அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அன்பானவர்களுக்கு,
இந்த வருடத்திற்கான ஹஜ் புனித யாத்திரை நிறைவடைந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ். உலகெங்குமிருந்து 4 மில்லியன் மக்களுக்கு மேல் இந்த வருடத்திற்கான புனித யாத்திரையை மேற்கொண்டுள்ளார்கள். அல்லாஹ்வின் உதவியால் எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் அனைவரையும் பாதுகாத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
கடல் கடந்து, அரசு மற்றும் தனியார் ஹஜ் சேவை நிறுவனங்கள் மூலமும் உலகின் பல பகுதிகளிலிருந்து புனித மக்கா மதீனாவுக்கு வருடா வருடம் ஏராளமான முஸ்லீம்கள் சென்று வருகிறார்கள். சவுதி அரசாங்கமும் தங்களின் நாட்டிற்கு வருகைத ரும் விருந்தினர்களான ஹஜ் யாத்திரியர்களுக்கு தேவையான அதிகபட்ச வசதிகள் பல செய்துவருகிறது.
மறைமுகமாகவோ நேரடியாகவோ ஏராளமான தன்னார்வளர்கள், இவ்வுலகில் எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ஹஜ் யாத்திரியர்களுக்கு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையுன் செய்த, சவுதி அரேபியாவில் வேலை செய்துவரும் நம் சகோதரர்கள் அனைவரையும் இங்கு மனதார பாராட்டியே ஆகவேண்டும். அல்லாஹ் இச்சகோதரர்களுக்கு நல்லருள் புரிவானாக. நேரம் காலம் பாராமல் இவர்களின் உதவியால் பயனடைந்த ஹஜ் யாத்திரியர்கள் நிச்சயம் அவர்களின் கைமாறாக அந்தச் சகோதரர்களுக்காக துஆ செய்திருப்பார்கள்.
அன்மையில் அதிரை ஹஜ் யாத்திரிகர்களில் கபீர் ஆலிம்சா அவர்களைk காணவில்லை என்றும், மற்றும் மு.மு. முஹம்மது இப்றாஹிம் அவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பtடுள்ளார்கள் என்ற ஒலிச் செய்தியை சகோதரர் ஜாபருல்லாஹ் அவர்கள் நம் சகோதர வலைத்தளம் அதிரை எக்ஸ்பிரஸின் வாயிலாக தெரிவித்திருந்தார்கள். உண்மையில் இச்செய்தியைக் கேள்விபட்ட நம் எல்லோருக்கும் பதற்றமாகவே இருந்தது. அல்லாஹ்வின் உதவியால் காணாமல் போன கபீர் ஆலிம்சா அவர்களைத் தேடி கண்டுபிடிக்கும் வேலையில் நம் அதிரையை சேர்ந்த சகோதரர்கள் செய்த முயற்சியை யாராலும் மறக்க முடியாது.
இதுபோல் அதிரையைச் சேர்ந்த மு.மு. முஹம்மது இப்றாஹிம் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆம்புலன்ஸில் அவர்களை மருத்துவமணைக்குக் கொண்டு சொல்லப்பட்டார்கள், ஆனால் அவர்கள் எந்த மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்காக அதிரைச் சகோதரர்கள் எடுத்த முயற்சியை நிச்சயம் யாராலும் மறக்க முடியாது. முமு. முஹம்மது இப்றாஹிம் அவர்ளுடைய மகளாரும் ஹஜ் பயணம் செய்துள்ளார்கள், தகப்பனாரின் உடல் நலக்குறைவால் பதற்றத்துடன் இருந்த இச்சகோதரிக்கு உதவியாக நம் அதிரை சொந்தம் ஒன்று உதவியாக இருந்து இவர்களின் ஹஜ் கடமையை நிறைவேற்ற உதவியிருந்திருக்கின்றனர் என்ற செய்தியைக் கேட்கும்போது உண்மையில் சிலிர்க்கிறது. ஹாஜிகளுக்காக உதவிகள் செய்தவற்கு என்று அல்லாஹ் இவர்களைப்போன்ற நல்லவர்களை அந்த புனித மண்ணில் வைத்துள்ளான்.
ஹஜ் பயணம் செய்தவர்களுக்கு உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக. இவர்கள் இச்சேவையை அல்லாஹ் அங்கீகரிப்பானாக.
ஏற்கனவே பலமுறை ஹஜ் கடமையை நிறைவு செய்த சிலர் அதிரையிலிருந்து வந்த சகோதரர்கள், தன்னார்வத்துடன் முன் வந்து உள்ளூர்வாசிகள் பெரும்பாலோருக்கு அவர்களின் ஹஜ் கடமையை இனிதே சிறப்பாக சிரமமின்றி நிறைவேற்ற உதவியுள்ளார்கள் என்ற செய்தியை ஹஜ்ஜுக்கு சென்றிருக்கும் உறவினர்களிடமிருந்து அறிய முடிகிறது. இச்சகோதரர்களுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
இது போல் தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளாமல் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி தங்களின் செயல்களால் மறைமுகமாக ஹாஜிகளுக்கு உதவிகள் பல செய்த / செய்துவரும் அனைத்து நல்ல உள்ளங்களையும் நிச்சயம் பாராட்டுவதோடு அல்லாமல். அவர்களுக்காக நாம் எல்லோரும் துஆ செய்வோம் இன்ஷா அல்லாஹ்.
2 Responses So Far:
//ஹஜ் பயணம் செய்தவர்களுக்கு உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக. இவர்கள் இச்சேவையை அல்லாஹ் அங்கீகரிப்பானாக.//ஆமீன்.
இவ்வுலகில் எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல். இவர்கள் இச்சேவையை செய்துவரும் இச்சகோதரர்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக,அங்கீகரிப்பானாக,ஆமீன்.
Post a Comment