Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

'தீ'யது வேண்டாம் 'தீயணைப்பு வேண்டும் ! 24

அதிரைநிருபர் பதிப்பகம் | November 15, 2011 | , ,

சமீபத்தில் நடந்த திடீர் தீ விபத்து எல்லோரின் கவனத்திற்கும் வெகு விரைவாக எட்டியது. அதற்கு அதிரை வலைப்பூக்களின் மின்னல் வேக செயல்பாடுகளே முக்கிய காரணம். இது ஒரு பக்கம் இருக்க, ஏன் இதற்கு முன்னர் அதிரையில் தீ விபத்துக்களே நடந்ததில்லையா ? அந்த சூழல்களின் நாம் என்ன செய்திருந்தோம் அல்லது செய்யாமல் விட்டோம் என்று ஒரு பக்கம் வாதம் தொடர்ந்தாலும்.

சரி, இன்றையச் சூழலில் இனிமேலும் இதேபோல் ஏதும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருந்திட என்னதான் வழி ?

பெரும்பாலோரின் ஏகோபித்த கருத்தாக அதிரைக்கு என்று தனியாக தீயணைப்பு நிலையம் அவசியம் தேவை. இந்தக் கோரிக்கை கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே வலுப்பெற்றது. அதற்கான உறுதிமொழியையும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அளித்திருந்தார்.

நேற்றைய ஒரு காணொளிப் பேட்டியில் அதிரை பேரூராட்சி மன்றத் தலைவரும் அதற்கான அனைத்து முயற்சிகள் எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார் நாமும் அப்படியே ஆகட்டும் என்று காத்திருப்போமாக.

‘கத்தினால் குத்துவேன்’ ‘குத்தினால் கத்துவேன்’ என்ற போக்கினை தவிர்த்து, ‘கத்தாதே குத்த மாட்டேன்’ ‘குத்தாதே கத்த மாட்டேன்’ என்று மாற்றி சிந்திப்போமே.

“தீ” நாம் கண்டால் சுடாது தொட்டால்தானே சுடும் அப்படியிருக்க ஏன் அதனை அனைக்க வேண்டும் !?  ஆனால் தீ நம்மைத் தீண்டினால் தப்பிக்க வழியில்லை என்றால் அழித்திடும்.

தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையின் ஸ்லோகன் "WE SERVE TO SAVE" இதுதான் அவர்களின் குறிக்கோள்.

6698 பணியாளர்களுடன் 302 தீயனைப்பு மற்றும் இடர் மீட்பு சேவை நிலையங்கள், இடர் மீட்பு நிலையம் இரண்டும், 32 மாவட்டங்கள் முழுவதும் செயல்படுகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியைப் பொறுத்த வரை ஒன்பது தீயணைப்பு மற்றும் இடர் மீட்பு நிலையங்கள் உள்ளன அவைகள் முறையே:

கும்பகோணம் - (அவசர அழைப்பு எண் : 101)
ஒரத்தநாடு - (அவசர அழைப்பு எண் : 04372-33422)
பாப்பநாசம் - (அவசர அழைப்பு எண் : 04374-22101
பட்டுக்கோட்டை - (அவசர அழைப்பு எண் : 04373-52101)
பேராவூரனி - (அவசர அழைப்பு எண் : 04373-32401
தஞ்சாவூர் - (அவசர அழைப்பு எண் : 101)
திருவிடைமருதுர் - (அவசர அழைப்பு எண் : 04375-60101)
திருவையாறு - (அவசர அழைப்பு எண் : 04362-60101)
திருக்காட்டுப்பள்ளி - (அவசர அழைப்பு எண் : 04362-80401)

இவைகளையும் தாண்டி நமக்கு நாமே தற்காப்பு நடவடிக்கைகளையும் முன்னெச்சரிக்கைகளையும் செய்து கொள்வதில் தெளிவு இருக்க வேண்டும்.

சரி ஒருவேலை தீ என்ற இடர் ஏற்பட்டல் என்ன செய்வது ? அதற்கான தற்காப்பு செயல்களை எவ்வகையில் மேற்கொள்வது என்பதை தமிழக தீயணைப்பு படையினர் விளக்கியிருக்கிறார்கள் இதோ:-

மரம், காகிதம் அல்லது துணி இவைகளில் தீ பற்றிக் கொண்டால், தண்ணீரை வீசி அடித்தும், அல்லது கனமான சாக்கு போன்ற துணியினைக் கொண்டு மூடுவதும் சரியான முறையாகும்.

எண்ணெய், பொரியலிலிருந்து கிளம்பும் தீ பற்றிக் கொண்டால் சூடு ஏற்படுத்தும் காரணியை அணைக்க வேண்டும், பொரியல் சட்டியை மூடியையக் கொண்டு உடனணடியாக மூடிவிடவும்.

மின்சார கம்பிகள், மின்சார இணைப்புகள், மின்சாரம் சார்ந்த உபகரணங்களால் தீ பற்றிக் கொண்டால் முதலில் மின்சார இணைப்பின் தொகுப்பை (main) நிறுத்த வேண்டும், அதன் பின்னர் மண் அள்ளி அடர்த்தியாக வீசி அடிக்க வேண்டும்.

இதையெல்லாம் மீறி தீ பெரிதும் பரவி கூரைகள் அல்லது வீடுகள் அல்லது கடைகள் தீ பற்றிக் கொண்டால், அபாய சங்கு அல்லது அதற்கு நிகரான சத்தம் எழுப்ப வேண்டும், வீடுகளை விட்டு அல்லது இருப்பிடத்தை விட்டு உடனடியாக வெளியில் ஓட வேண்டும். சாதனங்களையோ அல்லது விலையுயர்ந்த பொருட்கள் உள்ளிருக்கிறதே என்று எடுத்துச் சென்றிடலாமே என்று தேடிக் கொண்டிருக்கக் கூடாது. கட்டிலுக்கு அடியிலோ அல்லது மறைவான இடத்திலே பதுங்கிடலாம் என்றும் உள்ளேயே இருந்திடலாகாது. உயர் அடுக்குமாடி கட்டிடங்களாக இருந்தால் படிகள் வழியாகத்தான் ஒட வேண்டும். எல்லாவற்றையும் விட அதி முக்கியமாக தீயனைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

வீடுகளில் பாதுகாப்பு முறைகள்:-

- தீப்பெட்டிகளை உடல் மற்றும் ஆடைகளுக்கு அருகில் வைத்து தேய்த்து பற்ற வைக்கக் கூடாது.

- கேஸ் அடுப்பை திருப்புவதற்கு முன்னர் தீயைத் தயாராக வைத்திருக்க வேண்டும் அல்லது லைட்டர் போன்ற சூட்டரை பயன்படுத்த வேண்டும், கேஸை திறந்து வைத்து விட்டு தீப்பெட்டியை தேடக்கூடாது.

- கேஸ் அடுப்பினை உயரமான தட்டையான இடத்தில் வைக்க வேண்டும், தரையில் வைத்து பயன்படுத்தக் கூடாது.

- மின்சார இணைப்பிற்கு பிளக் (plug) போன்ற இணைப்புகளில் தொகுப்பாக (multi-plug) ஒன்றுக்கு மேல் பொருத்தக் கூடாது.

- சமையல் பொருட்கள் எண்ணெய் வகைகள் எளிதில் தீ க்கு பிடித்தமான பொருட்களை அடுப்பை விட்டு தள்ளியே வைத்திருக்க வேண்டும்.

- பிளாஸ்டிக் பொருட்களை அடுப்புக்கு அருகில் வைப்பதை தவிர்க்கவும்.

- குழந்தைகளை அடுக்களையில் விளையாட அனுமதிக்கக் கூடாது.

- கேஸ் சிலிண்டர் அல்லது அடுப்புக்கு அருகில் வேறு மண்ணெண்ணெய் அடுப்போ அல்லது வேறு எரிப்பூட்டானோ (igniters) வைக்க வேண்டாம்.

- அடுப்பு இயங்காத பட்சத்தில் ரெகுலேட்டரை மூடிவைப்பதே நல்லது.

- ரப்பர் குழாயை (hose pipe) அடிக்கடி மாற்ற வேண்டும்

- கேஸ் சிலிண்டரை சாய்த்தோ அல்லது கிடத்தியோ வைக்க கூடாது கண்டிப்பாக நிலையா நிமிர்த்து நிற்க வைக்க வேண்டும்.

* நல்ல வீடு, முறையாக சாதனங்களை அடுக்கி தேர்ந்தெடுத்த பொருட்கள் அந்தந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பதும் பாதுகாப்பே.

- - LPG கேஸ் சிலிண்டரிலிருந்து கேஸ் வாடை ஏதும் வந்தால் அல்லது நீங்கள் உணர்ந்தால்:-

-- அந்த இடத்தில் எந்த எரியூட்டலோ (பற்ற வைத்தல் ) அல்லது தீ ஏற்படுத்தும் சூழலோ நிகழாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

-- மின்சாரத்தை இயக்க வேண்டாம், சுவிட்ச் போடவோ அல்லது பிளக் மாட்டவோ கூடாது.

-- எல்லா கதவுகளையும் திறந்து விட வேண்டும்

-- சிலிண்டரிலிருந்தே கசிவு இருந்தால் உடனடியாக அந்த சிலிண்டரை வெளியில் வெற்றிடத்திற்கு கொண்டு சென்று வைத்து விட்டு ஒதுங்கி விடவும்.

இப்படியாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் நிறைந்து இருந்தாலும், சுருக்கமாகத்தான் எடுத்து வைத்திருக்கிறோம்.

வீட்டின் அழகு அந்த அங்கேயிருப்பவர்களின் செயல்களிலே தெரியும், சுத்தம் என்றுமே உங்களை சுறுசுறுப்பாய் வைத்திடும்.

'தீ' வேண்டும் சமையலுக்கு, அதுவும் தீங்கினை தீண்டாத தீயும் வேண்டும்...!

- அபுஇபுறாஹிம்

24 Responses So Far:

Shameed said...

திகுதிகு தீ பற்றி திறம்பட சொன்ன செய்திகள் அருமை

(போட்டோவில் எறியும் தீயை எப்படி அணைப்பது!)

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

(தீ)யினால் பதற்றம் வேண்டாம்.என அதிரை மக்களுக்கு அறிவுரை கூறும் (அ.நி) அமைதின் ஆளுமை.
இங்கேயும் அமைதியை கற்று தருகிறது. அபு இபுராஹிம் (தீ) ராத திட்டங்கள் .வாழ்த்துக்கள்

Yasir said...

நல்ல செய்(தீ)தி....வாழ்த்துக்கள் காக்கா

Yasir said...

சாகுல் காக்கா..இந்த தீயை அணைக்க ஆள் உண்டு அவர்தான் “மிஸ்டர்.ஹேக்கர்ஸ்...ஆனால் சுழிய குற்றதிற்க்கு ஆளாக நேரிடும்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// திகுதிகு தீ பற்றி திறம்பட சொன்ன செய்திகள் அருமை
(போட்டோவில் எறியும் தீயை எப்படி அணைப்பது!) //


ஹமீது காக்காவை ரெட்டை கிளவி துரத்திக்கிட்டே இருப்பது போல் தெரிகிறதே!

போட்டாவில் எறியும் தீயை அணைப்பதற்கு ஒரே வழி கம்பியூட்டர் சூடா ஆனவுடன் log off பன்னிவிடுங்கள்.

ZAKIR HUSSAIN said...

திருவிடைமருதூர் , திருவையாறு, பாப்பநாசம் போன்ற ஊர்களை விட நம் ஊர் சின்ன ஊர் என்றே இருந்திருக்கிறோம். 30,000 பேருக்கு மேல் இருந்தால் தீயணைப்பு நிலையம் கேட்க உரிமை இருப்பதாக தீயணைப்பு துறை சொல்வதை அதிரை பிபிசி இல் பார்த்தேன்.

தீயணைப்பு நிலையம் வேண்டும் என்பதற்காக அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்பதை எழுத்தில் கொண்டுவருவோம். பிறகு முறையாக பஞ்சாயத்து போர்டு மூலமாக சம்பந்தப்பட்ட துறையை தொடர்பு கொள்ளலாம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல யோசனைகள்.
இனி நம்மூருக்கு தீ வேண்டாம்.
தீ அணைப்பு நிலையம் மட்டும் எப்போதும் தயாராக இயங்கிக்கொண்டிருக்க வேண்டும்.
மக்கள் தொகை 40 என்பதெல்லாம் (எப்பொவோ உள்ளது தான்) பார்க்காமல் தேவையான இடங்களுக்கு அவசியம் வேண்டும்.இதையும் நாட்டின் பாதுகாப்பு செலவுத் திட்டங்களோடு இணைக்கவேண்டும்.

sabeer.abushahruk said...

வரவர அதிரை நிருபரின் பதிவுகள் பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளுமளவுக்கு அவசியமானவையாகப் போய்விட்டன.

இதிலுள்ள நிறைய விஷயங்கள் எனக்குப் புதிது.

நன்றி

Shameed said...

லெ.மு.செ.அபுபக்கர் சொன்னது…

//ஹமீது காக்காவை ரெட்டை கிளவி துரத்திக்கிட்டே இருப்பது போல் தெரிகிறதே!//


அந்த கிழவியை மறந்து ரொம்ப நாளாச்சு திரும்ப தீயை மூட்டி நினைவு காட்டி விட்டீர்களோ!

Saleem said...

தேவையான தகவல்கள் பதியமைக்கு நன்றி.மேலும் இது போன்று நல்ல பல தகவல்கள் எதிர்பார்க்கிறோம்

அபூபக்கர்-அமேஜான் said...

அஸ்ஸலாமு அழைக்கும்

தீ என்பது சொல்லிக்கிட்டு வருவதில்லை எதிர் பாராமல் நடக்கக் கூடியது.எந்த நேரமும் தீ எதுவும் பிடிக்காமல் இருப்பதற்கு மிக கவனமாக நாம் இருக்க வேண்டும். இதற்கு முன்னர் செக்கடி மேட்டில் உள்ள ஜம்ஜம் ஹோட்டலில் தீ பிடித்து எரிந்தது.அதுமட்டுமல்லாமல் சி.எம்.பி லைனில் உள்ள கடைகளும் எரிந்தது. இது நம்ம ஊருக்கு அடிக்கடி தீ நிகழக்கூடியதாக இருக்கிறது ஆதலால் அதிரை நகருக்கு தீயணைப்பு நிலையம் ஒன்று அமைத்தால் மிக நன்றாக இருக்கும்.மக்கள் எண்ணிக்கையை பார்த்து தீ பிடிப்பதில்லை எதிர் பாராமல் நடக்கக்கூடியது தான்.


மு.செ.மு. அபூபக்கர்

அபூபக்கர்-அமேஜான் said...

அஸ்ஸலாமு அழைக்கும்

வாவன்னா சார் அவர்களுக்கு உடல் பூரணமாக குணமடைய இறைவனிடம் நாம் அனைவரும் துஆ செய்யவும்.அவர்களுக்கு மருத்துவர் சொன்ன செய்தி அதிகமாக கணிணியில் உங்களுடைய கவனத்தை செலுத்த வேண்டாம் என்று.அவர்களை கவிதை பற்றியோ,
கட்டுரை பற்றியோ சிந்திக்க வேண்டாம் என்று மருத்துவர் அறிவுருத்தியிருக்கிரார்.

மு.செ.மு. அபூபக்கர்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

"தீ"யதை உடனே அனைக்கனும் அதுதான் நியதி ! ஆனால் எப்படி அனைக்க வேண்டும் ? அதற்குத்தான் இத்தனை சேதி !

எல்லோரும் வந்துட்டாங்களா, சரி மீடியாக்காரங்கள்ளாம் வந்தாச்சா ஒகே ஒகே !

"தீ"யனைக்க புறப்பட்டு இங்கே கருத்திட்ட அனை(த்திட்ட)வர்களுக்கும்"

நன்றி...

அடுத்து ஒரு கடுதாசி எழுதி அனுப்பனும் அது யாருக்குன்னா

DGP / Director,
Fire & Rescue Services,
12, Rukmani Lakshmipathy Road, Egmore, Chennai-600 008.

மற்றும்

N. Subramani,
Divisional Officer
Thanjavur Division
Thanjavur-613007

sabeer.abushahruk said...

இதை நான் வழிமொழிகிறேன்.

(நன்றி நவிழ்தலுக்கு வழிமொழிந்தவன் உலகத்திலேயே நான்தான்)

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,

நான் நெனக்கிறேன். ச்சின்ன தீன்னா 'னை'யும் பெரிய தீன்னா'ணை'யும் போட்டு அணைக்கனுமென்று.:-)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//(நன்றி நவிழ்தலுக்கு வழிமொழிந்தவன் உலகத்திலேயே நான்தான்)//

இதற்கு பின்னாடியும் இன்னும் அங்கேயிருப்பவன் நானாகத்தான் இருக்கும் "ஏதாவது முடிப்பு" தரலைன்னா நான் என்ன செய்வது ?

"னை"/ "ணை" சம்திங் லாஜிக் ஒர்கிங்க் !

Ahamed irshad said...

sabeer.abushahruk சொன்னது…
வரவர அதிரை நிருபரின் பதிவுகள் பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளுமளவுக்கு அவசியமானவையாகப் போய்விட்டன.
//

க‌விக்காக்கா சொன்ன‌து நூறு ரீப்பீட்டுக்கு ச‌ம‌ம்..அபூஇபுறாகீம் காக்கா உங்க‌ளின் யோச‌னைப் ப‌டி இவ்வ‌ழிமுறையை அரைவாசி செய்தாலே போதும்..ம‌ன‌சார‌ சொல்றேன்..

அது ஏன் ஊரிலிருந்தால் பிரிண்ட் அவுட் எடுத்து முகைதீன் ஜீம்மாவில் நின்றுக் கொடுத்திருப்பேன்னா பார்த்துகிடுங்க‌ளேன்..

Ahamed irshad said...

அநிருப‌ரின் புது வ‌ண்ண‌ம் அழ‌காய் இருக்கிற‌து... மாஷா அல்லாஹ்...

அதிரை என்.ஷஃபாத் said...

சின்ன தீ-ன்னா சின்ன 'னை' என்றும், பெரிய தீ-ன்னா பெரிய 'ணை' என்றும் பேசி இருக்கும் கவிக் காக்காவின் ரசனை அழகு.

'அனைத்தல்' என்பது தவறு. தீயினை அ'ணை'க்க வேண்டும். :)

அதிரை என்.ஷஃபாத் said...

(போட்டோவில் எறியும் தீயை எப்படி அணைப்பது!)

மானிட்டரில் தண்ணீர் ஊற்றிப் பாருங்களேன். :)

ZAKIR HUSSAIN said...

//மானிட்டரில் தண்ணீர் ஊற்றிப் பாருங்களேன்//

இப்படி எழுதலாம் என்று நான் முன்பே யோசித்தேன். விசா / டிக்கட் எல்லாம் எடுத்து என்னை வந்து மக்கள் உதைக்க கூடும் என எழுதாமல் விட்டு விட்டேன்.

அபூபக்கர்-அமேஜான் said...

போட்டோவில் எரியும் தீ
மானிட்டரில் தண்ணீரை ஊற்றினால் இன்னும் வேகமாகத்தான் தீ எரிகிறது. ஆதலால் தீயணைப்பு நிலையம் ஒன்று வேண்டும்.

மு.செ.மு.அபூபக்கர்

அப்துல்மாலிக் said...

நல்ல பகிர்வு, பாதுகாப்புகள் முறைப்படுத்தப்பட வேண்டும், இறைவன் நாட்டத்தால் 20 வருஷத்துக்கு முன் அடிக்கடி ஏற்பட்ட தீ விபத்து இப்போவெல்லாம் இல்லை என்றே சொல்லுவேன், முற்றிலும் இல்லாமல் செய்வதற்கு மக்களின் முன்னெச்சரிக்கை மிக முக்கியம். இன்ஷா அல்லாஹ்

KALAM SHAICK ABDUL KADER said...

நம்மவர்கட்கு தீயணைப்பு விதிகள், சுகாதாரம், சுற்றுச்சூழல் பற்றிய அறிவு எட்டப்படாமல் உள்ளதே என்பதாக எனக்கு நீண்ட நாட்களாக ஓர் ஆதங்கம்;அதனை இக்கட்டுரையாளர் அவர்கள் தீர்த்து வைத்து விட்டார்கள்.குறிப்பாக என்னைப் போன்ற construction companyயில் பணியாற்றுபவர்கட்கு மீண்டும் மீண்டும் Health,Safety & Environment(HSE)பாடம் நடத்துவர்;அதன் குறிப்புகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்யும் பணி என்னிடம் ஒப்படைக்கப்படும் பொழுது, யான் மொழிபெயர்த்த அனைத்து அறிவுரைகளும் மேற்காணும் கட்டுரையில் கண்டேன்;இது போன்ற அறிவுரைகள் கேட்ப்வர்கட்கு கசக்கும்;உண்மை கசக்கும்;ஆனால், உயிரைக் காக்கும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு