Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இன்று இரு தகவல்கள் - தொகுத்தளிப்பது யாசிர் ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | September 24, 2013 | , , , ,

நீ...ண்ட நாட்களுக்குப் பிறகு கீபோ(ர்)டை ஆக்கத்திற்காகத் தட்டுவது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த இடைவெளிக்குள் எத்தனையெத்தனைச் சிறந்த எழுத்தாளர்கள் அதிரைநிருபரை அலங்கரித்துத் தங்கள் திறமைகளையும் நம் சமுதாயப் பெருமைகளையும் பரப்பிக் கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்து வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இப்ப விசயத்திற்கு வருவோம்..

பம்முக்காலே (Pamukkale )

என்னடா இப்ப வந்ததும் வராததுமா வித்தியாசமா ஆரம்பிக்கின்றானே, ‘மூக்காலே சிந்துரதுதானே நமக்கு தெரியும். இப்படி பம்முக்காலே என்றால் பல மூக்காலே ஒன்றாக ஒரே சமயத்தில் சிந்துவதா என்று ஒரு கணம் சிந்திப்பவர்களுக்கு..

அல்லாஹ்வின் படைப்பையும் அதன் பயன்களையும் அறிந்து கொள்ள முற்பட்டால் நம் ஆயுள் முழுவதும் செலவழித்தாலும் போதாது.

அப்படித்தாங்க “பம்முக்காலே” அல்லது “பருத்திக்கோட்டை” எனப்படும் ஓர் இடம் துருக்கியில உண்டுங்க, சிறப்பு என்னவென்று கேட்கின்றீர்களா, சொல்றேன் இருங்க… ’சாவன்னா காக்கா கேமராவை நல்ல கழுவி எடுத்து வைத்து கொண்டு கிளம்பிடாதீங்க (இடம் அப்படி) நம்மூர்ல தண்ணி ஓடிக்கிட்டே இருந்தா அந்த இடம் வெத்திலைப் பாக்கு கறைபோல ஒட்டுமாவு சாப்பிட்ட பற்களைப் போல பளிச்சென்று இருப்பதுபோல (பாவம் எவ்வளவு நாளைக்குதான் சிகரெட் குடிச்ச கறைண்டு சொல்றது), இங்கே ஒடுற தண்ணி அதில உள்ள கார்பனேட் தாதுக்களை ஒதுக்கிவிட்டு ஒடுதுங்க. அதனாலே அது ஒதுங்கி ஒதுங்கி சேகரமாகி மலைபோல் குவிந்து பருத்திப் பஞ்சுகளை பரத்தியது போல் அழகா காட்சி தருது இந்த இடம். யாரு இந்த கார்பனேட்-ப்பா (CO2/3) என்று அதட்டி கேட்பவர்களுக்கு மகபூப் அலி சார் அவர்களின் முகவரியை தந்து விடுகின்றேன், அவுக தான் எங்களுக்கு இதையெல்லாம் கிளாஸுல சொல்லி தந்தாங்க) படத்தைப்பார்த்து விட்டு ஐஸ்கட்டியை காட்டிட்டு கதையை என்னமா மாத்தி சொல்ராருப்பா என்று சிலர் நினைக்கலாம். கூகுள் மாமா ஆயுசு இருக்கும் வரைக்கும் நாம எதையும் தப்பா சொல்ல முடியாது.

துருக்கி -மண்டுராஸ் ஆற்றின் பள்ளத்தாக்கில் தன் அழகாலும் மருத்துவ குணம் கொண்ட தண்ணீராலும் போட்டுத் தாக்கிக் கொண்டு இருக்கின்றது இந்த பம்முக்காலே


பஞ்சுபோதிபோல் இருக்கா இல்லை பஞ்சரான டையர்போல இருக்கா ?

என்ன மருத்துவ குணம்பா ?  இரண்டு மொடக்கு எடுத்து குடித்தா இருமல் போயிடுமா என்று அப்பாவியாக கேட்பவர்களுக்கு… ஸ்பா(SPA) தெரியுமா கொழுப்பு உள்ள கோழியை சுடுதண்ணில போட்டு எடுத்தா கொழுப்பு குறைந்து சமைப்பதற்கு ஏதுவாக இருக்குமுல அந்த மாதிரிதான் இந்த ஸ்பா ஆவி பறக்கும் அதே சமயம் உடல் தாங்க கூடிய அளவிற்கு சூடு இருக்கும் இந்த தண்ணில நாம் குளித்தால் உடம்பில் உள்ள கொழுப்பு கரைந்து (நம்மூருக்கு நிறைய தேவைப்படும், ஆனால் மனக்கொழுப்பை கரைக்க முடியாது) உடல் ஆரோக்கியம் அடையும் அந்த ஸ்பா-வை இயற்கையாக மிதமான சூட்டுடனும் அதில் குளிப்பவர்களுக்கு சுகத்தையும் அள்ளி வழங்குகின்றது இந்த பம்முக்காலே.

பனிக்கட்டியல்ல ..சத்தியமா சொல்றேன் உப்புதானுங்க

நிலப்பரப்பிற்கு கீழே ஓடிக் கொண்டிருக்கும்  எரிமலை செயல்கள் தான் இப்ப நிலவும் அதீத வெப்பநிலைக்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்..என்னங்க கிளம்பலாமா ? ஆமா நம்மூர் பக்கதுல இருக்கின்ற சுண்ணாம்புகாளேக்கே நாம மெல்ல போக நேரம் இல்ல உம்மாட்ட சொன்னா தண்ணிய அடுப்புல வச்சு சூடு பண்ணி தர்ராங்க இது என்னங்க பிஸ்கோத்து என்று சிலர் முணுமுணுப்பதும் சரிதானுங்க


ஐ!!! நிறைய சால்ட் வீட்டுக்கு அள்ளிகிட்டு போவோமா ?

கூடுதல் தகவல் கிளியோப்பட்ரா குளிப்பதற்க்கு தன் வீரர்களை இங்கு அனுப்பி தண்ணி எடுத்துவரச்செய்து குளிப்பாளாம்,யாரு பார்த்ததுண்டு கேட்காதீங்க அந்த பீப்பீங் சாம் வேலையெல்லாம் நம்மளுக்கு தெரியாதுங்க

பிலோப் மீன் (Blobfish)

என்ன இது கொடுவா / காளை / பண்ணா என்று பறந்து பறந்து அவியலும் ஆனமும் உண்ட நமக்கு இது கிடைக்காம  தப்பிடுச்சே என்று நினைப்பவர்களுக்கு இது சாப்பிடக்கூடிய மீன் கிடையாது. ஒரு கிலோமீட்டருக்கு மேற்பட்ட ஆழ்க்கடலில் 30செ.மி சைஸூக்கு வளரும்/வாழும் ஒரு ஆபூர்வ மீன் இனம்,ஆஸ்திரேலியா கடற்பகுதிகளதான் இதன் வாழ்விடம்


உண்மையை சொல்லுங்க நம் சின்ன வயசில பார்த்த யாரோ ஒரு தெரு அப்பாவின் ஞாபகம் வரலயாண்டு

கொழுகொழுவென்று சதைப்பிடிப்புடன் காணப்படும் இந்த மீன் ரப்பர்போல கடலின் மேற்மட்டதிற்கு வந்து பலூன் மிதப்பதுபோல் மிதக்கும்..சரியான சோம்பேறி நீச்சல் அடிச்சா உடம்பு குறைந்து விடும் என்று மிதந்து மிதந்தே வரதட்சணை வாங்கிய அதிராம்பட்டினம் மாப்பிள்ளை போல் தன் வாழ்வை ஒரே இடத்தில் இருந்து கழித்து கொண்டு இருக்கின்றது இந்த மீன்.

நன்றி : வைக்கீப்பிடியா
என் கம்பெனி (இதுக்கெல்லாம் சம்பளம் கொடுக்குறாங்களே)
Mohamed Yasir

22 Responses So Far:

Shameed said...

இரண்டு செய்தியும் இரண்டை குழல் துப்பாக்கி போல குண்டுகளை உமிழ்ந்து தள்ளிவிட்டீர்கள்

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் செய்தியோட வந்ததற்கு நன்றி

Shameed said...

//கூடுதல் தகவல் கிளியோப்பட்ரா குளிப்பதற்க்கு தன் வீரர்களை இங்கு அனுப்பி தண்ணி எடுத்துவரச்செய்து குளிப்பாளாம்,//

நல்லவேலை கிளியோ கிளியோப்பட்ரா நம் நாட்டில் பிறக்கவில்லை அப்படி பிறந்து இருந்தால் கிளியோப்பட்ரா குளித்த தண்ணீரையும் விற்று காசு பார்த்து இருப்பார்கள்

crown said...

உடல் ஆரோக்கியம் அடையும் அந்த ஸ்பா-வை இயற்கையாக மிதமான சூட்டுடனும் அதில் குளிப்பவர்களுக்கு சுகத்தையும் அள்ளி வழங்குகின்றது இந்த பம்முக்காலே.

பனிக்கட்டியல்ல ..சத்தியமா சொல்றேன் உப்புதானுங்க
-------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அப்பாடா! நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட நாளைக்குப்பினே வசந்தம் அசத்தவந்துள்ளது!யாசரின் வருகை பொதிகைத்தென்றாலாய் மெல்ல வீசதொடங்கிவிட்டது. உப்புன உடலின் கொழுப்பை இந்த உப்பு நீர் கரைக்கும் எனும் இனிய தகவல்! அய்யா எனக்கு(ம்)பயன்படலாம். இதில் முக்கினால் எனும் முக்கியத்தகவல்தான் போங்க!

Shameed said...

நம்மூர் செம்மறி ஆட்டு நுரை ஈரலுக்கு கண்ணு மூக்கு வாய் வச்சி மாதிரில்லோ இருக்கு இந்த பிலோப் மீனு

இந்த மீனை புளி ஊத்தி ஆனம் காச்சுனாலுமா சாப்பிட கூடாது ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இதில் முக்கினால் எனும் முக்கியத்தகவல்தான் போங்க!//

கிரவ்னு: "அப்படின்னா மெதக்கலாம்னு சொல்றே !"

இன்னொன்றை கவனிச்சியா ?

//கொழுகொழுவென்று சதைப்பிடிப்புடன் காணப்படும் இந்த மீன் ரப்பர்போல கடலின் மேற்மட்டதிற்கு வந்து பலூன் மிதப்பதுபோல் மிதக்கும்..சரியான சோம்பேறி நீச்சல் அடிச்சா உடம்பு குறைந்து விடும் என்று மிதந்து மிதந்தே வரதட்சணை வாங்கிய அதிராம்பட்டினம் மாப்பிள்ளை போல் தன் வாழ்வை ஒரே இடத்தில் இருந்து கழித்து கொண்டு இருக்கின்றது இந்த மீன்.//

இதுதான் கொழுப்பா ?

Shameed said...

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…


//இதுதான் கொழுப்பா ?//

என்னதான் மாத்திரை சாப்பிட்டாலும் எந்த டாக்டரிடம் காட்டினாலும் குறைக்க முடியாத கொழுப்பு இது

sabeer.abushahruk said...

புதிய தகவல்கள், அழகிய புகைப்படங்கள், நகைச்சுவை ததும்பும் வர்ணனை...

யாசிர் இஸ் பேக்

sabeer.abushahruk said...

//இந்த மீனை புளி ஊத்தி ஆனம் காச்சுனாலுமா சாப்பிட கூடாது ?//

ஹாஹா

உங்க நாக்கு இன்னுமா அடங்கல.?

Ebrahim Ansari said...

மருமகனார் //யாசரின் வருகை பொதிகைத்தென்றாலாய் மெல்ல வீசதொடங்கிவிட்டது. உப்புன உடலின் கொழுப்பை இந்த உப்பு நீர் கரைக்கும் எனும் இனிய தகவல்! அய்யா எனக்கு(ம்)பயன்படலாம். இதில் முக்கினால் எனும் முக்கியத்தகவல்தான் போங்க// கருத்து உபயம்:தம்பி கிரவுன். நன்றி.

crown said...
This comment has been removed by the author.
crown said...
This comment has been removed by the author.
crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். ஒரு கொசுறு:இந்த மீனை உலகின் அசிங்கமான உயிரினம் என்ற வகையில் முதல் எண்ணில் சமீபத்தில் தேர்ந்தெடுத்துள்ளார்கள் சில கிறுக்கர்கள்.
Blobfish
Why the long face? The Blobfish doesn't have much to smile about - the grumpy looking ocean creature won a public vote to become the official mascot of the Ugly Animal Preservation Society. This gives the fish the unofficial title of world's ugliest animal. Looking more like a cartoon than a fish, the Blobfish has very few muscles and moves very slowly. To eat, the Blobfish waits on the bottom of the ocean for prey to pass by. How does Mr. Grumpy stack up compared to all the other ugly animals out there? We'll let you be the judge ...

Read more: http://www.nydailynews.com/life-style/top-20-ugliest-animals-time-gallery-1.1276977#ixzz2foGSPg5A

crown said...

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…
//கொழுகொழுவென்று சதைப்பிடிப்புடன் காணப்படும் இந்த மீன் ரப்பர்போல கடலின் மேற்மட்டதிற்கு வந்து பலூன் மிதப்பதுபோல் மிதக்கும்..சரியான சோம்பேறி நீச்சல் அடிச்சா உடம்பு குறைந்து விடும் என்று மிதந்து மிதந்தே வரதட்சணை வாங்கிய அதிராம்பட்டினம் மாப்பிள்ளை போல் தன் வாழ்வை ஒரே இடத்தில் இருந்து கழித்து கொண்டு இருக்கின்றது இந்த மீன்.//

இதுதான் கொழுப்பா ?
-------------------------------------------------------------------
ஆமாம் காக்கா! யாசர் கொழுப்பெடுத்தவர் ஆனால் சின்னதிருத்தம். இப்படி மாப்பிள்ளையாய் வர'தட்சனை கேட்டவர்களின், கேட்பவர்களின் கொழுப்பை எடுத்தவர்.

ZAKIR HUSSAIN said...

யாசிர் எழுதிய புதுமைக்கு பாராட்டுக்கள். பொதுவாக இது போன்ற செய்திகளை காண்பது அரிது. அதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி மற்றவர்களையும் எழுதத்தூண்டும்.

New Trend Setting

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//நீ...ண்ட நாட்களுக்குப் பிறகு கீபோ(ர்)டை ஆக்கத்திற்காகத் தட்டுவது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கின்றது//

ஆனா இப்புடி பன்னுரது எங்களுக்கு வருத்தமளிக்கிறது.

இருந்தாலும் எழுத்து நடையும் வண்ண காட்சிகளும் லுவாக் காப்பி குடித்த புத்துணர்சி தருகிறது.

Unknown said...

//இந்த மீனை புளி ஊத்தி ஆனம் காச்சுனாலுமா சாப்பிட கூடாது ?//

ஹாஹா

அவியளுக்கு கொஞ்சம் நல்ல இருக்குமென்று நினைக்கின்றேன்.

ZAEISA said...

அஸ்ஸலாமு அலைக்கும் இரு தகவல்களும் அருமை அதைவிட வர்ணணைகள் அருமை. ஓ..............அதுதான் அந்த மீனா..?என்னமோ....யூஸ்&த்ரோ ஐட்டமென்னு நெனுச்சுட்டேன்....

adiraimansoor said...

சகோதரர் யாசிரின் புதிய தகவல் மிக அருமையான நகைச்சுவையுடன் தரும் தகவல் பிரமாதம். இடையிலே நம்மூர் மக்களயும் திட்டிபுட்டிய

//(நம்மூருக்கு நிறைய தேவைப்படும், ஆனால் மனக்கொழுப்பை கரைக்க முடியாது)?//
மனக்கொழுப்பை கறைக்க முடியாது
வாய் கொழுப்பை கறைக்க முடியுமா?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நண்பர் யாசிர்,

நல்ல பயனுல்ல தகவல்கள்..

//அல்லாஹ்வின் படைப்பையும் அதன் பயன்களையும் அறிந்து கொள்ள முற்பட்டால் நம் ஆயுள் முழுவதும் செலவழித்தாலும் போதாது.//

மிகச் சரியாகச் சொன்னீர்கள்... ஓவ்வொரு படைப்பையும் பார்த்து சிந்தித்துப் பார்த்தால்... நிச்சயம் அல்லாஹ் ரஹ்மான் என்பதை நான் உணரலாம்...

ஒரு சின்ன எறும்புக்கு பயந்து யானை தன்னுடைய காதை நிறுத்தாமல் ஆட்டிக்கொண்டிருக்கிறது.

சூரா ஃபீல் வசனங்களை வாசித்துப்பாருங்கள்... ஒரு சின்ன பறவைக்கூட்டம், சுடப்பட்ட கற்களை தூக்கிக்கொண்டு யானை கூட்டத்தை அழித்துள்ளது.

105:1. (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
105:2. அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
105:3. மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
105:4. சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
105:5. அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.

அடுத்த உங்கள் பதிவு பறவைகள் பற்றி இருக்கும் என்று நம்புகிறேன். தேடுங்கள் இப்பவே...

KALAM SHAICK ABDUL KADER said...

\\மிதந்து மிதந்தே வரதட்சணை வாங்கிய அதிராம்பட்டினம் மாப்பிள்ளை போல் தன் வாழ்வை ஒரே இடத்தில் இருந்து கழித்து கொண்டு இருக்கின்றது இந்த மீன்.\\

ஹா ஹா வாய்விட்டுச் சிரிக்க வைத்த வரிகள்!

Yasir said...

thanks lot brothers for your comments and encouragements...will meet again with another topic soon.....

Anonymous said...

அது என்ன ஐஸ் மலையா? அழகா இருக்கு! பார்த்ததும் பழைய நினைவுகள் வந்துடுச்சு!. ஜெமினி வாசன் தயாரிச்ச 'சந்திரலேகா' திரைப்படம்! இந்த மலைபோலே நூறு முரசுகள்.அது மேலே நூறு பெண்கள் நடனம் ஆடிய காட்சி.படம் பார்த்தவர் கண்களும் வாய்களும் அகல திறந்தன. திறந்த வாய்க்குள்ளே ஈ என்ன யானை புகுந்தாலும் தெரியாது! அப்படிப்பட்ட பிரமாண்டமான தாயாரிப்பு.அந்த முரசுக்குள்ளே படைகள். ரஜனிகாந்த் அல்லது கமல்ஹாசன் போல அந்தகாலத்து நடிகர் S.S.ரஞ்சன் நடித்த படம்.வாள் போரும் முரசு மேலேதான்.
அந்தக் காலத்தில் கடல்கரை தெருவில் நோம்பு கஞ்சி காச்சிய அரக்கடா மூஞ்சியும் மீனோட மூஞ்சியும் ஒத்திட்டாபுலே இருக்கே! சொந்தமோ?

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு