Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை கொசுக்களிடம் ஓர் பிரத்யேக பேட்டி...! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | November 03, 2011 | , , ,


உலகளவில் தேடப்படும் அதிபயங்கர குற்றவாளியைக்கூட இன்றைய ஊடகங்கள் அவர்கள் பதுங்கி பாதுகாப்பாக இருக்கும் பதுங்கு குழிக்குள் கூட சென்று பல சிரத்தை எடுத்து அவர்களை பிரத்யேக பேட்டி கண்டு அவர்கள் பற்றிய தகவல்களை வெளியுலகிற்கு கொண்டு வந்து தன் ஊடகத்தின் தனித்திறமையை பரபரப்புடன் அவ்வப்பொழுது வெளிக்காட்டிக் கொள்வது நாம் அறிந்ததே. அவர்களின் துணிச்சல்கள் நிச்சயம் நம்மால் பாராட்டப்பட வேண்டியவைகளே.

அது போல் ஒரு சிறு முயற்சியாக இன்று நமது சிறப்பு செய்தியாளர் உள்ளாட்சி தேர்தல் களத்தில் நமதூரில் எல்லாத்தரப்பு வேட்பாளர்களையும் பேட்டி கண்டு அவ்வப்பொழுது நமதூர் இணையதளங்களில் வழங்கி நம் அனைவரின் கண்களுக்கும் விருந்து வைத்தனர். மனிதர்களை மட்டும் பேட்டி கண்ட அவர் வித்தியாசமாக மற்ற உயிரினங்களையும் பேட்டி காண வேண்டும் என்ற ஆவலில் இம்முயற்சியில் இறங்கியுள்ளார். தற்சமயம் பருவ மழைகாலமாதலால் நமதூரில் ஒட்டு மொத்தமாக எல்லோராலும் படுபயங்கரவாதியாக கருதப்படும் இரத்த பந்தமான 'கொசுக்களை' பேட்டி கண்டு இங்கு நமக்காக வழங்கியுள்ளார். இதோ உங்களின் பார்வைக்கு..

செய்தியாளர் : "மனிதர்களை மட்டும் பேட்டி எடுத்துப்பழகிப்போன நமக்கு மக்களோடு மக்களாக உறவாடும் இரத்த பந்தங்களாகிய உங்களையும் (கொசுக்களையும்) பேட்டி காணும் ஆவலில் நான் இங்கு வந்துள்ளேன். உங்களின் ஒத்துழைப்புடன் கூட இந்த பேட்டிக்கு முதற்கண் நன்றி கூறிக்கொள்கிறேன்... ஆரம்பிக்கலாமா கொசுக்களே???"

வெளியூர் கொசு : "வாங்க சார், எங்களை எல்லாம் பேட்டி எடுக்கும் அளவுக்கு உலகம் மாறி விட்டதா? ஆச்சரியமாக இருக்கிறதே?"

செய்தியாளர் : "உள்ளூர்க்காரனான என்னை சார் என்று அழைக்கிறீர்? நீர் வெளியூர் கொசுவா?"

உள்ளூர் கொசு : "ஆமாம் காக்கா, வெளியூர்களில்ளெல்லாம் சுத்தம், சுகாதாரம் என்று சொல்லி எங்கள் பொழப்புல மண்ணை அள்ளி போட்டு வருகிறார்கள். அதனால் அந்த கொசு பொழப்பு தேடி நம்மூர் பக்கம் வந்ததை நாங்கள் தான் வரவேற்று எங்களுடன் சேர்த்துக்கொண்டோம்."

செய்தியாளர் : "நீங்கள் மனிதர்களுக்கு எதிரியாக இருந்தாலும் உங்களுக்குள் இருக்கும் இந்த ஒற்றுமை அவர்களிடம் இல்லை."

உள்ளூர் கொசு : "செய்தியா(ளரா)க்கா, நீங்கள் எங்களை தேடி வந்து பேட்டி எடுத்துள்ளதால் நாங்கள் இங்கு மனம் திறந்து உங்களிடம் எல்லா உண்மைகளையும் சொல்லி விடுகிறோம். கேளுங்கள் உங்களது கேள்விகளை..."

செய்தியாளர் : "நீங்கள் உங்களின் பிறப்பு அதன் வளர்ச்சிகள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?"

உள்ளூர் கொசு : "எங்கெல்லாம் அசுத்தங்களும், நீண்ட நாட்கள் அகற்றப்படாத கழிவுகளும், மக்கி நாறிப்போன குப்பைகளும், கழிவு நீர்த்தேக்கங்களும், இருண்ட இடங்களிலெல்லாம் எங்களின் பிறப்பிடம். அது தான் எங்களுக்கு ஒரு சொர்க்கபுரியும் கூட. அங்கு தான் எங்கள் இனம் கூட்டம் கூட்டமாக உற்பத்தியாகும்."

செய்தியாளர் : "ஆஸ்பத்திரியில் ஊசி போடும்பொழுதே வலிக்கிறது. ஆனால் நீங்கள் மனிதர்களை கடித்து சென்ற பிறகல்லவா அரிக்கிறது. அது எப்படி? ஏதேனும் மாயமந்திரம் உங்களிடம் உண்டா?"

உள்ளூர் கொசு : "நல்ல கேள்வி கேட்டிருக்கிறீர்கள் காக்கா? நாங்கள் மனிதர்களின் தோள் மேல் அமர்ந்து எங்கள் ஊசி மூக்கில் க்ளோரஃபார்ம் போல் வரும் உணர்ச்சி இழக்கச்செய்யும் ஒரு திரவத்தை தடவி பின்னர் நாங்கள் ஊசியை அதன்மேல் பாய்ச்சி எங்களுக்கு வேண்டிய இரத்தத்தை உறிஞ்சி எடுத்தபின் பிறகு பறந்து விடுவோம்." நாங்கள் பறந்த பின் அந்த மயக்க திரவம் சக்தி இழந்து பின் மனிதர்கள் உணர்ச்சி வந்து சொரிந்து கொள்கிறார்கள்.

செய்தியாளர் : "ஓஹ்..! உங்கள் கடியில் அவ்வளவு நுணுக்கம் இருக்கிறதா? பரவாயில்லையே? அது சரி உங்கள் கடியால் மனிதர்களுக்கு வரும் நோய்கள் பற்றி தயக்கம் இன்றி கொஞ்சம் இங்கு விளக்க முடியுமா?"

உள்ளூர் கொசு : "காக்கா நீங்கள் விலாவாரியாக கேட்பதால் இதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். எங்கள் கடியின் மூலம் மனிதர்களுக்கு மலேரியா, டைஃபாயிட், மூளைக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, யானைக்கால் மற்றும் அதன் காரணமாக இன்னும் பல நோய்கள் வர காரணமாக இருக்கிறோம், இதனால் மருத்துவர்களின் வாழ்வாதாரம் சிறக்க உதவுகிறோம்"

செய்தியாளர் : "உங்களுக்கு வரக்கூடிய தொந்தரவுகள் என்ன, என்ன?"

உள்ளூர் கொசு : "சில வீடுகளில் ஆல் அவுட், குட் நைட், டார்ட்டாய்ஸ் போன்ற மஸ்கிட்டோ மேட் இவைகளை பயன் படுத்தி எங்களுக்கு சில நேரங்களில் சில தொல்லைகள் தரப்படுகின்றன. அது நிரந்தர தொல்லைகளல்ல. காரணம் அது ஒரு சந்தைப்பொருள், வெளிநாட்டு சதி, எங்களை நிரந்தரமாக அவர்களின் பொருட்கள் அழித்து விட்டால் பிறகு அவர்கள் எப்படி சந்தையில் அவர்கள் பொருட்களை விற்று சந்தையை விரிவாக்க முடியும்? அதனால் அவர்கள் வீரியம் குறைந்த பொருட்களைத்தான் விற்று வருகிறார்கள். அது ஒரு வகையில் எங்கள் இனம் அழிக்கப்படாமல் பாதுகாக்கிறது."

செய்தியாளர் : "இப்படியெல்லாம் இதில் விசயங்கள் உள்ளனவா?" 

உள்ளூர் கொசு : "இன்னொன்றையும் சொல்ல மறந்து விட்டேன். மின்சார வாரியம் அடிக்கடி மின் தடையை ஏற்படுத்தி மேற்கண்ட கருவிகள் தொடர்ந்து இயங்காமல் தடுத்து எங்களுக்கு பேருதவி புரிந்து வருகின்றன. அவர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்."

செய்தியாளர் : "உங்களுக்கு உகந்த காலம் எது?"

உள்ளூர் கொசு : "எங்களுக்கு மழைக்காலம் மற்றும் அதன் பின் வரும் குளிர் காலம் தான் மிகவும் ஏற்ற காலம். அப்பொழுது தான் எங்கள் இன உற்பத்தி அதிகரிக்கும். வெளிச்சமான, சுத்தமான இடங்கள் எங்கள் இனம் அழிய காரணமான இடங்கள்." 

செய்தியாளர் : "கடைசியாக ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?"

உள்ளூர் கொசு : "நமதூரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேரூராட்சி மன்ற தலைவர் அஸ்லம் அவர்கள் தான் பதவி ஏற்கும் முதல் நாளில் நமதூரில் சுகாதாரத்திற்கு முக்கியத்தும் கொடுக்கப்படும் என்று மேடையில் அறிவித்திருப்பது எங்களுக்கெல்லாம் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது. இப்படி மனிதர்கள் எல்லாம் சுத்தம், சுகாதாரம் என்று விழித்துக்கொண்டால் எங்கள் இனம் வெகுவிரைவில் அழிக்கப்பட்டுவிடுமோ? என்ற அச்சத்தில் நாங்களெல்லாம் உறைந்து போயுள்ளோம். ஆனால் அசுத்தம் செய்யும் மக்கள் இருக்கும் வரை எங்களுக்கு என்றும் அச்சம் இல்லை. அவர்கள் தான் எங்களின் நிரந்தர நண்பர்கள். யார், யாரெல்லாம் எங்கள் இனம் பெருக, வளர, வாழ வழிவகை செய்கிறார்களோ அவர்களுக்குத்தான்  நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். சரி காக்கா, மனிதர்கள் புழங்கும் சாக்கடையும், சகதியும் உள்ள இடத்திலிருந்து விருந்திற்கு அழைப்பு வந்துள்ளது அங்கு எங்கள் படையுடன் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன்.


 நீதி  :  "பாத்தியளா? மக்களே சுத்தம், சுகாதாரம் எப்படி எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கு மிக, மிக முக்கியம் என்று. அசுத்தம், ஆரோக்கியமற்ற சூழலை நம் மார்க்கம் எப்பொழுதும் வன்மையாக கண்டிக்கிறது. கொசுக்களின் பேட்டி மூலம் நாம் விழுப்புணர்வு அடைந்து கொடிய, கொடிய நோய்நொடிகளிலிருந்து நம்மையும், நம் வீட்டினர்களையும் பாதுகாத்துக்கொள்வோமாக.

கற்பனைக்கு கரு கொடுத்து கொசுக்களின் பேட்டியை தொகுத்தவர்...

- மு.செ.மு. நெய்னா முஹம்மது.
- அதிரைப்பட்டினத்திலிருந்து....

23 Responses So Far:

shamsul huq said...

ஏற்கனவே கடி தாஙகமுடியல் இதுல கொசுக்கடிவேறா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கலக்கல் MSM(n) !

அதுசரி கொசுக்களின் வார்டு மெம்பரு யாருன்னு சொல்லவேயில்லையே !

அவரு யாருக்கு ஓட்டுப் போட்டாராம் கொஞ்சம் கேட்ட்சு சொல்லுங்களேன் !

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

யாரோ, நெய்னாவாம், சவூதிய்லிருந்து வந்திருக்கிறாராம்! எங்களை பேட்டி எடுக்கிற மாதிரி எடுத்துவிட்டு, அந்தப்பக்கம் போய், எங்களை ஒழித்துகட்டவேண்டும் என்று பேசி இரூக்கிறார்! இன்றே அவர் வீட்டுக்குப்போகிறோம்.

shamsul huq said...

தற்போதைக்கு தலைவர் நைனா வார்டு மெம்பர் அபுபக்கர், இபுராஹிம், வாவன்னா சார்

shamsul huq said...

யான் சார் வாவன்னா சார் இது நிஜமாவே கொசு சொன்னதுதானே சில சமயங்களில் நிஜமாகி மனிதர்கள்சொல்லிவிட்டால் அப்புறம் நைய்னா சவுதிக்கே போக முடியாமல் போய்விடப்போகிறது அப்புற்ம் நீங்க மாட்டிகிடப்போறீங்க

Muhammad abubacker ( LMS ) said...

/நெய்னா சொன்னது ;
செய்தியாளர் : "உள்ளூர்க்காரனான என்னை சார் என்று அழைக்கிறீர்? நீர் வெளியூர் கொசுவா?" //

நல்லவேளை இஸ்லாமிய கொசுவாக இல்லை! அது மாற்று மத கொசுவாக இருந்தது நாளே உன்னை வாங்க சார் என்று
அழைத்து இருக்கிறது.இல்லை என்றால் வாங்க பாய் என்று அழைத்து இருக்கும் .

கொசு கடித்ததை விட இப்ப படித்தது ரொம்ப அறிக்கிதா நெய்னா?

ZAKIR HUSSAIN said...

கொசு யூனியன் எல்லாம்வச்சி , சந்தாவெல்லாம் வசூலிக்கிறதா கேள்வி!!!

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
---------------------------------------------

கடித்து உயிரெடுக்கும்
கொசுக்களைப் பேட்டி யெடுப்பீர்
குடிக்கப் பால்கொடுக்கும்
பசுக்களை ?

பேட்டியில் கலந்து கொண்ட
அத்தனை கொசுக்களும்
சாலிஹானவை போல
மிகவும் தன்மையாகப் பேசின

இதுவே
கல்சரைக் கொசுக்களாக
இருந்திருந்தால்
'இன்னா நெய்னா
சும்மா நொய் நொய்னு
நீ இன்னா மெய்னா?’
என்றல்லவா எகிறும்?

எல்லோரும்
கொசுக்கடி எனும்
திகரடியில் இருக்க
எனக்கு மட்டும்
நெய்னாவைச் சுற்றிப்
பெய்யும்
மழையையே விழைகிறது மனது!

Sabeer Ahmed

Yasir said...

பொசுக்குன்னு சாகும்
கொசுக்களை வைத்து
நறுக்கெண்டு நல்ல மெசேஜ்... great Mr.Naina
இதன் மூலம் கொசுவின் நிரந்த எதிரியாகிவிட்டீர்கள் நீங்கள் :)

Yasir said...

//இதுவே
கல்சரைக் கொசுக்களாக
இருந்திருந்தால்
'இன்னா நெய்னா
சும்மா நொய் நொய்னு
நீ இன்னா மெய்னா?’
என்றல்லவா எகிறும்/// ஹாஹாஹாஹாஹ....காக்கா வயிறு வலிக்குது...

Shameed said...

பேட்டி எடுக்கும் போது கொசு கடித்ததா? நெய்னா

crown said...

"சில வீடுகளில் ஆல் அவுட், குட் நைட், டார்ட்டாய்ஸ் போன்ற மஸ்கிட்டோ மேட் இவைகளை பயன் படுத்தி எங்களுக்கு சில நேரங்களில் சில தொல்லைகள் தரப்படுகின்றன. அது நிரந்தர தொல்லைகளல்ல. காரணம் அது ஒரு சந்தைப்பொருள், வெளிநாட்டு சதி, எங்களை நிரந்தரமாக அவர்களின் பொருட்கள் அழித்து விட்டால் பிறகு அவர்கள் எப்படி சந்தையில் அவர்கள் பொருட்களை விற்று சந்தையை விரிவாக்க முடியும்? அதனால் அவர்கள் வீரியம் குறைந்த பொருட்களைத்தான் விற்று வருகிறார்கள். அது ஒரு வகையில் எங்கள் இனம் அழிக்கப்படாமல் பாதுகாக்கிறது."
-----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். கொசுறு செய்தியுடன் பேட்டியின் மொத்த காரணம் சுகாதாரம்! சுகாதாரம் இல்லாமல் இருந்தால் நல்ல தாரம் இல்லாத வீடு போல் நம் சகலமும் வீண்!ஆகவே இந்த பேட்டியின் சாரம்சம் நம் பஞ்ஞாயத்து நிர்வாகத்தலைவருக்கு விடப்பட்ட மறைமுக வேண்டுகோளாகவே கொள்கிறேன்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
------------------------------------------------

சிறப்பான ஓர் பதிவு, அதுவும் மிகத் தெளிவான படங்களுடன், Mosquito on the AIR. சூப்பர் !

- அஹ்மது முஹ்ஸீன்

Anonymous said...

time pass.....hahahaaaa

noohu said...

நல்ல ஒரு பேட்டி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர் நெய்னா முஹம்மது.

நகைச்சுவையாக இருந்தாலும், இறுதியில் ஒவ்வொருத்தரும் தன் சுற்றுவட்டத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை தூண்டுகிறது இந்த பதிவு.

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த எப்படியெல்லாம் சூவரஸ்யமாக எழுதவேண்டும் என்பதற்கு இது போன்ற பதிவுகள் உதாரணம்.

வெல்டன் சகோதரர் நெய்னா...

அதிரைக்காரன் said...

அடப்பாவி! உன் அலுவலக முகவரிக்கு மெயில் போட்டேன்.என்னடா பதில் வரக்காணோமேன்னு பார்த்தா நீ ஊர் போய்ட்டியா கடிக்க!! எச்சரிக்கையா இரு 'அசந்து மறந்து' தூங்கிட்டா கொசுக்கள் தூக்கிட்டுப்போயிடப் போவது!

லெ.மு.செ. இத்ரீஸ் said...

உன் மச்சான் ஜஹபர் சாதிக் உன்னைபற்றி(அதிரையை நாமெல்லாம் பார்க்காத தனித்துவத்துடன் வரையும் சிறப்பான ஆள் என்று)சொல்லி முடித்த அடுத்த நாளே உன் சிந்தனையை இங்கே கொட்டி இருப்பதை பார்த்து வியந்து போனேன்.ரொம்ப சூப்பர் நெய்னா!வாழ்த்துக்கள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சிந்தனையை கிளரிவிடும் சிறப்பான பேட்டி!
மிக அருமையான உரையாடல்.அதுவும் மண்ணில் காலடி வைத்தவுடன்!
அதிரை சுகாதாரத்தின் விடிவெள்ளிச் சேர்மனோடு இணைந்து சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கவும்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,,,


ஈ'... எனும் எதிரி


இன்று நகரம் முதல் கிராமம் வரை எங்கும் நீக்கமற நிறைந்து வாழும் பூச்சி இனம்தான் ஈக்கள். பொதுவாக ஈக்கள் என்று சொன்னாலே நமக்கு அருவருப்புதான் தோன்றும். ஏனென்றால் அவை மலத்திலும், குப்பையிலும் உட்கார்ந்து அப்படியே நம் உடலிலும், உண்ணும் உணவுகள் மீதும் உட்காருவது தான். ஈக்களை முழுமையாக ஒழிக்க சுகாதாரமே சிறந்த வழி. அரசும் பல வழிகளில் முயற்சி செய்தும் ஈக்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை.

இந்த ஈக்களால் ஆண்டுக்கு பல லட்சம் பேர் பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு இலக்காகின்றனர். பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள் பரவுவதற்கு ஈக்களே காரணமாய் இருக்கின்றன.

பொதுவாக ஈக்கள் அழுகிய காய்கறிகள், மீன் கடைகள், குப்பைத் தொட்டி, கோழிப்பண்ணை, மாட்டுப்பண்ணை, மலஜலம் கழிக்கும் கழிப்பறை,மேலும் சுகாதாரமற்ற இடங்களில் அதிகம் உள்ளன.

பெண் ஈயானது ஒரு தடவைக்கு 80 முதல் 100 முட்டைகள் வரை இடும்.

ஈக்கள் கொசுக்களைப் போல் இரத்தத்தில் கலக்கும் நோய்க்கிருமிகளைக் கொண்டு அலைவதில்லை. ஆனால் உணவுப் பொருட்களின் மீது இலட்சக்கணக்கான பாட்டீரியாக்களை இறக்கி வைக்கும் பணியைச் செய்கின்றன.

ஈக்களுடைய ஆறு கால்களிலும் அதன் உடலிலும் பல்லாயிரக்கணக்கான உரோமங்கள் உள்ளன. இதனுடைய ஒவ்வொரு காலிலும் வட்டமான பிசின் போன்ற உறுப்பு உள்ளது. இந்த பிசின், ஒரு பசைப் பொருளாகும். ஈக்கள் கழிவுகளின் மீது உட்காரும்போது பாக்டீரியாக்கள் அந்த பிசின் போன்ற உறுப்பில் ஒட்டிக் கொள்கின்றன. அது மீண்டும் மனிதன் மீதோ, உணவுன் மீதோ உட்காரும்போது அதிலுள்ள பாக்டீரியாக்கள் உணவில் இறங்கி எளிதாக மனித உடலுக்குள் செல்கின்றன.

இதனால் வயிற்றுப்போக்கு, குடற்புழு, உடல் நமைச்சல், தோல் எரிச்சல், வயிற்றுப்புண், டைபாய்டு, தொற்றுக் கிருமிக் காய்ச்சல் என எண்ணிலடங்கா நோய்கள் உண்டாகின்றன. நாங்கள் கொசுக்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் ஈக்களும் தன்பங்கிற்கு ஏராளமான நோய்களைப் பரப்புகின்றன.

ஈக்களைப் பற்றி கி.மு. 400ம் நூற்றாண்டுகளிலிருந்து செய்திகள் உள்ளன.

தற்போது தமிழ்நாட்டில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களிலும், கடற்கரை யோரத்தில் வாழும் மக்களும்தான் ஈக்களால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலே கண்ட இடங்களில் கோழிப்பண்ணை அதிகம் இருப்பதால் அங்கு ஈக்களின் பெருக்கமும் அதிகமாக உள்ளது. மேலும் கடலோர மாவட்டடங்களிலும் மீன்கள் விற்கப்படும் இடங்களிலும் ஈக்கள் உற்பத்தி அதிகமாக காணப்படுகிறது.

இப்படி பல வகைகளில் மக்களைத் தாக்கும் ஈக்களிலிருந்து நம்மை பாதுகாக்க சில நடவடிக்களை மேற்கொண்டால் போதுமானது.

· அழுகிய பொருட்களை உடனே அப்புறப்படுத்தி அப்பகுதியை தூய்மையாக வைத்திருந்தால் ஈக்கள் பெருகாது.

· அசைவ பொருள் கிடங்குகளின் கழிவுகள் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.

· வீடுகளைச் சுற்றியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.

· உணவுப் பொருட்கள் உட்பட எந்த பொருட்களையும் திறந்து வைப்பத்தைத் தவிர்க்க வேண்டும்.

· வீடுகளில் குப்பைகள் சேர்த்துவைக்காமல் அடிக்கடி அப்புறப்படுத்திவிடவேண்டும்.

· கோழிப்பண்ணை போன்ற இடங்களில் முழு சுகாதாரத்தைக் கடைப்பிடித்தால் ஈக்களை ஓரளவுக்கு அழிக்கலாம்.

· ஈக்கள் அதிகமாக இருந்தால், மஞ்சளை நீரில் கரைத்து ஈக்கள் அதிகம் உள்ள இடத்தில் தெளித்தால், ஈக்கள் உள்ளே வருவதைத் தவிர்க்கலாம்.

Anonymous said...

500 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார். கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர். பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” எனச் சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம...் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர். அவர் அந்த ரூபாய் நோட்டைத் தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டைக் காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார் அனைவரும் இப்போதும் கைகளைத் தூக்கினர். அவர் தொடர்ந்தார்:- “கேவலம் ஒரு 500 ரூபாய்த் தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப்படும் போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம். நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்கள். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்க்கை என்ற பயிருக்குத் தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொல்லிகளும். ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்.

மு.செ.மு.அபூபக்கர்

rasheed3m said...

அஸ்ஸலாமு அழைக்கும் மு சே மு நெய்னா சங்கைக்குரிய ஹஜ் பெருநாள் வாழ்த்த்துக்கள். உன்னை தொடர்பு கொள்ள கைபேசி என்னை எனது கைபேசிக்கு மேச்சீஜ் அனுப்பித்தரவும்.

அப்துல்மாலிக் said...

உன் பாணியே தனிதான் நெய்னா

அருமை

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு