Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

துப்பு(வதை) அறிவோமா ? 14

அதிரைநிருபர் பதிப்பகம் | November 29, 2011 | , , ,


சமீபத்தில் லண்டன் BBCயில் நம்ம இந்தியா சார்புடைய ஒரு செய்தியை எதேச்சையாக காண நேர்ந்தது அதில் கொல்கத்தா நகரின் பிரசித்திபெற்ற ஹவ்ரா பாலத்திற்கு ஆபத்து வந்துள்ளது என்றது அந்தச் செய்தி. அட! என்னடா அது வெடிகுண்டு மிரட்டலா இருக்குமோ !? என்று மேலும் அச் செய்தியை வாசித்தால் வெரி-சிம்பிள் அதுதான் எச்சில் மேட்டர் இந்த பாலத்தினை தாங்கி நிற்கும் இரும்புத் தூண்களின் முட்டுக்கள் மீது அங்கு வசிக்கும் / கடந்து செல்லும் மக்கள் வெற்றிலையை வாயில் போட்டு மென்ற எச்சிலை தூற்றி (துப்பி) அந்த எச்சிலால் ஹவ்ரா பாலம் இரும்புத் தூண்கள் அரிக்கப்பட்டு வருகின்றனவாம்(!!?).

அட! இந்தியக் குடிமக்களா! நில அரிப்பை தடுத்திட சவுக்கு மரம் வளர்த்திடுங்கள், காடு வளருங்கள் என்று காட்டுக் கத்தலா அரசு கத்துது ஆனால் இந்த வெற்றிலைப் பாக்கு மென்றுத் துப்பும் எச்சிலின் அரிப்பை தடுக்க எதை வளர்க்கச் சொல்றதுன்னு யாராச்சும் யோசனை சொல்லுங்களேன்..!

இப்படியாக எச்சிலை (தூற்றி) துப்பி இந்த பாலத்தை பலமிழக்கச் செய்து அந்தரத்தில் தொங்கவிட்டால் அல்லது கவிழ்த்தால் அதுதான் கின்னஸ் சாதனையாக இருந்திடப் போகுது. ஆனால், அதில் ஒரு சிக்கல் என்னவென்றால் அந்த கின்னஸ் சாதனையை யார் செய்ததது என்று  தனிமனிதர் யாரும் பெருமைபட்டுக்கொள்ள முடியாது. ஆனால், ஒட்டு மொத்த வெற்றிலை குதப்பிகளைத்தான் சென்றடையும் என்பதினை நாம் மறுக்கப் போவதுமில்லை. .

எனது நண்பர் ஒருவர் நல்ல திடகாத்திரமான ஆள் இவர் ஒரு நாள் வெற்றிலைப் பாக்குக்கு தொடர்ந்து குதப்பும் ஒருவரிடமிருந்து கொஞ்சம் வெற்றிலைப் பாக்கு வாங்கி குதப்ப ஆரம்பித்தார். அடுத்த கணமே நண்பர் மயங்கி விழுந்து விட்டார். நான் பதறிப்போய் அவரை ஆஸ்பத்திருக்கு கொண்டு போக ஏற்பாடு செய்தேன் வெற்றிலையை கொடுத்தவரோ கூலாக அட “அது எல்லாம் ஐந்து நிமிடத்தில் சரியாகிவிடும்” என்று சொன்னார். அவர் சொன்னதுபோல் மயங்கி விழுந்தவர் ஐந்து நிமிடத்தில் எழுந்தும் விட்டார்.

அந்த வெற்றிலைப் பாக்குக்கு பழக்கப்பட்ட குதப்பியான அவரிடம் மேலும் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் சொன்னதுதான் அதிர்ச்சியைக் கொடுத்தது “வெற்றிலையின் பின்புறம் ஒரு வகை பூச்சி இருக்குமாம் அதை வாயில் போட்டு மென்றதும் அது குடல் உள்ளே போய் மயக்கத்தை ஏற்படுத்துமாம்(!!?)" அப்டின்னா “உங்களுக்கு ஏன் மயக்கம் வரவில்லை” என்று கேட்டதற்கு.

அவர் சொன்னதுதான் அதைவிட ஹைலைட் ! “எப்பொழுதெல்லாம் வெற்றிலையையும் பாக்கையும் சேர்த்து மெல்லுவதற்கு ஆயத்தமாவேனோ அப்போது அந்த வெற்றிலையின் பின்புறம் சுண்ணாம்பு தடவி பூச்சிகளை கொன்று விடுவேன்” என்று அவரது பூச்சி கொல்லி டெக்னிக்கை சொன்னவர் மேலும் வெற்றிலைப் பாக்கு பற்றி PhD செய்யுமளவிற்கு அலப்பறை செய்தவருக்கு அதன் தீங்குகள் பற்றி சிறிதளவேனும் அவர் அறிந்திருக்கவில்லை என்பது அவரது அலப்பறையிலிருந்து அறிய முடிந்தது.  

நம்ம ஊரில் தெருக்களில் ஓரத்தில் / ஸாரி கொஞ்சம் நடுவில் உள்ள எலெக்ட்ரிக் (EB) போஸ்ட் அடியில் அரித்து இருப்பதை நாங்கள் ஊரில் இருக்கும் போது EB அலுவலகத்திற்கு சென்று புகார் செய்தபோது அதற்கு அவர்கள் சொன்னது “நாய்கள் அங்கே சிறுநீர் அடிச்சு (??)  அந்த EB போஸ்ட்டுகள் வலுவிழந்து போய் விட்டது”  என்று ஒரு நூதனமான பதிலை பொறுப்பான நம்ம E.B. அலுவலகதில சொன்னா(ய்)ங்க !.

நாமதான் E.B.க்கு இடம் வாங்கி கொடுத்த கையோடு அங்கு வேலை செய்பவர்களுக்கு ஆளுக்கு '10 மா' தென்னந்தோப்பும் வாங்கி கொடுத்து இருந்தா இன்னும் பலவகையான கழிவுகளின் அறிய நலன் / கெடுதிகள் பற்றி தெளிவா(!) மின்சாரவாரிய (அலுவலக!!??) ஆட்கள் நமக்கு வகுப்பெடுப்பார்கள் போலும்.   

டவுட்டு என்னவென்றால் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களின் சிறுநீருக்கும், மக்கள் வெற்றிலைப் பாக்கு சுண்ணாம்பு எல்லாவற்றையும் வாயில் போட்டு நன்றாகக் குதப்பி மென்று துப்பும் எச்சிலுக்கும் இத்தனை பவாரா இருக்கு ? அப்படியான பவர் இருந்தால் ஏதாவது அணு உலைக்கு கடின நீருக்கு பதிலா! அல்லது ரியாக்டருக்கு மாற்றாக இதை முயற்சி செய்து பார்த்தால் ஏதாவது ஒரு நல்ல பலன் கிடைக்கும் என்று யோசனை சொல்லத் தோனுது. 

இந்த வெற்றிலைப் பாக்கு குதப்பிகளை கவனித்தால் ஒன்று மட்டும் புலப்படும் இவர்கள் அனைவரும் ஒரு விசயத்தில் ஒற்றுமையாக இருப்பார்கள் அது என்னெவென்றால் அந்த வெற்றிலைப் பாக்கு குதப்பிய எச்சில்களை மூலைக்கு மூலை துப்புவதில் மட்டும்.

நானும் இது பற்றி எனக்குத் தெரிந்த கோணங்களில் யோசித்து பார்த்துவிட்டேன் மூலைக்கு மூலை இவர்கள் துப்பி வைப்பது ஏன் என்று விளங்கவில்லை இதனால் வரும் நோய்கள் பற்றி எல்லாம் இவர்கள் கவலைப்படுவதாகவும் இல்லை (சகோதரர் ஜாகிர் ஒரு கட்டுரை போடலாம்) . 

இவர்கள் துப்பும் எச்சிலை நன்றாக கவனித்து பார்த்தால் அதில் உலக வரைபடத்தை பார்க்கலாம் மேலும் உற்றுப் பார்த்தால் வேற்று கிரகங்களின் வரை படங்களும் மிக தெளிவாக இருக்கும் (கூகிள் கவனிக்கவும்). இவ்வாறு இருட்டிய இடத்தில், முக்கோணம் குவியுமிடமித்தில், நிறுத்தி வைக்கப்பட்ட கம்பங்களில், இரும்புக் கம்பிகளின் அடியில் இவ்வாறாக துப்பும் துரதிஷ்டவாதிகளுக்கு அது பற்றிய விழிப்புணர்வுகளை இவர்களுக்கு யாரும் எத்தி வைக்கவில்லையா?  அல்லது அரசுதான் இவ்வாறான சுகாதாரக் கேட்டிற்கு எதிரான விழிப்புணர்வு போதியளவு செய்வதில்லையா? / அல்லது அப்படிச் செய்வது இவர்கள் காதுகளுக்கு எட்டுவதில்லையா ? என்றும் கேட்கத் தோனுது.

இறைவன் நமக்கு அளித்த அருட்கொடைகளில் வாயும், நாக்கும் மிக முக்கியமான உறுப்புகள் / ஆயுதங்கள் இதை நாம் நல்ல விசயங்களுக்கு மட்டும் பயன்படுத்தி நேரான வழியில் நடந்தால் நமக்கும் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும். அதை விடுத்து தீய வழியில் பயன்படுத்தி நாமும் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் தீங்கையும், சுகாதார சீர்கேட்டினையும் உண்டாக்கினால் நாளை மறுமை நாளில் நமது நாக்கு நமக்கு எதிராக சாட்சி சொல்லும் என்று யாவரும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

- Sஹமீது

14 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் .
வழக்கம் போல் அருமையான ஆக்கம் தந்து அதன்மூலம் மெய்ஞானம் விளக்கியவிதம் அருமை. வெற்றி இல்லை சுகாதரவிசயத்தில் என்பதால் இந்த இலை வெற்று இலைதான். ஆனாலும், எச்சிலை வரவழக்கும் இந்த இலை "எச்சி இலை" எனவும் அழைக்கலாமோ? மொத்தத்தில் "துப்பு" கெட்ட இவர்கள் துப்புரவாக இருந்தால் சுற்றமும் சுத்தப்படும். மேலும் தன்னுடைய வாயை தயை பொருந்தி பாதுகாத்தால், தன் நலம் காப்பதுடன் ஊர் நலம் காக்கலாம். இவர்கள் மேல் விழுந்த இந்த அக்கறை அற்றவர்கள் என்கிற கறையை துடைக்க வருவார்களா?
நம்ம ஏ.B. அலுவலகதில சொன்னா(ய்)ங்க.(சிக்ஸர் அடித்திருக்கிறீர் போங்க)

Yasir said...

மற்றுமொரு கலக்கலான ஆக்கம் ....வெற்றிலை எச்சிக்கு இவ்வளவு பவரா ?? ..”வெப்” கேமரா கண்டுபிடிக்கபடுவதற்க்கு பல காலங்களுக்கு முன்னே நம்ம ஆட்கள் வெற்றிலையில் “மை” தடவி காணபோன பொருட்களை கண்டுபிடித்து வெற்றிலையில் லைவ்வும் !!! ? செய்தார்கள் என்று அறிவீனர்கள் சொல்லி கேட்டு இருக்கின்றேன்..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

துப்பு(பவர்களின்)வதை சொல்ல அவர்களை (தூற்று)வதையும் செய்த விதம் அருமை...

அரிக்கும் இடங்களை சொன்னதும் அரிக்கும் இனத்தோடு மின்சார இலாக்கா செய்திருக்கும் ஒப்பந்தமும் அம்பலம் ! :)

ZAKIR HUSSAIN said...

நாய்களின் 'ஒன்னுக்கு" இவ்வளவு பவர் இருக்கா? [ யாருக்காவது நாய்களின் 'ஒன்னுக்கு" P. H. value எத்தனை என தெரியுமா? மனிதர்களுக்கு 6 நார்மல்.

எச்சில் துப்புவதில் எனக்கு தெரிந்து முதலிடம் பெற்றவர்கள் பர்மா சிடிசன் . கல்கத்தா ஹவுரா பாலத்தை மீட்டு எடுக்க பெரிய பட்ஜட் தேவைப்படும். எப்போ இடிஞ்சி விழும் இரும்பை பாதி விலைக்கு போடலாம் என சில அரசியல்வாதிகள் தயாராக இருக்கலாம். ஹைட்ரோ குளோரிக் ஆசிட் ஊத்தி இவனுகளே அழிச்சிடுவானுங்க.

navabar said...

athanal than dubaiyil vetrilai thadai siyapattuullathu

Yasir said...

/athanal than dubaiyil vetrilai thadai siyapattuullathu / ஆமா..புர்ஜ் கலிஃபா அடியிலே துப்பி அது அடியோடு சாஞ்சிடும்ண்டுதான் :)

Adirai Iqbal said...

முஸ்லிம் இஸ்லாம் என்றாலே தீவிரவாதிகள்தான் என்ற என்னத்தை மீடியாக்கள் மக்கள் மனதில் விதைப்பதில் வெற்றிபெற்றுவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும் . முஸ்லிம்களும் அதை நகைச்சுவை உணர்வோடு அட பாரேன் ஒரு முஸ்லிமைத்தான் கைது செய்வார்கள் என்று சொல்லும் அளவிற்கு ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் . நமக்கு எதிரான அவதூறான செய்திகளை பத்திரிகைகள் வெளியிடும்போது மட்டும் அதை பற்றி பேசுகிறோமே அன்றி வேறு வீரியமிக்க போராட்டங்களையோ அல்லது அவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடர்வதோ கிடையாது . முதலில் இந்த நிலையை மாற்ற வேண்டும் . பாதிக்கப்பட்ட நபர் எந்த ஜமாத்தை(பஞ்சாயத்தை) சார்ந்தவரோ அவர்கள் அந்த அவதூறு சேதிகளை வெளியிடும் பத்திரிகை மீது வழக்குத்தொடர வழி வகைகள் செய்ய வேண்டும் .

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

துப்புவதிலும் துப்பறிதல் அருமை.
இவர்களை ஊடகங்கள் 'எச்சில் தீவிரவாதிகள்' என்று பட்டியலிடும்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

வெற்றிலையை போட்டு சிவக்க விடாம வெளுத்து கட்டிட்டியோ ஹமீது காக்கா.

// அட! இந்தியக் குடிமக்களா! நில அரிப்பை தடுத்திட சவுக்கு மரம் வளர்த்திடுங்கள், காடு வளருங்கள் என்று காட்டுக் கத்தலா அரசு கத்துது ஆனால் இந்த வெற்றிலைப் பாக்கு மென்றுத் துப்பும் எச்சிலின் அரிப்பை தடுக்க எதை வளர்க்கச் சொல்றதுன்னு யாராச்சும் யோசனை சொல்லுங்களேன்..!//

காக்கா ஒரே யோசனை .கடைக்கு வர எல்லா வெற்றிலையியுளும் செந்துண்டி இலையை அரைச்சி தடவினால்.மின்கம்பங்கள் அரிப்பை. வாய் அரிப்பின் மூலம் தடுத்திடலாம்.பரிசிலனை செய்யுமா ஹமீது காக்கா அரசாங்கம் ?

Shameed said...

லெ.மு.செ.அபுபக்கர் சொன்னது…
//காக்கா ஒரே யோசனை .கடைக்கு வர எல்லா வெற்றிலையியுளும் செந்துண்டி இலையை அரைச்சி தடவினால்.மின்கம்பங்கள் அரிப்பை. வாய் அரிப்பின் மூலம் தடுத்திடலாம்.பரிசிலனை செய்யுமா ஹமீது காக்கா அரசாங்கம் ? //

ஏற்கனவே அரசு கொடுக்கும் அறிப்பே பெரும் அரிப்பா இருக்குது உதுலே செந்துண்டி வேறா !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பரிசீலனை செய்யுமா ஹமீது காக்கா அரசாங்கம் ?

புது அரசு அறிமுகம்!

மத்திய அரசாங்கம்
மாநில அரசாங்கம்
என்பது போல
ஹமீது காக்கா அரசாங்கம் என்றும் இருக்கா?அபூபக்கரே!

அப்துல்மாலிக் said...

//வெற்றிலையின் பின்புறம் ஒரு வகை பூச்சி இருக்குமாம் அதை வாயில் போட்டு மென்றதும் அது குடல் உள்ளே போய் மயக்கத்தை ஏற்படுத்துமாம்(!!?)" //

இது தெரிந்தும் இத திங்கிறாங்கனா அவுங்களை என்னானு சொல்லுறது, மேலும் நம்ம வாப்புச்சி, உம்மம்மாவெல்லாம் வெத்திலை/பாக்குனாலேதான் சிறிது காலம் உதிரியா உயிர்வாழ்ந்திருக்காங்க. வெத்தலை பாக்கு இடிக்கவென குழவி இருந்த காலம் என்பதால் வெத்திலையின் மதிப்பும் கூடித்தானே இருந்திருக்கு.... போதிய விழிப்புணர்வின்மையே காரணம், அருமை காக்கா

sabeer.abushahruk said...

இந்தப் பதிவை நான் நேருக்கு நேராக கண்கூடாகக் கண்டிருக்கிறேன் கல்கத்தாவில்.

KALAM SHAICK ABDUL KADER said...

துப்பியே தூண்களைத் தூளாய்த் தகர்த்திடும்
துப்பிலார் தூவும் பிழை.

இரும்பி னுறுதியு மில்லாமற் போதல்
விரும்ப வியலா வியப்பு.

எச்சிலும் சுண்ணாம்பும் எப்படி வேலையைக்
கச்சித மாய்ச்செய்தல் காண்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு