தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால்தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?
இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பரோட்டா கடை ,அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் வகை வகையாகவும், அளவிலும், சுவையிலும். எத்தனை வேறுபாடுகள் கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, என்று பட்டியலிடும்போதே நாக்கில் எச்சில் ஊருமே!.
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா ?
பரோட்டா என்பது மைதாவிலிருந்து செய்யப்படும் ஒரு திட உணவாகும். இது தமிழகமெங்கும் எளிதில் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதாமாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின, அதில் உருவான பரோட்டாவும் பிரபலமடைந்தது.
பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதாமாவில் உப்பு போட்டு, தண்ணிர் கலந்து அதனை கைகளால் பிசைந்து, அதன் பின்னர் எண்ணெயிட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டியெடுத்து, வீசி அடித்து, கைக்குட்டைபோல் பறக்க விட்டு, அதனை கழுவிய கைக்குட்டையை நீட்டி சுருட்டி மடிப்பதுபோல் அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தட்டையாக இருக்கும் சூடான / தோசைக் கல்லில் போட்டு அதன் நிறம் சிவப்புக்கும் கறுப்புக்கும் இடையில் வரும் வரை புரட்டி எடுத்துப் போடுவார்கள்.
இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில்தான் பிரச்சனை துவங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது ,நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .
மைதா என்றொரு மாவு எப்படி தயாரிக்கிறார்கள் ?
நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்ழோய்ல் பெராக்ஸைட் (benzoyl peroxide) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மை யாக்குகிறார்கள்,அதுவே மைதா .
Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயனம் இந்த ரசாயனம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவுக்கு காரணியாய் அமைகிறது .
இது தவிர Alloxan என்னும் ரா ரசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உபபொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .
இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைpபதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டாவில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சிரண சக்தியை குறைத்து விடும் .
இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது.
Europe union,UK,China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .
மைதாவை நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல் ,இருதய கோளாறு ,நீரிழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.
இப்போதே நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறையைக் காப்போம்.
- முஹம்மது யாசிர்
43 Responses So Far:
பரோட்டாவுக்கு மேட்சிங் எதைச் சேர்த்தாலும் பிக்கப் ஆயிடுது ஆனால் சப்பாத்திக்கு !?
சப்பாத்தி ஏன் கோழி குர்மாவுக்கு மேட்ச் ஆக மாட்டேங்கிறது !? ஏதாவது இடஒதுக்கீட்டு பிரச்சினையா ?
இருந்தாலும் நல்லதொரு எச்சரிக்கை பதிவு !
வீட்டுல சொல்லும்போதெல்லாம் காதில விழாமல் இருந்தது இந்த டீட்டைல் விளக்கம் பரோட்டாவை கொஞ்சம்(தான்) தள்ளியிருக்க வைத்தது என்னவோம் மெய்யே !
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோ; யாசிர் நீங்கள் பரோட்டா தயாரிப்பதற்கு வழிமுறைகளையும் கற்று.
தந்து விட்டு.அதன் எச்சரிக்கை விதி முறைகளையும்.சொல்லித்தந்து.
முழி பிதுங்க வைத்து விட்டீர்.
முஹம்மது யாசிர்
பரோட்டாவை பற்றி மிக அழகாகவும்,அருமையாகவும் எழுதியிருந்தீர்கள் என்னா தான் பரோட்டாவை பற்றி எழுதினாலும் நமது ஊரில்
பரோட்டா கடைகளில் வரிசைகளில் நின்று வாங்கி செல்கின்றனர்.சாப்பிடுவதை சாப்பிட்டு தான் ஆகவேண்டும் யார் என்னா சொன்னாலும் சரி
மொவுத்தா தானே போக போகிறோம் மொவுத்தா போயிட்டு போகிறோம்.மைதா தான் அதிகமாக புழங்கப்படுகிறது முட்டை பாரோட்டா அதுவும் நமது ஊரில் அதிகம் ஏனேன்றால் சமந்தி வீடுகளுக்கு முட்டை பரோட்டாவும்,கோழியும் குருமாவும் கொடுப்பது வழக்கம். இந்த மாதிரியான சீர்களை கொடுப்பதை நிர்ப்பாட்டினால் பரோட்டா சமந்தமான பொருட்கள் ஒளிந்து விடும்
மைதாவை நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல் ,இருதய கோளாறு ,நீரிழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு.
என்னாதான் மக்களுக்கு எடுத்து சொன்னாலும் அந்த பேக்கரியில் உள்ள மைதா சமந்த பட்டதை வாங்கி தின்பது ஒருவகையான ருசி.
மக்கள் உடலுக்கு கெடுதி அதை யாரும் பார்ப்பதில்லை ருசியா இருந்தால் போதும்.அதில் என்ன என்ன பொருட்கள் கலந்து இருக்கிறாகள் என்றல்லாம்
பார்ப்பதில்லை.வாய்க்கு ருசியாக இருந்தால் மட்டும் போதும் அதில் என்ன பொருட்கள் கலந்தாலும் பரவாயில்லை.
இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைpபதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டாவில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது.
இப்போதே நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறையைக் காப்போம்.
மு.செ.மு.அபூபக்கர்
என்ன ? கஜ்ஜாலியோட காக்கா அபூபக்கர் நலமா ? என்னை யார் என்று உங்களுக்கு தெரிகிறதா ?? :)தெரியாது என்று மட்டும் சொல்லி நெஞ்சில் பாதரசத்தை வார்த்துவிடாதீர்கள்
பரோட்டாவுக்கு மேட்சிங் கோழி குர்மாதான், அனா எலிய பத்தியெல்லாம் எழுதவும் ஒருமாதிரியபோச்சிபோகொ,நல்லபயனுல்லதகவல்.
//பரோட்டாவுக்கு மேட்சிங் எதைச் சேர்த்தாலும் பிக்கப் ஆயிடுது ஆனால் சப்பாத்திக்கு !?// கரெக்ட் காக்கா....நாக்கிலும்,மனதளவிலும்தான் பிரச்சனை என்று நினைக்கின்றேன்
நல்ல மாவே பெனஞ்சு அம்சமா ரொட்டிய போட்டுட்டு திங்க கூடாதுன்னு சொல்றது எந்தவிதத்தில் நியாம் யாசிர் (இதில் நம்ம தெரு வகாப் கடை ரொட்டியும் சால்னாவும் அடக்கமா?)
பரோட்டா தாளிச்சா பிரியர் சபீரை காணோம்!
இதுவும் 'லுவாக்' காப்பி போல தானா?
மைதாவின் உள்குத்தை விளக்கிவிட்டீர்.
கோதுமையை முழுசா வாங்கி அரைத்து உபயோகித்தால் அழுக்கு கலரா இருக்குங்கோ!
அப்ப ஆட்டோ மாவுன்டா என்னா?
நல்ல பயனுல்ல தகவல் யாசிர்.
பரோட்டா கடைக்காரர்கள் உங்கள் மீதும் அதிரைநிருபர் மீதும் கடுப்பாகாமல் இருக்கும் வண்ணம் பக்குவமாக எடுத்துச்சொல்லியுள்ளீர்கள்.
கல்யாண விருந்துகளில் பரோட்டா பிய்ப்பதற்காக சண்டை போடுவது நிரழிவு நோயை ரொம்ப சீக்கிரம் கொண்டுவருதற்குதானா?
யாசிர்...
பரோட்டாவிற்கு அல்டர்னேட்டிவ் டிஸ் இருந்தா லிஸ்ட் போடுங்களேன் உங்கள் அடுத்த பதிவில். பிலீஸ்..
"நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட"
This type of habits are not Islamic ones.
//பரோட்டா தாளிச்சா பிரியர் சபீரை காணோம்!// ஸ்ஸ்ஸ்ஸ்.நாக்கில் எச்சி ஊறுது......
யாசிர் அவர்களே உங்களை நன்றாகவே தெரியும் நான் உங்களை இப்பொழுதுதான் மிக அதிகமாகவே தெரிந்து கொண்டேன்.நான் நன்றாகவே இருக்கிரேன் நீங்கள் தான் என்னை மறந்து விட்டீர்கள்.உங்களுடைய கட்டுரைகளும்,கவிதைகளும் மிக அழகாகவும்,வெண்மையாகவும் இருக்கிறது.அடிக்கடி தொடர்பு கொள்ளுங்கள்.
//நம்ம தெரு வகாப் கடை ரொட்டியும் சால்னாவும் அடக்கமா?)// அதை திண்டு திண்டுதான் நாம நாக்கை மற்ற டேஸ்ட் பார்க்கவிடாமல் அடக்கிவிட்டோமே.....சரி காக்கா அந்த சால்னாவில் ஒரு புளிச்ச ஸ்மெல் வருமே அது எப்படிகாக்கா ???
மைதாவில் பல வைகான உணவுகள் செய்கிறார்கள் பர்கர்,பிஜ்ஜா,சாண்ட்விட்ச் என்றல்லாம் எல்லா பொருட்களும் செய்யப்படுகின்றன.
நம்மூரில் பரோட்டா இல்லாத திருமணமே கிடையாது.பரோட்டா வைக்கா விட்டால் அது ஒரு கவுர பிரச்சினையாக ஆக்கி விடுவார்கள்.
மைதாவிலும் கார வகைகளும்,வித விதமான இனிப்பு வகைகளும் செய்கின்றனர்.எது எப்படி இருந்தாலும் சரி வாய்க்கு ருசியாக இருந்தால் உடனே சாப்பிடனும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
// சப்பாத்தி ஏன் கோழி குர்மாவுக்கு மேட்ச் ஆக மாட்டேங்கிறது !? ஏதாவது இடஒதுக்கீட்டு பிரச்சினையா ?
நாக்குக்கு பிளீச் பவுடர் போட்டு தேய்த்து விட்டு சப்பாத்த்திக்கு கோழி குர்மா வச்சி சாப்பிட்டால் மேட்ச் ஆகும் போல் தெரிகிறது .
// அதை திண்டு திண்டுதான் நாம நாக்கை மற்ற டேஸ்ட் பார்க்கவிடாமல் அடக்கிவிட்டோமே.....சரி காக்கா அந்த சால்னாவில் ஒரு புளிச்ச ஸ்மெல் வருமே அது எப்படிகாக்கா ??? //
பல்லி விழுந்தா சால்னா லேசா புளிக்கும்ன்னு யாரோ எங்கோ சொன்னதா ஒரு ஞாபகம்!
லெ.மு.செ.அபுபக்கர் சொன்னது…
//நாக்குக்கு பிளீச் பவுடர் போட்டு தேய்த்து விட்டு சப்பாத்த்திக்கு கோழி குர்மா வச்சி சாப்பிட்டால் மேட்ச் ஆகும் போல் தெரிகிறது//
நாக்கை நல்லா அவிச்சிட்டு உரிச்சா சரியாவரும் (நான் சொன்னது ஆட்டுத்தலை நாக்கை)
அஸ்ஸலாமு அலைக்கும்.
// நம்மூரில் பரோட்டா இல்லாத திருமணமே கிடையாது.பரோட்டா வைக்கா விட்டால் அது ஒரு கவுர பிரச்சினையாக ஆக்கி விடுவார்கள்.//
கலரி சாப்பாட்டில் பரோட்டாவை நிறுத்தினால் எம்.எஸ்.எம். அபூபக்கர் விருந்துக்கு போகாமல் கவுரமா இருந்துவிடுவார் போல்
பின்னூட்டங்கள் மூலம் தெரிகிறது.
அஸ்ஸலாமு அலைக்கும்.
// நாக்கை நல்லா அவிச்சிட்டு உரிச்சா சரியாவரும் (நான் சொன்னது ஆட்டுத்தலை நாக்கை)//
இது போல் மனித நாக்கை நல்லா அவிச்சிட்டு உரிச்சா பரோட்டாவுக்கு மேட்சிங் எதைச் சேர்த்தாலும் பிக்கப் ஆகுமா?
ஹமீது காக்கா கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன். நல்ல ஆட்டு தலை வாக்குற டாக்டர் கிட்டே சாரி கடை காரர்கிட்டே
பரோட்டா பிரச்சினை மிக வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது.
//பரோட்டா தாளிச்சா பிரியர் சபீரை காணோம்!//
அதெல்லாம் சவுதி காலம். இப்பவெல்லாம் பரோட்டாவை எப்பவாவது அபூர்வமாகத்தான்...(நெஜமாவே நாக்குல எச்சில் ஊறுதுப்பா)
தமிழ் நாட்டின் தேசிய உணவு(?)க்கு எதிரான இந்த புரட்சியை யாசிர் எந்த தைரியத்தில் துவங்கினாரோ.
(அப்ப எதுக்கு எனக்கு அந்த வெள்ளிக்கிழமை காலைல ரெடிமேட் பரோட்டாவை சுட்டுத் தந்தாராம்?)
அஸ்ஸலாமு அலைக்கும்.
சபீர் காக்கா சொன்னது;
// (அப்ப எதுக்கு எனக்கு அந்த வெள்ளிக்கிழமை காலைல ரெடிமேட் பரோட்டாவை சுட்டுத் தந்தாராம்?) //
ரெடிமேட் பரோட்டாவை ஃ பிரிஜரில் வைத்தால் ரசாயனம் செயல் இழந்து போவுதா இல்லையா என்று சோதனை செய்வதற்கு சுட்டு தந்திருக்கலாம்.
அதிரையில் உள்ள மனிதன் உடைய நாக்கை அவிச்சி சாப்பிட்டால் மிக அழகாக இருக்கும்.நம்மூரில் மந்தி மற்றும் கப்ஸ்ஸா என்றல்லாம் பல வகையாக சாப்பிடுகிறார்கள்.மனிதனுடைய நாக்கை சாப்பிட்டால் ஆட்டுத்தலை நாக்கை விட நன்றாக இருக்கும்.
மு.செ.மு.அபூபக்கர்
அந்த பரோட்டாவை சோதனை செய்து சுடுவதற்கு எங்கை அனுப்பபோரிங்கே எல்.எம்.எஸ் அபூபக்கர் அவர்களே?
மு.செ.மு.அபூபக்கர்
இந்த போட்டோவில் உள்ள பரோட்டாவை பார்த்தால் எதோ பாவம் செய்தது போல் தெறுகிறது.இந்த படத்தில் உள்ள பரோட்டாவை புரட்டி புரட்டி நாம் எல்லோரும் போடுகிறோம்.பரோட்டா மாட்டிக்கிட்டு முழிக்கிது தப்பிக்க வழியில்லாமல் எங்கே செல்வது என்று என்னை எல்லோரும் பாடாய்
படுத்துகிறார்கள் நான் யாருக்கும் எந்த பாவம் செய்யவில்லையை என்று.
மு.செ.மு.அபூபக்கர்
இந்த போட்டோவில் உள்ள பரோட்டாவை பார்த்தால் எதோ பாவம் செய்தது போல் தெறுகிறது.இந்த படத்தில் உள்ள பரோட்டாவை புரட்டி புரட்டி நாம் எல்லோரும் போடுகிறோம்.பரோட்டா மாட்டிக்கிட்டு முழிக்கிது தப்பிக்க வழியில்லாமல் எங்கே செல்வது என்று என்னை எல்லோரும் பாடாய்
படுத்துகிறார்கள் நான் யாருக்கும் எந்த பாவம் செய்யவில்லையை என்று.
மு.செ.மு.அபூபக்கர்
கிசு கிசு:
அனகொண்டா வாழும் காடுகளைத் தன் பெயரில் இணைத்துள்ளவருக்கும் பரோட்டாக்களுக்கும் தொடுப்பாமே? சால்னா இல்லாமலே பிச்சு பிச்சு உதர்றதா...சாரி திண்றதா பேசிக்கிறாங்க!?!?
ஆக்ச்சுவலா, தமக்குத் தேவைப்பட்ட நேரத்தில் கடையை மூடிவிட்ட கோபத்திலதான் இப்படி ஒரு பதிவை எழுதிப்போட்டராமே பாலஸ்தீனத்திற்காக உழைத்தவரின் பாதி பேர்காரர்?!?!
மலையேறிப் போனவருக்குக்கூட மேலே பரோட்டா கிடைக்கமல்தான் இட்லியை முழுங்கியதா பேசிக்கிறாங்களாமே?!?!
வர வர நம்ம ஆளுக புரோட்டாவையும் அரசியல் ஆக்கி விடுவார்கள் போல!!!!!!
// (அப்ப எதுக்கு எனக்கு அந்த வெள்ளிக்கிழமை காலைல ரெடிமேட் பரோட்டாவை சுட்டுத் தந்தாராம்?) // பரோட்டா இந்த அளவிற்க்கு பாடுபடுத்தும் என்பது அப்ப தெரியாத கவிக்காக்கா
சரி கவிகாக்கா ..தீர்ப்ப சொல்லிவிட்டு தூங்கபோங்க...பரோட்டா திங்கலாமா..வேணாமா ?? அப்பதான் கருத்து சொன்னவங்களுக்கு......நீங்க சொல்லும் ஐட்டம் + கோழி அல்லது மட்டன் குருமா விருந்து வைக்கமுடியும்
பரோட்டாவிற்கு தனது முழு ஆதரவையும் தந்த சகோ.அபூபக்கருக்கு”நூர் லாஜ்” பரோட்டாவும்,சால்னாவும் ஆர்டர் பண்ணிடலாம்
sabeer.abushahruk சொன்னது…
//மலையேறிப் போனவருக்குக்கூட மேலே பரோட்டா கிடைக்கமல்தான் இட்லியை முழுங்கியதா பேசிக்கிறாங்களாமே?//
பாலஸ்தீனத்திற்காக உழைத்தவரின் பாதி பேர்காரர் மலை ஏறும் முன்பே பரோட்டா பற்றி எங்களிடம் கிசுகிசுத்துவிட்டார்
கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் கவிதை காரரை வைத்து ரெடி மேடு பரோட்டாவை டெஸ்ட் செய்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்.
தீர்ப்புத்தானே? சொல்லிட்டாப்போச்சு.
பரோட்டா சாப்பிடலாம்.
சாப்பிடலாம்
சாப்பிடலாம்....
அது கோதுமையில் செய்திருக்கும்பட்சத்தில்!
ஆகா நல்ல மாவே பெனஞ்சி தீர்ப்பு சொல்லிடீங்க!!
போட்ட ரொட்டிய போடவா என்று கேட்டது நினைவு இருக்கா!!!!
Question
Is white flour bleached with dangerous chemicals?
Answer
No. Some Web sites allege that flour is bleached with alloxan, a compound that caused diabetes in animal research, but experts tell us that's not true. Flour bleaches naturally on its own as yellow compounds called xantophylls react with oxygen in the air; this takes several weeks. To speed the whitening, processors bleach flour--turning it white from its natural straw color--with safe, FDA-regulated chemicals (some of the same ones used to sanitize veggies). Alloxan may form as a byproduct, but the amount is minuscule (less than 0.03 mg per slice of bread) and harmless.
Bottom line: White flour is not dangerous, but because processing strips away essential nutrients such as fiber, magnesium, and vitamin E, it is less nutritious. --Danielle Kosecki
UK la Maidha Banned nu irukku , but athu Unmai Ille... UK liye Tamil shops ku poona பரோட்டா ve krdaikkum...
so Final conclusion is பரோட்டாவை புடிக்காத யாரோ ஒரு ஆளு தான் இதை கிளப்பி விட்டு இருப்பாங்க..
அப்துல்மாலிக் சொன்னது…
//பரோட்டாவை புடிக்காத யாரோ ஒரு ஆளு தான் இதை கிளப்பி விட்டு இருப்பாங்க..//
சரியா சொன்னிங்க பரோட்டாவை பிடிக்காத யாரோதான் பரோட்டாவை இப்படி பிட்சி போட்டு சால்னாவை ஊத்தி ஊற வச்சி புட்டாங்க!
வைக்கி தாத்தாவிடம் கேட்டால் கூட இந்த பதில்தான் பாருங்களேன்
http://en.wikipedia.org/wiki/Maida_flour
சத்தியமா எனக்கும் பரோட்டாவிற்க்கும் எந்த கொடுக்கல் / வாங்கலும் இல்லை :)...
புரளிகள் இப்போ இணையத்துலே எந்த வேகத்துலே பரவுது என்பதற்கு இதுவும் ஒரு எ.கா.
//புரளிகள் இப்போ இணையத்துலே எந்த வேகத்துலே பரவுது என்பதற்கு இதுவும் ஒரு எ.கா.//
அப்பாடா !
வயத்துல நூர்லாட்ஜ் கடை சால்னாவை வார்த்தியலே ! :)
Post a Comment