உலகத்திலேயே
உயர்ந்த கட்டிடங்களுக்கெல்லாம்
உச்சமாக
உலோகத்திலேயே
உருக்கி வார்த்த
விருட்சமாக
உருகிக் கூரான
பனிமலையின் முகட்டைப் போல
அதிகாலை வெயிலில்
மேற்பாதி மட்டும்
பிரகாசிக்கும்
பனிச்சிகரம்போல
மழை பொழிவில்லாத
விண்ணுக்கெதிராய்
மண் பிடிக்கும்
வாளைப் போல
பூமிக்கு மேல்
கட்டி முடித்தது போலல்லாமல்
பூமியே
பெற்று எடுத்தது போல
தூரப் பார்வைக்கு
வானத் திரையில்
வரைந்து வைத்ததுபோல
கிட்டப் பார்வையிலோ
கட்டடம் முழுதும்
காட்சிக்குள் அடங்காத
கானகம்போல
வேர்விட்டு வளர்ந்த
நீர்குடிக்கும் மரம்போல
கூராய் நிற்கிறது
சாமான்யக் கட்டிடங்களின்
சராசரி உயரங்களைப்
பறந்து கடக்கும்
குருவி யொன்று
எத்தனை பறந்தும்
மொட்டை மாடியை
எட்ட முடியாததால்
பயணக் களைப்பில்
நின்று விட்டது
நூராவது மாடியில்
பறப்பதற்கு
இறக்கைகள் இல்லா மனிதன்
இறப்பதற்குள்
பறக்க விழைந்தே
படிப்படியாகவோ
மின் தூக்கி வழியாகவோ
மேலே பறக்கிறான்
எத்தனை உயரம்
பறக்க முயன்றாலும்
எந்தெந்த சிகரங்கள்
எட்ட முனைந்தாலும்
வா வென்று
வரவேற்க
வாய்ப்பதென்னவோ
பூமிக்குள் கட்டி வைக்கும்
செவ்வக அறைதான்.
- சபீர்
உயர்ந்த கட்டிடங்களுக்கெல்லாம்
உச்சமாக
உலோகத்திலேயே
உருக்கி வார்த்த
விருட்சமாக
உருகிக் கூரான
பனிமலையின் முகட்டைப் போல
அதிகாலை வெயிலில்
மேற்பாதி மட்டும்
பிரகாசிக்கும்
பனிச்சிகரம்போல
மழை பொழிவில்லாத
விண்ணுக்கெதிராய்
மண் பிடிக்கும்
வாளைப் போல
பூமிக்கு மேல்
கட்டி முடித்தது போலல்லாமல்
பூமியே
பெற்று எடுத்தது போல
தூரப் பார்வைக்கு
வானத் திரையில்
வரைந்து வைத்ததுபோல
கிட்டப் பார்வையிலோ
கட்டடம் முழுதும்
காட்சிக்குள் அடங்காத
கானகம்போல
வேர்விட்டு வளர்ந்த
நீர்குடிக்கும் மரம்போல
கூராய் நிற்கிறது
சாமான்யக் கட்டிடங்களின்
சராசரி உயரங்களைப்
பறந்து கடக்கும்
குருவி யொன்று
எத்தனை பறந்தும்
மொட்டை மாடியை
எட்ட முடியாததால்
பயணக் களைப்பில்
நின்று விட்டது
நூராவது மாடியில்
பறப்பதற்கு
இறக்கைகள் இல்லா மனிதன்
இறப்பதற்குள்
பறக்க விழைந்தே
படிப்படியாகவோ
மின் தூக்கி வழியாகவோ
மேலே பறக்கிறான்
எத்தனை உயரம்
பறக்க முயன்றாலும்
எந்தெந்த சிகரங்கள்
எட்ட முனைந்தாலும்
வா வென்று
வரவேற்க
வாய்ப்பதென்னவோ
பூமிக்குள் கட்டி வைக்கும்
செவ்வக அறைதான்.
- சபீர்
33 Responses So Far:
டவரைவிட உயர்ந்து நிற்கும் வரிகள் !
மேகக் கூட்டத்தில் சிக்கிய கட்டிடங்கள் யூ.எ.இ.நேஷ்னல் டேக்கு அணிவகுப்பது போலும் உள்ளது !
எவ்வ்வ்வ்வ்வ்ளோ தூரம் உயரே சென்றாலும் !
//வா வென்று
வரவேற்க
வாய்ப்பதென்னவோ
பூமிக்குள் கட்டி வைக்கும்
செவ்வக அறைதான்.//
இதுதான் பேஸ்மெண்ட்டே !
யாரோ
கதவைத் தட்டியிருக்க வேண்டும்...
எல்லா
டவர்களும்
மேகப் போர்வை விளக்கி
எட்டிப் பார்க்கின்றனவே!
//வாய்ப்பதென்னவோ
பூமிக்குள் கட்டி வைக்கும்
செவ்வக அறைதான்.//
அருமையான வரிகள்
வரிகளுகேர்ப்ப ஒரு பேஸ்மெண்ட் போட்டோ அனுப்பி உள்ளேன் பதிங்களேன்
அடுக்குமாடியா
மையவாடியா
நிற்கும்வரைத்தான்
அவர் இவர் டவர்
படுத்துவிட்டால்...
கபுர் கபுர் கபுர்
ஹமீது,
உள்ளே
சந்துத் தகராறோ
வார்டு பாகுப்பாடோ
வராதுதானே?
சரி இன்று மதியம், எனது கம்பெனிக்கும் வந்திருக்கும் ஒரு கெஸ்ட்டை அழைத்துக் கொண்டு பர்ஜ்கலிஃபா பக்கம் போகலாம் என்றிருந்தபோது எதிர்பாராமல் சர்ப்ரைஸ்ஸாக என்றோ துபாயில் சந்தித்த பள்ளிக் கால நண்பன் ஒருவனிடமிருந்து ஃபோன்.
உன்னைப் பார்க்கனும் என்றான் அதனால் பர்ஜ்கலிஃபா டவருக்குச் செல்லும் ப்ளேன் அப்படியே அடுத்த நாளைக்கு தள்ளிப்போட்டுட்டு நண்பனைச் சந்திக்கச் சென்றேன்...
மாற்றங்கள்... ஏராளம் புது மாற்றங்களும் / ஏமாற்றங்களும் என்று பேசினோம் பேசினோம்... (புதுசா எழுதனுமே !?)
இருந்தாலும் நட்புன்னு வந்தாலே ஏனுங்க ! இப்படி உருகிவிடுகிறோம் ! அதிலும் கசப்புன்னு ஒன்னு சேர்ந்தால் சுவற்றில் அடித்த பந்தாக கண்டதும் ஒலிந்தும் போகிறோமே ! அந்தக் கசப்பை விழுங்க முடியாதா ?
என்னமோ தெரியலை இப்படி எழுதனும்னு தோனுச்சு !
அன்பளிப்புகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள் அது உங்களுக்கிடையே நெருக்கத்தை வளர்க்கும் - என்பது நபிமொழி... !
நல்ல நட்பே ஒரு அன்பளிப்புதான் அபு இபுறாகீம்,
அடுத்ததாக, நல்ல நட்பின் அடையாளமாக புத்தகங்கள் பரிசளிக்கலாம்.
காதிர் முஹைதீன் பள்ளியின் மாண்புடை மாணவர்களில் ஒருவரான தம்பி யாசிர்,
உங்களுக்கு ஒரு 10 மார்க் கேள்வி ஒன்று. 15 வர்களுக்குள் இந்த டவரைப் பற்றி குறிப்புகள் தாருங்களேன்.
உங்க ஊரு டவர் புகழ் ரொம்ப சூப்பரு! வாழ்க!(டிசம்பர் 2-ல் விருது கிடைக்குமோ.பாவம் ஆனால் அது வெள்ளியன்று வருகிறதே!) அப்பரம் நாங்கள் நம்மூரில் அரசியல் பண்ணுற மாதிரி அதுவும் நமக்குள்ளே போட்டியாக நாங்களும் ஒன்றை தூக்குவோம்.
//எத்தனை உயரம்
பறக்க முயன்றாலும்
எந்தெந்த சிகரங்கள்
எட்ட முனைந்தாலும்
வா வென்று
வரவேற்க
வாய்ப்பதென்னவோ
பூமிக்குள் கட்டி வைக்கும்
செவ்வக அறைதான்.//
இது நம்மூரில் அதுவும் நமக்குள் நாறிடும் அரசியல்படுத்துபவர்கள் அறியவேண்டிய அருமை கவி வரிகள்.
இரக்கப்பட்டு மார்க் தருவீர்களா?
160 மாடிகளைகொண்ட 'பர்ஜ்டவர்' என்பதை 'கலிஃபா டவர்' என பெயர் மாற்றம் பெற்ற அதில் மஸ்ஜித், அலுவலகம், உறைவிடம் என அனைத்தும் உண்டாம்.
//பறப்பதற்கு
இறக்கைகள் இல்லா மனிதன்
இறப்பதற்குள்
பறக்க விழைந்தே
படிப்படியாகவோ
மின் தூக்கி வழியாகவோ
மேலே பறக்கிறான்//
முற்றிலும் உண்மை, கூடிய விரைவில் இறக்கையை உருவாக்கினாலும் ஆச்சரியமில்லை....!
ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து,இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு அனுப்ப “லாயக்கு”வாய்ந்த கவிதை......ஆனால் கவிக்காக்கா எத்தனையோ உயிர்களும் சமாதியான இடம் இது..
அஸ்ஸலாமு அலைக்கும்.
கோலாலம்பூர் ரெட்டைக் கோபுரத்திற்கு மேலாக துபாய் பர்ஜ் கலிஃபா கோபுரம் சபீர் காக்காவின் கவி வரிகளுடன் விண்ணுலகத்தை முட்டும் கண் கொள்ளா காட்சி.
அஸ்ஸலாமு அலைக்கும்,
புர்ஜ் கலிஃபா வின் 140 வது தளத்திற்கு சென்று வந்தவர்களில் நானும் ஒருவன்.
நாமும் உலகத்தில் உயரமான கட்டடத்திற்கு சென்று வந்தோம் என்று மட்டுமே சொல்லிக்கொள்ளலாம். நம் வீட்டு மொட்டை மாடியில் நிற்பது போன்ற உணர்வு மட்டும் தான், மற்றபடி வேறு விஷேசம் ஒன்றுமில்லை.
கவிகாக்கா புர்ஜ் கலிஃபா கவிதையால் விண்ணுலக பயணத்தை ஞாபகப்படுதியுள்ளீர்கள்.
கியாமத் நாளில் ஆடுகளை மேய்க்கும் கூட்டம் உயர்ந்த கட்டிடங்களை கட்டுவதில் போஆடியிடுவார்கள்.
1000 mile டவர் (kingtom tower ) சவுதி அரேபியாவில் கட்ட ஆரம்பிக்கப்படுகின்றது..
( http://www.wired.co.uk/news/archive/2011-04/11/mile-high-tower )
என் கஃபில்(sponsor) ஆடு மேயபவருங்க.பல ஆட்டுக்கு ஓனரும்கூட.
(anyhow நான் வெப் டிசைனர், நம்புங்க)
அஸ்ஸலாமு அலைக்கும்.
சபீர் காக்கா,
சிறிய இடைவெளிக்குப்பிறகு உள்ளத்தை சீண்ட வைத்த உங்களின் கவிவரிகள் படிக்கப்படிக்க பரவசம் தந்து இறுதியில் கபுருக்குள் படுக்க வைக்கும் நல்ல சிந்தனை.
"மேகத்தில் நெய்த டவலில் தலைதுவட்டிக்கொள்ளும் வானுயர்ந்த டவர், இறுதியில் விழப்போவது தலைமுடியல்ல மனித உயிர்கள்"
மரணம் - முன் அனுபவமின்றி சொல்லாமல் வரும் சோகம்.
இன்ஷா அல்லாஹ் விரைவில் ஒரு நல்ல கட்டுரையுடன் வந்து சந்திக்க ஆசை ("ஒரு கிராமத்து காக்கையின் ஏக்கம்")
வஸ்ஸலாம்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது
லெ.மு.செ. அபுபக்கர் நிறுவனத்திலிருந்து.....
sabeer.abushahruk சொன்னது…
//உள்ளே
சந்துத் தகராறோ
வார்டு பாகுப்பாடோ
வராதுதானே?//
கண்டிப்பா வாறது இங்கு நடத்திய தகராறுக்கு அங்கு பதில் சொல்வதற்கே போதும் போதும் என்றாகிவிடும்
சபீர் காக்கா,
அடுக்குமாடியை பற்றி மிக அழகாக எழுதியுள்ளார்கள் என்னா தான் மிக பெரிய டவர் கட்டினாலும் அது நம் கப்ருக்கோ அல்லது குளிக்கோ வரப்போவதில்லை நம்ம கப்ருக்கு என்ன வரப்போகுதோ அதற்கு உள்ள செயல்கள் மட்டும் செய்தால் போதும். எத்தனை பெரிய டவர் கட்டினாலும் கப்ருக்கு ஒன்றும் கொண்டு போவதில்லை.
மு.செ.மு.அபூபக்கர்
கவிதைக்கு பொய் அழகெண்பர் ஆனால் சகோ.சபீர் அவர்களின் கவிக்கு அவரிடும் மெ(ம)ய்யே அழகு
உண்மையில் சொல்வதென்ரால் அவரின் வரிகளை சககாலத்து கவிஞர்கள் சுவாசிக்க நேர்ந்தால் பொறாமை கொள்வர்
கவிஞ்ஞரின், முன்பு வரைந்த ""நிஜமா! நிஜாம்?"" ஒவ்வொரு வரிகளும் கடலலைப்போல் இன்னும் என்மனதை ஓலமிட்டுக் கொண்டே உயிருள்ளவரை ஊசலாடிக்கொண்டிருக்கும்.
(அச்சமயம் மர்யம்) கூறினார்; "என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?" (அதற்கு) அவன் கூறினான்; "அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது."
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'ஆயிஷாவே! இதோ ஜிப்ரீல் உன் மீது சலாமுரைக்கிறார்" என்று கூறினார்கள். நான், 'வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்முத்துல்லாஹி வ பரக்காத்துஹு - அவரின் மீதும் (அல்லாஹ்வின்) சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும். (இறைத்தூதர் அவர்களே!) நான் பார்க்க முடியாததையெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள்" என்று கூறினேன்.
ஆயிஷா(ரலி) 'நீங்கள்' என்று நபி(ஸல்) அவர்களையே குறிப்பிட்டதாக அறிவிப்பாளர் கூறுகிறார்.
மு.செ.மு.அபூபக்கர்
வாசித்து ரசித்த அனைத்து "உயர்ந்த உள்ளங்களுக்கும்" என் நன்றியும் வாழ்த்துகளும்.
வெந்நீர் ஒத்தடம் நினைவிருக்கிறதா? மற்றுமொறு வெந்நீர் ஒத்தட கட்டுரையில் ரெமொட்டோய்ட் அர்தரைட்டிஸ் முகமூடியணிந்து என்னை மிரட்டிய ஹைபெர்டென்ஸ் நோட்ஸ் பற்றிய நகைச்சுவை கட்டுரையின்மூலம் மீண்டும் சந்திப்போம்.
இதற்கிடையே, தோழர்கள் புத்தகம் பெற்றுக்கொள்ள தயாரா? சிறு போட்டி காத்திருக்கிறது. அதற்காக தத்தமது தோழர்களைப்பற்றிய நினைவுகளைத் தொகுத்து தயாராகுங்கள்.
அபு இபுறாகீம் மேற்கொண்டு விளக்குவார்.
இந்தப் பதிவைப் பொறுத்தவரை
குறைகள்:
- யாசிர் 10 மார்க் கேள்வியை சாய்ஸில் விட்டது
- கிரவுன் பரீட்ச்சைக்கே வராதது
- ஜாகிரால் நேரம் ஒதுக்க முடியாமல் அவன் சாச்சி மலேசியாவில் காலமாகியது (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
- அரசியல் ஆன்மீகம் என சூட்டைக் கிளப்பி சுகம் காணாதது
நிறை
- ஹமீதின் ஃபோட்டோ
- அ. நியின் மேகத்துக்கு மேலான ஃபோட்டோ
- நண்பர்களாகிப்போன சக வாசகர்களின் பின்னூட்டங்கள்
- ஹாலித் / எம் எஸ்ஸ் எம்மின் தமிழ்
- எம் ஹ்ச் ஜேயின் தகவல்
- எல் எம் எஸ்ஸின் பதிவுக்கான அறிவிப்பு
//காதிர் முஹைதீன் பள்ளியின் மாண்புடை மாணவர்களில் ஒருவரான// தாங்ஸ் உங்கள் கனிவான வார்த்தைகளுக்கு காக்கா..இப்பதான் உங்க இந்த கருத்தை படித்தேன்....
எதோ என்னால் முடிந்த தொகுப்பு
1.புர்ஜ் துபாய் மன்னர் சேக் முகம்மது அவர்களின் கனவு திட்டம்
2.உலகில் மிகப்பெரிய லேண்ட் மார்க் ஒரு இஸ்லாமிய நாட்டில்தான் இருக்கவேண்டும் என்பது அவர் எண்ணம்
3.கடும் காற்றையும் தாங்கக்கூடிய கண்ணாடிகள் சுவிஸ் நாட்டில் இருந்து ஸ்பேஷலாக தயாரித்து கொண்டுவரப்பட்டது
4.இந்த டவரின் 100 மாடி முழுவதையும் வாங்கியிருப்பவர் நாம் நாட்டு செட்டி யு.ஏ.இ எக்ஸ்ஷேஜ்சின் உரிமையாளர்
5.தனக்கு இக்கட்டான நேரத்தில் உதவிய மேதகு கலிஃபா அவர்களின் பெயரை சூட்டி அழகுபார்த்தார் துபாயின் இந்த தொலைநோக்கு மன்னர்
6.உலகின் மிக உயரமான இடத்தில் அமைக்கபட்டுள்ள ஒரு ஹோட்டலில் காபியின் விலை வெறும் ரூபாய் 40,000 மட்டுமே
7.இந்த டவரின் 149 மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்டு கின்னஸில் இடம் பிடித்தவர் ஒரு தமிழர்
8.உலகிலயே மிகப்பெரிய செயற்க்கை தண்ணீர் நீர் ஊற்று இங்கு உண்டு
9.நூற்றுக்கும் மேலான உயிர்களை இந்த டவர் பழிவாங்கியதாக கேள்வி
10.160 மாடிக்கு கிரேன் ஆபரேட் பண்ண பலரும் பயந்தபோது ஒரு “பட்டான் “ கொஞ்சமும் பயமில்லால் அசத்தினார்
11. 160 மாடியில் கிரேன் ஆபரேட் செய்த பட்டானுக்கு ஒரு பங்களாவும்,நாட்டு பிரஜை என்ற கவுரவமும் கொடுத்து சிறப்புபடுத்தினார் துபாய் மன்னர்
12.இந்த டவர் உருகி எரியும் மெழுகுவர்த்தியை போல் தோற்றமளிக்கும்
13. 30 கிலோமீட்டர் சுற்றளவிற்க்கு இட்டவரை வெறும் கண்களால் காணலாம்,காண முடியவில்லையென்றால் கண் டாக்டரை பார்ப்பது நலம்.
14.இதன் திட்ட மதிப்பு சுமார் ரூபாய் : 7000 கோடீடீடீ
15.உலகின் மிகப்பெரிய ஷாப்பிங்மால் “சூக் அல் பகர் “ (கடல் போன்ற மார்க்கெட்) இங்கு உண்டு
1.புர்ஜ் துபாய் மன்னர் சேக் முகம்மது அவர்களின் கனவு திட்டம்
2.உலகில் மிகப்பெரிய லேண்ட் மார்க் ஒரு இஸ்லாமிய நாட்டில்தான் இருக்கவேண்டும் என்பது அவர் எண்ணம்
3.கடும் காற்றையும் தாங்கக்கூடிய கண்ணாடிகள் சுவிஸ் நாட்டில் இருந்து ஸ்பேஷலாக தயாரித்து கொண்டுவரப்பட்டது
4.இந்த டவரின் 100 மாடி முழுவதையும் வாங்கியிருப்பவர் நாம் நாட்டு செட்டி யு.ஏ.இ எக்ஸ்ஷேஜ்சின் உரிமையாளர்
5.தனக்கு இக்கட்டான நேரத்தில் உதவிய மேதகு கலிஃபா அவர்களின் பெயரை சூட்டி அழகுபார்த்தார் துபாயின் இந்த தொலைநோக்கு மன்னர்
6.உலகின் மிக உயரமான இடத்தில் அமைக்கபட்டுள்ள ஒரு ஹோட்டலில் காபியின் விலை வெறும் ரூபாய் 40,000 மட்டுமே
7.இந்த டவரின் 149 மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்டு கின்னஸில் இடம் பிடித்தவர் ஒரு தமிழர்
8.உலகிலயே மிகப்பெரிய செயற்க்கை தண்ணீர் நீர் ஊற்று இங்கு உண்டு
9.நூற்றுக்கும் மேலான உயிர்களை இந்த டவர் பழிவாங்கியதாக கேள்வி
10.160 மாடிக்கு கிரேன் ஆபரேட் பண்ண பலரும் பயந்தபோது ஒரு “பட்டான் “ கொஞ்சமும் பயமில்லால் அசத்தினார்
11. 160 மாடியில் கிரேன் ஆபரேட் செய்த பட்டானுக்கு ஒரு பங்களாவும்,நாட்டு பிரஜை என்ற கவுரவமும் கொடுத்து சிறப்புபடுத்தினார் துபாய் மன்னர்
12.இந்த டவர் உருகி எரியும் மெழுகுவர்த்தியை போல் தோற்றமளிக்கும்
13. 30 கிலோமீட்டர் சுற்றளவிற்க்கு இட்டவரை வெறும் கண்களால் காணலாம்,காண முடியவில்லையென்றால் கண் டாக்டரை பார்ப்பது நலம்.
14.இதன் திட்ட மதிப்பு சுமார் ரூபாய் : 7000 கோடீடீடீ
15.உலகின் மிகப்பெரிய ஷாப்பிங்மால் “சூக் அல் பகர் “ (கடல் போன்ற மார்க்கெட்) இங்கு உண்டு
அப்பபா திணறிடுச்சு
யாசிர்,
ஸ்கூல் பேரையும் என் நம்இக்கையையும் காப்பாத்திவிட்டீர்கள். பத்துக்கு நூத்தி அறுபது மாடிகள்...சாரி..மார்க்குகளும் ஒரு சகன் பரோட்டாவும் பரிசு
தம்பி யாசிர்: இதென்ன எல்லாமே ஒரு டாகுமெண்டரிக்கு உண்டான தகவல்களாக குறிப்புகள் அருமை ! பர்ஜ் கலிஃபா உச்சியில போயி கட்சி கொடியை ஏத்துன திருப்தி தொண்டனுக்கு வருமே அதே தான் !
இந்தப் பதிவின் பின்னூட்டங்களில் பகிர்ந்து கொண்டதற்கினங்க... எங்கள் கவிக் காக்கா வைத்த க்ளூவுக்கு விடை கிடைத்து விட்டது !
அது என்னவென்று,
//இதற்கிடையே, தோழர்கள் புத்தகம் பெற்றுக்கொள்ள தயாரா? சிறு போட்டி காத்திருக்கிறது. அதற்காக தத்தமது தோழர்களைப்பற்றிய நினைவுகளைத் தொகுத்து தயாராகுங்கள்.
அபு இபுறாகீம் மேற்கொண்டு விளக்குவார். //
ஆம் !
நட்புக்கு இலக்கணம் வேண்டும் அங்கே தலைக்கனம் இருக்கக் கூடாது !
அற்புதமான கவிதைக்கு ஒரு கருவும் ரெடி..
அதற்கு முத்தாய்ப்பாக (சஹாபா) தோழர்கள் புத்தகமும் ரெடி...
இனிமேல்தான் உங்களின் பங்க்களிப்பு இருக்கிறது, அதுதான் உங்கள் நட்புகளின் நினைவுகளை கோர்வையாக்கி காத்திருங்கள் அங்கே கருத்துக்களத்தில் பகிர்ந்திட அங்கே வென்றெடுக்கும் நட்புக் கருத்துகளுக்கு கருவின் கதாநாயகன் பரிசளிக்கவும் தயாராகிவிட்டார் ! அதிரைநிருபரும் பெருமையுடன் வழங்குவதில் உவகை கொள்கிறது... இன்ஷா அல்லாஹ் !
உச்சியிற்க் கண்டது பொய்மை
*****உணர்ச்சியிற்ப் பட்டது மெய்மை
மெச்சியே யுன்னிடம் பாத்தேன்
*****மிகுதமாய்ப் பொங்கிடப் பார்த்தேன்
நிச்சய மொருமுறை மண்ணில்
*****நீள்துயில் காண்பதை யெண்ணி
அச்சமா யழுதிட வுள்ளம்
*****அவிழ்த்தது கண்களில் வெள்ளம்
கலிஃபா டவர்
அரபகத்தின் அடையாளம்
கவிபாட இவர்
அதிரையின் அடையாளம்!
உலகத்திலேயே
உயர்ந்த கட்டிடங்களுக்கெல்லாம்
உச்சமாக
உலோகத்திலேயே
உருக்கி வார்த்த
விருட்சமாக
உருகிக் கூரான
பனிமலையின் முகட்டைப் போல
........................
அதிகாலை வெயிலில்
மேற்பாதி மட்டும்
பிரகாசிக்கும்
பனிச்சிகரம்போல
மழை பொழிவில்லாத
விண்ணுக்கெதிராய்
மண் பிடிக்கும்
வாளைப் போல
பூமிக்கு மேல்
கட்டி முடித்தது போலல்லாமல்
பூமியே
பெற்று எடுத்தது போல
தூரப் பார்வைக்கு
வானத் திரையில்
வரைந்து வைத்ததுபோல
கிட்டப் பார்வையிலோ
கட்டடம் முழுதும்
காட்சிக்குள் அடங்காத
கானகம்போல
வேர்விட்டு வளர்ந்த
நீர்குடிக்கும் மரம்போல
கூராய் நிற்கிறது.
---------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். போல,போல என பொல,பொல வென பொளிவுடன் தெளிவாக தமிழ் வரிகளின் அடுக்காய் இந்த பிரமாண்ட கோபுரத்தைவிட கம்பீரமாய் இருக்கிறது.
பூமிக்கு மேல்
கட்டி முடித்தது போலல்லாமல்
பூமியே
பெற்று எடுத்தது போல.
------------------------------------------------------------
பூமி கோபுரத்தை பெற்றெடுத்தது போல் தமிழ் உங்களை தத்தெடுத்ததோ? இப்படியொரு வார்தை பிரவாகம், கவிதை பிரசுரம்.எல்லாம் வல்லோன் தந்த வரம். அல்ஹம்துலில்லாஹ். மைக்கேல் ஜாக்சன் நடனதை பார்த்து ஆடாத நடன ரசிகர்கள்(சைத்தான்கள்) உண்டா ? அது போல் உங்கள் கவிதைக்கு கருத்து எழுதி என் எழுத்தை எப்பொழுதும் பட்டை தீட்டி வைக்கிறேன். சில நேரம் தாமதம் அவ்வளவே!
எத்தனை உயரம்
பறக்க முயன்றாலும்
எந்தெந்த சிகரங்கள்
எட்ட முனைந்தாலும்
வா வென்று
வரவேற்க
வாய்ப்பதென்னவோ
பூமிக்குள் கட்டி வைக்கும்
செவ்வக அறைதான்.
--------------------------------
உண்மை வாழ்வியலை எப்பொழுதும் சொல்லும் நீங்கள் இப்பொழுதும் அதை செம்மையாக கொஞ்சம் கடுமையாக
அச்சமூட்டி எச்சரிக்கை செய்துள்ளீர்கள்.
அரசன் ஆனாலும், அடிமையானாலும். விமானத்தை செலுத்தும் விமானி ஆனாலும், கப்பலோட்டும் மாலுமி ஆனாலும், வாகனம் ஓட்டும் ஓட்டுனர் ஆனாலும், வண்டி இழுக்கும் தொழிலாளி ஆனாலும் மண்ணறை என்பது பொதுவிடம் அது விரும்பியோ, விரும்பாமலோ அனுப்ப படும் இடம். உயரம் , தாழ்வு நிலை வாழ்வில் மாறும். ஆனால் மாடியில் இருந்தாலும், மண் மடியில் இருந்தாலும், மண்ணுக்கு அடியில் எல்லாரும் அடியெடுத்துதான் வைக்க வைக்கவேண்டும். இது உறுதியான இறுதி.
- ஜாகிரால் நேரம் ஒதுக்க முடியாமல் அவன் சாச்சி மலேசியாவில் காலமாகியது (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
--------------------------------------------------------------
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் அன்னாரின் பாவத்தை மன்னித்து சுவர்கம் தந்தருள்வானாக ஆமீன்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் போதுமான சாந்தியும் , பொறுமையையும் நிகழச்செய்வானாக ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .
அல்லாஹ் அவர்களின் குற்றங் குறைகளை மன்னித்து கபுருடைய வாழ்க்கையையும்.ஆகிரத்துடைய வாழ்க்கையையும்.நன்மையாக்கி வைப்பானாக ஆமீன்.
sabeer.abushahruk சொன்னது…
//ஜாகிரால் நேரம் ஒதுக்க முடியாமல் அவன் சாச்சி மலேசியாவில் காலமாகியது//
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஆகிரத்துடைய வாழ்க்கையை நன்மையாக்கி வைப்பானாக ஆமீன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஆகிரத்துடைய வாழ்க்கையை நன்மையாக்கி வைப்பானாக ஆமீன்
என்னைப்பெற்றடுக்காத தாய் என் சாச்சிக்காக துவா கேட்கும் அனைவருக்கும் நன்றி. என் சாச்சி ஏறக்குறைய 2 மாதம் நோய்வாய்ப்பட்டிருந்து இறைவனடி சேர்ந்தார்கள்.
Post a Comment