சாந்திச் சரணா லயமாம் – ஹஜ்ஜில்
............சாரும் புவியின் முதலா லயமாம்
ஏந்திப் பிரார்த்திக்கும் ஆங்கே—அருள்
…….......இறங்கிடும் ஹாஜிகட்கு நன்மையும் பாங்கே
தந்தைஇப் றாஹிம்பாங் கோசை- இந்தத்
..........…தரணியில் மக்காவின் ஈர்ப்பு விசையாம்
சிந்தையிட் சேருமிறை போதம்- ஆங்குச்
............…சேர்ந்தே ஒலிக்கும் திருமறை நாதம்
அரபு நாட் டுக்குள்ளோர் நாடு - அங்கே
.......….அகிலமுஸ் லிம்களின் கூட்டுமா நாடு
மரபு வழிகளில் தேடல் -புவி
........….மனித நதிகளின் சங்கமக் கூடல்
வெள்ளை யுடையில் மகிழ்ச்சி - மக்கள்
......வெள்ளத்தால் மக்கா நகரம் நெகிழ்ச்சி
உள்ளம் அழுக்கினைப் போக்கும் —அங்கே
......…உள்ஹிய்யா என்பதும் இந்தநல் நோக்கம்
நிலவதும் நாணியே கேட்கும் - ஹாஜி
… நிலவிடும் பேரொளி உன்னிப்பாய்ப் பார்க்கும்
உலவும் சமத்துவம் மெய்க்கும் — உண்மை
…….உலகம் தெளிந்திட நாட்டியே வைக்கும்
“கவியன்பன்” கலாம்
20 Responses So Far:
இந் நற்கவிதையாக்கம்
அதை காண தருகிறது ஊக்கம்
இறுதிக் கடமையதை காலத்தோடு
முறையாய்ச் செய்திட யா அல்லாஹ் நாடிடு!
//வெள்ளை யுடையில் மகிழ்ச்சி - மக்கள்
......வெள்ளத்தால் மக்கா நகரம் நெகிழ்ச்சி//
ஹஜ்ஜை கண்முன்னே கொண்டுவந்து நிருத்தும் அற்புத வரிகள்.
மக்கள் வெள்ளத்தால் மக்கா நெகிழ்ந்ததைப்போல்தான் மக்காவைக் கண்டு மக்களும் நெகிழ்வர்.
வாழ்த்துகள் கவியன்பன்.
அன்பு நண்பர் கவியன்பன் கலாம் அவர்களே,
ஹஜ்ஜின் அற்புதத்தை கவியில் அருமையாக தந்த தாங்கள்,
அதில் அங்குள்ள பேரூற்று "ஜம் ஜம்" என்னும் அற்புதத்தையும்
கவியில் சேர்த்திருந்தால் கவிக்கு இன்னும் மெருகு ஏறி இருக்கும்
என்பது அடியேன் கருத்து.
நிலவையே நாணச் செய்த அற்புத கவிதை.
அபு ஆசிப்.
அன்புச் சகோதரர், இலண்டன் இளங்கவி ஜாஃபர் ஸாதிக், அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆனந்தப் பாட்டைப் படித்ததும் - ஈண்டு
......ஆதியாய்ப் பின்னூட்டம் நீங்கள் வடித்ததும்
ஆனந்தம் பெற்றுமனம் வெல்லுதே - நீங்களும்
.....ஆக்குவீர் என்றுமனம் என்னிடம் சொல்லுதே!
//அரபு நாட் டுக்குள்ளோர் நாடு - அங்கே
.......….அகிலமுஸ் லிம்களின் கூட்டுமா நாடு
மரபு வழிகளில் தேடல் -புவி
........….மனித நதிகளின் சங்கமக் கூடல்//
ஆமாம் !
அந்த சங்கமத்தில் நாமும் ஒரு அங்கமாகக் கூடாதா என்ற ஏக்கம் ஒவ்வொரு கூடலிலும் வருகிறதே !
உங்கள் தமிழ் ஊர் முழுவதும் வரும் முன்னர் உலகமுழுவதும் வலம் வருகிறதே !
அன்பின் கவிவேந்தரே! அஸ்ஸலாமு அலைக்கும்,
கண்முன்னே காட்சிகளாய்க் கொண்டு- என்றன்
....கவிதையின் உட்பொருளை உள்வாங்கிக் கொண்டதால்
கண்முன்னே தந்தபின் னூட்டம்- என்றன்
...கவிதைக்குக் கிட்டிய ஊக்கமெனும் ஊட்டம்!
என் இனிய நண்பா, அப்துல் காதிர், அஸ்ஸலாமு அலைக்கும்.
நிறைவுறா ஏக்கம் எனக்கும்தான் - ஜம்ஜம்
....நீரின்றி உள்ளம் படிக்கக் கனக்கும் -இந்தக்
குறையினை எண்ணி வருந்துகிறேன்
..கூடிய மட்டும் பிழையைத் திருத்துகிறேன்!
அன்பின் நெறியாளர் அபூஇப்றாஹிம் அவர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும்,
வேண்டும் வரமெனும் அக்கூடல் - கிடைத்திட
......வேண்டுவோம் அல்லாஹ்வின் நாட்ட மெனும்தேடல்
தூண்டும் களமாம் அதிரை-நிருபர்த்
...துணையால் பறக்கும் கவிதைக் குதிரை!
குறிப்பு:
தமிழ்கூறும் இணைய உலகில் தமியேனின் கவிதைகள் வாசிக்கப்பட்டும்; நேசிக்கப்பட்டும் வந்தாலும், பிறந்த ஊரின் ஆசான்கள் ஊட்டிய தமிழமுதம் தான் கரணீய்ம் என்பதை என்றும் மறவேன்...
//வெள்ளை யுடையில் மகிழ்ச்சி - மக்கள்
......வெள்ளத்தால் மக்கா நகரம் நெகிழ்ச்சி
உள்ளம் அழுக்கினைப் போக்கும் —அங்கே
......…உள்ஹிய்யா என்பதும் இந்தநல் நோக்கம்//
அத்தனை வரிகளும் அனுபவித்து எழுதிய வரிகள்
நம்ம கவியன்பன் கலாம் அவர்களுக்கு எங்கிருந்துதான் இந்த வார்த்தை கோர்க்கும் வித்தை கிடைக்கின்றதோ !!!!!
அன்பின் “சுட்டும் விழிச்சுடர்” எஸ்.ஹமீத் அவர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும்,
மரபெனும் தேனடைக்குள் வார்த்த - ஓசை
....மழுங்கா அசைசீர் வடிவுக்குள் வார்த்தைத்
தரப்படும் போதினில் ஈர்ப்பு - அஃதே
...தமியேன் வனைந்திங்குக் கோத்திட்ட யாப்பு !
என்னுடைய கவிதையைப் பாராட்டியும் ஆய்ந்தும் கருத்துச் சொன்ன, சொல்ல நினைத்த அனைவருக்கும் என் நன்றி
நான்பிறந்தேன்; வளர்ந்திட்டேன்; இந்த வாழ்வில்
நானென்ன சாதித்தேன்? ஏதோ இங்கே
நான்கவிதை எனநினைத்துச் சொன்ன தெல்லாம்
நற்கவிதை எனச்சொல்லிச் சான்றோர் கூட்டம்
நான்பாடச் செய்துவிட்டார்; பாடிப் பாடி
நல்லபல கூட்டிங்கே பெற்றேன்; இன்று
தேன்சொரிந்தார் குழுமத்தார்; வாழ்த்தி வாழ்த்திச்
சிந்தைகுளி ரூட்டிவிட்டார்; மகிழ்ந்தேன்; நன்றி.
அன்பான தம்பி கவியன்பன் கலாம் அவர்களுக்கு ,
இந்த அற்புத கவிதையை சற்று தாமதமாகவே படிக்க நேரிட்டது. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
மொழி, இனம், நாடு, கலை, பண்பாடு, நிறம், உருவம், உடை போன்ற இன்றைய மனிதனை மனிதனிலிருந்து பிரிக்க உதவும் எல்லா வேற்றுமைகளையும் புறம் தள்ளி எல்லோரும்அல்லாஹ்வுக்கு சிரம் பணியும் சங்கமகூட மே'ஹஜ்!' இதை அமுத தமிழில் குழைத்து தந்த கவியன்பன் கலாமின் கவிதையில் தேனருவி பாய்வதை வாசித்தேன், சுவாசித்தேன், ரசித்தேன், புசித்தேன், சுவைத்தேன், ருசித்தேன் இருந்தும் இன்னும் கொஞ்சம் வேணுமென்று பசித்தேன்!
மனித முரண்டுகளை நீக்கி சகோதரத்துவத்தை நிலைநாட்ட அல்லாஹ்விடம் யாசித்தேன்!
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.
கவித்தீபம் சகோ.கலாம் அவர்களின் கவிதைகள் ..வார்த்தைகளின் வாசம் நம்மையெல்லாம் அவரை நோக்கி வசப்படுத்துகின்றது
பொருளியல் மேதை வருகை - என்னைப்
....புடமிடுத் தங்கமாய் மாற்றித் தருமே
அருளினை அல்லாஹ் வழங்க - வேண்டி
...அடியேனின் துஆவும் என்றும் முழங்க!
நடமாடும் நூலகம் வாழ்த்திலே --கண்டேன்
....நற்றமிழ்த் தேனில் குழைத்தநல் வார்த்தை
படம்போட்டு வைத்தேனே உள்ளத்தில்- அந்தப்
,,,,பைந்தமிழ்க் கேட்டு மகிழ்ச்சியின் வெள்ளத்தில்!
வாச முணர்திறன் உண்டாக -யாசிர்
...வண்ணக் கவிமலர் நாடிடும் வண்டாக
பாசம் நிறைந்தவுன் தேடல் - என்றும்
....படித்திடத் தூண்டுதோ தீஞ்சுவைப் பாடல்!
அஸ்ஸலாமுஅலைக்கும். அய்யா! இன்னும் எழுதியிருக்"கலாமே! வேலைகள் ஒழிந்த வேளை எழுத நினைத்திருந்தேன். இதற்கிடையில் நண்பர் நைனாவின் தாயார் இறந்த செய்தி தாக்க ஏதும் எழுத முடியாத துக்கம்!அல்லாஹ் அவர்களுக்கு ஆகிரத்தில் சுவனத்தை தந்தருள்வானாக! ஆமீன்.
அன்பின் மகுடக் கவிஞர் அவர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும்,
இன்னும் எழுதவே வேண்டிடும்-- மதிப்புரை
.... என்னைக் கவிதை வனையவே தூண்டிடும்
இன்னும் பணிச்சுமை யில்லை - என்றால்
..எழுதுவேன் உங்கள் விருப்பம் நிறைத்தே!
Post a Comment