நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சிரியாவில் நடப்பது என்ன? - உண்மைச் சூழல் ! 23

Unknown | சனி, ஏப்ரல் 14, 2012 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அண்மைகாலங்களில் இஸ்லாமிய நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு உண்மை மறைக்கப்ட்ட போராட்டங்களாக நடைபெறும் நாடுகளில் ஒன்றுதான் சிரியா என்பது நாம் அனைவரும் அறிந்திருக்கிறோமா என்பது கேள்விக்குறியே !?.

உலக வல்லரசாக ஆட்கொண்டிருக்கும் அமெரிக்கா, அரபு நாடுகளுக்கு எதிராக போர் / தாக்குதல் தொடுத்தாலோ அல்லது மிரட்டல் அறிக்கை விட்டாலோ உடனே நாமும் பொங்கியெழுந்து எதிர்க்கிறோம். அமெரிக்கா ஏதாவது ஒரு இஸ்லாமிய நாடு(?)க்கு எதிராக ஏன் போர் தொடுக்கிறார்கள்? என்ற பின்னனியறியாமலே போராட்டங்கள், கண்டனங்கள் என்று வீதியில் இறங்கி அறிந்தோ அறியாமலே போராடுகிறோம். இதுபோன்ற போராட்டங்கள் அமெரிக்காவுக்கு ஐரோப்ப நாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் சரியா? அல்லது தவறா? என்பதை அலசவல்ல இந்த பதிவு.

முஸ்லீமாகிய எம்மக்கள் எப்படி தங்களின் ஈமானுடன் சிரியா போன்ற நாடுகளில் அல்லாஹ்வின் மார்க்கத்தை இவ்வுலகில் நிலைநிறுத்த போராடுகிறார்கள் என்பதனை உண்மைச் சம்வங்களோடு காணொளிகள் காட்டுடன் இங்கே உங்களின் பார்வைக்கும் இறையச்சம் உடைய மக்களின் இறைஞ்சலுக்குமாக வைக்கிறோம். மேலும், இஸ்லாத்திற்கு எதிரான இணைவைப்புகளை கொண்டு ஆட்சியாளர்கள் எப்படியெல்லாம் மக்களை நிர்பந்திக்கிறார்கள் என்பதையும் வேதனையுடன் இந்த காணொளிகளில் காண இருக்கிறீர்கள். இதில் நமக்கு மிகப்பெரிய படிப்பினைகள் நிறைய உள்ளது.

இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் வெற்றி வாகை சூடிய கலீபாக்களில் உமர் (ரழி) அவர்கள் முதன்மையானவர்கள். இவர்கள் ஆட்சிகாலத்தில் வெற்றி கொள்ளப்பட்டு இஸ்லாமிய ஆட்சி நிலைநாட்டப்பட்டு இணைவைப்பாளர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது இங்கே. ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ்.

சிரியாவின் ஆட்சியாளர் அலாவி(!!??) என்ற மதத்தை சார்ந்தவர்கள், குர்ஆன் சுன்னா இவர்களின் வழியல்ல, அலி(ரழி) அவர்களை அல்லாஹ்வாக ஏற்றுக்கொண்ட கூட்டம் தான் இந்த அலாவி மத்தத்தவர். இந்த இனத்தின் வந்த சிரியா அதிபர் அஸாத் பஸரை முன்னிருத்தி அல்லாஹ்வுக்கு இணையாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள் அங்குள்ள ஆட்சியாளரின் அபிமானிகளும் கைக்கூலிகளும் அந்த நாட்டின் கேடுகெட்ட பாதுகாப்பு படையினரும். இதோ இந்த காணொளியை பாருங்கள்.. அல்லாஹ்வையும் பின் தள்ளுவோம் என்று நெஞ்சலுத்தத்துடன் சொல்லும் இந்த இணைவப்பவர்களின் சிரியா அரசு பிரதிநிதி ஒருவன். சுப்ஹானல்லாஹ்.. அபூஜஹலின் கொடூர சரித்திரம் ஞாபகத்துக்கு வரும் இவந்த கொடுங்கோலர்களின் செயல்.


இஸ்லாமிய மார்க்க பிரச்சாரகர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஜும்மா மேடைகளில் பிரச்சாரம் செய்து அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் ஆட்சியாளர்களையல்ல என்று மக்களை நேர்வழியில் பக்கம் அழைத்து வருகிறார்கள். அப்படி செய்யும் இஸ்லாமிய மார்க்க பிரச்சார்களை (தாயிக்களை) தேடிப்பிடித்து கொலை செய்கிறார்கள் இந்த கொடுங்கோலன் அசாத் பஷார் கூட்டத்தார்கள். சுப்ஹானல்லாஹ்! இந்த மனிதர் படும் பாட்டை பாருங்கள். வேறு வழியில்லாமல் தன் உயிரை காப்பாற்ற அஸாத் பற்றிய இணைவைப்பு வாசகத்தை சொல்லுகிறார், பிறகு கொடூரமாக கொள்ளப்படுகிறார் இந்த தாடிவைத்த ஒரு முஸ்லீம். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஃவூன்.

தயைகூர்ந்து இலகியமனம் படைத்தவர்கள், சிறுவர்கள், பெண்கள் இந்த காணொளிகளை கானுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டுகிறோம். காண சகிக்காத காட்சிகள். இத்தகைய காணொளிகள் நம்முடைய ஈமானை பலப்படுத்தவும் எந்த நிலையிலும் நம்முடைய இறையச்சம் ஊசலாடாமல் பாதுகாக்கவும் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி நன்நோக்கத்தில் பதியப்பட்டிருக்கிறது.


இதோ பாருங்கள் அல்லாஹ்வின் இறையில்லங்கள் தாக்கப்படுகிறது


இந்த இறையில்லங்களை இடிக்கும்போது அம்மக்கள் சத்தத்துடன் அழும் குரல் பார்க்கும் அனைத்து முஸ்லீம்களுக்கும் கண்ணீர் வரும். சுப்ஹானல்லாஹ்..

சுதந்திரம் வேண்டும் என்று போராடும் நம் முஸ்லீம் மக்கள் நடத்தும் போராட்டத்தில் நடந்த இந்த போர்களத்தை பாருங்கள்.பெற்ற தாயை மருத்துவமனைத்து அழைத்துச்சென்ற மகனும் தாயும் தாய் ஷஹீதாஹிவிட்டார், மகன் படுகாயமடைந்து விட்டார். காயமடைந்த உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அந்த சகோதரனை மீட்டெடுக்கும் காட்சியை பாருங்கள். உலகத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள எந்த ஒரு கொடுரமான திரை மற்றும் காணிளி காட்சிகளிலுல் கூட காண்டிருக்க மாட்டீர்கள்.


அசத் பஷாரை அல்லாஹ் என்று சொல்ல மறுக்கும் ஒரு முஃமீன் ஷஹாதா சொல்லிக்கொண்டிருக்கும் போது பெட்ரோல் ஊற்றி எரித்து உடனே கழுத்தை அறுத்து கொல்லப்படுகிறார்…

இதன் காணொளி தற்போது யூடியூபால் தடை செய்யப்பட்டுள்ளது.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

சிரியாவில் நடக்கும் இந்த நிகழ்வுகளில் நமக்கு நிறைய படிப்பினைகள் உள்ளது.

அல்லாஹ்வை ஏகனாக ஏற்று முஹம்மது (ஸல்) அவர்களை நபியாக ஏற்ற ஒரே காரணத்துக்காக, அக்கிரமக்கார ஆட்சியாளர்களால் சிரியா மக்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த கஷ்டமான காலகட்டத்திலும் அல்லாஹு அக்பர் என்று அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டிருகிறார்கள் இந்த மக்கள்.

அல்லாஹ் நமக்கு நல்ல சூழ்நிலைகளை தந்தும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் தொழுகை இபாதத்துக்களில் எவ்வளவு பொடுபோக்காக இருக்கிறோம் என்பதை சிறிதேனும் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

எவ்வளாவுதான் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாலும் அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் வணங்கமாட்டேன் என்ற உறுதியில் ஷஹாபாக்களின் வரலாறுகளை படித்திருப்போம் கேட்டிருப்போம். ஆனால், இன்று சிரியாவில் குர்ஆன் சுன்னாவை அடிப்படை நெறியாக கொண்டுள்ள சிரியா மக்களிடமிருந்து நமக்கு நிறைய படிப்பினைகள் உள்ளது.

மிகப்பெரிய மார்க்க மேதைகளை உருவாக்கிய இந்த சிரியா நாட்டில் முஸ்லீம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் நாம் செய்ய வேண்டிய பரிகாரம் அவர்களுக்காக துஆ செய்வது தான் இத்தருணத்தில் கட்டாயம் தேவை.

யா அல்லாஹ்! சிரியா முஸ்லீம் மக்களுக்கு பொறுமையை வழங்குவாயாக…

யா அல்லாஹ்! பெற்ற தாய் தந்தையர்கள், பிள்ளைகள் இழந்து வாடும் சிரியா மக்களுக்கு அல்லாஹ் மன நிம்மதியை அளித்தருள்வாயாக..

அவர்களுக்கு நல்லருள் புரிவாயாக..

யா அல்லாஹ்! இந்த அசாத் பஷாரை தண்டிப்பாயாக…! உன்னுடைய சாபத்தை அவன்மீது உண்டாக்குவாயாக…

யா அல்லாஹ்! சிரியாவில் உள்ள முஸ்லீம் உம்மத்திற்கு வெற்றியை தந்தருள்வாயாக...

தயைகூர்ந்து நம் ஒவ்வொருவரின் பிரார்த்தனையிலும் சிரியாவில் வாழும் முஸ்லீம்கள் அனைவரின் பாதுகாப்பிற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கையேந்துவோம், அவர்களுகாக பிரார்த்தனை செய்யுமாறு உங்கள் அனைவரையும் உருக்கத்துடன் கேட்டுக்கொள்கிறோம்.

சிரியாவின் ஆட்சியாளரின் அலாவி (ஷியாவின் ஒரு பிரிவு) மதம் மற்றும் இதன் வரலாறு பற்றி விரிவாக தனி பதில் இன்ஷா அல்லாஹ் பார்க்கலாம்.

தொகுப்பு: அதிரைநிருபர் குழு

23 Responses So Far:

அதிரை சித்திக் சொன்னது…

சிரியா நாட்டில் நடக்கும் கொடுமைகளை மிக தெள்ள தெளிவாக காணொளி மூலம் விளக்கிய அதிரை நிருபர் குழுவிற்கு எனது பாராட்டுக்கள் ....இஸ்லாம் தோன்றிய காலத்தில் பிலால் (ரலி)அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கேள்வி பட்டிருக்கிறோம். அதனை நினைவு கூறும் விதமாக ஒரு காட்சி இருந்தது துப்பாக்கி முனையில் ஏதோசொல்ல வைப்பதும் அதன் பின்னர் அவர் கொலை செய்வதும் எவ்வளவு பெரிய துரோக செயல் மனித இனத்திற்கே இழுக்கு அல்லாஹ் இது போன்ற கொடுமைகள் எங்கேயும் நடக்காமல் எல்லா மக்களையும் பாதுகாப்பானாக ஆமீன்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

யா அல்லாஹ் இவர்களுக்கெல்லாம் மனித நேயத்தை கொடுத்து இஸ்லாத்தை பாதுகாப்பாயாக!
இனியும் இத்தைகைய கொடூரம் யாருக்கும் நேராமல் பாதுகாப்பாயாக!
எதிராளிகளையும் உன் பக்கம் வசப்படுத்துவாயாக! ஆமீன்.

ZAEISA சொன்னது…

அல்லாஹ் அக்பர்...அல்லாஹ் அக்பர்...அல்லாஹ் அக்பர்.
லாஇலாஹா இல்லல்லாஹ் முஹம்மத் ரசூலல்லாஹ்...அல்லாஹ் அக்பர்.

அதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது…

சிரியாவில் என்ன நடக்கிறது என்பதன் உண்மை நிலவரம் யாரும் அறியாத விவரங்களை தெரியச் (தெளிவு பெற) செய்த அ நி குழுவிற்கு நன்றிகள்

அல்லாஹ் ஒருவனே அவனின்றி யாருமில்லை அவன் தனித்தவன்,யாவும் அறிந்தவன் என்று உண்மையை உணர்த்தும் / உயிர் தியாகம் செய்யும் அணைத்து முஸ்லிம்களுக்கும் அல்லாஹுதால முழு வெற்றியை கொடுப்பான்...இன்ஷா அல்லாஹ்

நாம் ஒவ்வொரு வக்த்திலும் அவர்களுக்காக துவா செய்வோம், உலக ஒற்றுமையுடனும் அதேபோல் இஸ்லாத்தை நிலைநாட்ட உறுதியுடன் வாழ்வோம்...அல்லாஹ் துணையுடன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

மிகக் குறைந்த சதவிகிதமே இருக்கும் ஒரு கூட்டம் பெரும்பான்மை சமூகத்தை ஆட்டிப் படைக்கிறது...

சிரியா மக்களே அந்த நாட்டு அதிபருக்கு தண்டனை வழங்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

இது மிகப் பெரிய துரோக செயல் மனித இனத்திற்கே இழுக்கு!

அல்லாஹ், இது போன்ற கொடுமைகள் எங்கேயும் நடக்காமல் எல்லா மக்களைவரையும் பாதுகாப்பானாக ஆமீன் !

Shameed சொன்னது…

யாருக்கும் இது போன்ற கொடுமைகள் நடக்க கூடாது

இது போன்ற கொடுமைகள் எங்கேயும் நடக்காமல் அல்லாஹ் எல்லா மக்களையும் பாதுகாப்பானாக ஆமீன் !

அலாவுதீன்.S. சொன்னது…

நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள். தண்டிப்பதில் கடுமையானவன் வல்ல அல்லாஹ் ஒருவனே.

அநியாயக்கார இறைமறுப்பாளர்கள் அலவிகளை வல்ல அல்லாஹ்தான் தண்டிக்கவேண்டாம்.

/// யா அல்லாஹ்! சிரியா முஸ்லீம் மக்களுக்கு பொறுமையை வழங்குவாயாக…
யா அல்லாஹ்! பெற்ற தாய் தந்தையர்கள், பிள்ளைகள் இழந்து வாடும் சிரியா மக்களுக்கு அல்லாஹ் மன நிம்மதியை அளித்தருள்வாயாக..

அவர்களுக்கு நல்லருள் புரிவாயாக..
யா அல்லாஹ்! இந்த அசாத் பஷாரை தண்டிப்பாயாக…! உன்னுடைய சாபத்தை அவன்மீது உண்டாக்குவாயாக…
யா அல்லாஹ்! சிரியாவில் உள்ள முஸ்லீம் உம்மத்திற்கு வெற்றியை தந்தருள்வாயாக... ///

அல்லாஹ்வை நம்பும் அந்த மக்களை காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன். நாமும் துஆச் செய்வோம்.


நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.” (அல்குர்ஆன் :6:135 )

அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, “எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்?” என்று கூறினார்கள் - அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் எனபதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் அவர்கள் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள். (அல்குர்ஆன் :41:15 )

அதிரைநிருபர் - வாசகர் கருத்து [மின்னஞ்சல் வழி]. சொன்னது…

3.3.1924 திங்கள் கிழமை காலை வேளையில் இஸ்லாமிய கிலாபத் உலகை விட்டும் அழிக்கபட்டது. மனித குலத்துக்கு விடுதலையாய் இருந்த முஸ்லிம்களின் சாம்ராஜ்யம் வீழ்த்தப்பட்டது. கிலாபத் அழிக்கப்பட்டு 88 ஆண்டுகள் தான் கடந்துள்ளது. மேற்கு பயங்கரவாதம் முஸ்லிம் உம்மாஹ்வை பலவீன படுத்தி முஸ்லிம் உம்மாஹ்வின் முதுகில் ஏறி ருத்ர தாண்டவம் ஆடுகிறது. நம்மிடம் இஸ்லாம் கடமையாக்கிய கிலாபத் இப்போது இல்லை. இதுதான் இன்றைய நமது பிரதான பலவீனம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு முன்னறிவிப்பு செய்தார்கள் ‘அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவம் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். பின் அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவத்தின் வழிமுறையிலான கிலாபத் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் பரம்பரை ரீதியிலான ஆட்சிமுறை இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் கொடுங்கோலர்கள் ஆட்சி அல்லாஹ் நாடும் வரை இருக்கும், அவன் நாடும் போது அதையும் நீக்கி விடுவான். பின் நுபுத்துவத்தின் வழிமுறையான கிலாபத் (இறையாட்சி) ஏற்படும் என்று கூறி விட்டு பின் அமைதியாக இருந்து விட்டார்கள்’ -ஹீதைபா (ரலி) – முஸ்னத் அஹ்மத், திர்மிதி எண் 5378-

கிலாபத் உதையமாகும் காலம் மிகவும் அருகில் வருவதுபோல் உணர முடிகின்றது. கிலாபத் மீண்டும் ஏற்படுத்த பட்ட வேண்டும். அது தான் முழு மனித சமூகத்திற்கும் விடுதலையாக அமையும்.

நூர் முஹம்மது

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

அல்லாஹும்ம அலைக்க பஸார்‍ அல் அஸத்......

இவன் அப்பன் இறந்து இவன் பதவிக்கு வந்ததிலிருந்து இத்துனை வ‌ருட‌கால‌மாக‌ இவ‌னை ந‌ல்ல‌வ‌ன் என்று அர‌புல‌க‌த்துட‌ன், நாமும் நினைத்துக்கொண்டிருந்தோம்.

ஆப்கானின் முல்லா உம‌ர், ஈராக்கின் ச‌தாம், லிபியாவின் க‌டாஃபி, எகிப்தின் முபார‌க் ஆகிய ஆட்சியாளர்களை அப்புற‌ப்ப‌டுத்த‌ அமெரிக்காவும், ஐ.நாவும், நேட்டோவும் காட்டிய அக்கறையையும், ஆத்திரத்தையும் இவனை அப்புறப்படுத்த காட்டாமல் க‌ரிச‌னை காட்டி கார‌ண‌ம் ப‌ல‌ கூறி வ‌ருவ‌து வேடிக்கையான‌ ஒரு வேத‌னை.

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

அங்கோ ஒரு ஆரிய‌மாயையின் கொட்டம் இங்கோ சிரிய‌மாயையின் ஆட்ட‌ம். அணைய‌ப்போவ‌து அல்லாஹ்வின் ஒளிய‌ல்ல‌. அக்கிர‌ம‌க்கார‌ர்க‌ளின் அட்டூழிய‌மே.

இந்த‌ பொல்லாத‌ உல‌க‌ம் விரைவில் இல்லாம‌ல் போய் விடும் இறைவ‌ன் நாடி விட்டால்....

Unknown சொன்னது…

சித்தீக் பள்ளிவாசல் நிலம் மோசடியா? கள ஆய்வு 2
http://adiraipost.blogspot.in/2012/04/2.html

aa சொன்னது…

நல்ல ஆக்கம். இந்த அல்விகள் ஷியா மதத்தின் ஒரு பிரிவினராவர்.சில மார்க்க அறிவில்லா முஸ்லிம்களாலும் இஹ்வானிகளாலும் ஹீரோவாக முன்னிறுத்தப்படும் ஈரானின் அஹ்மதி நிஜாத் என்ற ஷியா கொடுங்கோலனும் சிரியாவின் அஸ்ஸாதிற்கு முழு ஆதரவு கொடுக்கிறான். லெபனானின் ஹிஸ்புல்லா என்ற ஷைத்தானின் பரிவாரமும் இந்த அடக்குமுறகளுக்கு முழு ஆதரவு கொடுக்கிறது.

அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அழகிய முறையில் பின்பற்றும் சுன்னி முஸ்லிம்களாகிய எமக்கு ஈரானும் இஸ்ரேலும் ஒரே தூரத்தில் தான். இறுதித் தூதரின் உத்தம தோழர்க்ளை நிந்தனை செய்து அவர்களின் மேல் அவதூறு சுமத்துவதோடு மட்டுமல்லாமல், கொலையை விட கொடிய பாவமும் மன்னிப்பே இல்லாத பாவமுமாகிய ‘இணைவைத்தல்’ என்னும் கொடூர ஷிர்க்கை கொள்கையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தையும் அதன் அரசாங்கத்தையும் எந்த மார்க்க அறிவுள்ள முஸ்லிமும் கனவில் கூட நேசிக்க மாட்டான்.

Yasir சொன்னது…

அநியாக்கார ஆட்சியாளர்களுக்கு அல்லாஹ்தான் கூலி கொடுக்க வேண்டும்....மனது பதறுகிறது

அதிரை சித்திக் சொன்னது…

1990 களில் நான் பஹ்ரைனில் இருந்த சமயம் சியா அரபிகள் சொல்ல கேட்டிருக்கிறேன் சிரியா நாட்டில் முத் ஆ என்கிற முறையில் இரண்டு நாள் மூன்று நாள் கல்யாணங்கள் செய்து வைப்பார்களாம் விபச்சாரத்தை சியாக்கள் முத் ஆ என்ற போர்வையில் காலம் காலமாக நடத்தி வருகிறார்கள் .. .. இன்ஷாஅல்லாஹ் கூடியவிரைவில் சிரியா மக்கள் சுதந்திர வானில் சிறகடித்து பறக்க எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாஹா ஆமீன் ....

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

கொடுமைக்காரன் பசார் மீதும்,அவன் கூட்டாளிகள் மீது,அல்லாஹ்வின் சாபமும்,மலக்குகளின் சாபமும் உண்டாவதாக.ஆமீன்.இது போன்று இவனுக்கு ஆதரவு கொடுக்கும் ஷியாக்களுக்கும் உண்டாவதாக.

U.ABOOBACKER (MK) சொன்னது…

நெஞ்சை பதற வைக்கும் சிரியாவின் கொடூர காட்சிகளை பதிந்ததின் மூலம் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காக துஆ செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்திய அதிரை நிருபருக்கு நன்றி. உலக நாடுகளும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளும் இந்த அக்கிரமங்களை தடுக்க முயற்சி எடுக்காமல் அமைதியாக இருப்பது வேதனையாக இருக்கிறது. ஃபிர் அவுன் போன்ற கொடுங்கோலர்களை அழித்த வல்ல அல்லாஹ கொடுங்கோலன் அஸாத் பஸரை அழித்து சிரிய முஸ்லிம்களை நிச்சயம் பாதுகாப்பான். அம்மக்களுக்காக துஆ செய்வது நமது தலையாய கடமையாகும்.

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.
கொடுமைக்காரன் பசார் மீதும்,அவன் கூட்டாளிகள் மீது,அல்லாஹ்வின் சாபமும்,மலக்குகளின் சாபமும் உண்டாவதாக.ஆமீன்.இது போன்று இவனுக்கு ஆதரவு கொடுக்கும் ஷியாக்களுக்கும் உண்டாவதாக.

Abdul Guthoose/guthosah சொன்னது…

சண்டாளன் பசாதிற்கு இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் அழிவு வரும் சிரியா இஸ்லாமிய நாடு என என்னி இருந்தேன் இந்த கட்டுரையும் காணொளி அவ்வாறு இல்லை என்பதை வெளிச்சக்போட்டுகாட்டியுள்ளது

அப்துல் குத்தூஸ்

Jama சொன்னது…

ஜசாகல்லாஹ் ஹைர் ..உண்மையை உரக்க சொன்ன பதிவு....

Unknown சொன்னது…

அங்கோ ஒரு ஆரிய‌மாயையின் கொட்டம் இங்கோ சிரிய‌மாயையின் ஆட்ட‌ம். அணைய‌ப்போவ‌து அல்லாஹ்வின் ஒளிய‌ல்ல‌. அக்கிர‌ம‌க்கார‌ர்க‌ளின் அட்டூழிய‌மே. 

Unknown சொன்னது…

அங்கோ ஒரு ஆரிய‌மாயையின் கொட்டம் இங்கோ சிரிய‌மாயையின் ஆட்ட‌ம். அணைய‌ப்போவ‌து அல்லாஹ்வின் ஒளிய‌ல்ல‌. அக்கிர‌ம‌க்கார‌ர்க‌ளின் அட்டூழிய‌மே. 

Unknown சொன்னது…

அங்கோ ஒரு ஆரிய‌மாயையின் கொட்டம் இங்கோ சிரிய‌மாயையின் ஆட்ட‌ம். அணைய‌ப்போவ‌து அல்லாஹ்வின் ஒளிய‌ல்ல‌. அக்கிர‌ம‌க்கார‌ர்க‌ளின் அட்டூழிய‌மே. 

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

\\அல்லாஹ் நமக்கு நல்ல சூழ்நிலைகளை தந்தும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் தொழுகை இபாதத்துக்களில் எவ்வளவு பொடுபோக்காக இருக்கிறோம் என்பதை சிறிதேனும் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.\\

இன்னும் நாம் மாயையில் உழன்று கொண்டும், உணவு, உடை, உறையுள்களில் வசதிகளைப் பெருக்கிக் கொண்டும் இருக்கின்றோம்; இவைகள் அல்லாஹ் தரும் நிஃமத் என்னும் அருட்கொடைகள் தான் என்பதில் ஐயமில்லை; ஆனால் இத்தனையும் இழந்து நிற்கும் இவர்கட்காக நாம் துஆ வாவது செய்வோம் என்ற அழகிய உணர்வை அதிரை நிருபர் இப்பதிவின் மூலம் சொல்லிக் காட்டுவதை உணர்கின்றேன்.

நீண்ட நாட்கட்குப் பின்னர் வந்தாலும் அதிரைக் களஞ்சியத்தின் குறிப்புகள் எமக்கு ஓர் அறிவிப்பாகும்.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு