Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இன்று ஃபஜர் தொழுதீர்களா ? 11

அதிரைநிருபர் | November 18, 2011 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அதிரைநிருபரில் கடந்த ஒரு வாரமாக தினமும் மார்க்க சொற்பொழிவு காணொளிகள் நேரலையாக தொடர்ந்து ஒளிபரப்பப்படுவதை அறிவீர்கள். இதன் தொடர்ச்சியாக ஃபஜர் தொழுகையின் முக்கியத்துவம் பற்றிய சொற்பொழிவை மீண்டும் காணொளியாக ஒளிபரப்ப வேண்டியும், இதன் ஆடியோவையும் தரவிறக்கம் செய்யும் வசதியை ஏற்படுத்துமாறும் ஏராளமான சகோதரர்கள் வேண்டுகோள் வைத்தார்கள். 


இதோ உங்கள் பார்வைக்காக அதன் காணொளியும், தரவிறக்கம் செய்வதற்காக ஒலிப்பேழையும் இங்கே பதிந்திருக்கிறோம். இந்த  சொற்பொழிவை செவியுற்று என்றும் நாம் ஐவேளை தொழுகைகளை ஜமாத்துடன் தொழுதிடும் தூய்மையான முஃமீனாக இருந்திடுவோம். இன்ஷா அல்லாஹ்.



இந்த சொற்பொழிவில் :-

  •     ஃபஜர் தொழுகையின் முன் சுன்னத் தொழுகையின் சிறப்பு.
  •   ஃபஜர் ஜமாத்துடன் தொழுவதால் என்ன சிறப்பு அதன் நன்மைகள்.
  •     இஷா ஜமாத்துடன் தொழுவதால் என்ன நன்மை.
  •   ஃபஜர் மற்றும் அசர் தொழுகையை தொழுபவர்கள் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறியது என்ன?
  •   ஃபஜர் மற்றும் அசர் தொழுகை யாருக்கு பாரமாக இருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  •    நபிகளார் காலத்தில் யார் ஜமாத்துடன் தொழவில்லை.

மற்றும் பயனுல்ல தகவல்கள் இந்த சொற்பொழிவில் உள்ளது. அனைவரும் கேட்டு, அவைகளை நம் வாழ்வின் இறுதி நாள் வரை தொழுகையை கவணமாக பேணி நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்வோம். இன்ஷா அல்லாஹ்.

தினமும் மார்க்க சொற்பொழிவை அதிரைநிருபர் நேரலை வலைக்காட்சியில் தொடர்ந்து காணுங்கள்.

- அதிரைநிருபர் குழு

11 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அனைவரும் அவசியம் கேட்டுப் பலனடைய வேண்டும் என்பது(ம்) என் அவா !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அனைவரும் அவசியம் கேட்டு அதன்படி நடைமுறையில் கொண்டுவர வேண்டும் என்பது(ம்) என் அவா !

இப்னு அப்துல் ரஜாக் said...

இந்த பணி மிக பாராட்டுக்குரியது.தொடர்ந்து பயான் நிகழ்சிகள் வெளியிடுங்கள்.

Anonymous said...

இரவில் முந்நேரம் உறங்கி, காலையில் சீக்கிரம் எழுந்து, இறைவனைப்புகழ்ந்து, பஜ்ர் தொழுகையை நேமமாக தொழுது, இறைவனின் அருளைப்பெற்று, அன்றைய காலைப்பொழுதை சுறுசுறுப்புடன் அடையப்பெற்றவர்களாக நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக ஆமீன்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// இன்று ஃபஜர் தொழுதீர்களா ?//

பெரும்பாலான அதிரை நிருபர் வாசகர்கள் ஃபஜர் தொழுக வில்லை போல் தெரிகிறது .

அதிரைநிருபர் said...

//பெரும்பாலான அதிரை நிருபர் வாசகர்கள் ஃபஜர் தொழுக வில்லை போல் தெரிகிறது.//

வ அலைக்குமுஸ்ஸலாம்.

சகோதரர் அபூபக்கர்,

பஃஜர் தொழுகையை ஜமாத்தோடு தொழுதால் என்ன சிறப்பு என்பதை நம் மக்களுக்கு விளக்கி, அப்படி தொழாமல் இருப்பவர்களை தொழதூண்டுவது இந்த பதிவின் நோக்கம்.

மேலும் தொழுகைக்காக ஒரு முஃமீன் இன்னொறு முஃமீனை அழைப்பது கடமை என்பதை உணர்த்துவதற்காக இந்த பதிவு.

தொழுகை என்பது இறைவனையும், மனிதனையும் இணைக்கும் பாலம் என்பது எல்லோரும் அறிந்ததை நினைவூட்டவே இந்த பதிவு.

தயவு செய்து இந்த பதிவையும், காணொளியையும், ஒலிபேழையும் உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

மற்றபடி இங்கு யார் தொழுதார்கள் அல்லது யார் தொழவில்லை என்பதை கண்டறிவது ஏற்புடையது அல்ல. இதை அறியக்கூடியவன் அல்லாஹ் ஒருவனே.

:)

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிரை நிருபர் குழுவிற்கு அபூபக்கர் தெரியப் படுத்துவது.இந்த ஆக்கத்திற்கு பெரும்பான அ.நி வாசகர்களின் கருத்து இல்லை என்பதால். தொழுக வில்லை போல் தெரிகிறது .என்ற கருத்தில் தான் எழுதினேன்.தவறுதலாக நினைத்து விட வேண்டாம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சுட,சுட யாரும் கருத்திட வரவில்லையே அதனால் சுபுஹ் தொழுகை இன்று கருத்திடுபவர்களுக்கு சுணங்கி இருக்குமோ? என்ற ஐயத்தில் தான் சகோ. லெ.மு.செ. அபுபக்கர் அப்படி கருத்திட்டிருந்தாரே தவிர வேறொன்றும் உட்கருத்தில்லை என்பதே என் கருத்து.

மு.செ.மு. நெய்னா முஹம்மது

அதிரைநிருபர் said...

சகோதரர் அபுபக்கர், நெய்னா முஹம்மது,

தங்கள் இருவரின் கருத்துக்கு மிக்க நன்றி.

இந்த பதிவின் முக்கியத்துவம் கருதியே எங்கள் கருத்தை பதிந்தோம், மற்றபடி சகோ. அபுபக்கர் அவர்களின் கருத்தில் உட்கருத்து இருப்பதாக கருதவில்லை என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறோம்.

Mohamed Safair (A) Kovai Thangappa said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), அன்புள்ள அதிரை நிருபர் இணைதள நிர்வாகிகளுக்கு. இந்த பயான் சொல்லும் ஜாக் சகோதரர்.முதலில் அவர்களில் கோவை ஜாக் நிர்வாகிகளை முதலில் சுபுஹ் தொழுகையை கடைபிடிக்க சொல்லவும்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

//அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), அன்புள்ள அதிரை நிருபர் இணைதள நிர்வாகிகளுக்கு. இந்த பயான் சொல்லும் ஜாக் சகோதரர்.முதலில் அவர்களில் கோவை ஜாக் நிர்வாகிகளை முதலில் சுபுஹ் தொழுகையை கடைபிடிக்க சொல்லவும்.//

அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

அன்பிற்குரிய சகோதரர் முஹம்மத் சஃபைர் அவர்களுக்கு !

தங்களின் கருத்துக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்... !

இது அடுத்தவர்களுக்கு சொல்லப்பட்டது என்று எடுத்துக் கொள்ளாமல் சொன்னவர்களுக்கும் சேர்த்துதான் என்ற நோக்கில்தான் இந்த சொற்பொழிவின் பலன் கருதி இங்கே பதிந்து இருக்கிறோம்...

இந்த உரை நிகழ்த்தியவருக்கும், அதனை காது கொடுத்து கேட்கும் அனைவருக்கும் இந்த கேள்வி பொருந்தும்...

கவனிக்க : அதிரைநிருபர் தளம் எந்த இயக்கத்தினையும் சார்ந்திருப்பதில்லை அதே நேரத்தில் நன்னெறி கருத்துக்கள் எங்கிருந்து வந்தாலும் அதனை அரவனைப்போம், அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக அல்லாஹ்வின் ரசூலுக்கு கட்டுப்பட்டவர்களாக இன்ஷா அல்லாஹ் !

இயக்கங்களை முன்னிருத்தி யார் வந்தாலும் சலாத்துடன் நட்ப்போடு இருக்கவே முயற்சிப்போம் இயக்க ஆதரவு கோஷம் என்ற போர்வை போர்த்துவதில்லை என்று நிலையில் உறுதியாக இருக்கிறோம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு