நம் சகோதரர்களால் நடத்தப்படும் எந்த ஒரு ஊடகமும் (எவ்வழியானாலும்) அதன் செயல்களில் தடைபட வழிவகை செய்யக் கூடாது ! அதுவும் இலவச வலைப்பூக்களின் கொட்டகையில் பிறந்து அதிரைக்கென்று தலைமகனாக விளங்கிய ஒரு வலைப்பூவான அதிரைஎக்ஸ்பிரஸ் நிதானமாக தொடர வேண்டும் !
இங்கே ஊடகத்தில் நிகழும் உணர்வுகளை கற்பவர்கள் / பதப்படுத்தப் படுபவர்கள் பின்னால் வேறுபட்ட இடங்களில் ஜொலிக்க வாய்ப்புகள் நிறைந்தே இருக்கும் இக்காலச் சூழலில் அதிரை வலைப்பூக்களை பயிற்சிக் களமாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும், ஒரே பள்ளிக் கூடத்தில் படித்த நாம் அங்கே பச்சை, சிவப்பு, மஞ்சள், ஊதா என்று அணிகள் பிரித்து மூர்க்கமாக விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டுவிட்டு அன்று மாலையே ஒன்றாக சாப்பிடச் சென்ற நம்மால் ஏன் இதனை ஜீரனித்துக் கொள்ள முடியவில்லை !?
ஏன் நேற்றைய தேர்தலில் எதிரும் புதிருமாக பைக் ஓட்டியவர்கள் தேர்தல் முடிந்ததும் அடுத்தடுத்தவரின் பின்னால் உட்கார்ந்து செல்லும் பக்குவம் படைத்த நம்மால் ஏன் வலைப்பூக்கள் விஷயத்தில் பதற்றமாகிறோம் !?
அதிரை வலைப்பூக்களுக்கு பயிற்சிக் களமாக இருந்திடலாமே நாம், ஆர்வமிக்கவர்களை அவரவர்களின் அழகிய பெயர்களில் அசத்திடவும் அரவணைக்கவும் முன்னுதாரனமாக இருந்திடலாமே. தமிழகத்தில் எத்தனையோ இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கின்றன அவர்களுக்கு முன்னோடியாக இருக்கலாமே.
கரு உருவாக எத்தனை போராட்டங்கள், உறக்கமிழந்தமை, வாதங்கள், எதிர்ப்பலைகள் இப்படியாக கடந்து வந்து அந்தக் கரு வளர்ந்து அழகிய படைப்பாக கண்களுக்குத் தெரியும்போது எப்படி வந்தாய் ஏன் வந்தாய் என்றா கேட்போம்? இல்லையே, ரசிக்கவல்லவா செய்வோம் அந்தப் பக்குவம் இங்கே வந்திட்டால் வென்றவர்கள் நாம்தான் என்பதை எங்கேயும் மார்தட்டலாமே.
எல்லா வகைத் திறன்கள் கொண்டை அதிரை முஸ்லிம் சமுதாயம் அனைத்து இடங்களிலும் ஜொலிக்க வேண்டும், தடங்கள் வேறாக இருந்தாலும் செல்லுமிடமெல்லாம் அல்லது ஊன்றும் இடமெல்லாம் முத்திரை பதிக்க வேண்டும் இதனைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம்.
எங்கள் சகோதரர்களின் அதிரைஎக்ஸ்பிரஸ் நிறுத்தப்படுவதை நாங்கள் எக்காரணம் கொண்டும் எங்கேயும் அனுமதிக்க முடியாது !
கைகொடுப்போம் கரம் வலுத்திட, குரல் கொடுப்போம் அதிரை செழித்திட, அரவணைப்போம் அன்பை காட்டிட...!
எக்ஸ்பிரஸ் தொடர்ந்து இம்ப்ரஸ் செய்ய வாழ்த்துக்கள்.. !
என்றும் அமைதியின் ஆளுமையாக.. !
- அதிரைநிருபர்-குழு
23 Responses So Far:
சபாஷ்! இதுதான் முதிர்ச்சி. I appreciate AN for its matured approach.
அஸ்ஸலாமு அலைக்கும். எனக்கு பெருமையாக இருக்கிறது நானும் அதிரை நிருபரில் ஒரு பங்களிப்பாளன் என்ற முறையில் அமைதியின் அன்பு ஆளுமை! இதன் நிர்வாக தலைமை ! இளைமையுடன் கூடிய உற்சாகமாக செயல் படுத்தும் நிலைமை! கூட்டு முயற்சியின் வலிமை! எல்லாவற்றிலும் புதுமை! மொத்தத்தில் அருமை! மறப்போம் பகைமை! இனி அதிரைக்கு பசுமை!இது நம் அனைவரின் கடமை!
அதிரை எக்ஸ்பிரஸை நிறுத்த அது மீட்டர்கேஜில் மட்டும் பயணிக்கும் இரயில் இல்லை...அது எல்லாவித கேஜிலும் தடையின்றி ஒடும் அதிரடி எக்ஸ்பிரஸ்...அதிரை நலனுக்காக துவக்கபட்ட எதுவும் முடப்படக்கூடாது...”பெயரில்லாமல்” வரும் புல்லுருவிகளை துடைந்தெரிந்து விட்டு தொடருங்கள் பயணத்தை.....
கைகொடுப்போம் கரம் வலுத்திட, குரல் கொடுப்போம் அதிரை செழித்திட, அரவணைப்போம் அன்பை காட்டிட...!
மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி!
இந்தப் பதிவு வலைப்பதிவர்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் முயற்சி.
//எங்கள் சகோதரர்களின் அதிரைஎக்ஸ்பிரஸ் நிறுத்தப்படுவதை நாங்கள் எக்காரணம் கொண்டும் எங்கேயும் அனுமதிக்க முடியாது !//
உரிமையுடன் கருத்திட்டிருப்பது நிச்சயமாக ஊக்கத்தை அளிக்கிறது.
மிக்க நன்றி!
இதுதான் அறிவின் முதிர்ச்சி என்பது
// ஒரே பள்ளிக் கூடத்தில் படித்த நாம் அங்கே பச்சை, சிவப்பு, மஞ்சள், ஊதா என்று அணிகள் பிரித்து மூர்க்கமாக விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டுவிட்டு அன்று மாலையே ஒன்றாக சாப்பிடச் சென்ற நம்மால் //
நல்ல "எடிட்டோரியல் டச்" ஆனால் போட்டியுண்டு பகையில்லை என்பதுபோல் இதையும் அதே வகையில் எடுத்துக்கொள்ளலாம். எக்ஸ்பிரஸை நிருத்தியதற்க்கு போட்டிதான் காரணம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை வேறு சில காரனங்களும் உள்ளன.
அநத தளத்தின் சக பங்களிப்பாளனாக உங்கள் கூற்றுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேலையில் உங்கள் ஆவல் நிறைவேற நானும் என்னால் ஆன முயற்ச்சியை செய்வேன் இன்ஷா அல்லாஹ்.
Thank you so much brothers, Thanx for all your esteemed comments. will meet in another article, little busy with work till year end.
வாழ்க இந்த முன்மாதிரி அனுகுமுறைகள். வளர்க வலைப்பூக்களுக்கிடையேயான போட்டி! செழித்தோங்குக தரமான ஊடகச் சேவை! சிறக்கட்டும் என் சகோதரர்களுக்கிடையே ஒற்றுமையும் கூட்டமைப்பும்!
நிறுத்தங்களில் நின்று செல்லுதல் சாதாரன எக்ஸ்பிரஸ்ஸுக்கு வேண்டுமானால் பொருந்தலாம், அதிரை எக்ஸ்பிரஸ்ஸுக்கல்ல!
தொடருங்கள் பயணத்தை தவக்கல் அல்லாஹ் என்று!
ஆஹா, தரமான ஒரு பத்திரகையின் 'தலையங்கம்' படித்த உணர்வு இதை படித்து முடிக்கையில்..
எக்ஸ்பிரஸ் தொடர வேண்டும். "பயணத்தின் இறுதியில்" என்னும் கட்டுரைக்கு அடுத்ததாய், "பயணிக்கும் உறுதியில்" என்னும் கட்டுரையை எதிர்பார்க்கின்றேன்..
//எக்ஸ்பிரஸ் தொடர வேண்டும். "பயணத்தின் இறுதியில்" என்னும் கட்டுரைக்கு அடுத்ததாய், "பயணிக்கும் உறுதியில்" என்னும் கட்டுரையை எதிர்பார்க்கின்றேன்..//
தம்பி ஷஃபாத்தின் கருத்தினை வழிமொழிகிறேன் !
அஸ்ஸலாமு அலைக்கும்.அதிரை எக்ஸ்ப்ரஸ் பங்களிப்பாளர்களுல் ஒருவன் என்றவகையில் இந்தப்பதிவு மிகுந்த ஊக்கமளிக்கிறது.இன்ஷா அல்லாஹ் விரைவில் இதுகுறித்த 'நல்ல செய்தி'யுடன் அதிரை எக்ஸ்பிரஸ் ஓடத்துவங்கும்.
(தனிப்பட்ட முறையில் எனக்கிருக்கும் வருத்தங்களை தண்டவாளத்தில் வைத்துவிட்டேன்.நம் நல்ல நோக்கங்களுக்கு நற்கூலிதர வல்லஅல்லாஹ் போதுமானவன்)
வேண்டுகோள்: தனித்தனியாக தளங்கள் இருந்தாலும் இலக்கு ஒன்றாக இருக்க வேண்டும்.
(இதை வலியுறுத்தி நண்பன் தஸ்தகீர் ஒரு மகா (மோசமான:) கவிதை எழுத வேண்டும்.:))
/*அதிரை எக்ஸ்பிரஸ் ஓடத்துவங்கும்*/ - Good news !!
அதிரை எக்ஸ்பிரஸ் தொடந்து செல்ல வாழ்த்துக்கள் அதனுடன்நாமும் இணைந்து பயணிபோம்
அதிரைக்காரன் சொன்னது…
//(இதை வலியுறுத்தி நண்பன் தஸ்தகீர் ஒரு மகா (மோசமான:) கவிதை எழுத வேண்டும்.:)//
அதிரைநிருபரின் எழில் எதை எழுதினாலும் அங்கே மொழி நிமிர்ந்து நடைபயிலும் அதற்கு மெகா பிக்சல்ஸில் ஃபோட்டோவும் போட்டுடலாம்"
அதிரை எக்ஸ்பிரஸ் நிச்சயமாக ஒரு நடு நிலையான வலைப்பூவாகத்தான் இருந்தது,.. இன்ஷா அல்லாஹ் தொடரும் என்று எதிர்பார்ப்போம்!!
கம்பன் எக்ஸ்பிரஸ் நின்றபோது வந்தது துக்கம்
அதிரை எக்ஸ்பிரஸ் நின்றால் போய்விடும் தூக்கம்
கையும் ஓடலே, காலும் ஓடலே கவிதை வேணுமாம்
மையாக என் உணர்வுகளைக் கொட்டி எழுதுவேன் தோழா!
அதிரை எக்ஸ்பிரஸை நிறுத்த அது ஒன்றும்
குதிரை வண்டியல்லடா தோழா!
ம்...ம்ம். தஸ்தகீருக்கு மெட்டு எடுத்துக்கொடுத்திட்டேன். இனி அவன் பார்த்துக்குவான். :)
அஸ்ஸலாமு அலைக்கும்,
என்னுடைய தனிப்பட்ட கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
சகோதர வலைத்தளம் அதிரை எக்ஸ்பிரஸ் நிறுத்தப்படுகிறது என்ற செய்தி சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிரை எக்ஸ்பிரஸ் தொடர்ந்து இணையக்கடலில் மிதக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.
அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் பல நட்பு விரிசல்களுக்கு காரணங்களாகிவிடுகிறது என்பதை அனுபவம் பாடமாக கற்றவர்களில் நானும் ஒருவன்.
வலைப்பூக்களின் ஒருங்கினைப்பு என்பது வரும் காலங்களில் நிச்சயம் சாத்தியம்.இன்ஷா அல்லாஹ்.
அதற்கு பொருமையும், நிதானத்துடன் கூடிய புரிந்துணர்வு வலுவடையும் பட்சத்தில் வலுவான அதிரை ஊடக கூட்டமைப்பு உருவாகும். அப்படி ஒரு சூழல் ஏற்படுவதற்கு முன்பு ஒவ்வொரு வலைஞர்களும் இந்த இலவச வலைப்பூவின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தனக்கு ஏற்ற பாணியை உருவாக்கி தங்களை வலுவான ஊடகக்காரர்களாக உருவாக முயலாமே.
நான் படித்த நபிமொழி ஒன்றை உங்கள் அனைவருடன் பகிர்ந்துக்கொள்கிறேன். சிந்தித்துப்பார்த்தால் இந்த நபிமொழியில் நிறைய அர்த்தங்கள் உள்ளது.
ஒருவர் முஃமினாக இருக்கக்கூடிய நிலையில் சமுதாயத்தை பிரிக்கவோ, சமுதாயத்தை விட்டு பிரிந்து நிற்கவோ ஒருபோதும் எண்ணமாட்டார். ஏனெனில். ஒரு முஃமின் மற்றொரு முஃமினுக்கு கண்ணாடி போன்றவர் என்றும் ஒரு முஃமின் மற்றொரு முஃமினின் உடம்பை போன்றவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஒரு முஃமினுக்கும் மற்றொரு முஃமினுக்கும் உள்ள தொடர்பை எந்தளவிற்கு ஆணி அடித்தாற் போல் நபி(ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள். இதை இந்த சமுதாயத்திலுள்ள தலைவர்களும் தனிமனிதர்களாக இருக்கும் நாமும் சிந்திப்போம்.
அல்லாஹ் போதுமானவன்..
கம்பன் எக்ஸ்பிரஸ் நின்றபோது வந்தது துக்கம்
அதிரை எக்ஸ்பிரஸ் நின்றால் போய்விடும் தூக்கம்
கையும் ஓடலே, காலும் ஓடலே கவிதை வேணுமாம்
மையாக என் உணர்வுகளைக் கொட்டி எழுதுவேன் தோழா!
அதிரை எக்ஸ்பிரஸை நிறுத்த அது ஒன்றும்
குதிரை வண்டியல்லடா தோழா!
அதிரை வண்டி அது அதிர வரும் வண்டி
எழுதுக்கும் கருத்துக்கும் ஒரு புகையில்லா பகையில்லா வண்டி
அதை அண்டி என்னை போல் சிறு எழுத்தர்
முதல் பெரு எழுத்தர் வரை காத்திருக்கோம்
பச்சை கொடி காட்டி விட்டோம் இன்னும் ஏன் தாமதமோ?
(எவ்வளவு மோசமாக வேண்டுமானாலும் எழுதலாம் என்று ரிஸ்க் எடுத்துவிட்டபடியால்...சலுகையைப் பயன்படுத்தி இதோ:
சஞ்சலம் என்பது மனத்திரை
அத்திரை விலக்கி
அதிரை எக்ஸ்பிரஸ்
முத்திரை பதிக்கனும்
மூத்தநற் தளமென்று
எத்தனை யெத்தனை
சோதனை தாக்கினும்
எத்தனுக் கெத்தனென
எத்தி அதைப் போக்கனும்
ஊர்ச் செய்தி தருவதில்
பேர் வாங்கிச் சிறக்கனும்
யார் எதிர்ப்பையும்
வே ரறுக்கனும்
நிலையங்களில் கூட
இனி
நிற்கக்கூடாது
கைக்காட்டி மரங்களை
காயலாங்கடையில் போடனும்
பின்னூட்டங்களில்
கவன்ம் வைக்கனும்
பெட்டியில்லா எக்ஸ்பிரஸ்ஸெனும்
பேர் வராமல் காக்க்கனும்
அறிமுகம் இல்லாதோரின்
நரி அகம் அறியனும்
வெரி கொண்ட வீணர்களைக்
கரி முக மாக்கனும்
போலாம்....ரைட்!
தலைமகனுக்கு தமையன் கொடுத்த ஊக்கம்மூலம் எக்ஸ்ப்ரஸ் ஜூம்மாவிற்குப்பின் இயங்கத்துவங்குவதை எதிர்பார்க்கிறோம்.
சபீர்காக்காவின் கவிச்சட்டங்கள் பாதுகாப்பான பயணத்திற்கு நல்லது.
அஸ்ஸலாமு அலைக்கும்.
அதிரை நிருபர் குழுமச் சகோதரர்களுக்கும் பின்னூட்டங்கள் மூலம் ஆதரித்த / எதிர்த்த அனைத்துச் சகோதரர்களுக்கும் நன்றி.
இன்ஷா அல்லாஹ் இன்றுமுதல் அதிரை எக்ஸ்பிரஸ் மீண்டும் இயங்கும்.
http://adiraixpress.blogspot.com/2011/11/blog-post.html
"நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்; (ஓர் அணுவளவு) நன்மை செய்யப்பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து, அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான். Al Quran 4:40
பயணத்தின் இறுதியில் சில வார்த்தையில் மீண்டும் தொடக்கத்தில் பல வார்த்தை ...!~ ~
அஸ்ஸலாமு அலைக்கும்...
2007ஆம் ஆண்டு மே மாதத்தில் நமதூர் அல் அமீன் பள்ளி பிரச்சனையைக் கருவில் கொண்டு மிக அருமையான சேவையில் தொடங்கி,அனைத்து உள்ளூர் செய்திகளையும் வெளிநாட்டில் உள்ளவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து நமதூர் தன்னார்வ சகோதரர்கள் சிலர் இணைந்து செய்யலப் பட்டனர்.
இதன்மூலம் எந்தவித வருமானமும் பார்க்கவில்லை என்றாலும்,ஆர்வத்துடன் மின்னல்எக்ஸ்பிரஸ் வேகத்தில் செய்யல் பட்டு வந்தார்கள்.
தேர்தல் சமயத்தில் யாருக்கும் பாதகம் இல்லாமல் உண்மை செய்திகளை
உடனுக்கு உடன் பதிந்தார்கள், மற்ற இணைய தளத்திற்கும் செய்திகளை பகிர்ந்துக் கொண்டார்கள்.(குறிப்பிடத்தக்கது)
அதிரை வலைப்பூக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று அதிரைஃபேக்ட் சில நாட்களுக்கு முன்பு பதிவிட்டது. அத்தகைய முயற்ச்சியில் சில வலைப்பூ மட்டும் முன் வந்தது, குறிப்பாக அதிரை எக்ஸ்பிரஸ் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்து வந்தது. மற்ற வலைப்பூக்கள் முன்வரவில்லை.
பிறகு ஒற்றுமையை நாடி அதிரைஎக்ஸ்பிரஸ் வலைப் பதிவை நிறுத்திக் கொண்டது.
அதிரை எக்ஸ்பிரஸ் பதிவுகளை நிறுத்தியதும்,சிலருக்கு கொண்டாட்டமாக பின்னோட்டத்தில் தென்ப்பட்டது, இதில் பலருக்கு பதிவுகளை நிறுத்தியதில் தேட்டமாக காணப்பட்டது.
அதிரை எக்ஸ்பிரஸ் மீண்டும் தொடர வேண்டும் என்று பலரும் வழியுறுத்தியதால் மீண்டும் தொடங்குவதRகான ஏற்பாடுகள் (மசுரா) நடைபெறுகிறது என்று அறிவிக்கையிட்டார்கள்.
விரைவில் ... பயணம் தொடர வாழ்த்துக்கள். . .
அதிரை ஃபேக்ட் பகிர்ந்துக்கொண்டு செயல்படும் என்பதையும் உறுதியோடு
தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் அன்புடன்...
சிராஜுதீன் m.s.t - (அதிரைஃபேக்ட்)
adiraifact@gmail.com
adiraifact.blogspot.com
மாஷா அல்லாஹ் இந்த விட்டுக்கொடுத்தலும், செயல்பாடுகள் வேண்டும் என்ற மனப்பாங்குமே நம் அதிரை மக்களின் முழு முழக்கமாக இருக்கு. அதிரை எக்ஸ்பிரஸ் தான் மற்ற வலைத்தளங்களுக்கு பெற்றோர் மாதிரி, பெற்றோர் இல்லா பிள்ளைகளின் நிலமை?
கடந்தெ தேர்தலில் எக்ஸ்பிரஸின் வேகம் எனக்கு புடிச்சிருந்தது...பாராட்டுக்கள்,
தொடரவேண்டும்
உன் தொண்டு
நீதான் அதிரைக்கு
முதுகுத்தண்டு...
Post a Comment