Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒரு புத்தகம் பிறக்கிறது - தொடர் - 5 20

அதிரைநிருபர் பதிப்பகம் | September 08, 2013 | , , ,

ஒரு நாட்டின் மீது போர் தொடுத்துப் புகுந்த அந்நியப் படைகள் எதிரி நாட்டின் நூலகங்களை தீவைத்து சாம்பலாக்கினார்கள் என்பதை சரித்திரத்தில் படித்திருக்கிறோம். ஆனால், சொந்த நாட்டு நூலகத்தை...?

அமெரிக்காவின் பெரிய புத்தக கடைகளில் ஒன்றான BORDER மலேசியாவில் கிளை திறந்து வியாபாரம் செய்கிறது. அதுபோல் ஜப்பானிய புத்தக நிறுவனம் ஒன்றும் கிளை திறந்திருக்கிறது. மலேசியாவின் மூன்று பெரிய புத்தக நிறுவனங்கள் நாடெங்கும் பல தொடர் கடைகளைத் திறந்து வாசகர்களுக்குச் சேவை செய்கின்றன.


இப்போது புத்தகம் பற்றிய சில கொத்துக் கொத்து தகவல்களைப் பார்ப்போமா?

# பாபிலோனியர்கள், ஆசியர்கள், மேசொபோடோமீயர்கள் இம்மூவரும் நிறுவிய புரதான நூலகம் போல எகிப்து   தலைநகர் அலெக்சாண்டரியாவில் [இன்றைய கெய்ரோ] போட்டோளோமி சோட்டர் என்ற மன்னனும் ஒரு நூலகத்தை நிறுவினான்.

ஐரோப்பா கண்டத்தில் கி.பி.  பதினான்காம் நூற்றாண்டுகளில் மறுமலர்ச்சி தொடங்கியது. இந்தஇரண்டு நூற்றாண்டுகள் கலை இலக்கியங்களின் வசந்த காலங்கள். அவை வளம் பெற்று நலம் பெற்று பலம் பெற்று செழித்தோங்கி வளர்ந்தன.

# ரோமாபுரி வாட்டிகன் நகரில் 1447-ஆம் ஆண்டு ஒரு நூலகம் தொடங்கப்பட்டது. .ஐரோப்பா கண்டத்தில் இது மிக சிறந்த நூலகமாக விளங்கியது.                                                                  

# சீனர்களின் காகிதமும் ஜெர்மானியரியன் அச்சு இயந்திரமும் கூட்டணி போட்ட  பின் புத்தக வளர்ச்சி கிடுகிடுவென வளர்ந்தது. அதன் விளைவாக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டில் 1602-ம் ஆண்டிலிருந்து நூலகம் பெரும் வளர்ச்சி அடைந்தது.

# 18-ம் நூற்றாண்டின் துவக்கம்: ஐரோப்பா கண்டத்தில் புதுப் புது நூலகங்கள் தோன்ற ஆரம்பித்தன. அதன் விபரங்களை கீழே காண்போம்:-

[1] 1447ஆம் ஆண்டில் வாட்டிகன் நகரில் பழமை வாய்ந்த ஒரு நூலகம் நிறுவப்பட்டது.

[2] 1750ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் தொல் பொருள் காட்சி கூடத்தில் ஒரு நூலகம் தொடங்கப்பட்டது

[3] 1741ஆம் ஆண்டில் இத்தாலியில் தேசிய நூலகம் நிறுவப்பட்டது.

[4] 1741ஆம் ஆண்டில் ரஷியாவில் லெனின் கிராட் நூலகம் அமைக்கப்பட்டது.

[5] 1638ஆம் ஆண்டில் ஜான் ஹார்வார்ட் என்பவர் கொடுத்த 320 புத்தகங்களை மட்டுமே ‘ஆரம்ப முதலாக’ கொண்டு ஹார்வார்ட் பல்கலைக்கழக நூலகம் நிறுவப்பட்டது.

[6] 1815ஆம் ஆண்டு தாமஸ் ஜெபெர்சனின் சொந்த நூலகத்தை விலைக்கு வாங்கி "அமெரிக்கன் காங்கிரஸ் நூலகம்" ஆரம்பிக்கபட்டது. 

[7] 1883-ல் அமெரிக்காவில் நியூஹாம்ஸ் பயர் என்ற ஊரில் ஒரு நூலகம் பிறந்தது.

[8] 1313-75 இத்தாலி நாட்டுக்கார Giovanni Boccaccio என்பவர் எழுதிய Decameron என்னும் நூல் ஐரோப்பிய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாகும். நூறு சிறுகதைகளைக் கொண்ட இந்த புத்தகம் இத்தாலி புளோரன்ஸ் நகரில் பரவிய பிளேக்கு நோய்க்கு அந்த ஊர் மக்கள் அஞ்சி அருகிலுள்ள மலை மேல் தஞ்சம் புகுந்தார்கள். அங்கே அவர்கள் ஆடிய களியாட்டங்களையும் ஆபாச கூத்துக்களையும் இந்த நூல் சொல்கிறது.

[9] ஆங்கில கவிஞர் சாசரின் [Chaucer 1340-1400] Canterbury Tales] மிக நீண்டதும் புகழ்பெற்ற புத்தகமும் ஆகும். இது சாசரின் கடைசி புத்தகம், லண்டனிலிருந்து கண்டார் புரி நகருக்கு பயணம் செய்த போது முப்பது பயணிகள் சொல்லிய கதைகள் கொண்ட இந்த புத்தகம் படிக்க வேண்டிய சிறந்த புத்தகங்களில் ஒன்றாகும்.

[10] அச்சு வாகனம் ஏறிய முதல்புத்தகம் எது தெரியுமா? புத்தர் போதனைகள் கொண்ட ‘’வைர சூத்ரா’’ என்னும் புத்தகமே. எழுத்துகளை பலகைகளில் செதுக்கி மை தடவி அச்சிட்டார்கள். இதுதான் உலகில் அச்சிடப்பட்ட  முதல் புத்தகம். இதை  வெளியிட்ட முதல் ஆசாமி Wang cheih என்ற சீனர். ஆறு பக்கங்கள்  கொண்ட இந்த புத்தகம்எதற்காக வெளியானது என்று தெரியுமா? காலஞ்சென்ற தன் உறவினரின் ஆத்ம சாந்திக்காக wang cheih என்றசீனர் கி.மு 868ல் இதை வெளியிட்டார். உலகில்  அச்சு வாகனம் ஏறிய முதல் புத்தகமே ஆத்ம சாந்தி புத்தகமாய் போனது துரதிர்ஷ்டம்தான்.  எழுத்துகள் செதுக்கிய ஆறு மரப் பலகைகளையும் புத்தகத்தில் சிலவற்றையும் 1900-மாவது ஆண்டில் தர்கிஸ்தான் குகையில் கண்டு எடுத்தார்கள். ஆன்மாவின் சாந்திக்கு வெளியான முதல் ‘’புத்தகம்’ ஆறு பக்கங்களைக் கொண்டிருந்தது [இதனால் தான் இறப்பு வீட்டுக்கு சென்று இறந்தவரின் உறவினர்களுக்கு ’ஆறு’தல் சொல்கிறார்களோ!?]

ஆறு பக்கங்களை மட்டுமே கொண்ட ஒரு புத்தகம் வலது காலை எடுத்து வைத்து தன் கன்னிப் பயணத்தை அன்று தொடங்கியது. அந்த இடை நில்லா நீண்ட பயணம் இன்று கங்கை போல் காவிரி போல் பொங்கிப் பெருகி மனிதனின் அறிவு தாகத்துக்கு நீரும் பசிக்கு சோறும் போடுகிறது. அறிவுப் பசியாளர்களுக்கு ஆறுகறியுஞ் சோறும் போடும் “ஆனந்த பவன் என்றும் சொல்லலாம்.

அடுத்து மிகப் பிரபலமான பாரசீகக் கவிஞர் எழுதிய ஒரு புத்தகத்தின் துவக்கத்தோடு அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம்.

தொடரும்...
S.முஹம்மது ஃபாருக்

20 Responses So Far:

Yasir said...

கொட்டிக்கொடுத்தாலும் எளிதாக பெறமுடியாத தகவல்கள்...அறிவுக்களஞ்சியம் எங்கள் அமுதசரபி பாரூக் மாமாவிடம் இருந்து...வாழ்த்துக்களும் துவாக்களும்....

Ebrahim Ansari said...

//ஆறு பக்கங்களை மட்டுமே கொண்ட ஒரு புத்தகம் வலது காலை எடுத்து வைத்து தன் கன்னிப் பயணத்தை அன்று தொடங்கியது. அந்த இடை நில்லா நீண்ட பயணம் இன்று கங்கை போல் காவிரி போல் பொங்கிப் பெருகி மனிதனின் அறிவு தாகத்துக்கு நீரும் பசிக்கு சோறும் போடுகிறது. அறிவுப் பசியாளர்களுக்கு ஆறுகறியுஞ் சோறும் போடும் “ஆனந்த பவன் என்றும் சொல்லலாம்.//

நமது திருமண வீடுகளில் போடப்படும் அஞ்சு கறி சோறு போல் சுவையான வரிகள்.



Unknown said...

புத்தக வரலாறை அழகிய முறையில் சொல்லி வரும் பாரூக் காக்கா அவர்கள்
அவர்களுக்கே உரிய பாணியில் அங்கங்கே கொஞ்சம் நகைச்சுவையையும் தெளிப்பது போரடிக்காமல் படிக்க அவர்கள் கையாளு உக்தி என்றுதான் சொல்லவேணும்.

நீங்கள் நகைச்சுவையை அள்ளி வீசினாலும் வீசாவிட்டாலும் எனக்கென்னமோ போரடிக்கவில்லை. தெளிந்த நீரோடைபோல் , ஒரு சிறிய நீரோடையாக போய்க்கொண்டிருப்பது அழகு அழகு அழகு

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

இத்தனை தகவல்களும் திரட்ட வேண்டுமெனில் எத்தனை நூலகங்கள் ஏறி இறங்க வேண்டியிருந்திருக்குமோ!

மாஷா அல்லாஹ்! மேலும் மேலும் அறிவமுதம் திறட்டித் தர வேண்டுமாய்க் கேட்டுக்கொண்டு

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, மாமா.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பின் காக்கா, அஸ்ஸலாமு அலைக்கும்,

சுமக்க இயலாத புத்தகங்களின் சிந்தனைக் கருவூலங்களைத் தங்களின் மூளைக்குள் தேக்கி வைத்தவற்றை எங்கட்குப் பகிர்ந்தளிக்கும் பண்பிற்கு மிக்க நன்றி=ஜஸாக்கல்லாஹ் கைரன்.

யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்தால் தீக்கிரையாக்கப்பட்ட நூலகம் பற்றிய குறிப்பு மேற்காணும் பட்டியலில் இல்லையே?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்றைய இணையத்தில் தேடித்தான் எடுக்கனும் இத்தனை தகவல்களை, நேற்றே தோண்டியெடுத்து இந்தாருங்கள் எங்கு எங்கள் இருப்பிடத்திற்கே கொண்டு வந்து தரும்போது சுவைகூட்டி அழகு தருகிறீர்கள் !

உங்களிடம் கண்டு வியந்தது ! எக்காலத்திற்கும் பொருந்தும் எழுத்து நடையும், ஓட்டமும் உங்களோடு போட்டி போட இன்னும் என்ன செய்யனும் !?

ஒரு சில சந்தர்ப்பங்களில் எனக்கு சிலரிடமிருந்து மின்னஞ்சல்கள் வரும் அது 'ஒமலில் வாங்கி வரும் இறாலைப் போல் அலங்கோலமாக' அதனை பிரித்து வரிசைப் படுத்தி அமைதியாகத்தான் வாசிக்க முயற்சிப்பேன்... இல்லையேல் கண்டுகொள்ளவே மாட்டேன் !

ஆனால் உங்களின் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் ஏதேனும் ஒரு புது வார்த்தையோ அல்லது வாக்கியமே வசப்படும் !

மாஷா அல்லாஹ் !

உங்களின் வாசிக்கும் தாகமும் எழுதும் மோகமும் செயலில் வேகமும் செழிக்கனும் நீடூழி தொடரனும் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அறிவகம் பற்றிய அரிய அற்புத தகவல்கள்.
ஜசாக்கல்லாஹ் ஹைர்.

ZAKIR HUSSAIN said...

நான் ஏற்கனவே சொன்னதுதான், இந்த தொடர் புத்தகம் பற்றிய டாக்குமென்டரி தொகுப்பு.

Anonymous said...

//ஒமலில் வாங்கி வரும் இறாலை போல//
அன்புத் தம்பி நெய்னாதம்பி-அபுஇபுறாஹீம்!

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] உங்களின் ஆழ் மனதிலிருந்து ஊறி வரும் அன்பான பாராட்டும் வாழ்த்தும் என்னை ஈன்றெடுத்த தாயின் பாலூட்டுக்கு நிகராக எண்ணுகிறேன்! இது உள்ளத்தின் உள்ளிருந்து ஊறி வரும் உண்மை! உண்மையன்றி வெறும் புகழ்ச்சியல்ல!

என் இளமைக் காலத்து கனவே 'ஒரு பத்திரிக்கை தொடங்க வேண்டும்' என்பதே! ''எண்ணிய எண்ணியாங்கு எய்த' முடியவில்லை.கால வெள்ளச் சுழல் என் கட்டு மரத்தை எங்கோ கரை சேர்த்தது.

ஹையர்! இது அல்லாஹ்வின் நாட்டம். நான் தேடிய அரியாசனதிற்கு ஒரு 'சரியா' ஆசனமாக அ.நி.யில் ஒரு சரியான ஆசனம் கிடைத்ததே அல்லாஹ்வின் அருள்!

ஒரு முறை எழுதி பல முறை படித்து-பொருத்தமான வார்த்தைகளை
தேடி-தேடிப் பிடித்து எழுதுவதும் முடிந்த வரை எழுத்து, சொல், கருத்து பிழைகளைத் தவிர்ப்பதும் என் பழக்கம் ['கனி இருக்க காய் கவர்வதேன்]
ஒமலில் இறால் கொடுக்காமல் அதை 'கை'பார்த்து' பொரித்து கொடுத்து விடுகிறேன்! பொரித்த இறால் ருசித்தால் விலையே பா[ர்]க்காமல் எங்க கடையிலேயே சாப்பிடுங்கள்! வேறு கடைக்கு மாறிவிடாதீர்கள்! மீண்டும் சந்திப்போம்

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.>

Anonymous said...

//உங்களின் வாசிக்கும் தாகமும், எழுதும் மோகமும், செயலில் வேகமும் செழிக்கணும்; நீடூழி தொடரணும்//

இன்ஷா அல்லாஹ்! சுவாசிக்கும் வரை அதுதொடரும்!

ஆனால், அது பொடி நடையா நடந்து வரும்!
தெம்பு போனதால் கம்பு வந்தது!

ஆனால், இந்த 'வம்பு' செய்யும் பழக்கம் மட்டும் போகாமல் மரக்கொம்பில் ஏறிக் கொண்டு 'கீழே வருவேனா' என்று வம்பு செய்கிறது.

கம்பு கொண்டா அடிக்கிறது? என்னசெய்ய!
இது சமிபத்திய 'முஹல்லா' நினைவு !

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.

M.B.A.அஹமது said...

அன்பு மிக்க மூத்த காக்காவுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்

//ஆனால், இந்த 'வம்பு' செய்யும் பழக்கம் மட்டும் போகாமல் மரக்கொம்பில் ஏறிக் கொண்டு 'கீழே வருவேனா' என்று வம்பு செய்கிறது.//

அது தானே உங்கள் சிறப்பு அதை தானே நாங்கள் ரசிக்கிறோம் அது இல்லை என்றால் ரசனை இல்லாமல் போய்விடும் ..


//ஆனால், அது பொடி நடையா நடந்து வரும்!
தெம்பு போனதால் கம்பு வந்தது!//

என்னதான் கம்பு வந்தாலும் என்றும் 16 போல் இளமை ரசத்துடன் எழுதுவதில் எங்கள் மூத்த பாரூக் காகாவுக்கு இணை ஏதும் உண்டா உங்கள் பாணியிலேயே உங்களக்கு ஒரு கமெண்ட் அது என்ன புத்தகம் காந்தி காலத்தை சேர்ந்ததா பக்கத்தில் காந்தி கண்ணாடி ஒன்று உள்ளதே ..என்னதான் நாங்கள் கமெண்ட் போட்டாலும் உங்க நாசாக்கு ராக்கெட் அனுப்பிய கமெண்ட் மறக்க முடியாதது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கம்பு கொண்டா அடிக்கிறது? என்னசெய்ய!
இது சமிபத்திய 'முஹல்லா' நினைவு !//

ஹா ஹா ! வம்புக்கும் வருவோரையும் ரசிக்க வைக்கிறது உங்களின் தெம்பு !

crown said...

இந்த 'வம்பு' செய்யும் பழக்கம் மட்டும் போகாமல் மரக்கொம்பில் ஏறிக் கொண்டு 'கீழே வருவேனா' என்று வம்பு செய்கிறது.
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் . காக்கா ஒரு புத்தக தொடரின் மூலம் புத்தகமான உங்களை படிக்கமுடிவதுடன் அது எங்களின் இதயங்களிலும் பதிய(ம்)படுகிறது.உச்சானிக்கொம்பில் மேற்கண்ட வம்பு செய்யும் பழக்கம் உங்கள் கிளைகளுக்கும்(வாரிசுகள்)அதன் மிச்சம் வரும் எச்சத்திற்கும்=(சந்ததி)தொடரும் என நினைக்கவைக்கும் படி உங்கள் மகனாரின் எழுத்துக்களும் பறைசாற்றுகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் எங்கள் மூத்த சகோதரர் ஃபாருக் காக்கா,

மாஷா அல்லாஹ்! மேலும் மேலும் அறிவமுதம் திறட்டித் தர வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

ஜஸகல்லாஹ் ஹைரா...

Anonymous said...

//உங்களுக்கு ஒரு கமென்ட்// அது என்ன புத்தகம்! காந்தி காலத்தை சேர்ந்ததா?, பக்கத்தில் காந்தி கண்ணாடி ஒன்று உள்ளதே!//

ஆமாம் தம்பி M.B.A.அஹமத்!
.
அது அவர் காலத்து புக்கு மட்டுமல்ல காந்தியே தந்த புக்கு!.அவர் எழுதிய'' சத்திய சோதனை' 'அவரின்சுயசரிதம். தமிழ் மொழியாக்கம்'. ஒரு புத்தகம் பிறக்கிறது' கட்டுரையில் இதை குறிப்பிட மறந்து விட்டேன்.

நீங்கள் குறிப்பிட்டதும் அந்த நினைவு வந்தது குற்ற உணர்வு என் தொட்டது. ''காந்தியே கோட்சே சுட்டானா? இல்லே நானே சுட்டேனா''? என்று என்நெஞ்சே என்னை கேட்கிறது!.

மனசாட்சிக்கு பதில் சொல்ல பதில் இல்லை!. மன்னிப்பே அதற்கு மருந்து.
காந்தி என்னை மன்னிப்பார்!.

தென் ஆப்ரிக்காவில் அவரை அடித்த வெள்ளயனை மன்னித்தார்.
நம் நாட்டையே சுரண்டி, உண்டு கொழுத்து உயிர் பிழைத்து வாழ்ந்த வின்ஸ்டன் சர்ச்சில் ''Naked Fakir'' என்று அவரை அவமானப் படுத்திய போதும் அவர் கோபப்படாமல் சாந்தம் காட்டி பொக்கை வாய் சிரிப்பு சிரித்த அந்த பச்சை குழந்தை என்னை மன்னிக்காமலா போகும்! மன்னிக்கும்!.

அந்த மூக்கு கண்ணாடி அவர் தந்தது தான்! போட்டு பார்த்தேன்! எதிரில் வந்த எல்லோருமே கோட்சே போல் தெரிந்தார்கள். கழட்டி வைத்து விட்டேன். அன்று ஒரே ஒரு கோட்சேதான் காந்தியே சுட்டான். இன்று நாட்டில் நிறையவே 'கோட்சே'க்கள் இருக்கிறார்களாம்!

S.முஹமதுபாரூக்,அதிராம்பட்டினம்.

sabeer.abushahruk said...

//அந்த மூக்கு கண்ணாடி அவர் தந்தது தான்! போட்டு பார்த்தேன்! எதிரில் வந்த எல்லோருமே கோட்சே போல் தெரிந்தார்கள். கழட்டி வைத்து விட்டேன்//

ஒரு நாவலுக்குண்டான சுவாரஸ்யத்தை நாலே வரிகளில் தரும் லாவகம் தங்களுக்கு மட்டுமே சாத்தியம்.

M.B.A.அஹமது said...

மூத்த காக்காவுக்கு கமெண்டை படித்து சிரித்ததில் வைத்து வலி வந்துவிட்டது .தங்களக்கு ஒரு ஸ்பார்க்ளிங் கிடைத்தால் போதும் மடை திறந்த வெள்ளம் போல் வார்த்தைகள் வந்து கொட்டிகொண்டே இருக்கும் நீங்கள் ஒரு கலை களஞ்சியம். இங்கு கமெண்ட் இட்டவர்களின் கமெண்டை ஒரு ரீ சைக்ளிங் செய்து பார்த்தேன் ///அன்பின் சிகரம் ஊக்கதின் தந்தை
பாரூக் காக்கா அவர்களின் பாரட்டு பெறுவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன் உங்கள் பாராட்டு கிடைத்து என் கண்கள் இரண்டிலும் ஆனந்த கண்ணீர் ததும்புகின்றது//........மன்சூர் காக்கா சொன்னது

///கொட்டிக்கொடுத்தாலும் எளிதாக பெறமுடியாத தகவல்கள்...அறிவுக்களஞ்சியம் எங்கள் அமுதசரபி பாரூக் மாமாவிடம் இருந்து...வாழ்த்துக்களும் துவாக்களும்..///..யாசர் சொன்னது

அஸ்ஸலாமு அலைக்கும் எங்கள் மூத்த சகோதரர் ஃபாருக் காக்கா,

///மாஷா அல்லாஹ்! மேலும் மேலும் அறிவமுதம் திறட்டித் தர வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

ஜஸகல்லாஹ் ஹைரா...///தாஜுதீன் சொன்னது

//புத்தக வரலாறை அழகிய முறையில் சொல்லி வரும் பாரூக் காக்கா அவர்கள்
அவர்களுக்கே உரிய பாணியில் அங்கங்கே கொஞ்சம் நகைச்சுவையையும் தெளிப்பது போரடிக்காமல் படிக்க அவர்கள் கையாளு உக்தி என்றுதான் சொல்லவேணும்.

நீங்கள் நகைச்சுவையை அள்ளி வீசினாலும் வீசாவிட்டாலும் எனக்கென்னமோ போரடிக்கவில்லை. தெளிந்த நீரோடைபோல் , ஒரு சிறிய நீரோடையாக போய்க்கொண்டிருப்பது அழகு அழகு அழகு// அப்துல் காதர் காக்கா சொன்னது .

அன்பின் காக்கா, அஸ்ஸலாமு அலைக்கும்,

சுமக்க இயலாத புத்தகங்களின் சிந்தனைக் கருவூலங்களைத் தங்களின் மூளைக்குள் தேக்கி வைத்தவற்றை எங்கட்குப் பகிர்ந்தளிக்கும் பண்பிற்கு மிக்க நன்றி=ஜஸாக்கல்லாஹ் கைரன்.

யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்தால் தீக்கிரையாக்கப்பட்ட நூலகம் பற்றிய குறிப்பு மேற்காணும் பட்டியலில் இல்லையே? கவியன்பன் கலாம் காக்கா சொன்னது

இந்த 'வம்பு' செய்யும் பழக்கம் மட்டும் போகாமல் மரக்கொம்பில் ஏறிக் கொண்டு 'கீழே வருவேனா' என்று வம்பு செய்கிறது.
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் . காக்கா ஒரு புத்தக தொடரின் மூலம் புத்தகமான உங்களை படிக்கமுடிவதுடன் அது எங்களின் இதயங்களிலும் பதிய(ம்)படுகிறது.உச்சானிக்கொம்பில் மேற்கண்ட வம்பு செய்யும் பழக்கம் உங்கள் கிளைகளுக்கும்(வாரிசுகள்)அதன் மிச்சம் வரும் எச்சத்திற்கும்=(சந்ததி)தொடரும் என நினைக்கவைக்கும் படி உங்கள் மகனாரின் எழுத்துக்களும் பறைசாற்றுகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.எங்கள் கிரவுன் சொன்னது எங்கள் கிரவுன் எப்போதும் உண்மை தான் சொல்வார் கண்கள் இரண்டு தொடரில் கூட //அது சரி சில மனைவிமார்கள் கண்ணாலயே பார்த்து கணவனை ரிமோட் போல கண்ட்ரோல் பன்றாங்கலே அது எப்படி ??
------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.அட! அனுபவம் பேசுதே? இது உண்மையின் வாக்குமூலம்! நன்மையில்தான் முடியும்!இது வன்மை இல்லாத கண்மை!கண்ணியமிக்க பெண்மை! எவ்ளோ பெரிய உண்மையை பளிச் என்று சொல்லி உள்ளார் பாருங்கள் ....காக்கா கடைசியாக ஒன்று கண்ணாடியை கலட்டி வைத்தவரை சரி இல்லை என்றால் நம்ம காந்தியை சுட்டவன் இவன் தான்என்று எதிரில் அனைவரையுமே போட்டு தள்ளி இருப்பீர்கள் ஏன் என்றால் எதிரில் வரும் அனைவரும் கோட்செவாக தெரிவதால் ஆமா உங்கள் மச்சான் இப்ராகிம் அன்சாரி காகா கூடவா அப்படி தெரிந்தார்கள் ...இப்படி ஒரு இளைஞர் பட்டாலாதையே தன் எழுத்தின் வசீகரத்தால் கட்டிபோட்டுல்லீர்கள் இன்ஷா அல்லாஹ் இது தொடர துவா செய்வோம் ........

M.B.A.அஹமது said...

எழுந்து நடந்தால் இமய மலையும் நமக்கு வழி கொடுக்கும்
உறங்கி கிடந்தால் சிலந்தி வளையும் நம்மை சிறை பிடிக்கும் சமீபத்தில் வலைதலமொன்றில் கண்டது

KALAM SHAICK ABDUL KADER said...

அறிவு நீர் தெளித்து

மூளைச் செடியை

பக்குவமாய்

வளர்க்கிறது

நல்ல புத்தகங்களின்

ஆசான் தோழமை

Anonymous said...

அஸ்ஸலாமுஅலைக்கும்!.

/ஒருபுத்தகம்பிறக்கிறது[தொடர்-5]/

சிரமம் பாராமல் பாராட்டுக்கள் கூறிய அன்பு நெஞ்சங்களுக்கு என் இதயங்கனிந்த நன்றியை கூறிக்கொள்கிறேன்.

இன்ஷா அல்லாஹ்!. மீண்டும்சந்திப்போம்

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு