Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை பேரூராட்சியின் துணைத் தலைவருக்கு - திறந்த மடல் ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | November 11, 2011 | , , ,

ஒரு திறந்த மடல்!

அதிராம்பட்டினம் பேரூராட்சியின் துணைத் தலைவர் பிச்சை அவர்களுக்கு:

நமதூர் பேரூராட்சியின் உறுப்பினர் மற்றும் தலைவர்கள் தேர்தல்கள் பல இழுபறிகளுக்கும் போட்டிகளுக்கும் இடையில் அண்மையில் நடந்து முடிந்து, மக்களின் தீர்ப்பாக முடிவுகள் அறிவிக்கப்பட்டுச் செயல்படத் தொடங்கியுள்ளீர்கள்.  முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அதிராம்பட்டினத்தில் பேரூராட்சித் தலைவர் முஸ்லிமாக இருந்தால், துணைத் தலைவர் முஸ்லிமல்லாதவராக இருக்கவேண்டும் என்பது, மத நல்லிணக்கத்தை விரும்பும் பொதுமக்களின் பொதுவான கருத்தாகும்.

நான் பொருளாளராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டுவரும் சம்சுல் இஸ்லாம் சங்கமும் இதனைத்தான் விரும்புகின்றது என்பதற்கு, எங்களின் பல அமர்வுகளின்போது சங்கத் தலைவரிடமிருந்து பரிந்துரையாக வெளிப்பட்ட கருத்தும் இதுவே.  நாங்கள் இதே கருத்தில் இருப்பதால்தான் உங்களைத் தெரிவு செய்வதில் ஒத்துழைப்பளித்தோம் என்பதை நீங்கள் புரிந்திருக்கலாம்.

நமதூரின் வலைத்தளங்களுள் ஒன்றான அதிரை பிபிசி உங்கள் தேர்வைத் தொடர்ந்து இவ்வாறு மகிழ்ச்சியுடன் குரிப்பிட்டிருந்ததது:  "நம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பேரூராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலில் மத நல்லிணக்கம் வென்றுவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் சங்கத்தை எதிர்த்தவர்கள் தோற்க்கடிக்கப்பட்டுவிட்டார்கள். இது சங்கங்களுக்கு கிடைத்த வெற்றி… "

துணைத் தலைவராகிய நீங்கள் தமிழகத்தின் ஆளும் கட்சியையும், தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் தமிழகத்தின் முன்னாள் ஆளும் கட்சியையும் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.  ஆனால், ஊர் நலம் என்று வரும்போது, இருவரும் இணைந்து செயல்படுவதே அறிவுடைமையாகும்.  அதை விடுத்து, ‘விட்டேனா பார்!’ எனும் போட்டி மனப்பான்மையைக் கையில் எடுத்துக்கொண்டு அதிரை வலைத்தளங்களுக்குப் பேட்டியளிப்பதும் பேசுவதும் நமதூரின் பாரம்பரியமான ஒற்றுமைக்குக் குந்தகம் விளைப்பதாகும் என்பதை நீங்கள் நான் கூறித் தெரிய வேண்டியதில்லை. 

மக்கள் அளித்த தீர்ப்பைத் தாங்க முடியாமல், வெற்றி பெற்றவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு உங்கள் கட்சியில் தஞ்சம் புகுந்துகொண்ட சிலர் உங்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்துகின்றார்களோ என்ற ஐயமும் எமக்கு ஏற்படுகின்றது.  எது எப்படி இருந்தாலும், நமதூரின் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இந்தத் திறந்த மடலின் நோக்கம்.

பேரூராட்சித் தலைவர் தமிழகத்தின் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராக இருப்பதால், துணைத்தலைவர் ஆளும் கட்சிக்காரராக இருப்பது, உள்ளூர்த் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அரசின் ஒத்துழைப்பைப் பெற உதவியாக இருக்கும் என்ற நற்சிந்தனையாலும், பொதுநல நோக்காலும்தான் உங்களைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க நடுநிலையாளர்கள் பாடுபட்டனர் என்பதை மறந்துவிடாதீர்கள்!  பேரூராட்சித் தலைவருடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நீங்கள், ‘வைத்தேன், எடுத்தேன்’ என்று பேட்டிகளும் விமரிசனங்களும் கொடுப்பது அறிவுடைமையாகாது.

பொறுப்புகளும் பதவிகளும் வரலாம், போகலாம்.  ஆனால், மனிதம் பேணப்பட வேண்டும்.  மத நல்லிணக்கம் நிலவ வேண்டும்.  அதிராம்பட்டினம் அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும் என்பதே எமது விருப்பம்.

அதற்கு வல்ல இறைவன் துணை நிற்பானாக!

- அதிரை அஹ்மது

6 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஏனுங்க, பே.து.த.பிச்சை அவர்களே !

தோற்றதும் இருந்த பக்குவம் அடுத்த வெற்றியான பே.து.த.கிடத்த பின்னர் இல்லாமல் போச்சே ?

அப்படின்னா பின்னால்தான் அல்லது தனியாகத்தான் ஓடுவீங்களா ? ஏன் முன்னாலிருவருக்கு ஒத்துழைப்பாக உங்களின் ஒட்டத்தையும் நடையையும் அமைத்துக் கொள்ளுங்களேன்... அதையும் மீறி அத்துமீறல்கள் என்று வரும்பட்சத்தில் பேருராட்சி மன்றத்தில் உறுப்பினர்கள் கூட்டம் என்று ஒன்று உள்ளதே அங்கே உரைத்திடுங்களேன்.

நீயா / நானா ? என்ற தலைப்பில் எங்களையெல்லாம் மாறி மாறி ஒரு தொடர் எழுத வச்சுடாதீங்க எங்களுக்கும் சொந்த வேலைகள் கொஞ்சம் இருக்குங்க.

தலலவர் மற்றும் துணைத்தலவர்கள் நினைவில் வைத்துக் கொள்ளவும், உங்களைப் போன்றோரின் பரபரப்பு அல்லது மாற்றி மாற்றி தூற்றல் எத்தனை நாட்களுக்கு அதனையும் புறந்தல்ல எங்களுக்கு எவ்வளவு நாட்களாகும் !!!?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மிகத்தெளிவான அறிவுரை.

எந்தப்பொறுப்பும் இல்லாத பதவிதான் இது என்று சொன்ன நீங்கள் இப்போது பேட்டிகளைப்பார்க்கும் போது தலைமைக்கும் மிஞ்சின பேச்சாகத்தான் தெரிகிறது.சேர்மனின் (திமுக வினரல்ல) தனிப்பட்ட ஆதரவாளர்களும் துணைச் சேர்மனாக நீங்கள் வருவதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவர்கள்.ஆனால் விளைவு தலைகீழாக தெரிகிறதே.
இப்போதைக்கு திட்டங்கள் தலைமையில் ஆளும் காங்கிரசிடமிருந்து வந்ததா மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க.விடமிருந்து வந்ததா அல்லது உள்ளாட்சியாளரின் முயற்சியால் வந்ததா என்பதையெல்லாம் பிரித்து பேசாமல் ஊருக்கு எப்படியோ வருகிறதா என்பதை மட்டும் பார்ப்பதே நன்மை தரும்.
50% காலம் கடந்து தலைவரால் பிரயோஜனமில்லை என்றால் அப்போது எதிர்கணைகளோடு தீவிர எதிர்ப்பில் இறங்கலாமே.
முளைக்கும் போது கிள்ளுவது நாகரீகமல்ல!

அபூ சுஹைமா said...

தேவையான நேரத்தில் அவசியமான கருத்துகள்.

தேர்தலுக்கு முன்புவரை சேர்மன் அஸ்லம் திமுகவைச் சார்ந்தவர் கிடையாது. அவர் முதன் முதலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடவே சீட் கேட்டார். பின்னர் அதிமுகவின் சார்பில் போட்டியிட சீட் கேட்டார். இந்த இரு கட்சிகளிலும் கிடைக்காமல் போகவே, திமுக அவருக்கு வாய்ப்பளித்தது. திமுகவின் பலத்தால் மட்டுமே அஸ்லம் வெற்றி பெறவில்லை என்பதை சகோ. அஸ்லத்தின் ஆதரவாளர்களும் திமுகவின் எதிர்ப்பாளர்களும் நன்றாகவே அறிவார்கள்.

ஆனாலும் திமுகவின் மீதுள்ள அரசியல் பகையாலும் சகோ. அஸ்லத்தின் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளாலும் சிலர், அவர் பொறுப்பேற்று ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், அவர் மீது தாக்குதலைத் தொடங்கிவிட்டனர்.

தலைவரும் துணைத் தலைவரும் இணைந்து செயல்படும் வாய்ப்புகள் அதிகமாகத் தென்பட்ட நிலையில் சில புல்லுருவிகள் இடையில் புகுந்து அரசியல் செய்கின்றனரோ எனத் தோன்றுகிறது.

ஊரின் நன்மைக்காக என்று சொல்லிக் கொள்ளும் ஊடகங்கள் இத்தகைய புல்லுருவிகளுக்குத் துணை போகாமல், தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு இடையே இணக்கமான சூழல் நிலவ முயல வேண்டும்

நமதூருக்கான தற்போதைய தேவை ஊரின் வளர்ச்சியே அன்றி, மமக அல்லது திமுக அல்லது அதிமுகவின் வளர்ச்சி அன்று என்பதை ஊடகவியலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அப்துல்மாலிக் said...

தெளிவான மடல், ஒற்றுமையையும் ஊரின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டே தாங்கள் துனை தலைவராக வரவேண்டும் என்ற பெரும்பாலான அதிரைவாசிகளின் விருப்பமாக இருந்தது, அதற்கு மதிப்பளிக்க வேண்டும், தாங்களை நம்பியவர்களை கைவிட வேண்டாம், ஒன்று பட்டு செயல்பட்டால் பல நல்ல திட்டங்கள் வீடு(ஊரு) வந்துசேரும்

sabeer.abushahruk said...

... அந்த இரண்டில் ஒன்று சிறியத்ன்றால் எந்த வண்டி ஓடும்?

//நமதூருக்கான தற்போதைய தேவை ஊரின் வளர்ச்சியே அன்றி, மமக அல்லது திமுக அல்லது அதிமுகவின் வளர்ச்சி அன்று என்பதை ஊடகவியலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.//

கண்டிப்பாக!

Anonymous said...

சுய அறிமுகமில்லாத பெயர்களின் வரும் பின்னூட்டங்களை நீக்கம் செய்யப்படும் அதோடு எவ்வித பதில் அளிப்பதில்லை என்ற நிலைபாட்டில் இருக்கும் அதிரைநிருபர், வெள்ளை ரோஜா என்ற பெயரில் வைத்திருக்கும் விமர்சன பின்னூட்டம் தற்காலிகமாக ஸ்பேம் பெட்டிக்குள் அனுப்பி வைக்கப்படுகிறது.

சகோதரர் / சகோதரி அவர்களின் சுய அறிமுகத்தை editor@adirainirubar.in / comments@adirainirubar.in என்ற மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்தினால் பரிசீலனைக்கு பின்னர் தங்களின் பின்னுட்டத்தினை கருத்துப் பகுதிக்குள் அனுமதிக்கப்படும்.

தயை கூர்ந்து வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை அழகிய முறையிலும், நளினமாகவும் அதே நேரத்தில் நேர்மையாகவும் கையாளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

இப்படிக்கு,

நெறியாளார்
www.adirainirubar.in

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு