Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் – தொடர் – 12 9

அதிரைநிருபர் பதிப்பகம் | September 25, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

நபி(ஸல்) அவர்கள், அன்று மக்கா குரைஷிகளால் வெறுக்கப்பட்டவராக இருந்த பிலால்(ரலி) அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பிறகு அவர்களோடு எவ்வாறு நடந்து கொண்டார்கள், அவர்களுக்கு எவ்வகையான கண்ணியம் கொடுத்தார்கள் என்பதைப் பார்த்தோம் படிப்பினையையும் அறிந்து கொண்டோம்.

பிலால்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் எந்த அளவுக்கு மதிப்பு கொடுத்தார்களோ அதே அளவு கண்ணியத்தை கலீஃபாக்களான அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), இருவரும் கொடுத்தார்கள் என்பதை ஹதீஸ் ஏடுகளில் பார்க்கும் போது உண்மையில் நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்ற சத்திய சஹாபாக்கள் நபி வழியை கூட்டவும் குறைக்கவும் இல்லை என்பது மிகத் தெளிவாக அறிய முடிகிறது.

பிலால்(ரலி) அவர்கள் உபைத் இப்னு கலப் என்பவரிடம் அடிமையாக இருந்து எண்ணிலடங்காத் துயரங்களுடன், கஷ்டப்படுவதை கண்ட நபி(ஸல்) அவர்கள் மனம் பொறுக்காமல், பிலால்(ரலி) அவர்களை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்று, அன்று செல்வந்தராக இருந்த அபூபக்கர்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். இதற்கு தான் பொறுப்பேற்று, பிலால்(ரலி) அவர்களை விடுவிக்க உபைத் இப்னு கலபிடம் சென்றார்கள்.

உபைத் இப்னு கலப் அபூபக்கர்(ரலி) அவர்களிடம் கேட்கிறான், “பிலால்(ரலி) உங்கள் சகோதரர் தானே அவரை பணம் கொடுத்து வாங்குங்களேன்” என்று கூறினான். 

“எங்களுடைய பிலாலுக்கு (ரலி) எவ்வளவு பணம் வேண்டும்?” என்று கேட்டார்கள் அபூபக்கர்(ரலி). 

உபைத் இப்னு கலப் சொன்னான் “நான்கு ஊக்கியா” (உதாரணமாக 40,000 ரூபாய்). 

அவன் கேட்ட பணத்தை கொடுத்து பிலால்(ரலி) அவர்களை வாங்கி அடிமைத் தனத்திலிருந்து மீட்டெடுத்தார்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள். அப்போது உபைத் இப்னு கலப் சொன்னான் “இவரை ஒரு ஊக்கியாவுக்கு கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன்.” என்று கிண்டலாக அபூபக்கர்(ரலி) அவர்களைப் பார்த்து சொன்னான். 

பின்னர் அபூபக்கர்(ரலி) அவர்கள் சொன்னார்கள் “எங்கள் பிலால்(ரலி) அவர்களுக்கு நீ நூறு ஊக்கிய கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன் என்று சொன்னவுடன் உபைப் இப்னு கலப் வாயடைத்துப் போனான். உபைப் இப்னு கலபினால் ஒன்றுக்கு பெருமதியில்லாதவர் என்று சொல்லப்பட்ட பிலால்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்திற்காக 100 மடங்கு பெருமதியானவர் என்று சொல்லி அவரை விலைக்கு வாங்கி அடிமைத் தனத்திலிருந்து விடுவித்தார்களே அந்த சித்தீக் நம்முடைய முதல் கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்கள் உண்மையில் சரித்திரத்தில் நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு இடம் பெறும் மாபெரும் ஆட்சியாளார் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

இது போல் நபி(ஸல்) அவர்கள் மரணித்த பின்பு, கவலையின் சோகத்தால் “முஹம்மதுர் ரஸூல்லுல்லாஹ்” என்ற வார்த்தையை சொல்லும் தைரியத்தையே இழந்த பிலால்(ரலி) அவர்களை ஆறுதல்படுத்தி அபூபக்கர்(ரலி) அவர்கள் மீண்டும் மதீனாவில் நீங்கள் தான் பாங்கு சொல்ல வேண்டும் என்று வேண்டினார்கள். 

பிலால்(ரலி) அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களைப் பார்த்து “நீங்கள் என்னை அடிமைத் தனத்திலிருந்து விடுவித்தது உங்களுக்காகவா? அல்லாஹ்வுக்காகவா?” 

அபூபக்கர்(ரலி) அவர்கள் சொன்னார்கள் “நிச்சயம் அல்லாஹ்வுக்காக”. 

“அப்படியானால் என்னை விட்டுவிடுங்கள்” என்று பிலால்(ரலி) கூறினார்கள்..

‘நாம் நபி(ஸல்) அவர்களின் தோழர்கள், உங்கள் மேல் உள்ள நட்பின் அடிப்படையிலும், நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும்போது நீங்களல்லவா ஃபஜரிலும், லுஹரிலும், அஸரிலும், மஃக்ரிபிலும், இஷாவிலும் பாங்கு சொன்னீர்கள். அல்லாஹ்வுக்காக நீங்கள் மீண்டும் பாங்கு சொல்ல வேண்டும் என்று அன்போடும் மரியாதையோடும் கோரிக்கையை வைத்து’ பிலால்(ரலி) அவர்களை மீண்டும் பாங்கு சொல்ல வைத்தார்கள் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு அடுத்ததொரு அற்புதமான, கம்பீரமான ஆட்சியை செய்த உமர்(ரலி) அவர்கள். நீதி செலுத்துவதில் அற்புதமான மாமனிதராக வாழ்ந்துள்ளார்கள் உமர் (ரலி) அவர்கள். இஸ்லாமிய ஆட்சியின் ஆளுமை வளர்ந்து ஒரு மிகப்பெரும் வல்லரசாக மாறியிருந்த சமையத்திலும், அமீருள் முஃமினீன் உமர்(ரலி) அவர்கள் தனது இருக்கைக்கு அருகில் இரு இடங்கள் வைத்திருப்பார்களாம், அவைகளில் பிலால்(ரலி) அவர்கள் அமருவதற்கும், உஸாமா(ரலி) அவர்கள் அமர்வதற்கும் வைத்திருப்பார்களாம். 

ஒரு முறை பிலால்(ரலி) அவர்களுக்கு பிறகு இஸ்லாத்தை தழுவிய செல்வந்தர் அபூ-சுஃப்யான்(ரலி) போன்ற சஹாபிகள் உமர்(ரலி) அவர்களை சந்திக்க அனுமதி கோரி காத்திருந்தார்கள். அப்போது யாருடைய அனுமதியுமில்லாமல் இரு தோழர்கள் கப்பாப்(ரலி) அவர்களும் பிலால்(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களின் மாளிகைக்கு சென்று உமர்(ரலி) அவர்கள் அருகில் அமர்ந்தார்கள். பிற்காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற ஒரு சில சஹாப்பாக்களுக்கு இதனை கண்டதும் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இதனை அறிந்து கொண்ட உமர் (ரலி) அவர்கள்ட அந்த சஹாபிகளைப் பார்த்து கூறினார்கள். “தோழர்களே! நபி(ஸல்) அவர்கள் நம் எல்லோருக்கும் தான் இஸ்லாத்தை சொன்னார்கள். ஆனால் இந்த பிலால்(ரலி) அவர்களும், கப்பாப்(ரலி) அவர்களும் நம்மைவிட முதலில் இஸ்லாத்தை தழுவியவர்கள். இந்த பிலால் யார் தெரியுமா? என்னுடைய தலைவர் அபூபக்கர்(ரலி) அவர்கள் உரிமை விட்ட இன்னொரு தலைவர் பிலால்(ரலி) அவர்கள் தலைவரால் உரிமைவிட்ட தலைவர்” என்று சொல்லி கண்ணியப்படுத்தினார்கள்.

உமர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்திலும் நபி(ஸல்)  அவர்களின் பிரிவின் தாக்கத்தால், மதீனாவில் இருக்க முடியவில்லை என்று சொல்லி பிலால்(ரலி) அவர்கள் சிரியா நாட்டிற்கு குடிபெயர்ந்தார்கள். உமர்(ரலி) அவர்கள் ஆட்சியில் இஸ்லாம் வளர்ந்து பல நாடுகளை வெற்றி கொண்டதோடு பைத்துல் முகத்திஸும் வெற்றி கொள்ளப்பட்டது. இந்த சந்தர்பத்தில், இஸ்லாத்திற்காக அடிவாங்கி, மிதி வாங்கி, ஓடி ஓடி உழைத்த அந்த பிலால்(ரலி) தான் அமீருள் முஃமினீன் உமர்(ரலி) அவர்களுக்கு நினைவில் இருந்தது, பிலால்(ரலி) அவர்கள் சிரியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு “நீங்கள் தான் இங்கு பைத்துல் முகத்திஸில் பாங்கு சொல்ல வேண்டும்” என்று கூறினார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு பிலால்(ரலி) அவர்களின் பாங்கோசையை கேட்க ஆவளோடு தோழர்கள் அங்கு கூடியிருக்க. பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். ‘அஸ்ஹது அன்ன முஹம்மதர் ரசூல்லுல்லாஹ்’ என்ற வார்த்தை சொன்னவுடன் பிலால்(ரலி) அவர்களும் அழ ஆரம்பித்து விட்டார்கள், அதனைக் கண்ட உமர்(ரலி) அவர்களும், அங்கு கூடியிருந்த ஸஹாபாக்களும் அழுது விட்டார்கள் என்ற இந்த உணர்ச்சிப்பூர்வமான சம்பவங்களை ஹதீஸ் தொகுப்புகளிலிருந்து வாசிக்கும் போது நிச்சயம் நம் கண்களிலும் கண்ணீர் வந்தே தீரும். சுப்ஹானல்லாஹ்.

ஹிஜ்ரி 20வது வருடத்தில் தன்னுடைய 70வது வயதில் இந்த உலகை விட்டு பிரிந்தார்கள் பிலால்(ரலி) அவர்கள்.

அன்பானவர்களே, பிலால்(ரலி) அவர்களோடு நம் கலீஃபாக்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

அபூபக்கர்(ரலி) அவர்கள் செல்வந்தராக இருந்தும், தன்னால் உரிமையிடப்பட்ட பிலால்(ரலி) அவர்கள், இஸ்லாத்தை ஏற்றார் என்ற காரணத்திற்காகவும் நபி(ஸல்) அவர்களோடு ஒன்றாக இருந்தார்கள்  என்ற சிறப்பிற்காகவும் கண்ணியப் படுத்தினார்களே, இது போன்ற அபூக்கராக(ரலி) எத்தனை பேர் நம்மிடையே உள்ளோம்?

உமர்(ரலி) அவர்கள் வீரமிக்கவர்களாக அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாமல் இருந்தை அனைத்துலகும் நன்கறியும். பிலால்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார் என்ற காரணத்திற்காகவும் நபி(ஸல்) அவர்களோடு ஒன்றாக இருந்தார்கள் என்ற சிறப்பிற்காகவும் கண்ணியப்படுத்தினார்களே, இது போன்ற உமராக (ரலி) எத்தனை பேர் நம்மிடையே உள்ளோம்?

எத்தனை பேர் பிலால்(ரலி) என்ற தியாகியின் தியாகங்களில் எத்தனை துளிகளை நமது பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறியிருக்கிறோம், அதேபோல் நம் உள்ளம் பன்பட எண்ணியிருப்போம் சிந்திக்க வேண்டும்.

பிலால்(ரலி) அவர்களின் வாழ்விலிருந்து நாம் நிறைய படிப்பினை பெற வேண்டும். 

எந்த நிலையிலும் அல்லாஹ்வுக்கு இணைவைக்காத பிலால்(ரலி) போல் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.
தொடரும்...
M தாஜுதீன்

9 Responses So Far:

نتائج الاعداية بسوريا said...

சத்திய சஹாபாக்களின் தியாக வரிசையில், பிலால் (ரலி) அவர்களுக்கென்று தனி சிறப்பே இருக்கின்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

இருந்தாலும் சகோ தாஜுதீன் சொல்லும் விஷயங்களில் எனக்கு அவ்வப்பொழுது புதிதான ( பிலால் அவர்களை மீட்டெடுக்க அபூபக்கர் (ரலி) அவர்கள் கொடுத்த விலை ) போன்ற விஷயங்கள் தெரிய வரும்பொழுது அல்ஹம்துலில்லாஹ் இத்தொடர் மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு சில புதிய மார்க்க வரலாற்று சம்பவங்களை தந்து கொண்டுதானிருக்கின்றது.

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே .

அபு ஆசிப்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...


நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் வழியில் நாமும் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களை கண்ணியப்படுத்துவோம்.

பிலால் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களைப் போல இணைவைக்காத 100 % ஈமானோடு வாழ்வோம்.

அரிய அழகு தொகுப்புகளுக்கு நன்றியுடன் ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அ.கா.காக்கா:

தாங்கள் சொல்வது மிகச் சரியே ! பயான்களில் கேட்டதாக இருந்தாலும், எழுத்தில் கொண்டுவந்து அதனனை ஊன்றி வாசிக்கும்போது பச்சென்று ஒட்டிக் கொள்கிறது சம்பவங்கள் !

காதால் கேட்டதையும், விரும்பி வாசித்ததையும் கோர்வையாக எழுதிவிடலாம், ஆனால் இந்தப் பதிவு எடுத்துக் கொண்ட கரு நாம் பலன் பெறவும் நன்மைய நாடியும் எழுதுவதுதான் சிறப்பு !

Ebrahim Ansari said...

//இந்தப் பதிவு எடுத்துக் கொண்ட கரு // மாஷா அல்லாஹ் சிறப்புக்குரியது.

இந்தத் தொடருக்கான அங்கீகாரம் படிக்கும்போது வழிந்தோடும் கண்ணீர் .

"தூதர் முகம்மத் என்னும் பெயரைச் சொன்னதும் அவர் துடியாய்த் துடித்து கீழே வீழ்ந்து மூர்ச்சையாகினார்"

என்கிற சொற்றொடருக்கு என்றோ நாம் உணர்ச்சிவசப்பட்டு அழுது இருந்தாலும் இப்போது படிக்கும்போது உடல் சிலிர்க்கிறது.

sabeer.abushahruk said...

//"தூதர் முகம்மத் என்னும் பெயரைச் சொன்னதும் அவர் துடியாய்த் துடித்து கீழே வீழ்ந்து மூர்ச்சையாகினார்"//


ஆனால், நம் கண்மணி ரசூல் முஹம்மது (ஸல்) அவர்களின் பெயர் நம் காதில் விழும்போதெல்லாம் நாம் மறவாமல் ஸலவாத்து சொல்கிறோமா என்று சுய பரிசோதனை செய்து கொள்தல் அவசியம்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, தாஜுதீன்.

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைக்கும்
நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகள் ஸஹாபாக்களின் வாழ்க்கை வரலாறுகளிலும் நமக்கு படிப்பினைகள் நிறைய உண்டு நமக்கு அவைகளை படிப்பதற்கு இன்றைய காலகட்டங்களில் பெரிதும் சிறமப்பட வேண்டியதில்லை

தாஜுதீன் போன்ற இணைய எழுத்தாளர்கள் நமக்கு மிக இலகுவாக கிடைக்கின்றது இந்த காலகட்டத்தில் மக்களுக்கு இதை படிக்க நேரமில்லாமல் இந்த தொடருக்கு வெறும் 5 கமாண்டுகள்தான் வந்திருக்கின்றன.

