Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை உலா – 2012 37

அதிரைநிருபர் பதிப்பகம் | December 31, 2012 | , ,


இரண்டாயிரத்து பன்னிரண்டாம் வருடம் விடைபெறும் விளிம்பில் இருக்கிறது, அதனை விடை கொடுத்து அனுப்பும் முன்னர் சென்ற வருட உலகம், சென்ற வருட இந்தியா என்றெல்லாம் பல்வேறு ஊடகங்களிலும் கண்டு வருகிறோம். அவைகளயெல்லாம் விடுத்து நாமும் 2012ம் வருடத்தில் அதிரையின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காண்போம்.

1. 2012ம் வருட துவக்கத்தில் இமாம் ஷாஃபி பள்ளியில் அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்து மாணவ மாணவிகள் சார்பாக அறிவியல் சார்ந்த படைப்புகளை உருவாக்கி காட்சிப் படுத்த கோரப்பட்டு சிறப்பாக செய்து பரிசும் வழங்கப்பட்டது. ஆனால் இவ்வாக்கத்தில்  பெரும்பாலும் பிள்ளைகளை விட பெற்றோர்கள் தங்களது பள்ளிக்காலங்களில் தவறவிட்ட அல்லது ஏங்கிய கிரியேட்டிவிட்டியின் பங்கே அதிகம் காணப்பட்டது என்பது ஒரு பேசு பொருளாக இருந்தது.


2. அதிரையின் மதுக்கூர் ரோட்டில் கயிறு தொழிற்சாலை தீக்கிரை, ஏரிப்புரக்கரை சாலையில் வீடு எரிந்தது, CMP லைன் அருகே மாடியின் கூரை எரிந்தது போன்ற தீ வீபத்து போன்ற  சம்பவங்கள் நடந்தவாறே இருக்கின்றன. இவைகளை பார்க்கும்போது ஊருக்கு தீயணைப்பு நிலையம் தனியாக தேவை என்பதன் அவசியம் புலப்படுகிறது.


3. மார்ச் 5 முதல் அதிரையில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை அமுலுக்கு வந்தது. ஆனால்  பிளாஸ்டிக் உபயோகிக்க  இலகுவாக இருப்பதாலும் சிலர் பேரூராட்சி ஆளுமையுடன் ஒத்துப் போகாததாலும் முழுமையான தடைக்கு தடைக்கல்லாக இருந்து வருகிறது.


4. அதிரைக்கென்று அத்தியாவசிய போக்குவரத்துகளில் ஒன்றாகிய அகல ரயில் பாதையின் அவசியத்தை கருதி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆரம்ப காலத்திலிருந்தே போராடிவரும் 'அதிரை ஜாஃபர் காக்கா அவர்கள் வழக்கு தொடுத்தார்கள். 

5.மேலும் ரயிலின் அத்தியாவசியத்தை  காரைக்குடியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் இல்லத்தில் இமாம் ஷாஃபி பள்ளியின் தாளாளர் M.S.T.தாஜுதீன் , M.K.N.டிரஸ்ட் அன்றைய தாளாளர் அஸ்லம், அதிரை பேரூராட்சி மன்ற தலைவர் அஸ்லம் , CHASECOM அப்துல் ரஜாக், இன்னும் முக்கிய பிரமுகர்கள் ஒன்றாக சென்று வலியுறுத்திக் கூறி,  அதிரை ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேஷன் ARDA சார்பாகவும், அதிரை பேரூராட்சி தலைவர்  சார்பாகவும்,கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது மத்திய ரயில்வே அமைச்சரிடம் இது தொடர்பாக தாம் எடுத்து சொல்வதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.


6. சித்தீக் பள்ளிக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய வழிப்பாதையை அடைத்து சுவரெழுப்பி தென்னை நட்டு அது பள்ளிக்கே சொந்தமென அங்கே தென்னை ஒருபுறம் வளர, மறுபுறம் வழக்கும் நடந்து வருகிறது.


7. கடந்த ஜூனில் மாட்டுக்கறி சமாச்சாரம் விசுவரூபம் எடுத்தது. இதில் அரசியலே பின்னணியாக இருந்து நானா நீனா இழுபறி நீடித்து ஒரு மாதிரியாக மெளனமாகிப் போனது மேட்டர்.


8. புரிந்துணர்தலில் ஏற்பட்ட தடுமாற்றத்தால் / தவறால் பல வருடங்களாக ஆய்சா மகளிர் அரங்கில் நடைபெற்ற ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயான் ஆகஸ்ட் முதல் அங்கு நிறுத்தப்பட்டு வேறிடத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. 

9. அக்டோபர் முதல் MKN டிரஸ்ட் மற்றும் காதிர் முகைதீன் கல்வி ஸ்தாபன மேலாண்மை K.S  சரபுதீன் அவர்கள் தலைமைக்கு வந்தது.

10. நவம்பர் முதல் காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வராக வணிகவியல் துறை பேராசிரியர் ஜலால் அவர்கள் பதவியேற்றார்.

11. மேலும் காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளியில் திருமதி ரோசம்மாள் அவர்கள் ஓய்வு பெற்றதையடுத்து நமதூரைச் சார்ந்த மஹபூப் அலி அவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரக பதவி ஏற்றார்கள்.

12. அமெரிக்க காரன் ஒருவன், கடந்த செப்டம்பரில்  நமது உயிரினும் மேலான நபி(ஸல்)அவர்களை பற்றி தவறாக படம் எடுத்து வெளியிட்டதை எதிர்த்து உலகமே எதிர்ப்பில் அங்கமாக அதிரையிலும் போராட்டம் பிரமாண்டமாய் நடந்தது.


13.கடந்த ரமலான் பெருநாளிரவில்  பொறுப்பற்ற ஊடகங்கள் சில பெண்கள் பயன்படுத்தும் மருதாணியால் பலர் மயக்கம் மரணம் என ..... நியூஸ் போட்டு பீதியை கிளப்பி இஸ்லாமிய புனிதநாளில் பரபரப்பை ஏற்படுத்த முயன்று தன் வக்கிர புத்தியை காட்டின. இதனால் அன்று அதிரையிலும் இது பற்றி பரபரப்பாக பேசப்பட்டது.


14.இன்னமும் அதிரையின் பல சாலைகள் பிரதான சாலை உட்பட மண்சாலைகளாகவே உள்ளன. கருஞ்சாலைகளாக கண்ணில் படும் காலம் என்று வருமோ!


15. கடந்த மே மாதம் நடந்த கந்தூரி போதையர்களின் ஊர்வலத்தில் தக்வா பள்ளி வழியாக  தொழுகை நேரத்தில் வழக்கமான முழக்கங்களுடன்  ஊர்வலம் கடப்பதைக் கண்ட சகோதரர் அஹ்மது ஹாஜா, ஊர்வலத்துக்கு பாதுகாப்புக்காக வந்திருந்த நமதூர் இன்ஸ்பெக்டர் செங்கமலக் கண்ணனிடம் தக்வாப் பள்ளிக்குப் பின்புறம் நின்றிருந்த நமதூர் இன்ஸ்பெக்டர் செங்கமலக் கண்ணனிடம் சென்று புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அங்கிருந்து அகன்று மேள-தாளக்காரர்களிடம் சென்று பாட்டு-தாளங்களை நிறுத்துமாறு சொல்வதற்காகச் சென்றுவிட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட கந்தூரி போதையினரால் சகோதரர் அஹ்மது ஹாஜா கடுமையாக தக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


16.கடந்த பிப்ரவரியில் முத்துப்பேட்டையில் ரயில்வே சம்பந்தமாக போராட்டம் நடப்பதாக கூறி பிரபல ஒரு அமைப்பினர் அதிரை ஆள்களை திரட்டி அங்கு கலந்து கொள்வதற்காக முயற்சித்தபோது ஏற்பட்ட கட்சி வேறுபாடுகளை கண்ட மர்ம நபர்களால்  சகோதரர் முகம்மது தைய்யுப்  தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

17. 80 வருசத்துக்கு மேலாக அதிரையில் ஓடிய ரயில் கடந்த அக்டோபரில் நிறுத்தப்பட்டு இன்று அகலபாதையுடன் ரயிலே வருக என காத்துக் கிடக்கிறது. இன்ஷா அல்லாஹ் அதுவும் வரும் என் நம்புவோம்.

18.ஜனாஸாவிற்காக குழிவெட்ட நம் பகுதியில் ஏற்பட்ட ஆள் தட்டுப்பாட்டால் பீகாரில் இருந்து 3 பேரை தருவித்து அதிரை ஆல் முஹல்லா அமைப்பு நிர்வகித்து வருகிறது.

இன்னும்  வாகன விபத்து, மின்சார விபத்து, கத்தி குத்தால் கொலை என்பதல்லாமல் பெண் உட்பட தற்கொலை செய்து கொண்டதை பார்க்கும் போது அதிரையின் நிலையில் வேதனையே மிஞ்சுகிறது.


19."அதிரை எக்ஸ்ப்ரஸ்" சார்பில் கல்வியை ஊக்கப் படுத்துவதற்காக விருது அறிவிக்கப்பட்டு சிறப்பு பரிசுகள் அறிவித்து அதன்படி  வழங்கி அதிக மதிப்பெண் பெற்றவர்களை கெளரவித்தது.


20.அதிரையில் வீடும், கட்டிடங்களும் வளர்ந்த வண்ணமாகவே உள்ளன. அதில் ஒன்றாக காவல்நிலையத்துக்கே அரணாக நிற்கும் ஒரு கட்டிடத்தின்  காட்சி இது.


21. "அதிரை நிருபர்" சார்பாக அதிரை பதிப்பகம் என்ற பெயரில் பதிப்பகம் அமைத்து மேதகு இப்ராஹிம் அன்சாரி காக்கா எழுதி தொடராக வந்த "மனு நீதி மனித குலத்துக்கு நீதியா?" எனும் தொகுப்பு முதன் முதலாக  புத்தகமாக வெளியிட்டு சாதனை படைத்தது. இன்னும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் என நம்பலாம்.


22. அதிரையில் தனியார் மருந்தகம் ஒன்று புதுப்பொலிவுடன் தலைநகர் ரேஞ்சுக்கு காட்சி அளிப்பது அதிரையின் வளர்ச்சியை காட்டுகிறது.


23. சுமார் 573 ஆண்டுகளுக்கு முன் காலஞ்சென்ற மனிதர் ஒருவரின் இஸ்லாம் அனுமதிக்கப்படாத கல்லரையின் அறைப்பகுதியில் பூட்டப்பட்ட புகை மண்டலத்தில் அறியாமையால் சிக்கி அநியாயமாக குடும்பஸ்தர் ஒருவர் மரணம் சம்பவித்த  கல்லரை பகுதி இது.


24. ஒருபுறம் பல குளங்கள் வெற்று கிடக்க மறு புறம் பிலால் நகர்புறங்களில் வெள்ளம் புகுந்து அங்கு வாழ் மக்களை அல்லலுக்கு உட்படுத்தியது.


25. அதிரை தாருத் தவ்ஹீத் புதிய தர்பியா மையம் ஒன்றினை பிலால் நகரில் நவம்பர் மாதம் துவங்கியது, அதில் தொடர்ந்து காலை மாலை இரண்டு நேரங்களும் வகுப்புகள் சிறப்புடன் நடந்து வருகிறது. வாரம் ஒருமுறை பெண்கள் தொடர் பயானும் நடைபெற்று வருகிறது.


26. அதிரைநிருபர் வலைத்தளம் பள்ளிகளுக்கு இடையே நடத்திய மாணவ மாணவிகளுக்கான வினாடி வினா போட்டி பெரும் வரவேற்பை பெற்றது. சிறம்ப்பசமாக இனிவரும் காலங்களில் இது தொடர்ந்து நடத்தப்படும் என்று அவர்கள் அறிவித்தது.

மேலும் சுகாதாரக்குறைவால் டெங்கு காய்ச்சல் போன்ற கிருமிக் காய்ச்சல்கள் அதிரை மக்களை ஒரு வழியாக படுத்தி எடுத்து விட்டது. 

தமிழகமே இருளில் மூழ்கிக் கிடக்க, நான் மட்டும் என்ன விதி-விலக்கா என அதிரையும் மற்ற பிற ஊர்களை விட அதிகமான இருளை அதிக நேரம் தழுவிய வண்ணமாகவே இருந்ததும் அதுவே இன்றளவுக்கும் தொடர்கிறது.

இனிவரும் அதிரை காலங்கள் இனிமையாகவே இருக்க நம்புவோம். இன்ஷா அல்லாஹ்! 

M.H. ஜஹபர் சாதிக்


37 Responses So Far:

Unknown said...

புதுமையான தொகுப்புச் செய்தியும் தொடர்புடைய படங்களும்...!
மச்சான் மகனே, மனம் நிறைந்து வாழ்த்துகின்றேன்...!

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

மைத்துனரின் அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள்
இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் ஹிஜிரி முஹர்ரம் 1ல் இதே
தொகுப்புகளை எதிர் பார்க்களாமா

Ebrahim Ansari said...

தம்பி M H J ஒரு வருஷமாகவே இதற்குத் திட்டம் போட்டு தொகுத்தது போல் தெரிகிறது. நல்ல வேலை செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். Very interesting and admirable.

Jasakkallah haian.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அட அட புகைப்படத்துடன் அதிரையில் நடந்தேறிய பல தகவல்களை பளிச்சிட செய்துள்ளீர் ஜசக்கல்லாஹ் ஹைர்

அருமை அதிலும் புதுமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

அல் ஹம்துலில்லாஹ் பயனுள்ள தகவல், இப்போ எங்கே நடக்கிறது ஹைதர் அலி அவர்களுடிய பயான்???

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

மைத்துனரின் தொகுப்பு மிக அருமை வாழ்த்துக்கள் இன்ஷா அல்லாஹ் வரும் ஹிஜ்ரி முஹர்ரம் 1ல் எதிர் பார்க்களாமா

Saleem said...

படத்தை போட்டது மட்டுமல்லாமல் அதற்குரிய விளக்கத்தை தனக்கே உரிய பாணியில் விவரித்த விதம் அருமை!!! பாராட்டுக்கள்...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

மனம் நிறைந்து வாழ்த்திய மரியாதைக்குரிய அஹமது மாமா அவர்களின் முதல் வரவு மிக்க மகிழ்ச்சி, அல்ஹம்துலில்லாஹ்!

அதுபோல மேதகு டாக்டர் இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்களுக்கு,
// ஒரு வருஷமாகவே இதற்குத் திட்டம் போட்டு தொகுத்தது போல் தெரிகிறது.//
ஆமாம் காக்கா இதற்கு போன வருசமே நம்ம புகைப்பட தலைமை கவிஞர் விதையிட்டு நிருபரின் ஆளுனர் தண்ணி ஊத்துனாக! அந்த பலனே இன்று என்னை அறுவடை செய்ய வைத்தது. வாழ்த்துக்கு நன்றி காக்கா.

இன்னும் எனக்கென வருகை தந்த டியரஸ்ட் சலீமுக்கும், மைத்துனர் சபீர் அவர்களுக்கும், சகோதரர் இர்பான், சகோதரர் நெய்னா வருகைகளுக்கு நன்றி. ஆலிம் அவர்கள் பயான் பம்பாய் வாலா ஹாஜாமியாக்கா வீடு மற்றும் நடுத்தெரு வீடு ஆகியவற்றில் நடக்கிறதே!

இப்னு அப்துல் ரஜாக் said...

படத்தை போட்டது மட்டுமல்லாமல் அதற்குரிய விளக்கத்தை தனக்கே உரிய பாணியில் விவரித்த விதம் அருமை!!! பாராட்டுக்கள்...

Unknown said...

படத்தை போட்டது மட்டுமல்லாமல் அதற்குரிய விளக்கத்தை தனக்கே உரிய பாணியில் விவரித்த விதம் அருமை!!! பாராட்டுக்கள்...

KALAM SHAICK ABDUL KADER said...

தொகுப்பும் அதனைத்
தொடர்ந்து நடத்திய
வகுப்பும் அருமை
வளரும் திறமையால்

Unknown said...

ஒரு வருசத்தை சுருக்கி படத்தையும் செய்தியும் போட்ட ஜாபர் சாதிக் அருமை

sabeer.abushahruk said...

படங்களுடனான குறிப்புகளை வாசிக்கும்போது நிகழ்வுகள் காட்சிகளாகவே விரிகின்றன.

பதுமையான படைப்பு எம் ஹெச் ஜே. வாழ்த்துகள்.

ZAKIR HUSSAIN said...

Superb Reporting MHJ...keep it up, Happy New year to you & All

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

\\Happy New year to you & All//

புது வருடமும், முஸ்லிம்களும்!

வரும் திங்கட் கிழமை இரவு 12 மணியுடன் 2012 நிறைவடைந்து 2013-01-01 புது வருடம் பிறக்கின்றது.

புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்!?.

மேலும் படிக்க கிழே உள்ள லிங்க்'ஐ கிளிக்கவும்

http://www.islamkalvi.com/portal/?p=7850

ZAKIR HUSSAIN said...

Thank you brother அதிரை தென்றல் (Irfan Cmp) for your link advice.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரையைச் சுற்றி வந்த இளைஞர் MHJக்கு பாராட்டுகள் ! :)

நினைவாற்றல் ! சொன்னதை குறித்த நேரத்தில் ஞாபகம் வைத்து செயல்படுத்தும் வழக்கம் !

மாஷா அல்லாஹ் !

KALAM SHAICK ABDUL KADER said...



சுட்டியைச் சுட்டிக் காட்டிச்
சுடச்சுட எமக்கு வழிகாட்டி
மட்டிலா அறிவை ஊட்டி
மடமையைப் போக்கினீர், இர்ஃபான்!
உங்களின் அறிவுடன் அல்லாஹ்வும் கூடவே இருப்பான்!!
“இர்ஃபான்” என்றால் “ஞானம்” என்பது எத்துணைச் சாலச் சிறப்பு!!!
இஃது உங்களின் பிறப்பின் அமைப்பு!!!


அப்துல் ஜலீல்.M said...

ஒரு வருட நிகழ்வுகலை படங்களுடனான காட்சிகளாகவே விவரித்த விதம் அருமை!!! பாராட்டுக்கள்...

Anonymous said...

என் நண்பர் ஜஹபர் சாதிக் ஒருவருடத்துடை போட்டோவை மிக அற்புதமாக பதிந்துள்ளார். இதைப்போல் எல்லா போட்டோக்களையும் போட்டால் நன்றாக இருக்கும். உங்கள் சேவை தொடரட்டும் என்னுடைய வாழ்த்துக்கள்.

Iqbal M. Salih said...

படங்களுடனான குறிப்புகளை வாசிக்கும்போது நிகழ்வுகள் காட்சிகளாகவே விரிகின்றன.

பதுமையான படைப்பு எம் ஹெச் ஜே. வாழ்த்துகள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னும் வந்து பாராட்டி, வாழ்த்தி, அருமை சேர்த்த சகோதரர் அப்துல் ஜலீல், நெ.த. காக்கா, ஏற்றம் ஜாஹிர் காக்கா, சம்சுதியாக்கா,
சகோதரர்கள் இம்ரான் கரீம், அப்துல் லத்தீப்,
உன்னத கவி வள்ளல்களான கலாம் காக்கா, சபீர் காக்கா,
தமிழிலிலும் சக்கரவர்த்தியாய் மிளிரும் இக்பால் சாலிஹ் காக்கா,
அன்று அதிரையின் பிரதான செய்தியாளர்களில் ஒருவராய் மிளிர்ந்து இன்று அமீரகத்தில் இருக்கும் நண்பன் அமேஜான் அபூபக்கர்,
மற்றும் அதிரை கடந்த பாதையை கண்டு சென்ற நம்மவர்களுக்கும் மிக்க நன்றி.

Unknown said...

இது வரை ஊர் செய்தி சரியாக தெரியாத நான் இதை படித்து நிறைய விசையங்கள் தெரிந்து கொண்டேன் அல்ஹம்துலில்லாஹ்

Unknown said...

சகோ. ரஹ்மத்துல்லா சொன்ன மாதிரி நானும் இதுவரை தெரியாத அதிரைச் செய்தி முழுக்க படத்தோடு தெரிந்துகொன்டேன். வாழ்த்துக்கல்.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

\\சுட்டியைச் சுட்டிக் காட்டிச்
சுடச்சுட எமக்கு வழிகாட்டி
மட்டிலா அறிவை ஊட்டி
மடமையைப் போக்கினீர், இர்ஃபான்!
உங்களின் அறிவுடன் அல்லாஹ்வும் கூடவே இருப்பான்!!
“இர்ஃபான்” என்றால் “ஞானம்” என்பது எத்துணைச் சாலச் சிறப்பு!!!
இஃது உங்களின் பிறப்பின் அமைப்பு!!!//

ஜஸக்கல்லாஹ் ஹைர் காக்கா

Yasir said...

வித்தியாசமான ஐடியா, நல்ல தொகுப்பு

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அஸ்ஸலாமு அலைக்கும்
நன்றி
லன்டன் தம்பிகள் ரபீக்,ரஹ்மத்துல்லா
சகோ.முகம்மது ஹசன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

ஆஹா இடையிலே மிஸ்ஸிங்

நண்பர் யாசிர் தேங்ஸ்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நல்ல ரிவைண்ட்..

ஜஸக்கல்லாஹ் ஹைரன்..

Shameed said...

கடந்த வருடத்தின் பதிப்பும் படங்களும் அருமை

தமீம் said...

அதிரையின் அத்தனை நிகழ்வுகளின் தொகுப்பும் வண்ணமாய் எடுத்து காட்டியது அருமை

JAFAR said...

வருடத்தையே ஒரு நாளுக்கு தொகுத்தளித்த விதம் மிக அருமை! வாழ்த்துக்கள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

வாசித்து வாழ்த்திய
பயணாளி ஹமீதாக்கா,
அமீரக ரிவைன்ட் வரவாளி தாஜுதீன்,
நண்பர் ஜபருல்லா,
சகோ.ஜலால்
நன்றி.

ABU ISMAIL said...

கடந்த அதிரையின் முத்தான செய்தியும், அதர்கேற்ற படமும் நல்ல தொகுப்பு, வாழ்த்துகள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தேங்ஸ் சித்தீக் காக்கா & சகோ. அபு சுலைமான்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு