(எல் எம் எஸ்களும் அலாவுதீன்களும் இன்ன பிற டிவி எதிர்ப்பாளர்கள் இதை விடுத்து அடுத்த பதிவுக்குப் போவது இதயத் துடிப்பை (heart beat) சீராக்கும் :))
'சீரியல் கில்லர்' என்று அடையாளம் காணப்பட்டு தேடி கைது செய்யும் சமுதாயம் இந்த 'கில்லர் சீரியல்'களைக் கண்டுகொள்ளாதது சரியா? நீதமா? தர்மமா? (ஒரு மூட்ல ஆரம்பிச்சிருக்கேன், என்னிடமிருந்து மைக்கைப் பிடுங்கக் கூடாது)
"திங்கள் முதல் வெள்ளிவரை" மட்டுமே ஒரு வாரத்திற்கான தினங்கள் என்று வாரத்தை ஐந்து நாட்களுக்குள் சுருக்கிப் போடுமளவுக்கு தாய்க்குலத்தின் மூளையை பலகீனப்படுத்திவிட்டன மெகாத் தொடர்கள். சனியும் ஞாயிரும் ஏதோ சபீரும் ஜாகிருக்குமான தினங்கள் என புறக்கனிக்கப்பட்டுவிட்டன. பண்டிகைக் காலங்களில் "இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முதலாக”வில் உலகமே மூழ்கிப்போயிருக்க சீரியல் ‘கட்’டான கவலையில் (கோபத்தில்?) தொலைக்காட்சிப் பக்கமே வருவதில்லை சீரியல் தொடர் ரசிகைகளான அம்மணிகள். இதுதான்டா சான்ஸு என்று பிள்ளைகள் பெண் டென்னையோ ஸ்கூபி டூவையோ போட்டுப் படுத்தும்போது "அடுத்தமுறை பச்சைத் தைலம் பெருசு வாங்கனும்" என்று முடிவாகும். (காதக்குடுங்க, டாம் அண்ட் ஜெர்ரின்னா.. ஹிஹி.. நானும் உட்கார்ந்து விடுவேன்)
எங்க வீட்டம்மாவுக்கு எல்லாத் தொடர்கள் மீதும் ஈர்ப்பு இல்லை (நல்ல வேளை) எனினும் இரண்டு தொடர்களை விட்டு விடுவதில்லை. எனினும் எப்பவாவது சேனல்களை மாற்றும்போது மற்ற சீரியல்களைக் கடந்து செல்லுகையில் மேடம் ஒரு விநாடி நிதானித்தால்கூட சட்டென சேனல் மாற்றிவிடுவேன். இப்படியாக ஒரு முறை மாற்றும் போதுதான் ஜமாலி காக்காவின்(!!!) சிறப்புரை ஒன்றில் சிக்கி சின்னா பின்னாப்பட்டுப்போனேன். (விளக்கமாக எழுதினால் அமைதியாக ஆண்டு விடுவார்கள். ஐ மீன், நீக்கி விடுவார்கள் அ.நி. குழுவினர்) எப்படித்தான் அத்தனை ஆதாரபூர்வமாகவும் தெளிவாகவும் அவருக்கு எதிராகவே அவரால் பேச முடிகிறதோ! )
நம்ம மேட்டருக்கு வருவோம். எங்கே விட்டேன்? ஆங்… எங்கூட்டம்மா சப்பாத்தி மாவோடு தொலைக்காட்சி முன்னால் அமர்ந்தால் காட்சிகளுக்கேற்ப கையில் வேகம் கூடும் குறையும். கதையின் நல்ல(!?) பெண்களுக்கு சோதனை ஏற்படும் போதெல்லாம் (ஒரு சோதனை, அதற்கான நிவர்த்தி என மூன்று வாரங்கள் ஓட்டி விடுவார்கள்) தீயவர்களுக்கு எதிரான கோபத்தை மாவில் காட்ட அடி குத்து வாங்கிய மாவு கனிந்து அன்றைய சப்பாத்தி மெதுவா சூப்பரா இருக்கும். மெல்லாமலேயே வாயில் கறையும்.
சப்பாத்தியை எடுத்தால் அது விடைப்பாக பப்படம் போல எழுந்து விறைப்பாக தேசிய கீதம் பாடி நின்றால் அன்றைய சீரியலில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல் கல்யாணம் காட்சியோ விருந்தோ பிரசவமோ நடந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். அதுகூட லேட்டஸ்ட்டா "நிறுத்துங்கள் கல்யாணத்த" என்று கையில் குழந்தையோடு என்ட்ரி கொடுக்க ஏதுவாக சினிமாவில் வாய்ப்பிழந்து போன நடிகைகள் ஏராளமாக வருகிறார்கள்.
சே, எங்கேயோ ஆரம்பிக்க எங்கெங்கோ இழுத்துச் செல்லுது எழுத்து, ரியலி சீரியல் ஒரு கில்லர் தாங்க!.
ஆச்சா? சீரியல் வசனங்கள் காதில் விழுந்து விழுந்து இப்பவெல்லாம் அந்த பாத்திரங்கள் ரொம்ப பரிச்சயமாகிப் போய்விட்டதால் சமயத்தில் ஏதோ நினைவாக வீட்டுக்குள் நுழையும் நானே, "துளசி நல்லாருக்காப்லயா? என்று கேட்டு வைக்குமளவுக்கு, அடுத்த வீட்டு அண்டைய வீட்டு ஜனங்க மாதிரி ஆகிப்போய் விட்டார்கள் நாயகிகள்.
"எல்லாத்துக்கும் காரணம் அவ கொழுந்தன் பொண்டாட்டிதாங்க" என்று ஒரு முறை சொன்ன மனைவியை, இஸ்திரி போடுவதை நிறுத்திவிட்டு இடுப்பில் கையூன்றிப் பரிதாபமாய்ப் பார்க்க, அவளோ கதாநாயகியின் கொழுந்தன் பொண்டாட்டிக்கு எதிராக கோதுமையைப் பிசைந்துகொண்டிருந்தாள்.
விளம்பர இடைவேளைகள் மட்டும் இடையிடையே வாய்க்காவிடில் குடும்பம் பப்பரப்பா என்றாகிப்போய்விடும் அளவுக்கு சீரியல்கள் சீரியஸாக சிந்தையைச் சிதைத்துக்கொண்டிருக்கின்றன.
"நீங்க மட்டும் கிரிக்கெட் பார்க்குறீங்களே" என்று ஒரு முறை கவுன்ட்டர் அட்டாக் செய்த மனைவிக்கு எதிராக பிள்ளைகளையும் என் பக்கம் தந்திரமாக சேர்த்துவிட்டதால் சீரியலில் வரும் கோனாங்கிக் கதாநாயர்களைக் (ஏ ஐயாமார்களா, ஆம்பிளைகளை இப்படித்தான் பெரும்பாலும் காட்டுறாய்ங்க) கண்ட மனைவி நான் சொன்ன சிற்சில பதில்களில் க்ளீன் போல்ட் ஆகிப்போனாள். ஆயினும், எனக்கும் கிரிக்கெட் பார்ப்பது குறித்து கவலை எழாமல் இல்லை.
"தி பால் வாஸ் நாட் கமிங் ட்டு தெ பேட்" எனும் பேட்ஸ்மேனின் வழமையான பதில்களாலும் "மிடில் ஆர்டர் ஹேஸ் ட்டு வொர்க் ஹார்ட்" எனும் கேப்டனின் சால்ச்சாப்புகளாலும் "வி வில் லேர்ன் ஃபிரம் அவர் மிஸ்டேக்" போன்ற புராதன வசனங்களாலும் இப்பவெல்லாம் கிரிக்கெட் பார்க்க கொஞ்சம் பயமாயிருக்கு.
"பால் எந்த காலம்யா பேட்டுக்கு வரும்? பேட்தானையா பாலை அடிக்கனும்" என்றோ, "அப்ப, மிடில் ஆர்டரை மாத்துங்களேன்" என்றோ, "அதுசரி, இதுவரை தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவேயில்லையா" என்றெல்லாம் நாம் கேட்டால், கிரிக்கெட்டை ஒரு மதத்தைப்போல பாவித்துப் பழகிப்போன இந்தியர்கள் நம்மை நாடு கடத்திவிடுவார்கள்.
அன்றைய ஆட்ட முடிவில் தோற்ற வெஸ்ட் இன்டீஸின் கேப்ட்டன், "அடுத்த மேட்சில் இன்டியாவை நிச்சயம் வெல்வோம்" என்று சூளுரைத்தார் என்பதை தலைப்புச் செய்தியில் வாசித்தார்கள். எந்த கேப்ட்டனாவது அடுத்த மேட்சில் நாங்கள் தோற்போம் என்று சொல்லி யிருக்கிறானா? அப்புறம் ஏன் இது ஒரு செய்தி, ஆங்?
ஏது ஏது, இனி இந்திய கேப்டனிடமிருந்து இப்படிக்கூட பேட்டி எதிர்பார்க்கலாம். "நாங்கள் தோற்கவில்லை. இங்கிலாந்து ஜெயித்ததால்தான் எங்கள்மீது தோல்வி திணிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வெற்றியே எங்கள் தோல்விக்குக் காரணம் (?@&$??!!) "
நானெல்லாம் கிரிக்கெட்டுக்கென்று தனியாக நேரம் ஒதுக்குவதில்லை. இஸ்திரி செய்துகொண்டோ வெற்றிடம் செய்துகொண்டொ (வேக்யூம் க்ளீன்பண்றதுக்கு தமிழ் என்னப்பா?) என ஏதாவது வேலை செய்துகொண்டிருப்பேன், கிரிக்கெட் நடந்துகொண்டிருக்கும் அவ்வளவுதான்.
இருந்தாலும் இந்த ரெண்டு அடிக்ஷனிலிருந்தும் வெளியே கொண்டுவர ஏதும் மீட்புமையங்கள் இருந்தால் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி... நம்பர் ஃபைவ், விவேகானந்தர் ஸ்ட்ரீட், துபை குறுக்குச்சந்து, துபை மெயின் ரோடு, துபை!
- Sabeer abuShahruk
23 Responses So Far:
கவிக் காக்கா:
ஆஹா... கலக்கல், அழகான சிரிப்பு ஓடையில் பயணம் அருமை (இது அடுத்த சீரியலுக்கான தலைப்பு என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல :) )!
நானும் தான் அந்த மீட்பு மையங்களின் முகவரியைத் தேடுகிறேன்..
//இப்படியாக ஒரு முறை மாற்றும் போதுதான் ஜமாலி காக்காவின்(!!!) சிறப்புரை ஒன்றில் சிக்கி சின்னா பின்னாப்பட்டுப்போனேன். (விளக்கமாக எழுதினால் அமைதியாக ஆண்டு விடுவார்கள். ஐ மீன், நீக்கி விடுவார்கள் அ.நி. குழுவினர்) எப்படித்தான் அத்தனை ஆதாரபூர்வமாகவும் தெளிவாகவும் அவருக்கு எதிராகவே அவரால் பேச முடிகிறதோ! )//
அதையுமா பார்க்கிறீங்க ? அவ்வ்வ்வ்வ்வ்ளோ சீக்கிரமா பார்க்க ஆரம்பிக்கிறீங்க ! :) நீங்க சொன்ன கில்லர் சீரியல்கள் துப்யாய் நேரம் இரவு 07:30 முதல் 08:30 வரைதானே :)
சரி காக்கா ஜாமலி வந்து கலக்கும் சேனல் என்னாது காக்கா !?
அஸ்ஸலாமு அலைக்கும்.
// (எல் எம் எஸ்களும் அலாவுதீன்களும் இன்ன பிற டிவி எதிர்ப்பாளர்கள் இதை விடுத்து அடுத்த பதிவுக்குப் போவது இதயத் துடிப்பை (heart beat) சீராக்கும் :)) //
சபீர் காக்காவின் நக்கல் கலந்த கலக்கல் இதயத்தை சீர் படுத்தவில்லை என்றாலும். மின்னல் போல் மறைந்து மறைந்து காட்சி தரும்.புகைப் படமாவது எங்கள் கண்களை சீர் படுத்தினால் சிறப்பாக இருக்கும் .
சன் டிவிக்கு எதிராக ( அ.நி )ரில் சூப்பர் சீரியலே ஆரம்பித்த மாதிரி தெரியுதே?
உன்னுடைய ஆர்டிக்கில் பல இந்தியர்களுக்கு பிடிக்கும்.
கிரிக்கெட் பற்றி நீ எழுதியதை படிக்கும் போது ரஷ்ய திரைப்பட விழாவில் வந்த படத்தை மொழி மாற்றம் செய்யாமல் அப்படியே பார்ப்பது மாதிரி இருந்தது. [ ஒரு அச்சரம் கூட வெலங்களே...]
இருப்பினும் கிரிக்கெட் பற்றி செய்தி வந்தால் அதை படிக்காமல் இருப்பதற்கு "AUTO HIDE' என ஏதாவது பட்டன கண்டு பிடித்தால் உடன் எனக்கு தெரியப்படுத்தவும் டியர் அபு இப்ராஹீம் / தாஜுதீன்.
என்னதான் நம்மாட்கள் அடி? வாங்கினாளும் அவனுங்களை திட்டிவிட்டு அடுத்த மேட்ச் எப்போனு அம்போனு எதிர்ப்பார்த்துக்கிட்டிருக்கோம், உதைபந்தில் உள்ள வேகமும், திறமையும் என்னமோ இதுலே இல்லேனுதான் சொல்லனும்.
ஆமா அடுத்த டெஸ்ட் மேட்ச் எப்போ?
//"AUTO HIDE' என ஏதாவது பட்டன கண்டு பிடித்தால்//
அப்படியொரு ஆப்ஷன் வைத்தால், இந்தியர்களின் கனவு இருட்டாக இருக்குமே !? அப்போ எப்படி நாட்டை முன்னேத்துறதாம் ?
அங்கேயிருந்து கிட்டு கேட்பதான் ஏதோ சதி இருப்பதுபோல் தெரிகிறது, அதனால் இந்தியாவில் பட்டினிச் சாவு அதிகரிக்கும் (அ.ஹ.போலால்ல), வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும் (இப்போ மட்டுமென்ன), அனைத்து அலைபேசிகள் அமைதிப் போர் நடத்து... இப்படியாக போரட்டங்களை சந்திக்க வேண்டி வருமே !?
என்ன செய்யலாம் !?
என்னுடைய கருத்துப்படி குடும்பத்தில் (மாமியார், மருமகள், நாத்தனார்....) சண்டையும், சச்சரவும் உண்டாக இப்போவெல்லாம் டீ.வீ. சீரியல்களும் முக்கிய பங்குவகிப்பதாக கேள்வி, முடிந்த வரையில் தவிற்பது நல்லது.................................
அரசியல்வாதிகள் மட்டும்தான் அரசியல் செய்யவேண்டும் என்பதில்லை பாலிடிக்ஸ் என்பது எங்கும் உண்டு. கூட்டுக் குடும்பத்தில் மாமனார், மாமியாரிடம் நல்ல பெயர் வாங்குவதற்கு செய்யப்படும் பாலிடிக்ஸ் தொடங்கி, நாத்தனார், ஓர்படி என அனைவரின் பாலிடிக்ஸ்சையும் சமாளித்து நிமிர்வதற்குள் அலுவலகத்தில் பாலிடிக்ஸ் ஆரம்பமாகி விடுகிறது.
அலுவலகத்தில் அனைத்து தரப்பு பணியாளர்களும் ஏதாவது ஒருவிதத்தில் அரசியலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஏனெனில் அலுவலக அரசியல் என்பது ஒவ்வொருவரின் உத்தியோக வளர்ச்சியோடு கலந்திருக்கிறது. இருப்பினும் அந்த அரசியலை நாசூக்காக கையாண்டால் எங்கும், எதிலும் வெற்றிதான். இதோ நிர்வாகவியல் வல்லுநர்கள் தரும் ஆலோசனைகள்:
இடம் பொருள் ஏவல்
நம்மிடம் இருந்தே வார்த்தைகளை பெற்று அதை நம்மை நோக்கி திருப்பிவிடும் அஸ்திரத்தை கற்றுக்கொண்ட எத்தர்கள் அதிகம் உண்டு. எனவே யாரைப் பற்றி எங்கு எப்போது பேசுகிறோம் என்பது முக்கியம். வீடோ, அலுவலகமோ, “யாகாவராயினும் நாகாக்க” இல்லையெனில் நாம் உபயோகித்த வார்த்தை நமக்கு எதிராக திரும்பும் ஜாக்கிரதை.
வேண்டாம் விவாதம்
உங்களுக்கு நீங்கள் செய்வது அல்லது உங்கள் தரப்பில் சொல்வது மிக சரி என்று பட்டாலும், அதுவே உண்மையாக இருந்தாலும் கூட சரி, கண்டிப்பாக நீங்கள் அனைத்து தரப்பில் அல்லது அனைவர் சொல்வதையும் கவனமாக கவனிப்பதன் மூலம், நீங்கள் சரியான இடத்தில் சரியான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துகிறீகள் என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தேவை இல்லாத வார்த்தை விவாதங்களை தவிர்த்து, அந்த பிரச்சனையை சரியான முறையில் வடிவமைத்து வரிசைபடுத்தி கட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம், நீங்கள் உங்கள் கூடுதல் திறமையை அல்லது வழிகாட்டி தலைமை தாங்கும் தன்மையை மற்றவர்களுக்கு உணர்த்த முடியும்.
சிறப்பான செயல்பாடு அவசியம்
அலுவலக அரசியலுக்கு பதில் கொடுக்க மிக சிறந்த வழி என்பது, உங்களால் எவ்வளவு சிறப்பாக செயல் பட முடியுமோ, அவ்வளவு சிறப்பாக செயல் படுவது மட்டுமே. உங்களை நீங்களே நல்ல முறையில் வழிநடத்தி துணிவாகவும், அதே நேரத்தில் உறுதியாகவும் செல்வது என்பது எதிரிகளையும் பொறாமைகளையும் வளர்ப்பதிற்கு பதிலாக எளிதாக மற்றவர்களை கவர்ந்து, உங்கள் வழியை பின் பற்ற வைக்கும்.
அலுவலக அரசியல் எவ்வளவு மோசமாக அல்லது கீழ்த்தரமாக இருக்கப்போவது என்பது, நீங்கள் எவ்வளவு மோசமாக அல்லது கீழ்த்தரமாக அதில் கலந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் அமைகிறது. ஆகவே, எப்போதும் மனதில் வைத்திருங்கள், எது வேண்டுமானாலும் வரலாம் போகலாம், ஆனால் கண்டிப்பாக நாம் என்ன செய்தோமோ அது நமக்கே ஒரு நாள் திரும்ப கிடைக்கும்.
நிழல் விசயங்களில் கவனம்
அலுவலக அரசியலில் மிக சவாலான விசயம் என்னவெனில் நம்மைப் பற்றி புகழ்ந்து கொண்டே நமக்கு எதிராக செயல்படுபவர்கள் அதிகம் இருப்பார்கள். இதுதான் பெரும் சவாலான விசயம். எனவே உங்களுடைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அப்பொழுதான் அலுவலகத்தில் நமக்கெதிராக செயல்படும் நிழல் உலக 'தாதா'க்களிடம் இருந்து தப்பிக்க முடியும்.
நேருக்கு நேராக சந்தியுங்கள்
எப்போதும் அலுவலக அரசியலை நேரடியாக எவ்வித தயக்கமும் இல்லாமல் சந்திக்க பழகுங்கள், மேலும் அதை சரியான முறையில் பயன்படுத்தி உங்கள் வழிநடத்தும் திறமையை காட்டும் சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ளுங்கள், இது உங்கள் அலுவலக வேலையில் அடுத்த நிலைக்கு செல்ல அல்லது வளர்ச்சிக்கு உதவும்.
என்னதான் ஒருவர் அல்லது ஒரு அணி செய்வது சரி என்று உங்களுக்கு பட்டாலும், நீங்கள் அவ்வளவு எளிதாக அதற்கு சாதகமாகி, எதிர் அணி செய்வது தவறென்றோ அல்லது அவர்கள் அதை உணர வேண்டும் என்று முறையிடவோ விவாதிக்கவோ வேண்டாம். உங்களை நீங்களே ஒரு நடு நிலமையாக்கி கொள்வது நல்லது, சம்மந்தபட்ட இருவர் அல்லது இரு அணிகள் பேசிக் கொள்ளட்டும் அல்லது விவாதித்து கொள்ளட்டும்.
மு.செ.மு.அபூபக்கர்.
நெருக்கடியில் உதவுங்கள்
பிற துறையை சார்ந்தவர்கள் ஒரு வேலையை முடிக்க முடியாமல் திணறும் போது நமக்கென்ன என்று ஒதுங்கிப் போகாமல் உதவி செய்வது அவசியம். வேலை இடங்களில் நல்ல ஒரு நட்புறவை வளர்க்க இது மிக சிறந்த ஒரு வழிவகுப்பதோடு, உங்கள் உதவிக்கு நன்றியுடன் இருப்பதோடு, அவர் மனதில் நல்ல ஒரு இடத்தை உங்களுக்காக ஒதுக்கும்படி இது உதவும்.
சக அலுவலக நண்பர் பிரச்சனைகளை சந்திக்கும் போது, நீங்களாகவே முன் வந்து உங்களால் முடிந்த வரை உதவுவது என்பது, உங்களுக்கு அல்லது உங்கள் துறைக்கு சம்மந்தமில்லாதவராக இருந்தாலும், உங்களுக்குள் இருக்கும் ஒரு இடைவெளியை உடைத்து நெருக்கமாக இது வழிவகுக்கும்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
வருட ஊதிய உயர்வு நேரத்தில் ஒருவரை ஒருவர் முன் விட்டு பின் பேசுவது என்பது பொதுவாக நடக்க கூடிய ஒன்று தான் என்றாலும், சில நேரங்களில் உங்கள் உடன் அல்லது கீழ் வேலை பார்பவர்களே உங்களுக்கு எதிராக திசை திரும்பி பல மனிதாபிமானமற்ற வதந்திகளை பரப்பி உங்கள் பெயரை கெடுக்க முயற்சிக்கலாம். அந்த சமயத்தில் நீங்கள் உறுதியோடு இருக்க வேண்டும். உங்கள் பொறுமையை இழக்காமல் அந்த பிரச்சினையின் சிக்கலை தீர்க்க வேண்டும்.
புதிய நல்ல எண்ணங்களோடு சிறந்த யோசனைகளையும் சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். வதந்திகளை கையாளும் போது, குறிப்பாக மேல் அதிகாரிகளை பற்றி யாரிடமும் மோசமாக பேசுவதை தவிருங்கள். உங்களுக்கான சரியான நேரம் அமையும் போது, துணிவாக மற்றும் தெளிவாக உங்கள் மனதில் உள்ள சிந்தனைகளை நடக்கும் ஆலோசனையுடன் ஒப்பிட்டு, சரியான மற்றும் தேவையான கருத்துக்களை சொல்லுங்கள்.
எவ்வளவு சரியாக செய்கிறோம் என்பதை விட, அதை எந்த நேரத்தில் செய்கிறோம் என்பதுதான் மிக முக்கியம் எனவே குறைவாக பேசி அதிகம் கேட்கவேண்டும். எதையும், கேட்கவோ, சொல்லவோ மிகப் பொறுமையான தருணத்திற்காக காத்திருங்கள். அனைவரையும் சமமாக கருதுங்கள்
எல்லா இடங்களிலும் நேரங்களிலும் கனிவாக இருக்க பழகுங்கள், உங்கள் கீழ் வேலை பார்ப்பதால், அவர்களை மட்டமாக பார்க்கவோ மறைமுக இம்சை படுத்தவோ வேண்டாம். எதுவுமே நிரந்தரமில்லாத இந்த உலகில், ஒரு நாள் உங்கள் கீழ் வேலை பார்த்தவர் கூட உங்களுக்கு அதிகாரியாக வரக்கூடும் இல்லையா? எனவே எப்போதும் மற்றவர்களை சமமாக அல்லது உங்களை விட சிறந்தவராக நினைப்பதே சாலச்சிறந்தது.
ஒரு போதும் வளைந்து கொடுக்காமல் எல்லா சூழ்நிலைகளிலும் மிக துல்லியமாக இருப்பது என்பது, உங்களுக்கு நீங்களே மறைமுக எதிரிகளை வளர்த்து கொள்வதாகும்.
உங்களுக்கு தெரிந்ததை கற்றுக்கொடுங்கள், தெரியாததை கற்றுக்கொள்ள தயங்காதீர்கள். அப்புறம் என்ன நீங்கள் தான் எதையும் சமாளிக்கும் சமாளிப்பு திலகம்.
மு.செ.மு.அபூபக்கர்.
மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------------
//சன் டிவிக்கு எதிராக ( அ.நி )ரில் சூப்பர் சீரியலே ஆரம்பித்த மாதிரி தெரியுதே?//
ஆஹா, டைட்டில் கார்டிலேயே எச்சரித்தும் முழுசா வாசிச்சிட்ட மாதிரில்ல தெரியுது. எல் எம் எஸ், எங்கே பதிவுகளைக் காணோம்? உங்களின் சத்தான பின்னூட்டங்களைத் தொகுத்தாலே ஓர் ஆக்கமாகிப்போகுமே?
//அடுத்த டெஸ்ட் மேட்ச் எப்போ?//
14ஆம் தேதி, ஈடன் கார்டன், கொல்கொத்தா. கொல்கொத்தாவில கழுத்தறுத்தா அவிங்க கல்லால அடிப்பாய்ங்க மாலிக்.
//என்னுடைய கருத்துப்படி குடும்பத்தில் (மாமியார், மருமகள், நாத்தனார்....) சண்டையும், சச்சரவும் உண்டாக இப்போவெல்லாம் டீ.வீ. சீரியல்களும் முக்கிய பங்குவகிப்பதாக கேள்வி, முடிந்த வரையில் தவிற்பது நல்லது.................................//
சண்டை வளர்க்கவாவது மாமியாவும் மருமகளும் ஒன்னா இருக்கட்டுமே. இப்பவெல்லாம், நீங்களும் நானும் மருமகளைப் பிரிச்சிக் கொண்டு வந்திடறோம், மீதி இருக்கும் மருமகள்களுக்கு ‘தனித்து’ இருக்கும் மந்திரம் தெரிந்திருக்கிறது. அப்ப, உம்மாவுக்கு யாரு சோறாக்கித்தருவதாம். சண்டை போட்டாலும் அடுத்த எபிசோடில சேர்ந்துப்பாங்க. பிரிஞ்சில்ல கெடக்காக மாலிக்.
Sabeer abuShahruk
மின்னஞ்சல் வழி கருத்து
--------------------------------------------
//ஜாமலி வந்து கலக்கும் சேனல் என்னாது காக்கா//
அது மூன் டிவி, அபு இபுறாகிம். நிறைய இஸ்லாமிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறார்கள். என்னவொன்று என்றால்...என்னத்தச் சொல்ல? மற்ற கச்சடா சேனல்களுக்கு இது ஒரு ஆறுதல். மற்றபடி, நோன்பில் சஹரில் எழுந்து உட்கார்ந்திருப்பவர்களைப் பார்த்து, “சஹருக்கு நேரம் ஆச்சு எழுந்திரு சகோதரா” என்று துயிலெழுப்புவார்கள். இதுலே காமெடி என்னென்னா, எழுந்த பிறகுதானே நாம் டிவியைத் திறப்போம்? திறந்தால் இவிங்க “எழும்பு” என்று பாடிக்கொண்டிருப்பார்கள்.
Sabeer abuShahruk
//மாவு கனிந்து அன்றைய சப்பாத்தி மெதுவா சூப்பரா இருக்கும்//
சப்பாத்தி மாவில் சீரியல் பார்க்கும் ஒரே ஆள் நீங்கள்தான்
அஸ்ஸலாமு அலைக்கும்.
// எல் எம் எஸ், எங்கே பதிவுகளைக் காணோம்? உங்களின் சத்தான பின்னூட்டங்களைத் தொகுத்தாலே ஓர் ஆக்கமாகிப்போகுமே? //
(அ.நி) க்குள் புகுந்து முத்தான ஆக்கங்களை பொருக்கி எடுத்து .சத்தான கருத்துக்களை கொட்டுவதற்கு தடை போடும்.என்
இணையதள இணைப்பு ஒரு பக்கம்.கடை வியாபாரம் பிசி மறுபக்கம்.இவைகளின் காரணத்தால் ( அ.நி ) அன்பர்களின் ஆக்கத்திற்கு ஆறுதல் சொல்ல முடியாமல் முழிக்கிறேன் அன்பின் சபீர் காக்கா.
ஒட்டுமொத்த உறவுகளையும்
சுருக்கி நினைவுகளாக இதயத்தில்
சுமந்து பாலைவனத்திற்கு வந்துவிட்டேன்
சிறைவாசியாக!
இறுக்கிப் பிடித்த
இதயம் மட்டும்
இரவினில் கொப்பளிக்கும் உறவுகளை எண்ணி!!
தனிமையில்
தலையணை மட்டுமே துணையாக!
ஈரம் காத்துக் கொண்டிருக்கும் கண்கள்
தூரத்தில் உள்ள உறவுகளை எண்ணி!!
ஆறுதலாக என்
அழுகை சப்தம் மட்டும்
சப்தமே இல்லாமல்!!
குரல்களில் மட்டுமே
குடும்பம் நடத்தும் கொடுமை!!
கட்டிய மனைவியும்
தொட்டிலில் குழந்தையும்!
நடக்க ஆரம்பித்துவிட்டான் என்பதையே
நடுவில் ஒருவர் கூற;
நனைந்த கண்களை துடைத்துவிட்டு
சிரிக்க மட்டுமே முடிந்தது!!
மெல்லிய உதடுகளை
ஈரம் கொண்டிருக்கும் எச்சிலின் உதறலோடு
தட்டிய கைகளோடு ஒரு முறை சொன்னான் அத்தா என்று!
அணைத்து முத்தமிட்டேன் கைபேசியை!!!
MSM ABOOBACKER
புகைப்படத்துடன் வந்து
பிடித்திருக்கா? என்றாள் என் அம்மா!
அசைக்காத தலையை
சம்மதம் என்றே பிடிங்கிச் சென்றாள் புகைப்படத்தை!!
நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்
கல்யாணமும் முடிந்துவிட்டது!!
முழுதாய்ப் புரிவதற்குள்
முடிந்து விட்டது உன் விடுப்பு!
எடுத்துச் சென்றாய் என் இதயத்தை
கூடவே கொடுத்துச் சென்றாய் குழந்தையை!!
பத்தே நாட்களின் வாழ்க்கை
பறித்துக்கொண்டது பாழாய்ப்போன வெளி நாடு!!
பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
பலிகடாவாய் நான்!
என் அழுகை கூட
ஐந்து விரல்களுக்கு நடுவே!
வறண்டு போன கண்களும்
இருண்டு போன இதயமுமாக நானிருக்க;
ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
வசை பாடிவிட்டே சென்றார்கள்!
அயல் நாட்டில் இருப்பதெல்லாம்
உழைப்பதெல்லாம் உனக்குத்தானே என்று!!
கெஞ்சினேன் கொஞ்சினேன்
வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்கு;
ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!!
துக்கம் தொண்டையை அடைக்க;
உருண்டு வந்த கண்ணீரையும்
ஒரமாய்த் துடைத்துவிட்டு;
உள்ளுக்குள்ளே உள்ளத்திலே
உரைத்தேன் – இருந்திருக்கலாம்
முதிர்கன்னியாகவே!!!!
மு.செ.மு. அபூபக்கர்
சனநாயகம்:
தாத்தா
நினைவு தப்பி
தன்மை பிறழ்ந்து
முன்னிலை மறந்து
படர்கைகளை
பிழையாக அனுமானித்து
முதுமையை வாழுகையில்
பரிதாபமா யிருக்கும்
கட்டிக்
காலங்கழித்தப் பாட்டியையும்
பெற்றுப்
பேர் வைத்த அம்மாவையும்
பேரன்பு காட்டிய
எங்களையும்கூட
இதுதான் இவர்தான்
நான்தான் நீதான்
என
அடிக்கடி
அடையாளம் காட்டியே
பேச வேண்டியிருந்தது
தேர்தல் விழா
தேர்த் திருவிழாவென
படு விமரிசையாக
நடந்து முடிய
கட்சி சார்புக்கும்
ஆட்சி மாற்றத்திற்கும்
அவர்
சுய நினைவோடு
தீர்மாணித்திருக்க முடியா தெனினும்
தாத்தாவின்
சுட்டு விரலிலும்
சனநாயகக்
கரும் புள்ளி!
//குரல்களில் மட்டுமே
குடும்பம் நடத்தும் கொடுமை!!//
// ஒரு முறை சொன்னான் அத்தா என்று!
அணைத்து முத்தமிட்டேன் கைபேசியை!!!//
//அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!! //
//இருந்திருக்கலாம்
முதிர்கன்னியாகவே
நல்லாருக்கு முஹம்மது. உருக்குகிறது மனத்தை. வாழ்த்துகள்
திடீரென இடி இடிச்சு மழை பெய்து ஓய்ந்தது போல உள்ளது கவிக்காக்காவின் நக்கல் மழை......எங்களுக்கும் எங்க வீட்டுகாரம்மாவிற்க்கும் தமிழ் சேனல்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை...அவங்க இதுவரை ஒரு சீரியல் கூட பார்த்தது இல்லை நானும் கூடதான்...
//Yasir சொன்னது… எங்களுக்கும் எங்க வீட்டுகாரம்மாவிற்க்கும் தமிழ் சேனல்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை...அவங்க இதுவரை ஒரு சீரியல் கூட பார்த்தது இல்லை நானும் கூடதான்...//
மாஷா அல்லாஹ்... உங்க டீமில் என்னையும் சேர்த்துக்குங்க யாசிர்... :)
welcome bro tajudeen
(சீரியசான)சீரியலுக்கும் சப்பாத்தி மாவின் சாஃப்ட்&சுவைக்கும் ரொம்ப நெருக்கம்.
'டீல்' ரொம்ப சூப்பர்.
ஆஹா!!! மிகச்சுவையான பதிவு. அதிலும் குறிப்பாக க்ரிக்கெட் பற்றி சேர்த்ததால் அருமையாக இருந்தது. இது போன்று படித்து வெகு நாட்களாகி விட்டது..
முஹம்மத்: சொன்னது போல் நீங்கள் எல்லாம் க்ரிக்கெட்டில் மிக ஆர்வமாக இருப்பிய போல இருக்கிறது. உங்களுடைய விளையாட்டுகளை தொடருங்கள்.
Post a Comment