Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் ஆம்புலன்ஸ் நிலை - தமுமுக விளக்கம் ! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | November 17, 2011 | , , ,

அதிரை வலைப்பூக்களில் பதிவான ஒரு பதிவில் தமுமுக ஆம்புலன்ஸ் சேவை பற்றிய விமர்சனத்திற்கு - விளக்கம்:-

அஸ்ஸலாமு அலைக்கும்,

அதிரை வலைப்பூக்களில் த.மு.மு.க மற்றும் பைத்துல்மால் அவசர ஊர்தி சேவையில் உள்ள குறைகளை பற்றி கூறியதற்கு த.மு.மு.க வின் பதிலாக இங்கே சிலதை குறிப்பிட விரும்புகிறோம் .

த.மு.மு.க.வின் அவசர ஊர்திகென்று தனி கைபேசி எண்ணாக 97 50 50 50 94 இது த.மு.மு.க.வின் பொறுப்பாளர் நசுருதீன் என்பவரிடம் உள்ளது.

சம்பவம் நடந்த நள்ளிரவு 2:10 க்கு பின் 2:15 முதல் 2:25 வரை நசுருதீனின் சொந்த கைபேசி எண்ணான வேற எண்ணுக்கு 19 வது வார்டு கவுன்சிலரின் கணவர் சகோ அகமது ஹாஜா தொடர்பு கொண்டுள்ளார் ஆனால் அந்த 15 நிமிடம் வரை அந்த அழைப்பை நசுருதீன் அவர்கள் எடுக்கவில்லை காரணம் அவர் முதல் நாள் இஷா தொழுகைக்கு போகும்போது அமைதி நிலையில் அவரின் கைபேசியை வைத்தவர் மீண்டும் அதை செயல் நிலைக்கு கொண்டு வர மறந்து விட்டார். 

மேலும் சகோ அஹ்மத் ஹாஜா அவர்களும் அவசர ஊர்தி தொடர்பு எண் தன் கைப்பேசியில் பதிவில் இல்லை எனவே தனக்கு அந்த எண் நினைவில் இல்லை என்கிறார் அந்நிலையில் லெ.மு.செ.அபூபக்கரின் சகோதரர் சிராஜுதீன் அவரின் கைபேசியில் இருந்து 2:29 க்கு அவசர ஊர்தி எண்ணான 97 50 50 50 94 எண்ணுக்கு அழைப்பை விடுக்கிறார். 

இருமுறை அழைப்பு விடுக்கப்பட்டு அது பதில் அளிக்கப்படவில்லை உடனே அவர் த.மு.மு.க.வின் நகர செயலாளர் தையுப் அவர்களை தொடர்பு கொள்கிறார். அவர் சிராஜுதீனிடம் உடனே ஓட்டுனர் வீடு சுரைக்கா கொல்லையில் உள்ளது போய் உடனே எழுப்புங்கள் என்று சொல்லியுள்ளார். 

சிராஜுதீன் அங்கு சென்று ஓட்டுனர் வீடு சரியாக தெரியாத காரணத்தால் மீண்டும் அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது நசுருதீன் இப்பொழுது அழைப்பிற்கு பதில் அளித்துள்ளார் அப்பொழுது நேரம் 2:33. ஓட்டுனரின் வீட்டு முகவரியை தெளிவாக சொல்லியுள்ளார் அத்துடன் மூன்று நிமிடம் கழித்து ஓட்டுனருக்கும் பேசியுள்ளார்.

அப்பொழுது ஓட்டுனர் தானும் சிராஜுதீனும் அவசர ஊர்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஷிபா மருத்துவமனை நோக்கி செல்வதாக கூறியுள்ளார் அப்பொழுது நேரம் 2:36 இவை எல்லாம் கைபேசியில் பதிவாகிஉள்ள நேரம் பதிவில் குறிப்பிட்டது போல் ஓட்டுனரின் கைப்பேசி அணைத்து வைக்கப்படவில்லை அந்த அவசர எண் ஓட்டுனரிடம் இல்லை. 

அது பொறுப்பாளர் சகோ நசுருதீன் வசம் உள்ளது நாம் அதை ஓட்டுனர்கள் வசம் கொடுத்து வைத்தால் ஒருவேளை அவர்கள் எடுக்க வில்லை என்றால் என்ன நடக்கிறது என்பது நிர்வாகிகளான எங்களின் கவனத்திற்கு வராமலே போகலாம் எனவேதான் பொறுப்பாளர் ஒருவரை நியமித்து தகவல் வந்த உடன் அதை அவர் மறுபுறம் உறுதி செய்து ஓட்டுனருக்கு தகவல் தருவார். 

ஓட்டுனரிடம் அவசர எண்ணான 97 50 50 50 94 இந்த எண்ணிலிருந்து வருவதற்காகவே தனி இலக்கம் வைத்துள்ளார். இந்த இலக்கத்தை வேறு எந்த சுய உபயோகத்திற்கு அவர் பயன் படுத்துவதில்லை. 

அந்த பதிவில் பரிந்துரைப்பது போல் இரவு பகல் என இரு ஓட்டுனர்களை வைத்து கொள்வதற்கு த.மு.மு.க விடம பொருளாதார வசதியும் இல்லை குறைந்த சம்பளத்திற்கு சேவை மனப்பான்மை உள்ள ஓட்டுனர் கிடைப்பதில்லை அதுபோல அவசர ஊர்தி தினமும் ஓடுவதர்க்கான வாடகை வாகனமும் அல்ல நாங்கள் வசூலிக்கும் வாடகையில் இரு ஓட்டுவர்களை பணி அமர்த்துவது சாத்தியமும் இல்லை. 

தற்போதைய எங்களின் ஓட்டுனரை போல் நல்லுள்ளம் கொண்டவரை பார்ப்பது கடினம்.

அரசாங்கம் செய்துவரும் 108 போல் இரவு முழுவதும் விழித்திருந்து சேவை செய்து பலபேர் வைத்து நிர்வாகம் நடத்துமளவுக்கு த.மு.மு.கவிடம் பொருளாதார சக்தி இல்லை அன்று நடந்ததில் ஒரு தவறு நடந்துள்ளது நள்ளிரவு 2:29 க்கு சகோ சிராஜுதீன் தொடர்பு கொள்ளும் பொழுது அந்த பொறுப்பாளரான நசுருதீன் இரண்டு முறை பதில் அளிக்காமல் உறக்கத்தில் இருந்திருக்கிறார் அவரும் மனிதன் தான் (இறைவன் தனது வசனத்தில்) இரவை உங்களுக்கு இளைப்பாருவதருக்கும் உறங்குவதற்கும் படைத்திருக்கிறேன் என்று கூறுகிறான். 

நள்ளிரவு 2:30 மணிக்கெல்லாம் அழைப்பிற்கு சிலர் உடனே எழலாம் சிலர் சிறிது நேரம் கழித்து எழலாம் இது இறைவன் அவர்களுக்கு கொடுத்த சக்தியை பொறுத்து.

பதிவின் சுட்டிக்கட்டலான // இவ்வாக்கம் யாரையும் தூக்கி பிடிப்பதற்கோ அல்லது தரம் தாழ்த்துவதற்கோ எழுதப்பட்டதல்ல. ஊர் நடப்புகளை உங்களுக்கு தெரியப்படுத்தி சில அசொளகரியங்களை கலைவதற்காகத்தான் அன்றி வேறொன்றும் இல்லை.// என்பது.

5 நிமிட காலதாமதத்தை இவ்வளவு பெரிது படுத்தி எங்கள் தரப்பு விளக்கத்தை பெறாமல் அவர் ஊடகத்தின் வாயிலாக அதிவிரைவாக விமர்சித்திருப்பதை படைத்தவனே அறிவான்.

நல்ல விமர்சனம் எங்களை மேலும் நெறிபடுத்தட்டும் உள்நோக்கம் இருந்தால் எல்லாம் வல்ல அல்லாஹ் போதுமானவன்.

இப்படிக்கு,

செயலாளர் த.மு.மு.க ,
பொருளாளர் த.மு.மு.க ,
துணைத் தலைவர் த.மு.மு.க ,
துணை செயலாளர் த.மு.மு.க
அதிரை நகரம் 


குரிப்பு : நெறிப்படுத்தலுடன் பதியப்பட்டிருக்கிறது.
- நெறியாளார்

10 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தமுமுக. வின் தன்னிலை விளக்கம் தெளிவே !

ஏற்கனவே வெளியான பதிவின் சுட்டிக்காட்டலும், இனியொரு சந்தர்ப்பத்தில் இதுபோல் மீண்டு நிகழாமலிருக்க விழிப்பூட்டவே என்பதையும் படிப்பினை கொள்வோம்.

"பதறிய காரியம் சிதறும்" என்பதை மனதில் கொண்டு வெகுவிரைவில் தகவல் பரிமாற்றங்கள் நிகழ்ந்திடும் இந்தக் காலச்சூழலில், முடிந்தவரை நம் செயல்கள் அனைத்தையும் நன்மையை நாடியே என்று முன்னிருத்துவோமாக.

U.ABOOBACKER (MK) said...

எந்த செய்தியையும் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து உண்மையை பதிய வேண்டும், நோயுற்ற தன் உறவினர்காக சேர்மன் ஆம்புலன்ஸ் ஓட்டியதை பெரிதுபடுத்தியும்,சமுதாய அமைப்புகளின் ஆம்புலன்ஸ் சேவையில் குறை கண்டும் அதிரையின் அனைத்து வலைதளங்களில் வெளியிட செய்தது திட்டமிட்ட செய்லாக தெரிகிறது. ஆபத்தில் இருக்கும் நோயாளிக்கு சராசரி மனிதன் கூட ஏதாவது வகையில் உதவுவான். எல்லாவற்றையும் அரசியல் ஆக்கக் கூடாது.அல்லாஹ்விடம் நற்கூலியை எதிர்பார்த்து செய்யும் செயலே வெற்றியடையும்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

உள்ளங்களை அறிந்த அல்லாஹ்வே போதுமானவன்.த.மு.மு.க சகோதரர்களுக்கு தெரியப் படுத்துவது
என்னவென்றல்.எந்தவித உள்நோக்கம் இல்லாமல் ஒரு கோரிக்கையாகவ எழுதப்பட்டவைதான்.என்பதை தெளிவாக சொல்லுகிறேன்.

இன்று காலை 8 :19 மணி அளவில் சகோ அப்துல் ரஜாக் அவர்கள் என்னிடம் தொலை பேசியில் ஆம்புலன்சை பற்றி எழுதியதைப் குறித்து விசாரித்தார்கள்.அப்பொழுது எழுதிய நோக்கத்தை சொல்லிக் காட்டினேன்,அடுத்து அவர் சொன்ன வார்த்தை ஏன் இதை அரசியலாக்க பார்க்கிறிய நான் நினைத்து இருந்தால் பைத்துல் மால் ஆம்புலன்சில் போகவிடாமல் ஆக்கிருக்க முடியும்.உடல் நிலை சீரியஸாக
இருப்பதால் தடுக்க வில்லை என்பதாக

அவர்கள் சொன்ன அந்த உடல் நிலை மோசமாக இருக்கும் நிலையில்.ஓட்டுனர் வீடுகளை தேடி அலைகிறார்களே!இது போன்ற சம்பவங்கள் வேறு யாருக்கும் நிகழக்கூடாது.என்கிற நன் நோக்கத்தோடு
தான் பதியப்பட்டவை.

உங்களுடைய மகத்தான சேவையை நான் நன்கு அறிந்தவன் தான்.உங்களுடைய சேவையை குறைக் கூற ஒரு துளி கூட எவ்வித நோக்கமும் கிடையாது என தெளிவாக சொல்லுகிறேன்.

அபூபக்கர்-அமேஜான் said...

அதிரையில் உள்ள ஆம்புலன்ஸ் பற்றி அதிரை இணையதளத்தில் வந்து இருக்கிறது.யாரையும் குறை கூருவதற்கோ,உயர்த்தி பேசவோ,தாழ்த்தி பேசவோ என்பதற்கு அல்ல அல்லாஹ்வின் கிருபையால் யார்,யார் எந்த எந்த நோக்கத்தில் செயல்படுகிறார்கள் என்பது பற்றி எல்லாம் வல்ல இறைவனுக்கு தெரியும்.த.மு.மு.க.ஆம்புலன்ஸ் அதிரை நகருக்கு வந்தது மிக பெரிய உதவி. பெரும்பாலும் எந்த ஊரிலும் இந்த பெரிய ஆம்புலன்ஸ் இருப்பதாக தெரியவில்லை.குறை கூறுகிறார்கள் என்று என்ன வேண்டாம் ஓட்டுனர் இரண்டு நபர் இருந்தால் மிக பெரிய உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் அதிரை வலைப்பூக்களில் வந்து உள்ளது. த.மு.மு.க.சார்பாக குறிப்பிடப்பட்ட செய்திகள் உண்மைதான்.ஒரு வேண்டுகோள் என்னவென்றால் த.மு.மு.க.ஓட்டுனருக்கு தனிப்பட்ட கைபேசி என் கொடுத்தால் ஒரு அவசர தேவைக்கு உதவும்.இருமுறை அழைப்பு விடுக்கப்பட்டு அது பதில் அளிக்கப்படவில்லை இப்படி இருக்கும் போது ஓட்டுனருக்கு கைபேசியை என்னை தனியாக ஒன்று வாங்கி கொடுத்தால் அவருக்கு வருகிற அழைப்பை ஏற்பதற்கு மிக சுலபமாக இருக்கும். நீங்கள் உங்களுடைய பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள்.அப்படியும் இல்லா விட்டால் ஆம்புலன்ஸ் கைபேசி எண்ணிற்கு அந்த என்னை(call divert) மாற்றிவிடுங்கள் ஒரு நம்பருக்கு பதில் இரண்டு நம்பர் இருந்தால் மிக எளிதாக இருக்கும்.இல்லாவிட்டால் பொருளாளர் அல்லது செயலாளர் இவர்களில் ஒருவர் யாராவது வைத்துக்கொண்டாலும் போதுமானது.ஓட்டுனர் இரண்டு பேர் இல்லாவிட்டாலும் கைபேசியாவது இரண்டு இருந்தால் நன்றாக இருக்கும்.இதை அரசியல் ஆக்குவதோ அல்லது பால்ட்டிக்ஸ் படுத்துவதோ யாருக்கும் எந்த நோக்கமும் இருக்கக்கூடாது.எது செய்தாலும் அல்லாஹ்வுக்கே செய்கிரேன் என்ற எண்ணம் வரவேண்டும் அப்படி வரும்பட்சத்தில் மனிதன் அல்லாஹ்விடம் மிக பிரியமனவனாக ஆகிவிடுகிறான்.

மு.செ.மு.அபூபக்கர்

Anonymous said...

ஏன் இன்னும் இந்த ஆம்புலன்ஸ் விஷயம் முடிய வில்லையா? அப்பா அப்பப்பா!!!

Yasir said...

No one is perfect... that's why pencils have erasers...so forget this incident and do some real work buddies !!!....we all human being bound to make mistakes....cheers !!!

Anonymous said...

அல்-குர்ஆனை அறிவோம்

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

அபு இஸ்மாயில் said...

அஸ்ஸலாமு அழைக்கும்
நமது சமுதாய இயக்கமான த.மு.மு.கவின் அவசர ஊர்தி சேவை பாராட்டுக்குரியது

//சகோ அபூபக்கர் சொல்வது போல் இரவு பகல் என இரு ஓட்டுனர்களை வைத்து கொள்வதற்கு த.மு.மு.கவிடம் பொருளாதார வசதியும் இல்லை. குறைந்த சம்பளத்திற்கு சேவை மனப்பான்மை உள்ள ஓட்டுனர் கிடைப்பதில்லை. அதுபோல அவசர ஊர்தி தினமும் ஓடுவதற்கான வாடகை வாகனமும் அல்ல. நாங்கள் வசூலிக்கும் வாடகையில் இரு ஓட்டுநர்களை பணி அமர்த்துவது சாத்தியமும் இல்லை.//

இதில் நாம் கவனிக்க வேண்டியது அவர்களின் பொருளாராதார நிலைமையை தான் அவசர ஊர்தியை தொடர்ந்து பராமரிப்பதற்கு இதை படிக்கும் அணைத்து வெளிநாடு, உள்நாட்டு சகோதரர்கள் அவசர ஊர்தி பராமரிப்பு செலவுக்கு தாரளமாக உதவி செய்யுங்கள் இது அவர்களை மேலும் சேவை செய்ய ஊக்கப்டுத்தும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சகோதரர் அபூபக்கர் தமுமுக வை எந்த வகையிலும் விமர்சிக்கவில்லை.ஓட்டுநர் அலைபேசியின் செயலைத்தான் சுட்டிக்காட்டி எதிர்கால நலனுக்கு எப்படி இருக்கனும் என்று கருத்து தான் வழங்கி இருக்கார்.ஒரு செய்தி விடுபட்டதற்கு புதன் பின்னேரம் 8 மணிக்கு பின்னோட்டத்தில் மன்னிப்பும் கோரி இருக்கும் போது அடுத்த நாள் தமுமுக சார்பில் விளக்கம் அளித்தது அவசியமில்லாத ஒன்று.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பான சகோதரர்களே,

சகோ. லெ.மு.செ. அபுபக்கர் தன் கட்டுரை மூலம் நம்மூருக்கு (அதிரை பைத்துல்மால் மற்றும் த.மு.மு.க மூலம்) அற்புதமான அற்பணிப்பான ஆம்புலன்ஸ் சேவையை மேலும் செம்மைப்படுத்த வேண்டுமென்ற நல்நோக்கில் தன் வேண்டுகோளை ஒரு கோரிக்கையாக வைத்திருந்தார். அவர் யாரையும் குற்றம், குறை சுமத்தி அதை அரசியலாக்கி அதன் மூலம் ஆதாயம் அடையும் நோக்கில் நிச்சயம் எழுதவில்லை என்பதை அவருடைய பால்ய நண்பன் என்ற முறையில் நான் தாங்கள் அனைவருக்கும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இதில் சகோ அபூபக்கரின் வரிகளான // இவ்வாக்கம் யாரையும் தூக்கிப் பிடிப்பதற்கோ அல்லது தரம் தாழ்த்துவதற்கோ எழுதப்பட்டதல்ல. ஊர் நடப்புகளை உங்களுக்கு தெரியப்படுத்தி சில அசொளகரியங்களை களைவதற்காகத்தான் அன்றி வேறொன்றும் இல்லை.// என்பது...

மேற்கண்ட கருத்து மூலம் அவர் யாரையும் தனிப்பட்ட முறையில் சாடி எழுதவில்லை. எனவே இக்கருத்திற்கு உட்கருத்து வைத்து எழுதுவது நமக்கு நல்லதாக தெரியவில்லை.

அவரவர் தனியாகவோ, இயக்கமாகவோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ செய்யும் ஒவ்வொரு நற்பணிக்கும், மக்கள் தொண்டிற்கும் இவ்வுலகில் பாராட்டுப்பத்திரங்கள் கிடைக்கிறதோ, இல்லையோ? படைத்த இறைவன் முன் நிச்சயம் அவைகளுக்கு நற்கூலி உண்டு என்ற நம்பிக்கையில் நம் வாழ்க்கை மெல்ல, மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது.

நம்முடைய நற்பணிகளையும், இறைவனுக்காக செய்யும் சேவைகள் அனைத்தையும் மக்கள் தவறாக புரிந்து கொண்டு தூற்றினாலும், தொல்லைகள் பல தந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாது நம் நற்பணிகள் தொய்வின்றி கடைசி மூச்சுக்காற்று தொண்டைக்கும், நெஞ்சிற்கும் தொங்கோட்டம் ஓட்டிக்கொண்டிருக்கும் வரை தொடரட்டுமாக.....

இயக்கங்களால் நமக்குள் தயக்கங்கள் வேண்டாம்.....

தவறாக புரிந்துணர்தலால் வந்த தடங்கலுக்கு வருந்துகிறேன்.

அன்புடன்...

மு.செ.மு. நெய்னா முஹம்மது

நம்மூரிலிருந்து....

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு