இன்று அதிகாலை (நடுநிசி)சுமார் 2:00 மணியளவில் எங்கள் உறவினர் வீட்டு பெண்மணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இக்கட்டான நிலைமைக்கு போனதால் அந்நேரம் மருத்துவரிடம் அழைத்து செல்வதற்காக நமதூர் பைத்துல்மால் மற்றும் த.மு.மு.க வினரால் நமதூருக்காக அற்பணிக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸிற்கு தொலைபேசியில் அழைத்தோம். ஆனால் ஓட்டுனர்களின் கைபேசி யாவும் அணைக்கப்பட்டிருந்தது. அதனால் வீட்டிலுள்ள சிலர் இருசக்கர வாகனத்தில் ஓட்டுனர்களின் வீடுகளைத்தேடி அலைமோதினர்.
நேரம் தாமதமாகி வருவதாலும் அந்த இக்கட்டான சூழ்நிலையை அறிந்த நமதூர் பேரூராட்சி மன்றத் தலைவர் அஸ்லம் அவர்கள் உடனே 21ம் வார்டு மெம்பர் இபுறாஹிமை தொடர்பு கொண்டு அதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் சாவியை வாங்கி ஓட்டுனர் இல்லாத காரணத்தால் அவர்களே அந்த வாகனத்தை ஓட்டிச்சென்று ஹாஜா முஹைதீன் டாக்டரிடம் அழைத்துச்சென்று அவர்களின் பரிசோதனைக்குப்பிறகு அந்த உடல்நலம் குன்றிய பெண்மணி தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நமது முக்கிய வேண்டுகோள் இங்கு என்னவெனில், ஆம்புலன்ஸ் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய நமது அதிரை பைத்துல்மாலும், த.மு.மு.கவும் எந்நேரத்திலும் அவசர உதவியை மக்கள் பெற்றுக்கொள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை காலை, இரவு ஊதியம் என பிரித்து வைத்துக்கொள்வதனாலும், ஓட்டுனர்கள் இருக்கும்(உறங்கும் இடம்) இடத்திலேயே அந்த வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட ஏற்பாடு செய்வதனாலும் அவசர உதவி நாடி வரும் மக்களுக்கு அந்நேரத்தில் பெரும் இன்னல்களும், ஆம்புலன்ஸை தயார் படுத்த காலதாமதமாவதால் ஏற்படும் உயிர் இழப்புக்களையும் தவிர்த்து விடலாம் இறைவன் நாட்டத்தில்.
இவ்வாக்கம் யாரையும் தூக்கி பிடிப்பதற்கோ அல்லது தரம் தாழ்த்துவதற்கோ எழுதப்பட்டதல்ல. ஊர் நடப்புகளை உங்களுக்கு தெரியப்படுத்தி சில அசொளகரியங்களை கலைவதற்காகத்தான் அன்றி வேறொன்றும் இல்லை.
ஆம்புலன்ஸ்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சமூக அக்கறைகொண்டவர்கள் மேற்கண்ட வேண்டுகோளின் பேரில் துரித நடவடிக்கை எடுக்க முயற்சிப்பார்களா?
- லெ.மு.செ. அபுபக்கர்
தகவல் : மு.செ.மு.நெய்னா முஹம்மது
தற்போது கிடைத்த தகவல் : அதிரை த.மு.மு.க. நிர்வாகிகளை அதிரை BBC தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, டாக்டர் ஹாஜா முகைதீன் மருத்துவமனையிலிருந்து தஞ்சைக்கு அழைத்துச் சென்றது த.மு.மு.க. ஆம்புலன்ஸ்தான் என்றும் அதற்கான ஆதாரத்தையும் காட்டிள்ளனர்.
தற்போது கிடைத்த தகவல் : அதிரை த.மு.மு.க. நிர்வாகிகளை அதிரை BBC தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, டாக்டர் ஹாஜா முகைதீன் மருத்துவமனையிலிருந்து தஞ்சைக்கு அழைத்துச் சென்றது த.மு.மு.க. ஆம்புலன்ஸ்தான் என்றும் அதற்கான ஆதாரத்தையும் காட்டிள்ளனர்.
8 Responses So Far:
//இக்கட்டான சூழ்நிலையை அறிந்த நமதூர் சேர்மன் அஸ்லம் அவர்கள் உடனே 21ம் வார்டு மெம்பர் இபுறாஹிமை தொடர்பு கொண்டு அதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் சாவியை வாங்கி ஓட்டுனர் இல்லாத காரணத்தால் அவர்களே அந்த வாகனத்தை ஓட்டிச்சென்று ஹாஜா முஹைதீன் டாக்டரிடம் அழைத்துச்சென்று அவர்களின் பரிசோதனைக்குப்பிறகு அந்த உடல்நலம் குன்றிய பெண்மணி தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.//
நம் ஊர் மக்கள் ஒரு நல்ல / பொறுப்புள்ள மனிதரைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
// அதிரை த.மு.மு.க. நிர்வாகிகளை அதிரை BBC தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, டாக்டர் ஹாஜா முகைதீன் மருத்துவமனையிலிருந்து தஞ்சைக்கு அழைத்துச் சென்றது த.மு.மு.க. ஆம்புலன்ஸ்தான் என்றும் அதற்கான ஆதாரத்தையும் காட்டிள்ளனர். //
தாங்கள் சொல்லுவது உண்மைதான் நான் இந்த விசயத்தையும் தெளிவாக சுட்டி காட்டி இருந்தேன்.பதிவாளர்
எம்.எஸ்.எம் எழுத மறந்து விட்டார் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
லெ.மு.செ(அ) ஆம்புலன்ஸின் அவசியம் மற்றும் அந்தச் சேவையிலிருப்பவர்களின் முக்கியத்துவத்தை முன்னிருத்து எந்நேரத்திலும் தயாரக இருக்க வேண்டும் நன்னோக்கில் எடுத்து வைத்திருக்கும் வாதம் நியாயமானதே !
தமதமாக வந்த த.மு.மு.க.ஆம்புலன்ஸும் அவர்களின் கடமையை சரியாகத்தான் செய்திருக்கிறார்கள்
இதெல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பா சூழல் அறிந்து அவசர ஓட்டுநராக செயல்பட்ட பே.த.அவர்களையும் பாரட்டத்தான் வேண்டும்.
welldone !
அம் திரை பேரூராட்சித் தலைவர் அஸ்லம் அவர்கள் எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய வகையில் உள்ள நல்லுள்ளம் கொண்டவர் என்பதை யான் நேரில்-ஊரில் சென்ற வாரம் குறுகிய கால விடுப்புப் பயணத்தில் கண்டு கொண்டேன். செக்கடி மேட்டில் மின்மாற்றி பழுது நீக்கம் செய்யும் பணியில் அவர்களின் மேற்பார்வை, குப்பைகட்கு “குட்பை” சொல்ல துரித நடவடிக்கை, கீழத்தெரு தீவிபத்தில் முன்னின்று உதவிகள் மற்றும் ஜும் ஆ வுக்குப் பின் கம்பீரமாக அனைவரையும் கவரும் வண்ணம் பேசி ஜும் ஆ வசூல் அத்தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவிட வேண்டிய அவர்களின் எண்ணம் யாவும் கண்டு அஸ்லம் அவர்களைக் கட்டி அணைத்து என் நன்றியினை தெரிவித்தேன்.
எளிமை
இனிமை
இளமை
இதுவே இப்புதியத் தலைமை
வாழ்க!
வளர்க பொதுதொண்டு....
அடுத்தடுத்து உதவியவர்களின் மனித நேயம் பாராட்ட வேண்டியவைகளே.இதற்கெல்லாம் முன்னோடியாக இக்கட்டான நேரத்தில் அதிரையின் முதற்குடிமகனே களத்தில் இறங்கிய மகத்தான சேவை மிகவும் பாராட்டுதலுக்கு உரியது.
லெமுசெ(அ.)உறவினருக்கு ஷிஃபா கிடைக்க துஆக்கள்.
மக்கள் பணியே சிறந்த பணி என்பதை நினைவில் வைத்து அதன்படி நடந்த நம் பிரஸிடெண்டை நினைத்து பெருமையா இருக்கு, இதுவே மகத்தான வெற்றிக்கு செய்த நன்றிகடன் தலைவரே, உம் தொண்டு மெம்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்...
Post a Comment