த்த அடிப்படையில் தான் அரபா நாளை முடிவு செய்திருப்பார்களே தவிர மக்காவில் கூடுவதை அறிந்து முடிவு செய்திருக்கவே முடியாது.
ஹாஜிகள் அரபாவில் கூடும் நாள் தால் உலகம் முழுமைக்கும் அரபா நாள் என்று ஒருவர் கூறினால் இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் தவறிழைத்து விட்டார்கள் என்று பழி சுமத்துகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் எப்படி அரபா நாளை முடிவு செய்தார்களோ அது தவறு சொல்லும் எந்தக் கருத்தும் நச்சுக் கருத்தாகும் என்பதை விளங்கிக் கொண்டால் இது போன்ற கேள்விகளுக்கு இடமில்லை.
அஸ்ஸலாமு அலைக்கும்,,,
ஏகஇறைவனின் திருப்பெயரால்...*குர்பானியின் சட்டங்கள் *ஆசிரியர் : அப்பாஸ் அலீ எம்.ஐ.எஸ்.ஸி (பேராசிரியர், இஸ்லாமியக் கல்லூரி, கடையநல்லூர்.)
கூட்டுக் குர்பானிஒட்டகம், மாடு இவற்றில் ஏழு நபர்கள் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி ஏழு குடும்பங்கள் சார்பாகக் குர்பானி கொடுக்கலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹஜ் மற்றும் உமராவில் ஓர் ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் கூட்டுசேர்ந்தோம். அறிவிப்பவர் : ஜாபிர்(ரலி) நூற்கள் : முஸ்லிம்(2325),
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் 10 பேர் வீதமும் நாங்கள் கூட்டுசேர்ந்தோம்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : திர்மிதி (1421), நஸயீ (4316),இப்னு மாஜா (3122)
ஒரு மாடு ஏழு நபருக்கும் ஒரு ஒட்டகம் ஏழு நபருக்கும் (கூட்டுசேர போதுமானதாகும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல் : அபூதாவூத் (2425)
மேல் கூறப்பட்டுள்ள ஹதீஸ்கள் மாடு அல்லது ஒட்டகத்தில் ஏழு பேர் கூட்டு சேரலாம் என்று தெரிவிக்கின்றது. ஒரு ஒட்டகத்தில் 10 பேர் கூட்டு சேருவதற்கும் ஆதாரம் உள்ளது. ஒட்டகம், மாட்டில் மட்டும் தான் பலர் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். ஆட்டில் ஒரு குடும்பம் மட்டுமே கொடுக்க வேண்டும்.எங்கே கொடுப்பது?
முஸல்லா எனும் திடலில் நபி (ஸல்) அவர்கள் அறுப்பவர்களாக இருந்தார்கள்.''
அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி) நூற்கள் : புகாரி(5552), அபூதாவூத் (2428), நஸயீ (1571)நபி (ஸல்) அவர்கள் பொதுமக்கள் பார்க்கும் வண்ணம் முஸல்லா என்ற திடலில் குர்பானி கொடுத்துள்ளார்கள். பொதுவான ஒரு இடத்தில் வெளிப்படையாக அறுக்கும் போது ஏழை எளியவர்கள் இதைக் கண்டு கொள்வார்கள். குர்பானி கொடுத்தவர்களிடம் சென்று இறைச்சியை அவர்கள் வாங்குவதற்கு இம்முறை உதவியாக இருக்கும். இந்த நோக்கத்திற்காக நபி (ஸல்) அவர்கள் முஸல்லாவில் சென்று குர்பானி கொடுத்திருக்கலாம். விரும்பினால் வீட்டில் கொடுப்பதற்கும் அனுமதி உள்ளது. இரு முறைகளும் பெருமானாரின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டதாகும். இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (இல்லத்திற்கு) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். அறிவிப்பவர் : பரா(ரலி) நூற்கள் : புகாரி(5545), முஸ்லிம் (3627)
இந்த ஹதீஸில் நாம் திரும்பிச் சென்று என இடம் பெற்றுள்ள வாசகம் கவனிக்கத் தக்கது. இந்த வாசகம் திடல் இல்லாத வேறொரு இடத்தைச் சுட்டுகிறது. வீட்டில் அறுக்கலாம் என்பதை உணர்த்துவதற்கு நபி (ஸல்) இந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய கருப்பு நிறத்தால் அமரக்கூடிய கருப்பு நிறத்தால் பார்க்கக்கூடிய கொம்புள்ள ஒரு ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (ஆடு வந்ததும்) ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பிறகு அதை கல்லில் தீட்டு என்றார்கள். நான் அப்படியே செய்தேன். பிறகு கத்தியை வாங்கிக் கொண்டார்கள். ஆட்டை கீழே படுக்க வைத்து அறுத்தார்கள். நூல் : முஸ்லிம் (3637) அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
ஆயிஷா (ரலி) அவர்களிடம் கத்தியை எடுத்து வரும் படி கட்டளையிட்டிருப்பது அறுத்தல் வீட்டில்
நடந்திருக்கிறது எனத் தெரிவிக்கிறது. திடலுக்குச் சென்றிருந்தால் கத்தியுடனே அங்கு சென்றிருப்பார்கள். கத்தியை எடுத்து வரும்படி கூறுவதற்கு எந்த அவசியமும் இருந்திருக்காது. இதன்படி குர்பானிப் பிராணியை ஈத்கா திடலில் அல்லது வீட்டில் அறுக்கலாம் என்பது தெளிவாகிறது.
வீடு அல்லது திடலில் அறுக்காமல் வீட்டிற்கு முன்பு தெருவில் சிலர் அறுக்கிறார்கள். இவர்களது இச்செயல் தெருக்களில் அடிக்கடி போய் வந்து கொண்டிருக்கும் மக்களுக்கு இடையூராக அமைந்து விடுகிறது. இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
அறுக்கும் முன் கவனிக்க வேண்டியவைபிராணியை அறுக்கும் முன் அதன் வாயில் சிறிது நீரை விடுகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை. இதனால் அப்பிராணிக்கு வேதனை குறையும் என்று நம்புவதற்குச் சான்றுகள் ஏதும் இல்லை. கத்தியைக் கூர்மையாக வைத்துக் கொள்வதே அவசியம். கூர்மையற்ற கத்தியினால் பிராணியை அறுத்து சித்திரவதை செய்யக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எம்முறை பிராணிக்குச் சிரமத்தைக் குறைக்குமோ அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும்.
பங்கிடுதல்குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கு தனக்காகவும், மற்றொன்று சொந்தக்காரர்களுக்கும், மற்றொன்று ஏழைகளுக்காகவும் கொடுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை. தனது தேவைக்குப் போக சொந்தம், ஏழை, யாசிப்பவர்கள் இப்படி யாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நிர்ணயம் எதுவுமில்லை.
அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்.
அல்குர்ஆன் (22 : 36)
இந்த வசனத்தில் அல்லாஹ் இத்தனை சதவிகிதம் கொடுக்க வேண்டுமென கட்டளையிடவில்லை. பொதுவாக தர்மம் செய்யுங்கள் என்றே கூறுவதால் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நபி (ஸல்) அவர்கள் இறைச்சி முழுவதையும் தர்மம் செய்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானி ஒட்டகங்களை பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி தோல் சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும் உரிப்பதற்கு கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக்கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அறிவிப்பாளர் : அலீ (ரலி) நூல் : புகாரி (1717)
நபி(ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்து அதை அனைத்தையும் பங்கிட்டு ஏழைகளுக்கு வழங்குமாறு அலீ(ரலி) அவர்களுக்கு கட்டளையிட்ட செய்தி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் ஒவ்வொரு ஒட்டகத்திலும் ஒரு துண்டு எடுத்து அதை மட்டும் நபி (ஸல்) அவர்கள் சமைத்துச் சாப்பிட்டுள்ளார்கள். எனவே குறிப்பிட்ட அளவில்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் தர்மம் வழங்கலாம்.
நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது அவர்களுடைய 100 ஒட்டகத்தில்) 63 ஒட்டகைகளை தன் கரத்தால் குர்பானி கொடுத்தார்கள். மீதத்தை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து (அறுக்கும் படி கூறினார்கள்). அலீ (ரலி) அவர்கள் மீதத்தை அறுத்தார்கள். அவற்றில் ஒவ்வொரு ஒட்டகத்திலும் சில துண்டுகளை (எடுத்து சமைக்கும் படி) கட்டளையிட்டார்கள். அவை ஒரு சட்டியில் வைத்து சமைக்கப்பட்டது. பின்பு அவர்கள் இருவரும் அதன் இறைச்சியை உண்டு அதன் குழம்பை பருகினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (2137)
மாமிசத்தில் நமக்குத் தேவையான அளவை எடுத்துக் கொள்ள அனுமதி உள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின் போது மதீனாவிற்கு வரும் வரை அளவில்லாமல் குர்பானிப் பிராணியின் இறைச்சியை உண்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டு சவ்பானே இதன் இறைச்சியை பக்குவப்படுத்துவீராக என்று கூறினார்கள். அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை அதிலிருந்து அவர்களுக்கு நான் உண்ணக்கொடுத்துக் கொண்டே இருந்தேன். அறிவிப்பவர் : சவ்பான் (ரலி) நூல் : முஸ்லிம் (3649)
மு.செ.மு.அபூபக்கர்
மாற்றப்பட்டச் சட்டம்
பஞ்சம் மிகைத்திருந்த போது நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்களுக்கு மேல் மாமிசத்தைச் சேமித்து வைக்கக் கூடாது என்று மக்களுக்குத் தடைவிதித்திருந்தார்கள். பின்பு எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சேமித்துக் கொள்வதற்கு சலுகை வழங்கினர்கள்.
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஈதுல் அல்ஹா பெருநாளில் அறுக்கப்படும்) குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துச் சாப்பிடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா? என்று கேட்டேன். அவர்கள் மக்கள் (பஞ்சத்தால்) பசிபட்டினியோடு இருந்த ஒரு ஆண்டில் தான் அவர்கள் அப்படி (த் தடை) செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பட்டினியைப் போக்க) வசதியுள்ளவர் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். (பிறகு) நாங்கள் ஆட்டுக்காலை எடுத்து வைத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகும் கூட அதை சாப்பிட்டு வந்தோம் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆபிஸ் பின் ரபீஆ நூல் : புகாரி (5423)
நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் வரும் போது கிராமத்தில் உள்ள பல குடும்பங்கள் (மாமிசத்தை எதிர் பார்த்து எங்களிடம்) வருவார்கள். ஆகையால் நபி (ஸல்) அவர்கள் (அவர்களுக்காக மக்களிடம்) மூன்று நாட்களுக்கு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மீதமுள்ளதை தர்மம் செய்து விடுங்கள் என்று கூறினார்கள். இதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் பலவீனமான மக்களுக்காகத்தான் நான் தடுத்தேன். ஆகையால் நீங்கள் சாப்பிடுங்கள். (எவ்வளவு வேண்டுமானாலும்) சேமித்துக் கொள்ளுங்கள். தர்மமும் செய்யுங்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் (3643)
பங்கில் அவசியம் சேர்க்கப்பட வேண்டியவர்கள்ஏழைகள் பட்டினியால் வாடாமல் இருப்பதற்காக பணக்காரர்கள் சேமித்து வைப்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் தடுத்ததை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏழைகளைக் கவனத்தில் வைத்தே பெருமானார் இவ்வாறு செய்துள்ளார்கள். நமது பகுதியில் ஏழைகள் மிகுதியாக இருப்பதினால் அவர்களையும் அவசியம் பங்கில் இணைத்துக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெருநாளன்று அண்டை வீட்டார்கள் உறவினர்கள் ஏழைகள் ஆகியோருக்கு நபித்தோழர்கள் இறைச்சியைக் கொடுத்து வந்தார்கள். இதற்கு பின்வரும் செய்திகள் சான்றாக உள்ளன.நபி (ஸல்) அவர்கள் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும் என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர் இது இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள் என்று சொல்லிவிட்டு தம் அண்டை வீட்டாரின் தேவை( யினால் தொழுகைக்கு முன்பே அறுத்து விட்டதாக) குறிப்பிட்டார். நபி (ஸல்) அவர்கள் அவர் சொன்ன காரணத்தை ஏற்றுக் கொண்டதைப் போல் இருந்தது. . அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (5561)அபூபுர்தா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நானும் சாப்பிட்டுவிட்டு எனது குடும்பத்தாருக்கும் அண்டை வீட்டாருக்கும் உண்ணக் கொடுத்து விட்டேன் என்று கூறியதாக புகாரியில் 983 வது செய்தியில் பதிவாகியுள்ளது.
நான் அபூஅய்யூப் அல்அன்சாரீ அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஒருவர் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுப்பார்கள். ஆனால் இன்றைக்கு மக்கள் (இதன் மூலம்) பெருமையடித்துக்கொள்வதை நீங்கள் பார்க்கும் நிலை உருவாகிவிட்டது. அறிவிப்பவர் : அதா பின் யசார் நூல் : திர்மிதி (1425)குர்பானி மாமிசத்தைக் முஸ்லிமல்லாதவர்களுக்குக் கொடுக்க எந்தத் தடையுமில்லை. (22 : 36) இந்த வசனத்தில் பொதுவாக ஏழைகள் என்றும் யாசிப்பவர்கள் என்றும் தான் கூறப்படுகிறது. ஆகையால் முஸ்லிமான ஏழைக்கும் முஸ்லிமல்லாத ஏழைக்கும் வழங்குவதில் எந்தக் குற்றமும் இல்லை. முஸ்லிம்களுக்கு குர்பானி இறைச்சியை தர்மமாகக் கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறாமல் பொதுவாக தர்மம் செய்யுங்கள் என்று கூறியிருப்பதினாலும் முஸ்லிமல்லாதவர்களுக்கு வழங்குவது குற்றமல்ல.
(குர்பானி இறைச்சியிலிருந்து) உண்ணுங்கள். சேமித்துக் கொள்ளுங்கள். தர்மம் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் வாகித் (ரலி)
நூல் : முஸ்லிம் (3643)எனினும் முஸ்லிம்களுக்கு பெருநாளாக இருப்பதால் அவர்கள் அன்றும் சிரன்ப்படக் கூடாது என்ற நோக்கத்தில் குர்பானி வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே மாமிசத்தை வழங்குவதில் முஸ்லிம்களுக்குத் தான் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களுக்குப் போக மிச்சம் இருந்தால் முஸ்லிமல்லாதவர்களுக்கும் வழங்கலாம்.
மு.செ.மு.அபூபக்கர்
தோல்
குர்பானிப் பிராணியின் தோல் அல்லது இறைச்சியை உரித்தவருக்குக் கூலியாகக் கொடுக்கக் கூடாது. இதைத் தர்மமாக ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.
ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாமிசத்தையும், தோலையும் அதன் மீது கிடந்த(கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம். அறிவிப்பவர் : அலீ(ரலி) நூற்கள் : புகாரி (1716), முஸ்லிம் (2320) தோல்கள் ஏழைகளுக்குச் சேரவேண்டியது என்பதால் நபி (ஸல்) அவர்கள் அதை கூலியாகக் கொடுப்பதைத் தடுத்து தர்மம் செய்யுமாறு கட்டடையிட்டுள்ளார்கள். மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும் இயக்கங்களுக்கும் இதை வழங்காமல் இருப்பது நல்லது. இது அல்லாத மற்ற பணத்தை அவற்றிற்கு வழங்கலாம். மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்கள் மொத்தமாக வாரிச் சென்று விடும் போது நம்மூரில் உள்ள ஏழைகள் பாதிக்கப்படுவதை நாம் உணர வேண்டும். நம்பிக்கைக்குரிய இயக்கம் ஏழைகளுக்குத் தருவதாகக் கூறி தோட்களை வாங்கினால் அவர்களிடத்தில் தோல்களை ஒப்படைப்பது தவறல்ல. இரத்தம்பிராணிகளை அறுக்கும் போது நரம்புகள் நன்கு துண்டிக்கப்பட்டு அவற்றின் இரத்தம் வெளியேற்றப்பட வேண்டும். ஏனென்றால் இரத்தம் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இதையறியாமல் பலர் ஆடுகளை அறுக்கும் போது வெளிவரும் இரத்தத்தை எடுத்து சமைத்துச் சாப்பிடுகிறார்கள். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட காரியம்.தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்
அல்குர்ஆன் (2 : 173)
மு.செ.மு.அபூபக்கர்
(நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்;. நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்;. மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்;. நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்;. மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்.
English Translation
You make the night succeed the day, the day succeed the night, raise the living from the dead, the dead from the living, and give whomsoever You please, and in measure without number."
இன்று ஒரு ஹதீஸ் - புஹாரி: முஸ்லிம்:7491
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
'ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்) ஆவேன். என் கரத்திலேயே அதிகாரமனைத்தும உள்ளது. நானே இரவையும் பகலையும் மாற்றி மாற்றிக் கொண்டுவருகிறேன்' என்று அல்லாஹ் கூறினான்.
என
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
மு.செ.மு.அபூபக்கர்
முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;. அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.
English Translation
Those who believe should not take unbelievers as their friends in preference to those who believe and whoever does so should have no (expectations) of God unless to safeguard yourselves against them. But God commands you to beware of Him, for to God you will journey in the end.
இன்று ஒரு ஹதீஸ் - புஹாரி: முஸ்லிம்:3606
ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அறிவித்தார்.
மக்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ (இஸ்லாம் எனும்) நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம் (இருக்கிறது)" என்று பதிலளித்தார்கள். நான், 'இந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும். என்று பதிலளிக்க நான், 'அந்தக் கலங்கலான நிலை என்ன?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஒரு சமுதாயத்தார் என்னுடைய நேர்வழியில்லாத ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழி காட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய்; தீமையையும் காண்பாய்" என்று பதிலளித்தார்கள். நான், 'அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம், நரகத்தின் வாசல்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள்" என்று பதிலளித்தார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள்; நம் மொழிகளாலேயே பேசுவார்கள்" என்று பதிலளித்தார்கள். நான், 'நான் இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களின் தலைவரையும் (இறுகப்) பற்றிக் கொள்" என்று பதில் கூறினார்கள். அதற்கு நான், 'அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்... (என்ன செய்வது)?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'அந்தப் பிரிவுகள் அனைத்தையும்விட்டு (விலகி) ஒதுங்கி விடு; ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேராமல் தனித்தே இரு)" என்று பதிலளித்தார்கள்.
மு.செ.மு.அபூபக்கர்
(நபியே! இன்னும்) நீர் கூறும்; "அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் வழிப்படுங்கள்." ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.
English Translation
Say: "Obey God and His Messenger;" and if they refuse (then remember) God does not love disbelievers.
இன்று ஒரு ஹதீஸ் - புஹாரி: முஸ்லிம்:99
99. 'இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்குத் தகுதி படைத்த மனிதர் யார்?' என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, 'அபூ ஹுரைராவே! என்னைப் பற்றிய செய்திகளின் மீது உமக்கிருக்கும் பேராவால் எனக்குத் தெரியும். எனவே, இச்செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் நம்பியிருந்தேன்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, 'மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெற்றவர் யாரெனில், உள்ளத்திலிருந்து - தூய்மையான எண்ணத்துடன் 'வணங்கி வழிபடுவதற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்று சொன்னவர்தாம்' என்று கூறினார்கள்"
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
மு.செ.மு.அபூபக்கர்
ஏகஇறைவனின் திருப்பெரால்...
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لاَنفَضُّواْ مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّهِ إِنَّ اللّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
3:159. (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.
கோபத்திலும் நிதானம் தவறாமை.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கடந்தக் கட்டுரையில் யூனுஸ்(அலை)அவர்களுக்கு ஏற்பட்ட கோபத்தின் மூலம் நமக்கும் உண்டானப் படிப்பினைகளைப் பார்த்தோம்.
அருளாலன் அல்லாஹ்வின் அருள் மட்டும் யூனுஸ்(அலை)அவர்களின் மீது அருளப்பட்டிருக்க வில்லை என்றால் அவர்களுடைய நிலை இவ்வுலகிலும் மறுஉலகிலும் படுதோல்வி அடைந்திருக்கும்.
உலக மக்களுக்கு படிப்பினையாக்குவதற்காக கடைசி நேரத்தில் யூனுஸ்(அலை) அவர்களை காப்பாற்றி தவ்பா செய்ய வைத்து அதன் பின்னர் அவர்களுக்கு உதவியும் செய்து அதற்கு முந்தைய நபித்துவப் பொறுப்பையும் வழங்கி கண்ணியப் படுத்தினான்.
ஒரு வருடமோ அல்லது ஆறு மாதமோ விலக்கி வைத்து விட்டு அதன் பிறகு நபித்துவப் பொறுப்பை ஒப்படைக்கலாம் என்று நினைக்காமல் மன்னிக்கப்பட்ட அடுத்த கனமே முந்தைய நபித்துவப் பொறுப்பை ஒப்படைத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு மீண்டும் தூதராக நியமித்தான் இதனால் தான் அவனை அளவற்ற அருலாளன் நிகரற்ற அன்புடையோன் என்று அழைக்கின்றோம் அவனுடைய அன்புக்கும், அருளுக்கும் எல்லை இல்லை.
மேற்காணும் சம்பவத்தைக் கூறி நீங்களும் அவரைப்போன்று ஆகிவிடாதீர்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களை அல்லாஹ் எச்சரிக்கை செய்து கொண்டே இருந்ததுடன் அவர்கள் மீதும் அல்லாஹ் தன் அருளை இறக்கி தொடர்ந்து பாதுகாத்து வந்தான்.
அல்லாஹ்வின் அருள் அண்ணல் நபி(ஸல்)அவர்களை பேராபத்துகளிலிருந்து மட்டும் பாதுகாத்ததுடன் நில்லாமல் பெரும் கோபங்களிலிருந்தும் தடுத்து வந்தது அதனால் அண்ணல் அவர்கள் மிருதுவானத் தன்மை உடையவர்களாக இருந்தார்கள்.
அவர்களுடன் இணைந்திருந்த மக்களிடம் அன்பு செலுத்தி அரவனைத்துக் கொண்டார்கள், அவர்கள் செய்யும் சிறு தவறுகளுக்காக பெரிய அளவில் பிடித்து தண்டனைக் கொடுக்காமல் அவற்றை அலச்சியம் செய்தார்கள், அவர்கள் விளங்கிக் கொள்ளும் விதம் அவர்களுடைய தவறுகளை மிக இலகுவாக எடுத்துக் கூறினார்கள் அந்த விளக்க உரைகள் அவர்களை மீண்டும் அந்த தவறுகளை செய்ய விடாமல் அரணான நின்று கொண்டது.
யார் மீதும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கோபம் கொண்டது கிடையாது, கடு கடுத்தது கிடையாது, முகத்தைத் திருப்பிக் கொண்டது கிடையாது. உலக ரட்சகன் அல்லாஹ் தன் அருளால் அவர்களை சூழ்ந்து கொண்டதே இதற்கு காரணமாகும்.
இப்படிப்பட்ட ஒரு கட்டமைப்பை பார்த்துக்கொண்டு ஷைத்தான் சும்மா இருப்பானா ? அவனால் சும்மா இருக்க முடியுமா ?
இந்த கட்டமைப்பை எப்படி சிதைப்பது ?
இவர்களை எப்படி பாவத்தாளிகளாக ஆக்குவது ?
இவர்கள்
இணைவைக்க மாட்டார்கள்,
பொய் சொல்ல மாட்டார்கள்,
புறம் பேச மாட்டார்கள்,
கொலை செய்ய மாட்டார்கள்,
கொள்ளை அடிக்க மாட்டார்கள்,
விபச்சாரம் செய்ய மாட்டார்கள்,
கொடிய வட்டியில் வீழ மாட்டார்கள்.
அதனால் ஆதம், ஹவ்வா(அலை) அவர்களை மடக்கியதுப் போன்றே இவர்களையும் மடக்குவது என்ற முடிவுக்கு வந்து செல்வந்தர்களும், உயர்ந்த குலத்தவர்களுமாகிய சிலருடைய சிந்தனையில் இஸ்லாம் சரி தான் ஆனால் முஹம்மதுடன் இணைந்திருக்கும் ஆட்கள் நமக்கு நிகரானவர்களாக இல்லை அவர்களுக்கும், நமக்கும் மத்தியில் சிறிது ஏற்றத் தாழ்வை முஹம்மது ஏற்படுத்தினால் இஸ்லாத்தில் இணைவதில் நமக்கு ஆட்சேபனை இருக்காது என்றுத் தூண்டுகிறான்.
முஹம்மது(ஸல்)அவர்கள் அவர்களின் சபைக்கு அழைக்கப்பட்டு பேச்சு வார்த்தையும் நடைபெறுகிறது அவ்வேளை அண்ணல் அவர்களின் தோழர்களில் ஒருவரான கண் தெரியாத அப்துல்லாஹ் இப்னு மக்தூம் (ரலி) அவர்கள் அவ்விடத்தைக் கடக்க நேரிடுகிறது அந்த தோழருடைய கால்கள் அண்ணல் அவர்களின் குரலைக்கேட்டதும் அங்கிருந்து நகர மறுத்து விடுகிறது.
நெஞ்சில் நிறைந்த நபியின் உருவத்தை கண்களால் பார்க்க முடியவில்லை என்றாலும் அவர்களின் குரலை செவிகளால் கேட்டு குதூகலமடையும் கண் தெரியாத தோழர்கள் பலர் அன்றாடம் அண்ணல் அவர்களை சூழ்ந்து கொள்வது அக்கால வழக்கம்.
மு.செ.மு.அபூபக்கர்
அதனால் அல்லாஹ்வின் தூதர் அவர்களே உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் என்ற ஸலாமை உரக்கக் கூறுகிறார் அவரை அவ்விடத்தில் கண்டதும் விவகாரமே இது தான் என்பதால் இந்த இடத்தில் இவர் வந்து விட்டாரே என்று அண்ணல் அவர்களுக்கு கோபம் ஏற்படுகிறது முகத்தை சுளிக்கிறார்கள் அவர்கள் மீது கடு கடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அந்த ஆருயிர் தோழர்களை அண்ணல் அவர்கள் காணவில்லை என்றாலும், அன்பே உருவான அண்ணல் அவர்களை அந்த ஆருயிர் தோழர்கள் காணவில்லை என்றாலும் அந்தப் பொழுது அவர்களை விட்டு மறைவது கடினமாக இருக்கும் அப்படிப்பட்டப் பாசம் அது, நட்புக்கு இலக்கனம் வகுத்தளித்த தோழமை அது.
அண்ணல் அவர்களுக்கு முந்தைய தீர்க்கதரிசிகள், மஹான்கள் எல்லாம் தங்களைச் சுற்றி இருந்தவர்களை சீடர்களாக ஆக்கி வைத்திருந்தனர் அண்ணல் அவர்கள் மட்டும் விதி விலக்காக தங்களுடன் இணைந்திருந்தவர்களை தோழர்கள் என்ற அந்தஸ்த்தை வழங்கி சிறிதளவும் இடைவெளி இல்லாத நெருக்கத்தை ஏற்படுத்தினார்கள்.
சகோதரத்துவத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் எழுப்பபட்ட இஸ்லாம் எனும் கோட்டையை சரிப்பதற்கான ஷைத்தானின் சூழ்ச்சியை அல்லாஹ் அறிந்துகொண்டு கண் தெரியாத தோழர் மீது அண்ணல் அவர்கள் கோபம் கொண்டதற்காக அவர்களை அல்லாஹ் கண்டிக்கிறான்.
1, 2. தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக 168 இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். 26
ஆரம்ப காலத்திலேயே மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தவர்களில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூத்(ரலி)அவர்கள் முதன்மையானவர்கள் அத்துடன் அல்லாஹ்வின் புனித சொற்களாகிய திருமறைக்குர்ஆனை உள்ளத்தில் பூட்டி வைக்காமல் அதை பலருக்கும் எத்திவைப்பதில் மதீனாவில் இரவு பகலாக பாடுபட்டவர்.
நபித்தோழர்களில் (நாடு துறந்து மதீனாவிற்கு 'ஹிஜ்ரத்' செய்து) எங்களிடம் முதலில் வந்தவர்கள் 'முஸ்அப் இப்னு உமைர்'(ரலி) அவர்களும், 'இப்னு உம்மி மக்தூம்'(ரலி) அவர்களும் தாம். அவர்களிருவரும் (மதீனாவாசிகளான) எங்களுக்குக் குர்ஆனைக் கற்றுத் தந்தார்கள். பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 4941.
இப்படிப்பட்ட அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்குரிய ஒருவர் அலச்சியம் செய்யப்ட்டால் அல்லாஹ் பார்த்துக்கொண்டிருப்பானா ? உடனே திருவசனத்தை இறக்கி அவர் அலச்சியம் செய்யப்படுவதை கண்டித்து கண்ணியப்படுத்த வைத்தான்.
இது முஹம்மது(ஸல்) அவர்களுக்கும் நன்றாகத் தெரியும் ஆனாலும் கோபம் வந்து விட்டதால் அது மறக்கடிக்கப்பட்டு விட்டது. கோபம் கண்ணை மறைத்து விடும் என்று கூறுவது அனைவருக்குமே பொருந்தி விடுவதற்கு இதுவும் சான்றாகும்.
செல்வந்தர்களின் கோரிக்கையை ஏற்று ஒப்பந்தம் செய்யும் நோக்கில் அண்ணல் அவர்கள் அங்கு சென்றிருக்க மாட்டார்கள் மாறாக விளக்கமளித்து தூய இஸ்லாத்தின் எந்த கொள்கையையும் விட்டுக் கொடுக்காமல் பேசி தஃவா செய்து இஸ்லாத்திற்குள் எடுப்பதற்கே சென்றிருப்பார்கள்.
அதனால் அல்லாஹ்வின் தூதர் அவர்களே உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் என்ற ஸலாமை உரக்கக் கூறுகிறார் அவரை அவ்விடத்தில் கண்டதும் விவகாரமே இது தான் என்பதால் இந்த இடத்தில் இவர் வந்து விட்டாரே என்று அண்ணல் அவர்களுக்கு கோபம் ஏற்படுகிறது முகத்தை சுளிக்கிறார்கள் அவர்கள் மீது கடு கடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அந்த ஆருயிர் தோழர்களை அண்ணல் அவர்கள் காணவில்லை என்றாலும், அன்பே உருவான அண்ணல் அவர்களை அந்த ஆருயிர் தோழர்கள் காணவில்லை என்றாலும் அந்தப் பொழுது அவர்களை விட்டு மறைவது கடினமாக இருக்கும் அப்படிப்பட்டப் பாசம் அது, நட்புக்கு இலக்கனம் வகுத்தளித்த தோழமை அது.
அண்ணல் அவர்களுக்கு முந்தைய தீர்க்கதரிசிகள், மஹான்கள் எல்லாம் தங்களைச் சுற்றி இருந்தவர்களை சீடர்களாக ஆக்கி வைத்திருந்தனர் அண்ணல் அவர்கள் மட்டும் விதி விலக்காக தங்களுடன் இணைந்திருந்தவர்களை தோழர்கள் என்ற அந்தஸ்த்தை வழங்கி சிறிதளவும் இடைவெளி இல்லாத நெருக்கத்தை ஏற்படுத்தினார்கள்.
சகோதரத்துவத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் எழுப்பபட்ட இஸ்லாம் எனும் கோட்டையை சரிப்பதற்கான ஷைத்தானின் சூழ்ச்சியை அல்லாஹ் அறிந்துகொண்டு கண் தெரியாத தோழர் மீது அண்ணல் அவர்கள் கோபம் கொண்டதற்காக அவர்களை அல்லாஹ் கண்டிக்கிறான்.
1, 2. தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக 168 இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். 26
ஆரம்ப காலத்திலேயே மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தவர்களில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூத்(ரலி)அவர்கள் முதன்மையானவர்கள் அத்துடன் அல்லாஹ்வின் புனித சொற்களாகிய திருமறைக்குர்ஆனை உள்ளத்தில் பூட்டி வைக்காமல் அதை பலருக்கும் எத்திவைப்பதில் மதீனாவில் இரவு பகலாக பாடுபட்டவர்.
மு.செ.மு.அபூபக்கர்
நபித்தோழர்களில் (நாடு துறந்து மதீனாவிற்கு 'ஹிஜ்ரத்' செய்து) எங்களிடம் முதலில் வந்தவர்கள் 'முஸ்அப் இப்னு உமைர்'(ரலி) அவர்களும், 'இப்னு உம்மி மக்தூம்'(ரலி) அவர்களும் தாம். அவர்களிருவரும் (மதீனாவாசிகளான) எங்களுக்குக் குர்ஆனைக் கற்றுத் தந்தார்கள். பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 4941.
இப்படிப்பட்ட அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்குரிய ஒருவர் அலச்சியம் செய்யப்ட்டால் அல்லாஹ் பார்த்துக்கொண்டிருப்பானா ? உடனே திருவசனத்தை இறக்கி அவர் அலச்சியம் செய்யப்படுவதை கண்டித்து கண்ணியப்படுத்த வைத்தான்.
இது முஹம்மது(ஸல்) அவர்களுக்கும் நன்றாகத் தெரியும் ஆனாலும் கோபம் வந்து விட்டதால் அது மறக்கடிக்கப்பட்டு விட்டது. கோபம் கண்ணை மறைத்து விடும் என்று கூறுவது அனைவருக்குமே பொருந்தி விடுவதற்கு இதுவும் சான்றாகும்.
செல்வந்தர்களின் கோரிக்கையை ஏற்று ஒப்பந்தம் செய்யும் நோக்கில் அண்ணல் அவர்கள் அங்கு சென்றிருக்க மாட்டார்கள் மாறாக விளக்கமளித்து தூய இஸ்லாத்தின் எந்த கொள்கையையும் விட்டுக் கொடுக்காமல் பேசி தஃவா செய்து இஸ்லாத்திற்குள் எடுப்பதற்கே சென்றிருப்பார்கள்.
ஆனாலும் அவர்களுடனான ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவ்விடத்தை விட்டு அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம்(ரலி) அவர்கள்; நகராத காரணத்தால் அந்த சிறு இடைவெளியில் ஷைத்தான் அண்ணல் அவர்களுக்கு கோபத்தை விதைத்து விட்டான்.
அண்ணல் அவர்களின் கோபம் நீடித்த நிலையில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூத்(ரலி) அவர்கள் அலச்சியம் செய்த நிலையில் இந்த பெருங் கூட்டம் இஸ்லாத்திற்குள் வரவேண்டிய அவசியமில்லை இது ஷைத்தானின் முயற்சியால் சமத்துவத்திற்கு சாவு மணி அடிக்கும் வேலை என்பதை ஷைத்தானின் மறைவான சூழ்ச்சியை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஷைத்தானின் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிந்து சமத்துவத்தை மேலோங்க செய்து விடுகிறான்.
இவர் அலச்சியம் செய்யப்பட்டுத்தான் அவர்கள் உள்ளே வர வேண்டும் என்றால் அவர்களை விட உள்ளம் இறைநம்பிக்கையால் நிறைந்திருக்கும் பிறரால் இழிவாக கருதப்பட்ட இந்த கண் தெரியாதவர் மேல் என்று நபியிடம் கூறி நீதியை நிலை நாட்டினான் நீதியாளன் அல்லாஹ்.
80: 5, 6. யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர்.80: 7. அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை.80: 8, 9, 10. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.
அதன் பிறகு அண்ணல் அவர்கள் அவர்களுடைய வாழ்நாளிலும் அதுப்போன்று யாரிடமும் கோபம் கொண்டு கடு கடுத்ததேக் கிடையாது.
மு.செ.மு.அபூபக்கர்
நிதானம் இழக்க வில்லை அமைதியே உருவான அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு கோபம் வந்தது என்றதும் அது எப்படிப்பட்டக் கோபமாக இருந்திருக்கும் ? அங்கு என்ன நடந்திருக்கும் ? என்ன மாதிரி திட்டி இருப்பார்கள் ? என்ற எண்ணம் பலருக்கும் ஏற்படலாம்.
அண்ணல் அவர்களின் முகம் தான் கோபத்தால் சிவந்ததே தவிர வாய் வார்த்தைகளைக் கொட்ட வில்லை. கோபத்திலும் கூட நிதானம் காத்தது அண்ணல் அவர்களைப் போன்று உலகில் எவரையும் அன்றும், இன்றும், என்றும் எவராலும் கோடிட்டுக் காட்டவே முடியாது.
அருள் அகற்றப்ட்டவர்கள்கோபம் யாரையும் விட்டு வைக்காது அது யாரை ஆக்ரமித்து விட்டதோ விடை பெறும் பொழுது பெரிதாக இல்லை என்றாலும் சிறிய அளவிலேனும் பாதிப்பை ஏற்படுத்தாமல் விலகிச் செல்லாது யார் மீது அல்லாஹ்வின் அருள் உள்ளதோ அவர்களைத் தவிர.
யாருடைய உச்சந் தலையில் கோபம் குடி கொண்டு கடைசிவரை இறங்க வில்லையோ அவருடைய உச்சி முடி ஷைத்தானின் கையில் இருக்கிறது என்பதாக விளங்கிக் கொண்டு துஷ்டனை கண்டால் தூர விலகிக் கொள்வது போல் விலகி கொள்ள வேண்டும்.
அவனருடைய உச்சி முடியை பிடித்துக்கொண்டு ஷைத்தான் அவரை வழி நடத்துவான் அவரிடமிருந்து அல்லாஹ்வின் அருள் அகற்றப்பட்டு விடும் அவன் ஷைத்தானின் அடிமையாகி விடுவான்.
அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நன்மக்களாக நாம் நம்மை ஆக்கிக் கொண்டால் மட்டுமே கோபம் அதிகம் வராது வந்தாலும் பாதிப்பை ஏற்படுத்தாது பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன் அல்லாஹ் நம்மை அதிலிருந்து மீட்டெடுத்து விடுவான்.
அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நன் மக்களாக வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!
கோபம் ஷைத்தானின் தூண்டுதல் தான் என்பதை பற்றியும், அதன் கொடிய விளைவுகளைப் பற்றியும் அல்லாஹ் நாடினால் இன்னும் எழுதுவோம்.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
மு.செ.மு.அபூபக்கர்
சகோதரர் முஹம்மதுவின் ஆதாரபூர்வமான விளக்கங்களுக்கு மிக்க நன்றி.
//நெஞ்சில் நிறைந்திருக்கு
நஞ் சகன்றத் தூய்மை
நெற்றியில் இன்னுமிருக்கு
நிலம் சுட்ட அடையாளம்!//
மாஷா அல்லாஹ், என்றென்றும் மறக்கமுடியா ஹஜ்ஜின் கடமையை நிறைவேற்றிய வரிகள்
நிச்சயம் அனைவரின் ஹஜ்ஜையும் கபூலாக்க துஆ செய்வோம்
Post a Comment