இதே உலகலாவிய விஷயமாக இருந்தால் ரொம்ப சுறு சுறுப்பாக 150 கமாண்டுகள் வந்திருக்கும் அல்லாஹ் எல்லோருக்கும் இந்த தொடரின் வரும் கருத்துக்களை படித்து பயன் அடைய அல்லாஹ் உதவி செய்வானாக.

// “இவரை ஒரு ஊக்கியாவுக்கு கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன்.” என்று கிண்டலாக அபூபக்கர்(ரலி) அவர்களைப் பார்த்து சொன்னான்.//

பிலால் ரலியல்ல்லாஹ் அவர்களின் மதிப்பரியாத குறைஷி காபிர்கள் போன்றுதான்
இன்று உள்ளவர்களும் கருப்பானவர்களை யாரும் விரும்புவதில்லை அவர்களுக்கு நன்பர்கள்வட்டம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன

மட்டுமள்ளாது வளர்ந்த நாடான அமெரிக்காவில் கருப்பர்களுக்கு மதிப்பிருக்கின்றதா?
அதனால்தான் குற்றமிழைப்போரின் பட்டியலில் கருப்பர்கள் முதலிடத்தை வகுக்கின்றனர்

இப்படியெல்லாம் பிற்காலத்தில் கருப்பர்களுக்கு எதிராக உலக மக்கள் இயங்க கூடாது என்பதற்காகவே நபிகள் நாயகம் ரசூலே கரீம் (ஸல்) அவர்கள் கருப்பினத்தைச் சேர்ந்த பில்லால் ரலியல்லாஹு அன்ஹு அவர்ளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்ததை நாம் என்னிப் பார்க்கும்போது உள்ளம் நடுங்குகின்றது.

நம்முடைய மார்க்கம் எப்படிப்பட்ட மார்க்கம் என்பதை இதைவைத்தே மற்று மதத்தினரிடம் பிரச்சாரம் செய்யலாம்.

Yasir said...

மாஷா அல்லாஹ் தாஜூதீன்...உங்கள் எழுத்தின் வலு மனதில் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் அளவிற்க்கு தாக்கத் உள்ளது....தொடர்ந்து எழுதுங்கள் நிறையபேர் படிக்கின்றார்கள் படிப்பினை பெறுகின்றார்கள் உங்கள் ஆக்கத்தின் மூலம்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த பதிவை வாசித்து கருத்திட்ட சகோதரர்களுக்கும், வாசித்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைரா...

Anonymous said...

அஸ்ஸலாமுஅலைக்கும்!

//அபூபக்கர்[ரலி] செல்வந்தராய் இருந்தும்.............
அவர்கள்போல் எத்தனைபேர் நம்மிடையே உள்ளோம்?/

/உமர்[ரலி] வீரமிக்கவர்களா இருந்தும்.........
இது போல் எத்தனை பேர் நம்மிடையே உள்ளோம்?//

அவர்களை போல் இப்போது யாரும் ஒரு புரட்சி செய்தால் குடும்பத்தில் இருந்து தள்ளி வைப்பார்கள்!.

தீட்டு என்று வீட்டை விட்டு ஒதுக்கி வைப்பார்கள். இந்த வார்த்தையே வேறு யாரும் சொன்னால் காபீர்களின் வார்த்தை என்பார்கள்!

மொழிகளிலும் காபீர்களின் மொழி என்றும் ஈமான்தாரிகளின் மொழி என்றும் பிரிப்பது பேதமையே! எல்லாம் மொழிகளும் அல்லாஹ் படைத்தவையே!.

அவற்றில் பேதங்கள் பார்த்து வேதங்கள் ஓதுவது மனிதன் தொழிலாகி விட்டது. என்ன செய்யலாம்?

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு