Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நட்புக்குத் தோழர்கள் பரிசு ! 218

அதிரைநிருபர் | November 22, 2011 | , , , , ,


>>>> பின்னூட்டங்கள் 200யும் தாண்டிச் சென்று கொண்டிருப்பதனால் பின்னூட்டங்களின் நிறைவில் வலப்பக்கம் இருக்கும் சிறிய சுட்டியை தட்டினால் 201க்கு பிறகு பதியப்பட்ட பின்னூட்டங்களை தொடர்ந்து வாசிக்கலாம்... :) <<<<

சகோதரத்துவத்தின் நிழலாம் தோழமைப் பற்றி நாம் சரியாக புரிந்திருக்கிறோமா என்ற ஐயம் எனக்குண்டு. இப்பதிவு நட்புணர்வுக்காக பிரத்தியேகமானது. இதில் தத்தமது தோழர்/தோழியர் பற்றி சுவாரஸ்யமாகச் சொல்பவர்களுக்கு, அமெரிக்க வாழ் தோழர் நூருத்தீன் அவர்கள் எழுதி, சத்தியமார்க்கம்.com தளத்தில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கும் "தோழர்கள்" நூல் முதலாம் பாகம் பரிசளிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்!. ஆன் யுவர் மார்க்...செட்... கோ!
நட்பு!
நல்லதோர் 
மனிதம் செய்ய...
அது
நலம் பெற...
நண்பனின் கைகளில் 
கொடுத்துவிடு!

நட்பு...
சொந்தங்களை வென்ற
சுகமான சந்தம்,
பந்தங்களுக்குள் கட்டுறாத
பாந்தமானதொரு பழக்கம்!

நட்பு...
எதையும் எதிர்பார்க்காத
இதயம் கொண்டது,
விற்க வாங்க முடியாத
விலை மதிப்பற்றது!

வள்ளுவரே...
உடுக்கை இழக்கும்வரை
உதவப் பொறுப்பதில்லை...
இடுப்பில் இருக்கும்போதே
இழக்காமல் 
இருக்கிப் பிடித்து 
இடுக்கண் களையும்
எம் நட்பு!

இனி,

என் முதன்மை நண்பனுக்கு ஒரு வெள்ளை அறிக்கை. மற்ற நண்பர்கள் குறித்துப் பின்னூட்டுவேன்.

என் ஜாகிருக்கு...

இடுக்கண் களையவும்
இருப்பதைப் பகிரவும்
இதயத்துள் நுழைந்தவன் - நீ!

இளமை சிறக்கவும்
இனிதாய்த் திகழவும்
இன்முகம் கொண்டவுன் -நீ!

வணிகம் கற்கச் சென்று
மனிதம் கற்பித்தவன்,
மனிதர்கள் மத்தியில் 
புனிதம் போதிப்பவன்!

அந்த ஒரு நாள்
விடிந்திரா விடில்
அறிமுகம் என நீ
வந்திரா விடில்...

கால்பந்து திடலும்
கணினி மொழி வகுப்பும்
புதுக் கல்லூரி விடுதியும்
புல் விரித்தத் திடலும்

தற்கால நினைப்பில்
கண்றாவியாய்த் தோன்றும்
கடைக்கண் பார்வைகளும்
காதலிகள் கிறக்கமும்

உப்பளக் காற்றும்
உமுரிச்செடி பிரித்த
ஒற்றையடிப் பாதையும்

இரவின் துவக்கத்தில்
கிளம்பும் ரயில்
அதிகாலை அதிரையை 
அடையும் அழகும்

ஒற்றையாய் எனக்கு 
வாய்த்திருக்காது நண்பா!

எத்தனையோ எண்ணங்கள்
எழுதி முடித்தபோதும்
உனக்கென துவங்கியதை
முடிக்க மனமில்லை!

வயிற்றுக்குப் பசித்தால்
வாய்தானே உண்ணும்?
உடலை நகர்த்த
கால்தானே நடக்கும்?

என்னை உயர்த்தவல்லோ
உன்னில் நினைத்தாய்
உன்றன் துஆவில்நான்
உலகை ஜெயித்தேன்!

நட்பின் வலிமையை
நாலுபேருக்குச் சொல்ல
நானோ நீயோ
உன்னையோ என்னையோ
ஈன்றெடுக்க வேண்டும்...
நட்பும் தாய்மையும்
ஒத்த உணர்வுகள் என
நின்றுரைக்க வேண்டும்!

......உன் சபீர்!

218 Responses So Far:

«Oldest   ‹Older   1 – 200 of 218   Newer›   Newest»
Shameed said...

நான் இந்த இருவரின் (ஜாகிர் சபீர்)நட்பை பார்த்து எனது நண்பர்களிடம் நட்பை வளர்த்துக்கொண்டேன் சுருங்க சொன்னால் இவர்களிடம் இருந்து நட்பை COPY PASTE செய்து கொண்டேன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நட்புக்கென்று எதனையும் இழக்கத் துணிந்தவனுக்கு, அதனை தக்கவைப்பதில் தடுமாறி விட்டானோ / இடரிவிட்டானோ என்று எண்ணத் தோன்றுகிறது !

என் செய்வது...

பள்ளிக்குச் செல்வதும்
ஒன்றாக !
துள்ளி விளையாடியதும்
ஒன்றாக !
கடைக்கண் நாடியதும்
ஒன்றாக !
வெளியூர்கள் சென்றதும்
ஒன்றாக !
தெருச்சந்திப்பில் நின்றதும்
ஒன்றாக !
உறங்கச் செல்வதனாலும்
ஒன்றாக !
விழித்தெழுந்து சந்திப்பதும்
ஒன்றாக !
கல்லூரிக் காலங்களில்
கயமை விளகியிருந்தோம்
கடந்து வந்ததும்
காலம் தாழ்த்திட்டோமோ ?

அட!
நடப்பதை
நட்பு சொன்னால்
அப்படியே நம்பிடுவோம் !

உறவுக்கு உறவாக
உரிமைக்கு உயிராக
உறவுகளுக்கு உரமாக
உண்மைக்கு உவமையாக
உறவுகள் உதறினாலும்
ஊரே உதறினாலும்
உயிர்த் தோழன்
உயிர்த் தோழன்(தான்)

Ahamed irshad said...

ஆஹா இதுவ‌ல்ல‌வோ ந‌ட்பு..

இதுக்கு ஜாஹீர் காக்கா ப‌தில‌டி க‌விதை எழுதுவாங்க‌ளா?



// கால்பந்து திடலும்
கணினி மொழி வகுப்பும்
புதுக் கல்லூரி விடுதியும்
புல் விரித்தத் திடலும் //

செம‌.. ஐ லைக் இட் வெரி மச்..

crown said...

நல்லதோர்
மனிதம் செய்ய...
அது
நலம் பெற...
நண்பனின் கைகளில்
கொடுத்துவிடு!
--------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஆஹா! தேனூறும் தழிழை கவிதை வீனையாக்கி மீட்டிய விரலுக்கு மோதிரமாய் நட்பை அனுவிக்கிறேன். விரலை வேட்டினாலும் கழற்றமுடியாத நட்பாய் அது இருக்கும் . நம்மை வார்க்கும் பெற்றொருக்கு பின் நம்மை கைகோர்கும் நல் நண்பனே நம்மை கரை சேர்க்கும் தோனியும், எம்மை ஏற்றி விடும் ஏனியும்.

crown said...

சொந்தங்களை வென்ற
சுகமான சந்தம்,
பந்தங்களுக்குள் கட்டுறாத
பாந்தமானதொரு பழக்கம்!
------------------------------
ஆம் எதற்குள்ளும் கட்டுறாத உறவே நட்பு! இது ஒரு காந்த்தம் பாந்தமாய் நம்மை ஈர்க்கும். நம்முடன் உயிருக்கும் நிலைத்திருக்கும். நல் நட்பே வார்தைக்குள் அடங்காத ஒரு காவியம், நம்மை அழகாய செதுக்கும் உயிர் ஓவியம். திரவியம் தேடி போனாலும், திரை கடல் ஓடிப்போனாலும் எம்மை விட்டு விலகாத கண்ணால் கானமுடியாத பாசக்கயிற்றில் கட்டபட்ட பந்தம். நம் சொந்தம் தாண்டி வந்த சொந்தம்.சொந்தம் வந்தோம் போனோம் என இருக்கும். ஆனால் நட்பு வந்தோம் , இருந்தோம், போனாலும் ஓன்றாக போவோம் என இருக்கும்.

crown said...

வள்ளுவரே...
உடுக்கை இழக்கும்வரை
உதவப் பொறுப்பதில்லை...
இடுப்பில் இருக்கும்போதே
இழக்காமல்
இருக்கிப் பிடித்து
இடுக்கண் களையும்
எம் நட்பு!
---------------------------------------
இடுப்பில் உள்ள உடுப்பு விடுப்பு எடுக்கும் போது தடுத்து மானம் காக்கும் நல் நட்பு.

crown said...

நட்பின் வலிமையை
நாலுபேருக்குச் சொல்ல
நானோ நீயோ
உன்னையோ என்னையோ
ஈன்றெடுக்க வேண்டும்...
நட்பும் தாய்மையும்
ஒத்த உணர்வுகள் என
நின்றுரைக்க வேண்டும்!
----------------------------------------
அல்ஹம்துலில்லாஹ்! இவர்கள் வாழ்ந்து காட்டி வருவதை விட சிறந்த கருத்தை பதிந்து விட முடியாது. இருவரின் நட்பு போல் அனைவருக்கும் நல் நட்பு நீடித்து வாழ அல்லாஹ் அருள் புரியட்டும் இவர்களின் வாழ்வை அல்லாஹ் இன்னும் செம்மையாகவும். நீண்டதாகவும், அரோக்கியமாகவும் ஆக்கிவைப்பானாக ஆமீன்.

sabeer.abushahruk said...

ரியாஸ் அஹ்மது, வாசம்: சிங்கப்பூர்

பூவோடு சேர்ந்து
நாறும் மணக்கும் 
இவனோடு சேர்ந்து 
நானும் 

முகமது அலி:(அல் நூர் ஹஜ் சர்வீஸின் நிர்வாக இயக்குனர்)

வறுமையான இளமையை
எமக்குள்
பொறுமைகொண்டு வென்றோம்

கஸ்ட்டங்களிலிருந்து
கற்பதை
இவரிடம் கற்கலாம்

வெளியே தெரிவதோ
இவரின் பிரம்மாண்ட நிகழ்வுகள்
நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்
இவரின் தர்மங்கள்

ஹாஜா இஸ்மாயில், வாசம்: சவுதி

இவனின் நட்பு வட்டம் சிறியது
இதனுள் 
இடம் பிடித்ததே பெரியது

ஆஷிக் அஹ்மது, வாசம்:சென்னை (புளியாணம்)

எங்க குரூப்பிலேயே வெள்ளையுஞ்சொள்ளையுமா இருப்பான்
நான் மனசச்சொன்னேன்!

(இனியும் தொடர்வர் என் தோழர்கள்)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அர்த்தமுள்ள அன்பாளனும் அவனே
ஆருயிர் தோழனும் அவனே
இல்லம் தேடி நேசிப்பவனும் அவனே
ஈவிரக்கம் காட்டி பழகுபவனும் அவனே
உண்மையுடன் நேசிப்பவனும் அவனே
ஊரையே ஊட்டியாக்கி சுற்றச்செய்ததும் அவனே
எழுப்பியும் தொழ அழைத்ததும் அவனே
ஏணியாய் உயர வித்திட்டவனும் அவனே
ஐயங்களை அழகாய் அகற்றியவனும் அவனே
ஒழுக்கங்களை உரைத்திட்டவனும் அவனே
ஓதிப்படிக்க ஒத்துழைத்ததும் அவனே
ஃ எங்களைப்போல் நட்பை வளர் மகனே!

Anonymous said...

நட்பினால் உயர்ந்தோர் பலர் இருக்க, அதனால் தாழ்ந்தோரும் அதிகம் உள்ளனர். நட்பு என்றால் என்ன என்பதை புரிவதுதான் இங்கே முக்கியம்.

“உன் நண்பனைக் காட்டு
நீ யாரென்று சொல்கிறேன்”

“நல்ல நண்பர்களைப் பெற்றவன்
இவ்வுலகையே வெல்வான்”

“கூடா நட்பு கேடாய் முடியும்”

“நட்பு அனைத்து எல்லைகளையும் கடந்த ஒன்று''


நமது பெற்றோரையும், உடன்பிறந்தோரையும் நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் நமது நண்பன் யாராக இருக்க வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும்.

நட்பு என்பது ஒருவரின் வாழ்வையே திசைமாற்றும் வல்லமைக் கொண்டதால், அது விஷயத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் தீவிர எச்சரிக்கையும், கவனமும் தேவை.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
--------------------------------------------

sabeer.abushahruk சொன்னது…

தோழர்களே,

ஒரு சின்ன நினைவூட்டல்.

பெயர் சொல்லாவிட்டாலும் தம் நண்பனைப் பற்றிச் சொல்பவர்களுக்குத்தான் “தோழர்கள்” புத்தகம் பரிசு (உ. அபு இபுறாஹீம்). நட்பு எனும் பந்தத்தைப் பற்றிச் சொல்பவர்களுக்கு, அவர்களைக் கூப்பிட்டு உட்கார வைத்து “தோழர்கள்” புத்தகத்தை வாசிச்சி (தஹல்லிம் மாதிரி) காட்டிவிட்டு அனுப்பிடுவோம். கைலலாம் தரமாட்டோமாக்கும் J

எனவே, மாற்றி யோசிங்க மக்களே....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா : வருவோம்ல... அது ஒரு முன்னோட்டமே !

வளைகுடா வேலைக்கு என்று இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்ததும், முதல் அட்வைஸ் எனக்கு "வேலையிலிருக்கும் போது நண்ட்பர்களோடு அரட்டை அடிக்காதே" :)

அதனால ஃபோன் வந்தால் அப்புறம் பேசுறேன் (கேஸ்தான்) வந்த புதிதில் அப்போ ஏது மொபைல் ? ரூமில் ஏது டெலிஃபோன் ? காத்திருக்கனும் பொதுத் தொலைபேசிக்கு ! (அவ்வளோ தூரமான்னு கேட்க்கப்படாது) !!

இப்போதானே இண்டர்நெட்டு(கள்) ! மீட்டெடுக்க உதவுகிறது ! வருவோம் வருவோம் !

ZAKIR HUSSAIN said...

எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பே நட்பாக உருவாக முடியும். என் நண்பர்கள் [சபீர் குறிப்பிட்ட , முஹம்மது அலி, ரியாஸ், ஹாஜா இஸ்மாயில் அனைவரும் ] மற்றும் துவான் ஹாஜி சாகுல் [ தமாம் , சவுதிஅரேபியா ] இவர்களைப்பற்றி எழுதுவதற்க்கு சில எபிசோட் தேவைப்படும். இதில் சாகுல் மட்டும் நண்பன் என அழைப்பதா? தம்பி என அழைப்பதா எனும் அளவுக்கு வயதில் குறைவு. அன்பில் நிறைவு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வாய்க்கல் பள்ளிக்கூடத்திலிருந்து ஆரம்பிப்போமா ?

மஞ்சள் பைகளில்
சிலேட்டு பலகையும்
சில்லரைகள் தொங்கும்
சட்டை ஜோப்பும்
பள்ளிக் செல்வோம்
பள்ளிக்கு முழுக்கு
பஹ்ரைனுக்கு சென்றான்
(சுண்டைக்கா) இக்பால்...
இவனோடு இன்னும்
நால்வர்...

சொந்தங்ங்களே நண்பர்களாக..
அதுவும் ஒரே சந்தில் !
கோபக்காரன் என்னைப்போல்
சாந்தம்
சீக்கிரம் என்னிடம்
சுனங்கும் அவனிடம்..
மு.இ.ஷாஃபி..

அதே வீட்டில் மற்றொரு சொந்தம்...
எங்கள் இருவருக்கும்
எங்கள் உம்மா இருவரும்
தங்களுக்குள்ளேயே சமாதானமும்
செய்து கொள்வார்கள்
அப்படி அந்நியோன்யம்
நாங்கள் வீட்டுக்கு லேட்டாக வந்தால்..
மு.அ.ஹாலித்...

வீடிருக்கும் சந்தை தாண்டி வந்துடுவோமா ?

நேர் கோடு அது...
நிமிர்ந்த தெருவும் அதுவே
நடுவில் இருப்பதனால்
இன்றும் அதுவே
நடுத்தெரு..

அங்கே !
வலப்பக்கம் இடப்பக்கம்
திரும்பினாலும் குழு குழுவாக
நண்பர்கள்...
அதில்
மீட்டெடுத்த தொடர்புகளில்
நிறைய இருக்காய்ங்களே !!
அவய்ங்களே வந்து தலையைக் காட்டுறாங்களான்னு பார்ப்போம் !
இல்லைன்னா லிஸ்ட்டு போடலாம்...

அடுத்த முக்கிய கட்டங்கள் (மறக்கவே முடியாதவர்கள்)..
கா.மு.மே.பள்ளியிலிருந்து நெருங்கியவர்கள்...
அதன் பின்னர் புதுக்கல்லூரி...ம்ம்ம்ம் அப்புறம்...

நிறைய இருக்கே... என்னா செய்யலாம் ?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

// கூப்பிட்டு உட்கார வைத்து “தோழர்கள்” புத்தகத்தை வாசிச்சி (தஹ்லிம் மாதிரி) காட்டிவிட்டு அனுப்பிடுவோம். கைலலாம் தரமாட்டோம் J. //

பரிசை அறிவித்துவிட்டு முறணாக அறிவிப்பது சரியல்ல.முதல் கட்டமாக அதிரை நிருபர் குழுவில் முறையிட்டு இருக்கிறேன். எங்களுக்கெல்லாம் வாசித்து காட்டுவது எப்படி?காணொளி மூலமாக இருக்குமோ!

அதிரைநிருபர் பதிப்பகம் said...

//முதல் கட்டமாக அதிரை நிருபர் குழுவில் முறையிட்டு இருக்கிறேன்.//

சகோ MHJ : பரிசு உண்டு நிச்சயம், துணுக்காக எழுதாமல் தூக்கலாக நட்புகளை பற்றி எழுதச் சொல்லித்தான் கருவின் நாயகன் கருத்திட்டார்கள்...

கொஞ்சம் மாத்திதான் யோசிங்களேன்... (தானாக வருமே அருவி போல.. சொல்லவா வேனும்?)

அப்துல்மாலிக் said...

நட்பு என்பது மண்டலங்கள் அனைத்தும் சேர்ந்தது, அதை ஒரு வட்டத்துக்குள் அடைக்கு முடியாது, இருந்தாலு மிக்க நிருங்கியவங்களை அடக்க முயற்சிப்பது என்பது மேலும் நெருங்கி இருக்கவேண்டும் என்பதற்காகவோ, அருமை சபீர் காக்க்கா, உங்க நட்பூ மேலும் பல பூக்களை மெருகேத்த வாழ்த்துக்கள்

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சலில் : sabeer.abushahruk சொன்னது…
-------------------------

இக்பால், கலிஃபோர்னியா:
வயதுக்கு மீறிய
அறிவு முதிர்ச்சி.
பந்தா இக்பால் பிறகு
சொந்த மருமகனாகிப் போனான்

நிஜாம், கோலாலம்புர்:
கொஞ்சம்
எக்ஸ்ட்ரா சோகம் காட்டினால்
உதவியென
உடுத்தியிருக்கும்
வேட்டியைக்கூடத் தந்துவிடும் இவன் தர்மம்.

ஜலால், சிங்கப்பூர்:
கற்பதில்
கிறையாத ஆர்வம்
இப்ப கேட்டாலும்
ஏதாவது படித்துக்கொண்டிருப்பன்.

இர்ஃபான், எக்ஸ் மக்கா:
நல்ல மனசு என்பதால்
நல்ல வாழ்க்கை இவர் வசம்

ஹமீது, தம்மாம்:
இவர்
இருக்குமிடத்தில்
இலை தளையெல்லாம் சிரிக்கும்.
நகைச்சுவையை
உடுத்திக்கொண்டுதான் வெளியே வருவார்
பாசம் வைப்பதில் பெரிய ஆள்
அதில் பங்கம் வந்தால்
அழுதுவிடும் சிறுவர் மனம்.

செய்யது அஹமது கபீர், துபை:
இவன்
பேச்சைக் கேட்டுக்கொண்டே இருப்பேன்.
நக்கலும் நய்யாண்டியும்கூட
நற்சிந்தனையும் இருக்கும்.

ஸலீம், லால்பேட்டை:
என்னிடமும்
செய்யதிடமும்
சிக்கி
சின்னாபின்னப்படும்
‘லோல்’பேட்டைக்காரர்

அஸ்லம், துபை:
தீராத விளையாட்டுப் பிள்ளை
இப்பவும் ஊருக்குப் போனால்
திடலும் கால்பந்தும்தான் இவன் விருப்பம்

மQரூப், சவுதி:
சிரித்த முகமின்றி
இவனை நான்
பார்த்ததே யில்லை.
வித்தா
என்ன விலைகொடுத்தும் வாங்கலாம்
இவன் தங்க மனசை

அலாவுதீன், அபுதாபி:
அட்ரஸைக்குறித்துக்கொள்ளுங்கள்

அலாவுதீன்,
மேற்பாத்து: ஒழுக்க நெறி
குரான் ஹதீஸ் தெரு
தவ்ஹீது போஸ்ட்
நாடு: இஸ்லாம் மார்க்கம்

மேலே உள்ள லிஸ்ட்டில் சேர்க்க இன்னும் உண்டு தோழர்கள், ஆயினும் தொடர்புகள் குறைந்துவிட்டதாலும் வயது கூடிவிட்டதாலும் நினைவில் இல்லை.

இனி, மரியாதைக்குறிய நண்பர்கள், தாமதமாய் வாய்த்த நண்பர்கள், நட்பு கிடைக்காதா என்று ஏங்க வைக்கும் நண்பர்கள் என்று இன்னும் மூன்று லிஸ்ட்டுடன் அடுத்த பின்னூட்டம்....

Yasir said...

காம்பிட்டேஷனை குளோஸ் பண்ணிடதீங்க...நாங்களும் வருவோம்....கவிக்காக்காவின் நட்புகளை பார்த்து அதனை அவர்கள் விவரிக்கும் திறமையைக்கண்டு வியக்கின்றேன்

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சலில் : sabeer.abushahruk சொன்னது…
-------------------------

மரியாதைக்குறிய நண்பர்கள்:

ஜமீல் காக்கா ஷார்ஜாஹ்:
இவர்களின்
அருகில் நிற்கும்
அருகதை வாய்த்ததும்
எனக்குள்ளான
பிற தகுதிகளும்
எனக்கே தெரிய வந்தது.
கண்ணை மூடிக்கொண்டு
பின்தொடரலாம்.

ஏன் ஏ எஸ் சார், வியட்நாம்:
குற்றாலம், கொடைக்கானலென
இவருடன் சுற்றாத ஊரே இல்லை.
பெருத்த அறிவாளி
பிறகு ஏன்
எங்களைப்போன்ற
‘அட்டு’ ஆட்களிடம் சகவாசமோ?!

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சலில் : sabeer.abushahruk சொன்னது…
-------------------------

தாமதமாக வாய்த்த நண்பர்கள்:

அபு இபுறாஹீம், துபை:
சுறுசுறுப்புக்கு சொந்தக்காரர்
சேவைகளோடு பந்தக்காரர்
பேச்சிலும் எழுத்திலும்
தீமைகளுக்கு எதிராக
கோப மிருக்கும்
அளவுக்கு
நல்லவற்றை ஆதரிக்கும்
குணமு மிருக்கும்.

தாஜுதீன், துபை:
தவறுகளை எதிர்க்கும்
அக்னிக் குஞ்சு
துஷ்டனைக் கண்டால்
திருத்த முனையும் மனசு
முடியாவிட்டால்
தூர விழகும் பாங்கு.

யாசிர், ஷார்ஜாஹ்;
இவர் வயதில்
என்னிடம் இருந்த
பல குணங்களை
நான்
இவரிடம் காண்கிறேன்.
(பி.கு.: நல்ல குணங்களை மட்டும்)

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

நட்பின் நாயகரே அதிரையில் பிறந்து வளர்ந்து நட்பினை வளர்த்து நண்பர்களாகிய நீங்கள்.U.A.E , SINGAPOORபோன்ற நாடுகளுக்கு
பிரிந்து சென்றாலும் உங்கள் நட்பின் நினைவாற்றல் மூலம் எங்கள் நட்புகளை நினைத்து இணைந்திட (அ.நி) தளத்தில் கவிதை என்னும் பாசத்தால் பலமான பாலத்தை கட்டி தந்துள்ளீர் .

அதிரை நிருபர் வாசகர்களின் நட்புக்கு எப்போது அஸ்திவாரம் போட போறியே?

ZAKIR HUSSAIN said...

எனக்கென்று தனி நண்பர் வட்டம் இல்லை..சபீர் யார் யாரை எழுதுகிரானோ அதுவே நான் எழுதியதற்க்கு சமம். [ சத்தியமாக சோம்பேரித்தனம் இல்லை ] மற்றும் நிகழ்வுகளை வேண்டுமானால் நான் எழுதுகிறேன்.

ZAKIR HUSSAIN said...

இக்பால் ..இவன் ஒருவனால் மட்டும்தான் என்னிடம் சண்டை போட்டுக்கொண்டே நட்பாக இருக்க முடியும். என்னிடம் கோபித்துக்கொண்டு பேச மாட்டான். என்னைப்பற்றி யாராவது தப்பாக பேசினால் [இக்பாலிடம் ] அவனுக்கு 7 1/2 ஆரம்பித்துவிட்டது என அர்த்தம்.

இர்ஃபான் [ மெக்கா ] ...அம்மாவின் கைப்பக்குவம் சமையலில். பேச ஆரம்பித்தாலே நகைச்சுவையுடன் ஆரம்பிப்பவர்.

ஜலால் [ சிங்கப்பூர் ] இவர் அநியாயத்துக்கு சுத்தமான மனுசன். சின்ன வயதில் நான் , சபீர் எல்லாம் வாலிபால்,கால்பந்து விளையாடி கறுத்துப்போயிருக்கும்போதும் [ இப்பவும் அப்படித்தான் இருக்கோம்] ஜலால் மட்டும் அயன் கலையாத சட்டை போட்டு வருவது ஆச்சர்யம்.

செய்யது அஹமது கபீர் [ துபாய் ] ...6 வது படிக்கும் காலத்திலேயே ஸ்போர்ட்ஸ் , விளையாட்டு என கூட வருவாப்லெ. சில சமயஙகளில் தரும் உவமானம் பல நூற்றாண்டுக்கு சிரிப்பை வர வழைக்கும். 2007 ல் ஊர் போனபொது நான் உடுத்தியிருந்த கைலியை பார்த்து சொன்னது " என்னடா பொன்வண்டு கலர்லெ கைலியெடுத்திருக்கே?'.

ஷரபுதீன் நூஹு.[ கலிபோர்னியா, அமெரிக்கா ] ...சின்ன வயதிலேயே உயர்ந்த சிந்தனை உள்ளவன். ஸ்கூலில் ஆரம்பித்து கல்லூரிவரை கூட வந்தவன். கல்லூரியில் படிக்கும்போது பல விசயங்களை இவனிடம் சொல்லி நம்ப வைத்து வேடிக்கை பார்ப்பது பொழுதுபோக்கு...என்ன ஏதுனு கேட்காமெ அப்படியே நம்பிடுவான்.

sabeer.abushahruk said...

 
 
இவர்கள் நட்பு வாய்க்காதா என ஏங்க வைத்தவர்கள்:
 
கிரவுன் தஸ்தகீர், கலிஃபோர்னியா:
 
இவர்
உரை எழுதிய பிறகு
என் எழுத்துக்கள்
முப்பரிமானம் பெருகின்றன.
 
தொலைபேசியில்கூட
இலக்கியம் சொட்டச்சொட்டத்தான்
பேச முடிகிறது இவரால்
 
பெயர்ச்சொல் வினைச்சொற்களைவிட
பாசச்சொல் அன்புச்சொல்லால் கட்டிப்போடுபவர்
 
நூருத்தீன், “தோழர்கள்” ஆசிரியர், சியாட்டில்
சிறு பிராயத்தில்
கிடைக்காமற் போனாரே இவர்
என்று ஏங்க வைப்பவர்.
 
 
போக, இன்னும் பழகும் வாய்ப்பு குறைவாக வாய்த்து, பேனா நண்பர்கள் நிலையில் இருக்கும் சத்ததியமார்க்கம் தள நண்பர்கள், அதிரை நிருபர் வாசக, பங்களிப்பாளத் தோழர்கள், அபு ஆதில், மாலிக், நட்புடன் ஜமால்,  கவியன்பன், இர்ஷாத், அபு சுஹைமா, ஜமாலுதீன், ஃபத் ஹுதீன்,  ஷஃபாத், ஹார்மிஸ் அப்துர்ரஹ்மான், ஹாலித், எல் எம் எஸ், எம் எஸ் எம், எம் ஏ ஹெச், மர்மயோகி, மீராஷா ராஃபியா என மிக நீண்டது என் நண்பர்கள் பட்டியல்.  நல்லவேளை என் எதிரிகள் பட்டியல் என வெளியிட இதுவரை ஒருத்தரையும் ஐ மீன் ஒருத்தர்கூட எனக்கில்லை.
 
நல்ல விஷயங்கள் நமக்கு உள்ளே முடங்கிவிடக்கூடாது. நட்பு நல்ல விஷயம். சத்தமா சொல்லலாம் இவர்கள் என் நண்பர்கள் என்று.
 
 

sabeer.abushahruk said...

விடுபட்ட நண்பர்களில் ரியாத் அன்வர்தீனின் பாசமும், தம்மாம் ரஜாக் காக்காவின் பரிவும் கத்தார் நூரானியின் நகைச்சுவையும், சென்னை அப்துல் காதரின் 'ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாவும்' சென்னை மெளஜூனின் அறிவும் saudi மொ...ஜலீலின் அன்பும் குறிப்பிடத்தகுந்தவை.

Shameed said...

நான் நட்ப்பு பற்றி சொல்லவேண்டும் என்றால் சொல்லிக்கொண்டே இருக்கலாம் முதலில் நவாஸ் பற்றி சொல்கின்றேன் எங்கள் தெரு தான் இருந்தாலும் ஊரில் இருக்கும்போது அதிக பழக்கம் கிடையாது நான் சௌதி வந்தபோது வார விடுமுறையில் சபீர் வீட்டுக்கு போய்விடுவோம் (வேறுஎங்கும் எங்களை போக விடமாட்டார் சபீர்)அங்கு நவாசும் வருவார் சுமாராகத்தான் பழகி வந்தோம் ஒரு வெள்ளிக்கிழமை நவாஸ் சபீர் வீட்டிற்கு வரவில்லை அன்று ஊருக்கு ஒரு நண்பர் புறப்பட்டு போக வந்திருந்தவர் சொன்னார் நவாஸ் மகளுக்கு சாக்லேட் வாங்கித்தருவதாக சொன்னார் ஆளை கணமே என்று ஊருக்கு போக இருப்பவர் சொன்னார் அதனால் என்ன நான் வாங்கித்தருகின்றேன் போய் நவாஸ் வீட்டில் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லி சாக்லேட் வாங்கி கொடுத்து விட்டேன். நவாஸ் தந்ததாக சொல்லி அவர் வீட்டில் கொடுத்து விட்டார்

மேற்சொன்ன விஷயம் எதுவும் நவாசுக்கு தெரியாது இவர் வீட்டுக்கு போன் செய்த போது சாக்லேட் வந்த விபரம் வீட்டில் சொல்லவும் இவருக்கு திக்குமுக்காடி போய் விட்டது யார் வாங்கி கொடுத்தது என்று அடுத்த வாரம் சபீர் வீட்டுக்கு வரும்போது நான் விபரம் சொன்னதும் அவருக்கு தாங்க முடியாத சந்தோசம் அதில் இருந்து என்மீது ரொம்ப பிரியமாகவும் அவர் பிள்ளைகளுக்கு சாமான் வாங்கும்போது என் பிள்ளைக்கும் மறக்காமல் சாமான்கள் வாங்கிவிடுவார்
ஒரு வெள்ளிகிழமை சபீருக்கு டேக்கா கொடுத்துவிட்டு நாங்கள் ஜுபைலில் இருந்து பக்கத்து ஊரான ரஹீமா வந்தோம் அங்கு ஆசிக்( புளியாணம் ) ரூமில் தங்கி இருந்தோம் நான் எங்கு போனாலும் கைலி டூத் பிரஸ் எடுத்து போய்விடுவேன் அன்று ப்ரெஸ் செய்ய பிரஸ்ஸை எடுத்த போது ஈராமாக இருந்தது நவாஸிடம் கேட்டேன் ஏன் பிரஸ் ஈராமா இருக்குது என்று பிரஸ் கிழே விழுந்து விட்டது கழுவி வைத்தேன் என்று சிரித்துக்கொண்டு சொன்னார் அதன் பின் நான் ப்ரெஸ் செய்து குளித்து வந்தவுடன் நவாஸ் உண்மையை சொன்னார் நான் உங்கள் ப்ரஸில் தன் ப்ரெஸ் செய்தேன் நான் ப்ரெஸ் எடுத்துவர மறந்து விட்டேன் என்று அந்த அளவுக்கு அன்னியோன்னியமாக பழகி வந்தார்

ஒருநாள் நான் அயன் செய்து வைத்திருந்த சட்டையை காணவில்லை அடுத்த நாள் அதே இடத்தில் மாட்டி இருந்ததை பார்த்து விட்டு நவாஸிடம் விவரம் சொன்னேன் அதற்கு அவர் இந்த சட்டையை போட்டுக்கொண்டு எங்க ஆபீஸ் பக்கம் வந்துராதிய என்று சொன்னார் அதன் அர்த்தம் சட்டை காணமல் போன அன்று என் சட்டையை அவர் போட்டுக்கொண்டு போய் உள்ளார்,

ஒரு முறை சபீர் வீட்டில் (ஜுபைல்) பரோட்டா நானும் நவாசும் போட்டுக்கொண்டிருந்தோம் சபீர் வந்து நானும் பரோட்டா போடவா என்று கேட்டதும் நவாஸ் சொன்னார் போட்ட பரோட்டோவை எப்படி காகா போடுவீங்க என்று கேட்டதும் சபீர் சிரித்த குபீர் சிரிப்பில் வீட்டில் இருந்த அனைவரும் கிச்சனுக்கு ஓடி வந்து விட்டார்கள்

1999 நோன்பு பிறை 14 லில் ஊருக்கு புறப்பட்ட போன பாகிஸ்தானி ஆபீஸ் சாவியையும் எடுத்துக்கொண்டு ஏற் போர்ட் போய்விட்டார் அதை வாங்குவதற்காக கம்பெனி டிரைவர் கூட ஏற் போர்ட் போனவர் வண்டி விபத்துக்குள்ளாகி இறந்து விட்டார் இனிப்பில் தொடங்கிய நட்பு விபத்து எனும் கசப்பில் கட்டாகிப்போனது .

Shameed said...

முஹமது அலி அல் நூர் ( எனக்கு சாச்சா)இவரின் நட்ப்பு வட்டாரம் சபீர் ஜாகிர் ஹாஜா இஸ்மாயில் நிஜாம் நூராணி அண்ணன் N,A,ஷாகுல் சார் ரியாஸ். எங்கள் சாச்சாவின் நட்ப்பு வட்டாரம் மிகப்பெரியது என் சாச்சா சவுதி யில் இருந்து ஊர் வந்தால் எங்கு போனாலும் என்னையும் கூட அழைத்து போவார் இப்படியோ கூட போனதில் இந்த பெரிய நட்ப்பு வாட்டாரம் அப்படியோ சிறிய என் வயதை சார்ந்த ஆரிப் (லண்டன்) ஹாஜா (சிங்கபூர்) அப்துல்லா( கென்யா) சித்திக், மேனஜர் என்று அழைக்கப்படும் J J சாவானா ஆகியோர்களுடன் பழகி நட்ப்பு வட்டாரம் பெருத்து ( ஆட்களும்தான்) அந்த நட்பு இன்றுவரை சீரும் சிறப்புமாக உள்ளது

sabeer.abushahruk said...

கடற்கரைத்தெருவைச் சேர்ந்த நண்பர் மாங்கனி இக்பால் அபுதபியில் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

(தகவலுக்காக)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கடற்கரைத்தெருவைச் சேர்ந்த நண்பர் மாங்கனி இக்பால் அபுதபியில் காலமானார்கள்.//

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க அல்லாஹ்விடம் துஆ செய்கின்றோம்.

crown said...

அபுஇபுறாஹீம் சொன்னது…

//கடற்கரைத்தெருவைச் சேர்ந்த நண்பர் மாங்கனி இக்பால் அபுதபியில் காலமானார்கள்.//

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க அல்லாஹ்விடம் துஆ செய்கின்றோம்.

Shameed said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க அல்லாஹ்விடம் துஆ செய்கின்றோம்

sabeer.abushahruk said...

ஹமீது,
நேற்று எழுதிக்கொண்டிருப்பதாகச் சொன்ன உங்கள் தோழர் பின்னூட்டம் எங்கே?

புக் வேணாமா?

Shameed said...

ஆரிப் இவன் என் நெருங்கிய நட்பு ,இவனின் அப்பாவும் என் அப்பாவும் நண்பர்கள் இவனின் வாப்பாவும் என் வாப்பாவும் நண்பர்கள் நானும் ஆரிப்பும் 3G மூன்றாவது தலை முறை நண்பர்கள் இவனைப்பற்றி சொல்வதென்றால் இவன் ஒரு நுணுக்கமானவன் கோழி சுடும் அடுப்பு பத்த வைப்பதிலும் சரி அல்நூர் ஹஜ் சர்வீஸில் ஹாஜிகளை கவனித்துக்கொள்வதிலும் சரி இவனது நுணுக்கம் அனைவரையும் கவர்ந்தது விடும் இவனது வார்த்தைகள் அனைத்தும் சிரிப்பை வரவழைக்கும். மல்லிபட்டினத்திற்கு சபீரின் புதிய காரில் போய் இருந்த போது காரை சுற்றி ஒரு இளம் வயது கூட்டம் நின்று கொண்டு நகரவேயில்லை சபீர் எவ்வளவு சொல்லியும் கூட்டம் நகரவில்லை ஆரிப் வந்து ஒரு வார்த்தை தான் சொன்னான் கூட்டம் ஓடிப்போய் விட்டது ( அது என்ன செய்தி என்பதை அறிய ஆர்வம் உள்ளவர்கள் சபீரிடம் போன் செய்து கேட்டுக்கொள்ளவும்)

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//ஹமீது,
நேற்று எழுதிக்கொண்டிருப்பதாகச் சொன்ன உங்கள் தோழர் பின்னூட்டம் எங்கே?//

புக் வேணாமா?

போட்டாச்சு பாருங்கள்

sabeer.abushahruk said...

ஹமீது,
நவாஸ் நினைவுகள் மீளவொண்ணாதவை. நீங்கள் சொல்லிய விதம் கண்களை ஈரமாக்குகின்றன.

ஒரு நினைவு:

விடிந்தால் நோன்புப் பெருநாள். நவாஸை அடக்கம் செய்துவிட்டு களைப்பாக இரவு 12 மணிக்கு வீடு திரும்பிய என்னிடம் கேட்டனர் என் பிள்ளைகள், 'நவாஸ் அங்க்கிள் வரலயா? கம்ப்யூட்டர் கத்துத் தர?'

"இல்லைமா, இனிநவாஸ் அங்கிள் வராது'
"ஏன் டாடி"
"நவாஸ் அங்க்கிளை மண்ணுக்குள் அடக்கம் செய்துவிட்டுத்தான் வருகிறேன்மா"
என் பிள்ளைகள் அடுத்த வாரமும் கேட்டுப் பின்னர் மெல்ல மெல்லத்தான் புரிந்துகொண்டனர் நவாஸ் மவுத்தாகிவிட்டார் என்பதை.

எல்லரையும்விட நீங்கள் தான் அந்த இலப்பிலிருந்து வெளிவர ரொம்ப சிரமமும் பட்டீர்கள் நிறைய நாட்களும் ஆகிப்போனது.

ஹ்ஹ்ம்ம்ம்.

crown said...

sabeer.abushahruk சொன்னது…
ஹமீது,
நவாஸ் நினைவுகள் மீளவொண்ணாதவை. நீங்கள் சொல்லிய விதம் கண்களை ஈரமாக்குகின்றன.

ஒரு நினைவு:

விடிந்தால் நோன்புப் பெருநாள். நவாஸை அடக்கம் செய்துவிட்டு களைப்பாக இரவு 12 மணிக்கு வீடு திரும்பிய என்னிடம் கேட்டனர் என் பிள்ளைகள், 'நவாஸ் அங்க்கிள் வரலயா? கம்ப்யூட்டர் கத்துத் தர?'

"இல்லைமா, இனிநவாஸ் அங்கிள் வராது'
"ஏன் டாடி"
"நவாஸ் அங்க்கிளை மண்ணுக்குள் அடக்கம் செய்துவிட்டுத்தான் வருகிறேன்மா"
என் பிள்ளைகள் அடுத்த வாரமும் கேட்டுப் பின்னர் மெல்ல மெல்லத்தான் புரிந்துகொண்டனர் நவாஸ் மவுத்தாகிவிட்டார் என்பதை.

எல்லரையும்விட நீங்கள் தான் அந்த இலப்பிலிருந்து வெளிவர ரொம்ப சிரமமும் பட்டீர்கள் நிறைய நாட்களும் ஆகிப்போனது.

ஹ்ஹ்ம்ம்ம்.
------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.இன்றும் மர்ஹூம் நவாசின் நினைவிலிருந்து முழுதாய் மீண்டு வர முடியாமல் தவிக்கிறேன் நானும்.

Yasir said...

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

Yasir said...

நட்பைப்பற்றி கருவின் நாயகன் நயமாக எடுத்துரைத்துவிட்டதால்,என் நண்பர்களை பற்றி சிறு குறிப்பு
சோமாஸ்கந்தன் –மெடிக்கல் ஆபிசர் தஞ்சாவூர் – என் பள்ளி தோழன் பண்ணிரண்டாம் வகுப்புவரையிலும்,கோபம் என்றால் எத்தனை கிலோ என்று கேட்கும் அளவிற்க்கு”அப்பாவி” படிப்பில் எங்கள் இருவருக்கும் போட்டி இருந்தாலும் பொறாமை இல்லால் இருந்தோம் போய்க்கொண்டிருக்கிறது எங்கள் நட்பு இனிமையாக

கலாம் – அன்பு / பாசம் என்ற வார்த்தைகளின் பவரை என்க்கு கண்டுபிடித்து தந்த பாச(விஞ்)ஞானி,எங்கள் வாப்பாவிற்க்கு கொட்டும் மழையிலும் இரத்தம் கொடுத்து காப்பாற்றிய என் உடன்பிறவா இரத்தம்

மதனன் – கரையூர் தெருவை சேர்ந்த எனக்காக உயிரையும் கொடுக்க துணிந்த உத்தமன்

சம்சுதீன் – தீன் மெடிக்கல் – நட்பு என்ற வார்த்தையை நாங்கள் என்னவென்று கத்து கொண்டிருக்கும் போது வாய்த்த வார்ப்பு இரும்பு இவன், இரக்க குணம் படைத்த , எளிதல் கோபப்படாத கொள்கைக்காரன்

சித்திக் – மற்றவர்களின் நலம்விரும்பி…தன் நலம் கேட்டாலும் பிறர் நல்லா இருந்தா பார்த்து பெருமைப்படும் பெரிய மனசுக்காரன்

ஹலீம் – ஜமால் ஹார்வேர்ஸ் – இரக்கத்தின் மறு உருவம் இவன்தான்,கஷ்டப்படுவதாக நடித்து கேட்பாருக்கும் கடன் வாங்கியாவது உதவுபவன்
அன்சாரி – எனக்கு மூத்தவன், தன் கற்றதை ஒரு பத்து பேருக்காகவது கத்து கொடுக்காவிட்டால் தலைவெடித்துவிடும் போல உணர்பவன்…நம்மூரில் அக்கெளண்ட்ஸ் என்றாலே அன்சாரிதான் என்று பேசும் அளவிற்க்கு பேறு பெற்றவன்

பாசின் : பார்க்க பந்தாவாக இருந்தாலும், யார் உதவிக்கு கூப்பிட்டாலும் பட்டென்று பறந்து சென்று உதவுபவன் அது அடி தடியாக இருந்தாலும் சரியே

இபுராஹிம் ஷா –ராம்நாடு – இப்பொழுது ஒகியோ அமெரிக்காவில்- கையில் கனமாக எது இருந்தாலும் அடுத்துவருக்கு கொடுத்துவிடும் கொடையாளி,அடியாக இருந்தாலும் சரியே,பணத்துக்கு மதிப்பு இல்லையென்பது இந்த சென்ரல் பேங்க்கை பார்த்தபிறகுதான் தெரிந்தது.

சல்தான் – பரமகுடி-தற்போது சவூதி…பெயருக்கெற்ற பேரறிவாளன்..லீடர்ஷிப்பை பற்றி பத்தி பத்தியாக சொல்லி தந்தவன்
பண்பாளன்.

இக்பால் – தி நியூ மெடிக்கல்ஸ் –சென்னை – இவனிடம் பேசிக்கொண்டிருந்தால்,வனங்கள் சூழ்ந்த சமவெளியில் கையில் கடலையை கொறித்து கொண்டு காற்று வாங்கும் சுகம் கிடைக்கும் அந்த அளவிற்க்கு அமைதியாக,அறிவாக பேசுவான்

கஸ்ஸாலி – இவரின் நட்பு “ரஸ்தாலி”யின் சுவையைவிட அதிகமாக இருந்தது..நல்ல அட்வைஸ்சர்

சாகுல் – சாஃப்ட்வேர் எஞ்ஜினியர் –சாஃப்ட்டாக பேசுபவர்…இவர் மொபைலில் பேசும் போது 5.1 பவர் ஸ்பீக்கர் கனெக்ட் பண்ணி கேட்டால்தான் காதில் விழும்…நிறைகுடம் தழும்பாது என்பதற்க்கு உதாரணம் இந்த உத்தமன்


சபீர்காக்கா – அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம்,பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற சொல்லுக்கு ஏற்ப தன் கடின உழைப்பால்
இரண்டையும் பெற்ற பெருமகன்…..இவ்வினியவருடன் பழகும் வாய்ப்பு எனக்கு அல்லாஹ் கொடுத்த பாக்கியம்,இலக்கணம் மட்டும் அறிந்த தலைக்கனம் துறந்த பண்பாளர்,,,என் குரு எல்லா விசயத்திலும்

தாஜூதீன் – பச்சைபிள்ளைபோல் முகம் கொண்ட,பிளீச்சிங் பவுடர் போட்டு கிளீன் செய்த மனதிற்க்கு சொந்தகாரர், பொறுமையை எப்படி கையாள்வது என்பதை இவரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்

அபுஇபுராஹிம் காக்கா -சிரித்த முகத்திற்க்கு சொந்தகாரர்.என் சிந்தனைகளுக்கு செவி கொடுத்து வளர்த்த ஆசிரியர்

சாகுல் காக்கா – சிறு வயதில் என்னை தூக்கி வளர்த்தவர்கள்…ஊரில் இருக்கும் போது அவர்களின் அருமையான பண்பான குணங்களினால் காந்தமாக கவரப்பட்டேன்

ஆன்லைனில் பழகினாலும் அட்டைபோல் மனதில் ஒட்டி என் பாசத்தை உறிஞ்சும் கிரவுன்,சொல்லாடல் மன்னர்,இவர் சொன்னால் எழுத்துக்கள் ஆடும் தன்னால்…எனக்கு கொஞ்சம் ஸ்டைலாக எழுத கற்றுக்கொடுத்த வித்தகர்


அதிகமாக பழகாவிட்டாலும் இனிமையாக என் மனதில் அப்பப்ப வந்து போகும் ஜாஹிர்காக்கா ,இர்ஷாத்,அபு ஈஸா,அபுபக்கர்,ஸ் மற்றும் பலர்…

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சலாம் ஹமீத் காக்கா, சபீர் காக்கா,

நானும் மர்ஹூம் நவாசின் நினைவிலிருந்து முழுதாய் மீண்டு வர முடியாமல் தவிக்கிறேன்.

அன்னாருக்காக துஆவுடன் பள்ளித்தோழன்:ஜஹபர் சாதிக்

sabeer.abushahruk said...

பணி நிமித்தம் நாளை ஒரு நாள் முழுதும் ஓமானில் இருப்பேன் (15 புல் டோஸர்களைப் பரிசோதிக்க)

திரும்பி வந்ததும் புத்தகம் வென்றவர்களைப்பற்றி அறிவிப்பேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என்னோட லிஸ்ட்டு(ம்) நீண்டது... எழுதலாம்ன்னா தொடரகத்தான் எழுதனும் (அப்படி எழுதியே பழகியதாலோ என்னவோ !?)..

என்ன செய்யலாம் !?

Yasir said...

//15 புல் டோஸர்களைப் பரிசோதிக்க// டைனோஸரையே கொடுத்தாலும் பிரிச்சு மேயுறவங்க நீங்க...புல் டோஸர் எம்மாத்திரம்

Muhammad abubacker ( LMS ) said...

// கடற்கரைத்தெருவைச் சேர்ந்த நண்பர் மாங்கனி இக்பால் அபுதபியில் காலமானார்கள்.//

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஈருலகிலும் நன்மையை வழங்கி அருள் செய்வானாக .

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சலில் கவியன்பன் கலாம் சொன்னது....

உள்ளத்திரையில்
உட்கார்ந்திருப்பவர்களான
உள்ளன்பு நண்பர்களை
வெள்ளைத்திரையில்
வெளிப்படுத்திக் காட்டி
பட்டியலிட்டு
மட்டுப்படுத்தல் கடினம்..!!!

இருப்பினும், இதோ என் பட்டியல்

என்னுயிர் நண்பன்
இன்னலில் காத்தவன்
அதிரையில் பிறந்தவன்
அமெரிக்காவில் பிழைப்பவன்

பெயர் முஹம்மத் தமீம்
நயமுடன் பேசும் “நாநயம்”
தட்டச்சு சுருக்கெழுத்து வகுப்பில்
பட்டென பிடித்தத் தோழன்

தற்கொலை முயற்சியினை
நற்போதனையால் தடுத்தவன்
அற்புதமாய்ப் பன்மொழிகள்
கற்றவன், பேச்சால் கவர்ந்தவன்

உயிர்காத்த அவனும்
உயிர்பெற்ற நானும்
உடலின் கண்களால்
நடமாட்டம் காணாமல்
கடல்கடந்து வாடுவதால்
இம்மடல் வழியே தூது விட்டேன்

தொடக்கப்பள்ளியின் தொடக்கம்:

இரண்டாம் நம்பர் ஸ்கூலில்
இரண்டு பேரும் ஒரே நாளில்
பதிவு செய்யப்பட்ட நாள் முதல்
பதிவான முதல் நண்பன் = அஷ்ரஃப்
(MAH அவர்களின் மருமகன்)

கா.மு.உ.பள்ளியின் இறுதி வகுப்பு வரை:

தொடக்கப்பள்ளியில்
தொடங்கிய வருகைப்பதிவேட்டின்
“அ”கர வரிசை அப்படியே
11ம் வகுப்பு வரை

அப்துல் கஃபூர்
அபுதபி ஸ்பானிஷ் எம்பசியில் பணியாற்றுகின்றார்
வெண்பாப் போட்டியில் வென்ற என்னை
நண்பன் , அன்புடன் “கவி.கலாம்” என்றான்
அவன் ஆசையும் ஆசியும் நிறைவேறியது

(மர்ஹூம்)அமீன் ஹாஜியார்(தப்லீஃகி)
அமைதியான சுபாவம்
அவரின் இறப்புச் செய்தி, உள்ளச்
சுவரில் எழுதிய என் கவிதை :
“மரணம் பயம் அல்ல, பயணம்”

அஹ்மத் ஹனீஃப்.இ.மு.
விளையாடுவதற்காக கடற்கரைத்தெருவில் அவன் வீட்டிற்குச் செல்வேன்
(என் உம்மாவின் பிறந்த தெரு கடற்கரைத்தெரு, என் வாப்பாவுக்கு நடுத்தெரு, பிறப்பிலேயே முஹல்லா கூட்டமைப்பு!!!)

இளம் வயதில் என்னுள் ஏற்பட்ட
இந்து, கிறித்துவ நண்பர்களிடம்
இணக்கமாக இருக்க வேண்டும்
என்ற உள்ளுணர்வால் இன்றும்
ஏராளமான மாற்று மத நண்பர்கள்
என்மீது அன்புடன் பழகுகின்றனர்

இதில். பள்ளிப்பருவத்தில்
இணைபிரியா நட்புடன் இருந்த
இருவர்:
ஸ்ரீதர் என்கின்ற சுப்ரமணி (தமிழாசிரியர் இராமதாஸ் அவர்களின் மருமகன்)
பள்ளிப்படிப்பு முடித்ததும் பணியிலமர்ந்தவன் (supervisor / Ashokleyland)

பள்ளிப்படிப்புக்குப் பின்னர் இன்னமும் “காணாமல்” தவிக்கின்ற கிறித்துவ நண்பன்: வின்செண்ட். அவன் கிடைக்க மாட்டானா என்று ஏங்காத நிமிடமே இல்லை. என் உயிர் போவதற்குள் அவன் என் கண்ணில் பட வேண்டும்

சமீபத்தில் துபையில் நடந்த அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு காரணமாக 36 ஆண்டுகட்குப் பிறகு காணக்கிடைத்தத் தோழன், கீழத்தெரு ஜியாவுத்தீன்.

(தொடரும்... 1/2)

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சலில் கவியன்பன் கலாம் சொன்னது....

புகுமுக வகுப்பில்:

நாகூர் ஜைனுத்தீன் மரைக்காயர். அன்று (1974)ஏற்பட்ட அதே நட்புடன் இன்றும் ஆகியுள்ளோம், குடும்ப நண்பனாகவும் ஆகிவிட்டான். சவுதியில்
ஒரே நிறுவனத்தில் சுமார் 30 ஆண்டுகளாகவும் (இன்னமும்) பணியாற்றும் அவன் என்னை “உலகம் சுற்றும் வாலிபன்” என்பான்.

கல்லூரியில்:
திருவாரூர் கலைஞர் கருணாநிதி கலைக்கல்லூரியில் வணிகவியல் படித்த பொழுது ஒரே பெஞ்சில் உட்கார்ந்தும் ஜும் ஆ நேரம் ஒன்றாக வகுப்பினில் வெளிநடப்புச் செய்வதுமாக இருந்தவர்கள்:

தாஜுத்தீன், பஷீர்

அல்-கோபரில்:

மேலே முதன்மையாகச் சொன்ன முஹம்மத் தமீம்(usa), மன்சூர்(ksa), தமீம் அன்சாரி(dubai), அப்துஸ்ஸமத் யாவரும் நான் சமைக்கும் மீன் ஆனத்தைச் சுவைக்க ஒன்று கூடும் அந்நாள் ஓர் இனிய நாள்!

ஜித்தாவில்:

ஃப்த்ஹுத்தீன்(இவர்களின் முயற்சி: அதிரை பைத்துல் மால்)

கணக்குப்பதிவியல் மற்றும் ஆங்கில இலக்கண பயிற்சி ஆசானாக இருந்து என்னிடம் மாணவர்களாய்ப் பயின்றவர்கள் பின்னர் நிரந்தர நண்பர்க்ளாய் ஆனவர்கள்:

ரஹ்மத்துல்லாஹ்(அதிரைப் பேரூராட்சித்தலைவர் அஸ்லம் அவர்களின் காக்கா) பத்ருத்தீன் (திருச்சி டால்ஃபின் ட்ராவல்ஸ் உரிமையாளர்)
அப்துல் வாஹித் (சென்னை எரோவேர்ல்ட் ட்ராவல்ஸ் உரிமையாளர்)
ஜாஃபர் மரைக்கான் (துபை(finance manager ஆகப் பணியாற்றுகின்றார்)
ஜாஃபர் (முன்னாள் கா.மு.கல்லூரி முதல்வர் தமிழறிஞர் கா.மு.அப்துல்கறீம் அவர்களின் புதல்வர்) தற்பொழுது உத்தமபாளையம் கல்லூரிப் பேராசிரியர்

இன்றுவரை முகநூல் வழியாக இக்கவிமுகத்திற்கு அறிமுகம் ஆகியுள்ளவர்கள் மற்றும் வலைப்பூவில் வருகைப் பதிவு செய்தவர்கள் சுமார் 2000 நண்பர்கள் உளர்.

கவிவேந்தர் சபீர்- அன்று அதிரை அனைத்து முஹல்லா கூட்டத்தில் என்னைக் கிள்ளிவிட்டுச் சற்றுத் தள்ளியேக் கடைசியில் அமர்ந்து விட்டுச் சென்றார், ஆனால், இன்று வரை என் எண்ணம், எழுத்து யாவற்றிலும் அருகில் நின்றார்.நான் கண்டு, பேசி, கட்டியணைக்கத் துடிக்கும் ஓர் ஒப்பற்றத் தமிழ்க்காவலர்- தன்னேரில்லாப் பாவல்ர்!

க்ரௌன் தஸ்தகீர்- “என்னைப் போல் ஒருவன்”

தாஜுத்தீன் : முதன்முதலாக எனது பேட்டியை எடுத்து இணையம் வழியாக என் குரல் ஒலிக்கவும், என் மேடைப்ப்பேச்சுக்கள் தத்ரூப்மாக அவரின் காமிராக் கண்களால் பதிந்து வலைப்பூக்களில் உலாவ் விட்ட உண்மைத் தோழன். சிரித்த முகம் என்னை அவர்பால் ஈர்க்கும்.

அபூஇப்றாஹிம்: இரு பின்னூட்டம் மூலம் கண்டு கொண்ட அவர்களின் இணையற்ற இரசனை, எழுத்தாற்றல், நேரில் பேசிக் கொண்டபோதும். இந்த நிமிடம் வரை இந்த அதிரை நிருபர் ஆக்கங்கள் மூலம் ஆச்சர்யப்பட வைத்த ஆசிரியர்.

வயதில் மூத்தோர்:
எனக்கு யாப்பிலக்கணம் கற்றுத் தரும் ஆசான்கள்:
இலங்கை காவியத்திலகம்: ஜின்னாஹ் ஷர்புத்தின் வாப்பா
அதிரை அஹமத் காக்கா
புதுவை இராஜ.தியாகராஜன்
நியூ ஜெர்ஸி. இலந்தையார்(சுப்பையர் இராமஸ்வாமி)

மார்க்க அறிவாலும், மொழிப்புலமையாலும் கவர்ந்தவர்கள்:
ஜெமீல் காக்கா(ஷார்ஜாஹ்)

புதுக்கவிதைக்கு வித்திட்டவர்கள்:

கவிப்பேரரசு வைரமுத்து
கனடாக் கவிஞர் புஹாரி (நானும் இவரும் 1981ல் அயல்நாட்டு வேலைத்தேடி மும்ப்பைக்கு ஒன்றாக வந்து ஒன்றாகக் கஷ்டப்பட்டவர்கள்)

இதற்குமேல் பட்டியல் விரிவஞ்சி விடுத்தேன் (2/2)

KALAM SHAICK ABDUL KADER said...

ஜித்தாவில்:

ஃபஸால் அஹ்மத் (இவர்களும் பைத்துல்மால் உருவாகக் காரணமானவர்கள்)

இணையதள ஏணிகள்:

முதுவை ஹிதாயத்
அதிரை ஹிதாயத் (அதிரை போஸ்ட்)

KALAM SHAICK ABDUL KADER said...

”நூற்கள் நமது வாழ்வின் தோழர்கள்” என்பதனாற்றான்
தோழர்கள் என்னும் நூலினை அன்பளிப்பாக வழங்குகின்றீர்களோ?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா, அருமையான கருவை தந்து எல்லொரையும் ரொம்ப சிந்திக்க வைத்து பழைநினைவுகளை எப்பாடுபட்டாவது எழுத வேண்டும் என்று ஊக்கமளித்துள்ளீர்கள். (பழைய நினைவுகளை எழுத MSM நெய்னா முஹம்மது கிட்ட டிரைனிங் எடுக்கனும் காக்கா)

அதிரையில் பள்ளி பருவத்தில் படித்த அருமை நண்பர்கள் நிறைய பேர்கள் மறக்க முடியாதவர்கள். இமாம் ஷாஃபி பள்ளியில் படித்த நல்ல நண்பர்கள் அமெரிக்காவில் இருக்கும் கஃபூர், அபுதாபியில் இருக்கும் ஃபைசல், இப்றாஹிம், சவுதியில் இருக்கும் சைபுதீன் என்று அரட்டை சேட்டைகளை கடந்து நற்பண்புகளை கற்றுத்தந்த சீனியர் ஜூனியர் என்று அதிரை நட்பு பட்டியல் நீண்டுக்கொண்டே செல்லும்.

சென்னையில் வசிக்கும் அதிரை நண்பர்கள் ஷிஹாபுதீன், சைரூப், ஆசிக் என்று பட்டினத்தில் வாழ்வதற்கு தைரியம் தந்தவர்களின் நட்பு சீனியர் ஜூனியர் என்று கணக்கில்லாமல் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்லும்.

கும்பகோணம் அல் அமீன் பள்ளியில் படித்த நாட்களில் கிடைத்த நண்பர்களை என்றுமே மறக்க முடியாது. அய்யம்பேட்டை ரியாஸ் அகமது, திருவாரூர் ஆசிக், அத்திக்கடை அனீஸ், அதிரை ஜமால் (ராயல் சூ மார்ட்), ராஜிக் & ரஜீஸ் (ஜலீலா ஜுவல்லரி) என்று பட்டியல் நீண்டாலும், அன்று முதல் இன்று வரை நட்பாலும், பாசத்தாலும் மரியாதையாலும் என் மனதை மட்டுமல்ல பழகும் எல்லோருடைய மனதில் நீங்கா இடம் பிடித்துவரும் நண்பர், சகோ. B.ஜமாலுதீன் அவர்கள் வரை என்று அல் அமீன் பள்ளி நட்பு பட்டியல் நீண்டுக்கொண்டே செல்லும்.

அதிரை க.மு. கல்லூரி காலங்களில் கிடைத்த அஸ்ரப் (TR பட்டினம்), சதக்கத்துல்லாஹ் (கடைய நல்லூர்), அதிரை அமீன்கள்(2), அப்துல் ஹாதி என்று நட்பு பட்டியல் நீலும். ஆசானாவும் நண்பர்களாகவும் இருந்து வரும் ஹாஜா சார் (BBA HOD), ஷாகுல் சார் (எங்க HOD) என்று நண்பர்களாக இருந்த ஆசான்களின் நட்பு பட்டியலும் நீண்டுச்செல்கிறது.

ஊரில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த காலத்தில் கிடைத்த ஆலிம் அப்துல் ரஸீத், நயீம், முபாரக், நஜ்முதீன், ஆசிக், தமீம் என்று இன்றை ஜூனியர் வீரர்கள் வரை நட்பு பட்டியல் நீண்டுக்கொண்டே செல்லும்.

சென்னையில் பணியில் இருந்த காலத்தில் கிடைத்த அடைக்கப்பன் (timex watch distributor), முன்ஷிர், விஜயாலயன் (அப்போது RADO Watch country manager), சென்ற வாரம் மரணமடைந்த கலீல் பாய் (zimson watch company owner) என்று எண்ணிலடங்கா நட்பு பட்டியல் நீண்டுக்கொண்டே செல்லும்.

சென்னை புத்துக்கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் காலத்தில் கிடைத்த என் பெயர் கொண்டவர் S. தாஜுத்தீன் (திருச்சி), சிந்தா மதார் சேட் (சின்னமனூர், தேனி), மீரான் (மதுரை), யூனுஸ் (மலப்புரம், கேரளா), சபீர் (கூத்தானல்லூர்)என்று எண்ணிலடங்கா நட்பு பட்டியல் நீண்டுக்கொண்டே செல்லும்.

மேல் சொன்ன நண்பர்களை போல் எனக்கு இனி நல்ல நட்புகள் இனி கிடைப்பது கடினம் என்று எண்ணினால் நான் நிச்சயம் முட்டாள். மேல் சொன்னவர்கள் போல் எனக்கு கிடைத்த பலமான நட்பு அதிரைநிருபர் என்ற வலைப்பூ மூலம் கிடைத்தது பெயர் குறிப்பிட்டால் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்லும். பாசத்தையும், நேசத்தையும், வாழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும் தந்துவரும் அதிரை சொந்தங்கள் அதிகம் நிறைந்த அதிரைநிருபர் பங்களிப்பாளர்கள், கருத்திடுபவர்கள் எல்லோருமே என் நண்பர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை சத்தம்போட்டுச்சொல்கிறேன்.

எல்லாவற்றிக்கும் மேல் ஒரேஒரு முக்கியமானதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உடன் பிறந்த சொந்தத்தையும் (சகோதரர்), உடன் பிறவா சொந்தங்கள் (குடும்பத்தவர்கள்) அனைவரையும் நண்பர்களாக கருதி பழக்கப்பட்டதாலே, மேல் சொன்ன அத்துனை நல்ல நண்பர்களும் எனக்கு கிடைப்பதற்கு காரணம் என்று என்றுமே சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.

இறுதியாக ஒன்றே ஒன்று...

இவ்வுலகில் எங்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த நட்பு எங்கள் தாயார். இப்போது இவ்வுலகில் இல்லை, சந்தோசத்தையும், துக்கத்தையும் பகிர்ந்துக்கொள்ள கிடைத்திருந்த மிகச் சிறந்த நட்பை (தாயை) இழந்த மனிதர்களில் நானும் ஒருவன். நிறைய எழுதலாம் என்று ஆசை தான். ஆனால் தனி பதிவே எழுதனும் நேரம் கிடைக்கும் போது. இன்ஷா அல்லாஹ்.

இவ்வுலகை விட்டுப்பிரிந்த உறவுகளுக்காவும், நட்புகளுக்காகவும் அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.

நட்போடு பழகும் நல்ல இளைய மற்று மூத்த நண்பர்கள் இன்று போல் என்றும் நன்மையின் பக்கம் அழைத்துச் செல்லுபவர்களாக இருக்க படைத்த அல்லாஹ் ரப்புல் ஆலமீனிடம் துஆ செய்வோமாக.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அன்புள்ள தாஜுதீனுக்கு,
உங்கள் தாயார் அவர்கள் சுவனம் சென்றுவிட்ட செய்தி இதுவரை செவிக்கு எட்டாமல் போய்விட்டது.அவர்களுக்காக துஆ செய்கிறேன்.

அபூ சுஹைமா said...

உறவில்லா இருவரிடையே உறவை ஏற்படுத்தும் நட்பு பற்றியும் நண்பர்கள் பற்றியும் நிறைய எழுதலாம். நட்புக்கு மட்டுமின்றி எழுதவும் வாய்க்க வேண்டும்.

நாலைந்து மடல்கள் மூலமே தொடர்பு கொண்ட என்னையும் தங்கள் நட்பு வட்டத்தில் சேர்த்துக் கொண்ட சபீர் காக்காவுக்கு நன்றி.

நவாஸ் ஜஹபருக்கு மட்டுமன்று எனக்கும் பள்ளித் தோழனே. நவாஸின் மரணச் செய்தியை அண்மையில்தான் கேட்டு அதிர்ந்தேன். இன்ஷா அல்லாஹ் சுவனத்தில் சந்திப்போம்.

sabeer.abushahruk said...

(அடுத்தபடியாக, பரிசுகளை அறிவிக்க தோழர் சபீரை மேடைக்கு வருமாறு அழைத்து அமர்கிறேன் - ஒரு தோழன்)

தோழர்களே,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அரை சதத்தையும் தாண்டிச் சென்றிருக்கும் பின்னூட்டங்களின் மூலம் ' நட்பு' எத்தனை உன்னதமானது என்பதை விளங்கி யிருப்போம். சந்தோஷம்.

இனி, போட்டி நிபந்தனையின்படி " தோழர்கள்" புத்தகம் வென்றவர்கள் வரிசைக்கிரமமாக, காரணக் குறிப்புகளுடன்...

sabeer.abushahruk said...

முதலிடம்: கவியன்பன் கலாம் அவர்கள் !

காரணம். தம் நண்பர்களைப்பற்றிச் சொல்ல வேண்டும் என்றதும் தனக்கேற்பட்ட உணர்வுகளை அப்படியே, துள்ளியமாகவும் உணர்ச்ச்பூர்வமாகவும் சொன்னதால்.

இரண்டாமிடம்: ஹமீது.!

கண்க்களைப்பனிக்க வைத்ததால்

மூன்றாமிடம்: யாசிர் !
நட்பு ஆக்கபூர்வமானதுமட்டுமல்ல உர்சாகமானது என்பதை விற்விற்வெனச்சொன்னதால்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நேற்று ஒரு தோழப்புள்ள ஃபோன் செய்தான் காக்கா,

"ஏண்ட கொய்யாலே நாங்களெல்லாம் உன்னோட குப்பை கொட்டுறோமே ஞாபகத்தில இல்லையான்னு?" கேட்டான்...

நானும் "எங்கேடா மாப்புள குப்பைய அள்ளச் சொல்லித்தான் ஒரு நண்பனை பே.த. ஏத்திவுட்டுட்டீங்களே அதான்" லிஸ்டு நீளும்னு சொல்லியிருந்தேன்...

வேனும்னா ஒரு தொடரா போடலாம் ஆனால் தவறாம படிக்கனும் அப்புறம் என்னோட பேரு வரலைன்னு எதாவது ஒரு பதிவை படிக்காம இருக்கப்படாது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

முதல் மூன்று இடங்களை தக்க வைத்துக் கொண்ட சகோதரர்கள்...

1 - 'கவியன்பன்' கலாம் (காக்கா) - Abu Dhabi
2 - Sஹமீத் (காக்கா) - KSA
3 - முஹம்மது யாசிர் (தம்பி) - Dubai

வாழ்த்துக்கள்... மேலும் விபரங்கள் மற்றொரு பதிவில் இன்ஷா அல்லாஹ்...

sabeer.abushahruk said...

நான்காம் இடம்: அபு இபுறாஹீம் !

ஆரம்பம் முதல் ஆர்வமாகக் கலந்துகொண்டு வெளிப்படையாக சில நண்பர்களையும் மனத்தினுள் பல நண்பர்களையும் நினைவு கூர்ந்தமைக்காக்

ஐந்தாமிடம்: தாஜுதீன் !
நண்பர்கள் எண்ணிக்கையில் முதற்பரிசோடு போட்டி போடும் தகுதிக்காக.

ஆறாமிடம் : ஜாகிர் !
அவன் சொல்ல வாய்ப்புக்கொடுக்காமல் எல்லாவற்றையும் நானே சொல்லி வெற்றி வாய்ப்பைப் பறித்தும், அழகாக நண்பர்களுடனான நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டதற்காக !

ஏழாம் அறிவு ... ஐ மீன் ஏழாம் இடம்: கிரவுன் !

நவாஸ் நினைவு எனும் வலியைப் பகிர்ந்துகொண்டதற்காகவும் நட்புக்கு கிரவுனுரை வழங்கியதற்காகவும்

எட்டாவது இடத்தில்: எம் ஹெச் ஜஹபர் சாதிக் !

நட்பைப்பற்றிய கவித்துவமான சிந்தனை அவர்தம் நண்பனுக்காக எழுதியது எனக்கொண்டு.

ஒன்பதாவது இடம்: அபு சுஹைமா !
நவாஸ் எனும் ஒற்றை நண்பனைச் சொல்லி களத்தில் இறங்கினாலும் என் நட்புக்கரத்தை ஏற்றுக்கொண்டதற்காகவும். ( ஆயினும் திருநெல்வேலிக்கே அல்வா கொடுக்க முடியாது என்பதால் "தோழர்கள்" தயாரித்தவர்களில் ஒருவர் என்பதால் புக்கு தரமாட்டோம் ... பெப்பே)

மேலும், இந்தப்பதிவில் இனியும் தோழனைப் பற்றி எழுதும் நாவருக்கும் புத்தகப்பரிசுண்டு

யு ஏ யில் பரிசைப்பெற விழைவோர் அ. ந். யையும் அதிரையில் பெற விழைவோர் என்னையும் 00971504826377 லும் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்

மலேசியாக்காரவோ சிரமம் பார்க்காமல் டெய்லி இரவு 9லிருந்து 10 வரை எனக்கு ஃபோன் பண்ணினால் ஒரு நாளைக்கு ஒரு தோழர் என்று புக்கை வாசிச்சிக் காட்டியே கொடுத்த கணக்கில் சேர்த்திடலாம். இல்லேனா வந்து வாங்கிட்டுப்போடா என் டுபுக்கு!

நன்றி வஸ்ஸலாம்!

(இந்தப் பதிவை விழாக்கோலமாக்கிய அனைத்து தோழர்களுக்கும் நன்றீ நன்றி நன்றி - மற்றுமொரு தோழன்)

அதிரை என்.ஷஃபாத் said...

தாமதமாய் வந்தாலும் .. என் நண்பனைப் பற்றி ஒரு சில வரிகள்.

x==========================================
x
x என் நண்பன் - முஹம்மது அஜாருதீன்
x
x
x==========================================
இளமை பருவத்து சிநேகிதன்,
இன்றும் என்றும் சிநேகிதன் - என்னிலும்
இளைய வயதுடைய சிநேகிதன்
இணையில்லாத சிநேகிதன்.

பள்ளிப் பிராய சிநேகிதன்
பழக இனிய சிநேகிதன் - எண்ண
புள்ளியில் இணையும் சிநேகிதன்.
பூபோல் மனதுடைய சிநேகிதன்.

தந்தை சொல்லை மீறிடும்
தன்மை யில்லா சிநேகிதன்.
விந்தை அதுவோ? தீஞ்செயல்
விலகி வாழும் சிநேகிதன்.

முழங்கை எலும்பில் பெரியதாய்
முறிவொன்று எனக்கும் ஏற்பட
ஒழுங்காய் என்னை சைக்கிளில்
உட்கார வைத்து தினம்தினம்

அழகாய் பள்ளி ஏகுவான்
அஜாருதீன் என் சிநேகிதன்.
பழுதாய் போன கைக்கு
பகரம் எனது சிநேகிதன்.

காலம்-கல்வி-இடம்பெயர்தல்-
வேலை-நேர வித்தியாசம்-
பாழாம் இவையே சிலகாலம்
பிரிவைத் தந்தது இதுநாளும்.

வாழும் காலம் முழுவதற்கும்
வாடாதது எம் நட்பு.
தோழா.. நலம் பேணிடுவாய்.
துஆவில் என்னை நினைத்திடுவாய்...

அன்புடன்,
என். ஷஃபாத்

sabeer.abushahruk said...

( மேடைக்குப்பின்னால் -ஆஃப் தெ ஸ்க்ரீன் சோடா குடித்துக்கொண்டு )

அதிரை நிருபர் குழுவுக்கு என் விண்ணப்பம்: புத்தக விநியோகத்தில் எனக்கும் வெற்றிபெற்றோருக்குமிடையே உதவுங்கள் ப்ளீஸ்!

sabeer.abushahruk said...

//பழுதாய் போன கைக்கு
பகரம் எனது சிநேகிதன்.//

பதிவாய்ப் போடும் எழுத்திது
பரிசை வெல்லும் நட்பிது
பிடியும் தோழர்ப் புத்தகம்
பத்தாம் இடத்தின் நிலையிலே

Anonymous said...

//( மேடைக்குப்பின்னால் -ஆஃப் தெ ஸ்க்ரீன் சோடா குடித்துக்கொண்டு )

அதிரை நிருபர் குழுவுக்கு என் விண்ணப்பம்: புத்தக விநியோகத்தில் எனக்கும் வெற்றிபெற்றோருக்குமிடையே உதவுங்கள் ப்ளீஸ்! //

அதிரைநிருபர் வலைத்தளம் பரிசுகளை முறையாக விநியோகிக்க அனைத்து முயற்சிகளையும் உடணடியாக எடுக்கும் இன்ஷா அல்லாஹ்...

சகோதரர்கள் அனைவருக்கும் தனி மின்னஞ்சலில் அவர்களின் postal முகவரி பெற்று நேரிலோ அல்லது தபால் / கூரியர் வழித்தடமாகவோ முறையாக சேர்ப்பிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்... !

இப்படிக்கு,
நெறியாளர்

தலைத்தனையன் said...

மாஷா அல்லாஹ். எனக்கும் என் நண்பர்களைப்பற்றி எழுத ஆசைதான். கவிதையும் எழுதலாம் என்றால், சபீருக்கும், கலாமுக்கும் இடையில் கடுகுபோல் சிறுத்து காணாமல் போய்விடுவோம் என்ற அச்சம்தான் எழுதாமைக்கு காரணம். உவமானங்களும், உவமேயங்களும், சொற்களின் அணிவகுப்பும் சபீருக்கு மட்டும் முதல் மரியாதை செய்வது ஏன் என்று தெரியவில்லை. அவரின் அட்டகாசச்சிரிப்பு கள்ளமில்லா பிள்ளை எனக்காட்டும். சில காலங்கள் எனக்கும் இவர்களோடு சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது என் மாமா அப்துல் காதர், சபீர், மன்சூர், ஆஷிக் (ரஹீமா) இப்போ ஐஸ் ஹவுஸ்.

சபீர் பட்டியலிட்ட அல்மோஸ்ட் எல்லோருமே என் அன்பிற்கு இனியவர்கள்தான். குறிப்பாக என் நண்பன் கலாம்.
எங்களை ஹாபிழ் மஹ்மூத் மச்சான் (மர்ஹூம்) ஓர் வண்டியின் இரட்டை மாடுகள் என்று செல்லமாக சொல்வார்கள். கலாமோடு பழகுவதே எனக்கு பெருமையாக இருக்கும். கவிதைகள் இயற்றி என்னிடம் படித்துக்காட்டுவான். சந்தங்கள் பற்றி பேசுவான். மேரியம்மா கேரியரில் எறா இருக்குது என்ற பாட்டில் அமைந்த சந்தத்தை கிண்டல் செய்வான். என் இளம் வயதில் அவனது நட்பு ஒரு பிரமிப்பு. சில நேரங்களில் விடாக்கொண்டன். சில நாட்களாகும் அவனை சரி செய்ய. என்னை ஏதோ சொன்னார்கள் என்று அவனது பெரிய சகோதரியை கன்னத்தில் அறைந்துவிட்டான்.

இக்பால் (பந்தா) இவருக்கு இந்த பட்டப் பெயரை வைத்தது நிச்சயமாக அறைவேக்கட்டுத்தனம். பந்தாவே இல்லாத மனிதர். ஒன்றரை வருடங்களாக இவரிடம் வேலை செய்தேன். நிர்வாகம், கணக்கு வழக்குகள், ஒழுங்கு, ஞாபகசக்தி இவரின் தனித்தன்மைகள். நிறைவாக கற்றுக்கொள்ள நிறையவே உண்டு இவரிடம்.

அஷ்ரப் (சிங்கம்) சிறு பிள்ளைபோல் சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும். யாரும் முகம் வாடி இருக்கக்கூடாது. சிறு வயது முதல் ஐந்து மணி நேரத்துக்கு முன்பு வரை பேசிக்கொண்டோம். வா, போ என்றும் பேசிக்கொள்வோம். வாங்க, போங்க என்றும் பேசிக்கொள்வோம். அது எந்த வகையான நட்பு என்று அடையாளம் தெரியவில்லை. அதனால் எங்களை எந்த அலர்ஜியும் பாதிக்கவில்லை.

நஜ்முதீன் (சிங்கம்) ஆனால் இவர் வாவன்னா. இவரின் சாச்சி மகன் முசம்மில் இவர்களும் என் சிறு வயது நண்பர்கள். ரஹ்மத்துல்லாஹ் (அன்சர் டிராவல்ஸ்) பாளர் பருவத்து நண்பர். இரண்டாம் நம்பர் பள்ளிக்கூடத்தில் படிக்கும்பொழுது, குத்புதீன் (ஆடிட்டர் ஜலீல் மகன்) இன்டர்வலில் மெயின் கேட்டிலிருந்து ராதா நாயக்கர் மளிகை கடைக்கு பக்கத்தில் இருந்த தண்ணீர் பைப்பு வரை வழமையாக ஓட்டப்பந்தயம் வைத்து நீர் அருந்தச் செல்வோம்.

குத்புதீன் இன்றுவரை மாறாத இனிய சுபாவம். வகுப்பறையில் எங்களுக்கிடையே கோஷ்டி மோதல் வரும்பொழுது எப்போதும் என் பக்கமிருக்கும் கிழங்கு ஹாஜா அலாவுதீன். கண்டு பல வருடங்களாகிவிட்டன. அதுபோல் பட்டத்து லெப்பை வீட்டு சவுரியப்பா, சரியான பெயர் ஞாபகம் இல்லை. உயர் நிலைப்பள்ளியில் ரியாஸ், மன்னாங்கட்டி நஸ்ருதீன், தாஜுதீன் (இப்போ அராமெக்ஸ்) எங்க உம்மாவைப்போல் சமைத்து தந்து இன்று வரை மச்சனாகவே இருக்கும் மன்சூர் (சாச்சா மகளை முடித்ததால்)

இன்னும் நினைவிலிருந்து தப்பியவர்கள் ஏராளம். மூன்று வருடம் நான் சென்னையில் படித்த காலத்தில் கிடைக்கப்பெற்ற ஜான்சன், மோகன், மதியழகன், ரமேஷ், லோகநாதன் இன்னும் பலர். வெளிநாட்டு, வெளிமாநில, வெளி மாவட்ட நண்பர்கள், பண்டாரவாடை ரோஜாப்பூ என்று சொல்லும் அப்துல்லாஹ். நாமக்கல் ஆசிப், அம்மாபட்டினம் மதனி, நாச்சிகுளம் அன்வர்தீன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இங்கே புதிதாக இஸ்லாத்தை தழுவியுள்ள சகோதரர்கள் லேறி, ஆபிரகாம், நிக்கோலஸ் இவர்கள் புதியவர்கள் ஆனால் நாம் இவர்களின் நல்ல பண்புகளை கற்றுக்கொள்ள கொடுத்துவைத்திருக்கவேண்டும்.

விரிவை பயந்து இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

மாஷா அல்லாஹ். எனக்கும் என் நண்பர்களைப்பற்றி எழுத ஆசைதான். கவிதையும் எழுதலாம் என்றால், சபீருக்கும், கலாமுக்கும் இடையில் கடுகுபோல் சிறுத்து காணாமல் போய்விடுவோம் என்ற அச்சம்தான் எழுதாமைக்கு காரணம். உவமானங்களும், உவமேயங்களும், சொற்களின் அணிவகுப்பும் சபீருக்கு மட்டும் முதல் மரியாதை செய்வது ஏன் என்று தெரியவில்லை. அவரின் அட்டகாசச்சிரிப்பு கள்ளமில்லா பிள்ளை எனக்காட்டும். சில காலங்கள் எனக்கும் இவர்களோடு சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது என் மாமா அப்துல் காதர், சபீர், மன்சூர், ஆஷிக் (ரஹீமா) இப்போ ஐஸ் ஹவுஸ்.

MOHAMED THAMEEM

Yasir said...

//சபீருக்கும், கலாமுக்கும் இடையில் கடுகுபோல் சிறுத்து காணாமல் போய்விடுவோம் என்ற அச்சம்தான்// உங்கள் பெருந்தன்மையும் , நற்குணத்தையும் உங்களின் பின்னூட்டம் மூலம் அறிய முடிகிறது....எங்களுக்காக ஒரு கவிதை எழுதி தாருங்கள், அதனை பாராட்டவும்,எதுவும் விமர்சனம் என்றால் கண்ணியத்துடன் எடுத்துரைக்கவும் முதிர்ச்சி அடைந்த அ.நி வாசகர்கள் வட்டம் உள்ளது....தனி ஆக்கமாக வரட்டும் உங்கள் அதிரடி

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// மலேசியாக்காரவோ சிரமம் பார்க்காமல் டெய்லி இரவு 9லிருந்து 10 வரை எனக்கு ஃபோன் பண்ணினால் ஒரு நாளைக்கு ஒரு தோழர் என்று புக்கை வாசிச்சிக் காட்டியே கொடுத்த கணக்கில் சேர்த்திடலாம். இல்லேனா வந்து வாங்கிட்டுப்போடா என் டுபுக்கு! //


நல்லவேலை பரிசு பெரும் வரிசையில் ஏன் பெயர் இடம் பெறவில்லை.அப்படி இடம் பெற்று இருந்தால் ரொம்ப சிரமமாக போய் இருக்கும் அதிரையில் கடை வியாபாரத்தை விட்டு விட்டு
அரபு நாட்டுக்கு அநியாயமா புக்கு வாங்க வரவேண்டி இருந்து இருக்கும் .

sabeer.abushahruk said...

//கடுகுபோல் சிறுத்து//
கவியன்பன், தமீமிடம் சொல்லுங்கள் "கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது" என்று.

தமீம், கவியன்பனுக்கு பெருத்த மரியாதையாக இருக்கிறது இந்த தளத்தில். வாங்க, நீங்களாவது "அவன், இவன், வாடா, போடா" என்று மரியாதைக் குறைவாக விளிக்க.

சிங்கம் அஷ்ரஃபை நானும் சமயத்தில் வா போ வென்றும் பிற சமயங்களில் வாங்க போங்க என்றும்தான் கூப்பிட்டு வருகிறேன். அதென்னவோ, ஆளுக்கு வா போவும் அவர் பெயரின் அடைமொழி (சிங்கம்)க்கு பயந்து வாங்க போங்கவும் என அமைகிறதோ என்னவோ. மன்சூர் ஜுபைலில் வைத்த பிரியாணி மறக்க முடியாது.

அதிரை நிருபர்: தமீமின் இந்த பதிவும் பரிசுக்கான முழு தகுதி பெறுகிறது என சொல்லிக்கொள்கிறேன்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

//அதிரை நிருபர்: தமீமின் இந்த பதிவும் பரிசுக்கான முழு தகுதி பெறுகிறது என சொல்லிக்கொள்கிறேன்.//

அப்படியே ஆகட்டும், இன்ஷா அல்லாஹ் !

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்புச் சகோதரர் முஹம்மத் தமீம் அவர்களுக்கு:

தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை editor@adirainirubar.in என்ற முகவரிக்கு அனுப்பித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
நெறியாளர்,
www.adirainirunar.in
editor@adirainirubar.in

KALAM SHAICK ABDUL KADER said...

அஸ்ஸலாமு அலைக்கும்
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

ஆனந்தம்; ஆச்சர்யம்
கனவா? நனவா?

எந்த “உயிர்” நண்பனை முன்னிலைப்படுத்தி எழுதினேனோ, அவனே (முஹம்மத் தமீம்(தலைத்தனையன்) இன்று என் முன்னால் நிற்கின்றான் என்ற உணர்வும், அவன் நட்பின் “உணர்ச்சி பூர்வமான” ஆழம் என் மடலினை முதற்பரிசு பெற வைத்து விட்டது என்ற உணர்வினாலும் என்னை நானேக் கிள்ளிக் கொள்கின்றேன். காணாமல் தவித்த தமீ(ன்)ம் இன்று அ.நி. வலையில் சிக்கியது! முதற்கண் நன்றியை நெறியாளர் அபூ இப்றாஹிம் மற்றும் அடியெடுத்து வைத்த அ.நி.யின் ஆஸ்தான கவிஞர்- என் மனம் விரும்பும் கவிவேந்தர் சபீர் ஆகியோர்கட்கு உரித்தாக்குகின்றேன்.

என்னுயிர் நண்பன் தமீம் இளமையில் வறுமையின் பிடியில் சிக்காமல் இருந்திருந்தால், இந்நேரம், அன்புத்தம்பி ஷஃபாஅத் போன்று உயர்கல்வி பெறும் அளவுக்கு ஆகியிருப்பான்.நான் அமெரிக்காச் சென்றுதான் அமெரிக்கன் இங்க்லீஷ் பேச முற்பட்டேன்; அவனோ, அல்-கோபரில் அமெரிக்கன் இங்க்லீஷ் மற்றும் அறபி, ஹிந்தி, உருது, மலையாளம் ஆகிய மொழிகளை அவரவர் மொழிகளில் அதே தோரணை, மற்றும் பாடி லாங்குவேஜ் முறைகளில் பேசும் திறன் உண்டு. இவ்வளவு திறமைகள் இருந்தும் அறிவு ஜீவியான அவன் வாழ்க்கையில் மிகுந்த போராட்டத்திற்குப் பின்னர் உயர்ந்து விட்டான்.அல்ஹம்துலில்லாஹ்!

இன்று காணும் “குளங்கள் நிரம்பிவிட்டன” என்ற முகப்புச் செய்தியினைப் படித்ததும் அவன் சுட்டிக்காட்டியது போல், “இரட்டை மாட்டு வண்டி”என்று ஹாபிழ் மர்ஹூம் மஹ்மூத் காக்கா அவர்கள் கூறியது நினைவில் வந்தது;ஆம். குளிப்பதற்கு ஒன்றாகவே குளத்திற்குச் செல்வோம்;அவன் நீச்சல் கற்றுத் தருவான். அவன் உள்ளமும் உறுதி; உடலும் உறுதி;கால்பந்து விளையாட்டில் கால்பங்கு வாழ்க்கை!!

என்றோ போயிருக்க வேண்டிய என்னுயிரை அல்லாஹ் இவன் அறிவுரை மூலம் காப்பாற்றி இன்று வாழும் நிலையில் அவனைப்பற்றியே எழுதவும்
அதனால் என் மண்ணின் தளத்தில் முதற்பரிசும் கிட்டியும்;எட்டாத தூரத்தில் இருந்தவன் எட்டும் வழிகளை எட்டியும் எனக்கு இன்று ஓர் இனிய நாளாய் அமைத்துக் கொடுத்தான் அல்லாஹ்!
என்னுயிர் நண்ப,
என்னைத் தொடர்பு கொள்ள முகவரி:

KALAM SHAICK ABDULKADER
ACCOUNTS DEPARTMENT
GRANITE CONSTRUCTION COMPANY
P.O.BOX 842
ABU DHABI, UAE

MOBILE: 00971508351499
E-MAIL: kalaamkathir7@gmail.com
kalamkader2@gmail.com
shaickkalam@yahoo.com

Website: http://www.kalaamkathir.blogspot.com/

ZAKIR HUSSAIN said...

To Brother தலைத்தனையன் MOHAMED THAMEEM

Please keep on writing...you have the style

நீங்கள் சொல்லியிருந்த அஸ்ரப் [ சிங்கம் ] என்னுடைய க்ளாஸ்மேட், நண்பன். நஜ்முதீன் [ சிங்கம் ] என்னுடன் ஸ்போர்ட்ஸ் , கால்பந்து விளையாட்டில் கலந்து கொண்டு அசத்துபவர். குத்புதீன் [ ஆடிட்டர் ஜலீல் மகன் ] என்னுடன் ஒருமுறை சிங்கப்பூரில் நடந்தே பேசிக்கொண்டு வெகுதூரம் போனோம்.

மற்றும் நீங்கள் சொன்ன சவுரியப்பா [பட்டத்து லெப்பை வீடா? ] இங்கு மலேசியாவில் ஒரு மத்ரஸாவில் வேலையில் இருக்கிறார்.

சபீரைப்பற்றி எழுதும்போது அட்டகாசச்சிரிப்பை எழுதியிருந்தீர்கள்....ஒன்றை கவனித்தீர்களா..அவன் சிரிக்கும்போது கண்ணு உள்ளே போய் ஒரு கருப்புசீனன் மாதிரி இருப்பான்

sabeer.abushahruk said...

//ஒரு கருப்புசீனன் மாதிரி இருப்பான்//

சீனன் என்று மட்டும் சொல்லி யிருக்கலாம்.

வதந்திகளைப் பறப்புவதில் கோலாலம்பூர்தான் முதலிடமாமே?

ஜாகிர், இந்தப் பதிவின் நோக்கம் எத்தனை உயர்ந்தது என்பதற்கு காணாமல் போன தமீமும் கவியன்பனும் தத்தமது இளமையை மீட்டெடுத்ததே சாட்சி.

தமீம், கேட்க மறந்திட்டேன். நல்லாருக்கீங்களா?

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

சகோதரர்களுக்கு,
அமைதியாக கவனித்து வரும் என்னாலேயே மவுனமாக இருக்க முடியவில்லை, நட்பின் மேன்மையை இவ்வளவு அருமையாக நினைவு கூறுவதில் அனைவருமே வெற்றியாளர்களாக எனக்குத் தெரிகிறார்கள்.

வாழ்த்துக்கள், தலைப்புதான் ஹைலைட்.

அபூ சுஹைமா said...

தலைத்தனையனார் பேசுவதில் வல்லவர்; பழகுவதற்கு இனிமையானவர் என அறிந்துள்ளேன். மாஷா அல்லாஹ் அந்த இனிமை எழுத்திலும் தெரிகிறது.

தலைத்தனையனாருக்கும் கலாம் காக்காவுக்கும் இடையேயான நட்பு ஊரறிந்த ரகசியம்தான்.

கலாம் காக்காவின் மருமக்கள் என் தோழர்கள். மருமக்களுடன் சேர்ந்து நானும் சில காலம் கலாம் காக்காவிடம் கணக்கு படித்ததுண்டு.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்புச் சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

இங்குக் கருத்திட்ட சகோதரர்களுள் பலர் தத்தம் நினைவில் நின்றவர்களைப் பற்றி எழுதியிருக்கின்றர்.

நல்ல நினைவுகள் இனிமையானவையே. ஆனால் நட்பு எனும் தோழமை என்பது நம் நினைவில் நின்றவர்களை வலுக்கட்டாயமாகத் தேடிப்பிடித்து இழுத்துவந்து கூறுவதாக இருத்தலாகாது என்பது எனது கருத்து.

உண்மையான தோழமை என்பது அறுபடாத கயிற்றுக்கு ஒப்பாகும். சமகாலத்தில் நமது தொடர்பில் இல்லாதவர்கள், அந்தந்தக் காலகட்டத்தில் நம்மோடு நன்கு பழகியவர்களாக இருக்கலாம்; அப்பழக்கத்தைத் தோழமை எனக் கூறுவது சரியா என எனக்குத் தெரியவில்லை.

சபீருக்கும் ஜாஹிருக்கும் உள்ள நட்பில் வேறெவரும் உள்நுழைய முடியாது. போலவே, தமீமுக்கும் அஷ்ரஃபுக்கும். இது ஒப்பீட்டுக்காகச் சொல்லப்பட்டது. எனவே, "எங்களிருவரைப் பற்றிச் சொல்லாமல் வீட்டீர்களே" என என்மீது யாருக்கும் வருத்தம் வரவேண்டாம்.

//இப்பதிவு நட்புணர்வுக்காக பிரத்தியேகமானது. இதில் தத்தமது தோழர்/தோழியர் பற்றி சுவாரஸ்யமாகச் சொல்பவர்களுக்கு//

என இப்பதிவின் முன்னுரையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, சொல்ல வேண்டியதைக் கவிதையாகவே ஒற்றைப்படுத்திச் சொன்ன தம்பி ஷஃபாத்தின் இடுகை என்ன ஈர்த்தது.

பதிவிற்குத் தொடர்பில்லாத ஓர் ஆலோசனை:
தம்பி கலாமுக்கு வேறொரு முகம் உண்டு. அவர் நல்ல "கணிதவியல் ஆசிரியர்". அவர் ஊரில் இருந்த காலகட்டத்தில் பலருக்குக் கணிதம் போதித்திருக்கிறார். எனவே, அவரது திறமையை அ.நி. பயன்படுத்திக் கொண்டு, தொடக்கம் முதல் அக்கவுண்ட்ஸ் பற்றித் தொடராக எழுதிக் கேட்டு இங்குப் பதித்தால் என்னைப் போன்ற கணக்குத் தெரியாதவர்கள் பலரும் பயன் பெறுவர். இக்கருத்தைச் சில மாதங்களுக்கு முன்னர் தம்பி சபீருடன் பகிர்ந்திருக்கிறேன். ஆவன செய்க!

நன்றி!

அதிரைநிருபர் பதிப்பகம் said...

//தம்பி கலாமுக்கு வேறொரு முகம் உண்டு. அவர் நல்ல "கணிதவியல் ஆசிரியர்". அவர் ஊரில் இருந்த காலகட்டத்தில் பலருக்குக் கணிதம் போதித்திருக்கிறார். எனவே, அவரது திறமையை அ.நி. பயன்படுத்திக் கொண்டு, தொடக்கம் முதல் அக்கவுண்ட்ஸ் பற்றித் தொடராக எழுதிக் கேட்டு இங்குப் பதித்தால் என்னைப் போன்ற கணக்குத் தெரியாதவர்கள் பலரும் பயன் பெறுவர். இக்கருத்தைச் சில மாதங்களுக்கு முன்னர் தம்பி சபீருடன் பகிர்ந்திருக்கிறேன். ஆவன செய்க!//

அதி அழகு காக்கா அவர்களின் வேண்டுகோளுக்கினங்க...

கவியன்பன் கலாம் காக்கா அவர்களிடம் கலந்து பேசி அப்படியே ஆவன செய்கிறோம் இன்ஷா அல்லாஹ்...!

அதிரை என்.ஷஃபாத் said...

/**

//இப்பதிவு நட்புணர்வுக்காக பிரத்தியேகமானது. இதில் தத்தமது தோழர்/தோழியர் பற்றி சுவாரஸ்யமாகச் சொல்பவர்களுக்கு//

என இப்பதிவின் முன்னுரையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, சொல்ல வேண்டியதைக் கவிதையாகவே ஒற்றைப்படுத்திச் சொன்ன தம்பி ஷஃபாத்தின் இடுகை என்ன ஈர்த்தது

**/

நன்றி ஜமீல் காக்கா..

Asif iqbal said...

இது போன்ற இனிய நண்பன் என் அண்ணனுக்கு கிடைத்ததற்கு நான் மிகவும் பெருமை அடைகிறேன் ..!
-"நட்பை மதிப்பிட இயலாது"
-அன்பு சகோதரர்களுக்கு நன்றி .!
By Asif iqbal Ahmed jaleel

தலைத்தனையன் said...

இங்கு நட்பின் ஆழத்தை சொல்ல என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையும் சொல்லவேண்டும். நான் சென்னையில் மூன்றாண்டுகள் புதுவண்ணாரப் பேட்டையில் இருக்கும் ஒரு மானகராட்சிப்பள்ளியில் படித்தேன். அங்கு ஏற்பட்ட என் நட்பின் கிளைகள்தான் ஜான்சன், மோகன், மதியழகன், லோகநாதன் ... நான் எனது முந்தைய பதிவில் தந்தது அது 35 வருடங்களுக்கு முன்பு

ஏறத்தாழ இருபதாண்டுகளுக்கு முன்பு நான் படித்த பள்ளியை ஒட்டியே ஒரு இறை இல்லம் கட்ட முயற்சிக்கும்பொழுது அங்குள்ள சில குப்பைகள் (ஆர், எஸ், எஸ், பி.ஜே.பி) இடையூறு செய்தபொழுது, எனதருமை நண்பர்கள் அனைவரும் ஓன்று சேர்ந்து குறிப்பாக லோகநாதன் குப்பைகளை பலாத்காரமாக அப்புறப்படுத்தி இறை இல்லம் கட்ட முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளான்.

நான் அவனை சந்தித்தபொழுது, "நாம் ஒன்றாக படிக்கும் காலங்களில், நீ நோன்பு நோற்பதும், உன் ஒழுக்கமும்தான் எங்களுக்கு நினைவுக்கு வந்தது. பள்ளி கட்டும் நிர்வாகத்தில் நீ ஒருவனாக இருந்து பள்ளி கட்டுவதில் இடையூறு ஏற்பட்டால் உன் மனம் எவ்வளவு வேதனை அடையும் என்பதை கற்பனை செய்து பார்த்தோம் அதுவே எங்களுக்கு முஸ்லிம் பள்ளி கட்டுவதில் உதவி செய்ய ஆர்வமூட்டியது என்றான்" அல்லாஹு அக்பர் கிட்டத்தட்ட 32 நண்பர்கள் ஒரே இடத்தில் ஒரு சிலர் இடம் பெயர்ந்துவிட்டனர். இந்த திடமான நட்பிலும் அழுக்காய், அழுகியதாய் ஒரு பகுதி. ஆம். நரசிம்மன் என்றொரு நண்பன். அவனை காண வேண்டும் என்றபொழுது வேண்டாம் என்று தடுத்துவிட்டனர். நாடு திரும்பினால், அவனை சந்திப்பேன். இன்ஷா அல்லாஹ்.

முஹம்மத் தமீம்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமீம் காக்கா, நலமா? சந்தித்து எத்தனையோ வருடங்களாகிவிட்டது.

தங்களின் பின்னூட்டங்களை மிக கவனமாக வசித்தேன்.

நம் மார்க்கத்தின் கொள்கைகள் சரியாக இருந்தாலும், இதை சரியாக பின்பற்றி நம்முடைய செயல்பட்டுகளை கொண்டே எவ்வளவு பெரிய அரக்க குணம் கொண்டவர்களையும் அன்பால் வென்றேடுக்க முடியும்
என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இறைவனுக்காக நட்பை உருவாக்குவோம், இறைவனுக்காக நட்பை துண்டிப்போம்.

தொடர்ந்து எழுதுங்கள்.

KALAM SHAICK ABDUL KADER said...

//கடுகுபோல் சிறுத்து//
கவியன்பன், தமீமிடம் சொல்லுங்கள் "கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது" என்று./
கவிவேந்தர் சபீர், எனது முந்தைய பின்னூட்டம் காண்க. அறிவு ஜீவியான அவன் திறமைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். அதுசரி,நீங்கள் மட்டும் ஏன் முன்வரிசையில் அமரவும்;மேடை ஏறவும் தயங்குகின்றீர்கள்? என்னோடு வாருங்கள், எண்ணத்திரையின் காவியங்கள் சின்னத்திரையின் ஓவியங்களாக
விண்ணில் உலா வர என்னாலான எல்லா முயற்சிகளும் செய்வேன், இன்ஷா அல்லாஹ்! சங்கமம் தொலைக்காட்சியின் ஒருங்கிணைப்பாளராக என்னை நியமித்துள்ளனர்; உங்களைப் போன்ற கவி விண்மீன்கள் சின்னத்திரை விண்ணில் மின்னட்ட்டும்;தமிழர்கள் செவிக்குள்தட்டடும்;எட்டுத் திசைகட்கும் எட்டட்டும்;குன்றின் மேல் விளக்காய் குவலயம் எங்கும் புகழொளி பரவ்ட்டும்.

தலைத்தனையன் said...

ஜாகிர், கண்டு நீண்ட நெடுங்காலமாகிவிட்டதே. கடைசியாக முதுகில் நம்பர் டேகோடு விளையாட்டு மைதானத்தில் கண்ட ஞாபகம். நண்பர் நிஜாமை 15 வருடத்திற்குள் ஊரில் பார்த்த ஞாபகம். நூராணி யுடன் 3 வருடங்களுக்கு முன்பு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டது. தரகர் தெரு மக்கம் சாந்த ஸ்வரூபி. குலாம் (ரசூல்) ரஷீத். சகோ. ஷேக் அலாவுதீன். இவர்களெல்லாம் மறக்க முடியாத கொள்கை பிடிப்பாளர்கள்.

சயன்டிஸ்ட் தய்யிப், சபீர் சொன்ன ஜலீல், அள்ளிப்பித்தா அன்சாரி, காசியார் ரஷீத், விளாங்கா இப்ராஹீம், குட்டி இப்ராஹீம், இரண்டாம் நம்பர் பள்ளிக்கூடத்தில் ஆண்டுவிழாவில் எனது கண்ணகி நாடகம்." இப்ராகிம், மன்சூரின் ஆட்டமாடி நல்ல பாட்டுபாடி அழகான கோமாளி வந்தேனய்யா" என்ற கோமாளிப்பாடல். ஆண்டு விழா முடிந்து வீடு சென்றால் மன்சூரின் வாப்பா அநியாயத்துக்கு கெடுபிடி, முகத்தை சரியாக துடைக்காமல் வேடமிட்டபடியே சென்றதால், அடி துவம்சம் செய்துவிட்டார்கள் மன்சூரை. 15 நாட்கள் உடல்நிலை பாதித்து வெளியே வரவே இல்லை. அப்பொழுதுதான் கொஞ்சோண்டு மன்சூர் மெலிந்து பார்த்த ஞாபகம்.

KALAM SHAICK ABDUL KADER said...

மார்க்க அறிவும், மொழிப்புலமையும் மிக்க ஜெமீல் காக்கா அவர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும். உங்களின் அறிவாற்றலை தெஹ்ரான் அராம்கோவில் என் காக்கா மற்றும் நமதூர் சகோதரர்களுடன் தாங்களும் இருந்த போழ்திலிருந்தே, தங்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றேன். அங்கு எப்படி மொழிப்புலமை, சித்திரம் போன்ற கையெழுத்து, மார்க்க அறிவில் தெளிவு, மேடைப் பேச்சு யாவும் தன் முயற்சியால் வளர்த்துக் கொண்டு மிகவும் உயர்ந்த இடத்தில் இருப்பதையும் அவதானிக்கின்றேன். அதனால், தங்களின் மேற்கூறிய அத்துணை இயல்புகளின் பால் ஈர்க்கப்பட்டவர்களில் அடியேனும் ஒருவன். குறிப்பாக தமிழ் மற்றும் அறபு மொழி இலக்கணத்தில் தாங்கள் பெற்றுள்ளப் புலமை! அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வும் எனக்கு பன்முக ஆற்றலை வழங்கியுள்ளான் என்பதைத் தாங்களும் என்பால் வைத்துள்ள அன்பால் அவதானித்து இவ்விடம் தெரியப்படுத்தியமைக்கு நன்றி: ஜஸாக்கல்லாஹ் கைரன்

தலைத்தனையன் said...

நல்லா இருக்கேன் சபீர். அல்ஹம்துலில்லாஹ். நீங்கள் எப்படி என்று கேட்கவில்லை, உங்களின் நலன்களை பல வலைத் தளங்களில் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன். மாஷா அல்லாஹ். நமக்கு மரபு கவிதையெல்லாம் வராது மரபுக்கும் நமக்கும் மறப்பு இட்டதுபோல். கலாம் எத்தகு எழுத்திலும் வித்தகம் புரியும் புங்கவன். உங்களின், கலாமின் கவிதைகளை ரசிக்க முன் வரிசையிலே அமர்ந்தாலே போதுமானது.

ஜமீல் காக்கா: அவர்களின் எல்லா துறை ஞானத்தையும் சிலாகித்து பேசிக்கொண்டு, நாமும் ஏன் அதுபோல் முயற்சிக்கக்கூடாது என்று எத்தனித்து கேழே விழுந்ததுண்டு. முட்டி பெயரவில்லை. முடியவில்லை.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

ஓர் நினைவூட்டல்
-------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்புச் சகோதரர் முஹம்மத் தமீம் அவர்களுக்கு:

தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை editor@adirainirubar.in என்ற முகவரிக்கு அனுப்பித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
நெறியாளர்,
www.adirainirunar.in
editor@adirainirubar.in

ZAKIR HUSSAIN said...

கமென்ட்ஸ் பகுதியில் போட்டோவையும் பதிய முடியாதா?....அப்படி முடிந்தால் சாகுல் மிகவும் ஒல்லியாக உள்ள படத்தை நான் பதிவேன் [ அவரிடம் கூட அந்த படம் இருக்காது ..24 வருடத்துக்குமுன் எடுத்தது ] ....நண்பர்களைப்பற்றி சொல்லும் போது பழைய படங்கள் மிகவும் மெருகூட்டும்.

Ahamed irshad said...

இன்னும் சொல்ல‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் சொல்லிருங்க‌ப்பா..


# முறுக்கு பாக்கெட்டோடு வெயிட்டிங்..

sabeer.abushahruk said...

//# முறுக்கு பாக்கெட்டோடு வெயிட்டிங்..//

நன்றியெல்லாம்தான் நவிழ்ன்றாகிவிட்டதே. மேடையெல்லாம் கலைச்சாச்சே. அடைமழையில் எல்லோரும் வூட்டுக்குப் போயிருப்பார்கள் என்று எதேச்சையாக எட்டிப் பார்த்தால்...
முருக்குப்பாக்கெட்டோடு இர்ஷாத்.

வூட்டுல தேடமாட்டாங்களா இர்ஷாத்?

Kavianban KALAM, Adirampattinam said...

The ABC’s of Friendships

Accepts you as you are
Believes in 'you'
Calls you just to say 'HI!'
Doesn't give up on you
Envisions the whole of you even the unfinished parts
Forgives your mistakes
Gives unconditionally
Helps you
Invites you over
Just'be' with you
Keeps you close at heart
Loves you for who you are
Makes a difference in your life
Never Judges
Offers support
Picks you up
Quiets your fears
Raises your spirits
Says nice things about you
Tells you the truth when you need to hear it
Understands you
Values you
Walks beside you
X-plains thing you don't understand
Yells when you won't listen and
Zaps you back to reality

தலைத்தனையன் said...

ASSALAMU ALAIKKUM THAMBI THAJUDEEN.

HOW ARE YOU? SINCE YOU RETREATED FROM YOUR AGREEMENT WITH FOOT BALL AND MADE A VENTURE WITH CRICKET, OUR CONNECTION WAS TEMPORARILY DISCONNECTED.

பல முறை கூகிள் TRANSLITERATION ல் டைப் செய்து அவசரத்தில் ஏதேனும் ஒரு கீ-யை தவறுதலாக தட்டும் பட்சத்தில் எல்லாம் மாயம். ஆங்கிலம் சுலபமாக இருந்தாலும். என் தாய் மொழியில் கதைப்பதற்கு நிகராகுமா?

REMEMBER ME ALWAYS IN YOUR PRAYERS.

FEE AMANILLAH.

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…

//[ அவரிடம் கூட அந்த படம் இருக்காது ..24 வருடத்துக்குமுன் எடுத்தது//

யோசிக்கின்றேன் யோசிக்கின்றேன் 24 வருடம் பின்னே போய் எங்கே எடுத்தது அந்த போட்டோ என்று .ஒரு அனுமானம் சென்னை ஏற் போர்ட்டில் எடுத்ததாக இருக்கும் என்று சரியா?

Shameed said...

தலைத்தனையன் சொன்னது…

//கிழங்கு ஹாஜா அலாவுதீன். கண்டு பல வருடங்களாகிவிட்டன.//


இவர் எனது மாமா தற்போது ஜித்தாவில் உள்ளார்கள்

Yasir said...

இந்த மாதிரி தலைப்பை கொடுத்து...தொலைந்துபோன நினைவுகளையும், உறவுகளையும்,உணர்வுகளையும் மீட்டெடுக்க உதவிய கவிக்காக்கா அவர்கள் மற்றும் அ.நி எங்க துவாவில்

Yasir said...

கவியன்பன் கலாம் அவர்களின் திறமை திகைக்கவைக்கின்றது....

தலைத்தனையன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. ஷமீது. எனது ஸலாத்தினை என் நண்பனுக்கு உங்கள் மாமாவுக்கு எத்தி வையுங்கள். ஜசாகல்லாஹு கைரன்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

// தலைத்தனையன் சொன்னது… SINCE YOU RETREATED FROM YOUR AGREEMENT WITH FOOT BALL AND MADE A VENTURE WITH CRICKET, OUR CONNECTION WAS TEMPORARILY DISCONNECTED.//

அல்ஹம்துலில்லாஹ்.. எல்லோரும் நலம் காக்கா...

தமீம் காக்கா, ஞாபகப்படுத்தீட்டியலே.. மறக்க முடியுமா ஷிஃபா திடலிலும், காலோஜ் திடலிலும் அஸருக்கு பிறகு கால்பந்துவிளையாடியது இன்னும் மனதில் பசுமையாக உள்ளது. சிறுவயதினராக நாங்கள் இருந்தாலும் உங்களோடு ஈடுகொடுத்து விளையாடியதை மறக்க முடியாது காக்கா. இடைப்பட்ட காலத்தில் வந்ததுதான் கிரிக்கெட். அதிரையின் விளையாட்டே கால்பந்து தானே காக்கா.

பல வருடங்களுக்கு முன்பே அனைத்து முஹல்லாக்களையும் ஒன்றிணைத்தது காலேஜ் திடலில் விளையாடிய கால்பந்து விளையாட்டு. எனக்கு தெரிந்து அனைத்து தெரு சகோதரர்களும் அங்கு விளையாடுவார்கள். அது பல வருடங்கள் தொடர்ந்த இன்று கிரானி திடலில் AFFA அணியாக மாறியுள்ளது.

கிரிக்கெட் இடைப்பட்ட காலத்துல வந்தது காக்கா..

இன்ஷா அல்லாஹ் துஆ செய்கிறேன் காக்கா, நீங்களும் துஆ செய்யுங்கள்..

அதிரைநிருபர் பக்கம் தொடர்ந்து வாருங்கள்...

sabeer.abushahruk said...

தலைத்தனையனின் தொடர்புகள் எல்லையில்லாதவையா?
கவியன்பனின் தேடலுக்குக் கிடைத்ததோடு மட்டுமல்லாமல் தாமும் தேடித் தேடி தம் நண்பர்களைக்கண்டு சந்தோஷிக்கும் தமீமில்...அதே இளமை.

கவியன்பனின் பன்முகங்களில் ஒன்றா இந்த alphabetic poem?
கவியன்பனிடம் இன்று தொலைபேசியில் பேசும் வாய்ப்புக்கிடைத்தது. பேசி முடித்தபின்பும் எனக்குள் எஞ்சி நின்ற கேள்வி...கவியன்பன் தொலைபேசியில் பேசினாரா எழுதினாரா?

sabeer.abushahruk said...

94-ல் அவுட்டானால் கல்லெறிந்து வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துவிடுவார்களோ என்ற பயத்தில் ஒரு சிங்கிள் சேர்த்துவிட்டேன். :)

sabeer.abushahruk said...

1983 என்று நினைவு. மக்காவிலிருந்து முகமதலி, "சபீர், சென்னையில் ஃபிஸிக்ஸ் படிப்பதோடு எப்படியாவது டெலக்ஸும் கம்ப்யூட்டர் புரோக்ராமும் படித்து விடுங்கள். வேலை வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்" என்று சொன்னதும் துட்டுக்கு எங்கேப் போவது என்ற கவலையை என் ஜாகிருடன் பகிர்ந்துகொண்டதன் விளைவு, அவன் தான் படிக்க விரும்புவதாக மலேசியத் தொழிலதிபராகிய தமது தந்தைக்கு சொல்லி இரண்டு பேருக்குமான ஃபீஸைக் கட்ட வைத்தான்.

1984 என்று நினைவு. அதே முகமதலி (அல்நூர்) அப்போ மக்காவில் கோழி சுடும் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். என்னைப்போலவே அவருக்கும் கஷ்ட ஜீவிதம்தான். இருப்பினும், கோழி சுடும் நெருப்பில் வெந்து சம்பாதித்த தன் ஒரு மாத சம்பளத்தை (அப்போ 600 ரூபா) எனக்கனுப்பி டைப் ரைட்டிங் லோயர் பாஸ் பண்ணவைத்தார்.

...இப்படியாக என் நண்பர்கள் இடுக்கன் களைந்த நிகழ்வுகள் ஏராளம்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
என் மேல் விழுந்த பாசத்துளிகள் இத்தனை நாளாக எங்கெங்கேயோவெல்லாம் இருந்திருக்கு.இன்று என் தலைக்கு மேலும் குடைக்குள்ளேயும் வந்து எந்தன் ஜீவன் நனைத்திருக்கு.
சபீர் காக்கா என்னை தேடினார் ஆனால் நான் அவரை தெரிந்தும் தெரிய படுத்த முடியாதபடி சந்தர்பம் அமையவில்லை. அதுபோல் யாசர் நான் கண்ட நல் முத்து, நட்பிற்கான உண்மை சொத்து அவர் சொன்ன வாழ்த்து ஒரு பூங்காவன கொத்து!அதன் வாசம் அட்டகாசம், அதன் நேசம் நிரூபிக்கபட்ட உண்மை. மேலும் இங்கு கருத்திட்ட பெரும் பாலானோர் என் நட்புகளே! மேலும் இங்கே வந்த பெரும் பாலோனோர் என் சொந்தம் மேலும் நேசர்கள்,வந்து கருத்து சொன்ன நேசர்கள் என்னை சொந்தம் போல் மதித்து நடப்பவர்கள். எல்லாப்புகழும் அல்லாஹுக்கே!.

அதிரை என்.ஷஃபாத் said...

சும்மா.. 100-ஆவது பின்னூட்டம் போடுவது நானாக இருக்கட்டுமே-ன்னு....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

யான் வாப்பா பயண காசு நூறு ரூவாவோட ஒரு ரூவா சேர்த்து கொடும்மா பரக்கத்துக்கு அல்லாஹ்ட கவலா நிரப்பமா போயிட்டுவாம்மா... என்று சொன்ன ஒரு பெரிவங்க ஞாபகத்தில வந்துட்டாங்களா அதான் இங்கே ஒரு கருத்தும் 101 ஆக இருக்கட்டுமேன்னு சேர்த்துட்டேன்... :)

தம்பி ஷாஃபாத் :)

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,
மேலே தேர்ட் அம்ப்பையருக்கு ரெஃபெர்ரலுக்கு அனுப்பப்பட்ட யாசிர் அடித்த ஃபோர் ஒன்னு 3 தான் என்று தீர்மாணிக்கப்படும்பட்சத்தில் (அ.நி. அதை நீக்கிவிட்டால்) நீங்கதான் செஞ்ச்சுரி.

ஷஃபாத் சரியான சச்சினு. 99 ல அவுட்டு :)

Kuthub bin Jaleel said...

நண்பரே, பழைய நினைவுகளை பசுமையாக பூட்டி வைத்திருப்பதற்கு நன்றி. சிங்கப்பூர் நடை, ஜுவி அறிமுகம் எல்லாம் மறக்கவில்லை. Please forgive for changing over to English as it takes lot of time to type in Tanglish without mistakes. I endorse your suggestion to publish pictures so that we can identify each other easily, particularly people who write in nick names. I am becoming addicted to the contributions of Sabeer,Kalam and (ofcourse) Tuan Zakhir. My salaams to your dad and Nizam. Stay connected. My email-id: kuthbudeenjaleel@gmail.com

Kuthub bin Jaleel said...

//கமென்ட்ஸ் பகுதியில் போட்டோவையும் பதிய முடியாதா?....அப்படி முடிந்தால் சாகுல் மிகவும் ஒல்லியாக உள்ள படத்தை நான் பதிவேன் [ அவரிடம் கூட அந்த படம் இருக்காது ..24 வருடத்துக்குமுன் எடுத்தது ] ....நண்பர்களைப்பற்றி சொல்லும் போது பழைய படங்கள் மிகவும் மெருகூட்டும்.//


நண்பரே, பழைய நினைவுகளை பசுமையாக பூட்டி வைத்திருப்பதற்கு நன்றி. சிங்கப்பூர் நடை, ஜுவி அறிமுகம் எல்லாம் மறக்கவில்லை. Please forgive for changing over to English as it takes lot of time to type in Tanglish without mistakes. I endorse your suggestion to publish pictures so that we can identify each other easily, particularly people who write in nick names. I am becoming addicted to the contributions of Sabeer,Kalam and (ofcourse) Tuan Zakhir. My salaams to your dad and Nizam. Stay connected. My email-id: kuthbudeenjaleel@gmail.com

அதிரைநிருபர் பதிப்பகம் said...

//கமென்ட்ஸ் பகுதியில் போட்டோவையும் பதிய முடியாதா?....///

முடியாதது ஏதுமில்லை, ஆனால் bloggerல் இலகுவாக வாசகர்களால் சேர்க்க (கமெண்ட்ஸ் பாக்ஸில்) வசதியில்லை, இருப்பினும் அந்த ஒரு வாய்ப்பையும் வெகு சீக்கிரத்தில் அதிரைநிருபர் ஏற்படுத்தும் இன்ஷா அல்லாஹ்...

Shameed said...

இப்படி எல்லோரும் போட்டோ பற்றி பேசும்போது போட்டோ தொடர் ஒன்று போடலாமா என்ற யோசனை வருகின்றது

Kuthub bin Jaleel said...

//இரண்டாம் நம்பர் பள்ளிக்கூடத்தில் படிக்கும்பொழுது இன்டர்வலில் மெயின் கேட்டிலிருந்து ராதா நாயக்கர் மளிகை கடைக்கு பக்கத்தில் இருந்த தண்ணீர் பைப்பு வரை வழமையாக ஓட்டப்பந்தயம் வைத்து நீர் அருந்தச் செல்வோம்.//

நீர்தானா அந்த தலைத்தனையன்? How are you my friend? Recent news about your brother is disturbing. May Allah ease all his problems. Please stay connected. My email-id: kuthbudeenjaleel@gmail.com

crown said...

Shameed சொன்னது…

இப்படி எல்லோரும் போட்டோ பற்றி பேசும்போது போட்டோ தொடர் ஒன்று போடலாமா என்ற யோசனை வருகின்றது .
---------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இப்படி போட்டோ தொடர் போட்டா போட்டா போட்டி போட்டு போட்டோ போடுவாங்க. படம் எடுத்து போட்ட நிரம்ப நல்லா இருக்கும்(போட்டா எடுக்கனும், நான் சொல்றது கீழ போட்டா)இதுக்கு மேல எழுதுனா சரிவாராது வரட்டா டாட்டாவுடன்(பாட்டா செருப்ப யாரும் கையில் எடுக்காம இருந்தா சரி).

Shameed said...

crown சொன்னது…

//போட்டோ தொடர் போட்டா போட்டா போட்டி போட்டு போட்டோ போடுவாங்க.//

ஆகா இந்த கிரௌன் தூங்கமே எங்கேந்து "டா" வை எல்லாம் எடுத்துபோட்டு இப்புடி டாவடிக்கிர்றாருன்னு தெரியலே

sabeer.abushahruk said...

குதுப்,

குஞ்சுத் தாடி வச்சா? அடையாளம் தெரியாதுன்னு நென்னச்சியலோ?

ஏ அய்யா, நீங்கள்லாம் எங்கேயா இருக்கீக?

crown said...

ஆகா இந்த கிரௌன் தூங்கமே எங்கேந்து "டா" வை எல்லாம் எடுத்துபோட்டு இப்புடி டாவடிக்கிர்றாருன்னு தெரியலே
------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சாவடிக்கிறேன்னு சொல்லாம சா"வன்னா அண்ணா வார்தையில் வெளுத்து கட்டி இருப்பதே சிறந்த வாழ்த்து.

Kuthub bin Jaleel said...

// குஞ்சுத் தாடி வச்சா? அடையாளம் தெரியாதுன்னு நென்னச்சியலோ?//

சபீருக்கு அடையாளம் தெரிவதற்குத்தான் முன்பு எடுத்த குஞ்சுத் தாடி படம். கடந்த ஒரு வருடமாக முழுத் தாடி தான். முன்பெல்லாம் சபீர் என்றால் ஞாபகம் வருவது ஆரஞ்சு கலர் ஐசோப்பி சட்டை. இப்பொதல்லாம் கவிதை மட்டுமே. முக்கியமாக, " நிஜமா நிஜாம்?". Am I right, Tuan Zakhir?

//ஏ அய்யா, நீங்கள்லாம் எங்கேயா இருக்கீக?//
Very close, கவிஞரே. We will meet this weekend, Insha Allah.

Yasir said...

சகோ.குத்புதீன் காக்காவிடம் சென்னையில் வேலை செய்த அனுபவத்தை மறக்க முடியாது....படித்தவுடன் கிடைத்த முதல் வேலை...அனுபவம் இல்லாததால் நான் புரோகிராம் என்று உலப்பி போட்டதை எல்லாம் ஒருங்கிணைத்து உன்னதபடுத்தி...என்னை பண்படுத்தியவர் அவர்....குறைந்த காலமே அவரிடம் வேலைபார்த்தாலும் அவரின் சுறுசுறுப்பும்,பணி செய்யும் பரப்பரப்பும்,பண்பும்,திறமையும் என் வாழ்வில் ஒரு சில திருப்புமுனைகளை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை...என் துவாவில் நீங்கள் என்றும் காக்கா

N. Fath huddeen said...

Ammapattinam Madani is in Manamelkudi, doing business; after quiting from Al-khobar Le Meridian.

ZAKIR HUSSAIN said...

Dear Kuthbudeen Bin Jaleel,

உங்கள் கமென்ட்ஸ் இப்போதுதான் பார்த்தேன். சபீர் உங்கள் தாடி பற்றி சொன்னாலும் உங்களை ஈசியாக அடையாளம் காணக்கூடிய முகம்தான். [ இது என்ன தமிழ்ப்படமா...இரட்டை வேசத்துக்கு ஒரு பரு மட்டும் வைத்து வேறுபடுத்த ]

சரி Gulf வரும்போது பார்ப்போம். till then stay connected.

sabeer.abushahruk said...

{{//ஏ அய்யா, நீங்கள்லாம் எங்கேயா இருக்கீக?//
Very close, கவிஞரே. We will meet this weekend, Insha Allah. }}

ஆஹா
வட போச்சே.
எனினும் இவ்வாரக்கடைசிக்குள் அவிட அஜ்மான்ல எத்தும்.
நான் இன்னிக்கு கொச்சின்ல ச்சேட்டன்மார்ன்ட ஒரு ஹோட்டல்லயா.

sabeer.abushahruk said...

Welcom to Adiai Nirubar, Jo.(fathhudeen, Jubail.)

(where is A.N.?)

தலைத்தனையன் said...

YES KUTB, PREVIOUSLY IN ONE OF THE FABRICATED CASES ON HIM, HE WAS INDICTED IN NORTH INDIAN INCIDENT. BUT HE WAS UNDER JUDICIAL CUSTODY OF CHENNAI THE SAME DAY AND THE TIME MENTIONED BY THE WITNESS. ABOUT 4 AND 1/2 YEARS I SPENT MY EARNINGS, MY FAMILY'S EARNINGS AND TIME.

ALLAH HAS ACQUITTED HIM FROM ALL THOSE PUT UP CASES.

IF A FIGHT MADE AGAINST AN AGGRESSOR BY LONESOME WONT SUBDUE HIM.

PRAY FOR US.

MOHAMED THAMEEM

தலைத்தனையன் said...

வ அலைக்குமுஸ்ஸலாம்.

மறந்துவிட்டாய் என்று மறந்து நினைத்துவிட்டேன்.
மறக்கவில்லை என்பதை சிறக்க சொல்லிவிட்டாய்.

நிறைந்த குடத்திற்கு மேலும் நீர் எதற்கு?
நிறைந்த உன் அறிவிற்கு நீர்த்த விடயம் எதற்கு?????!!!!!

வார்த்த இரும்பினிலே பார்க்க தூசு உண்டோ?
தூசு அல்ல அது பார்த்தவர் கண்ணில் மாசு

கள்ளம் சிறிதும் உள்ளம் பெரிதுமாய் கண்டோம் சிலரை
நாம். இன்று உள்ளமே சிறிதாய் கள்ளமே பெரிதாய் பலர்.

புகழும், புகழ்பவர் நலனும் பூசனம் ஆகாது பூசிக்க ஆசிக்கும்
மக்களிடை; நடை தளர்ந்தாலும், புலம் பெயர்ந்தாலும்

வழமை மாறினாலும், வழுதி மீண்டாலும்,
தழுவி தனை அணைத்த தாயை பிரிந்தாலும்

நழுவிய நட்பெல்லாம் எட்ட நின்று சிரித்தாலும்
நாடிவிட்ட நாயனருள் நாளத்தில் உணர்த்துதடா

பஞ்சாய் பறந்தாலும் நம்மவர் பாதகம் செய்தாலும்
விரல் சொடுக்கும் நேரம் கூட விலகா அவன் துணை உண்டு

அவனன்றி அவனியிலே யாருண்டு எமக்கு? அவன் தான்
தான் என்ற ஒரு சொல்லுக்கு அதிகாரன்.

அவன் நினைவிலா மரத்த உளமும், அவன் உயிரிலா
மரத்ததும் உடலே.

ZAKIR HUSSAIN said...

To தலைத்தனையன்....

நான் சொன்னேந்தானே...உங்களிடம் அந்த எழுத்து ஸ்டைல் இருக்கிறது...நீங்கள் எழுதிய கவிதையின் வார்த்தை பிரவாகம் ஒன்று போதும் உங்களின் திறமை சொல்ல....எல்லாப்புகழும் இறைவனுக்கே..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மறந்துவிட்டாய் என்று மறந்து நினைத்துவிட்டேன்.
மறக்கவில்லை என்பதை சிறக்க சொல்லிவிட்டாய்.//

இப்படியாக தொடரும் வரிகள்....

ஒரு தனிப் பதிவாக வரவேண்டிய அருமையான படைப்பு !

எழுதச் சொல்லியா தரனும், வாசிக்கத்தான் இங்கே சங்கமித்திருக்கும் நட்புகளும் உறவுகளும் குவிந்திருக்கிறோமே !

crown said...

மறந்துவிட்டாய் என்று மறந்து நினைத்துவிட்டேன்.
மறக்கவில்லை என்பதை சிறக்க சொல்லிவிட்டாய்.
---------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்.தலைதனையன் உண்மையிலேயே என் தலைக்கும் தலையன். நான் என் குடும்பத்தில் இளையன் வேண்டுமென்றால் நடுவன் என கொள்ளலாம்.அருமையான தொடக்க வரி!முன்பு நான் எழுதிய கவிதை(?) ஒன்று . அவள் மறதியைப்போன்றவள் மறக்க முடியாததால்.

crown said...

வார்த்த இரும்பினிலே பார்க்க தூசு உண்டோ?
தூசு அல்ல அது பார்த்தவர் கண்ணில் மாசு.
---------------------------------------------------------------------
நட்பை பற்றிய வார்த்த வார்த்தை கரும்பாய் இனிக்க அந்த நட்பு எஃகுவை விட உறுதி என்பதும் பார்பவர் பார்வையில் வேறு பட்டால் பார்பவர் பார்வை கோளாறு . நண்பனை நண்பனைவிட நல்ல பார்வை பார்க்க இந்த புவியில் எந்த பிற உறவும் இல்லை.

crown said...

அவன் நினைவிலா மரத்த உளமும், அவன் உயிரிலா
மரத்ததும் உடலே.
----------------------------------------------------
அதான் உயிரற்ற உடலை கட்டை என அழைக்கிறோம்.

தலைத்தனையன் said...

வ அலைக்குமுஸ்ஸலாம். தம்பி தஸ்தகீர்!

sabeer.abushahruk said...

//எனக்கும் என் நண்பர்களைப்பற்றி எழுத ஆசைதான். கவிதையும் எழுதலாம் என்றால், சபீருக்கும், கலாமுக்கும் இடையில் கடுகுபோல் சிறுத்து காணாமல் போய்விடுவோம் என்ற அச்சம்தான்//

//நிறைந்த குடத்திற்கு மேலும் நீர் எதற்கு?
நிறைந்த உன் அறிவிற்கு நீர்த்த விடயம் எதற்கு//

இது கடுகா?
(என்னய வச்சி காமெடி கீமெடி பண்ணலயே?)

Yasir said...

சகோ.தமீம் நீங்கள் கடுகு அல்ல...கவிப்புதையல்களை தன்னுள் புதைத்துவைத்திருக்கும் வானுயர்ந்தமலை என்பது இக்கவிதை மூலம் தெரிகிறது...ஒரு பானை சோறுக்கு......ஒரு சோறு பதம்....வாழ்த்துக்கள்..

Yasir said...

thanks Adirai Nirubar for your professional way of delivering the prize to our door step ...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

பயனுல்ல தோழர்கள் புத்தகம் பரிசாக எங்களுக்கு தந்த அதிரை கவி சபீர் காக்கா அவர்களுக்கு மிக்க நன்றி.

ஜஸக்கல்லாஹ் ஹைர்

KALAM SHAICK ABDUL KADER said...

அதிரை நிருபர் அன்பளிப்பானத் ”தோழர்கள்” நூலை அதிவிரைவாக என்னிடம் சமர்ப்பிக்கும்படி சகோதரர் அலாவுத்தீன் அவர்களிடம் ஒப்படைத்துள்ளதாக இன்று காலை சகோதரர் அலாவுத்தீன் அவர்கள் அலுவலகத் தொலைபேசிமூலம் என்னிடம் பேசினார்கள். அவர்களை இன்றிரவு இஷாவுக்குப்பின் கண்டு அந்நூலைப் பெற்றுக் கொள்வதாக வாக்களித்தேன். ஆனால், அவர்களின் செல்லிடைப்பேசி எண் கேட்காமல் மறந்து விட்டேன். அவர்களின் தொடர்ப் எண் தர வேண்டுகின்றேன்

KALAM SHAICK ABDUL KADER said...

”தோழர்கள்” நூலினைத் தோழர் அலாவுத்தீன்
தோழமை யன்புடன் தந்தார்கள் - ஆழமாய்க்
கற்கத் துவங்கினேன்; கண்ணீர் வழிவது
நிற்கவில்லை யன்பை நினத்து.

அன்புத்தம்பி தாஜுத்தீன் உடனே அனுப்பிய business card வழியாக தோழர் அலாவுத்தீன் அவர்களின் செல்லிடைப்பேசி இலக்கம் கிடைத்ததும்;அதிரை நிருபர் நெறியாளர் அபூ இப்றாஹிம் மற்றும் ஆஸ்தானக் கவி சபீர் ஆகியோரின் துரித் சேவைகள் யாவற்றுக்கும் நெஞ்சம் படர்ந்த நன்றி. ஜஸாக்கல்லாஹ் கைரன்.

They are professional and perfect Journalist

தலைத்தனையன் said...

உம்மாவும் வாப்பாவும் கூடிக்குலவியத்தில்
குவலயம் வந்துவிட்டோம்.

உறவுகள் கூடி நிற்க உணர்வுகள் குறைந்து வர
உண்மை உணர்வுகள் விழித்திடுமே

அதுதொடர்ந்து அண்டம் கிடு கிடுக்கும்
அந்த நாள் வந்துவிடும்

ஆதி வாப்பா ஆதம் முதல் மீதி வாப்பா
அவ்னி வரை தத்தம் காரியத்தில் மூழ்கிடுவர்

நாய் பாதி பேய் பாதி நரி மீதி என
நாற்புறமும் சிதறி விட்ட இறை யச்சம்

ஒன்றாய் கொள் அவன் ஒருவனே சொல் அமைதி
நீக்கமற நிறைந்துவிடும் இறப்புக்கும் பின் தொடரும்

Haja Mohideen said...

சொல்வடிவம்,செயல்வடிவமற்றது நட்புரிமை
சகோ.சபீர் அவர்களுக்கு வந்த கருத்துக்கள் தெளிவுபடுத்தும்.
இவரின் தலைப்பு எங்களின் வாழ்க்கையே அலசியது அதன் சில துளிகள்......

கந்தை, மண்,சூட்கேஸ்
பொருட்கள் அல்ல...!

கிளி,சிட்டு.பருந்து,
பறவைகள் அல்ல...!

பாம்பு, கரடி, சிங்கம், சிறுத்தை
வனவிலங்கும் அல்ல...!

துணைப்பெயர்கள் சூடியிருக்கும்
என் உன்னத நண்பர்கள்
நட்பூக்களுக்கு சொந்தக்காரர்கள்.


தாய்மையின் பாசம் சற்றே
போபமாயிருக்கையிலே...
செவிழித்தாயாய்
அரவணைத்தது நட்பு
பிறந்த பாசத்திற்காக

புலம்பித்திரியும் காலத்தருணத்திலும்...
மனங்கலந்த திருமகள்கூட
தரலைன்னு தட்டிக்கழிக்கும் நேரத்திலும்
எங்களுக்குள் இயல்பாய்கூட இல்லையயன்பதில்லை...!

வண்ணமும் வாசமும்
பூக்களுக்கு பெருமையயன்றாலும்
முட்கள் உண்டு.
எங்கள் நட்பூக்களில் இல்லையே!

காலத்தின் புலம்பல்
சிறகுமுளைத்த தகரம்
இந்த தவப்புதல்வர்களை தூக்கிச்சென்றது
எங்களின்பிரிவு நட்பினை
மேம்படுத்துமென்பதனைமறந்து

சேனாமுனா, அதிரை

sabeer.abushahruk said...

சேனாமுனா,
நட்புக்குத்தான் தோழர்கள் பரிசு,
பட்டப்பெயர்கள்கூட நட்பின் அடையாளமாகும்போது உமது பின்னூட்டமும் பரிசுக்குத் தகுதியாகிறது.

இன்றே புத்தகம் உமக்கு நானே வழங்குவேன்.

வாழ்க நட்பு.

தவிர,

ஹமீது வீட்டிலும், நவாஸ் வாப்பவிடமும், ஜாகிர் வீட்டிலும் புத்தகங்களஈன்
று கொடுத்துவிடுகிறேன்.

தமீம் புத்தகத்தை எப்படிக் கொடுப்பது?

sabeer.abushahruk said...

என் நெடுநாள் ஆசையான "அதிரை நிருபர் நண்பர்கள் அனைவரையும் காணவேண்டும்" என்ற ப்ராஜெக்ட்டின் பகுதியாக,

புத்திக்கூர்மையைக் கண்டு வியந்த ஹிதாயத்துல்லா (அதிரை போஸ்ட்) மற்றும் டிஸைன் டிஸைனாகக் கலக்கும் எல் எம் எஸ் ஆகியோரையும் சந்தித சந்தோஷத்தில் அவர்களுக்கும் தோழர்கள் தர விருப்பம்.

Yasir said...

//என் நெடுநாள் ஆசையான "அதிரை நிருபர் நண்பர்கள் அனைவரையும் காணவேண்டும்" என்ற ப்ராஜெக்ட்டின் பகுதியாக, // ஊர்லயா காக்கா...சொல்லவே இல்லை :) எப்ப திரும்பி வர்ரீங்க....

sabeer.abushahruk said...

யாசிர்,
பிஸினஸ் ட்ரிப்புக்கு (கொச்சின்) ஊடால, நேத்து வந்தேன் ஊருக்கு, நாளைக்குத் திரும்பிவிடுவேன். நோக்கம்: உம்மாவைப் பார்த்துவிட்டு, மகளை ஷார்ஜாவக்கு அழைத்து வருவது.

Haja Mohideen said...

சஹோ.ஜாஹிர் அவர்களுக்கு என்னுடைய கேள்வி. சஹோ.சபிர் அவர்கள் சட்டை மாடல் எப்படி தெரியுமா.......?

செ.மு

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//ஹமீது வீட்டிலும், நவாஸ் வாப்பவிடமும், ஜாகிர் வீட்டிலும் புத்தகங்களஈன்
று கொடுத்துவிடுகிறேன்//

எனக்கு கிடைத்த அந்த பரிசை நவாஸ் வாப்பாவிற்கு கொடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும்

எனக்கும் ஒன்று அடிசினலா கொடுப்பதில் மகிழ்ச்சியோ

Shameed said...

Haja Mohideen சொன்னது…
//சஹோ.ஜாஹிர் அவர்களுக்கு என்னுடைய கேள்வி. சஹோ.சபிர் அவர்கள் சட்டை மாடல் எப்படி தெரியுமா.//



அட சேனாமுனா வெழிலோ போடுற சட்டை மாடலை விட சட்டைக்கு உள்ளே உள்ள மனசு எப்படின்னு இன்ச் பை இன்ச்ஜா இவரப்பத்தி அவரும் அவரப்பத்தி இவரும் தெரிஞ்சி வச்சிகிறது தாண்டா அவங்களோட நட்ப்பின் ரகசியம்

crown said...

Haja Mohideen சொன்னது…

சஹோ.ஜாஹிர் அவர்களுக்கு என்னுடைய கேள்வி. சஹோ.சபிர் அவர்கள் சட்டை மாடல் எப்படி தெரியுமா.......?

செ.மு
----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். கழற்றி மாற்றும் சட்டையைவிட கழற்றி மாற்றா மனசும் அது நிறைந்த நட்பும் தான் அதி முக்கியம்.

ZAKIR HUSSAIN said...

சஹோ.ஜாஹிர் அவர்களுக்கு என்னுடைய கேள்வி. சஹோ.சபிர் அவர்கள் சட்டை மாடல் எப்படி தெரியுமா.......?

To Brother செ.மு

நீங்கள் கேட்பது விளங்கவில்லை....மாடலா சைஸா?

அப்துல் கபூர் said...

பணிச்சுமை காரணமாக அவ்வளவாக எழுதுவது கிடையாது, ஆனால் நண்பன் தாஜுதீனுடைய நண்பர்கள் பட்டியல் என்னை இங்கு இழுத்து வந்து விட்டது. சிறு வயது நண்பர்கள் ரிஜ்வான், சமியுல்லா, டாக்டர் சஞ்ஜீவ் குமார் (இவனிடம் இப்பொழுதும் தொடர்பில் இருக்கிறேன்) போன்றவர்களை மறந்தது ஏன்?,

ஆனந்த குமார், (ஏட்டு மகன்) சாந்த குமார் போன்றவர்கள் எங்கே, சிலுக்கு ஃபைஸல், முக்தார் போன்ற நண்பர்களிடம் தொடர்பில் இருக்கிறாயா?

மேலும் என் சிறு வயதில் 20 வருடங்களுக்கு முன் அதிரை,பட்டுக்கோட்டையில் இனைய வசதியே இல்லாமலிருக்கும்போது என்னை தஞ்சைக்கு அழைத்துச்சென்று இதுதான் இனையம், இதுதான் மின்னஞ்சல் என்று வயது வித்தியாசம் பார்க்காமல் சொல்லித் தந்த நெய்னா தம்பி காக்காவும் என் தோழரே!

அப்துல் கபூர் said...

மேலேயுள்ள கமெண்டுக்கு சொந்தக்காரன் நானே- அப்துல் கபூர்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சிறியவனின் அழைப்பை ஏற்ற சபீர் காக்கா கால்கள் நனைத்த வண்ணம்.நட்பினை அறிமுகம் செய்துகொள்ள வருவார்கள் என்று எதிர் பார்த்தேன்.ஊரில் மழை இல்லாத காரணத்தினால்.
பிசியாக இருந்த அவர்கள் ஈசியாக வாகனத்தில் வந்து குறைந்த நிமிடம் நட்பினை அறிமுகம்
செய்து கொண்டு.ஆறுதல் பரிசு புத்தகமும்.எனக்கு வழங்கி இருக்கிறார்கள். நட்புக்கு நட்பே தோழமை.

நட்புகள் மேலும் மேலும் வளர அல்லாஹ் அருள் புரிவானாகஆமீன்....

நட்புடன் ஜமால் said...

அழகாய் இருக்கிறது நட் பூக்கள், இந்த பகதியை முடிந்த அளவுக்கு பலரிடம் எடுத்து செல்ல வேண்டும், பலருக்கும் இது ஒரு வாய்ப்பாய் இருக்கட்டும், தத்தம் நட்புகளை அறிமுகம் செய்திட ...

இன்ஷா அல்லாஹ் எமது பட்டியலையும் வெளியிடுவோம் வாய்ப்பு வாய்க்கையில் ...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், நண்பன் கஃபூர்

சிறு வயது நண்பர்கள் ரிஜ்வான், சமியுல்லாவையும் ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. மறக்கவில்லை லிஸ்ட் நீண்டுவிடும் என்பதால் விட்டுப்போனது.

சாந்தகுமாரின் தொடர்பு இல்லை.

முக்தார், ஃபைசல் இருவரையும் சென்ற விடுமுறை ஜூன் மாதத்தில் அதிரையில் சந்தித்தது பழைய அதே கலகலப்பில் உரையாடினோம். முக்தார் தற்போது புதிதாக ஸ்டேஸ்னரி கடை ஆரம்பித்துள்ளார்.


அதெல்லாம் சரி தஞ்சாவூருக்கு சென்று இணையம் பற்றி அறிந்த செய்தி நீ இப்போது சொல்லிதான் கேள்விபடுகிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி அபுஹாமித்:

நலமா !

இப்புடி பழசையெல்லாம் கிளறிவிடுறே ! மாஷா அல்லாஹ் ஞாபக சக்தி !

எம்மைச் சுற்றி நிறைய (N)தம்பிகள் ஏராளம்! :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி ஷஃபாத்:

பரிசளிப்பு: "சபீர் காக்கா"
அன்பளிப்பு : "ஷஃபாத்"

அப்படியே நிறைவேற்றியும் விட்டேன், அல்ஹம்துலில்லாஹ் !

ஸ்கோர் : 150 (N.O)

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//மQரூப், சவுதி:
சிரித்த முகமின்றி
இவனை நான்
பார்த்ததே யில்லை.
வித்தா
என்ன விலைகொடுத்தும் வாங்கலாம்
இவன் தங்க மனசை//

"மனசென்ன உன் மனதுக்காக எதையும் சும்மாவே தரலாம்". .சிரித்த முகத்துடன் மஹ்ருப் சொன்னதை சாவன்னா டைப் செய்தேன்.(தற்போது என் அருகில் மஹ்ருப்)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//"மனசென்ன உன் மனதுக்காக எதையும் சும்மாவே தரலாம்". .சிரித்த முகத்துடன் மஹ்ருப் சொன்னதை சாவன்னா டைப் செய்தேன்.(தற்போது என் அருகில் மஹ்ருப்)//

LIVE !! :) !

Shameed said...

சபீர் உங்களுக்கு நினைப்பு இருக்கின்றதா ? தலைக்கறியும் பரோட்டாவும் சமைத்துக்கொண்டு ராஜபடம் பாலத்து மணலில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது நீங்கள் மகாருபை எங்களுக்கு அறிமுகப்படித்தி வைத்தீர்கள் வருடம் 1992 என்று நினைக்கின்றேன் அப்போது பியட் 118 காலகட்டம்

KALAM SHAICK ABDUL KADER said...

உடைமாற்றிப் போட்டதையும்; உண்டதையும்; ஒற்றைக்
குடைக்குள்ளே ஓருடலாய்க் கொட்டும் மழையில்
நடைபயிற்சி செய்ததையும் நட்பால் இழைத்துத்
தடையின்றிப் பொழிகின்றத் தன்னிலைக் கூற்று
விடைபெற்று வந்த விநாடியும் போற்றும்
அடைபட்டுக் கிடக்கின்ற அன்பென்னும் வெள்ளம்
மடைதாண்டி வழிகின்ற மாசிலா நட்புள்ளம்
படைத்தோனே வழங்கும் பரிசு.

crown said...

உடைமாற்றிப் போட்டதையும்; உண்டதையும்; ஒற்றைக்
குடைக்குள்ளே ஓருடலாய்க் கொட்டும் மழையில்
நடைபயிற்சி செய்ததையும் நட்பால் இழைத்துத்
தடையின்றிப் பொழிகின்றத் தன்னிலைக் கூற்று
விடைபெற்று வந்த விநாடியும் போற்றும்
அடைபட்டுக் கிடக்கின்ற அன்பென்னும் வெள்ளம்
மடைதாண்டி வழிகின்ற மாசிலா நட்புள்ளம்
படைத்தோனே வழங்கும் பரிசு.
-----------------------------------------------------------
உள்ளகிடங்கில் உதிக்கின்ற
எண்ணக்கவிதையை எடுத்து எம் மனதில்
விதைக்கும் வித்தை கற்ற மூத்தவனே(ரே)
உம்முட வார்தை வித்தைகளை விதிக்கும் களமாக
அதிரை நிருபரை வாரம் ஒருமுறையேனும்
தேர்ந்தெடுத்து தமிழ் பயிர் வளர்த்து
சுற்றமும் நட்பும் பயனுற
கற்றதை போதிக்கனும்.
கேட்டு வளரும் தலைமுறை சாதிக்கவே!
போதிக்கும் உங்களைப்போல் பலர் வந்து
வகுப்பெடுத்தால் நாமும் ஓதிகொள்வோம் நலமுடனே!

Haja Mohideen said...

சஹோ. அவர் ஒரே விதமான ஸ்டைலில் அணிவார். உ.த சிலாக் வைத்தது. ஏரோ வைத்தது போன்றது

Haja Mohideen said...

சகோ. சபீர் அவர்கள் மதுவைக்காட்டிலும் போதையைத் தன்மையை தன் தலையங்கமாய குறிப்பிட்டிருக்கிறார் என்றால் மிகையாகாது.
குடிகிறான் உளருவான். போதையில் எல்லா உண்மையையும் கூறுவான் என்று கேள்விபட்டிருக்கின்றோம். ஆனால் இவரின் (வார்த்தைகள்) கூட போதையாகும் என்று உறுதி செய்துவிட்டார். உங்கள் தலைப்பினில் மெய் சிலர்க்க சிந்திக்க வைத்துவிட்டீர்கள் எல்லோரையும். வயது வரம்புயின்றி நேயர்கள் பங்குகொள்ளும் இவ்வரங்கத்தில் வயது மூத்தோர்கள் இளையவர்கள் இருக்கிறார்கள் என்று பேதம் பார்க்கமால் உண்மைகளை உளரும் அருமை ஆஹா.... நட்புக்கு தோழர்கள் பரிசு ஆழ்ந்த சிந்தனைதான்
வள்ளுவரைவிட சிறந்த சிந்தனை என்பதில் ஐயமில்லை. இதுவரை 138 பின்னூட்டங்கள்.
நட்புக்கு தோழர்கள் பரிசு பார்த்தவுடன் நம் நிகழ்வுகளை எழுதவேண்டும் என்ற ஆர்வம் கத்தைகத்தாய் காகிதங்கள் வீணாகியது. இதயத்தில் சுழன்று கொண்டிருக்கும் நினைவுகள் தொண்டைவரையிலும்தான் வருகிறது அதற்கு மேல் சிந்திக்கவும்,சிரிக்கவும் வைக்கிறது. சகோ.சபீர் அவர்களுக்கு நினைவுபடுத்த ஆசைபடுகி¼ன். தங்களின் தலையங்கத்தை பார்த்தவுடன் பட பட என பல நினைவுகள் அலசியது, கல்லூரி பெண்கள் முறைத்துபோனார்கள் ஈ.சி.ஆர் சாலையிலே நானே சிரிக்கிறேன் என்ற காரணம் தெரியாமல். காரணம் தங்களின் தலையங்கம்தான். மிஸ் போட மிஸ்டேக் பண்ணியதற்கு கூட மன்னிக்கவும் காரணம் இதே நினைவுதான். வியாபார பார்வைகள்கூட சற்று பதில் சொல்ல மறுந்துவிட்டது என்ன ஒரு தலைப்பு............... நன்றி.
ஆயிரம் வரிகள் எழுதினாலும் இதை விட்டாச்சு அதை விட்டாச்சு தான்.... சிந்தனைக்கும்,சிந்திக்கவைத்ததற்கும் எங்களின் வாழ்த்துக்கள்

சேனாமுனா, அதிரை

Haja Mohideen said...

சாவண்ணா காக்கா பழசையயல்லாம் சாப்பாட்டோடு சொல்லும்பொழுது
மறுபடியும் சபீர்காக்கா மஃரூப் காக்காவை எங்களுக்கும் அறிமுகபடுத்தலாமே.

Haja Mohideen said...

தங்களின் இந்திய வருகையும், டெலிபோன் பேச்சும் அறிவேன், சற்று நிறுத்தி பேசினாலே தங்களின் சில வேலைகள் தாமதாகும் நிலையில்கூட நட்புக்கு கிரிடம் வழங்கியதற்கு நன்றி

Haja Mohideen said...

நட்புடன் ஜமால் சொன்னது… அழகாய் இருக்கிறது

தலைத்தனையன் said...

வெண்பா எழுதும் ஆருயிர் நண்பா
உன் பாவின் இலக்கணம்
வார்த்தையின் பொருட்கணம்
சுமை தாங்க இயலா இவ்வெளியோ நிக்கணம்

கண்ஜாடை காட்டினர் ஏகடியம் பேசினர்
பித்து பிடித்தனர் என்று அவர் பித்தாகிப் போயினர்
காலம் கடந்துவந்தோம் இறை உவப்பால்
கடுங்கண் வென்று வந்தோம்

காலபபொழுதிதுவே கடுகாய் சுருங்கிவிட
இல்பொருளுக்கும், இருக்கும் பொருளுக்கும்
தடயம் தேடிவந்தோம் வானில் பறந்திருந்தோம்.
கிட்டியது கிட்டியதே, கிட்டாதது கிட்டவில்லை
அதுதான் விதிஎன்றால் நான் ஒன்றும் பொறுப்பில்லை.

என்பாவில் தவறிருப்பின் பிழை
பொறுக்கவேண்டுகிறேன். இருப்பினும்
நம் தமிழாசான் சாத்தனாரும்
சீத்தலைதானே.

தலைத்தனையன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர் சபீருக்கு,
நன்பன் அபுல்கலாமிடம் தோழர்கள் புத்தகத்தை கொடுத்தால் மதி.

காலம் தாழ்ந்து வந்தாலும் இறக்கப்பட்டு பரிசு தந்தமைக்கு நன்னி.

என்ன இது? சபீருக்கு நேரடியா தமிழ்லே டைப் பண்ணினா நமக்கு மலையாளம் கலக்காமல் தமிழ் வராதா?

அப்துல் கபூர் said...

//அபுஇபுறாஹீம் சொன்னது…
தம்பி அபுஹாமித்:

நலமா !

இப்புடி பழசையெல்லாம் கிளறிவிடுறே ! மாஷா அல்லாஹ் ஞாபக சக்தி!//


அபுஇபுறாகிம் காக்கா, நம்மல விட பெரிய காக்காமார்கள் 40 வருசங்களுக்கு முன் நடந்த விடயங்களை நேற்று நடந்தது போல் விவரிக்கும்போது இதெல்லாம் சும்மா.

ஆஹா... போகிற போக்கில் பின்னூட்டங்கள் 2 சதத்தை சுலபமாக எட்டிவிடும் போலிருக்கிறதே?

வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///அபுஇபுறாகிம் காக்கா, நம்மல விட பெரிய காக்காமார்கள் 40 வருசங்களுக்கு முன் நடந்த விடயங்களை நேற்று நடந்தது போல் விவரிக்கும்போது இதெல்லாம் சும்மா.///

ஆமா, ஆமா ! அதனலத்தான் நானும் அமைதியாக ரசித்து வருகிறேன்..

இருந்தாலும் வென்பாவில் நண்பா வை அழைக்கும் இவர்கள் இதுநாள் வரை களம் கிடைக்காமல் களைப்பாறிக் கொண்டிருந்தார்களோ...

அட அதானே ! நம் மூத்தோர்கள் இங்கே களம் கண்டு கொண்டார்களே இனிமேல் என்ன கலக்க வேண்டியதுதானே ! :

நேற்று இபுறாஹிம் என்னிடம் டவுட்டு கேட்டது : "iPADக்கும்" "thinkPADக்கும்" என்ன வித்தியாசம் !?

அதற்கு அவனே சொன்ன பதில் "iPAD" அவன் பயன்படுத்துவதாம் "thinkPAD" நான் பயன்படுத்துவதாம் ! :)

KALAM SHAICK ABDUL KADER said...

உன்பாலுள் ளன்பினா லுள்ளம் பதறுமே
உன்பா விலும்பிழை யுண்டென்றால் நண்பரே
தன்பால் வழங்கும் தகைசால் பரிசிலை
அன்பா யெனக்கே அளித்திட வேண்டினாய்
உன்போ லெவர்தான் உளர்.

உன்பாவில் குற்றம்
உண்டென்பதே குற்றம்
பஃறொடை வெண்பாவில்
பகர்கின்றேன் நண்பா!!
உன்களிப்பால் நேற்று
வெண்கலிப்பாவின் ஊற்று

நீளும் பட்டியல்
கோடியே யாயினும்
ஆளும் உன்மன ஆழத்தில்
ஆரம்பமாய் நானும்

உன்னிடத்தில் நானிருக்கும்
என்னிடத்தை எவர்க்கும்
விட்டுக் கொடுக்கவோ; நட்புப்
பட்டுப் போகவோ விடமாட்டேன்....!!!!!!!!!!

Oh! My Dear Friend
Your list wouldn't be end
Event it reaches unto crore
I am in your heart's core

Shameed said...

Haja Mohideen சொன்னது…
//சாவண்ணா காக்கா பழசையயல்லாம் சாப்பாட்டோடு சொல்லும்பொழுது
மறுபடியும் சபீர்காக்கா மஃரூப் காக்காவை எங்களுக்கும் அறிமுகபடுத்தலாமே. //

சந்தோசமாக அறிமுகப்படுத்தலாம் ஆனால் அங்கே தலைக்கறி இருந்தால் தலை தெறிக்க ஓடிவிடுவோம்

crown said...

Shameed சொன்னது…

Haja Mohideen சொன்னது…
//சாவண்ணா காக்கா பழசையயல்லாம் சாப்பாட்டோடு சொல்லும்பொழுது
மறுபடியும் சபீர்காக்கா மஃரூப் காக்காவை எங்களுக்கும் அறிமுகபடுத்தலாமே. //

சந்தோசமாக அறிமுகப்படுத்தலாம் ஆனால் அங்கே தலைக்கறி இருந்தால் தலை தெறிக்க ஓடிவிடுவோம்.
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.என்ன அந்த தலையில் கொம்பாமுளைத்திருக்கு?

sabeer.abushahruk said...

அதிரை நிருபர்,

நான் இந்த இன்னிங்ஸ் முடிந்துவிட்டதாகவல்லவா நினைத்திருந்தேன்!!!

தலைத்தனையனைத் தானைத்தலைவனாக்கி, கவியன்பனைக் கவிக்கம்பனாக்கி அதிரை நிருபரில் ராஜ்ஜியம் நடத்த எத்தனை செலவானாலும் முன்பதிவு செய்து வைக்குமாறு கிரவுன் கவிதை ரசிகர் மன்றம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

அசத்துறாங்கப்பா. தமீமின் தமிழில் நகைச்சுவையும் பிரமாதம். சாம்ப்பிள்


// இருப்பினும்
நம் தமிழாசான் சாத்தனாரும்
சீத்தலைதானே.//

crown said...

sabeer.abushahruk சொன்னது…

அதிரை நிருபர்,

நான் இந்த இன்னிங்ஸ் முடிந்துவிட்டதாகவல்லவா நினைத்திருந்தேன்!!!

தலைத்தனையனைத் தானைத்தலைவனாக்கி, கவியன்பனைக் கவிக்கம்பனாக்கி அதிரை நிருபரில் ராஜ்ஜியம் நடத்த எத்தனை செலவானாலும் முன்பதிவு செய்து வைக்குமாறு கிரவுன் கவிதை ரசிகர் மன்றம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
அசத்துறாங்கப்பா. தமீமின் தமிழில் நகைச்சுவையும் பிரமாதம். சாம்ப்பிள்
// இருப்பினும்
நம் தமிழாசான் சாத்தனாரும்
சீத்தலைதானே.//
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். என்பால் கொண்ட அன்பினாலும்,இரக்கத்தினாலும் தலைமைகவி ரசிகர்மன்றம் அமைத்துள்ளது நான் செய்த பேறு!(கொஞ்ச பந்தா பண்ணி பார்க்க ஆசை ஆகவே)இனி என் ரசிகர் மன்றம் நற்பணி மன்றமாக மட்டுமே செயல் படும். இனி போஸ்டர் ஒட்டிதல் இன்னும் பிற செய்கை செய்யாமல் இருக்கவும் . இதை மீறினால் கிரவுனின் கவிதை இலவசம் இதைவிட வேறு கடுமையான தண்டனை தெரியவில்லை.இப்படிக்கு தலைமை செயலக தலைமை நிர்வாகி யாசிர்.

Unknown said...

சபீர் காக்கா,ஜாகிர் காக்கா மற்றும் தமீம் காக்கா ,கலாம் காக்கா
ஆகியோரின் உயர்ந்த நட்புக்கள் அதனை தொடர்ந்து அ.நி. வெளியான
இந்த பதிவு உண்மையான நட்ப்புக்கு நல்ல உள்ளுணர்வு அதிர்வலைகளை
ஏற்படுத்தி இருப்பதை உணர முடிகிறது .நல்ல நினைவுகளை கிளறி விட்டதற்கு
சபீர் காக்காவுக்கு வாழ்த்துக்கள் .

sabeer.abushahruk said...

//இதை மீறினால் கிரவுனின் கவிதை இலவசம் இதைவிட வேறு கடுமையான தண்டனை தெரியவில்லை.//

இலக்கண அடையாளம்: வஞ்சப்புகழ்ச்சி அணி :)

crown said...

sabeer.abushahruk சொன்னது…
//இதை மீறினால் கிரவுனின் கவிதை இலவசம் இதைவிட வேறு கடுமையான தண்டனை தெரியவில்லை.//
இலக்கண அடையாளம்: வஞ்சப்புகழ்ச்சி அணி :)
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இலக்கண அடையாளம் வேண்டுமென்றால் வஞ்சப்புகழ்சியாக தெரியலாம். ஆனால் என்னெஞ்சில் கொஞ்சமேனும் வஞ்சப்புகழ்சி இல்லை.புகழ் எல்லாம் அல்லாஹ் ஒருவனுக்கே. ஆனாலும் என் கிறுக்கல்களும் கவிதை என ஏற்ற உங்கள் பெருந்தன்மை போற்றதக்கது.

அருதப்பழசு said...

தோழர் சபீர் பொறியாளர் சமந்தப்பட்ட வேல பாக்குறது தெரியும்; 'பொறி'ல சிக்க வைக்குற (எலிய இல்ல) வேலையும் தெரிவது !!

ஓடிப்பிடிச்சு வெளாடுன அதுரப்பழசு காலத்துல எங்க செட்லையே பெரிய்ய'ண்ணன்' பசங்கள்ட்டெல்லாம் காசு சேத்து வெளாட்டா கூடு எடுத்ததால 'குதுபுதீன் காக்கா'வாகிப் போனாஹ! அப்போல்லாம் அந்தப்பேரக் கேட்டாலே கடுங்கோபம் வரும் அவுகளுக்கு! இப்போ கேட்டா சிர்ரிப்பூபூ தான் வரும். கூடு எடுத்த செலவு போக மீந்த துட்டுல 'எடச்சி' மார்க் திக்கான பாலென்ன; முந்திரிப்பருப்பென்ன... ஒரே ஜல்ஸாதான்.. வேறெதுக்கு எல்லாம் அப்படியே திங்கத்தான்! (எங்களுக்கும் கொஞ்சூண்டு கெடக்கும்)

அண்ணாச்சிக்கு இதல்லாம் ஞாபகம் வரட்டுமேன்னுதான் ச்சும்மா...இப்புடி! மத்தபடி பூனைப் பேரெல்லாம் நமக்கு ஒத்துவராது.

கலாம் கொஞ்ச காலம் முந்திதான் கனவு காணச்சொன்னார்; ஆனா எங்காளோ அப்பவே 'கனவு' காண்பதில் கெட்டி!

'ங்கொய்யால'ன்னது புளியங்கொட்ட? அவன்தானே அதுரப்பூ பறிக்கிறான் புதுசா, அதுவும் இங்கிலீஸ்ல!

அதுசரி, எப்போதும் அதுர வாசம் மணக்க கலக்குற விலாசக்காரவங்கல்லாம் ??

'தோழர்களை' படித்து நாமும் கொஞ்சமாவது அவர்களைப்போல் வாழ்ந்திடுவோம், வாருங்கள். இன்ஷா அல்லாஹ்!

+++
மதுரை=மதுர= மருத
அதிரை=அதுர= அருத

அருதக்கத எல்லாம் போதும் அறுக்காம விடப்பான்னு சொல்லுமுன்... ஜூட்.

sabeer.abushahruk said...

அதுரப்பழசு,
குமுதத்திலே 'கிசுகிசு' எழுதற தோரனையை விட்டுட்டு தாம் ஆருன்னு சொல்லிபோடுங்க. இல்லாக்காட்டி அதுர நிருபர் காரய்ங்க ஒங்க பின்னூட்டத்தை (இன்னும் தூங்கறாங்கன்னு நெனக்கேன்.அல்லது ஒங்க எழுத்து ஸ்டைலில் லேசா மயங்கி, விட்டு வச்சிருக்காய்ங்கன்னு நெனக்கேன்)

அப்பால, கூடு மேட்டரு 'கப்பட சாய்வொ'லுக்காக எடுத்தமே அதா? எடச்சி மார்க்கை உள்ளங்கையில் ஊத்தி உறிஞ்சின மேட்டர்லாம் பேசுறத பார்த்தா, நீங்க எங்க 'கல்சர'செட்டு மாதிரிதான் தெரியுது.

ஆரா இருக்கும்.....?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஆரா இருக்கும்.....?//

அதானே !?

//'தோழர்களை' படித்து நாமும் கொஞ்சமாவது அவர்களைப்போல் வாழ்ந்திடுவோம், வாருங்கள். இன்ஷா அல்லாஹ்!//

இன்ஷா அல்லாஹ்... !

//+++
மதுரை=மதுர= மருத
அதிரை=அதுர= அருத//

கூட்டிச் சமப்படுத்தலின் ஃபார்முலாவுக்கு அர்த்தங்கள் இருக்கும் தானே !

அருதப்பழசு said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
மன்னிக்க, ஓரெழுத்துப்பிழை! அதுரப்பழசை அருதப்பழசு எனப்படிக்க.

'ஐபாடு வாப்பா'க்கு முன்னே 'பொறி' வச்ச தோழர்!
முந்திரிக்கத சொன்னதுல சொக்கி முந்திட்டாஹலோ?

எடச்சி மார்க்கை உள்ளங்கையில் ஊத்தி உறிஞ்சினதெல்லாம் கூடு எடுத்த தல 'குதுபுதீன் காக்கா'! நமக்கெல்லாம் சுண்டுவிரல்ல கொஞ்சூண்டு.

/ஆரா இருக்கும்.....?/

சபீரண்ணே, ஸபூர். சொல்வோம்ல...

அதுவரை,
மொதல்ல சொல்பவருக்கு "தோழர்கள்" பரிசு! (அல்வாக்கே சீனி! எப்பூடி?)
கொஞ்சம் பொறுத்தால் இரண்டாம் தொகுதியே கொடுத்திடலாம், இன்ஷா அல்லாஹ்!

sabeer.abushahruk said...

கூப்பிடுங்களய்யா
கூடெடுத்துக்
கூத்தடித்த,
குற்றம் சாட்டப்பட்ட
குழுத்தலைவர்
குதுபுதீன் அவர்களை!

குறுந்தாடி வருடி
குட்டைப்போட்டுடைத்து
குசும்பெழுத்தரைச் சற்றே
குசலம் விசாரிக்க!

sabeer.abushahruk said...

Dear kaviyanban,

please clarify:

//Your list wouldn't be end
Event it reaches unto crore//

Your list wouldn't end
even it reaches unto crore

(or)

Your list wouldn't be an end
even it reaches unto crore

தலைத்தனையன் said...

அஸ்ஸலாமு அலைக்கும். எங்கள் இளைஞர் பருவத்தில் மறக்க முடியாத ஒரு பாத்திரம் அஹ்மத் காக்கா. எங்களுக்கு அறிமுகமானது சவுதி அராம்கோ வில். கொழும்பார் வீட்டு அன்வர் காக்கா, அஹ்மத் காக்கா, ஜமீல் காக்கா, பேச்சின் தந்தையாம் என் நண்பன் அபுல் கலாமின் சகோ. ஹுசைன் காக்கா, இப்படி நிறைய காக்கமார்கள். இவர்களோடு நான், நண்பன் கலாம் மற்றும் நண்பன் அஷ்ரப் (சிங்கம்).

ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு பெருநாள் ஆவலோடு ஓன்று கூடுவோம். மன்சூரும் இங்குதான் வேலை செய்தான். மேலும் நான்கைந்து காக்காமார். இதைக்கானும் அபுல் கலாம் மேலூட்டமிடலாம். இதில் கிட்டத்தட்ட எல்லோருக்குமே அதிரை அஹ்மத் காக்காதான் ஆசிரியர் போல் அன்வர் காக்கா நீங்கலாக.

பின்னாளில் மார்க்க வகுப்புகளில் ஜமீல் காக்கா அவர்களின் உரை, மற்றும் மார்க்க சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் இளவலின் புத்தி கூர்மையான மற்றும் ஆழமான கருத்துக்களை அகமகிழ்வோடு கண்ணுறும் அஹ்மத் காக்காவை பார்த்து நாங்களும் இன்புறுவோம்.

தலைத்தனையன் said...

கிட்டத்தட்ட ஆசானை மிஞ்சிய மாணவன்

crown said...

தலைத்தனையன் சொன்னது…

கிட்டத்தட்ட ஆசானை மிஞ்சிய மாணவன்
-------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஆகையால் ஆசானைவிட ஒருசான் மேலே என சொல்லலாம்??????

KALAM SHAICK ABDUL KADER said...

Dear Mr.Sabeer,

"Your list wouldn't be an end" is correct.
"Your list wouldn't come to an end" is also correct.

jazakkallahkhairan

Shameed said...

அருதப்பழசு சொல்லுறது எல்லாம் எனக்கு புதுசா இருக்கே !

Anonymous said...

Excellent concept !

Title of this posting suppppeerrrr !

இதுவரை கண்டிராத உணர்வுகளின் தீண்டல், WELDONE.

Unknown said...

//ஆழமான கருத்துக்களை அகமகிழ்வோடு கண்ணுறும் அஹ்மத் காக்காவை பார்த்து நாங்களும் இன்புறுவோம்.//

என்னப்பா, என்னையும் எழுத வச்சுட்டீங்க.... சரி, சரி. இதோ:

புரட்சித் தோட்டத்தில்
பூத்த புதுமலர்!
நாவலாசிரியரின் நல்ல மகன்.
அவர் அமெரிக்கக் கடைக்கோடியில்
நான் அதிரைப்பட்டினத்தில்
அற்புதமாக அறிமுகமானோம்!
அவர் -
'தோழர்கள்' எழுதிய தோழர்!

KALAM SHAICK ABDUL KADER said...

"தோழர்கள்” ஆசிரியத் தோழரின் தோழரும்
ஆழமாய்ச் சிந்திக்கும் ஆசிரிய ரென்பதையும்
என்றன் வழிகாட்டி யென்பதையும் நன்றியுடன்
மன்றத்தில் சொல்வேன் மகிழ்ந்து.

எனது ஆக்கங்களில் கண்ணுறும் பிழைகளைத் திருத்தும் முழுத் தகுதியும்;உரிமையும் அவர்கட்கு உண்டு.

தலைத்தனையன் said...

Assalamu alaikkum.

Brother Sabeer, Can you give me your e-mail address. Some business communication I want to have with you. I have some contact with lot of surplus caterpillar spare parts here in Los Angeles. shthameem@yahoo.com

Please send me your emai address if you are interested.

Thameem

sabeer.abushahruk said...

Wa alaikkumussalam thameem.

I am very much interested, merely not for business but to have a chance to keep in touch with you :)

sabeer@al-quds.com : for business
sabeer.abushahruk@gmail.com : for the rest.

KALAM SHAICK ABDUL KADER said...

மாஷா அல்லாஹ்!

நட்பின் வரவுகள் நன்மையாய் வந்ததால்
பெட்புடன் பெற்றீர் பிழைப்பு.

May Allah Bless
on your new business!

sabeer.abushahruk said...

மேலே பின்னூட்டத்தில் தமீமுக்கும் கவியன்பனுக்கும் இடையில் நானா நடுவில் நானா? :)

அ.நி.: தயவு செய்து என் பின்னூட்டத்தை இருவருக்கும் கீழே இடம் மாற்றித் தரவும். :)

தலைத்தனையன் said...

Jazakallahu khairan Sabeer. Sooner I get more information on that, I will be in touch with you insha Allah. Jazakallahu khairan.

தலைத்தனையன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாப்ளே! துஆ செய்டா.

தலைத்தனையன் said...

Myself too Sabeer. It is a good feeling to be in a place where our loving ones can meet and share things. Especially qualified people like you Jameel kakka, Abul kalam and you. Wow it must be a dream.

If Allah wills, it is not a big matter.

Keep in touch.

Fee amanillah

Unknown said...

Nooruddin Ahamed
4:56 AM (2 hours ago)

to me
அன்பு காக்காவுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

//ஆழமான கருத்துக்களை அகமகிழ்வோடு கண்ணுறும் அஹ்மத் காக்காவை பார்த்து நாங்களும் இன்புறுவோம்.//

என்னப்பா, என்னையும் எழுத வச்சுட்டீங்க.... சரி, சரி. இதோ:

புரட்சித் தோட்டத்தில்
பூத்த புதுமலர்!
நாவலாசிரியரின் நல்ல மகன்.
அவர் அமெரிக்கக் கடைக்கோடியில்
நான் அதிரைப்பட்டினத்தில்
அற்புதமாக அறிமுகமானோம்!
அவர் -
'தோழர்கள்' எழுதிய தோழர்!


தாங்கள் அதிரை நிருபரில் எழுதியதை அறிய வந்தேன். மிகவும் நெகிழ்ச்சி ஏற்பட்டது. மறுமையிலும் நமது நட்பைத் தொடரச்செய்து உயர்வானவர்களுடன் இருக்கக்கூடியவர்களாக அவன் நம்மை ஆக்கி வைக்க மனதார இறைஞ்சுகிறேன்.

அன்புடன்,
-நூருத்தீன்

அதிரைநிருபர் பதிப்பகம் said...

//Nooruddin Ahamed
4:56 AM (2 hours ago)

to me
அன்பு காக்காவுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

//ஆழமான கருத்துக்களை அகமகிழ்வோடு கண்ணுறும் அஹ்மத் காக்காவை பார்த்து நாங்களும் இன்புறுவோம்.//

என்னப்பா, என்னையும் எழுத வச்சுட்டீங்க.... சரி, சரி. இதோ:

புரட்சித் தோட்டத்தில்
பூத்த புதுமலர்!
நாவலாசிரியரின் நல்ல மகன்.
அவர் அமெரிக்கக் கடைக்கோடியில்
நான் அதிரைப்பட்டினத்தில்
அற்புதமாக அறிமுகமானோம்!
அவர் -
'தோழர்கள்' எழுதிய தோழர்!


தாங்கள் அதிரைநிருபரில் எழுதியதை அறிய வந்தேன். மிகவும் நெகிழ்ச்சி ஏற்பட்டது. மறுமையிலும் நமது நட்பைத் தொடரச்செய்து உயர்வானவர்களுடன் இருக்கக்கூடியவர்களாக அவன் நம்மை ஆக்கி வைக்க மனதார இறைஞ்சுகிறேன்.

அன்புடன்,
-நூருத்தீன்
//

அதிரைநிருபரில் வெளியான பதிவுகளிலேயே இந்தப் பதிவுக்கான "தலைப்புக்கு" கிடைத்த பரிசாக இதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் பெருமையுடன் - அல்ஹம்துலில்லாஹ்

- அதிரைநிருபர் குழு

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

என் அழைப்பை ஏற்று, இங்கு வந்து கையெழுத்திட்ட அன்புத் தோழர், 'தோழர்கள்' நூலாசிரியர் நூருத்தீன் அவர்களுக்கு நன்றி.

இந்தப் பதிவு இருநூராவது பின்னூட்டத்தை எட்டும் தருவாயில் இருப்பதால், வெற்றிபெற்றப் பதிவாகக் கருதி ஓரிரு விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

01) 'தோழர்கள்' புத்தகம் வாசிக்கும் முன், நபித்தோழர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் சத்தியமார்க்கம் டாட் காமில் வெளியானபோது தவறாமல் வாசித்து மெய் சிலிர்த்துப்போனேன். புத்தக வடிவுக்காகக் காத்திருந்தேன்.

02) நூல் வெளியீட்டு விழாவில் என் மனக்கிடக்கையை எழுதிக்கொடுக்க அதை என் அன்பிற்குரிய அஹ்மது காக்கா அவர்கள் வாசிக்க அக மகிழ்ந்தேன்:
தோழர்கள்...
சத்தியமார்க்கம் தளம் பதிக்கும்
முத்திரைத் தடம்!

தொடராக வந்தச்
சுடர்!

போர்க் களங்களைப்
பூக் குளங்களாகக் கண்டு
வாட்களோடு வாழ்ந்த
ஆட்களின் சரிதை!

கொல்லத் துடித்த எதிரிகளை
ஓரிறைக் கொள்கையில்
அடக்கிய நபியை...
ஆயிரம் துண்டுகளாக அறுத்துப்போட்டாலும்
அரணாகக் காத்தத்
தோழர்கள் சரிதை!

நபித் தோழர்களைப் பற்றி
நம் தோழரின் நூல்!

சாமானிய மனிதர்களின்
ஈமானியத் தியாயகங்கள்
இதன்
நாயகர்கள் நடிகர்களல்லர்
எனினும் நட்சத்திரங்கள்!

வரலாற்றுக் குறிப்புகள் வடிவில்
வாழ்க்கை நெறிகள்!

இந்நூல்...
படிப்பதற்கு மட்டுமல்ல
படிப்பினைக்கும்தான்!

03) யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம் என்ற நன்நோக்கில் 50 புத்தகங்கள் வாங்கி பலருக்கும் வழங்கினேன்.

04) ஒரு தூக்கம் வரா இரவின் பயனாக ‘தோழமையின் மகத்துவம் பற்றி’ அதிரை நிருபரில் பதிவிட்டு பரிசாகப் புத்தகம் வழங்க தீர்மானித்தேன் பதிவையும் எழுதி முடித்து, அதிரை நிருபரில் அனுமதி கேட்க அவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

04) ஆக்கம் எழுதி முதல் அபிப்பிராயத்திற்காக அபு இபுறாகீமுக்கு அனுப்ப அவர் “தலைப்பு என்ன காக்கா?” என்றார்.. “நீங்களே சொல்லுங்களேன்” என்று நான் கேட்டு அவரிடம் வாங்கிய தலைப்புதான்….“நட்புக்கு தோழர்கள் பரிசு”.

அபு இபுறாகீம் வைத்த தலைப்பை ஆசான் ஜமீல் காக்காவுக்கு அனுப்பி அனுமதி கேட்க, அவர்கள் ஒரு தகர ஒற்று (த்) சேர்த்து வாழ்த்தியதுதான்:

“நட்புக்குத் தோழர்கள் பரிசு”

crown said...

அவர்கள் ஒரு தகர ஒற்று (த்) சேர்த்து வாழ்த்தியதுதான்:
------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.காரணம் தகரம் இத்து போகாமல் இருக்க அந்த "த்"தேவை அதனால் தான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அந்த "த்"தேவை அதனால் தான்.//

"மெய்" எழுத்தே !

"நட்புக்குத் தோழர்கள் பரிசு" தலைப்பிட்ட காரணம் சொல்லி பரிசு ஒன்று என் நட்புகளில் ஒருவர் வெளிக்காடிக் கொள்ளாமலே பரிசளித்திருக்கிறது... அந்த நட்புக்குரியவருக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர் (இதனையும் மவுனமாக பார்க்கும் மவுனிக்கு).

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஹமீத் காக்கா,

நீங்கள் காலோஜ்ல உங்கள் நட்புகளுடன் பேட்மிட்டன் விளையாடுவீர்களா?

நண்பன் கஃபூர் கேட்க சொன்னார்.

டபுல் செஞ்சுரி அடிக்க உங்களுக்கு சான்ஸ்

crown said...

தாஜுதீன் சொன்னது…

ஹமீத் காக்கா,

நீங்கள் காலோஜ்ல உங்கள் நட்புகளுடன் பேட்மிட்டன் விளையாடுவீர்களா?

நண்பன் கஃபூர் கேட்க சொன்னார்.

டபுல் செஞ்சுரி அடிக்க உங்களுக்கு சான்ஸ்
------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். பேட்மிட்டனை வைத்தே செஞ்சுரி போட்டுடுறேன். கிரிக்கெட்டு இப்ப தறிகெட்டு கிடக்கு அதான்(ஆனா எல்லா மேட்சும் பாத்துடுவோம்)

crown said...

அன்பிற்கு எல்லாரும் கிளீன் போல்ட் இருந்தாலும் ஹூசேன் போல்ட் போல விடாம ஓடி அன்பு ஜெய்ச்சுக்கிட்டுதான் இருக்கு. வாழ்கை தட(த்தில்)களத்தில் தடுமாற்றம் வந்தாலும் நண்பன் துணைக்கு ஓடி வர எல்லா எல்லையும் தாண்ட கூடியதே!

«Oldest ‹Older   1 – 200 of 218   Newer› Newest»

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு