Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும்..! - தொடர் - 3 36

அதிரைநிருபர் பதிப்பகம் | September 16, 2013 | , , , , ,

பேசும் கண்கள்

பார்வைகள் பலவிதம் அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம் ஒவ்வொருத் தரும் பார்க்கும் பார்வைகளிலே அவர்கள் எண்ணங்களை புரிந்து கொள்ள முடிகின்றது. அவரவர்கள் பார்வைக்கு தகுந்தாற்போல் அர்த்தங்கள் மாறு படுகின்றன கோபப் பார்வை, சந்தேகப் பார்வை, முரட்டுப் பார்வை, சந்தோஷப் பார்வை, ஆச்சரியப் பார்வை, காமப் பார்வை, திருட்டுப் பார்வை என நிறைய இனம் பிரிக்கலாம். ஆக கண்களினால் கோபம், சந்தோஷம், துக்கம், காமம், சந்தேகம் எல்லா வற்றையும் கண்களே பேசி முடிக்கின்றது. ஆனால், இறைவனின் கட்டளைகள் அடிக்கடி மறக்கடிக்கப்பட்டு அந்தப்பார்வை தெளிவற்ற பார்வையாக பார்ப்பதால் தனது வாழ்க்கையில் எத்தனை மாற்றங்களை பலர் சந்திக்க நேரிடுகின்றது. 

காமப்பார்வை

சில பெண்களின் காமப்பார்வை ஒன்றே போதும் ஆண்களை வீழ்த்த, கண்களில் சாரயத்தை வார்த்து, எதிர்ப்பட்ட அல்லது தான்  விரும்பும் ஆண்களுக்கு அருந்தச்செய்து,  போதையூட்டி, காமுகராக்கி, கலியாட்டம் ஆடத்துடிக்கும் காமுகிகளிடம் தமது வாழ்க்கையில் தடம் புரண்டவர்களும் வாழ்க்கையை தொலைத்தவர்களும், வாழ்க்கையில் மாட்டிக் கொண்டவர்களும்  எண்ணிலடங்காது. இப்படிபட்ட காமப் பார்வைதான் இளைஞர்களையும், மாணவர்களையும், வாலிபர்களையும் சமுதயாத்தில் உண்மையிலேயே நல்லவனாக வாழ்ந்து வருபவர்களையும், ஆன்மீக வாதிகளையும், சமுதாய உழைப்பாளிகளையும், அரசியல் வாதிகளையும், வேலைக்காரர்களையும், தொழிளாலிகளையும் இப்படி யாரையும் விட்டு வைக்காது ஏற்கனவே பல ஊடகங்களால் காம இச்சைகளில் தூண்டபட்டிருக்கும் இவர்கள் அனைவருக்கும் இது ஒரு வடிகால் போன்று அமையும் இந்த பார்வையின் தாக்கம்  அவர்களை ஒரு வினாடியில் விழவைத்து விடுகின்றது.

வலையில் விழுந்தவர்களின் சந்திப்பு கள்ளத்தனமாக தொடர்கின்றது இருவரும் தவறிழைக்கும் போதோ அல்லது தவறிழைக்க முனையும் போதோ பார்க்க கூடாத கண்களிடம் மாட்டிக் கொண்டு அவர்களின் மானம் போய், பொதுமக்கள் மத்தியில் கட்டிவைத்து அடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு அவரின் பெயர் சமூகத்தில் கெட்டுப்போகும் வரையிலும் அந்த “காமப்பார்வை” உறுதுணையாக இருந்து சம்பந்தப்பட்டவர்களை படுபாதாலத்தில் கொண்டு போய் தள்ள இறுதிவரையும் வேலை செய்யும் என்பதை ஒவ்வொருத்தரும் அறிந்திருந்தும், அந்த “காமப் பார்வைக்கு” உட்படுவோர், காமப் பர்வை வீசப்படும் நேரத்தில் இதை பற்றியும் அல்லது வேறு எதை பற்றியும் சிந்திக்கவிடாமல், அவர்களின் மூளை, அவர்களின் எல்லா செயல்களையும் செயல் இழக்க செய்துவிட்டு ஸ்பெஷலாக காமப்பார்வையின் காரணமாக காமத்திற்கு மட்டும் மூளை மிகவேகமாக வேலை செய்ய ஆரம்பித்து சம்பந்தப்பட்டவர்களை படுபாதாளத்தில் விழவைக்கும்.  இப்படிபட்ட தவறான நிகழ்வுகளுக்கு மிகவும் முக்கிய காரணமாக அமைவது இந்த கண்கள் இரண்டினால் வீசப்படும் காமப்பார்வைதான் என்பதை யாரும் மறுக்க முடியாத கசப்பான உண்மை.

“பெண்களின் காமப்பார்வை” என்பது ஆண்களை விஷம்வைத்து சாகடிக்கும் கூரிய வாள். 

“பெண்களின் காமப்பார்வை” என்பது இரத்தமின்றி காயமின்றி ஆண்களை வீழ்த்தும் மிகப்பெரிய ஆயுதம்.

அதனால்தான் சிலபேருக்கு சில காரியங்கள் நடக்க வேண்டுமென்றால் பெண்களை ஏவி விட்டு காய் நகர்த்தும் அவலங்களும் நிறைய நடக்கின்றன. அந்த காமப்பார்வையில்  தூவும் துளி விஷம், ஆண் வர்கத்தை சாகடித்துவிடுகின்றது.

இந்த பார்வை மனிதனின் பாதைகளை மாற்றி அமைத்து விடுகின்றன.

ஆண்களுக்கு இந்த காமப்பார்வை இல்லை காரணம் இவனுக்கு ஒரு பார்வையை அடுத்து மறுபார்வையே போதும் இவன் விழுவதற்கு அதனால்தான் இருபாலருக்குமே பார்வையில் இத்தனை பிர்ட்சனைகள் இருப்பதால் அடிக்கடி நமக்கு பார்வையை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்று போதிக்கப்படுகின்றது. இறைவனும் அவனது மறையில் கூறுகின்றான்.

‘அவர்கள் தங்கள் பார்வையை கீழ்நோக்கியே வைத்து, கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும்.’ (அல்குர்ஆன் 24:31)

என்ற இறைவசனத்தின் மூலம் உத்தரவிட்டது. பாவங்களில் பெரும்பாலனவை பார்வையாலேயே நிகழ்கின்றன. தீய பார்வையால் தீய உணர்வுகள் ஏற்பட்டு பாவமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். 

அந்த தீய உணர்வே ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளவே‘பார்வையை தாழ்த்தி கற்பைக்காத்துக் கொள்ளவும்’ என அருள்மறை சுறுகிறது. கண்களினால் விபரீதங்கள் ஏற்படும் என்பதை முன்னெச்சரிக்கை செய்வதற்காகவே, ‘கண்களும் விபச்சாரம் செய்கின்றன.  கண்களின் விபச்சாரம் பார்வை  என்றார்கள் கருணை  நபி(ஸல்) அவர்கள்.   ஜரீர் இப்னு அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம்,  திடீரெனப்படும் பார்வையைப் பற்றிக் கேட்டபோது, ‘உம் பார்வையை (உடனேயே) திருப்பிக் கொள்ளும்’ என சட்டெனப் பதில் சொன்னார்கள்.  திடீர் பார்வை தீய எண்ணம் எதுவுமின்றி ஏற்படுவதால் குற்றமில்லை. அதைத் தொடர்ந்து மீண்டும் பார்க்கும் பார்வைதான் பாவமானது என்றார்கள். மனிதன் தான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அவனே பொறுப்பாகிறான்.

‘நிச்சயமாக காது, கண், இருதயம் ஆகிய ஒவ்வொன்றுமே (அதனதன் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும் (அல்குர்ஆன் 17:36) 

என்ற இறைவசனம் இங்கு சிந்திக்க தக்கதாகும். பர்தா (ஹிஜாப்)வுடைய ஆயத் அருளப்பட்ட வேளை, ஒரு நாள் நபி நாயகம்(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரான உம்முஸல்மா(ரலி), மைமூனா(ரலி) ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.  அப்போது அங்கே கண் தெரியாத அப்துல்லாஹ் இப்னு உம்முமக்தும்  வந்தார்கள். உடனே அவ்விருவரையும் வீட்டினுள் செல்லுமாறு உத்தரவிட்டார்கள் நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள். அவருக்குத்தான் கண் தெரியாதே! எங்களைப் பார்க்கவும் தெரிந்து கொள்ளவும் முடியாதே! யாரஸுலல்லாஹ்!’ எனக் கேட்டார்கள் மனைவியர் இருவரும். ‘சரிதான், நீங்களிருவரும் குருடர்கள் இல்லையல்லவா? நீங்கள் அவரைப் பார்க்க மாட்டீர்களா?  எனத் திருப்பிக் கேட்டதும் உள்ளே சென்று மறைந்து கொண்டார்கள். - (திர்மிதீ, நஸயீ,அபூதாவூது) 

இந்த உத்தரவின் மூலம் ‘பெண்கள் அந்நிய ஆண்களைப் பார்ப்பது கூடாததைப் போலவே, ஆண்களும் அந்நியப் பெண்களைப் பார்ப்பது கூடாது என இஸ்லாம் தடைவிதிக்கிறது. இருவரது பார்வையையும் சைத்தான் தன் வலையில் வீழ்த்தப் போதுமானவன். எனவே, தீய உணர்வுகளை ஏற்படுத்தும் பார்வையிலிருந்து தற்காத்துக் கொள்வது ஒவ்வொருவரது கடமையாகும். 

மிகவும் கூடுதலான பாவங்கள் நம் கண்களாலேயே ஏற்படுகின்றன.. நாம் பார்க்கும் ஒவ்வொரு பார்வைக்கும் பல கட்டுப்பாடுகள் உண்டு. அந்த கட்டுப்பாடுகளை நாம் சரியாக கடைபிடித்தாலே பாவங்கள் இன்றி நிச்சயமாக நாம் மேன்மை அடைய முடியும்.

வெளியில் செல்லும்போதும், மற்றவர்களின் வீட்டிற்கு செல்லும்போதும் கடைத்தெருவிற்கு செல்லும்போதும் நம்முடைய பார்வை எப்படி இருக்கவேண்டும் என்பதை ரசூலுல்லாஹ் நமக்கு காட்டி தந்திருந்தாலும் தற்போது அவற்றை  தப்லீக் இயக்கத்தில் கற்பிப்பதோடு நின்று விடாமல் நடைமுறை படுத்தி செயல் வடிவம் கொடுத்து அதன் படி நடந்து வருகின்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. 

உண்மையிலேயே அது வரவேற்கதக்க விஷயம். சில நல்ல விஷயங்களை அது எந்த இயக்கங்கள் சொன்னாலும் செய்தாலும் அது அல்லாஹ் அல்லாஹ்வின் ரசூலின் சொல், செயல், அங்கீகாரம் இவற்றுக்கு மாறுபடாமல் இருக்கும் வரை அதை நாமும் பின்பற்றலாம். அந்த வகையில் தப்லீக் இயக்கம் நடைமுறைபடுத்திக் காட்டும் இந்த விஷயத்தை ஒதிக்கிவிட முடியாது. அனால் தப்லீக் இயக்கத்தின் மற்ற சில விசயங்கள் சர்ச்சைக்குறியதே என்பது ஏகோபித்த கருத்து. நல்லதை மட்டும் நாம் எடுத்துகொள்வோம். 

இத்தொடரின் தொடரின் தொடர்ச்சியாக இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் தடை விதிக்கும் காரியங்களை தடை மீறி பார்க்கும் போது சவூதி அரேபியாவில் நடைபெறும் சில நிகழ்வுகளை காண்போம்.
(தொடரும்)
அதிரைமன்சூர் 

36 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். மச்சான் இந்த காமப்பார்வையை படிக்கும் போது போர்வை போர்த்தி உறங்க வேண்டிய சாமத்தில் எழுதுகிறேன்!பார்வைகள் பலவிதம் என்பதை சொன்ன நீங்க இந்த பார்வை பலானது என சொல்லிவிளக்கியவிதம்'அவற்றை தப்லீக் இயக்கத்தில் கற்பிப்பதோடு நின்று விடாமல் நடைமுறை படுத்தி செயல் வடிவம் கொடுத்து அதன் படி நடந்து வருகின்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. பப்ளிக்கில் எப்படி நடக்கனும் என்று தப்லிக்கில் சொன்னாலும் சிலர் தாம் ரிபப்ளிக்கா நினைத்து அதை பின்பற்றாது பாவ செயலே!

Shameed said...

காம பார்வை பற்றி காமா எழுதிய எழுத்துக்கள் கண்களுக்கும் நன்மை பயக்கும் வாழ்க்கைக்கும் நன்மை பயக்கும்

Shameed said...

எனக்கு ஒரு டவுட் முதல் படம் கண்ணுக்குள்ள வாயா வாய்க்குள்ள கண்ணா? .

crown said...

Shameed சொன்னது…

எனக்கு ஒரு டவுட் முதல் படம் கண்ணுக்குள்ள வாயா வாய்க்குள்ள கண்ணா? .------------------------------------------
கண்ணுக்குள் வாயா என ஆண்களை அழக்கும் கண்ணின் வாயில் அது(வாசல்). ஆகவே கண்ணில் வாய் என்பதே சரி!

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

இப்போதுதான் புரிகிறது. கண்ணதாசன் ஏன்

கண்களே! கண்களே ! காதல் செய்வதை விட்டு விடுங்கள்
பெண்களே! பெண்களே! வாலிபரைக் கொஞ்சம் வாழவிடுங்கள் - என்று எழுதினார் என்று.

இராமயணத்தில் ,
அந்தக் காவிய கதாநாயகன் ஆன
அண்ணலும் நோக்கினார் ! அவளும் நோக்கினாள்! கண்கள் இரண்டும் ஒன்றை ஒன்று கவ்வின என்பதாக கம்பன் வர்ணிப்பதாகக் கூறுவார்கள்.

கிளியோபாட்ராவின் கண்களுக்கு ஒரு சாம்ராஜ்யமே மண்டியிட்டதாகக் கூறுவார்கள்.

பெண்ணின் கண்பார்வையில் மின்னல் வெட்டியது என்றும் கூறப்படுகிறது.

கண்ணால் வலைவீசினாள் என்று கதைகளில் வர்ணனை வரும்.

மேலும் ஒரு கவிதை படித்தேன். அது.....இது

பெண்களின் கண்கள் வளைவுகள்
ஆதி அந்தமில்லா வட்டங்கள்
இவர்களின் கண்கள்
கவிஞர்களால் படைக்கப்பட்டவை
வாயைவிட இவைகளே
அதிகம் பேசுபவை

வேற்று கிரகத்திலேயே விட்டாலும்
கண்ணின் மொழியிலேயே
கவிதைத்தொகுப்பு வெளியிட வல்லவை .

ஈர்ப்புவிசை
புவியில் மட்டுமில்லை
புன்னகையுடன் கூடிய பார்வையிலும்தான்

இவை
கடவுச்சொல்லை ஒரு சிலருக்கு மட்டும் தந்துவிட்டு
கதவைச் சாத்திக் கொள்பவை

மெல்லினத்தாள் வைத்திருக்கும் வல்லினம்

ஒரு பொருட் பன்மொழி.

முதலில் பிணி
பின் அதுவே மருந்து

மின்சார நிலையம். - எங்கோ யாரோ எழுதப் படித்தது ( நினைவுகளில் இருந்து)

sabeer.abushahruk said...

காமப் பார்வை ஒரு கருந்தேள்
ஜாம நேரம் வரும்தேள்

சொடுக்குப் போடும் நேரத்தில்
கொடுக்குப் பார்வையால் கொட்டி
கடுக்கக் கடுக்க
படுக்கப்போடும் விஷம்

இருப்பினும்
கண்ணில் மட்டுமே கொட்டும் ஆதலால்
தவிர்த்துத் தப்பலாம்

Ebrahim Ansari said...

கயற்கண் என்று சொன்னால்
கயலதில் கருமை இல்லை
மயிற்கண் என்று சொன்னால்
மயிலதில் வெண்மை இல்லை
பங்கயற் கண்ணி என்றால்
பங்கயம் மறுநாள் கூம்பும்
அங்க யற்கண்ணி என்றால்
கேட்டதே கண்டதில்லை
வாள்விழி என்று சொன்னால்
வணங்குதல் வாளுக்குண்டு
வேல்விழி என்று சொன்னால்
கொல்லலே காதலன்று
நீள்விழி என்று சொன்னால்
மதிமுகம் குறைந்து போகும்
அல்விழி என்று சொன்னால்
சேய்மையில் மென்மை இல்லை
கதிரொளிப் பார்வை என்றால்
வெம்மையே குளிர்வு இல்லை
நிலவொளிப் பார்வை என்றால்
குளிர்மதி குறைந்து போகும்
அம்பென பார்வை சொன்னால்
ஒன்றையே அம்பு கொள்ளும்
வம்புலிப் பார்வை என்றால்
வீரமே காத்தலன்று
மலர்விழி என்று சொன்னால்
மலரது மறுநாள் வாடும்
அலற்விழி என்று சொன்னால்
துயிலயில் தூய்மை இல்லை
மான்விழி என்று சொன்னால்
மருளுதல் அதனிர்கில்லை
விண்மீன் விழிகள் என்றால்
பகலதில் காணல் அரிது
அதனால்
மாயக் கண்கள் என்றே
அந்த
மாயவள் கண்ணைச் சொல்வேன்


டாக்டர்.கலைவாணன்

Aboobakkar, Can. said...

சகோ .மன்சூர் அவர்கள் நிச்சயமாக கிட்டப்பார்வை ,தூரப்பார்வைகளை விளக்கிஒரு ஆப்டீசியன் ஆவப்போவது உறுதி ............அல்லாஹ்வின் கோபப்பார்வையில் நம்மை வல்ல நாயன் பாது காப்பானாகவும் ........அமீன் ........

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//
‘நிச்சயமாக காது, கண், இருதயம் ஆகிய ஒவ்வொன்றுமே (அதனதன் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும் (அல்குர்ஆன் 17:36) //

மன்சூர் காக்கா, அஸ்ஸலாமு அலைக்கும்

சரியான வசனத்தை எடுத்துக்காடியுள்ளீர்கள்... இந்த வசனத்தை வாசித்த பின் கொஞ்ச நேரம் கண்ணை மூடி யோசித்துப்பார்த்தால், உண்மையில் உள்ளம் நடுங்குது.

ஜஸக்கல்லாஹ் ஹைரா

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கண்கள் இரண்டும்..! இதில் உங்கள் பார்வை ரொம்ப ஆழமானவை.

அப்படின்னா "கண்ணூறு" பற்றிய உங்க பார்வை என்ன?

KALAM SHAICK ABDUL KADER said...



மடமை யழித்திடும் மார்க்கத்தைப் பேணும்
கடமை எமக்குற்ற கண்

Aboobakkar, Can. said...

தம்பி ஜஹபர் அவர்களின் கண்ணூறு சந்தேகம் தீர .......
அடுத்தவீட்டுகண்ணு அவிஞ்சு போக ........
பக்கத்துவீட்டு கண்ணு பாலா போக ......
எதிர்த்த வீட்டு கண்ணு எரிஞ்சு போக .....
என்று ஏதோ ஒரு வீட்டில் களிப்பு களித்ததை பார்த்த ஞாபகம்..........

Anonymous said...

பெண்களின் கண்களிலும் அங்கங்களிலும் இயற்கையாகவே ஒரு கவர்ச்சியுண்டு. இந்த கவர்ச்சியில் தான் ஆண்கள் வீழ்கிறார்கள். பள்ளத்தை தேடிப் போனவன் பள்ளத்தில் வீழ்ந்தால் பள்ளத்தை குறை சொல்லலாமா?
எனக்கு தெரிந்தவரை ஆண்களே பெண்கள் மீது மன்மதபானம் தொடுக்கிறார்கள்.

''டேய்! ஒன்னு தனியா போவுதுடா! ஃபாலோ பண்ணுவோமா?'' 'என்று தெண்டச் சோறு தெரு பொறுக்கி கூட்டம் நிறையவே உண்டு.

முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன் போலீசில் புகார் கொடுக்கப்போன
பெண்ணை அலங்கோல படுத்திய செய்தி நாடெங்கும் பரவி ''காவல் நிலையமா? காதல் நிலையமா?' 'என்று காவல் நிலையம் முன் போஸ்டர்கள் ஒட்டி ஆர்பாட்டம் நடந்தது!

சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை குண்டுவைத்து தகர்த்தார்கள். காவல் நிலையத்தில் கற்பழிப்பு தொடர்ந்தது.வேலியே பயிரை மேய்ந்தது!.

வேலிக்கும் ஒரு ஜாலி வேண்டாமா?அதன் பின்னே மகளிர் காவல் நிலையம் திறக்கப்பட்டது. போலீஸ் வருவாயில் பெண்களுக்கும் பங்கு கொடுப்பதுதானே ஞாயம்!

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.

ZAEISA said...

அஸ்ஸலாமு அலைக்கும்,கண்கள்,மற்றும் அதன் பார்வை பற்றி அழகான முறையில் விளக்கமாக எழுதியிருப்பது நன்று.இன்னும் எழுதுங்கள்.ஆனால்,தப்லீக்கைப் பார்க்கும்போது மட்டும் உங்கள் பார்வையில் கோளாறு எனப்படுகிறது.தயவு செய்து தப்லீக்கை குறைத்து மதிப்பிட வேண்டாம்.

KALAM SHAICK ABDUL KADER said...

\\ஒடுக்கப்பட்ட இஸ்லாமிய பெண்ணாம்
ஹிஜாப் அணிந்திருக்கும் நான்...!!
ஏளன பார்வையுடன் என்னை கடந்து செல்கிறாள்..
தொடை தெரிய உடை அணிந்த
நவநாகரீக நங்கை ஒருத்தி...
என் மார்க்கம் எனக்களித்த
சுதந்திரத்தின் எல்லை பற்றி
அவளுக்கெங்கே தெரிந்திருக்க போகிறது.... பாவம்....!
கண்ணியம் காக்க நான் அணியும் உடை...
உன் கண்ணை உறுத்துகிறதே பெண்ணே...
உன் நாகரிக உடையால்
பல ஆண்களின் கண்களுக்கு இரையாகி....
அவர்களின் கனவில் தற்காலிக
மனைவியாகி போகின்றாயே...!!
இதுதான் உன் சமுதாயம்
உனக்களித்த சுதந்திரமா?
இல்லை அந்நிய ஆண்களை கவர வேண்டும் என்ற
நோக்கில் உடல் அழகை கடை விரித்து
காட்டும் கூட்டத்தை சேர்ந்தவளா நீ ?
அப்படி என்றால் எந்த அருகதையும் இல்லை"
உனக்கு என் ஹிஜாப் பற்றி பேச.....!!!!
ஆண்களின் கண்களுக்கு நீ ஒரு காட்சி பொருள்.....
ஆனால் நானோ பாதுகாக்கப்பட்ட பொக்கிஷம்....!!
வக்கிர புத்தி கொண்ட ஆண்களின் கழுகு பார்வையில்
இருந்து என்னை தற்காத்து கொள்ள.....
என் மார்க்கம் எனக்களித்த கேடயம் ஹிஜாப் ...!!
என் அறிவும் திறமையும் போதும் உலகை வெல்ல.....!!!!
தெரிந்து கொள் முட்டாள் பெண்ணே....
நான் ஒடுக்கப்பட்டவள் அல்ல...
பாதுகாக்கப்பட்டவள்...........!!!!!!\\


முகநூலில் படித்தது.

Yasir said...

மாஷா அல்லாஹ்..கண்னைப்பற்றிய அறிவியல் விசயங்களை மட்டுமே எழுதாமல் அந்த கண்ணைக்கொண்டு வரும் நன்மை/ தீமைகளையும் அது சம்பந்தமான குர் ஆன் ஆயத்துக்களையும்/ஹதீஸ்களையும் எழுதுவது கட்டுரைக்கு அழகு சேர்ப்பதோடு ஒரு வித அச்ச உணர்வையும் ஏற்படுத்துகின்றது....நன்றி மன்சூர் காக்கா

Anonymous said...

பெண்களுக்கு பர்தாவைப் பரிந்துரைக்கும் குர்ஆன் (24:31) வசனத்திற்கு முந்தைய வசனம் ஆண்களையும் தங்களது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறது (24:30). இதை உணராத சிலர்தான் இஸ்லாம் ஆணாதிக்க மார்க்கம் என்பர்.காரணம் பெண்ணுக்கு மட்டும் பர்தாவை வலியுறுத்துகிறதாம்! இவர்களின் பார்வைக் கோணலுக்கு நக்கீரன் இதழில் வந்துள்ள கீழ்கண்ட பெட்டிச்செய்தி உதவக்கூடும்.

செப்டம்பர் 1- ஆம் தேதிமுதல் கல்லூரி மாணவிகளுக்கான தமிழக அரசின் ஆடைக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.மேற்கத்திய நாகரிகம்? என்ற பெயரால்,ஆடையளவு குறையக்குறைய பெண்ணுரிமை கூடுவதாகக் கருதும் பெண்களிடையே இதற்கு எதிர்ப்பு இருந்தாலும் பரவலாக அரசின் இந்த கட்டுப்பாடுக்கு வரவேற்புள்ளது. இதுகுறித்து நக்கீரன் (13/09/2013) இதழில் பிரபல பாலியல் நிபுணர் மருத்துவர் நாராயன ரெட்டி கூறும்போது, " ஒரு பெண் அரைகுறை ஆடையுடன் வரும்போது ஆணுக்கு ஏற்படும் பாலியல் உணர்வுபோல, ஆண் அரைகுறை ஆடையுடன் வரும்போது அதே உணர்வு பெண்ணுக்கு ஏற்படுவதில்லை" என்கிறார்.

பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் அபிலாஷா "ஏற்கனவே சினிமா, டிவி, இண்டர்நெட் போன்ற ஊடகங்களால் செக்ஸுவலாகத் தூண்டப்பட்டிருக்கும் ஆண், அதேபோன்று ஒரு பெண் அரைகுறை ஆடையுடன் வரும்போது தனது வக்கிரத்தைப் பிரயோகித்துவிடுகிறான்" என்கிறார்.

தவறானப் பார்வை-பெண்களைவிட ஆண்களின் கண்களுக்கே அதிகம் என்பதும் அத்தகைய பார்வைகளால் எளிதில் பாலியல் ரீதியில் கிளர்ச்சியடையும் உடற்கூறு ஆண்களுக்கே. இதனால்தானோ என்னவோ பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும்படி இருபாலருக்கும் மேற்கண்ட வசனங்களில் அறிவுறுத்திய குர்ஆன்,பெண்களுக்குக் கூடுதலாக பர்தாவை பரிந்துரைக்கிறது.

ஆக,//ஆண்களுக்கு இந்த காமப்பார்வை இல்லை // என்ற மன்சூர் காக்காவின் கருத்தில் (தொடர்-3) தவறான புரிதல் உள்ளதாகக் கருதுகிறேன்.

N.ஜமாலுதீன்

Adirai pasanga😎 said...

shameed said -

//''எனக்கு ஒரு டவுட் முதல் படம் கண்ணுக்குள்ள வாயா வாய்க்குள்ள கண்ணா?''//
.
ஓ...அதுவா? மன்சூர் காக்காவின் எழுத்தில் கண் நன்றாகப் பேசுகிறது.

adiraimansoor said...

க்ரவுன் மச்சான் ராத்திரிலே போத்திக்கிட்டு படுக்கும்போது மட்டும் காமப்பார்வை மனைவிமீது அள்ளி வீசுங்கோ ஹலால்தான்.
என்னா தங்கச்சிக்கு ஒரு தம்பி பொறப்பான் அவ்வளவுதான். ஆனா அந்த பார்வையை வெளியிலே விட்டுடாதியோ.

adiraimansoor said...

அண்ணன் ஹமீது அவர்களே உங்களுக்கு இந்த டவுட் வந்தது பெரிய ஆச்சிரியமாக இருக்கின்றதே. இது கண்ணுக்குள்தான் வாய் என்பது தெளிவு. ஒரு இன் புட்டும் ஒரு அவுட் புட்டும் ஒன்னா சேர்ந்திருக்கு கவனம் தேவை. எப்பொழுது வாய்க்குள் கண்ணு இருக்குமென்றால் மீனில் தலையையும் ஆட்டின் தலையையும் சுவைத்து சாப்பிடும்போது அதனுடைய கண்ணு நமது வாயில் இருக்கும்

//ஓ...அதுவா? மன்சூர் காக்காவின் எழுத்தில் கண் நன்றாகப் பேசுகிறது.//
இந்த ஏலபாலைய புரிஞ்சிக்கிட்டா சரி

adiraimansoor said...

// கிளியோபாட்ராவின் கண்களுக்கு ஒரு சாம்ராஜ்யமே
மண்டியிட்டதாகக் கூறுவார்கள். //
//பெண்ணின் கண்பார்வையில் மின்னல் வெட்டியது//
// ஈர்ப்புவிசை
புவியில் மட்டுமில்லை
புன்னகையுடன் கூடிய பார்வையிலும்தான்//

//இவை
கடவுச்சொல்லை ஒரு சிலருக்கு மட்டும் தந்துவிட்டு
கதவைச் சாத்திக் கொள்பவை//
// மெல்லினத்தாள் வைத்திருக்கும் வல்லினம்//

இ.அ.காக்கா நான் எழுதிக்கொன்டிருக்கும்
தொடரின் முழு கருவையும் இரண்டு இரண்டு வரியில்கொண்டு வந்திட்டியலே எத்தனை அனுபவமோ தெரியவில்லயே

இந்த தொடருக்கு சூப்பர் டானிக்காக கொடுத்து இத்தொடரை கவுரவித்தற்கு
ஜஸாக்கல்லாஹ் கைரன்

adiraimansoor said...


// காமப் பார்வை ஒரு கருந்தேள்
ஜாம நேரம் வரும்தேள்

சொடுக்குப் போடும் நேரத்தில்
கொடுக்குப் பார்வையால் கொட்டி
கடுக்கக் கடுக்க
படுக்கப்போடும் விஷம்

இருப்பினும்
கண்ணில் மட்டுமே கொட்டும் ஆதலால்
தவிர்த்துத் தப்பலாம்//
சபீர் மிகவும் அருமையான வாசகம் சொடுக்குப் போடும் நேரத்தில்
கொடுக்குப் பார்வையால் கொட்டி கடுக்கக் கடுக்க படுக்கப்போடும் விஷம்
இந்த மூன்றாவது தொடரை மிளிரவைக்கும் வாசகம் மிகவும் அற்புதமான
பின்னுட்டம் இந்த மூன்றாவது தொடரின் முழுவதையும் நான்குவரி கவிதையில்
தந்த சபீருக்கு நன்றிகள் ஜஸாக்கல்லாஹ் கைரன்

adiraimansoor said...


//கயற்கண் என்று சொன்னால்
கயலதில் கருமை இல்லை //
அன்று தொடங்கும்
டாக்டர் கலைவாணரின் விழியை
பற்றிய கவிதையை மிகவும்
கஷ்டப்பட்டு முத்தெடுத்து
இந்த தொடரை அந்த முத்துக்களால்
அலங்கரிக்கும் உங்களுக்கு நான் எப்படி நன்றி
கூறவேண்டும் என்பதையும் என் எண்ணத்தில்
ஏற்றிவிட்டேன் அக்டோபர் 20 க்கு பிறகு
இன்ஷா அல்லாஹ் அது அமுலுக்கு வரும்

adiraimansoor said...

//கிட்டப்பார்வை ,தூரப்பார்வைகளை விளக்கிஒரு ஆப்டீசியன் ஆவப்போவது உறுதி//
அபூ பக்கர் உன் எதிர்பார்ப்புக்கு நன்றி
நீயே உறுதியளித்துவிட்டாய். உன் நம்பிக்கை வீன் போகாது இத்தொடரில் நிச்சயம் இடம்பெறும்

adiraimansoor said...


//சரியான வசனத்தை எடுத்துக்காடியுள்ளீர்கள்... இந்த வசனத்தை வாசித்த பின் கொஞ்ச நேரம் கண்ணை மூடி யோசித்துப்பார்த்தால், உண்மையில் உள்ளம் நடுங்குது.//
தாஜுதீன் உங்களைப் போன்ற நல் உள்ளம் படைத்த நண்பர்கள் இத்தளத்தை நடத்தும்போது நமக்கு இறைவனின் அப்படி உள்ளம் நடுங்கும் பல வசனங்களை நமக்கு தொடர்ந்து தந்து கொண்டுதானே இருக்கின்றீர்கள்
ஜஸாக்கல்லாஹ் கைரன்

adiraimansoor said...

//கண்கள் இரண்டும்..! இதில் உங்கள் பார்வை ரொம்ப ஆழமானவை.

அப்படின்னா "கண்ணூறு" பற்றிய உங்க பார்வை என்ன?//
ஜாபர் கண்ணூரு பற்றியும் உண்டு
ஆனால் அது பல தொடருக்கு பிறகுதான்
அதை பற்றி எழுதுவேன் மிகவும் ஆழமான விசயம்

adiraimansoor said...

//வேலிக்கும் ஒரு ஜாலி வேண்டாமா?//
பாரூக் காக்கா இந்த வார்த்தையை
சாதாரணமாக எழுதியதிலிருந்து தெரிகின்றது
வேலிக்கே ஜாலி வேண்டும் என்று கற்ப்பனை செய்யும்
உங்களின் வித்தியாசமான கற்பனை கண்டு இந்த வயசிலேயே
இப்படி கற்பனை செய்யும் நீங்கள்
உங்கள் இளமை கால கற்பனைகள் எப்படி இருந்திருக்கும்
என்று என்னால் யூகம் செய்யக்கூட முடியவில்லை

adiraimansoor said...

//பெண்களின் கண்களிலும் அங்கங்களிலும் இயற்கையாகவே ஒரு கவர்ச்சியுண்டு. இந்த கவர்ச்சியில் தான் ஆண்கள் வீழ்கிறார்கள். பள்ளத்தை தேடிப் போனவன் பள்ளத்தில் வீழ்ந்தால் பள்ளத்தை குறை சொல்லலாமா?
எனக்கு தெரிந்தவரை ஆண்களே பெண்கள் மீது மன்மதபானம் தொடுக்கிறார்கள்.//
அனுபவசாலி சொல்வதை மறுக்க முடியுமா?
மன்மதபானம் பெண்களுக்கு தருவதில் ஆண்களுக்கும் பங்கு உண்டு என்பதில்
மாற்று கருத்தில்லை ஆனாலும் ஆண்கள் ஆடினாலும் அடங்க வேண்டியவள்
பெண்களே காரணம் அவளின் உடற்கூறு அவளை படு பாதளத்தில் தள்ளிவிடுகின்றது

Ebrahim Ansari said...

//இ.அ.காக்கா நான் எழுதிக்கொன்டிருக்கும்
தொடரின் முழு கருவையும் இரண்டு இரண்டு வரியில்கொண்டு வந்திட்டியலே எத்தனை அனுபவமோ தெரியவில்லயே//

தம்பி மன்சூர் அவர்களே! பிறர் எழுதி நான் படித்ததையே குறிப்பிட்டேன். மற்றபடி என் அனுபவம் என்பது ஒண்ணுமில்லே.

பாரதிதாசன் கூறும் இந்த வரிகளையும் குறிப்பிட மறந்துவிட்டேன். இதோ ;

கண்ணின் கடைப் பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரர்க்கு மா மலையும் ஒரு கடுகாகும் - என்றும்

கூடத்திலே மனப்பாடத்திலே
கூடிக்கிடந்த ஆண்விழியை
ஓடைக் குளிர்மலர் பார்வையால் - அவள்
உண்ணத் தலைப்படும் நேரத்திலே
பாடம் படித்து நிமிர்ந்த விழி தன்னில்
பட்டுத் தெறித்தது ஆணின் விழி
- என்று ஒரு காட்சியை பாரதி தாசன் காட்டுகிறார்.

இதில் இன்னும் இரு வரிகள் உள்ளன. . வேண்டாம். தம்பி அபூ இப்ராஹீம் கத்தரி எடுக்கக் கூடும்.

Aboobakkar, Can. said...

காம (கண் )உணர்வுகள் பற்றிய சில விளக்கங்கள் .......பெரும்பாலும் இந்த உணர்வுகள் மனிதர்களில் ஆண்களுக்கு அதிகம் பார்வையிலும் பெண்களுக்கு அதிகம் தொடு உணர்வாகவுமே பெறப்படுகிறது .

adiraimansoor said...

தம்பி ஜயிஸா அவர்களே
நான் தப்லீக் இயக்கத்தை குறைவாக மதிப்பிட வில்லை அவர்கள் செய்யும் தியாகம் வேறு எந்த இயக்கத்தாராலும் செய்ய முடியாது எனது தகப்பனார்தான் அப்துல் காதிர் ஆலிம் அவர்களுக்கு தப்லீக்கை அறிமுகம் செய்து வைத்தது இதை அவர்களிடம் கேட்டாலே சொல்லுவார்கள் நானும் சிறு பிராயத்திலிருந்து நிறைய தப்லீக்கில் சுற்றி இருக்கின்றேன். தப்லீக் பற்றி அனுபவங்கள் எனக்கு அதிகம் உண்டு நான் அதில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன அதைத்தான் குறிப்பிட்டேன்

adiraimansoor said...

கவியன்பா நீ முகனூலில் படித்ததை இங்கு பின்னூட்டமாக பதிந்திருப்பது உனது பார்வையில் கிடைத்த முத்தை இங்கு சரமாக தொடுத்ததற்கு
நன்றி

adiraimansoor said...

தம்பி யாசிர் அவர்களே உலகலாவிய விஷயங்கள் சொல்லும்போது கூட இஸ்லாமிய ஆத்மார்த்த உண்மையான விஷயங்களை இடை இடையே சேர்த்துக்கொள்வது உலக விசயத்திலேயே கவணம் கொண்டோருக்கு கொஞ்சம் கொஞ்சமாக நமது மார்க்கத்தின் உண்மை விஷயங்கள் புரிய கிடைக்கும்

adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

//தவறானப் பார்வை-பெண்களைவிட ஆண்களின் கண்களுக்கே அதிகம் என்பதும் அத்தகைய பார்வைகளால் எளிதில் பாலியல் ரீதியில் கிளர்ச்சியடையும் உடற்கூறு ஆண்களுக்கே. இதனால்தானோ என்னவோ பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும்படி இருபாலருக்கும் மேற்கண்ட வசனங்களில் அறிவுறுத்திய குர்ஆன்,பெண்களுக்குக் கூடுதலாக பர்தாவை பரிந்துரைக்கிறது.

ஆக,//ஆண்களுக்கு இந்த காமப்பார்வை இல்லை // என்ற மன்சூர் காக்காவின் கருத்தில் (தொடர்-3) தவறான புரிதல் உள்ளதாகக் கருதுகிறேன். //

தம்பி ஜமாலுதீன் தாங்கள் நான் ஆண்களை பற்றி எழுதவில்லை என்பதால் தாங்கள் அந்த முடிவுக்கு வந்துவிட வேண்டாம்

ஆண்களின் பார்வை மிக வக்கிரமான பார்வையே இவன் பார்வையாலையே ஜினா செய்கின்றவன் பெண்ணோ பார்வையாலையே ஜினாவுக்கு அழைப்புவிடுகின்றவள்

இவன் பார்க்கும் பார்வையிலேயே அவள் கர்ப்பம் தரித்துவிடுவாள் இந்த ஆண்களின் பார்வை பற்றி இன்ஷா அல்லாஹ் பின்னர் இடம்பெறும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு