Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் தொடர்ந்து கனமழை... 40

அதிரைநிருபர் பதிப்பகம் | November 01, 2011 | , , ,

மழைக்குத் தெரியுமா எங்களூர் பேரூராட்சியின் ஆட்சி மாற்றம் !?



தென்மேற்கு பருவ மழை வடகிழக்கு பருவமழை அதன் பருவம் தவறாது தனது பணியைச் செய்திட துவங்கிவிட்டது, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது ஒரு சில இடங்களில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடுகிறது. இதேபோல் அதிரை பேரூராட்சி மன்ற வெற்றியாளர்களும் அவர்களின் பணிகளை தொடர்ந்திட வேண்டும் என்றும் ஆவலாக எதிர்பார்த்திருக்கும் அதிரை மக்களுக்கு மழை ஒரு சாம்பிள்.


அதிரையில் கடந்த மூன்று நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது, நேற்று இரவு பெய்த கனமழையில் 8 செண்டிமீட்டர் அளவு பெய்திருக்கிறது என்று அதிரை பிபிசியின் தகவல்.

இந்த தொடர் மழைக்கு மேலத்தெருவில் ஒரு வீட்டின் கூரை இடிந்து விழுந்திருப்பதாக அதிரை.in வலைத்தளத்தில் புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது.

அதிரையில் வீதிகளில் நடமாடுபவர்களும் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும், மின்கம்பத்திற்கு தெரியாது. புதிய ஆட்சி மாறியிருப்பது மழை எத்தனை செண்டிமீட்டர் பெய்தது இன்னும் பெய்திடும் என்றெல்லாம். அது வழக்கம்போலே நிற்குமா / நிற்காதா? என்று அன்னாந்து பார்க்க வைக்கும், எந்த நிலையில் அதன்மேல் ஊடுருவும் கம்பிகளின் உறுதி இருக்கும் என்ற உத்திரவாதம் கிடையாது. இவ்வாறானச் சூழலில் விபத்துக்கள் நிகழாமல் பாதுகாப்பாக இருக்க முயற்சியுங்கள்.

புதிய பேரூராட்சி ஆட்சி மாற்றத்திலிருக்கும் அதிரை, மழைக் காலங்களில் படும் அவதியையும் புதிய தலைவரும் உறுப்பினர்களும் கண்கானிக்காமல் இருக்கப் போவதில்லை, இருந்தாலும் எந்த நடவடிக்கையானாலும் துரிதமாக எடுத்திட ஆவண செய்ய வேண்டும்.

- அதிரைநிருபர் குழு

40 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மழை வந்து கழுவியது என்று நழுவவும் முடியாது இப்போ !?

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// புதிய பேரூராட்சி ஆட்சி மாற்றத்திலிருக்கும் அதிரை, மழைக் காலங்களில் படும் அவதியையும் புதிய தலைவரும் உறுப்பினர்களும் கண்கானிக்காமல் இருக்கப் போவதில்லை, இருந்தாலும் எந்த நடவடிக்கையானாலும் துரிதமாக எடுத்திட ஆவண செய்ய வேண்டும். //

கால காலமா பஞ்சாயத்து தலைவரும், உறுப்பினர்களும் மக்களோடு பஞ்சாயத்து பண்ணிக்கிட்டுதான் இருக்காங்க.வீடுகளை
இடித்து கண்ணா பின்னாண்டு ரோட்டுளையும் சந்திளையும் கொட்டாதியண்டு.

கல்லு மண்ணை அள்ளி போட்டு தண்ணியை தேங்க விட்டுட்டு ஆவணம் செய்யாதிங்க.அப்பறம் ஆவணத்தில் உள்ள செய்தியை சரிசெய்ய தலைவருக்கு ரொம்ப தலைவலியா போயிரும்.

ZAKIR HUSSAIN said...

//வீடுகளை இடித்து கண்ணா பின்னாண்டு ரோட்டுளையும் சந்திளையும் கொட்டாதியண்டு.//


அதிராம்பட்டினத்தான் எனும் அடையாளங்களில் ஒன்றை அழிக்க நினைக்கும் சகோதரர் லெ.மு.செ அபு பக்கரின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்..

நாங்கள் இன்னும் செத்தை[காய்ந்தது] / கீத்து [காயாதது] / வாழை மட்டை / உடைந்த பொருள்கள் எல்லாவற்றையும் தெருவில் வீசும் திறமை பெற்றவர்கள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்

Shameed said...

இடியும் மழையும் போட்டு சாத்தி எடுத்துவிட்டதமே நேற்று இரவு

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

MR.ZAKIR HUSSAIN, YOU WILL BE THE JUNIOR ZAKIR NAIK, INSHA ALLAH!
POSSIBLE! YES! NOTHING IS IMPOSSIBLE!

VAAVANNA

sabeer.abushahruk said...

தொலைக்காட்சியில்
மழை பார்த்து
அலைபேசியில்
அதிரையை விளித்தால்...
தொலைபேசியிலும் மழைச்சத்தம்.

இரவில்மட்டும்
மழை பெய்வதில்லை...
பேசும்

சாளரம் வழியாக
சாரலாய் மழை

கூரையின் நுனியில்
குட்டிக் குற்றால மழை

காகிதக் கப்பல்கள்
கரைசேர்வதில்லையாம்
கனுக்கால்வரை
கவிதையாய் மழை!

அதிரை என்.ஷஃபாத் said...

/*புதிய பேரூராட்சி ஆட்சி மாற்றத்திலிருக்கும் அதிரை, மழைக் காலங்களில் படும் அவதியையும் புதிய தலைவரும் உறுப்பினர்களும் கண்கானிக்காமல் இருக்கப் போவதில்லை*/

நம்பிக்கையே வாழ்க்கை!! நல்லது நடக்கட்டும்..

பி.கு: அதிரையில் அழகிய மழைக்காலம்
நினைவுகளுடன்,
அதிரை என்.ஷஃபாத்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இரவில்மட்டும்
மழை பெய்வதில்லை...
பேசும்//

கவிக் காக்கா,

அருமை !

//கூரையின் நுனியில்
குட்டிக் குற்றால மழை//

சன்சைடில் சாரல்
ஜன்னலுக்கு குளிருது !

மழைன்னா மழலையா யிடுவீங்களோ !?

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,

இடி மின்னல் மழையைவிட
இழையிழையாய் மழையழகு!

அடை மழை காலமெனில்
குடை பிடித்தால் அழகு!

கச்சல் கட்டி நடந்தாலும்
வெள்ளை வேட்டியில்
கித்தாச் செருப்பு தெரிக்கும்
புள்ளிபுள்ளியாய் மண் பொட்டுக்கள்!

கரன்ட் போன கனத்தினிலே
முட்டை விளக்கை ஏற்றிப்பாரும்
கருப்பான வீட்டம்மாவும்
கலையாய்த் தெரிவார்கள் :)

அதிரைநிருபர் பதிப்பகம் said...

தம்பி அதிரை என்.ஷாஃபாத் உங்களின் கவிதை அப்படியே நினைவில் இருக்கிறது....


அதிரையில் அழகிய மழைக்காலம்


ஆண்டவனின் அருளினது சாட்சி- நம்
அதிரையிலே அடைமழையின் ஆட்சி- பல
வேண்டுதலின் வினைப்பயனாய் வந்திருக்கும் வான்மழையே
வருக-வளம்-தருக.

கார்மேகம் நீர்முடிச்சு அவிழ்க்கும்-அந்த
கடல்முழுதும் கொண்டுவந்து கவிழ்க்கும்-நம்
ஊர்மேலும் வளம் பெறவே ஊற்றுக்கள் நீர்பெறவே
பெய்யும்-மழை-செய்யும்.

வீட்டின்முன் சாலைகளில் தேங்கும்-நீரால்
விரல்நடுவே சேற்றுப்புண் வீங்கும்-பெரும்
காட்டாற்று வெள்ளமென கரைபுறண்டு ஓடிவரும்
தண்ணீர்-மேக-கண்ணீர்.

அன்றாடம் காய்ச்சிகளுக்கு அல்லல்-மழையைக்
கொண்டாடும் குழந்தைகளுக்கோ துள்ளல்-சோலை
வண்டாடும் மலர்செடிக்கும், வாடி நிற்கும் மரத்திற்கும்
வரமாம்-உதவிக்-கரமாம்.

கத்தியுடன் கப்பலென்று சொல்வான் - தம்பி
கடல் எனவே மழைநீரைக் கொள்வான்- பல
உத்தியுடன் செய்துவந்து உவகையுடன் அதைநீரில்
விடுவான்-சந்தோசப்-படுவான்.

இயல்புநிலை பாதிக்கும் காலம்-இங்கு
இலைநுனியில் நீர்சொட்டும் கோலம்-வீசும்
புயல்மழையின் தாக்கத்தில் புழுபோலே தேகம்
சுருங்கும்-போர்வையும்-உறங்கும்.

படகுவழி படையெடுப்பும் இல்லை-கடல்
வலைவிரிப்பும் மீன்பிடிப்பும் இல்லை-நம்
கடைத்தெருவில் ஈயாடும், கறிக்கடையும் வெறிச்சோடிப்
போகும்-கருவாடு-வீட்டில்வேகும்.

மழைவருகை எதிர்பார்த்து அன்றே-வடகம்
முதல் வற்றல்வரை என்றே- வெயில்
தலைபிளக்கும் நாட்களிலே தயாரிப்பு செய்திட்ட
முறுக்கும்-வீட்டில்-இருக்கும்.

செக்கடியும் ஆலடியும் ததும்பும்-அந்த
செடியனிலும் மழைநீரே ஒதுங்கும்-என்றாலும்
அக்குளம் முழுவதிலும் அள்ளிவந்த குப்பைகளின்
கதம்பம்-மனம்-வெதும்பும்.

இப்படி நாம் எழுதிடலாம் நிறைய-ஊரில்
இருந்திட்ட நாட்கள்தான் குறைய-ஆம்
எப்படியோ நான்ரசித்த நல்மழையை நானிங்கு
பகிர்ந்தேன்-உள்ளம்-மகிழ்ந்தேன்...

-அதிரை என்.ஷஃபாத்

sabeer.abushahruk said...

இது அநியாயம்.
ஷஃபாத்துக்குப் போட்டியா என்னோட,"ஊரில் மழையாமே" ஏன் போடல?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அடை மழை காலமெனில்
குடை பிடித்தால் அழகு!//

குடை விரிச்சுட்டேன் - இன்னும்
மழை நிற்கவில்லை !

இது இபுறாஹிமின் இன்றைய கம்ப்ளெயிண்ட் காக்கா !

ஊரில் மழையாம்...
அதிரைநிருபரில் கவிமழையாம் !
அதுவும் கவிக் காக்காவின் !

sabeer.abushahruk said...

சரி சரி வேணாம் வேணாம். இந்த வரிகளோடு போட்டிப் போட்டு தோற்கிறதுக்குப் பதிலா கமுக்கமா இருந்திடலாம்.

//செக்கடியும் ஆலடியும் ததும்பும்-அந்த
செடியனிலும் மழைநீரே ஒதுங்கும்//

ஷஃபாத், அதிரை நிருபரிலும் மழை.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

கவிக் காக்காவின் "ஊரில் மழையாமே" நினைக்கையில் நனைகிறோமே !


ஊரில் மழையாமே


மற்றொரு மழை நாளில்...
மடித்துக் கட்டிய லுங்கியும்
மடக்குக் குடையுமாய்
தெருவில் நடந்த தினங்கள்...

கச்சலில் கட்டிய
புத்தக மூட்டையும்..
"அடை மழை காரணமாக
பள்ளி இன்று விடுமுறை"யென-
தேனாய் இனித்த
கரும்பலகையும்...

சற்றே ஓய்ந்த
மழை வரைந்த
வானவில்லும்...

சுல்லென்ற
ஈர வெயிலும்...
மோதிரக்கல் தும்பியும்...
கருவேலும்
புளிய மரமும்
சேமித்த மழையும்
கிளையை இழுக்க
சட்டென கொட்டி
நனைந்த உடையும்...

க்ஷைத்தானுக்கு கல் எறிந்த பின்
சுப்ஹுத் தொழ
ஜன்னல் தட்டிய நண்பனும்...
வரப்பு வழியும்
பல்ல குளமும்
வேட்டி அவிழ்த்து
உடம்பு தேய்க்கையில்
சட்டென தெரிந்த
நண்பனில் ???? ...

மழையில் நனைந்த
"இன்று இப்படம் கடைசி"யும்...
கன்னி வைத்து காதிருந்த
உப்பளங்களும்...

பள்ளியில் போட்ட
குட்டை போல
கால்களை இழுத்து நடந்த
தற்காலிக ஓடைகளும்...

முட்டாள் சாதகத்தால்
பாம்பை அழைக்கும்
நுழலும்...
மழையில் நணைந்த இரவில்
குழல் விளக்கில்
முட்டி முட்டி பால் குடிக்கும்
விட்டிலும்...

மழை நீருடன்
முயங்கிச் சிவந்த
தண்டவாளத் தடமும்...
தட்டுத் தடுமாறிய நடையும்...
சென்னை ரயிலுக்கு
வழிவிடுகையில்
கை காட்டிய குழந்தையும்...

மழையால்
ஊரில்
இயல்பு வாழ்க்கை பாதிப்பாமே?
பொய்யும் புறமும்-
கடனும் பற்றாக் குறையும்-
சன்டையும் சச்சரவும்-
வெட்டிப்பேச்சும் வீண் வம்பும்
என்ற-
இயல்பு வாழ்க்கையை விட
மழையால்
பாதிக்கப்பட்ட வாழ்க்கை
மேல் அல்லவா?

- சபீர்

அதிரை என்.ஷஃபாத் said...

பின்னூட்டத்தில் மீண்டும் என் கவிதையை பதிந்தமைக்கு நன்றி!!


மழை கால நினைவுகள் அருமை-அதில்
மனம் காணும் மட்டில்லா இனிமை.-அதற்காக
விழைகிறது என்னுள்ளம் வீடிருக்கும் அதிரைக்குச்
செல்ல-இன்பம்-கொள்ள.

அதிரை என்.ஷஃபாத் said...

மழை பெய்யும் நேரம் போட்டி வேண்டாம், வழுக்கி விழக்கூடும் !! :D

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஊரில் இம்மழை வழியொன்று சொல்லிடும்... இணையுமிடம் ஓர் இடம்தான் என்று !

சொல்லாமலே சொல்லும் அதன் ஓட்டம் தாழ்மையான இடம் நோக்கி(யே) !

sabeer.abushahruk said...

//வழுக்கி விழக்கூடும்//
கூடும் எனில் வழுக்கி விழவும் தயார். (கூடாத பிரிவுகள் இழப்பே)

sabeer.abushahruk said...

என் தளபதி எங்கே?. லிபர்ட்டி சிலைக்குத்தான் ஏற்கனவே மகுடம் இருக்கே? எங்கள் கிரீடமும் வேண்டுமாமா?

அதிரை என்.ஷஃபாத் said...

எங்கள் காக்கா தஸ்த'கீரிடம்'-ஆ இந்தக் கேள்வி?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அவர் களத்தில் இருக்கிறாரார் போலும் அவரும் நனைந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும் !

sabeer.abushahruk said...

ஆம், அந்த பாதாம்'கீரிடம்'தான்.

sabeer.abushahruk said...

Crown சொன்னது...

மழை கால நினைவுகள் அருமை-அதில்
மனம் காணும் மட்டில்லா இனிமை.-அதற்காக
விழைகிறது என்னுள்ளம் வீடிருக்கும் அதிரைக்குச்
செல்ல-இன்பம்-கொள்ள

(சும்மா ஆளைக்காணாத ஆறுதலுக்கு. இவ்வளவு மழையிலும் இத்தனை தமிழிலும் அவரால் சும்மா இருக்க முடியாதே :-( )

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//புதிய ஆட்சி மாறியிருப்பது மழை எத்தனை செண்டிமீட்டர் பெய்தது இன்னும் பெய்திடும் அது வழக்கம்போலே நிற்குமா / நிற்காதா? என்று மின்கம்பத்திற்கு தெரியாது//
அதன் தலைஎழுத்து தலைமைக்கும் தெரியாது.அங்கத்தினர் தான் அதன் ஆயுளை அறிந்து வருமுன் காக்க தலைமைக்கு எத்திவைக்கனும்.

குப்பையை அள்ளாமலேயே அடித்துச்செல்ல ஆட்சியாளர் செய்த சதி:மழை

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.எங்கே வாவண்ணா சா(ர்)ரல்?

crown said...

என் தளபதி எங்கே?. லிபர்ட்டி சிலைக்குத்தான் ஏற்கனவே மகுடம் இருக்கே? எங்கள் கிரீடமும் வேண்டுமாமா?
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.மகுடம் இருந்தாலும் உங்களின் கவிமழைத்துளிகளை சுமக்கும் (ம)குடமாய் இருப்பதே என் இன்பம்.தம்பி ஷபாத் தஸ்த"கிரிடம்"என சொன்ன உன் அழகு சிலேடையின் தமிழ் வாடை இன்னும் என் நாசி துளைத்து யோசிக்க வைக்கிறது. சபீர் காக்கா உன்னை பற்றி எழுதும் போது இத்தனை நாளா என்கிருந்தீர் என வினா எழுப்பினார்கள். நான் கேட்கிறேன் இந்தனை நாள் ஏன் தொடர்பில்லாமல் மறைந்திருந்தாய்?எனக்கு கவிதாகம் ஏற்படும் போதேல்லாம் தமிழ் நீர் புகட்டுவாய் அல்லவா? அந்த வாய்ப்பு இல்லாமல் என் வாய் வெறும் வாய மெல்ல ஏன் உன்னை சில காலம் மறைத்து இருந்தாய்!! உன் அணு கவிதையை அலச மறுபடியும் நான் வருவேன் இன்சா அல்லாஹ்.

crown said...

sabeer.abushahruk சொன்னது…
ஆம், அந்த பாதாம்'கீரிடம்'தான்.
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். பணி முட்களுக்கிடையில் பாதம் கீறிடும் வேளையிலும் கருத்து ரோசா தந்து போகவே நான் இடையில் வருகிறேன்.இங்கே கவிமழையில் நனைந்ததும் உள்ளமும் ,மேனியும் குளிர குளிர்விட்டு போகிறது. பயம் அத்து போகிறது இனி தடை இல்லா நடை போட்டு வருவேன் இன்சா அல்லாஹ்.

Yasir said...

அதிரையில் பேய்ததது கனமழை...அ.நி யில் கரைபுரோண்டு ஓடுவது கவிதை மழை,கருத்து மழை,சிலேடை மழை...எல்லாம் ஒயந்தபிறகு ஈசல் பறக்கும் சமயத்தில்தான் கருத்து எழுத நேரம் கிடைத்தது.

Muhammad abubacker ( LMS ) said...

//ஜாகிர் காக்கா சொன்னது;
அதிராம்பட்டினத்தான் எனும் அடையாளங்களில் ஒன்றை அழிக்க நினைக்கும் சகோதரர் லெ.மு.செ அபு பக்கரின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்..

நாங்கள் இன்னும் செத்தை[காய்ந்தது] / கீத்து [காயாதது] / வாழை மட்டை / உடைந்த பொருள்கள் எல்லாவற்றையும் தெருவில் வீசும் திறமை பெற்றவர்கள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறோம் //

ஹ ஹ ஹ . செத்ததை [காய்ந்தது] / கீத்து [காயாதது] / வாழை மட்டை / உடைந்த பொருள்கள் எல்லாவற்றையும் தெருவில் வீசும் திறமை பெற்றவர்களை கண்டிக்கும் விதம் அருமை காக்கா.

சேர்மன் அவர்கள் அதிரையை சின்ன சிங்கபூரா மாற்றுவேன் என்று சொன்னதும்.நீங்கள் இருக்கும் நாடு தூய்மை இழந்துவிடும்
என்று பயந்து விட்டீர்களோ?

crown said...

Yasir சொன்னது…

அதிரையில் பேய்ததது கனமழை...அ.நி யில் கரைபுரோண்டு ஓடுவது கவிதை மழை,கருத்து மழை,சிலேடை மழை...எல்லாம் ஒயந்தபிறகு ஈசல் பறக்கும் சமயத்தில்தான் கருத்து எழுத நேரம் கிடைத்தது.
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.ஆனால் யாசரின் கருத்து ஈசல்வாழ்கையல்ல, அது கடல் ஆமை போல் தாமதமாக வந்தாலும் ஆயுள் கெட்டி.உடனே எழுத இயலாமை, நேரம் இல்லாமை,இப்படி இருந்தாலும் பொறாமை இல்லாத எழுத்தும் கருத்தும் என்றும் போற்ற தக்கதாய் இருப்பது என்றும் சிறப்பு. யாசிர் கருத்து எழுதாவிட்டால் உப்பில்லாத பண்டம் போல் சப்பென்று ஆகிவிடும் நம் ஆக்கமும்.

shamsul huq said...

சபீரின் கவிதை ஆட்டோகிராப் படம் போன்று என்னை அதிரையின் பழைய நினைவுகளுக்கே அழைத்துச்சென்றது சபாத்தும் விட்டுகொடுதவர் அல்ல தஸ்தகீருக்கு இங்கு மெக்சிகன் லேடிக்ள் வைத்திருக்கும் பெயர் நிக் நேம் கீர் தான் கிரவுன் வாவ்ன்னாசாரை அழைத்தும் சார் கடைசிவரை வரவே இல்லை

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

"தென்மேற்கு பருவ மழை அதன் பருவம் தவறாது தனது பணியைச் செய்திட துவங்கிவிட்டது, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது"
"தென் மேற்குப் பருவ மழை"? - உங்களுக்கெல்லாம் ஆசிரியனாக இல்லாமல் போனதற்கு நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும்!
பள்ளிவாசல் திண்ணையில், தினமணியோடு அமர்ந்திருக்கும் தாத்தா கூடச் சொல்லி விடுவார்- "வட கிழக்குப்பருவ மழை" என்று!

காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளியின்
ஓய்வு பெறாத முன்னாள் பூகோள ஆசிரியர்,

வாவன்னா

shamsul huq said...

//தென் மேற்குப் பருவ மழை"? - உங்களுக்கெல்லாம் ஆசிரியனாக [இல்லாமல்] போனதற்கு நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும்! //காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளியின்
{ஓய்வு பெறாத}முன்னாள் பூகோள ஆசிரியர்,வாவன்னா சார் ஏதோ குழப்பறியலே உஙகள்ட்டதான் படிச்சேன் புறியலயே

shamsul huq said...

"வட கிழக்குப்பருவ மழை" புரிந்தது. ஆசிரியனாக இல்லாமல். ஓய்வு பெறாத அதான் புரியல

sabeer.abushahruk said...

சார்,
நல்லாச் சொன்னிய. ஆனா உண்மையிலேயே பதிவதற்கு முன் வடகிழக்கா தென்மேற்கா என்று குழம்பி, இருவருமே கணினி மற்றும் இயந்திரவியல் தொழிலில் சோலியாகிப்போனதால் 'ஒரு மார்க்தானே' என்று விட்டுவிட்டோம்.

வீட்டுக்குவந்து தொலைகாட்சியில் பார்த்தால் வடகிழக்கு என்று செய்தியில் வாசித்துக் கொண்டிருந்தார்கள். அதோடு இந்தப் பதிவும் கவிதை மழையாகி தமிழ் வகுப்பாக மாறிவிட்டிருந்ததால் ஐயா தெரியாதையா பூகோள சார்தான் பேப்பர் திருத்துவார்கள் என்று!

வடகிழக்கு வடகிழக்கு என்று நூறு முறை இம்ப்போஸிஷன் வேனும்னா எழுதிடறோம் சார்.

sabeer.abushahruk said...

இம்ப்பொஸிஷனைக்கூட என் தொழில்தான் நூறுமுறை மெனெக்கெட்டு எழுதும்; அபு இபுறாஹீமோ ஒரு முறை எழுதி மீதி 99 காப்பி பேஸ்ட் செய்துடுவார்.

என்னைக்கேட்டால் இந்தப் பின்னூட்டத்திலேயே இம்ப்போஸிஷனை பதிந்துவிட்டால் சார் இன்ட்டெர்னல் மார்க்கைக் குறைக்காமல் தப்பிக்கலாம்.

நல்ல அபுபக்கர், எங்கே ஓய்வு எடுக்கிறது? அதான் இங்கேகூட இப்ப பேப்பர் திருத்துகிறார்களே!!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்காவும் ஒரு குட்டுச் வச்சுதான் பார்த்தாங்க.. எனக்கு என்னமோ 'அந்த வாநிலை அறிக்கை புகழ் ரமணன் தான் சொன்ன மாதிரியிருந்துச்சு' அதோடு கவிப் பேரரசும் ஏதோ ஒன்னு எழுதியிருந்தாரு அதுவே ஞாபகத்துல வந்திடுச்சு ஆனா இப்படி பூகோளத்தைச் சொல்லித் தந்த ஆசிரியருங்க சொன்னது ஞாபகத்தில வரலையே... இப்போதான் பூகோளம், பூலோகமாக இருக்கும் இடங்களைப் பார்த்தா மனைகளாவுல தெரியுது... !

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

நல்ல அபூபக்கர்!
பிள்ளை எடுப்பானா என்ற ஐயத்தில், வாப்பாவாகவே முந்திக்கொண்டு வைத்த பெயரா?
நான் ஓய்வு பெற்றது துபாயில்! பள்ளியில் எனக்கு டென்ஷனும் இல்லை; பென்ஷனும் இல்லை!

-வாவன்னா

shamsul huq said...

ஏன் சார் வான் வரைந்தவில் செகரடரியை மனதில் வைத்துள்ளீர்கள்; அவர்களது குழந்தைகள் உங்களை நெஞ்சில் வைக்கவேன்டாமா டென்சன் இல்லை ஒ கே ஏன் பென்சன் இல்லை இப்ப எஙக்ளுக்கு டென்சனா இருக்கு சார் உன்மை உரைத்தீர் என் ஆசானே உமது உள்ளம் சாந்தி பெற துஆ செய்கிறேன்

shamsul huq said...

உஙகளிடம் படிதததால் இன்னொன்ட்ரும் புரிந்தது அப்ப நான் நல்லவன் இல்லை என்கிறீர்களா தயவுசெய்து விளக்குன்கள் சார் வாப்பவுக்கும் சேர்த்து கெட்டபெயரா அது வேனாம் சார் மனதுக்கு கஸ்டமாக இருக்குது சார்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு