Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஊரில் அடை மழையாமே !? 14

அதிரைநிருபர் பதிப்பகம் | November 25, 2011 | , , ,

மழை என்றால் அனைவரின் மனமும் மழலையாக மறுவுருவமெடுக்கும், துள்ளி விளையாடத் தவிக்கும், மழையில் நனைந்திட ஆசைகள் ஆயிரம்  இவைகள் வளைகுடாவில் இருப்பதனால், இதே நிலை அதிரையில் இருந்தால் எங்கே என் குடை என்றுதான் தேடுவோம் அது வேறு விஷயம்.

மழைக்கு மயங்காத மானிடனும் உண்டோ இவ்வுலகில், அல்லாஹ்வின் ரஹ்மத் பொழிந்தாலே வீதிகள் செழிக்கும், ஊர் செழிக்கும் ஏன் நாடும் செழிக்கும்.

சரலானாலும், சாய்தெடுக்கும் வெள்ளமானாலும், சில்லென்ற தூறலும் சங்கம் வைத்து தீர்ப்புகள் சொல்லும்... எத்தனை செண்டிமீட்டர் பெய்தோம் என்றும். மழை வருமா, வராதா என்று ஏங்க வைப்பதிலாகட்டும் வந்ததும் துள்ளிக் குதிப்பதிலாகட்டும், பெய்து முடிந்ததும் அரசாங்கத்தையும் அதிகாரிகளை தேடுவதிலாகட்டும் நம்மக்கள் என்றுமே இந்தியக் குடிமக்களே.

ஊரில் மழை என்றால் அன்று ஆகாஸவானி தான் ஆரூடம் சொல்வதை கேட்டிருக்கிறோம் அதன் பின்னர் தொ(ல்)லைக்காட்சிகளின் ஆதிக்கம் வந்ததும்... இன்றைய கால கட்டங்களில் "ரமணன்" என்றொரு தேய்ந்த ரெக்கார்டு மெஷெஜ் சொல்பவரை (தமிழ் புலமை கரைபுரண்டு ஓடுவது போன்ற நினைப்பில்) அடிக்கடி காண முடிகிறது, அந்த அலுவலகத்தில் வேறு யாருமே இல்லையா? 

அதெல்லாம் இருக்கட்டும் நம் ஊரில் பெய்துவரும் தொடர் மழையின் பலன் எந்த அளவுக்கு இருக்கும் என்று இனிமேல்தான் தெரியவரும். தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கும் மழை நீரினை புகைப்படங்களுடன் அதிரை மக்களின் சிரமங்களை அதிரை வலைத்தளங்களில் சுட்டிக் காட்டப்படிருக்கிறது.


இங்கே செக்கடிக் குளத்திற்கு மழை நீரின் ஓட்டம் பாய்வதை படத்தில் காணலாம்..

வழிந்தோடுமா செக்கடிக் குளம் !?

காத்திருப்போம் இன்ஷா அல்லாஹ் !




- அபுஇபுறாஹிம்

14 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வருக வருக மழையே!
நிறைக நிறைக குளமே!
தருக தருக பசுமையே!
விளைக விளைக பயிரே!

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிரையில் அடை மழை பொழிகிறதே!ஆங்காங்கே உள்ள குப்பைகளையும்,கழிவு நீர்களையும்
மறக்காமல் அழைத்து சென்று. குளிக்கும் குளங்களில் குவிக்கிறதே! பொதுமக்கள் பொறுப்புடன்
சிந்தித்தால் தூய்மையான நீரை பெற்றிடலாமே!

sabeer.abushahruk said...

அதிரையில் அடைமழை என்றாலே எனக்கு மனசு கச்சல் கட்டி, நெனப்பு குடைக்கம்பி பிடிக்க ஆரம்பித்துவிடும். சிறு மேடிட்டப் பகுதியில் நடக்காமல், கனுக்கால் வரையான ஓடைகளில் கால்கள் இழுத்து நடக்கவேப் பிடிக்கும்.

எல் எம் எஸ்: அடுத்த வாரம்வரை மழையை தொடர வைத்தால் இரண்டு நாட்கள் 29 & 30 ஊர் மழையில் என் கால்கள் நனையும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மழை எந்தக் கட்சிங்க !?

பருவ மழை இப்போது பெருத்த மழை என்று சொல்லுமளவுக்கு பெய்து கொண்டிருக்கிறது, மழை பெரும்பாலும் பருவம் தவறாமல் வந்திடுவதில் எல்லோருக்கும் முன்னோடி அதே நேரத்தில் வர வேண்டிய நேரத்தில் வராமல் சுனங்கிவிட்டாலும் மக்களின் அவதியும் அவர்களின் எரிச்சலும், குற்றம் கானும் குணமும் அப்போதுதான் வெளிப்படும்.

ஒரே நேரத்தில் இரண்டு கேள்விகள்தான்....

ஊரில் மழையான்னு வாசித்து விட்டு வீட்டிலுள்ளங்களின் ரன்னிங்க் கமெண்ட்ரி கேட்டுகிட்டு இருக்கும்போது தீடீரென்று ஒரு கேள்வி எழுந்தது - மழை ஆளும் கட்சியா ? எதிர்கட்சியா ?

மழையே இல்லை என்றால் எல்லாமே உல்டாவாக மாறி தூற்றலும் போற்றலும் தொடரும் இது வாடிக்கைதான்...

அடுத்து !

மழை தேர்தலில் நின்று போட்டியிடுமா ? அப்படின்னா அது எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் அல்லது தனித்தே போட்டியிடுமா? ஏன் என்று கேட்டால் "புயல் சின்னம்" என்று அறிவித்து ஒரே பரபரப்பை ஏற்படுத்துகிறார்களே அதான் இப்படி கேட்டத் தோன்றுகிறது.

Ahamed irshad said...

ஆஹா அருமை..அதென்னான்னே தெரிய‌ல‌ ம‌ழைக்கால‌ச் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ங்க‌ளோ,வீடியோவோ அதிரை வ‌லைப்பூக்க‌ளில் எதில் வ‌ந்தாலும் மூளையில் அலார‌ம் அடிக்குது..(என‌க்குத்தாங்க‌..!) சூப்ப‌ர் ஷேரிங்..

ம‌ண்டையில் எறிந்த‌ ப‌ல்பின் விளைவால் ச்சும்மா ரெண்டு வ‌ரி கீழே..


'இணைய‌ம் வ‌ழி
செக்க‌டி
பார்க்க‌னும்
அடிக்க‌டி..'

.....
ச‌மீப‌த்தில் நான் விட்ட‌ ட்விட்:

செல்ஃபோனை ஜ‌ன்ன‌ல்க‌ம்பியில் வைக்க‌ச் சொல்லி ம‌ழைச்சார‌லை ர‌சித்தேன் இன்று # ஊரில் ம‌ழையாம்..


:))

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//தீடீரென்று ஒரு கேள்வி எழுந்தது - மழை ஆளும் கட்சியா ? எதிர்கட்சியா ?//

நம்ம சேர்மனின் ஆளுங்கட்சி தான் மழை.அவரின் சுகாதார இலக்கிற்கு ஊழியர்களின் பற்றாக்குறை பெருந்தடையாயிருக்காம்.அதனால் மக்கள் வெளித்தள்ளிய குப்பைகளை வெள்ளத்தால் அள்ளிச் செல்ல அவரின் சதியே அடை மழையாம்.

//மழை தேர்தலில் நின்று போட்டியிடுமா ? அப்படின்னா அது எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் அல்லது தனித்தே போட்டியிடுமா? ஏன் என்று கேட்டால் "புயல் சின்னம்" என்று அறிவித்து ஒரே பரபரப்பை ஏற்படுத்துகிறார்களே //

அது பெரும்பாலும் தனித்தே களம் காணும்.நான் நான் என்ற அகம்பாவம் வரும் போது பாமக வுடன் சேர்ந்து மரம் வேரோடு சாய்க்கவும்,தேமுதிக வுடன் சேர்ந்து இடிமுழக்கமிடவும்(முரசு) கூட்டணியமைத்து நாசமாக்கவும் செய்யும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பெரு மழையில் வீடிழந்த காக்கைக்கு உதவித்தொகை வழங்குவர் யாரோ?

அழஹாதிய மழையே....உன் மூலம் உலகை குளீரூட்டச் செய்வது யாரோ?

பெருமழையில் கரைபுரண்டு ஓடும் உள்ளம்
அடை மழை ஏழையின் அழையா விருந்தாளி...

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடருவோம்..

தனிமையில் இறைவனின் படைப்பை ரசித்தவனாய்...ருசித்தவனாய்

கொழும்பிலிருந்து.....

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சபீர் காக்கா சொன்னது:

// எல் எம் எஸ்: அடுத்த வாரம்வரை மழையை தொடர வைத்தால் இரண்டு நாட்கள் 29 & 30 ஊர் மழையில் என் கால்கள் நனையும். //

கால்களை நனைப்பதோடு ஊருக்கு வருகை தருவதை நினைவூட்டும் விதம் அருமை காக்கா.அல்லாஹ்வின் நாட்டத்தில் மழை தொடர்ந்தால்.நீச்சல் அடித்தாவது என்னை வந்து பார்க்க முயற்சி செய்யுங்கள். என் கடை விலாசம் .


DEZIGNZ
50.MAIN ROAD (NEAR INDIAN BANK)
OPP DR.HANIF HOSPITAL

MY CONT NO: 9944116240

L.M.S. ABUBACKER

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

நெய்னா முஹம்மது சொன்னது:

// பெருமழையில் கரைபுரண்டு ஓடும் உள்ளம்
அடை மழை ஏழையின் அழையா விருந்தாளி...//

அடை மழை உம்மை அடித்துச் சென்று.
கொழும்பில் வைத்து கருத்திட செய்ததோ?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஊரின் பாழாய்ப்போன பழக்க வழக்கங்களும், தேவையில்லாமல் வரும் சீர்,சீராட்டும், ஆடம்பர வாழ்வை நோக்கி அள்ளி வீசப்படும் நம் காசுபணங்களும் அன்றிலிருந்து இன்றுவரை எம்மை அசராமல் தாய்நாடு தவிர மற்ற எல்லா நாடுகளுக்கும் நாடு கடத்தி வருகின்றன.......

சகோ. லெ.மு.செ. அபுபக்கரின் கருத்திற்கு என் பதில்...

அழகான கொழும்பின் ஒரு அமைதியான மூலையிலிருந்து

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

செக்கடி பள்ளியின் முதல் படத்தை பார்த்து கருத்திட கருத்துக்கள் பல இருந்தும் பள்ளிக்கு கீழே மரத்தடியில் மேயும் செம்மறி ஆடுகளே கண் முன் வந்து நிற்கிறது.....இது கிட்டப்பார்வையா? இல்லை எட்டப்பார்வையா? அல்லது அதையும் தாண்டிய தொலைநோக்குப்பார்வையா? யாராச்சும் சொல்லுங்களேன்???

மு.செ.மு. நெய்னா முஹம்மது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கீழே மரத்தடியில் மேயும் செம்மறி ஆடுகளே கண் முன் வந்து நிற்கிறது.....இது கிட்டப்பார்வையா? இல்லை எட்டப்பார்வையா? அல்லது அதையும் தாண்டிய தொலைநோக்குப்பார்வையா? யாராச்சும் சொல்லுங்களேன்???//

அங்கே இரண்டோ அல்லது மூன்றோ இறைச்சி கடைகள் இருப்பது தெரிந்தால் பார்வைகள் சரியே ! :) :) :)

MSM(n):

பயணத்தில் இருக்கீங்க... நிறைய கட்டுரையா ஊற்றெடுக்குமே... அப்படியே தேக்கி வைத்து அனுப்புங்களேன் :)

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
// //கீழே மரத்தடியில் மேயும் செம்மறி ஆடுகளே கண் முன் வந்து நிற்கிறது.....இது கிட்டப்பார்வையா? இல்லை எட்டப்பார்வையா? அல்லது அதையும் தாண்டிய தொலைநோக்குப்பார்வையா? யாராச்சும் சொல்லுங்களேன்???//

ஆடு மேயக் கூடிய அந்த இடத்தை இப்போ போட்டோ எடுத்து போட்டால் ஒரு வித்தியாசம் கண்டு பிடிக்கிற போட்டி வைக்கலாம்

ZAEISA said...

விலாசத்திற்கு தகுந்த பார்வை......அந்த சின்ன ஆடுதான் தெரியும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு