Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தினமும் மார்க்க சொற்பொழிவு - நேரலை 12

அதிரைநிருபர் | November 13, 2011 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பான வாசக நேசங்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அதிரைநிருபர் கடந்த ஒன்றறை ஆண்டுகளுக்கும் மேலாக நம் சமுதாய மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அவ்வப்போது விழிப்புணர்வு பதிவுகளை பகிர்ந்தளித்து வருவதை நன்கு அறிவீர்கள். இதில் ஏராளமான அதிரை நேசங்கள் மட்டுமல்லாது இன்னும் பிற ஊர்களிலிருந்தும், கடல்கடந்தும் இருக்கும் நேசங்களும் அதனைக் கொண்டு பயனடைந்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக அதிரைநிருபர் தினமும் இந்திய நேரம் இரவு 10:30 மணி முதல் 11:30 மணி வரை மார்க்க சொற்பொழிவு காணொளி நேரலை நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு கன்னி முயற்சிதான், இதனை முதல் சோதனை ஓட்டமாக செய்கிறோம். அல்லாஹ் நாடினால் இந்த சிறிய முயற்சி நாளடைவில் வளர்ந்திடவும் அதன் பணிகள் தொடர்ந்து தொய்வின்றி செய்திட முயற்சி செய்கிறோம். இன்ஷா அல்லாஹ் !.

முதல் முயற்சியாக இன்று (13.11.2011) இந்திய நேரம் இரவு 10:30 – 11:30 வரை, ஐக்கிய அரபு அமீரக நேரம் இரவு 09:00 – 10:00 வரை, சவுதி நேரம் 08:00 – 09:00 வரை நேரலை செய்யப்படும்.

முதல் நிகழ்ச்சியின் தலைப்பு : முன் மாதிரி இஸ்லாமிய குடும்பம்

உரை: முஃப்தி உமர் ஷரீஃப் காஸிமி அவர்கள்

இதில் தமிழகம், இலங்கை மற்றும் உலகில் தமிழ் பேசும் நாடுகளிலிருந்து தலைச்சிறந்த மார்க்க சொற்பொழிவாளர்களின் காணொளிகள் தொடர்ந்து ஒரு மணி நேர நேரலையாக உங்களின் பார்வைக்கும் செவிக்கும் விருந்தாக்க உள்ளோம்.

நேரலை காணொளியில் இடம் பெரும் சொற்பொழிவுகள் அனைத்தும்  குர்ஆன், ஹதீஸ் தொடர்பானவைகளாக மட்டுமே இருக்கும். எந்த ஒரு இயக்கத்தையோ அல்லது எந்த ஒரு தனி நபர்களையோ முன்னிருத்தியோ / சார்ந்ததாகவோ / எதிராகவோ இருக்காது என்பதை தெளிவாக அறிவிக்கிறோம். நம் சமுதாய மக்களுக்கு மார்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நன்நோக்கில் கையாளப்படும் இந்த சிறு முயற்சிக்கு அழைப்பு பணியில் அதிகமதிகம் ஈடுபடுத்தி வரும் நம் சகோதரர்கள் சிலர் மார்க்க சொற்பொழிவு குறுந்தகடுகளை அதிரைநிருபக்கு வழங்கிட முன்வந்துள்ளார்கள். இது பற்றிய முழு விபரங்கள் பின்னர் ஒரு பதிவில் வெளியிடுவோம் இன்ஷா அல்லாஹ்.

மார்க்க சொற்பொழிவுகளின் நேரலையை அனைத்து மக்களிடம் கொண்டு செல்லும் பொறுப்பு ஒவ்வொரு இஸ்லாமிய ஊடகத்தின் கடமை என்பதை உணர்ந்த நாம் இந்த சிறு முயற்சியாக நேரலையை யார் வேண்டுமானாலும் தாராளமாக உரிமையுடன் பகிர்ந்துக்கொள்ளலாம்.



வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் நுனுக்கங்களை கையாண்டு அதன் மூலம் இஸ்லாமிய அழைப்புப் பணியிலும் அதிரைநிருபர் வலைத்தளம் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள இருக்கும் இத்தருணத்தில் உங்கள் அனைவரின் மேலான கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து, எங்களின் நிறை குறைகளை சுட்டிக்காட்டி ஒத்துழைப்பையும் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

-அதிரைநிருபர் குழு

12 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

உங்களின் இந்த மார்க்க பணியை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. வெளி நாட்டில் வசிக்கும் குடும்பங்களுக்கு வீட்டுக்கே மார்க்க விசயங்களை கொண்டு செல்வதற்கு இறைவன் இதில் ஈடுபடும் அனைவருக்கும் நன்மையயும், அவர்களின் பொருளாதாரத்தில் ஏற்றத்தையும் , சுகாதாரத்தில் சுறுசுறுப்பையும் தரட்டும்.

மலேசியா / சிங்கப்பூரிலும் வாசகர்கள் இருப்பதால் இங்கு ஒலி / ஒளிபரப்பாகும் நேரத்தையும் தெரியப்படுத்தவும் . [ எனக்கு கணக்கிட தெரிந்தாலும் எல்லோருக்கும் தெரியும் என சொல்ல முடியாது ]

அதிரை நிருபரின் லோகோவை அடிக்கடி மாற்ற வேண்டுமா என்பதை யோசிக்கவும்.

முடிந்தால் Dr.K.V.S. ஹபீப்முஹம்மது . Dr.அகார் அஹமது [Sri Lanka ] போன்றோரின் சொற்பொழிவையும் வெளியிட்டால் நல்லது.


ஏதாவது இயக்கம் சார்ந்தவர்களாக இருந்தாலும் நல்ல விசயமாக இருக்கும்போது அதை இயக்க கண்ணாடி போட்டுபார்க்காமல் வாசகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என தெரிந்து வெளியிடலாம். [ ஒரு சர்வே போதுமே

Anonymous said...

அன்பின் ஜாஹிர் காக்கா:

தங்களின் மேலான கருத்திற்கு - ஜஸாக்கல்லாஹ் ஹைர் !

//மலேசியா / சிங்கப்பூரிலும் வாசகர்கள் இருப்பதால் இங்கு ஒலி / ஒளிபரப்பாகும் நேரத்தையும் தெரியப்படுத்தவும் . [எனக்கு கணக்கிட தெரிந்தாலும் எல்லோருக்கும் தெரியும் என சொல்ல முடியாது]//

இது ஒரு முன்னோட்ட கன்னி முயற்சிதான், விரைவில் தாங்கள் வேண்டிக் கொண்டதன்படி அதற்கான நேரம் சரியாக கண்டறிந்து மறு ஒலிபரப்புக்கும் ஏற்பாடு செய்யலாம் அல்லது மாற்று நேரம் அறிந்து பொதுவாகவும் செய்யலாம் அதற்கான சூழல் அமையும்போது இன்ஷா அல்லாஹ்.. !

//அதிரைநிருபரின் லோகோவை அடிக்கடி மாற்ற வேண்டுமா என்பதை யோசிக்கவும்.//

ஏற்கனவே இருந்த இலச்சினையை மெருகேற்றி அதிரைநிருபருக்கு என்று புதியதை உருவாக்கினோம் அதுதான் தலைப்பிலும் முகப்பிலும் இட்டிருக்கும் கூட்டு இலச்சினை (group logo).

அதிரைநிருபரில் விழிப்புணர்வுகள், கல்வி, மார்க்கம், காணொளி, நெறியாளரின் தேர்வு குறியீடு, ஏடு-இட்டோர்-இயல் (editorial) என்று பகுக்கப்பட்டு வரும் பதிவுகளை தனித்து காட்டுவதற்காவும் முடிந்தவரை பொதுவிலிருந்து வேறு படங்களை எடுத்துப் இவைகளுக்கு பதியாமல் தனித் தன்மையுடன் காட்டிடவும் தான் வகைப்படுத்தி மூன்று விதமாக இலட்சினைகளை தாயர் செய்திருக்கிறோம்.

இவைகளும் நம்மவர்களின் புதிய உருவாகக்திற்கும் (creativity) ஆர்வத்தினை தூண்டிடவும் வழி வகை செய்யும் என்ற நம்பிக்கையும் இருப்பதனாலே.

அன்புடன்,

நெறியாளர்
www.adirainirubar.in

Anonymous said...

இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து தொய்வின்றி செய்திட துவா செய்வோம்...

Yasir said...

நல்லவிசயம்...எங்கள் துவாவில் நீங்களும்

அதிரைக்காரன் said...

மூன் தொலைக்காட்சியில் வரும் குர்ஆன் பயிற்சி வகுப்பு, துபாயில் தமிழ் வழியிலான குர்ஆன் பள்ளி (மதரஸா) செல்லும் வாய்ப்பில்லாத எங்கள் பிள்ளைகளுக்கு மிகவும் உதவியாக இருந்தது. அழகு தமிழில் எளிய குர்ஆன் மணனப் பயிற்சி. இதை எங்கள் முஹல்லாவில் நடந்த பைத்துல்மால் குர்ஆன் மாநாட்டில் சிடியாக விநியோகிக்க சகோ.முதுவை ஹிதாயத் மூலம் முயற்சித்தும், வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

புதுப்பள்ளியில் ஆர்வமுள்ள இளம் ஆலிம்களைக் கொண்டு இதேபோன்ற நிகழ்ச்சியை நேரலையாக இல்லாவிட்டாலும் பதிவு செய்தேனும் ஒளிபரப்பலாம். நிச்சயம் இது வெளிநாடுகளிலுள்ள (அதிரைவாசிகளின்) தமிழ் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வாய்ப்பிருந்தால் இதையும் பரிசிலிக்கவும்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

சகோதரர் அதிரைக்காரனின் பரிந்துரை வரவேற்கத்தக்கது, வாய்ப்புகள் அமையும்போது நல்ல பரிந்துரையையும் இணைத்துக் கொண்டு தொடர்வோம் இன்ஷா அல்லாஹ் !

ஆலோசனைக்கும் கருத்திற்கும் ஜஸாக்கால்லாஹ் ஹைர்.

sabeer.abushahruk said...

//வெளி நாட்டில் வசிக்கும் குடும்பங்களுக்கு வீட்டுக்கே மார்க்க விசயங்களை கொண்டு செல்வதற்கு இறைவன் இதில் ஈடுபடும் அனைவருக்கும் நன்மையயும், அவர்களின் பொருளாதாரத்தில் ஏற்றத்தையும் , சுகாதாரத்தில் சுறுசுறுப்பையும் தரட்டும்.//

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தாஃவா பணி முழுப் பயனளிக்க துஆவும் நன் முயற்சிக்கு வாழ்த்துக்களும்.

தவறு தான் என்று தெரிந்தும் முன்னோர் பின்பற்றினார்களே என்ற கண்மூடித்தனமான வாதமோ, முழு தீர்க்கமான தெளிவு கிடைக்காததை (சர்ச்சை,மாற்றுக் கருத்துகளும் இருந்தும்) திட்டவட்டமாக அடித்துச்சொல்லும் அதிரடிப் பேச்சோ இல்லாமல் பொதுவான இஸ்லாமிய அழைப்பு பணி என்ற கொள்கை பிரச்சாரம் அனைவராலும் தொடர் பயனாளியாகக் கூடிய நிலையை உருவாக்கும்.

தினமும் என்பதால் 1 மணி நேரம் அதிகமாக தெரிகிறது. 30- 40 நிமிடங்களே முழுக் கவனத்திற்கு போதுமானதாக இருக்கும்.

UNICONCHENNAI said...

நல்ல விஷயம்.
நிச்சயமாக பாரட்டப்பட வேண்டியது.
தொய்வின்றி தொடர வாழ்த்துக்கள்.
அல்லாஹ் தங்களின் முயற்சியை வெற்றியடைய செய்வான்.

வஸ்ஸலாம்

அப்துல் ஹமீது

U.ABOOBACKER (MK) said...

மாஷா அல்லாஹ்! வரவேற்கத்தக்க சிறந்த முயற்சி.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
// தினமும் என்பதால் 1 மணி நேரம் அதிகமாக தெரிகிறது. 30- 40 நிமிடங்களே முழுக் கவனத்திற்கு போதுமானதாக இருக்கும். //

சகோ; எம்.ஹெச் சொல்வது நியாயமான கருத்தாக தெரிகிறது.நம் சகோ,சகோதரிகள் சினிமாபடம்,சீரியல்,கிரிக்கெட்,போன்ற தொடர்களை எவ்வொளவு நேரமாக இருந்தாலும்,கண்ணை சிமிட்டாமல் தூக்கத்தை தியாகம் செய்ய கூடிய சில நபர்களுக்கு.இது போன்ற மார்க்க சொற்பொழிவுகளை அதுவும் கணினிக்கு முன்பு அமர்ந்து ஒரு மணி நேரம் கேட்பது என்பது அரிது.

சில நபர்கள் வேலை பளுவின் காரணமாகவும்.மருந்து மாத்திரை உட்கொள்வதின் காரணமாகவும்.சீக்கிரமாக உறங்க
கூடியவர்களும் இருப்பதை கருத்தில் கொண்டு.நேரத்தை சுருக்கி கொண்டால் நலமாக இருக்கும்.

மார்க்க சொற்ப்பொழிவு கேட்பவர்கள் ஏதோ டயம் பாஸுக்காகவும் .கதைகள் கேட்பவர்களாகவும்.ஆகி விடாமல்
ஒரு விசயத்தை சொன்னாலும் குறைந்த நேரத்தில் தெளிவாக சொல்லி அதை அவர்கள் விங்கி கொள்வது
நன்மையை பயக்கும்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

சகோதரர்கள் MHJ மற்றும் LMS(அ):

இது முதல்படி இன்ஷா அல்லாஹ் இந்த முன்னோட முயற்சியின் தொடராக தங்களின் பரிந்துரைகளையும் நிச்சயம் கருத்தில் கொண்டு அதற்கான நேரத்தையும் வகுத்திட முயற்சிக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு