Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் - 11 16

அதிரைநிருபர் பதிப்பகம் | June 12, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்

கடந்த வாரம் ரஹ்மத்துல் ஆலமீன் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மேல் எந்த அளவுக்கு சத்திய சஹாபாக்கள் பாசம் வைத்திருந்தார்கள் என்பதை முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம், ஏராளமானவர்களைச் சென்றடைந்த அந்த அத்தியாயத்தின் தொடர்ச்சியை மேலும் சில முத்தாய்ப்பான வரலாற்று சம்பவங்கள் இந்த பதிவில் நாம் காணலாம்.

அல்லாஹ்வின் தூதர் எம்பெருமானார் நபி(ஸல்) அவர்களிடம் ஓரு வழக்கம் இருந்து வந்தது, அறியாமைக் காலத்தில் இருக்கும் மக்களிடையே ஏகத்துவத்தை எத்தி ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தம்முடை நம்பிக்கைக்குரிய அருமை தோழர்களைத் தாயிக்களாக மார்க்க பிரச்சாரம் செய்ய அனுப்பி வைப்பார்கள் அகிலத்தின் அருட்கொடை நபி(ஸல்) அவர்கள். ஒரு தடவை எமன் நாட்டுக்குத் தூதுவராக அண்ணல் நபி(ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல்(ரலி) அவர்களை நியமித்தார்கள்.

எமன் நாட்டு தூதுவராக நியமிக்கப்பட்ட முஆத் பின் ஜபல் அவர்களை ஒட்டகத்தில் அமர வைத்து போர்ப்படை தளபதிகளுக்கு முன்மாதிரி தளபதி, தாயிக்களுக்கு எல்லாம் முன்மாதிரி தாயி, அகிலத்தின் அருட்கொடை, ஒட்டுமொத்த மனித சமூதயாத்திற்கும் எடுத்துக்காட்டான மாமனிதர் நம்முடைய நபி(ஸல்) அவர்கள் மதீனாவின் எல்லை துல்ஹுலைபா வரை நடந்து தம்முடைய தூதுவரை வழியனுப்ப வந்தார்கள். ஒட்டகத்தில் அமர்ந்து வந்த முஆத் பின் ஜபல்(ரலி) அவர்களால் நபி(ஸல்) அவர்கள் நடந்து வருவதைக் கண்டு தாங்க முடியவில்லை.

“யா ரசூலுல்லாஹ் நான் நடந்து வருகிறேன், நீங்கள் அமருங்கள்” என்று கேட்டார்கள்.

அதற்கு கருணையின் சிகரம் உச்சநிலை இரக்கத்தின் தலைவர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் “வேண்டாம் முஆதே நீங்கள் அமர்ந்து வாருங்கள்” என்று பாசத்தோடு கூறினார்கள்.

மேலும் நபி(ஸல்) முஆத் பின் ஜபல்(ரலி) அவர்களுக்கு உபதேசம் செய்துகொண்டே வந்தார்கள். முஆதே “நான் உங்களை எமன் நாட்டுக்கு தூதுவராக அனுப்புகிறேன், அந்த மக்களுக்கு மார்க்கத்தை நலினமாக எடுத்துச் சொல்லுங்கள், ஏகத்துவத்தின் பக்கம் அந்த மக்களை அழையுங்கள், அநியாயம் செய்வதிலிருந்து அந்த மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்” என்று மார்க்க நெறிமுறைகளை எடுத்துச் சொல்லிவிட்டு மதீனாவின் எல்லை வந்தவுடன், இறுதி இறைதூதர் நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) அவர்களைப் பார்த்துச் சொன்னார்கள் “எமனிலிருந்து நீங்கள் திரும்பி வரும் போது நான் இருக்க மாட்டேன்,” இதை கேட்ட முஆத்(ரலி) அவர்களுக்கு தாங்க முடியவில்லை “நீங்கள் என்னுடைய மண்ணறையையோ அல்லது என்னுடை பள்ளியையோதான் காண்பீர்கள், ஒன்றைத் தெரிந்துக்கொள்ளுங்கள் முஆதே, என்னுடைய குடும்பத்தார்கள் நினைக்கிறார்கள், என்னிடத்தில் அவர்களுக்கு அதிக உரிமை உண்டு என்று. ஆனால் என்னிடம் அதிகம் உரிமை உள்ளவர்கள் யார் தெரியுமா? இறையச்சமுடைய மக்கள், அவர்கள் யாராக இருந்தாலும் எங்கிருந்தாலும்” என்று கூறி மதினாவை நோக்கி திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தன்னுடையை கண்பார்வையிலிருந்து மறையும் வரை

முஆத் பின் ஜபல்(ரலி) அவர்கள் தேம்பிதேம்பி அழுதார்கள். இந்த சம்பவங்களின் வரலாற்றுச் சான்றுகள் புகாரி போன்ற இதர ஹதீஸ் தொகுப்புகளில் நாம் காண முடிகிறது.

முத்தாய்ப்பான இறுதி உபதேசம் செய்த நம்முடைய பாசமிகு தலைவர், நம்முடைய ஆருயிர் தோழர், மார்க்க கல்வி கற்றுத் தந்த நேசம் நிறைந்த ஆசான், இறையச்சமுடைய மக்களுக்கு மட்டும் அதிக உரிமை கொடுக்கும் நம்முடைய இறைத்தூதர் நம்மைவிட்டு பிரியப்போகிறார்களே என்று நினைத்து அழுதுள்ளார்கள் முஆத் பின் ஜபல்(ரலி) அவர்கள் என்பதை மேல் சொன்ன வரலாற்று சம்பவத்தின் மூலம் நாம் அறியலாம்.

ஒரு நாள் ஷஃபான்(ரலி) அவர்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்களுடைய சபைக்கு அழுதுக்கொண்டே வந்தார்கள். பாசத்தின் தந்தை அருமை நபி(ஸல்) அவர்கள் “என்ன ஆனது ஷஃபானே, முகமெல்லாம் வாடியுள்ளதே?” என்று வினவினார்கள்.

அதற்கு ஷஃபான்(ரலி) அவர்கள் “யா ரசூலுல்லாஹ், நான் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிந்தேன், அப்போது எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது”

நபி(ஸல்) அவர்கள் “என்ன சந்தேகம் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள்.

அதற்கு ஷஃபான்(ரலி) அவர்கள் “மக்காவில் உங்களை  வந்து சந்தித்து பேச வேண்டுமானால், உங்களோடு சேர்ந்து சிரிக்க வேண்டுமானால், தோளோடு தோள் சேர்ந்து உரையாடவேண்டுமானல் உடனே வந்து சந்தித்துவிடுகிறோம், ஆனால் மறுமையில் இது போன்று ஒன்றாக இருக்க முடியுமா என்று நினைத்து அழுகிறேன் யா ரசூல்லுல்லாஹ், எனக்கு முன்னால் நீங்களும், உங்களுக்கு முன்னால் நானோ மரணித்தால் மறுமையில் சொர்கத்தில் உங்களை எங்கு வந்து தேடுவது யா ரசூலுல்லாஹ், அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னித்து எங்களை சொர்கத்தில் போட்டால், நீங்கள் எல்லாம் நபிமார்கள் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பீர்கள், நாங்கள் எல்லாம் சாதாரண அடியார்கள், சொர்கத்தில் உங்களைப் பார்க்க முடியாதே, அதை நினைத்து கவலையுற்றேன் யா ரசூலுல்லாஹ்”  என்று ஷஃபான்(ரலி) அவர்கள் அழுதுகொண்டே கூறினார்கள். உடன் அல்லாஹ்விடம் இருந்து பின் வரும் ஆயத்து வந்தது.

யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். குர் ஆன் 4:69.

இந்த வசனத்தை நபி(ஸல்) ஓதிக்காட்டிய பிறகு தான் ஷஃபான்(ரலி) அவர்கள் தன்னுடைய அழுகையை நிறுத்தினார்கள் என்று ஹதீஸ் தொகுப்புகளில் பார்க்கிறோம்.

உத்தம நபி(ஸல்) அவர்கள் தன்னோடு வாழ்ந்த மக்களோடு நேசம் வைத்திருந்தார்கள், அதுபோல் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மேல் வைத்த பாசத்தால், மறுமையில் அவர்களோடு இருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டுமே என்று ஏக்கத்தில் சத்திய சஹாபாக்கள் அழுதுள்ளார்கள் என்பதை மேல் சொன்ன சம்பவத்தின் மூலம் நாம் அறிய முடிகிறது.

இப்போது நம் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் மறுமையில் அகிலத்தின் அருட்கொடை, மனித இனத்தின் முன் மாதிரி, நம்முடைய இஸ்லாத்தின் படைத்தளபதி முஹம்மது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் சுவர்கத்தில் ஒன்றாக இருக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்குமா என்று நினைத்து ஒரு நாளாவது அழுதிருக்கிறோமா?

இஸ்லாத்தில் இல்லாத நபி பிறந்த நாள் கொண்டாட்டம் கொண்டாடுகிறோமே, நபி(ஸல்) சுஹதாக்கள், சாலிஹீன்களோடு நாளை சுவர்கத்தில் இருக்க அல்லாஹ்விடன் அழுது பிரார்த்தனை செய்திருப்போமா?

போலியான கற்பனை கதாப்பாத்திரங்களின் காட்சிகளை பார்த்து அழும் இனிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே..!

நாம் அழ வேண்டும்
அர்த்தத்தோடு அழவேண்டும்….

இந்த வார உறுதி மொழி:

ஒவ்வொரு வினாடியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு, கீழ்படிந்து, நாளை மறுமையில் சுவர்கத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் நபிமார்கள், சுஹதாக்கள், சாலீஹீன்கள், நல்லடியார்களோடு இருக்க முயற்சிப்போம், அதற்காக து செய்வோம்

அல்லாஹ், நாளை மறுமையில் நம் அனைவரையும் சொர்கத்தில் நபி(ஸல்) அவர்களோடு ஒன்றாக இருக்கும் அந்த பாக்கியத்தை அவனுடைய மாபெரும் கிருபையால் தந்தருள்வானாக.
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
M தாஜுதீன்

16 Responses So Far:

M.B.A.அஹமது said...

//ஒவ்வொரு வினாடியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு, கீழ்படிந்து, நாளை மறுமையில் சுவர்கத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் நபிமார்கள், சுஹதாக்கள், சாலீஹீன்கள், நல்லடியார்களோடு இருக்க முயற்சிப்போம், அதற்காக து ஆ செய்வோம்

அல்லாஹ், நாளை மறுமையில் நம் அனைவரையும் சொர்கத்தில் நபி(ஸல்) அவர்களோடு ஒன்றாக இருக்கும் அந்த பாக்கியத்தை அவனுடைய மாபெரும் கிருபையால் தந்தருள்வானாக.//

ஆமீன் யாரப்பல் ஆலமீன் யா அல்லாஹ் எங்களையும் மறுமையில் அந்த நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து வை யா அல்லாஹ்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஒவ்வொரு வினாடியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு, கீழ்படிந்து, நாளை மறுமையில் சுவர்கத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் நபிமார்கள், சுஹதாக்கள், சாலீஹீன்கள், நல்லடியார்களோடு இருக்க முயற்சிப்போம், அதற்காக து ஆ செய்வோம்

அல்லாஹ், நாளை மறுமையில் நம் அனைவரையும் சொர்கத்தில் நபி(ஸல்) அவர்களோடு ஒன்றாக இருக்கும் அந்த பாக்கியத்தை அவனுடைய மாபெரும் கிருபையால் தந்தருள்வானாக.

Abdul Razik said...

அல்லாஹ், நாளை மறுமையில் நம் அனைவரையும் சொர்கத்தில் நபி(ஸல்) அவர்களோடு ஒன்றாக இருக்கும் அந்த பாக்கியத்தை அவனுடைய மாபெரும் கிருபையால் தந்தருள்வானாக ஆமீன்

Anonymous said...

தன்னை நினைத்து யாரும் கண்ணீர் விடுவதில்லை மறுமைமைக்கு என்ன சேர்த்து வைத்திருக்கிறோம் என்று. மனிதன் எப்பொழுது கண்ணீர் விடுகிறான் என்றால் அவனுக்கு தங்க வீடு, உன்ன உணவு, உடுத்த உடை இல்லாத போதில் தான் தன்னை நினைத்து கண்ணீர் விடுகிறான். ஏன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வுடைய ரசூலுக்கும் பயந்து கண்ணீர் விடக்கூடாது.

மனிதன் இவ்வுலக வாழ்க்கைக்குத்தான் கண்ணீரும்,வருத்தமும் படுகிறான். மறுவுலக வாழ்க்கையை நினைப்பதில்லை.

Meerashah Rafia said...

//இஸ்லாத்தில் இல்லாத நபி பிறந்த நாள் கொண்டாட்டம் கொண்டாடுகிறோமே, நபி(ஸல்) சுஹதாக்கள், சாலிஹீன்களோடு நாளை சுவர்கத்தில் இருக்க அல்லாஹ்விடன் அழுது பிரார்த்தனை செய்திருப்போமா?//

Touching..

Unknown said...

அல்லாஹ், நாளை மறுமையில் நம் அனைவரையும் சொர்கத்தில் நபி(ஸல்) அவர்களோடு ஒன்றாக இருக்கும் அந்த பாக்கியத்தை அவனுடைய மாபெரும் கிருபையால் தந்தருள்வானாக ஆமீன்

sabeer.abushahruk said...

அல்லாஹ், நாளை மறுமையில் நம் அனைவரையும் சொர்கத்தில் நபி(ஸல்) அவர்களோடு ஒன்றாக இருக்கும் அந்த பாக்கியத்தை அவனுடைய மாபெரும் கிருபையால் தந்தருள்வானாக.

ஆமீன்

Unknown said...

//அல்லாஹ், நாளை மறுமையில் நம் அனைவரையும் சொர்கத்தில் நபி(ஸல்) அவர்களோடு ஒன்றாக இருக்கும் அந்த பாக்கியத்தை அவனுடைய மாபெரும் கிருபையால் தந்தருள்வானாக.//

ஆமீன்( அந்நேரம் அவன் கருணைப்பார்வை நம் அனைவர்மீதும் விழட்டும்)

ஆமீன்.

Unknown said...

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் வந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் (முன்பு மார்க்கத்தை) அறியாதவர்களாகவும், சிலைகளை வணங்குபவர்களாகவும் இருந்தோம். அதன் காரணமாக குழந்தைகளை கொலை செய்து கொண்டிருந்தோம். என்னிடத்தில் எனக்கு ஒரு மகள் இருந்தாள் நான் அவளை அழைக்கும் போதெல்லாம் என்னுடைய அழைப்பிற்கு மகிழ்வோடு பதில் கூறிக் கொண்டிருந்தாள். ஒரு நாள் நான் அவளை அழைத்துக் கொண்டு என்னுடைய வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றுக்குச் சென்றேன். அவளும் என்னை பின் தொடர்ந்து வந்தாள். அங்கு நான் அவள் கையைப் பிடித்து கிணற்றில் தள்ளி விட்டேன். அவள் எனதருமை தந்தையே! எனதருமை தந்தையே! என்று கதறிக் கொண்டிருந்தது தான் என்னை அடைந்த அவளின் கடைசி வார்த்தையாகும் என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அழுதார்கள். அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்து சென்று கொண்டிருந்தது. இதைக் கண்ட நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் அமர்ந்திருந்த ஒருவர் நீர் நபி (ஸல்) அவர்களை கவலையில் ஆழ்த்தி விட்டீரே! என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அம்மனிதரிடம் 'நீர் பொறும்! அவருக்கு ஏற்பட்டுள்ள வருத்தத்தை வைத்து அவர் மிக முக்கியமான பிரச்சனையை கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள். பின்பு (அம்மனிதரிடம்) உம்முடைய அச்சம்பவத்தை மறுபடியும் கூறுவீராக! என்று கூறினார்கள். அவர் அதை மறுபடியும் கூறினார். தனது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து தனது தாடியின் மீது வழிந்தோடும் அளவிற்கு நபி (ஸல்) அவர்கள் அழுதார்கள். பின்பு அவரிடம் 'நிச்சயமாக அல்லாஹ் மனிதன் அறியாமைக் காலத்தில் செய்த செயல்களை அகற்றி விட்டான் உம்முடைய செயல்களை புதிதாக ஆரம்பித்து செய்து வருவீராக' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Canada. Maan. A. Shaikh said...

ஒவ்வொரு வினாடியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு, கீழ்படிந்து, நாளை மறுமையில் சுவர்கத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் நபிமார்கள், சுஹதாக்கள், சாலீஹீன்கள், நல்லடியார்களோடு இருக்க முயற்சிப்போம், அதற்காக து ஆ செய்வோம்

அல்லாஹ், நாளை மறுமையில் நம் அனைவரையும் சொர்கத்தில் நபி(ஸல்) அவர்களோடு ஒன்றாக இருக்கும் அந்த பாக்கியத்தை அவனுடைய மாபெரும் கிருபையால் தந்தருள்வானாக ஆமீன்..

யா அல்லாஹ் சைதானுடைய சூழ்சிளிருந்தும் பாவ செயளிருந்து எங்களையும் எங்கள் சந்த்ததிகல்லயும் பாதுகாபாயாக. யா அல்லாஹ் மறுமையில் அந்த நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பாயாக.....ஆமீன் ஆமீன்...............யாரப்பல் ஆலமீன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

வாசித்து கருத்திட்டவர்களுக்கும், வாசித்த சகோதர சகோதரிகளுக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைர்.

ஒவ்வொரு வினாடியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு, கீழ்படிந்து, நாளை மறுமையில் சுவர்கத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் நபிமார்கள், சுஹதாக்கள், சாலீஹீன்கள், நல்லடியார்களோடு இருக்க முயற்சிப்போம், அதற்காக து ஆ செய்வோம்

அல்லாஹ், நாளை மறுமையில் நம் அனைவரையும் சொர்கத்தில் நபி(ஸல்) அவர்களோடு ஒன்றாக இருக்கும் அந்த பாக்கியத்தை அவனுடைய மாபெரும் கிருபையால் தந்தருள்வானாக.

Yasir said...

அல்லாஹ், நாளை மறுமையில் நம் அனைவரையும் சொர்கத்தில் நபி(ஸல்) அவர்களோடு ஒன்றாக இருக்கும் அந்த பாக்கியத்தை அவனுடைய மாபெரும் கிருபையால் தந்தருள்வானாக ஆமீன்

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

தன் தூதுவரை ஒட்டகத்தின் மேல் ஏற்றி தான் நடந்தே சென்று அவரை ஏமன் நாட்டுக்கு வழியனுப்பும் ரசூல்சல்லாஹு [அலை] அவர்களுக்கே உரிய உயர்ந்த பண்பாடு.

அதனால்தான் அண்ணலாரின் அன்பு மொழியும் பண்பு வழியும் பற்றி அவர்கள் தோன்றிய காலம் தொட்டு இன்று வரை உலகம் பேசுகிறது..

அவர்களுக்கு முன்னும் பின்னும் தோன்றிய பல ஆயிரம் தலைவர்கள் வந்தும் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போல மறுநாள் மறைந்தே போனார்கள். அவர்களை சரித்திரத்தில் எங்காவது ஒரு மூலையில் தேடினாலும் கிடைப்பதில்லை.

ஆனால் நபிமணி ரசூலுல் [ஸல்] அவர்களை சரித்திரம் கூடி கூடி வியந்து பேசுகிறது! வந்த தலைவரெல்லாம் வீழ்ந்து விட்டார்கள்.

நபிகள் நாயகம் [ஸல்] மட்டும் என்றும் விழா தலைவராக மக்கள் மனதிலும் சரித்திர ஏடுகளிலும் நிற்கிறார்கள்.

தம்பி தாஜுதீன் பாராட்டுகள், தொடருங்கள்.... அல்லாஹ் துணைநிற்பான் !

s.முஹம்மதுபாரூக்அதிராம்பட்டினம்.

Ebrahim Ansari said...

தம்பி தாஜுதீன் பாராட்டுகள், தொடருங்கள்.... அல்லாஹ் துணைநிற்பான் !
( Sorry for late reporting )

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வ அலைக்குமுஸ்ஸலாம் பாரூக் காக்கா,

தங்களின் கருத்துக்கு ஜஸக்கல்லாஹ் ஹைர்.

தங்களைப் போன்ற மூத்தவர்களின் கருத்துக்கள் என்னை மேலும் நிறைய தொகுத்தளிக்க நல்ல தூண்டுகோளாக உள்ளது. இன்ஷா அல்லாஹ் தொடரும் அவர்களின் கண்ணீர் மட்டுமல்ல அவர்களின் நற்பண்புகள் பற்றிய புதிய தொகுத்தளிக்க எண்ணியுள்ளேன்.

தங்களின் உடல் நலனைப் பேணிக்கொள்ளுங்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

பாசமுள்ள இ அ காக்கா, தங்களின் துஆவுக்கு மிக்க நன்றி,

ஜஸக்கல்லாஹ் ஹைர்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு