Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தமிழகத்தை ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும். 12

அதிரைநிருபர் பதிப்பகம் | November 30, 2011 | , , , ,


ஆட்சி செய்து முடித்த கட்சி ஆளும் கட்சியையும், ஆளும் கட்சி ஆட்சியிழந்த  கட்சியையும் ஒருவருக்கொருவர் குறை சொல்லியே நலத்திட்டங்கள் பல‌ மக்களுக்கு சென்றடையாமல் அவர்களை நட்டாற்றில் நிறுத்தி வேடிக்கைப்பார்த்து வருவது இன்றைய நாட்டு/ஊர் நடப்பாக இருக்கின்றன.

மேற்க‌ண்ட‌ ம‌க்க‌ள் விரோத‌ போக்கும், ஊர் நலனில் வேட்டு வைக்கும் தவறான அணுகுமுறையும் ந‌ம் ஊரில் நட‌ந்தேறிவிட‌க்கூடாது என்ப‌தே ந‌ம் எல்லோரின் எதிர்பார்ப்பும், ஆவ‌லும்.

மனிதர்களின் ந‌ல்ல‌ காரிய‌ங்க‌ளையும், செய‌ல்க‌ளையும் ம‌ன‌தார‌ பாராட்ட‌ ம‌ன‌ம் இற‌ங்கி வ‌ருவ‌தில்லை. குறை சொல்ல‌ ம‌ட்டும் ஏனோ சிம்மாச‌ன‌ம் இட்டு தானே அம‌ர்ந்து கொள்கிற‌து.

க‌ட்சிக‌ள் பேத‌மின்றி, காழ்ப்புண‌ர்ச்சியின்றி ம‌ற்றும் மாற்றான் தாய் வீட்டுப்பிள்ளை போல் பொடுபோக்காக க‌ருதாம‌ல் எங்கெங்கெல்லாம் ம‌க்க‌ளால் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ (கட்சிசார்ந்த, சாராத) த‌லைவ‌ர்கள் உள்ள‌ன‌ரோ அவ‌ர்க‌ளுக்கு தேவையான‌ உத‌விக‌ளை செய்வ‌துடன் அவர்களின் கோரிக்கைக‌ளையும் நிறைவேற்ற‌ ம‌த்திய‌, மாநில‌ அர‌சுக‌ளுக்கு முழு பொறுப்பும், க‌ட‌மையும் உண்டு. அப்பொழுது தான் ந‌ம் இந்தியா உள்நாட்டிலும், உல‌க‌ அர‌ங்கிலும் ஒளிந்து கொள்ளாமல் பிரகாசமாய் ஒளிரும்.

மின் த‌ட்டுப்பாடு ஒரு பிரதான‌ பிர‌ச்சினையாக‌ ந‌ம் நாட்டில் இன்று இருந்து வ‌ருவ‌தால் அத‌ற்கு மிக‌வும் முக்கிய‌த்துவ‌ம் த‌ந்து அதை க‌ளைய‌ முன்வ‌ர‌ வேண்டும். இதில் ந‌ல்ல‌ பெய‌ரை யாரும் த‌ட்டிச்சென்று விடுவாரோ? என்ற‌ அச்ச‌ம் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளுக்கும், அத‌ன் த‌லைவ‌ர்க‌ளுக்கும் தேவையில்லை. க‌ல்வெட்டில் யார் பெய‌ர் இருந்தால் என்ன‌? மின்வெட்டில்லா மாநில‌மாக‌ மாற்றிக்காட்டினால் ந‌ல்ல‌து தானே?

ஊரில் அறிவிக்க‌ப்ப‌ட்டோ அல்ல‌து அறிவிக்க‌ப்ப‌டாம‌லோ எந்நேர‌மும் வ‌ரும் மின்த‌டையும் அதைத்தொட‌ர்ந்து வ‌ரும் கொசுக்க‌டியும் குறைந்த‌ கால‌ விடுமுறையில் ஊர் செல்லும் ந‌ம்மை ஓட‌,ஓட‌ விர‌ட்டி எங்கோ நாடுக‌ட‌த்தி விடுகிற‌து. தாய் நாட்டின் மேல் ஒரு பிடிமான‌ம‌ற்ற‌ த‌ன்மையையும், வெறுப்பையும் த‌ற்காலிக‌மாக‌ ஏற்ப‌டுத்தி விடுகின்ற‌ன‌. என்ன‌ தான் தாய் த‌ன் குழ‌ந்தையை க‌த‌ற‌,க‌த‌ற‌ அடித்தாலும் "உம்மா/அம்மா" என்றே அக்குழ‌ந்தை அடித்த த‌ன் தாயை க‌ட்டித்த‌ழுவ‌ ஓடிச்செல்வ‌து போல் நிற‌ந்த‌ர‌மாக‌ த‌ன் தாய் நாட்டின் மேல் வெறுப்பு வ‌ந்து விடாது ஒரு போதும் ந‌ம‌க்கெல்லாம்.

பெரும்பாலான‌ வீடுக‌ளில் இன்வெட்ட‌ர் (யு.பி.எஸ்) என்னும் மின்சார‌ த‌டையின் பொழுது மின்சாரத்தை சேமித்து உற்ப‌த்தி செய்து த‌ரும் க‌ருவி பொருத்த‌ப்ப‌ட்டுள்ள‌தால் எந்நேரமும் நிலவி வரும் மின்த‌டை ப‌ற்றி யாருக்கும் அக்க‌றையும், க‌வ‌லையும் மற்றும் ம‌க்க‌ளின் அல்ல‌ல்க‌ளை அர‌சின் க‌வ‌னத்திற்கு ஜ‌ன‌நாய‌க‌ முறையில் கொண்டு வர‌ அவ‌ர‌வ‌ர் உள்ள‌த்தில் உருவாகி வெளியாகும் முய‌ற்சிக‌ள் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை. ஏதேதோ கார‌ண‌ங்க‌ள் சொல்லி ந‌ம் விவேக‌மான‌ முய‌ற்சிக‌ள் அவ்வ‌ப்பொழுது ம‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌டுவ‌து ஏனோ உண்மை.

வ‌ரும் கால‌ங்க‌ளில் வ‌ர‌க்கூடிய‌ தேர்த‌ல் அறிக்கையில் "வீடுக‌ளுக்கு இல‌வ‌ச‌ இன்வெட்ட‌ர் (யு.பி.எஸ்) க‌ருவி பொருத்த‌ப்ப‌டும்" என்று சொல்லும் க‌ட்சி அமோக‌ வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பில் அம‌ர்ந்தாலும் ஆச்ச‌ரிய‌ப்ப‌டுவ‌த‌ற்கில்லை.

மத்திய அரசு ப‌தினான்காயிர‌ம் கோடி செல‌வ‌ழிக்கும் வ‌ரை ப‌ல்லிளித்துக்கொண்டிருந்த‌ ம‌க்க‌ளும், அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளும் இன்று கூட‌ங்குள‌ம் அணுமின் உற்ப‌த்தி தொட‌ங்க‌ இருக்கும் இறுதி க‌ட்ட‌ நேர‌த்தில் வ‌ரிந்து க‌ட்டிக்கொண்டு அந்த‌ அணுமின் நிலைய‌த்தை மூட‌ க‌ள‌த்தில் குதித்திருப்ப‌து வேத‌னையான‌ வேடிக்கைய‌ன்றி வேறொன்றும் சொல்வ‌த‌ற்கில்லை.

மத்திய, மாநில அரசுகள் ஆங்காங்கே மக்களின் புகார்களுக்கென்று ஒரு தனித்துறை உருவாக்கப்பட்டு அது முழு அதிகாரத்துடன்/கட்டளையுடன் அரசியல் கலக்காமல் உடனுக்குடன் செயல்பட தனித்துவம் வாய்ந்த துறையாக எவ்வித தயக்கமும் இன்றி செயல்பட ஆவண செய்தாலே அன்றாடம் வரும் மக்கள் குறைகளையும், பிரச்சினைகளையும் தீர்க்க/போக்க முடியும் என்பதே என் ஆணித்தரமான கருத்து.

நமதூரில் ஆள்ந்த கட்சியும், ஆளும் கட்சியும் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பொறுப்பில் இருப்பதால் ஒருவருக்கொருவர் எதிரும், புதிருமாக இருந்து கொள்ளாமல் நல்ல‌ புரிந்துணர்வு ஏற்பட்டு மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் எவ்வித தடையுமின்றி நம் ஊருக்கு கொண்டு வந்து சேர்ப்பார்களேயானால் நம் ஊர் தமிழகத்திற்கு மட்டுமல்ல நம் நாட்டிற்கே ஒரு நல்ல முன்மாதிரியாக எல்லோராலும் நல்ல முறையில் எடுத்து பேசப்படும். இந்த அரிய வாய்ப்பை நம் ஊர் பயன்படுத்திக்கொள்ளுமா? அல்லது இந்த அரிய‌ வாய்ப்பை கொல்லுமா? என்பது போகப்போக தெரிய வரும்.

ந‌ல்ல‌வைக‌ளுக்காக நாட்கள் சில காத்திருப்பதால் ந‌ம‌க்கொன்றும் ந‌ட்ட‌ம் இல்லை தானே?

- மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

12 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//க‌ல்வெட்டில் யார் பெய‌ர் இருந்தால் என்ன‌? மின்வெட்டில்லா மாநில‌மாக‌ மாற்றிக்காட்டினால் ந‌ல்ல‌து தானே?//

MSM(n): ஊரிலிருந்து கொசுக்களால் துரத்தப்பட்ட உங்களின் சட்டு புட்டுன்னு இந்த ஆக்கம் நெத்தி பொட்டுலேயே வைக்கிறது குட்டு !

இந்த கொசு ஜெயிச்சவங்களையும் தோத்தவங்களையும் கடிக்காதாமா ? தேடித் தேடி வந்து கடிச்சிருக்கே... !

ஒரு விஷயம் தெரியுமா ? ஒரு தொலைக்காட்சி தொடர் தயாரிக்கும் நிறுவனம் வைத்திருக்கும் கோரிக்கை !! "எங்கள் சீரியல் வரும் நேரங்களில் மின்சார்ம் தொடர்ந்திட ஆவன செய்ய வேண்டும்" அதுவே ! அதுவும் தஞ்சை மாவட்டத்தைச் சுற்றி வரும் கதை சீரியலாம் அது !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அதிரையை கண்டு சென்றவுடன் ஆளும்முறைக்குரிய நல்ல ஆதங்கம்.
நிச்சயம் சேர்மன் ஒன்றுபட தயாராகவே இருப்பார்.இதற்கு துணைதலைவர் பொறுப்பிலுள்ள கட்சி மனம் வைத்தால் நிச்சயம் நடக்கும்.நாயன் நல்லெணத்தை அவர்களுக்கு வழங்கி அதிரைக்கு நல்ல நசீபை தந்தருள்வானாக ஆமீன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//வ‌ரும் கால‌ங்க‌ளில் வ‌ர‌க்கூடிய‌ தேர்த‌ல் அறிக்கையில் "வீடுக‌ளுக்கு இல‌வ‌ச‌ இன்வெட்ட‌ர் (யு.பி.எஸ்) க‌ருவி பொருத்த‌ப்ப‌டும்" என்று சொல்லும் க‌ட்சி அமோக‌ வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பில் அம‌ர்ந்தாலும் ஆச்ச‌ரிய‌ப்ப‌டுவ‌த‌ற்கில்லை.//

இலவச ஜெனெரேட்டர், இலவச டீசல் தருவோம் என்று வாக்குறுதியை அள்ளி வீசினாலும் வீசுவார்கள்...

நல்ல அலசல் சகோ. நெய்னா முஹம்மது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ஊரில் அறிவிக்க‌ப்ப‌ட்டோ அல்ல‌து அறிவிக்க‌ப்ப‌டாம‌லோ எந்நேர‌மும் வ‌ரும் மின்த‌டையும் அதைத்தொட‌ர்ந்து வ‌ரும் கொசுக்க‌டியும் குறைந்த‌ கால‌ விடுமுறையில் ஊர் செல்லும் ந‌ம்மை ஓட‌,ஓட‌ விர‌ட்டி எங்கோ நாடுக‌ட‌த்தி விடுகிற‌து.//

இதோ இங்கே http://adirainirubar.blogspot.com/2011/11/blog-post_03.html கொசுவை பேட்டி எடுத்து போட்டியல்லெ அதனால தான் ஓட ஒட விரட்டி நாடுகடத்திவிட்டது உங்களை..

ZAKIR HUSSAIN said...

//ஒரு விஷயம் தெரியுமா ? ஒரு தொலைக்காட்சி தொடர் தயாரிக்கும் நிறுவனம் வைத்திருக்கும் கோரிக்கை !! "எங்கள் சீரியல் வரும் நேரங்களில் மின்சார்ம் தொடர்ந்திட ஆவன செய்ய வேண்டும்" அதுவே ! அதுவும் தஞ்சை மாவட்டத்தைச் சுற்றி வரும் கதை சீரியலாம் அது ! //

நீங்கள் சொல்வது "நாதஸ்வரம்' சீரியல் என நினைக்கிறேன்

டைரக்டர் திறமையான ஆளாக இருந்தால் கதையின் லொகேசனை "மன்னார்குடி"க்கு மாற்றிவிடுவார்....பிறகென்ன தடையில்லா மின்சாரம்தான்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
நெய்னா சொன்னது :
// வ‌ரும் கால‌ங்க‌ளில் வ‌ர‌க்கூடிய‌ தேர்த‌ல் அறிக்கையில் "வீடுக‌ளுக்கு இல‌வ‌ச‌ இன்வெட்ட‌ர் (யு.பி.எஸ்) க‌ருவி பொருத்த‌ப்ப‌டும்" என்று சொல்லும் க‌ட்சி அமோக‌ வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பில் அம‌ர்ந்தாலும் ஆச்ச‌ரிய‌ப்ப‌டுவ‌த‌ற்கில்லை.//

ஊரில் கொசு கடி தாங்க முடியாமல்.கொழும்பில் அமைதியான ஒரு மூலையில் இருந்து யோசனை செய்து விட்டு.அரேபியாவின் பாலைவன பகுதிக்கு போய் அரசியல் வாதிகளுக்கு ஊசி ஏத்துவது நியாயமா நெய்னா ?

இவங்க வீடுக‌ளுக்கு இல‌வ‌ச‌ இன்வெட்ட‌ர் (யு.பி.எஸ்) கருவிகள் பொருத்தினால் அதிரையில் ஒரு டீ யின் விலை 15 .ரூபாய்க்கு
குடிக்க கூடிய நிலைமைக்கு பவரான சாக் கொடுத்திடுவாங்க

Anonymous said...

நீங்கள் நினைக்கிற மாதிரியல்லாம் இல‌வ‌ச‌ இன்வெட்ட‌ர் (யு.பி.எஸ்), ஜெனெரேட்டர், எல்லாம் கிடைக்காது.கனவில் கூட காண்பதற்கு அரிது. பாவம்
நெய்னாவை கொசுவு பாடா படுத்தியிருச்சி போல தெறுகிறது.எவ்வளவு கஸ்ட்டபட்டார் என்பது தெரியவில்லை ? மின்சாரம் பிரச்சினை பற்றி யாரும் கேட்பார்
இல்லை. பே.தலைவரும்,துணை.தலைவரும் இரண்டு பேரும் சேர்ந்து இதற்கு ஒரு முடிவு எடுத்தால் தான் அதிரை நகருக்கு மின்சாரம் தட்டுபாட்டை குறைக்க முடியும்.அதிரை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்து இருப்பார்கள். இருந்தாலும் இரண்டு தலைவர்களும் ஒன்று கூடி ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

மு.செ.மு.அபூபக்கர்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோ. நெய்னா முஹம்மது,

எப்போது கரண்டை பேட்டி எடுக்க போறிய?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கதையின் லொகேசனை "மன்னார்குடி"க்கு மாற்றிவிடுவார்....//

நடந்தாலும் நடக்கலாம்... அடுத்த ஐந்தாண்டுகள் வரை ! :)

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"இத்தனை சிரத்தை எடுத்து வென்று பேரூராட்சி தலைவர் பதவியை தக்கவைத்துக்கொண்டும் நாம் ஆளும் கட்சி இல்லாமல் போய் விட்டோமே என்ற ஆதங்கம் நமதூர் பேரூராட்சி தலைவருக்கும், நாம் ஆளும் கட்சியாக இருந்தும் பேரூராட்சி தலைவராக இல்லாமல் நாம் துணைத்தலைவராக மட்டுமே இருக்கிறோமே என்ற நெருடல் துணைத்தலைவருக்கும் ஒரு போதும் வந்து விட வேண்டாம்"

உங்கள் ஒருவருக்கொருவர் இருந்து வரும் தயக்கங்களெல்லாம் வியக்கும் வண்ணம் ஊருக்கான உங்களின் எதிர்கால செயல்பாடுகள் அமைந்திடல் வேண்டும்.

ஆங்காங்கே ம‌லையாய் குவியும் குப்பைக‌ளும், அதை உட‌னுக்குட‌ன் அப்புற‌ப்ப‌டுத்த‌ எடுக்கும் உங்க‌ளின் ஒருங்கிணைந்த‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளுமே இன்றைய‌ அதிரையின் அத்தியாவ‌சிய‌த்தேவைக‌ளாகும்.

அவ‌ர‌வ‌ருக்கு கிடைத்த‌ ந‌ல்ல‌ வாய்ப்பை ப‌ய‌ன்ப‌டுத்தி ந‌ம‌தூருக்கு ந‌ல்ல‌வை ப‌ல‌ கொண்டு வ‌ந்து சேர்க்க‌ வேண்டும் என்ப‌தே ந‌ம் அனைவ‌ரின் எதிர்பார்ப்பும், ஆசையும்.

"அவ‌ர‌வ‌ர் ம‌த‌ங்க‌ளை ம‌திப்போம்; ம‌னித‌ நேய‌ம் காப்போம்" என்ற‌ பிர‌மாண‌த்துட‌ன் என் க‌ருத்தை நிறைவு செய்கிறேன்.

என் மேற்க‌ண்ட‌ க‌ட்டுரைக்கு க‌ருத்திட்ட‌ அன்ப‌ர்கள் மற்றும் ந‌ண்ப‌ர்கள் அனைவருக்கும் என் ந‌ன்றிக‌ள்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

அபூபக்கர்-அமேஜான் said...

மரண அறிவிப்பு

கீழத் தெருவை சேர்ந்த அன்சாரி (லெப்பை) இன்று காலை காலமாகிவிட்டார்கள் அன்னாரின் நல்லடக்கம் இன்று அசருக்கு பின் மேலத்தெரு ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.இன்னானில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

மு.செ.மு.அபூபக்கர்

Anonymous said...

மின்சாரம் இல்லையா? புகார் கொடுங்க! ரூ.50 பெறுங்கள்!
மின்சாரம் தடைபடும் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும், 50 ரூபாய் வீதம் நுகர்வோருக்கு, மின் வாரியம் நிவாரணம் தர வேண்டும்,'' என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மின் நுகர்வோருக்கான உரிமைகள் மற்றும் நுகர்வோரின் குறை தீர்ப்புக்கான காலக்கெடு குறித்த, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு விவரம்: மின் நுகர்வோர், தங்களது குறைகள் தொடர்பான அனைத்து முறையீடுகளையும், மின் பகிர்மான கழகத்தின் பிரிவு அலுவலகங்களில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ தரலாம். பிரிவு அலுவலர்கள் அல்லது அவர்களால் அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்கள், மனுக்களை பெற்று, எழுத்து மூலம் ஒப்புகை தர வேண்டும். இதற்காக, பிரிவு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும், பதிவேடு பராமரிக்க வேண்டும். இணைப்பை இடமாற்றுதல், மின்சார தடை, பெயர் மாற்றம், கட்டணப் பிரிவு மாற்றம், கட்டணப் பிரச்னை, தற்காலிக இணைப்பு, வோல்டேஜ் பிரச்னை, வைப்பு நிதி திரும்பப் பெறுதல் மற்றும் அனைத்து வகை மின் நுகர்வு பிரச்னைகளுக்கு மனுக்கள் தரலாம்.

நிவர்த்தி செய்வதற்கான காலக்கெடு: நீட்டிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணி இல்லாத குறை: தாழ்வழுத்தம் 30 நாட்களில், உயரழுத்தம் 60 நாட்கள்; டிரான்ஸ்பார்மர் அல்லாத நீட்டிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணி: தாழ்வழுத்தம் 90 நாட்கள், உயரழுத்தம் 120 நாட்கள்; டிரான்ஸ்பார்மருடன் கூடிய நீட்டிப்பு, மேம்பாட்டு பணி: தாழ்வழுத்தம் 90 நாட்கள், உயரழுத்தம் 180 நாட்கள். மீட்டர் அல்லது இணைப்பு இடமாற்றம்: 25 நாட்கள்; மின்தடம் மாற்றுதல்: 60 நாட்கள்; டிரான்ஸ்பார்மர் இடமாற்றம்: 90 நாட்கள்; மீட்டர் புதுப்பித்தல்: 30 நாட்கள்; கட்டண வகை மாற்றம்: 7 நாட்கள்; பெயர் மாற்றம்: 7 நாட்கள்; கட்டண கணக்கு பிழை திருத்தம்: பணம் செலுத்தும் இறுதி நாட்களுக்குள், குறைகளை தீர்க்க வேண்டும். இவ்வாறு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மின்வெட்டுக்கு நிவாரணம்: மேலும், அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்தடை பிரச்னைகளை தீர்க்க, மணிக்கணக்கில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட கெடுக்குள் குறைகளை தீர்க்கத் தவறினால், மின்வாரியத்தில் இருந்து, நுகர்வோருக்கு நிவாரணம் தர வேண்டும். பிரிவு அலுவலகங்கள், குறைகளை தீர்க்க தவறும்போதும், நிவாரணத்திலும் திருப்தி அடையாத நுகர்வோர், அந்தந்த பகுதி மின் வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் உள்ள குறைதீர்ப்பு மையத்தில் முறையிடலாம். இந்த மையங்கள் குறித்து அலுவலக முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் (இ-மெயில்) உள்ளிட்ட விவரங்களை, மின்வாரிய இணையதளத்தில் வெளியிட வேண்டும். குறை தீர்ப்பகத்தின் உத்தரவை மேல்முறையீடு செய்ய விரும்புவோர், சென்னை எழும்பூரில் உள்ள, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் குறை தீர்ப்பாயத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மு.செ.மு.அபூபக்கர்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு